Sakthi Foundation அர்த்தமுள்ள தீபாவளி

Sakthi Foundation
அர்த்தமுள்ள தீபாவளி
 
தீபாவளியின் முதல் நாள் - தன த்ரயோ தசி
 
இன்று த்ரயோ தசி.
இதையே தன த்ரயோ தசி என்பர்.
வாழ்வின் ஆதாரமான மூன்று முக்கிய செல்வங்களை அன்னை மஹாலக்ஷ்மியிடம் வேண்டும் நாள்.அவற்றைக் கொண்டு வீணாக்காமல், பிறருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தன்னலம் அற்ற மனதுக்கே அம்மூன்று செல்வங்களையும் அன்னை அருள்வாள்.
தீய வழியில் தேடும் செல்வத்துக்கு மூதேவி என்றே பெயர், கருத்தில் கொள்க.அது தீமையை உருவாக்கிவிடுவதை வேதம் கூறும்.
இன்று மாலை புதிய பாத்திரம் ஒன்றில் பாலைக் காய்ச்சுக.
அதை மஹாலக்ஷ்மிக்கு அர்ப்பணம் செய்க.
மனம் - பாத்திரம்
பால் - உயர் தரமான எண்ணம்
உயர் எண்ணத்தின் படியே உயர் வாழ்வு இருக்கும்.
அரிசி, நீர், நாணயங்கள் ஆகிய மூன்றையும் அழகாய் தனித்தனி கிண்ணங்களில் அன்னை முன் வைத்து, விளக்கு ஏற்றி மஹாலக்ஷ்மிக்கு உரிய ஸ்துதிகள் கூறி வழிபடுக.
அதன் பின் வெங்காயம் கலவாத உளுந்து வடையை வீட்டின் நாற்புறத்தும் பஞ்சபூதங்களுக்கு நன்றி கூறி, வீசுக,அவை வீட்டை இயற்கைச் சீற்றங்களால் தாக்காமல் இருக்க வேண்டுக.
அதன் பின் புதிய அகலில் பசும் நெய்விட்டு தெற்கு திசை நோக்கி ஏற்றி, எம தர்ம ராஜனை வணங்குக, முன்னோரை வணங்குக.
நமது வாழ்க்கை முடிவு பூரணமாக இருக்க வேண்டுக.
சித்ர குப்தனை வேண்டுக - நாம் செய்த தீமை நன்மைகளை எண்ணிப் பார்த்திடுக.
மனதைத் திருத்துக.
இரவில் தூங்கும் முன் ஒரு கிண்ணியில் நல்லெண்ணெய்யும் ஒரு சொம்பில் துளசி தீர்த்தத்தையும் இட்டு, பூஜை அறையில் வைத்திடுக.
நல்லெண்ணெயில் உடல் மன ஆரோக்யத்தின் சக்தியான அம்ருத லக்ஷ்மி - தன்வந்த்ரியும், துளசி தீர்த்தத்தில் கங்கையும் இருக்கிறார்கள்.
அதிகாலை எழுந்து கங்கா ஸ்நானம் செய்து தென்னக தீபாவளியான நரக சதுர்தசியைக் கொண்டாடுக.
தீப ஒளி இதயத்தில் வீசுக.
அது ஞானம்!
 
தென்னகத்து தீபாவளி - நரக சதுர்தசி
அதிகாலையில் எழுக, எண்ணெய் பூசும் போது அம்ருத லக்ஷ்மியையும் தன்வந்த்ரியையும் ஆரோக்யத்துக்காக வேண்டிக் கொள்க.துளசி தீர்த்தத்தைக் குளிநீரில் கலக்கி, காசியில் புனித கங்கையில் நீராடும் எண்ணத்தில் மனத்தூய்மை உடல் தூய்மை வேண்டி நீராடுக.
 
விளக்கேற்றி, ஸ்ரீக்ருஷ்ணர் ருக்மிணி சத்யபாமாவை எண்ணி வணங்கி மனம் சதா கவலை என்ற நரகச்சிறையில் அடை படுவதை விடுவிக்கும் ஞான சக்தியை வேண்டுக.விஷ்ணு சஹஸ்ரநாம  கூறுக, திருப்பாவை, க்ருஷ்ண அஷ்டோத்ரம் கூறுக.புத்தாடை அணிக - அது புதிய எண்ணத்தின் குறியீடு.கொண்டாடுக....
 
மாலையில்
கலசம் வைத்து அதில் அன்னபூரணி, கங்கை, காலபைரவரை எண்ணி நீரும் உணவும், நல்ல காலமும் எப்போதும் நிலைக்க வேண்டுக.அன்னபூரணா அஷ்டகம், கால பைரவ அஷ்டகம் கூறலாம்.அதன் பின் வீட்டின் வாசலில் ஐந்து விளக்காவது ஏற்றுக.
 
அமாவாஸ்யை - வட தேசத்து தீபாவளி
இன்று மாலை கலசம் வைத்து அதில் மஹாலக்ஷ்மியையும் கெளரி தேவியையும் எண்ணி வழிபடுக.ஒரு புதிய ஆடை, பணம், இனிப்பு, அரிசி, உப்பு, தண்ணீர், புதிய வீட்டுக் கணக்கு நோட் ஆகியன வைத்து இல்லற நலம், தம்பதிகளின் நலம் வேண்டுக. [அன்னை கெளரியான பார்வதி இன்று கேதாரத்தில் ஈசனை தவம் இயற்றி அர்த்தநாரியான நாள்].
 
அமாவாஸ்யை மாலை அன்னை மஹாலக்ஷ்மி உதயம் ஆகிய செல்வத்தின் சக்தியாய் மஹாவிஷ்ணுவை அடைந்த நாள்.நல்ல வழியில் லக்ஷ்மி வரவேண்டும் என்று வேண்டி பூஜை செய்க.கனக தாரா, லக்ஷ்மி அஷ்டோத்ரம், குபேர பூஜை ஆகியன செய்க.வீடு முழுவதும் விளக்கு ஏற்றுக, ராம நாமம் கூறுக, ராமன் 14 ஆண்டுகள் கழித்து அயோத்யாவில் மீண்டும் வந்த நாள்,மனம் ஷாந்தி பெற ராம நாமம் மிக உயர் மருந்து.
 
மனமார ஏழைகள், பணியாளர்களுக்கு அறம் பல செய்க.
 
அன்னை மஹாகாளியை உபாசனை செய்பவர்கள் இந்த இரவில் காளிபூஜை செய்க.
மோஹினியின் உண்மைத் தன்மை உணர்ந்தால் வைகுண்டமே...
Deepawali - explanation
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries