ஸ்மசான கொற்றவை எனும் மாசாணி அம்மன்

கொங்கு தேசத்தின் ஆனைப் மைப்பகுதிக்கு அக்காலத்தில் உம்பர்க்காடு என்று பெயர்.சேரர்கள் இதைத் தம் கீழ் கொண்டு வர முயன்றனர்.அதன் மன்னன் தான் நன்னன்.

இவன் தரமான வியாபாரம் மூல பெரும் செல்வன் சேர்தான்.இவனுக்குப் பத்து மனைவிகள்.ஆனால் இவன் யாருக்கும் கொடையோ உதவியோ செய்ததில்லை.

  

இவனுடைய காவல் மரம் உயர் ரக மாங்கனி மரம்.அது மிக்க காவலையுடையது.அதன் அருகில் மக்கள் வர இயலாது.

அம்மரத்தில் இருந்து தானாக விழுந்த மாங்கனி ஒன்றை அவ்வூர்க் கொற்றவைக்குப் பூஜை செய்யும் அந்தணரின் மகள் ஆற்றில் மிதக்கக் கண்டு எடுத்து உண்டாள்.

இதைக் கண்ட வீரர்கள் அவளைக் கைது செய்து நன்னன் முன் நிறுத்தினர்.

அந்தணன் தன் மகளீன் எடைக்கு ஈடாகப் பொன் தானம் செய்வதாய் வாக்களித்தும் நன்னன் அவளைக் கொன்றான்.புலவர்கள் எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை.

அப்பெண்ணை மயானத்தில் மயானக் கொற்றவையுடன் சமாதி செய்து நடுகல் வைத்தனர்.ஸ்மசான - மாசாணம்.ஸ்மசானக் காளி சாக்தத்தில் மிக உயர் தேவதை.ஸ்மசானம் - ஆணவம் முற்றிலும் அகன்ற மனம்.

இன்று பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதியில் ஆற்றோரம் உள்ள மாசாணி அம்மை - சங்க காலம் முதல் உள்ள மயானக் காளியே.அவளுடன் இப்பெண்ணின் ஆன்மாவும் இணைந்தது.

இந்நிகழ்வு ஏற்பட்டு விரைவில் சேரர் செங்குட்டுவன் நன்னனை வென்றுஅவன் மனைவியரின் முடிக்கற்றைகள் கொண்டு கயிறு திரித்துஅம்மரத்தை வெட்டி விறகுகள் ஆக்கி சுமக்க வைத்தான் என்று சங்க நூல் பதிற்றுப்பத்து கூறும்.

மாந்த்ரீகம் மூலம் பகை தேசத்தை ஒடுக்கவே ஆதி காலத்தில் ஏவல் பயன்பட்டது.ஆனால் அது இன்று மனிதனின் சுயநலனுக்காக உள்ளது.செய்த வினையின் பலன் நம்மைச் சேருவது உறுதி.

மாசாணம் கொற்றவையான மயானக் காளி மாசாணி அம்மை நம் மனதில் உள்ள வேண்டாத எண்ணங்களை சுடட்டும்.தவறுகளை மன்னிக்கும் பக்குவத்தைக் கொடுக்கட்டும்.

காசி மயானத்து பைரவரின் சக்தியாக இவள் ஸ்மசான பைரவியாய் விளங்குகிறாள்.

நம் உள் இருக்கும் தீமைகளுக்கு நாம் மிளகாய் அரைப்போம் - ஞானமாகிய மருந்திடுவோம்.

அதனால் தான் கொற்றவைக் கோயில்களில் மேற்குப்பகுதிகளில் சத்ரு சம்ஹாரம் அர்ச்சனை உண்டு- சத்ரு - பகை...யார்நமக்கு நாமே தான்

சிந்தியுங்கள்.....

சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர் - part 1
Aaadi month and Chennai city
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries