Sakthi Foundation
சேர தேசத்துப் பாணர்கள்...
இன்றும் சேர தேசமாம் கேரத்தில் பல்வேறு தொல் த்ராவிடக் கலை வடிவங்கள் அப்படியே மாறாமல் உள.காரணம் மலைகள் தாண்டிய படையெடுப்புகள் குறைவே.ஆனால் இஸ்தாத்தையும் கிறிஸ்துவத்தையும் பாரத தேசத்துக்குள் முதன்முதலில் வரவேற்று இடம் கொடுத்த பூமி அதுவே.
பாணர்கள் இன்றும் ஒரு சாதியினராய்க் கேரளம் முழுவதும் உளர்.அவர்கள் கையில் யாழ் தாங்கிப் பாடுவர்.அவர்தம் மனைவியோ மகளோ சகோதரியோ அம்மாவோ [பெண்] அவசியம் உடன் இருப்பர்.
கோயில்களின் முன்பில் அத்தெய்வத்தைக் குறித்துப் பாடி அத்துடன் நம் பெயரைச் சொல்லி நம் க்ரஹ பீடா தோஷங்கள் போக வேண்டிப் பாடூவர், நாம் தரும் தட்சிணைக் கைக்கொள்வர்.இவர்கள் அதிகம் நாக சர்பப் பாட்டுக்களை சேர்த்துக் கொள்வதும் வழக்கம்.
...