இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் கட்டுரை

இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் கட்டுரை
 
மதுரையில் பாண்டியன் முன் வழக்குத் தொடுத்து அவனுக்கு உண்மை உணர்த்தி, தன் கணவனின் பழியை விலக்கிய கண்ணகி, மன அமைதி தேடி வைகைக் கரை வழியில் பயணம் செய்தாள்.
 
தேனி வீரபாண்டி கெளமாரி அம்மை கோயிலில் அவள் பூரண ஞானத்துடன் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணி, வினைப்பயனின் உண்மையை உணர்ந்து சமாதானம் ஆகி, அதன் பின் மேற்கில் சேர தேசத்து எல்லையில் குமுளிப் பள்ளத்தாக்கில் உள்ள பளியங்குடி வழியாகப் பயணித்து, நெடுவேல் குன்றம் என்ற முருகன் கோயில் உள்ள 4300 அடி உயரம் உள்ள மலையில் ஏறி, அங்கு ஆடி மாதம் அனுஷம் அன்று சமாதி ஆனாள், தன் கணவனின் ஆன்மாவுடன் ஐக்யம் ஆனாள்.
 
இதைப் பழங்குடி மக்கள் சேரன் செங்குட்டுவனிடம் கூற, அதை உணர்ந்த ராணி வேண்மாள் உயர்ந்த பெண்ணுக்கு வீர நடுகல் வைத்து வழிபட்டு சமூஹத்துக்கு முன் உதாரணம் தர வேண்டும் என்று கூற, சேரனும் இமய மலையில் கல் எடுத்து, கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலை வைத்து, இன்றுள்ள கண்ணகிக் கோட்டத்தை எழுப்பினான்.
 
அதில் அவளது தோழி தேவந்திகை பூஜாரி ஆனாள்.
 
இழந்த நிம்மதியைப் பெறும் மஹா ஸ்தலமாக இதை மக்கள் மதிக்கிறார்கள்.
 
பின்னர் சேரன் கண்ணகியின் உடல் எச்சங்களைத் தன் தலைநகரான வஞ்சி மாநகருக்கு எடுத்துச் செல்கிறான் [கேரளம் - திருச்சூர் மாவட்டம் - கொடுங்கல்லூர் பகவதி கோயில்]
 
கண்ணகியின் அப்பா கொடுத்த அவளது சில நகைகள், சிலம்பு ஒன்று, ஒரு புடவை ஆகியன காளியின் இடது புறம் ரகசிய அறையுள் வைக்கப்பட்டு, காளியுடன் சேர்த்த வழிபாடு இன்றும் செய்யப்படுகிறது.
 
மதுரையின் மேற்குப் பகுதியில் வாழும் பல ஆயிர மக்களுக்கும் இவள் குலதெய்வம்.
 
இன்றுள்ள கண்ணகி கோட்டம் ராஜராஜ சோழனால் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.ராஜராஜ தன் சோழ சேதத்துப் பெண் தெய்வத்துக்கு நிலங்களும் பொன் ஆபரணங்களும் அளித்த செய்தி அங்கே கல்வெட்டில் உள்ளன.
 
ராஜராஜன் கண்ணகியை ”ஸ்ரீபூரணி” என்று குறிப்பிடுகிறான்.வாழ்வில் பூரணத்வம் பெற்றவள் என்று அர்த்தம்.
 
சிலப்பதிகாரம் ”மங்கல மடந்தை” - எப்போதும்  நல்லதை எண்ணும் பெண் என்று குறிக்கிறது.அதனால் தான் இப்பகுதி மங்கல தேவி கோயில் எனப்படும்.
 
ராஜராஜன் எழுப்பிய சிவன், கணபதி சன்னிதிகள், முருகன் சன்னிதி [சிலை இல்லை], வடக்குப் பார்த்த கண்ணகி சன்னிதி ஆகியன உள்ளன.கிழக்குத் தோரண வாயில் ராஜராஜனின் பணி.சிலப்பதிகாரம் கூறும் சுனையும் அதன் அருகில் உள்ளது.
 
இன்று கேரள தமிழகம் எல்லை ப்ரச்சனையால் வீணாய்ப் போய்க் கொண்டு இருக்கும் கண்ணகிக் கோட்டம் அரசாங்கத்தின் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது, ஆனால் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது.
 
சித்திரைப் பூர்ணிமை நாளில் மட்டும் காலை முதல் மாலை வரை இங்கு வர முடியும்.
 
1963 ல் எம் பேராசிரியர் Dr.S.கோவிந்தராசன் அவர்கள் தம் 16 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் கண்ணகிக் கோட்டத்தைக் கண்டு பிடித்தார்.
 
உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பெண்களே வீட்டுக்கும் சமூஹத்துக்கும் வழிகாட்டிகள்.சீதை, த்ரெளபதி போன்றவர்களின் வரிசையில் கண்ணகியும் இடம்பெறுகிறாள்.
தாய்மையின் குறியீடான சின்னமஸ்தா
வறுமை தரும் தூமாவதி
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries