Welcome, Guest
Username: Password: Secret Key Remember me
 • Page:
 • 1

TOPIC:

Tamil - Navarathri Messages 6 years 5 months ago #2070

 • Anonymous
 • Anonymous's Avatar Topic Author
 • Visitor
 • Visitor
Golu in Navarathri.

களி மண்ணில் இருந்து பானை செய்யப் படுகிறது.
அந்த பானை ஒரு நாள் மீண்டும் பூமியுள் புதைந்து களி மண் ஆகி விடுகிறது.
இது ஒரு recycling process.
இதே போல் தான் மூலப் பரம் பொருள் பராசக்தியாகி [universal energy], அச்சக்தி மீண்டும் பரம்பொருளின் தன்மையைப் பெறுகிறது.
பராசக்தி பஞ்ச பூதங்கள் வடிவு கொள்ளும் போது பல்வேறு தோற்றங்கள் ஏற்படும்.மனிதன் இதை உணர்தல் வேண்டும்.தன் படைப்பும் அதே நிலை தான் என்பதை உணர்தல் வேண்டும்.காணும் பொருள்கள், காண இயலாத பொருள்கள் ஆகியவற்றில் பராசக்தி தத்துவம் நிறைந்திருப்பதை உணர்க.அப்போது எல்லாம் ஒன்றே என்ற உண்மை விளங்கும்.அப்போது அனைத்தின் மீதும் அன்பும், பொறுப்பும், பேணும் தன்மையும் உருவாகி உலக ஷாந்தி நிலவ வழி பிறக்கும்.இதை உணர வழி வகுக்கும் உன்னதத் திருவிழா தான் நவராத்ரி.

October 2nd
நமக்குத் தெரியாமலேயே நம்மை ப்ரச்சனைக்குள் தள்ளும் விஷயம், நம் வீட்டில் நம் பார்வைக்கு வராமல் இருக்கும் சில ப்ரச்சனை ஆகியன மது - கைடபன் ஆகிய அசுரர்களாக உருவகம் ஆகிறது.இதை மஹாகாளி என்ற சக்தியின் அருளால் அறிவுடன் தெளிந்து அகற்ற வேண்டும்.இதையே நவராத்ரி முதல் நாள் குறிக்கிறது.

October 3rd
சக்தி வழிபாட்டில் மகிஷாசுர வதம் என்பது மிக மிக மிக்கிய சரிதம்.எருமையின் adamant attitude கொண்ட நம் அகம்பாவம், ”மாற மாட்டேன்” என்ற விடாப்பிடியான குணம் மகிஷாசுரன்.அவனை அனைத்து தேவதைகளின் ஒருங்கிணைந்த சக்தியாகிய துர்கை அழிக்கிறாள். துர்கை - தவறான வழியில் மனம் போகாமல் காக்கும் விழிப்புணர்வு நிலை. பழங்காலம் முதல் தேசத்தில் அதிகம் போற்றப்படும் தேவதை.ஒரு தீமையை அழிக்க அனைவரும் ஒருங்கிணைந்தே ஆக வேண்டும் என்ற கோட்பாட்டை துர்கையின் சில்ப சாஸ்த்ர விதிமுறை உணர்த்தும்.

October 5th
தேவியான சக்தியின் துணை கொண்டு நாம் மற்றொரு அசுரனை நம்முள் மாற்ற வேண்டும்.அது யார்? அவன் தான் தூம்ரலோசனன்.எதையும், யாரையும், எச்செயலையும் எப்போதும் குற்றம் கண்டு பிடித்துத் தவறாகவே பார்க்கும் negative attitude இந்த அசுரன்.இவனை எதிர்மாறான சக்தியாக மாற்ற தேவியைப் பூஜிப்போம்.

October 6th
தேவியின் துணை கொண்டு நாம் இரண்டு பயங்கர negative attitudes அசுரர்களை அழிக்க வேண்டும்.யார் அவர்கள்? சண்டன் - முண்டன். ஒரு தேவையற்ற, தீய எண்ணம் உருவாக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட supportive energy ஆக இருக்கும் இரு பலமான எண்ணங்களே இவர்கள்.இவர்களை அன்னை வதம் செய்வதால் அவள் சண்டி, சாமுண்டீஸ்வரி ஆகிறாள்.

October 7thp
மிக பயங்கரமான கொடிய அசுர சக்தி ஒன்று நம்முள் இருக்கிறது.அது தான் இடைவிடாமல் நம்மைப் பிடித்து வாட்டும் கவலை.ஒரு ப்ரச்சனையில் இருந்து அதை மற்றொரு ப்ரச்சனையாக மாற்றும் மனதின் தன்மை அது.இதுவே ரக்தபீஜன் என்ற அசுரன்.ஒரு துளி ரத்தத்தில் இருந்து ஆயிரம் ரக்தபீஜர்கள் எழுவதாக வர்ணிக்கப் படுகிறது.இதை, ஒரு தவறை மறைக்க அடுத்து அடுத்துத் தவறுகள் செய்யும் மனதின் தன்மையாகவும் பார்க்கலாம்.அன்னையின் அருளுடன் அறிவால் இத்தன்மையை அகற்ற வேண்டும்.[இன்று மஹாசரஸ்வதி சக்தியைக் கொண்டு நம் படிப்பு, தொழில் சம்பந்தமான tools பூஜையில் வைக்க வேண்டும், மூல நக்ஷத்ரம் பார்த்து வைக்கவும்]

October 8th
.[இன்று மஹாசரஸ்வதி சக்தியைக் கொண்டு நம் படிப்பு, தொழில் சம்பந்தமான tools பூஜையில் வைக்க வேண்டும், மூல நக்ஷத்ரம் பார்த்து வைக்கவும்] இன்று முதல் மூன்று நாட்கள் உங்கள் தொழில் சம்பந்தமான ஏதோ ஒரு பொருள்,கருவி சரஸ்வதி என்ற சக்தியால் recharge செய்யப்படுதல் அவசியம்.
இக்கட்டத்தில் அன்னையின் அருளுடன் நாம் மற்றொரு கொடிய எண்ணத்தை அகற்ற முற்படுவோமே! அவ்வசுர சக்தியின் பெயர் சுக்ரீவன்.இவர் ராமாயண சுக்ரீவன் அல்ல.இவன் அசுரர்களின் P.A. அதாவது தீய எண்ணத்தைச் செயல் படுத்துவதற்கு உடன் இருந்தே தூபம் போட்டுத் தூண்டும் சக்தி தான் இவன்.

October 9th
அன்னை மஹாசரஸ்வதியின் ஞான சக்தி கொண்டு மிக அருமையான இரண்டு அசுர சக்திகளை அகற்ற வேண்டும்.சும்ப - நிசும்பர்கள்.இவர்கள் அண்ணன் தம்பிகள்.தங்கள் அன்பின் மீது அதி மீறிய நம்பிக்கைக் கொண்டவர்கள்.தங்கள் மூலமே தங்களுக்குச் சாவு வர வேண்டும் என்று வரம் வாங்கியவர்கள்.கடைசியில் சரஸ்வதியின் அழகில் மயங்கி, அவளை மணப்பது யார் என்ற போட்டில் பெண்ணாசைக் கண்ணை மறைக்க, அவள் சொன்னபடி வாள் சண்டை இட்டு ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு இறந்தனர்.நம்முள் இருக்கும் தீய எண்ணங்களால் நாம் ஒரு போதும் தொல்லைப் பட மாட்டோம் என்ற திமிரும் அகம்பாவமும் தான் இந்த அசுரர்கள். கடைசியில் digging his own grave என்ற கதையாய் நாம் செய்த தீவினை நமக்கே சங்கு ஊதுவது தான் இந்த சும்ப நிசும்ப வதம்.”நமக்கு நாமே பகை” என்ற ஞானம் இருந்தால் மனதைத் தீய வழியில் செல்ல விட மாட்டோம் அல்லவா? [இன்று வரை நாம் பார்த்த அசுர சக்திகளை அன்னை அழிப்பதையே மிகப் பழமையான தேவி மாஹாத்மியம் வர்ணிக்கிறது]

அறிவுக் கொழுந்து என்றால் என்ன?
கேரளத்தில் கோட்டயம் மாநகருக்கு அருகில் பனச்சிக்காடு என்ற ஊர் உள்ளது.அங்கு மிகவும் இயற்கைச் சூழலுடன் அன்னை மஹா சரஸ்வதி கோயில் கொண்டு அருள்கிறாள்.அது எப்படி?

அன்னை பசுமையான கொழுந்து விட்டுப் படரும் வெற்றிலைக் கொடிகளின் வடிவில் வணங்கப்படுகிறாள். வெற்றிலைக் கொடி அனைத்து திசைகளிலும் படரும் தன்மை உடையது.அதைப் போல் நம் அறிவு அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்த wholistic knowledge ஆக இருக்க வேண்டும்.வெற்றிலை உயர் மருத்துவ குணம் கொண்டது.அது போல் ஞானமே அறியாமையால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு மாமருந்து.பசுமை என்பது புதன் க்ரஹத்துடன் தொடர்பான வண்ணம்.அது முழுமையான ஞானத்தின் அறிகுறி.

முன் காலத்தில் வருடம் ஒரு முறை குடஜாத்ரிக்குச் சென்று மூகாம்பிகையை வணங்கி வந்த ஒரு வேத ஆசான், ஒரு கட்டத்தில் வயோதிகம் வர அன்னையை இவ்விடத்தில் ஒரு தாழங்குடையின் கீழ் வெற்றிலைக் கொடியாய் ஆவாஹனம் install செய்து மக்களின் பரிணாமத்துக்கு வழி செய்தார்.

நவராத்ரிக்காலத்தில் மிகவும் கோலாகலமாய் விளங்கும் பனச்சிக்காடு தக்ஷிண மூகாம்பிகை ஆகும்.கலைமகளின் அருள் பெற விஜய தசமி அன்று பல ஆயிரம் மக்கள் ஒன்று கூடி எழுத்தாரம்பம் செய்வர்.

அறிவுக் கொழுந்து என்று அழைப்பது பனச்சிக்காடு வாழும் அன்னையின் ஸ்வரூபத்தால் தான்.அதனால் தான் பாரத தேசத்தில் நல்ல நிகழ்வுகளின் இறுதியில் வெற்றிலை பாக்கு - தாம்பூலம் தருகிறார்கள். அவ்வெற்றிலை அந்நிகழ்வு மூலம் நாம் பெறும் விழிப்புணர்வைக் குறிக்கிறது.

Please Log in or Create an account to join the conversation.

Last edit: by Uni5.

Tamil - Navarathri Messages 6 years 5 months ago #2072

 • Uni5
 • Uni5's Avatar
 • Offline
 • Administrator
 • Administrator
 • Posts: 497
 • Thank you received: 14
October 5th
தேவியான சக்தியின் துணை கொண்டு நாம் மற்றொரு அசுரனை நம்முள் மாற்ற வேண்டும்.அது யார்? அவன் தான் தூம்ரலோசனன்.எதையும், யாரையும், எச்செயலையும் எப்போதும் குற்றம் கண்டு பிடித்துத் தவறாகவே பார்க்கும் negative attitude இந்த அசுரன்.இவனை எதிர்மாறான சக்தியாக மாற்ற தேவியைப் பூஜிப்போம்.

October 6th
தேவியின் துணை கொண்டு நாம் இரண்டு பயங்கர negative attitudes அசுரர்களை அழிக்க வேண்டும்.யார் அவர்கள்? சண்டன் - முண்டன். ஒரு தேவையற்ற, தீய எண்ணம் உருவாக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட supportive energy ஆக இருக்கும் இரு பலமான எண்ணங்களே இவர்கள்.இவர்களை அன்னை வதம் செய்வதால் அவள் சண்டி, சாமுண்டீஸ்வரி ஆகிறாள்.

