தெள்ளு தலைத் தமிழ் வாணி

மொழி மனிதனுக்கு மட்டும் தரப்பட்ட கருவி. இதை நன்கு உணர்ந்தவன் தமிழன். அதனால் தான் மொழிக்கு இலக்கணம் கண்டான். மொழி மூலம் மனிதன் தன் உணர்வை இலக்கியம் ஆக்கினான். பாண்டியர் சங்கம் நிறுவி, மொழி மூலம் சமூஹ நலனுக்கு உரிய இலக்கியங்களைப் பிலவர் மூலம் வெளியிட்டனர். மொழி மூலம் மனிதன் தான் பக்குவப்படுவதை உணர்ந்தான். அதனால் தான் தான் பேசும் மொழியைத் தமிழன் தெய்வமாகவே உணர்ந்தான். தெய்வீக சக்தி என்பது மனதுக்கும் வாழ்வுக்கும் பயன் தருவது. அதனால் தான் தமிழன் தன் மொழியை தெய்வமாக்கி - தமிழன்னை, தமிழ் மகள், தமிழ் வாணி, தமிழ்ச்செல்வி, தமிழ் அரசி, தமிழச்சி, தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன் என்றெல்லாம் கொண்டாடுகிறான்.அதன் விளைவே மதுரைத் தமுக்கம் மைதானம் முன்புள்ள தமிழன்னை சிலை.ஒலி சக்தியாய் ஆகி, பல த்ராவிட மொழிகளை உருவாக்கிய ஆதி த்ரமிளம் தமிழ் ஆயிற்று.அதைத் தமிழி என்றும் கூறுவது வழக்கம்.அந்தத் தமிழியின் தாய்த் தன்மையைப் போற்றுவிக்கும் வகையில் தேவி வடிவில், ஞான முத்திரை தாங்கிய வலக்கரமும் ஓலைச்சுவடிகள் ஏந்திய இடக்கரமும் கொண்டு விளக்குகிறாள்.மதுரை மீனாட்சி அம்மனுக்குத் தமிழ்ச்செல்வி என்ற ஒரு பெயர் உண்டு. அன்னையின் இயல் இசை நாடகம் ஆகிய மூன்று இயக்க சக்திகளும் யாழ், எழுகோல், நடனம் என மூன்று வடிவில் அமைய, மிக அழகிய திருவாட்சி அன்னையை அலங்கரிக்கிறது. ”தெள்ளு கலைத்தமிழ் வாணி” என்கிறார் மஹாகவி பாரதி. இப்பெருமை உலகில் வேறு எந்த மொழிக்கும் மனிதன் கொடுத்ததில்லை. ஆனால் இன்றைய ஊடகங்கள் தமிழைச் சிதைப்பதை மனம் ஏற்கவில்லை. தரமான மொழி, படைப்புகள் மீண்டும் வருக.

WHO IS THIS AYYAPPAN?
தாய்மையின் குறியீடான சின்னமஸ்தா
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries