குமரிக்கடலுள் மீனாக்ஷி
கன்யா குமரிக் கடலில் பல வகை வண்ணங்களில் சிறு சிறு கற்கள் கிடைக்கின்றன.பல வண்ண மணல்கள் உள்ளன.
மடகாஸ்கரில் முன்னூறு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பல வண்ணப் பாறைகள் உள்ளதை ஆய்வுகள் காட்டும் போது அவை எல்லாம் குமரிக்கண்டம் பிரிந்த போது போனவை தான்.
கடலுள் மூழ்கியுள்ள குமரிக்கண்டத்திலும் அதே பாறைகள் உள.அதன் மணல்களும் கற்களும் அலைகளால் கரை சேர்வதைக் காண்கிறோம்.
சரி இக்கட்டுரையில் என்ன கூற உள்ளோம்?
மதுரையில் உள்ள மீனாக்ஷி அம்மன் தான் குமரித்தெய்வம் என்று கருத்து உண்டு.
அம்மனைக் குமரித்துறையவள் என்று கல்வெட்டு கூறுவதைக் காண்கிறோம்.
மேலும் அன்னை மீனாக்ஷி செய்யப்பட்ட பசுமையான கல் ஒத்த பச்சைக் கற்கள் பல குமரிக்கடலில் கிடைப்பன.
அதுவாயின், பசுமை வண்ணப் பாறைகள் குமரிக்கண்டத்தில் உள.அதன் மூலம் பெற்ற உரிய கல் கொண்டே மீனாக்ஷி வடிக்கப்பட்டிருக்க வேண்டும்.