மஹாகாளி தத்துவம்

மஹாகாளி தத்துவம்
 
ப்ரபஞ்சம் என்பதை ஓர் அறையாக வைத்துக் கொள்க.
அதில் உள்ள வெற்றிடம் முழுவதும் அணு சக்தியால் நிரம்பியுள்லது.
அதாவது ஒரு பாத்த்ரிரம் முழுவதும் பால் நிரம்பியுள்ளது போல்.
இந்த அடர்த்தியான கருமையை அணு சக்தியையே காளி என்கிறது வேத அறிவியல்.
இக்காளியே சகல ப்ரபஞ்ச சக்தியாய் மாறுகிறது.
இந்த அடர்த்தியான கருமை சக்தியை அய்ன்ஸ்டின் போன்றோரும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் தான் தாய்மை வழிபாட்டல் காளி மிக உயர் இடத்தில் இருக்கிறாள்.
பாரதம் முழுவதும் பெண் தெய்வ ஸ்தலங்கள் அதிகம் மஹாகாளியையே ஸ்தாபித்து வாழ்க்கை ஆதார சக்தியை அதிகரிக்க உதவும்.
குறிப்பாகத் தமிழகத்தில் தொன்மைக் காலம் முதல் காளி - கொற்றவை ஊரின் நடுவில் கோயில் கொண்டு அருள்வதைக் காண்க.
மஹாகாளி சிவனை மிதிப்பது போல் ஏன் சிற்பங்கள் காட்டுகின்றன?
சிவன் என்பது ப்ரபஞ்ச வெளி, அதில் பால் போல் அணு சக்தி நிரம்பி அதை ஆக்ரமித்து உள்ளதை இச்சிற்பம் உருவகம் செய்யும்.
மஹாகாளி ஏன் மிக கோரமாக சிற்பத்தில் இருக்கிறாள்?
கோரம் என்பது மனிதனின் ஆணவம் ஓர் உண்மையை அறியும் போது பயப்படும் தன்மையை வெளிப்படுத்தும்.அது என்ன எனில், ப்ரபஞ்சம், வெளி, உலகம், தோற்றங்கள், நாம் நம் வாழ்க்கை எல்லாம் ஆதிசக்தியின் தோற்ற மாயைகளே என்பது.
உண்மையை மனம் உணரும் போது அதை பயத்தால் ஏற்காத தன்மையை அன்னை காட்டுகிறாள்.
ஆணவம் அற்ற கதியை தலைகள் கோர்த்த மாலை உணர்த்தும்.
அவள் உறையும் மயானம் என்பது தூய ஆணவம் அகன்ற மனதின் குறியீடே.
அவளது வாள் ஞானம்
கைகள் கோர்த்த இடை மேகலை - வினைகள் அற்றுப் போய் மோட்சம் கொண்ட கதி.
பல ஆயிரம் முகங்கள், கைகள், கால்கள் என்பது அவளது எண்ணிலடங்கா அளக்கவொண்ணா சக்தியைக் குறிப்பதே.
காளி என்றால் ஆனந்தம் என்ற பொருள் உண்டு.
எது ஆனந்தம்?
உண்மை உணர்தல், அதை ஏற்றல், சந்தித்தல் ஆனந்தம்
அதனால் தான் ராமக்ருஷ்ண பரஹம்ஸர் வழிவரும் சீடர்கள் தம்முடன் ஆனந்தா என்ற அடை மொழியை இட்டுக் கொள்வர்.
பரம சக்தியாக காளி தூய அணு ஆற்றல்.
அவள் மந்த்ரவாதிக்கும் அருள்வாள், பாரதி - பரமஹச்ஸர் - காளிதாஸன் போன்றவர்க்கும் அருள்வாள்.
ஆனால் அவளது சக்தியைக் கொண்டு அவரவர் செய்யும் செயலால் ஏற்படும் வினைகளில் இருந்து அவரவர் தப்ப இயலாது.
பிறர் வாழ்வைக் கெடுக்கும் மாந்த்ரீகவாதி அவளது அருளால் தீமை செய்யும் போது அதன் வினைப்பயனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.
தச மஹா வித்யையில் மிக உயர் ஸ்தானம் மஹாகாளிக்கே.
அவளது பிற சக்தி இயக்கங்களே பிற தேவதைகள்.
அதனால் தான் காளியை நாம் வணங்குகிறோம்.
Kotravai in Tamil culture, Kolkatha kali, Mahakali, Kolkatha Dakshineswara kali, Uraiyoor Vekkaali.
இல்லற தேவதை காமாக்ஷி
தமிழகத்து வீரமாத்திகள்....
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries