Sakthi Foundation
Kumara Gurubarar's Sakala Kala Valli Malai upon Maha Saraswathy
1. வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகலகலாவல்லியே!
2. நாடும் பொருள் சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய் பங்கைய ஆனத்தில்
கூடும் பசும் பொன் கொடியே! கனதனக் குன்றுமைப் பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படி படிக்கொன்று கூடுங்கொலோ உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!
4. தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5. பஞ்சப் பிதம் தரும் செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சம் தடத் தலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவச உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவி சொத்து இருந்தாய் சகலகலாவல்லியே!
6. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழி தெளிதெய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே!
7. பாட்டும் பொருளும் பொருளால் பொருத்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண்ணால் ஆயுளும் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே! சகலகலாவல்லியே!
8. சொல்லில் பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தை உந்தன் அடிமை கொள்வாய் நளினாசனம் சேர்
செல்விக் கரி தென்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகலகலாவல்லியே!
9. சொற்கும் பொருட்கு உயிராம் மெய்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலாவல்லியே!
10. மண் கண்ட வெண்குடை கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும் விளம்பி உன் போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!