Navarathry which binds the harmony of two states

இருமாநிலங்களின் ஒற்றுமைக்கு வழிசெய்யும் நவராத்ரி விழா...
 
கி.பி பதினோராம் நூற்றாண்டில் கம்பன் வாழ்ந்தார்.
அவர் வாழ்க்கை மிகவும் துன்பமானது.
சோழன் குலோத்துங்கனின் பகை, பொறாமை கொண்ட ஒட்டக்கூத்தரின் பகை ஒரு புறம், இதற்கிடையில் தன் மகன் அம்பிகாபதி சோழன் மகள் அமராவதி மீது காதல் கொள்ள, அவன் கொலை செய்யப்பட்டான்.
 
ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பெரும்பாடுபட்ட கம்ப ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த கம்பன் தன் வாழ்க்கையின் துன்பங்கள் தாளாமல் சில காலம் கவிஞர்களை மதிக்கும் சேர தேசம் குறிப்பாகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆதரவில் இன்றைய பத்மநாபபுரம் அரண்மனையில் வாழ்கிறார்.
 
அப்போது அவர் தான் ஆராதித்த மஹாசரஸ்வதி விக்ரஹத்தை மன்னனுக்கு அளித்து, அத்தேசத்தில் கல்வி கேள்விகள் கலைகள் வளர ஆசீர்வதித்தார்.அதன் பின் தன் ஊரான தேர் அழுந்தூர் வரும் போது நாட்டரசன்கோட்டையில் இயற்கை எய்தினார்.
 
விஜயதசமி அன்றி அவரது சமாதியில் இன்றும் பலர் எழுத்து அறிவித்தல் செய்வதைக் காண்கிறோம்.
 
இந்த சரஸ்வதி சிலை அதுமுதல் பத்மநாபபுர அரண்மனையில் மிக முக்கிய வழிபாட்டு மூர்த்தி ஆயிற்று.
 
குறிப்பாக சரஸ்வதியை உயர்த்தி ஆராதிக்கும் சாரதா நவராத்ரி [புரட்டாசி நவராத்ரி] மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
 
கி.பி 1834ல் திருவிதாங்கூர் மன்னர் குடும்பங்கள் தம் ஜாகையைத் திருவனந்தபுரத்துக்கு மாற்றிய போது, ஆண்டுக்கு ஒரு முறை நவராத்ரியில் சரஸ்வதி மிக்க மரியாதையுடன் திருவனந்தபுரம் எழுந்தருளும் மஹோத்சவம் துவங்கப்பட்டது.
 
அதற்காக அவ்வூரில் பத்மநாபர் கோயில் அருகில் ப்ரம்மாண்டமான நவராத்ரி மண்டபம் எழுப்பப் பட்டது.
 
இவ்விழாவில் மிக அருமையான விசயம் என்னவென்றால் நவராத்ரி துவங்கும் மூன்று தினங்களுக்கு முன் ஆரம்பம் ஆகும் மூன்று தெய்வங்களின் யாத்ரை தான்.இன்று இவ்விழா கேரளம் - தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுப் பணியால் இரு மாநில மக்களின் ஒற்றுமையுடன், இரு மாநிலக் காவல்துறையின் உதவியுடன் அமைதியாக ஆனால் அழகாகக் கோலாகலமாக நிகழ்கிறது.
 
கன்யாகுமரி மாவட்டம் வேளிமலை குமாரஸ்வாமி முருகன், சுசீந்திரம் சக்திபீட தேவதையான முன் உதித்த நங்கை, பத்மநாபபுரம் கம்பர் ஆராதித்த சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களும் அறுபது கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள்.
 
இரு மாநில மக்களின் பக்தியும், காவல்துறையின் அருமையான பாதுகாப்பும் கொண்டு இவ்விழா நடக்கிறது.அன்னை சரஸ்வதி திருவனந்தபுரத்தில் நவராத்ரி கொலு மண்டபம் சேற, மற்ற இரு தெய்வங்களும் உள்ளூரில் இரு வேறு கோயில்களில் சேவை சாதிப்பர்.
 
நவராத்ரி மண்டபத்தில் பத்து தின இசை விழாவில் பெண்கள் பாட அனுமதி இல்லை.நவநாகரீகப் பெண்கள் வழக்குப் போடலாமே? [இன்று எதற்கும் வழக்கு தானே?]
 
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இசை நாட்டியக் கலைகளில் ஈடுபடுவோர் கோயிலில் பணியாற்றும் தேவரடியார் பெண்களே என இருக்க, சமூஹத்தில் அவர்களின் நிலை சற்று மதிப்பில்லாமல் இருந்த கால கட்டத்தில் பெண்கள் இதில் பங்கேற்க அரசாங்கம் தடை செய்தது.
 
இன்று வரை நம் தமிழகத்து ப்ரதான ஊடகங்கள் இவ்விழாவைப் பெரிய விழாவாகக் காட்டுவதில்லை.இருமாநிலங்களின் ஆன்மீகக் கலாச்சார சங்கமம்! அழகர் வைகையில் இறங்கும் பெருவிழாபோல் இவ்விழாவிற்கும் சிறப்பு உண்டு.இதையும் ஊடகங்கள் முயற்சித்து மக்கள் முன் கொண்டு வரலாமே!
What is GOLU ?- navarathry special
Parents pooja on navarathry
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries