Kutrala kuravanji - an introduction to a beautiful Tamil literature

திருக்குற்றாலக் குறவஞ்சி

தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், கேரளம் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் குற்றாலம் அமைந்து இருக்கிறது.

குற்றால மலைக்குத் திரிகூட மலை என்று பெயர்.இப்பகுதியின் மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பொதிகை மலை என்று பெயர்.மலையில் மேகங்கள் பொதிப்பொதியாய் இருக்கும்.ஆகையால் பொதிகை என்று பெயர் வந்தது.இம்மலையில் அகஸ்தியரின் ஆஸ்ரமம் உள்ளது.அவர் தமிழ் இலக்கணத்தை எழுதினார்.அதன் பெயர் ”அகஸ்தியம்”.

குற்றாலத்தில் ஐந்து அருவிகள் இருக்கின்றன.

அருவிகளில் வழியும் தண்ணீர் மூலிகை குணம் கொண்டவை.

அருவிகள் எங்கே இருந்து உற்பத்தி ஆகி வருகின்றன என்று தெரியாது.

குற்றாலக் கோவிலில் நடராஜரின் சித்திர சபை உள்ளது.

அந்தச் சபையில் நடராஜர் ஓவியமாக வரைப்பட்டு உள்ளார்.

குற்றாலக் கோயிலில் மிகப் பழமையான குறும்பலா மரம் உள்ளது.

குற்றால சீசன் என்றால் என்ன?

கேரளத்தில் ஜூன் - செப்டம்பர் வரையில் தென்மேற்குப் பருவ மழை பெய்யும்.

கேரளாவில் மழை பெய்யும் போது அதன் சாரல் குற்றாலத்தில் அடிக்கும்.

அப்போது தமிழ்நாட்டில் வெயில் அடிக்கும்.

அப்போது மக்கள் அருவிகளில் நீராடி மகிழ்வார்கள்.

திரிகூடராசப்பக் கவிராயர் யார்?

இவர் ஒரு புலவர்.இவர் குற்றாலத்தில் கி.பி 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.இவர் குற்றாலம் பற்றி ”திருக்குற்றாலக் குறவஞ்சி” என்ற இலக்கியத்தை எழுதினார்.

குறவஞ்சி இலக்கியம் என்றால் என்ன?

குறத்தி தன் மலையின் வளத்தையும் நாட்டின் வளத்தையும் பற்றிக் கூறுவது குறவஞ்சி.அந்த மலைப்பகுதிக்கு உரிய தெய்வத்தை வாழ்த்திப் பாடப்படும்.குறத்தில் ஊரில் உள்ளவரின் கை ரேகையைப் பார்த்து ஜோதிடம் - குறி சொல்வாள்.

How can we serve the society - guidelines by ancie...
Kongu Desam - interesting facts about Kongu naadu
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries