சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வீசும் காற்றை மதுரை மக்கள் அனுபவிப்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குற்றாலத்துப் பொதிகை மலைச் சாரலின் காற்று மதுரையில் புலவர்களால் போற்றம் படும் தன்மை உடைத்து.காற்று விழிப்புணர்வின் குறியீடு.

வேதச் சடங்குகள் மூலம் எழும் புகையின் மணம்மதுரையின் வீடுகளில் அடுக்களையில் தாளிக்கும் சமையலின் மணம்வீதிகளில் விற்கும் சுவை மிகு அப்பம் சுடும் புகை மணம்சோலைகள் தோப்புகள் வயல்களில் உள்ள பசுமையின் மணம்அகில் சாம்பராணியின் மணம்பாண்டிய மன்னைன் அரண்மனையில் உள்ள நறுமணப்பொருட்களின் மணம் எனப் பல்வேறு நல்ல வாசனைகள் கொண்ட காற்று வீசியது.

மதுரையின் நடுவில் மனிதர் தம் ஆணவத்தை அழித்துப் பிறவிகளை அழிக்கும் மழு [கோடரி] ஏந்திய சிவனின் கோயில் அமைகிறது.

பாண்டிய அரசரின் அரண்மனைப்பகுதி அதன் அருகில் அமைகிறது.

மதுரையில் அந்தணர்கள் ஓதும் வேத மந்த்ரங்கள் ஒலிக்கின்றன.

அதிகாலையில் மாலையில் பாண்டிய வீரர்கள் ஓங்கி அரையும் வீர முரசுகள் அதிர்வன.

காட்டில் இருந்து பழக்குவதற்காகப் பிடிக்கப்பட்ட யானைகளின் பிளிரல்போர் யானைகளின் பிளிரல்,குதிரைகளின் கணைப்பு கேட்கும்.

பறையடித்து ஆடுவோரின் ஒலி கேட்கும்.

பலவகை மரங்கள் ஊர் முழுவதும் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ளன.

புலவர்களால் போற்றப்படும் வைகை நதியில் யானைகுதிரைசிங்கம் ஆகிய விலங்குகளின் முகம் கொண்ட படகுகள் போக்குவரத்து செய்தன.

வைகையின் தென்கரை மருத மரங்கள் சூழப்பட்டு ”திருமருதம் துறை” எனப்பட்டது.

மிக உயர்ந்த இறைவன் வாழும் மதுரை வலம் வர வினை அகலும் என்று மக்கள் நம்பி ஊரையே ப்ரட்சிணம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.

அகழியுடன் கூடிய நெடிய கோட்டை ஊரைச் சூழ்ந்தது.

அகழி மிக ஆழம் கொண்டுதாமரைஅல்லி போன்ற நீர்ப்பூக்கள் நிறைந்துகொடும் முதலைகள் கொண்டும் இருக்கும்.

பாண்டிய அரசன் வெற்றி கொண்ட பிற தேசத்துக் கொடிகள் கோட்டையின் மேற்சுனரில் பறந்தன.

கோட்டை வாயிலை வீரம் மிக்க க்ரேக்க தேசத்துரோம் நகரத்துஎகிப்து தேசத்து வீரர்கள் காவல் காத்தனர்.

ஊருள்ளும்வெளியிலும் மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி பண்ணும் குளங்கள்குட்டைகள்ஏரிகள் இருந்தன.

கிழக்குப்பகுதிக் கோட்டையை ஒட்டி வெளியில் துறவிகள் தங்கும் ஆஸ்ரமங்கள் இருந்தன.

மஹாவிஷ்ணுபலராமன்,முருகன் கோயில்களும் புத்த விஹாரமும்சமணப்பள்ளியும் மதுரையில் இருந்தன.

மாடங்களும் மேல் தளமும் கொண்ட வீடுகள் இருந்தன.

ஆடி மாதத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தென்மேற்குப் பருவக் காற்று மதுரையில் வீச மக்கள் அதை அனுபவிப்பர்.

கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள தொண்டி என்ற மிகப் பழமையான துறைமுகம் மூலம் கடல் வணிகம் செய்துகப்பல்கள் மூலம் பெற்ற அகில்பட்டுகர்ப்பூரம்சந்தனம் போன்ற பொருட்கள் பாண்டியர்க்குக் கப்பப் பொருட்கள் ஆகும்.அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து வீசும் மாமதுரை.

பெண்கள் சூடும் மலர்களின் வாசம் கலந்த காற்று வீசும் மதுரை.

காமன் பண்டிகை கொண்டாடும் பங்குனி உத்திர விழா கொண்டாடும் மதுரை.

ஆடி மாதம் வைகையில் புது வெள்ளம் வரஅதில் நீராடிபடகுகள் ஓட்டி விளையாடும் மதுரை மக்கள்.

பாண்டிய மன்னன் அந்தப்புரத்தில் களிக்கும் உய்யாவனம் கொண்ட மதுரை.

உயர்ந்த கலைஞர்கள் பலர் தம் கலைத்திறனைக் காட்டி விருதுகள்பணம் பெறும் கலைகளை வளர்க்கும் மதுரை.

மருந்துகள்தேர்ச் சக்கரங்கள் பாகங்கள்போர்க் கருவிகள்தந்தப் பொருட்களும்நறுமணப் பொருட்களும்,பூக்களும் மாலைகளும் விற்கும் வியாபாரம் களை கட்டும் அங்காடித் தெரு கொண்ட மதுரை.

மிக உயர்ந்த நவரத்னக் கற்கள் விற்கும் ரத்னக் கடை வீதி கொண்ட மதுரை.

மிக உயர்ந்த தங்கம் விற்கும் பொன் வணிக வீதி.அதில் பொன்னின் விலைதரம் குறித்த விளம்பரக் கொடிகள் பறக்கும் மதுரை.

பருத்திகம்பளிஎலி மயிர்பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட பல்வேறு ஆடைகள் விற்கும் புடவைக் கடைத் தெரு கொண்ட மதுரை.

தராசு மூலம் நிருத்துப் பொருளை விற்பாரும்தரகு வேலை செய்வாரும்மிக உயர்ந்த மிளகு மூட்டைகள் கொண்டு வியாபாரம் செய்வோரும்உணவுப் பொருட்களும் தானியங்களும் விற்கும் கூலக்கடைத் தெருவும் கொண்ட மதுரை.

பல்வேறு தொழில் செய்வோர் வீதிகள்.

அந்தணர் தெருக்கள்அரசு அலுவலர் தெருக்கள்வேளாளர் வீதிகள்முச்சந்திகள்நாற்சந்திகள்ஊரின் நடுவில் உள்ள கோயிலைச் சுற்றி உள்ள கடைத்தெருக்கள்வெயில் புகாத வண்ணம் அடர்ந்த சோலைகள் கொண்ட மதுரை மாநகர்.

இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?
Madurai in Silapathykaram part 2
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries