1. The chief who removed my selfishness - ஐயூர் முடவனார்

புறநானூறு [399]

ஐயூர் முடவனார்

பாடப்பட்டவன்: தாமான் தோன்றிக்கோன்

சோழ நாட்டில் காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாய்வதால் உழவுத் தொழில் சிறப்பாக நிகழ்கிறது.அதனால் அவ்வுழவர்களின் உண்ணும் உணவு மிகவும் சிறந்ததாகும்.

கைக்குத்தல் அரிசி, புளிக்குழம்பு, வள்ளைக் கீரைக் கூட்டு, பாகல் காய் பொறியல், சுறாமீன் கறி வறுவல், இறால் மீன் வறுவல் போன்ற சுவையான உணவை உண்பர்.

ஆனால் என் ஊரில் தண்ணீர் இல்லாமல் உழவு நிகழ்கிறது.

என் மனைவி ஊர்க்குளத்தில் உள்ள மீன்களைத் தூண்டியல் போட்டுப் பிடித்து, அதை விற்று, அதில் வரும் சொற்பக் காசில் வைத்த சோறும், புளிச்சாறும் சாப்பிடக் கூட நேரம் இல்லை.அவை கெட்டுப் போகும் சமயத்தில் தான் உண்ண நேரம் கிடைக்கிறது.அத்தனை வேலை...

என் கஷ்டத்தைப் பார்த்த என் தோழன் தாமான் தோன்றிக் கோன் வள்ளலைப் பற்றிக் கூறினான்.

அவன் தர்மங்களைப் பின்பற்றுபவன்.

பகைவர்களை எளிதில் வெல்பவன்.

நல்ல குடும்பத்தில் பிறந்த வள்ளல் தன்மை கொண்டவன்.

தெய்வம் இவன் வடிவைத் தாங்கி மக்களைக் காக்கிறது என்றதால் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் தெய்வத்தைக் கூட வணங்காது என் கஷ்டம் தீர இவனை நாடினேன்.

பெரிய மாட்டு வண்டியில் ஏற்றிச் செல்லும் அளவு அவன் எனக்குப் பொருள் கொடுத்தான்.அதை என் ஊரில் வறுமையில் வாடும் அனைவருடன் பகிர்ந்து கொள்வேன்.அதை இழுக்க ஒரு மாடும் கேட்டேன்.

அவனோ என் ஊரின் வறுமையை அறிந்து பல பசுக்களையும், காளைகளையும், சில வண்டிகள் நிறைந்த பொருளும் ஈந்தான்.அவன் வாழ்க!

கருத்துகள்:

1. வளமான ஊர்களும், பஞ்சத்தில் வாடும் ஊர்களும் எப்போதும் உள்ளன.

2. ஏழை-பணக்காரன் வேறுபாடு உள்ளது.

3. வறியவர்களுக்கு உதவும் மனம் படைத்த நல்லவர்கள் இருந்தனர்.

4. குறிப்பாக சமூஹப் பொறுப்பில் உள்ளவர்கள் மக்களின் குறை தீர்க்க   முற்பட்டனர்.

5. உதவி பெற்றவர்கள் அவ்வுதவி மூலம் பெற்ற பலனைப் பலருடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

2. Good or bad, not caused by others - கணியன் பூங்...
Puranaanooru - Sangam Tamil Literature - an introd...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries