தொல்காப்பியம் மூலம் அறியப்படும் முற்காலத் தமிழ் வழக்கு
 
ஆண் பால் பெயர்கள்
 
இரலை - மான்
 
கடுவன் - ஆண் பூனை, ஆண் குரங்கு
 
கோட்டான் - ஆண் ஆந்தை
 
தத்தை - ஆண் கிளி
 
பூசை - ஆண் பூனை
 
சேவல் - ஆண் குதிரை
 
கண்டி - ஆண் எருமை
 
ஏனம் - கருத்த ஆண் பன்றி
 
ஏறு - பன்றி, காளை, எருமை, மான், சுறா மீன், திமிங்கலம்
 
ஒருத்தல் - எருமை,  புலி, மான், நீண்ட தந்தம் கொண்ட யானை, நீண்ட கோரைப்பற்கள் கொண்ட காட்டுப்பன்றி
 
களிறு - யானை, பன்றி, 
 
போத்து - காளை, எருமை, புலி, மான், முதலை, மயில்
 
கலை - மான், குரங்கு
 
ஆண் ஆடு - மோத்தை, தகர், உதள், அப்பர்
 
சேவல் - மயில் இல்லாத மற்ற எல்லாப் பறவைகளில் ஆண் இனம்
 
ஏற்றல் - உடல் வலிமை கொண்ட ஆண் பாலுக்குப் பெயர்
 
பெண் பால் பெயர்கள்
 
பிடி - யானை
 
பெட்டை - மான், ஒட்டகம், குதிரை, கழுதை
 
பேடை, பெடை - அனைத்துப் பறவைகளின் பெண்பால் பெயராகும்
 
அளகு - கோழி, ஆந்தை தவிர்த்த மற்ற பறவைகளின் பெண் பால்
 
பிணை - மான்
 
பிணவு - பன்றி, நாய், மகள்
 
பிணவல் - பிணவின் மற்றொரு வார்த்தை
 
ஆ - பசு, எருமை, மான்
 
நாகு - எருமை, பசு, மான், பெண் நத்தை
 
பெண் - பெண் மகள்
 
மூடு, கடமை - பெண் ஆடு தவிர்த்த மற்ற விலங்குகளில் பெண் பாலுக்கு வரலாம்.
 
பாட்டி - பெண் பன்றி, பெண் நாய், பெண் நரி
 
மந்தி - குரங்கு, கரடி