Purananooru - a review about the theme

புறநானூறு
மதுரை மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்
பல பெயர் தெரிந்தபெயர் தெரியாத புலவர்கள் பலரைப் பற்றிப் பதிவு செய்துள்ள 2000 ஆண்டுக்கால வரலாற்றுப் பொக்கிஷம்.
புலவர்கள் இவர்கள் கற்றவர்கள்தமிழ் இலக்கணப் புலமை கொண்டவர்கள்.
பல ஊர்பல தொழில் புரிந்தோர் தங்கள் வாழ்க்கையில் கண்ட தனிமனித சமூஹ உண்மைகளைப் பதிவாக்கினர்.
அரசர்களும் புலவர்களாகத் தம் கருத்துக்களைக் கூறுவதைக் காண்கிறோம்.
அரசர்கள் தனி மனிதனைப் பாடினர்.
அரசர்கள் புலவர்களிடம் சிலரைப் பற்றி உயர்ந்து கூறியுளர்.
புலவர்கள் வீரம்கொடைதர்ம வாழ்க்கைதனி மனித சமூஹ ஒழுக்கம்தனி மனித ஈகைசமூஹ நிலை ஆகியவற்றைப் பதிவாக்கினர்.
ஆனால் இதில் ஆய்வு செய்து பார்த்தவரை யாரும் வெறும் பொருளுக்காக வீண் பெருமை பேசிப் புகழ்வதைக் காண்பதற்கில்லை.வெட்டிப் புகழ்ச்சியை சங்கம் ஏற்பதில்லை!
வெறும் சோறு மட்டும் தான் வாழ்க்கையா?
இல்லைசோறு என்பது மனித ஜீவிதத்திற்கு மிக ஆதாரம்!
அதைக் கூட உண்மையில் அது இல்லாதவற்கு வழங்கும் நிலை 2016லும் உலக சமூஹத்தில் நிலவுவதைக் காண்கிறோம்!
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” - என்ற மஹாகவி பாரதியின் வாய்மை வாக்குறுதியைப் புறநானூறு மீட்டுவாக்கம் செய்யப் பயன்படுகிறது.
இல்லை புறத்தின் வாக்கை பாரதி மீட்டுருவாக்கம் செய்தார் எனலாம்.
சோறு பரிசு என்பதெல்லாம் ஒரு குறியீடாகக் காண்க.
அக்கால மக்கள் ஏன் கடந்த 20 ஆண்டுக்காலம் முன் வரை சமூஹம் போலி நாகரிகத்தில் விழாமல் உழைப்புசோறுபசியாறுதல்ஆன்மீகம்சிறு சேமிப்புஉற்றார் உறவினர் உதவிதர்ம காரியங்கள் என்று தானே இருந்துள்ளது?
தற்போது மிகவும் சுயநலமாகி நான்” என்ற எண்ணத்துடன் மட்டுமே பொருளீட்டும் தன்மைக்குள் போலி வளர்ச்சிகள் மனிதனை மயக்குகின்றன.
பரிசு பெற்ற தனி மனிதன் தன்னுடன் இருந்தவனையும் காப்பாற்றும் சமூஹப்பொறுப்பைப் புறம் சுட்டுகிறது.இன்று அது இல்லைஅதனால் தெருவோர destitudes, அனாதைகள்முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன.
போதும் என்ற உயர் மனோபாவம் அக்கால மக்கள் அதிகம் தொண்டு இருந்தனர்.
அது போகட்டும்வீண் விருதுகள்புகழ்பரிசு வேண்டி இக்காலப் புலவரோ எழுத்தாளரோ அரசியல்வாதிகளைப் புகழ்ந்து கூறும் தன்மையை சங்கப்புலவர்கள் கொண்டிலர்.காரணம் தமிழ்ச்சங்கம் என்பதே அக்கால journalisam தான்.அது ஒரு மிக உயர்ந்த strict ஆன editorial, sensorial board.பாண்டியர்கள் தமிழகத்தின் உயர் மனித பண்புகளைப் பதிவாக்கம் செய்து மனித சமூஹத்துக்கு வழிகாட்ட சங்கத்தை மீனாக்ஷியின் முன் சொக்கநாதரைத் தலைமையில் இருத்திக் கோயிலில் பொற்றாமரைக் குளக்கரையில் நிகழ்த்தினர்.
149 புலவர்கள்அதில் 49 பெண்கள் என்றால் அக்காலத் தமிழ்ப்பெண்டிரின் உயர் கல்வி என்னே?
ஒளவை என்பவள் கிழவியல்ல.முட்டாள் சினிமாக்காரர்கள் பல காலத்து ஒளவைகளை ஒன்று கூட்டி all in one செய்து விட்டனர்.
ஒளவை இளம் யுவதி,அவள் அதியனுடன் நட்புக் கொண்டு ஒழுகினள் எனில்,அக்காலத்தில் ஆண்-பெண் உயர் நட்பு சமூஹத்தில் காணப்பட்ட பார்வையை உணர்தல் வேண்டும்.
பல ஊர்களுக்கும் சென்று பலரது வாழ்வியல் மேன்மைகளைப் பதிவாக்கியுளர்.
சங்க உறுப்பினர்கள் 49 பேர் இதற்காகவே ஊர் ஊராய்ச் சென்று கள ஆய்வுகளும் செய்துளர்.
தனி மனிதனைப் பாடவில்லை!
அவனுள் இருக்கும் உயர் மனிதத்தையே பாடினர்.
அதனால் தான் பலரது தன்மைகளையும் இன்றும் நம்முள் வைத்துக் காணமுடியும்!
மண் ஆசையினால்புகழ் ஆசையினால் வேந்தர்கள் மக்களில் பலரைக் கொண்டு படைகளைக் கூட்டி சுயநல சுகபோகம் கண்ட காலத்தில் சில தரமான தைரியமான சங்கப் புலவர்கள் மன்னர்களுக்கு நிலையாமையை மிக தைர்யமாக எடுத்துச் சொல்லும் பாங்கைப் புறநானூறு காட்டுகிறது.அன்றும் இன்றும் மக்களுக்கு பூமி மீது போரைப் பற்றிய பயமே உள்ளது.இதை யாரும் மறுபதற்கில்லை.என்ன அன்று நேருக்கு நேர் போராடினர்இன்று குண்டு வீசியும், buttons தட்டியும் அழிக்கின்றனர்.அன்று பகைவரின் ஊர்களைஅரண்மனையைவயல்களைகுறிப்பாக நூலகத்தை அழித்தனர்.இன்றோ அப்பாவி ஜனங்கள் பலியாகின்றனர்.அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா போடும் கவிஞர் கூட்டமே இன்று அதிகம்.அரசனின் நட்பைக் காத்துக் கொள்ள புலவர்கள் வீண் பெருமை பேசவில்லை.பழி பாவத்தைச் சுட்டினால் அரசன் தம்மை இழிவாக தண்டிப்பானோ என்ற பயமோ insecurityயோ அவர்களுக்கு இல்லை.காரணம் கற்றவனுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு [பிழைப்பு]” என்று சத்யத்தை நம்பினார்.சும்மாவா இறையருளால் அவர்களை மதுரையில் கோயில் வைத்தான் பாண்டியன்அன்று மண் வெறி என்றால்இன்று மத வெறிஅன்றும் இன்றும் பெண்களின் நிலை மகா மோசம் தான்!
சதா மண் வெறி கொண்டு பிறர் தேசத்தை அபகரிக்கும் சூழலில் மன்னர்கள் வாழும் காலத்தில்ஒரு தேசத்தின் மக்கள் தம் வாழ்வியலின் அமைதியற்ற நிலையை ப்ரதிபலிக்கும் பாடல்கள் இவை.அல்லது பகைவரை எதிர்க்கத் தேவையான படைபலம் சேர்க்க மக்களை ஊக்குவிக்கும் வீரப் பாடல்களும் இவை எனலாம்.கதியற்ற போக்கில் வாழும் பலரது ப்ரதிநிதியாய்ப் பாணர்களும்புலவர்களும் மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்துப் புகழ்ந்து பரிசில் பெற்றுத் தம் கூட்டத்தைக் காத்திருக்க நியாயம் உண்டு எனத் தெரிகிறது.ஒரு வேளை சிறு சிறு கதியற்றோரைப் பாணர்களும் பெரும் புலவர்களும் சோறிட்டு ஆதரித்துக் காக்கும் சமூஹப் பொறுப்பை ஏற்று இருக்கக் கூடும்.
ஆனால் அன்று பகை மன்னைன் தேசத்தில் பிடிபட்ட பெண்கள் மாற்று அரசனின் மனையில் பணியாளராய்காமக்கிழத்திகளாய் ஆயினர்.இன்று உயர் மட்ட பாலியல் வக்ர கொடுமைகளுக்குப் போரின் முடிவில் ஆங்காங்கே பலியாவதைக் காண்கிறோம்.அவற்றில் இருந்து தப்பவே பல பெண்கள் உடன்கட்டை ஏறினர்வீரமாய் மாய்த்துக் கொண்டு வீர மாத்திகளாய் மாறினர்.
நடுகல்ப்ரமாண்டமான வீரன் சிலைதெய்வம் ஏற்றப் பட்ட உயர் மரியாதை ஆகியன உடல் வீரத்துக்கே தரப்பட்டது என்று காணும் போதுபோரின் உக்ரம்,தேவை ஆகியன புரிகின்றது.தம் தேசத்தின் வாழ்வியலை அந்நியன் கையில் ஒப்படைக்கக் கூடாது என்ற ஸ்வந்த்ர தாகமும் இதில் முக்கியம் உள்ளது.
தேசத்தின் நலனுக்காக அறியாமையால் வீரர்கள் அமர தண்டம்” - தன் தலையைத் தானே வெட்டிக் கொற்றவைக்குப் பலியிடும் வழக்கம் சங்கம்அதன் அடித்த காலகட்டத்தில் இருந்தது.பல அப்பாவிகளும் கைதிகளும் நரபலி கொடுக்கப் பட்டு இருத்தல் வேண்டும்.
அமர தண்டம் சமர்ப்பிக்கும் நடுகற்கள் தமிழகம் முழுவதும் உள.குறிப்பாகப் பல்லவர்கள் பல சிற்பங்களைச் செய்துளர்.சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இத்தகைய அமர தண்ட நரபலியைக் குறிப்பிடுவதைக் காண்க.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பெண்கள் இறைவனிடம், ”என் கணவன் விரைவில் வெற்றியுடன் போர் முடித்து வருக!” என்று வேண்டுவதைக் காணும்போது மிக உயர்ந்த தேசப்பற்று என்று கூறும் சமயத்தில் அவர்தம் இல்லற ஏக்கம், insecurityஆகியன உட்பொதிந்துள்ளதைக் காண்க.யாருக்குத் தான் சண்டை பிடிக்கும்?
ஆயுதங்களையே தெய்வமாக மதித்து வணங்கும் தொன்மையான மரபு இன்றுவரை உள்ளது.ஆயுதம் மனிதனை ஆபத்தில் இருந்து காக்கும் பொருள்.பிற்காலத்தில் சிற்ப சாஸ்த்திரத்தில் ஆயுதம் என்பது ஞானத்தின் குறியீடாகக் கொள்ளப் படுவதை உணர்க.
வெற்றி பெற்ற அரசன் தான் கைக்கொண்ட பகை தேசத்தின் சொத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறான்வீரர்களும் ஏழைகளும் பல பொருள் கொள்வதையும் காண்கிறோம்.
அப்பாவி வீரர்களுக்காகவே புலவர்களோ பாணர்களோ பாடிப் பரிசு பெற்றுப் பகிர்ந்தாரோ?
இல்லை! அந்தணர்களுக்கும் புலவர்களுக்கும் தரப்பெற்ற மிகப் பெரிய நிலங்கள் வீரர்களுக்குத் தரப்பட்டு இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது!
புறநானூற்றில் சில பாடல்களில் முதிய பெண்கள் தம் இளைய வயது மகனைப் போருக்கு அனுப்பும் சூழல்கள் பதிவாகியுள.அப்பாடியானால் அக்காலப் பெண்டிர் சதா குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மனித எந்திரமாக இருந்துள்ளனரா”ஈன்று புரத்தல் தாயின் கடன்” என்பது இதையே குறிக்குமா? - ஐயம் ஏற்படுகிறது.காரணம் மிக விரைவில் மணம் மேற்கொண்ட காலத்தில் வயது முதிந்த சூழலிலும் குழந்தை பெற்றனரா?
அப்படியே பல மகன்கள் பெற்ற அன்னையரும் போருக்கே மகன்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்துள்ளதோ? - யோசிக்க வேண்டும்.
வெறும் வேல்வாள்கத்தி ஆகியவற்றை வணங்கும் மரபில் இருந்து இன்னும் நாம் மாறவில்லை.
வீர மரணம் அடைந்த எல்லோருக்கும் நடுகல் வைக்க இயலாது.அதற்கு பதில் ஒரு குறியீட்டுக் கல் வைக்கப்பட்டும் இருக்க வாய்ப்பு உண்டு.பல நடுகற்கள் தனி வீரனுக்கும் உண்டு.இன்று வீரனின் சிலை நிறுவப்படுவதைக் காண்கசேரன் செங்குட்டுவனும் கண்ணகியின் சிலையை நடுகல்” என்றே கூறினான்.அது வீரம் சார்ந்த வழக்கில் மன்னனை எதிர்த்தவரின் குறியீடே!
இன்று தமிழகம் எங்கும் காணப்படும் கறுப்புசாமிமாடன்மதுரை
 வீரன்ஐயப்பன்சாத்தன்முனியப்பன் ஆகிய பல வீரத்தெய்வங்கள் வீரர்களின் அடையாள எச்சங்களே.புறநானூற்றில் இவற்றின் வித்துக்களைக் காண்க.
இவர்களையே living legends என்கிறோம்.ஆனால் அன்று போரில் வீர மாம் கொண்ட ஒரு வீரனுக்கு என்ன மரியாதை என்று இன்னமும் தெளிவாகவில்லை.ஆனால் இன்று ப்ரதிபலனைமரியாதைகளைசலுகைகளை எதிர்பார்த்தே ராணுவத்தில் சேர்பவர்களைப் புறநானூறு ஏற்பதற்கில்லைஇது தின்னம்!
நெடுநல்வாடையில் பாண்டியனின் வீரமும் அவனது போரும்அவன் தேவி அவன் இன்றி மேற்கொள்ளும் மனத்துயரங்களும் மிக அழகாகக் காட்டப்படுவதை வரிந்து வரிந்து வர்ணிப்பர்,அது தவறு”அடே மூட மன்னா! போதும் உன் மண் வெறிவீரம்உன் மனையாள் போல் மதுரையிலும் பாண்டிய தேசத்திலும் உன் பகை தேசத்தில் பல வீரர்களில் மனையாட்களும் குழந்தைகளும் பெற்றோரும் இன்னல் கொள்வதை உணர்” என்று பொஇ வைத்து சங்கத் தலைவர் நக்கீரர் பாடுவதை உணர்தல் அவசியம்.அன்றைய இளைஞன் மண்ணுக்குப் பலியானான்இன்றோ EMI, loans, stress because of various factors, diseases etc போராட்டம் மாறவில்லைபோராடும் களன் தான் மாறியுள்ளது.
அன்றைய போர்க்களத்தை வர்ணித்துப் பாடுவது போல் இன்றைய எல்லைப் போர்களின் தீவிரம் எத்தனை அளவுக்கு மக்களுக்குத் தெரியுமோஅதன் அசாதாரணமான நிலையை மக்கள் உணர கல்வியும் ஊடகமும் வழி செய்தால்சற்று சமூஹப் பொறுப்புணர்வு கூடும் என்பதில் ஐயம் இல்லை.
பெற்றோரின் உழைப்பும் த்யாகமும் தான் குழந்தையின் மகிழ்ச்சியின் உண்மை.அதே போல் தான் தேசத்தைக் காக்கும் படை வீரர்களின் உழைப்பும் த்யாகமும் முழுமொத்த தேசத்தின் மகிழ்ச்சி என்பதில் ஐயம் உண்டோ?
”எம் கணவரும்தந்தையும்மகனும்சகோதரரும் விரைவில் போர் முடித்து வர வேண்டும்” என்று மதுரைப் பெண்கள் பரங்குன்றத்தில் நேர்ந்து கொள்வதைக் காணும் போது அதே நிலை தான் இன்றும்! [பரிபாடல்]
போரில் இருந்து வெற்றியுடன் மீண்ட ஒரு வீரனும் அவன் மனையாளும் பரங்குன்றத்தில் முருகனுக்கு மயில் நேர்ந்து விடுவதை” - பரிபாடல் படம் பிடிக்கிறது.
தேசத்தில் ஆண்கள் கையில் காப்புக் கயிறு கட்டும் வழக்கமே ”ரட்சை” - protection என்ற கோட்பாட்டைத் தானே குறிக்கும்.தெய்வ மந்திரத்தைக் கொண்டு கையில் கயிறு கட்டி அனுப்புகிறோம்.அது அவன் உயிரைக் காக்கும் என்று நம்புகிறோம்.
என் சக ஆரிசிரியையின் கணவர் படை வீரர்.அவர் சொன்னார்”இப்போது அலைப்பேசி வசதி உள்ளது.அது வரும் முன் ஒவ்வொரு நாளும் பய உணர்விலேயே கழியும்.தலைமை இடம் தொலைப்பேசி அழைப்பு வந்தால் அதைப் பேசும் முன் இறைவனை வேண்டியே ஃபோனை எடுப்பேன்இப்போதும் சில எல்லைகளில் பணிக்கு அவர் போகும் போது அலைப்பேசி துண்டிக்கப்படும்...” [மாறினோமோ?]
பயணிக்கும் போது ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு தூங்காமல் இரவு முழுவதும் ரயில் பயணத்தில் துணை வரும் இளைய வீரனைக் காணும் போது மனம் ஏதோ பெருமைப் படுகிறதுபின்னால் சோதமும் உண்டாகிறது.
பயணத்தில் ஜாலியாக ஐ பாடுகளில் வீடியோ அல்லது கேம்ஸ் அல்லது பாட்டுக் கேட்டுக் குடும்பத்துடன் பயணிக்கும் நாம் அவனைப் பார்த்து அவனுக்கு ஒரு புன்னகை செய்யலாம்.அவன் நலமுடன் வாழ ப்ரார்த்திக்கலாம்!
வீரம் என்பது அன்று போர்க்களம்இன்று நெறியான வாழ்வியல். Every day we have to stand against various issues of society...that is 2016 Veeram.
தானம்ஈகைகொடை என்பது வெறும் பணம் அல்ல!
நட்புநல்வார்த்தைநற்கருத்துகள்விருந்தோம்பல் ஆகியன மாறவில்லை!
சங்கநூல் பதிவுகள் வெறும் கதையல்லஅவை மனிதனின் தன்மைகளின் ப்ரதிபலிப்புகள்
அவற்றைக் கொண்டு உன்னை வாழ்த்துவதில் எமக்கு அந்தப் புலவர்களும் மீனாக்ஷிசுந்தரேஸ்வரரும் மிக்க தயை செய்துள்ளனர்.
ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் மிக விசேஷமாக சங்கப்புலவர்கள் சன்னிதியில் மரியாதை செய்ததன் பலன் இப்போது கைகூடி நிற்கிறது.
என்னையே நான் ஒவ்வொரு புலவனாக விழிப்புணர்வில் காணும்உன் மனிதத்தைப் பாடும் பேறு கிடைத்துள்ளது.வேறு என்ன வேண்டும்இதன் மூலம் மீண்டும் தமிழ் மீட்டுருவாக்கம்மறுவாசிப்பு பெறுகிறது.இக்கால மாணவனுக்கு ஏற்ற வகையில் வெறும் உண்மையை நான் உடனுக்கு உடன் பதிவு செய்கிறேன்.
சங்கம் [சங்கம் என்றால் மிக உயர்ந்தது என்ற அர்த்தம் உண்டுகண்ட தமிழ் இப்போது  கையில்.....
தமிழகத்து வீரமாத்திகள்....
தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries