Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different.

Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.

Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.

To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.

Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.

We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

Tanjore Quartet - தஞ்சை நால்வர்

தஞ்சை நால்வர்

தஞ்சாவூர்

உயர்ந்த ராஜராஜேச்சுரம்

பெரிய சிவலிங்கம்

பெரிய நாயகி

பெரிய நந்தி

சோழர்களும் நாயக்க மன்னர்களும் மராட்டிய மன்னர்களும் பாரத பூமியின் கலாச்சாரத்தையும் உயர் ஆன்மீகப் பண்பாட்டையும் காப்பாற்றிய பூமி.

இன்று உலகம் கைதொழும் தென் இந்திய சங்கீதமும் பரதநாட்டியம் என்று பாரத தேசத்தின் முத்திரை நடனமான சதிரும் தவழ்ந்து வளர மன்னர்களின் அரண்மனைகளும் அரசபையும் கோயில்களும் இடம் கொடுத்தன பூமி.

காவிரி வள தேசத்தில் கலைகள் களையெடுக்கப் பட்டு பக்குவமாக்கப் பட்ட பூமி.

சங்கீத மும்மூர்த்திகளும் நடந்த பூமி.

ஸ்யாமா சாஸ்த்ரி லோக நலனுக்காகத் தன் பூஜையையும் இசையையும் சதா பங்காரு காமாக்ஷிக்கும் அர்ப்பணித்த பூமி

ஆயிரம் ஆண்டுகள் கடந்து ஒரு அரசனுக்காக அவனது பிறந்த நாளைக் கொண்டாடும் பூமி

செந்நெல்லும், வீணையும், ஓவியமும், சமையலும், கதம்பமும், கலைப்பொருட்களும், தமிழ்ப்பல்கலைக் கழகமும், சரஸ்வதி மஹால் எனப்படும் உலகின் மிகப் பழைய நூலகமும் கொலு இருக்கும் பூமி

த்யாக ப்ரம்மத்தின் மகள் சம்வத்தினர் இன்றும் வாழும் பூமி

தஞ்சாசுரனை அழித்த திருமால் ஆழ்வார்களால் ஸ்துதி செய்யப் பட்ட பூமி

திருமுறை கண்ட சோழனாம் ராஜராஜனும் குந்தவி நாச்சியும் ஆண்ட பூமி

கருவூர்ச் சித்தரின் ஆன்மீக வழிகாட்டலில் அரசன் ராஜராஜன் உலகிற்கு ஓர் ஒப்பில்லா கலைப்பொக்கிஷத்தை உருவாக்கிய பூமி

படையெடுப்புகளால் பாரதத்தின் பண்பாடும் கலாச்சாரமும் ஆன்மீக வாழ்வும் சீரழிந்த நிலையில் ஆந்திர நாயக்கர்களும் மராட்டிய ராஜாக்களும் அபயம் தந்த பூமி

கலைகள் அவர்தம் காலடியில் தஞ்சம் புகுந்த பூமி

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் சரஃபோஜி தஞ்சாவூரை ஆளுகையில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்கிறார்கள்.

அக்காலத்தில் தஞ்சை நால்வர் - Tanjore quartet எனப்படும் நாட்டிய-இசை மேதைச் சகோதரர்கள் நான்கு பேர் அரசவையில் மிகவும் உயர் மதிப்பையும் மரியாதையையும் பெற்று கலைப்பணி செய்தனர்.

இவர்கள் முத்துஸ்வாமி தீக்ஷிதரிடம் மிக சிறப்பான பயிற்சிகள் பெற்றனர்.அவரது வழிகாட்டலில் திருவாரூர், தஞ்சைக் கோயில்களில் ஒவ்வொரு கால பூஜைக்கும், விழவுக்கும் உரிய தேவதாசி நாட்டிய-இசை முறையை மீண்டும் சீர் அமைத்துக் கொடுத்தனர்.

அவர்கள் தான் சின்னய்யா [1802 - 1856] - பொன்னய்யா [1802 - 1864] - சிவானந்தம் [1808 - 1863] மற்றும் வடிவேலு [1810 - 1845].இவர்களின் மூதாதையர் ஞானமுத்து நட்டுவனார் மற்றும் அவரது தம்பி ராமலிங்கம் திருநெல்வேலியில் இருந்து தஞ்சைக்கு வந்தவர்கள்.இவர்கள் இசை வேளாளர் குலத்தில் தோன்றியவர்கள். ஓதுவார்களாக வாழ்ந்த இவர்கள் சில கோயில்களின் பூஜா காலங்களுக்கு ஏற்ற நடன அமைப்புகளையும் உருவாக்கினர்.

ஞானமுத்து ஓதுவாரின் மகன்கள் - சுப்பராயன் மற்றும் சிதம்பரம்.சுப்பராயனின் மகன்களே தஞ்சை நால்வர்.

இவர்களில் வடிவேலு தீக்ஷிதரின் மிகவும் உயர் பாராட்டைப் பெற்றவர்.ஒரு முறை கேட்டாலே ஒரு கீர்த்தனையைப் பாடும் ஆற்றல் உடையவர். ”ஏக சந்த க்ரஹி” என்று தீக்ஷிதர் அடிக்கடி இவரைப் பாராட்டுவாராம்.இவர் தீக்ஷிதரின் தம்பி பாலு ஸ்வாமியிடம் இருந்து வயலின் கருவியைக் கற்றார்.

”நவரத்ன மாலிகா” எனப்படும் ஒன்பது உயர் க்ருத்திகளை இயற்றி தீக்ஷிதரை இவர்கள் மரியாதை செய்தனராம்.குருகுஹதாஸ, குருகுஹ க்ருப, குருகுஹ மூர்த்தி என்ற முத்திரைகளை இவர்களின் பாடல்களில் அமைத்து குருவை மரியாதை செய்தனர்.

”சங்கீத சாஹித்ய க்ஷேத்ரர்” என்ற விருதை மூவரும் சரஃபோஜியிடம் இருந்து பெற்றனர்.

 இன்று உலகம் புகழும் பரதநாட்டியம் எனப்படும் அக்கால சதிர் நடனத்தை செம்மை ஆக்கிய உயர் சிறப்பு இவர்களுக்கே உண்டு! இன்று ”தில்லானா” எனப்பதும் நடன அங்கத்தை அறிமுகம் செய்தவர்கள் இவர்கள் தான்.

ஒரு காலத்தில் இவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் மதிப்பின் கீழ் பத்மநாபபுர அரண்மனையில் வாழ்ந்தனர்.வடிவேலுவின் உயர் கலை ஞானத்தைப் பாராட்டி ஸ்வாதித் திருநாள் பத்மநாபபுர அரசவைக் கலைஞர் ஆக்கினார்.[1834]

கேரள தேசத்தில் ஆண்களுக்கே கலை வடிவங்கள் அதிகம் இருந்த வேளையில் மஹாராஜாவின் ஆலோசனைப்படி பரதநாட்டியத்தின் மற்றொரு பாணியாக ”மோஹினி ஆட்டத்தை” வடிவேலு தன் சகோதரர்களுடன் வடிவமைத்தார்.

சின்னய்யா மைசூர் சமஸ்தானத்திலும் கலை சேவை செய்துள்ளார். இவரது இசைப்பாடல்கள் ”சாமுண்டீஸ்வரி” என்ற முத்திரையைக் கொண்டுள்ளன.

இவர்கள் பாணியே பந்தநல்லூர் கலை வடிவம்.துச்சமாகவும் கேவலமாகவும் சமூஹத்தால் கருதப்பட்ட தேவதாசிகளின் சதிரை உன்னத பரதமாக பரிணமிக்க வைத்த ஸ்ரீமதி.ருக்மிணி தேவி அருண்டேல் இப்பாணியையே ஸ்ரீமீனாக்ஷிசுந்தரம் பிள்ளையிடம் இருந்து கற்றவர்.

இன்றும் தஞ்சை நால்வர் இயற்றிய வர்ணங்களும், நாட்டியப் பாடல்களும் ப்ரபலம்.

த்யாகராஜரை வரவழைக்க ஸ்வாதித் திருநாள் வடிவேலுவையே தூதனுப்பினாராம்.

பாலாசரஸ்வதி, ருக்மிணி தேவி, வைஜெயந்தி மாலா, ஹேமா மாலினி, உதய் சங்கர் போன்ற பலர் தஞ்சை நால்வர் பாணியில் கைதேர்ந்தவர்கள்.

இன்றும் தஞ்சையில் மேலை தெருவில் இவர்தம் இல்லம் அமைந்துள்ளது.

இசையையும் நடனத்தையும் கோயிலில் முறையாக வழிநடத்தி மெதுவாக சபைக்கும் சமூஹத்துக்கும் கொண்டு வந்த தஞ்சை நால்வருக்கும் பணிவான வணக்கங்கள்!

Rate this blog entry:
Tanjore Vadivelu and Maharaja Swathi Thirunal
Sadha kaal Govindha Maarar