இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?

இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?
 
வளம் மிக்க இப்பெரிய உலகில் வாழும் மக்களே....
 
பிறருக்குக் கவலையும் துன்பமும் கொடுக்கும் பேச்சையும் செயலையும் செய்யாதீர்.
 
கடவுள் உண்டு என உணருங்கள்.
 
கடவுளை உணர்ந்த உண்மையான சான்றோர்களை விரும்புக,  மதியுங்கள்.
 
பொய் கூற பயப்படுக.
 
பிறரைப் பற்றிப் புறம் கூற பயப்படுக.
 
உயிர்க்கொலைத் தவிர்த்திடுக.
 
சம்பாதித்த பணத்தில் சிறுபகுதியேனும் தானம் செய்க.
 
எதையும் விழிப்புணர்வுடன் தவமாய்க் காண்க.
 
ஆன்மீக சாதனைகள் மேற்கொள்க.
 
பிறர் செய்த உதவிகளை மறக்காதீர்.
 
தீய பழக்கம் கொண்ட மக்களின் நட்பை விலக்குக.
 
பொய் சாட்சி கூறாதீர்.
 
சத்ய வாக்குகளை மறக்காதீர்.
 
அறம் வழி வாழும் நல்லவர் தம் நட்பைக் கைவிடாதீர்.
 
வெறும் உடல் பலத்தால் சமூஹத்தில் தீமை செய்வோரை விட்டு விலகுக.
 
பிறருடைய கணவனையோ மனைவியையோ அணு அளவும் விரும்பாதீர்.
 
உயர்ந்த இல்லறத்தைப் போற்றி வாழ்க.
 
துன்பப்படும் உயிர்களை இரக்கத்துடன் பேணுக.
 
பாவம் ஏற்படுத்தும் தீவினையைச் செய்யாதீர்.
 
போதையும் தவறான காமமும் திருட்டுத் தொழிலையும் அணுகாதீர்.
 
பயன் இல்லாத வெட்டிப் போச்சைக் கைவிடுமின்.
 
இளமை - பொருள் - உடல் ஆகிய மூன்று நிலையற்றவை.
 
சேர்த்த பொருள் உடன் வாரா, மறுமைக்குத் துணை செய்யும் அறச்செயல்களை பக்தியுடன் செய்க.
 
உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பெண்களைச் சமூஹத்தில் உள்ள உயர்ந்த மக்கள் மதிப்பர், பின்பற்றுவர்.
 
நாம் செய்த தீவினை நம்மை வாட்டும்.
 
அரசியலில் தவறு செய்தவரை அறம் தண்டிக்கும்.
 
 
 
 
 
தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...
சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர்
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries