ஆதிமனிதனின் கருவிகளும் சிற்பக்கலையும்
 
நமது சிற்ப சாஸ்த்ரத்தில் கூறப்படும் அனைத்து தெய்வங்களின் பல கைகள் மனிதன் பல வகை நல்வினைகள் செய்வதையே சுட்டு.
 
இவற்றை ”திவ்ய ஆயுதங்கள்” என்றே சிற்ப நூல்கள் கூறும்.
 
ஆயுதம் என்றால் போர்க்கருவி மற்றும் தொழில் கருவி என்ற இருவேறு அர்த்தங்கள் உண்டு.
 
ஆதிகால மனிதன் தன்னை, தன் கூட்டத்தைக் காக்கக் கருவிகள் உருவாக்கினான்.
 
தன் தேவைகளுக்குத் தொழில்கள் செய்யும் கருவிகள் உருவாக்கினான்.
 
இவற்றை எல்லாம் அவன் தான் இயற்கையின் சக்தியாய் உணரும் தெய்வத்தின் கைகளில் தந்தான்.
 
ப்ரபஞ்ச சக்தியின் உறுதுணையால் தான் தன் காப்பும், தன் தொழிலும், வாழ்வும் நிகழ்கிறது என்று உணர்ந்தான்.
 
உலகில் மிகத் தொன்மை மிக ஆயுதக் கருவி வேல்.
 
அடுத்து கத்தி.
 
அடுத்து வில் அம்பு.
 
குமரிக் கண்ட ஆதி மனிதனே இவற்றைக் கண்டு பிடித்தான்.
 
அதனால் தான் தமிழச் சிற்பங்கள் பல வேல், கத்தி, வில் அம்பு கொண்டு விளங்குவதைக் காண்க.
 
ஆயுதங்களையே மனித முதலில் வணங்கினான்.அதையே ஆயுத பூஜை என்றான்.தொழிலை மதிக்கும் சமூஹமே நம் தமிழ்ச் சமூஹம்.
 
செய்யும் தொழில் தெய்வம்.அதற்கு உதவும் கருவிக்கு மரியாதை.இதைக் கருத்தில் கொண்டே சிற்பநூல் வெளிப்படுத்தும் ஆயுதங்களை அறிக.
 
வேல் [கற்கால மனிதனின் குத்தும் ஆயுதம்], வாள், கத்தி, வி அம்பு, பாத்ரம் - மனிதன் கண்டு பிடித்த முதல் மண் கலம், உடுக்கை - ஒலிக் கருவி, அக்னி - தீயின் பயன்பாட்டை அவன் அறிந்த காலம், மணி - தகவல் தொடர்புக் கருவி, யாழ், குழல் ஆகிய இசைக் கருவிகள் மிகத் தொன்மை மிக்க மனிதனின் இசைக்கலைக் கருவிகள், கோடரி - கற்கால மனிதனின் வெட்டும் ஆயுதம், கதைக்கும் முன் தண்டு - கெட்டியான தடி கொண்டல்லவா அதிகம் வேட்டையாடினான், உலக்கை, இடி - இயற்கை சக்தி, அங்குசம் - வலிய விலங்குகளை அடக்கும் ஆயுதம், பாசக்கயிறு - அவன் மிக கெட்டியான கொடிகள் மூலம் கட்டப் பழக ஆரம்பித்த காலம், திரிசூலம் - வேலின் பரிணாமம், தாமரை - இயற்கை சக்தியான தாவரங்கள், கொடி - குடித் தலைமையின் குறியீடு, சங்கு - நெய்தல் ‘னில மக்களின் ஒலிக்கருவி, சக்கரம் - மிக முக்கிய நாகரிகப் பரிமாணத்தின் குறியீடு, சக்கரத்தினை மனிதன் கண்டு பிடித்த பிறகே அவனது பண்பாடு வாழ்வியல் பரிணாமம் வேகமானது.
 
அதே போல் யானை, பசு, காளை, குதிரை, எருமை, நாய், மயில், கிளி, அன்னம், மான், காட்டுப்பன்றி, சுறா மீன், ஆமை , பாம்பு ஆகிய விலங்குகளை அவன் வணங்கவும் செய்தான், தன் தெய்வத்தின் வாஹனம் ஆக்கினான்.இவையெல்லாம் ஆதி மனிதனுடன் மிக நெருங்கிய உயிரினங்கள்.
 
தொன்மைச் சிற்பங்களில் மிக அதிகக் கைகளும் ஆயுதக் கருவிகளும் கொண்ட தெய்வ வடிவு கொற்றவை என்ற துர்கையே ஆகும்.
 
இதை அறிந்த நீங்கள், இப்போது சிற்பங்களை கவனியுங்கள், ரசியுங்கள்.