வறுமை தரும் தூமாவதி

வறுமை தரும் தூமாவதி
 
தச மஹா வித்யையில் ஒரு சக்தி தூமாவதி தேவி.வட பாரதத்தில் இத்தேவியை வழிபடும் முறை சற்று வித்யாசமானது.
 
இவள் விதவை.
இவள் வறுமையை ஏற்படுத்தும் மூதேவி.
இவள் தான் ஜேஷ்டா தேவி.
முறம், துடப்பம், காகம் ஆகிய இவளது பொருட்கள்.
இப்படி ஒரு தேவதையா?
 
எல்லாவற்றுள்ளும் உட்பொருள் வைத்து உரைப்பது தான் பாரதத்தின் ஆன்மீகக் கல்வியும் அதனொடு இயைந்த சிற்ப சாஸ்த்ரக் குறியீடும்.
 
சுமார் 600 ஆண்டுகட்கு முன்பு வரை ஜேஷ்டா தேவியை மக்கள் வணங்கினர்.குறிப்பாக சமணர்களின் ஒரு முக்திய பெண் தேவதை இவள்.
 
ஏன்?
என்னுள் தேவையில்லாத எண்ணங்கள், அதன் மூலம் நான் செய்யும் செயல்கள், அதனால் வரும் தீவினை, அதனால் வரும் தீய பலன்கள், துக்கம், அழுகை இவற்றில் இருந்து நான் கொடிய வறுமை நிலை அடைய வேண்டும்.
 
என்னுள் உள்ள தகாத எண்ணங்கள் பக்தியால் பெருக்கப்பட்டு ஞானத்தால் அள்ளி வீசப்பட வேண்டும்.
 
என் மனதில் தீமைக்கு வறுமை.
அதை அருள்வதே ஜேஷ்டா தேவியான தூமாவதி.
 
சரி தமிழகத்தில் தச மஹா வித்யா சக்திகள் வேறு வேறு வடிவில் மறைந்து வழிபாட்டில் உள்ளனர்.இந்த தூமாவதி யார் தெரியுமா?
 
வேறு யாருமல்ல, ஊர் ஊராக அமர்ந்து அருளும் மாரி அம்மை தான்!
 
ஓம் சக்தி!
இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் ...
இல்லற தேவதை காமாக்ஷி
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries