இல்லற தேவதை காமாக்ஷி

இல்லற தேவதை காமாக்ஷி
காமம் - ஆசை
தன் திருக்கண்களால் அன்பர்களுக்கு அவர்தம் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் பாக்ய சக்தியை அருள்பவள்.
தச மஹா வித்யையில் லலிதா மஹா த்ரிபுரசுந்தரியின் வடிவாய் உள்ளவள் காமாக்ஷி.
மோக்ஷ நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தின் ப்ரதான தேவதை.
மிகத் தொன்மையான பெண் தேவதை.
பெளத்தர்களால் பரிபூர்ண ஞானம் நல்கும் தாரா தேவியாகவும், மணிமேகலை தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.
***
மாங்காட்டில் அன்னை சிவத்தை ஐக்யமாக தவம் செய்கிறாள்.
காஞ்சிபுரத்தில் பாலாற்றங்கரையில் மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜிக்கிறாள்.
வெள்ளம் பெருக்கு எடுத்து வர அன்னைத் தன் உயிரையும் பற்றி எண்ணாமல் லிங்கத்தைக் காக்கிறாள்.
லிங்கம் - இல்லறம்.
வெள்ளம் - வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சவால்கள்.
இல்லறம் சிதையாமல் தைரியமாகப் பேணுவதே பெண்ணின் மரபு.
இதையே குடும்பஸ்தலமாக இருந்து காஞ்சிபுரம் உணர்த்தும்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் நாலாயிரம் ஆண்டுகள் பழமையான மாமரம் இன்றும் உள்ளது.
லிங்கத்தின் மேனியில் வளையல் முலைக் காம்புச் சுவடுகள் இன்றும் உள்ளன.
இதுவே ஐம்பூதங்களில் ப்ருத்வி - பூமி தத்வ ஸ்தலம்.
காஞ்சியில் நூற்றி எட்டு சிவன் கோயில்கள். எதிலும் தேவி இல்லை.ஊரின் மையத்தின் அன்னை காமாக்ஷியாக விளங்குகிறாள்.
***
காம கோடி பீடம்
மனதில் உள்ள ஆசைகள் எல்லையைக் கோட்டை அடைந்து முக்திக்கு வழிசெய்யும் பீடம்.
ஆதிசங்கரர் தன் அத்வைத்த கொள்கையைக் காஞ்சிபுரத்தில் காமகோடி பீடம் ஸ்தாபித்து பெளத்தர் சமணர் முன் வாதாடி நிரூபனம் செய்தார்.அதுவே இன்றைய தொன்மை மிக்கக் காஞ்சிமடம்.
***
தேவி காமாக்ஷி
கச்சிக் காமக் கண்ணியார் - என்று கல்வெட்டுகள் கூறும்.
அருகில் இருந்து பார்க்கும் போது தென்மை மிக்க சிலையில் அகன்ற விழிகள் தெரியும்.
மனம் என்ற ஆனையை அடக்கும் விவேகம் என்ற அங்குசம்
மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஞானம் என்ற பாசம்.
மனம் என்ற கரும்பு
ஐம்புலன்கள் என்ற அம்புகள்
சத்யப் பொருளான கிளி.
அன்னை பத்மாசனத்தில் காமகோடி பீடத்தின் மீது அமர்ந்து இருக்கிறாள்.
பெளத்தர், சமணர், அகோரிகள், காபாலிகளும் வழிபட்ட மூர்த்தி இவள்.
அன்னை முன் ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர மஹாயந்த்ரம் அமைகிறது.அதற்கே அர்ச்சனை.
அதைச் சுற்றி எட்டு வாக் தேவதைகள் ஸ்தாபனம் ஆகி, அவர்கள் லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதாக ஐதீஹம்.
ஸ்ரீயந்த்ரம் உள்ள வட்டமான தொட்டி வடிவம் ஆதியில் அன்னையை யோனி பீட வடிவில் வழிபட்டதன் எச்சம் என்று ஆய்வுகள் கூறும்.
அதனால் தான் சக்தி பீடங்களில் தலையாய பீடமான அஸாம் கெளஹாத்தி காமாக்யா பீடத்தில் அன்னை இதே காமாக்ஷி சக்தியாய் உள்ளாள்.
மூலஸ்தானத்துள் சிறு த்வாரத்துள் அன்னையின் சக்தியை ஆவாஹனம் செய்துள்ளனர்.
மூலஸ்தானத்தின் வெளியில் இடது பக்கம் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.
ஒரு புறம் வராஹர் உள்ளார்.
***
வெளியில் அன்னபூரணி பீடம், கச்சி சாஸ்தா, ஆதிசங்கரர் சமாதி, பங்காரு காமாக்ஷி [இன்று அவள் தஞ்சையில் உள்ளாள்], உத்சவ தேவி சன்னிதிகள் உள.
மஹாலக்ஷ்மியும் மஹாசரஸ்வதியும் அன்னைக்குக் கவரி வீசுவது போல் உத்சவர் உண்டு.
அதாவது அறிவும் செல்வமும் அனுபவமாக மாற வேண்டும்.அதுவே விழிப்புணர்வு நிலையில் வாழ்க்கையைக் கொண்டு செல்லும்.
 
அன்னை, ஈசன் கொடுத்த ஒரு நாழி நெல் கொண்டு உலகிற்கு ஓராண்டு படி அளப்பதாக ஐதீஹம்.இது வீட்டின் பொருளாதார நிர்வாஹம் பெண்களின் கையில் உள்ளது என்பதைக் குறிக்கும்.
 
அன்னை ஈசனுடன் காஞ்சியில் முப்பத்தாறு வகை அறங்களைத் தம்பதி சமேதகராய்ச் செய்வதாக ஐதீஹம்.அவற்றுள் சில...
 
தண்ணீர்ப் பந்தல், நீர் நிலை ஏற்படுத்துதல், ஏழைக்குக் கல்வி, ஏழைப் பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணத்துக்குப் பொருளுதவி, கற்றோரை மரியாதை செயல், பள்ளிக்கூடம் கட்டுதல், நோயாளிகட்கு உதவல், ஏழைக் குழந்தைக்குப் பால் தருதல்....
 
அதனால் தான் காஞ்சிப்புரப் பட்டை முகூர்த்தப்பட்டு எனக் கொண்டாடினோம்.
காஞ்சிபுரம் இல்லற ஸ்தலம்.
வருக, பார்த்திடுக, பின்பற்றுக.
வறுமை தரும் தூமாவதி
மஹாகாளி தத்துவம்
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries