வினாயகர் சதுர்த்தி
 
பாரத தேசத்தின் முன்னாள் பயோடெக்னிக் படைப்பு தான் வினாயகர்.
 
உலகில் மனிதன் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரிய விலங்கு, உயர் பரிணாம மனிதன் ஆகிய இரண்டும் இணைந்த கோலம்.
 
உலகின் மிகப் பெரிய உருவப் படைப்பம், மிக உயர்ந்த அறிவின் படைப்பும், மிகச் சிறிய எலி, பாம்பு ஆகியன பஞ்சபூதங்களில் கூட்டுப் படைப்பே என்று உணர்த்தும் கோலமே வினாயகர்.
 
நிலம், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்களின் தொகுப்பே கண.
 
அதற்கு ஆதார சக்தியே கணபதி.
 
குறிப்பாக உயிர்கள் எடுத்துள்ள உடல்கள் ஐம்பூதங்களின் கூட்டுத்தொகுப்பே வினாயகரின் உருவகம்.
 
இந்த உடல் நன்றாக வாழ உணவு மிக முக்கியம்.அதனால் தான் அவரது பூஜையில் பலவகை இயற்கை உணவுகள் படையல் ஆகின்றன.
 
கம்பு, கேழ்வரகு, சோளம், பழங்கள், அன்னம், பயறுகள் என அனைத்து வகை உணவுகளும் படைக்கப் படும்.
 
யானையின் பலமும் மனித விவேகத்தின் பலமும் ஒருங்கிணைந்த வாழ்க்கை மனிதன் கொள்ள வேண்டும்.
 
மனதின் அகங்காரத்தை அடக்கும் அங்குசம், மனதைத் தரமான நெறியில் செலுத்த பாசக்கயிறு, சாதனைகள் செய்ய தியாகம் செய்தே ஆக வேண்டும் என்ற குறியீடான உடைந்த தந்தம், பூரண ஞானம் என்பதே பூரண இன்பம் என்று உணர்த்தும் பூரணக் கொழுக்கட்டை ஆகியவற்றின் ஒரு மொத்த வடிவாக வினாயகர் அமைகிறார்.
 
உடலால் வாழும் வாழ்க்கை மகிழ்வுற செல்வமும் அறிவும் தேவை.
 
அதைக் குறிக்கவே லக்ஷ்மியும் வாணியும் வினாயகரின் இருபுறமும் இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
 
பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் வாதாபியில் போர் செய்த போது, அக்கோட்டை வாயிலில் இருந்த வாதாபி கணபதியை பரஞ்சோதி திருச்செங்காட்டங்குடிக்குப் பெயர்த்து வந்து கணபதீச்சரம் போயில் அமைத்தார். [கி.பி 7]
 
வினாயகரின் பல்வேறு வடிவங்கள், தோற்றங்கள் ஆகியன ஐம்பூதங்களின் கூட்டால் ஏற்படும் பல்வேறு தோற்ற வடிவங்களையே உணர்த்தும்.