October 7thp
மிக பயங்கரமான கொடிய அசுர சக்தி ஒன்று நம்முள் இருக்கிறது.அது தான் இடைவிடாமல் நம்மைப் பிடித்து வாட்டும் கவலை.ஒரு ப்ரச்சனையில் இருந்து அதை மற்றொரு ப்ரச்சனையாக மாற்றும் மனதின் தன்மை அது.இதுவே ரக்தபீஜன் என்ற அசுரன்.ஒரு துளி ரத்தத்தில் இருந்து ஆயிரம் ரக்தபீஜர்கள் எழுவதாக வர்ணிக்கப் படுகிறது.இதை, ஒரு தவறை மறைக்க அடுத்து அடுத்துத் தவறுகள் செய்யும் மனதின் தன்மையாகவும் பார்க்கலாம்.அன்னையின் அருளுடன் அறிவால் இத்தன்மையை அகற்ற வேண்டும்.[இன்று மஹாசரஸ்வதி சக்தியைக் கொண்டு நம் படிப்பு, தொழில் சம்பந்தமான tools பூஜையில் வைக்க வேண்டும், மூல நக்ஷத்ரம் பார்த்து வைக்கவும்]

October 8th
.[இன்று மஹாசரஸ்வதி சக்தியைக் கொண்டு நம் படிப்பு, தொழில் சம்பந்தமான tools பூஜையில் வைக்க வேண்டும், மூல நக்ஷத்ரம் பார்த்து வைக்கவும்] இன்று முதல் மூன்று நாட்கள் உங்கள் தொழில் சம்பந்தமான ஏதோ ஒரு பொருள்,கருவி சரஸ்வதி என்ற சக்தியால் recharge செய்யப்படுதல் அவசியம்.
இக்கட்டத்தில் அன்னையின் அருளுடன் நாம் மற்றொரு கொடிய எண்ணத்தை அகற்ற முற்படுவோமே! அவ்வசுர சக்தியின் பெயர் சுக்ரீவன்.இவர் ராமாயண சுக்ரீவன் அல்ல.இவன் அசுரர்களின் P.A. அதாவது தீய எண்ணத்தைச் செயல் படுத்துவதற்கு உடன் இருந்தே தூபம் போட்டுத் தூண்டும் சக்தி தான் இவன்.

October 9th
அன்னை மஹாசரஸ்வதியின் ஞான சக்தி கொண்டு மிக அருமையான இரண்டு அசுர சக்திகளை அகற்ற வேண்டும்.சும்ப - நிசும்பர்கள்.இவர்கள் அண்ணன் தம்பிகள்.தங்கள் அன்பின் மீது அதி மீறிய நம்பிக்கைக் கொண்டவர்கள்.தங்கள் மூலமே தங்களுக்குச் சாவு வர வேண்டும் என்று வரம் வாங்கியவர்கள்.கடைசியில் சரஸ்வதியின் அழகில் மயங்கி, அவளை மணப்பது யார் என்ற போட்டில் பெண்ணாசைக் கண்ணை மறைக்க, அவள் சொன்னபடி வாள் சண்டை இட்டு ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டு இறந்தனர்.நம்முள் இருக்கும் தீய எண்ணங்களால் நாம் ஒரு போதும் தொல்லைப் பட மாட்டோம் என்ற திமிரும் அகம்பாவமும் தான் இந்த அசுரர்கள். கடைசியில் digging his own grave என்ற கதையாய் நாம் செய்த தீவினை நமக்கே சங்கு ஊதுவது தான் இந்த சும்ப நிசும்ப வதம்.”நமக்கு நாமே பகை” என்ற ஞானம் இருந்தால் மனதைத் தீய வழியில் செல்ல விட மாட்டோம் அல்லவா? [இன்று வரை நாம் பார்த்த அசுர சக்திகளை அன்னை அழிப்பதையே மிகப் பழமையான தேவி மாஹாத்மியம் வர்ணிக்கிறது]

Please Log in or Create an account to join the conversation.

Last edit: by Uni5.
 • Page:
 • 1
Time to create page: 0.249 seconds

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries