ஏரி குளக்கரை ஆறுகள் கடல் புறம் ஆகிய இடங்களில் இயற்கை சக்தி மனிதனைத் தீண்டாமல் இருக்க அவற்றைக் காவல் தெய்வங்கள் என நம் முன்னோர் வைத்தனர்.ஏரிக் கருப்பு, குளக்கரை சுடலை, அணைக்கரை ஐயனார், ஏறி முனீஸ்வரன் மற்றும் பல.
வருடத்தில் ஆடிப் பதினெட்டு, சிவராத்ரி, ஆடி - புரட்டாசி - தை அமாவாசைகளில் இக்காவல் சக்திகளுக்குப் பூஜை, பலி, பொங்கல் இடுவது இன்றும் வழக்கம்.
இயற்கை மனிதனால் ஆக்ரமிப்பு செய்யும் போது இக்காவல் சக்திகள் அப்புறப்படுத்தப் பட்டன.இதன் காரணத்தாலும் இயற்கைச் சீற்றங்கள் உண்டாவதைக் காண்கிறோம்.அலக்நந்தா ஆற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் தாரி தேவியின் கோயில் இடம் பெயர்ந்த அன்று பெருவெள்ளம் வந்தது.
இதை எல்லாம் அறிந்த முன்னோர் அக்கரைப் பகுதிகளில் வாழ மாட்டார்கள்.
இவற்றை முட்டாள் தனம் என்று கூறும் சமூஹம் கேடுறும்.