Sakthi Foundation

அன்னபூரணி யார்?

உலகில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் தேவை உணவு.

அந்த உணவை பூமி நமக்குத் தருகிறது.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் பூமியின் சக்தியை ”சாகம்பரி” என்று தேவியாக வழிபடுகிறோம்.

தேவியைக் காய்கறி கனி வகைகளால் அலங்கரிப்பதே சாகம்பரி அலங்காரம்.

உணவில் உள்ள சக்தியே அன்னபூரணி.

முக்தியை அளிக்கும் காசி மாநகரில் தேவி அன்னபூரணி விஸ்வநாதருடன் அமர்ந்து அருள்கிறாள்.

அன்னபூரணியை ”சின்ன மஸ்தா” என்ற சக்தி வடிவில் வணங்குவது வழக்கம்.

சின்ன மஸ்தா என்பது பிறருக்காகத் தன்னலம் பாராமல் எதையும் தரும் கருணையே ஆகும்.

பெற்ற அன்னையும் கோமாதாவாகிய பசுவும் தன் ரத்தத்தையே பாலாக நமக்குத் தருகிறார்கள்.

பசித்த வயிற்றுச் சோறு இடும் கருணையே அன்னபூரணியும் ஆகும்.

அன்னத்தை விழிப்புணர்வுடன் ப்ரஸாதமாக பாவித்து உண்ணுங்கள்.

வெறுப்புடன் சமைக்காதீர், கண்டதை உண்ணாதீர், அன்புடன் பரிமாறுக.

தரமான அன்னமே உடலில் சக்தியாகிறது, அதுவே மனதில் தரமான எண்ணமாக வருகிறது. உணவைப் பொருத்தே மனிதனின் மன - உடல் ஆரோக்யம் அமைகிறது.

நல்லதையே உண்போம்! நல்லதையே எண்ணுவோம்! நல்லதையே செய்வோம்!