தமிழகத்து வீரமாத்திகள்....

தமிழகத்து வீரமாத்திகள்....
 
தமிழகத்தில் கணவனுடன் வீர மரணம் எய்திய பெண்களை வணங்கும் பல கோயில்கள் உள்ளன.
 
தீப்பாய்ந்த அம்மன், சதிக் கல் என்று வட தமிழகத்தில் பல்லவ தேசத்தின் பெண்கள் குறிப்பிடப்படுவர்.
 
வீர மாய்த்தி - வீரமாத்தி என்று கொங்குப் பகுதியிலும்
 
மாலைக் காளி என்று தென் பகுதியில் வீர மரணம் கொண்ட பெண்கள் போற்றப்படுவர்.
 
போரால், சதியால், விலங்குகளால் மரணம் அடைந்த ஆண்களின் பத்தினிகள் அதற்கு மேல் வாழ ஈடுபாடில்லாமல், வாழ்ந்தால் பிறரால் ஆபத்துகள் உண்டாகும் என்ற பயத்தால் வீர மரணம் அடைவர்.
 
குறிப்பாக வெற்றி கொண்ட மன்னனின் அடிமையாக வாழக் கூடாது என்ற எண்னத்தில் பெண் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
 
அத்தகைய பெண்கள் தாக்ஷாயிணியையே முன் மாதிரியாகக் கொள்வர்.அதனால் அவர்களும் ஆதிசதி தேவியான தாக்ஷாயிணின் சக்திகளாகவே மதிக்கப்பட்டனர்.
 
சங்ககாலம் முதல் கி.பி 16ஆம் நூற்றாண்டு வரை வீர மரணம் கொண்ட பெண்களுக்கான வீர நடுகற்கள் பல கோயில்களாக இன்றும் உள.
 
அதே வேளை தீப்பாய்ச்சிய அம்மன் என்று மதுரை மீது தீயைப்பாய்ச்சிய கண்ணகியாரையும் வணங்குவதைக் காண்க.
 
சமூஹத்தில் பலவகை முன்மாதிரி மக்களை தெய்வத்தின் ப்ரதிபலிப்பாகவே காணும் பண்டைய த்ராவிடப் பண்பாட்டின் சின்னங்கள் இவை.
 
சென்னை மாநகரில் வடபழனி சிக்னலில் காவல் நிலையத்தின் மிக அருகில் கி.பி 17ஆம் நூற்றாண்டின் தீப்பாய்ஞ்சி அம்மன் சன்னிதி இன்றும் வழிபாட்டில் உள்ளது.
 
கணவன் இறப்பின் மறுமணம் கொள்ளுதல், மணமுறிவுக்குப் பின் மறுமண்ம கொள்ளுதல் என மாற்றங்கள் கொண்ட இன்று இப்பெண்கள் சில சிந்தனைகளைத் தூண்டுவர்.
 
அடிப்படையில் தன் மானம் மரியாதையைக் காக்கும் பொருட்டு இவர்கள் வீரமரணம் கொண்டனர்.
மஹாகாளி தத்துவம்
Purananooru - a review about the theme
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries