தீபாவளி
ப்ரம்மம் பராசக்தியாக மாறுகிறது
பராசக்தி பஞ்சபூதங்களாக மாறி அதன் கூட்டு இயக்கத்தால் ப்ரபஞ்சம் தோன்றி இயங்குவதை நன்கு மாணாக்கன் அறிதல் வேண்டும்.
அதன்பின் தீபாவளிக் கோட்பாடு தருக.
காளி என்றால் என்ன?
பாத்திரத்தின் உள்ளே வெற்றிடம் உள்ளது.அதில் தண்ணீரை முழுவதும் நிரப்புகிறோம்.
இதைபோல் இப்ரபஞ்சம் முழுவதும் உள்ள அண்ட வெளியில் முற்றிலும் முழுதும் இருண்ட அடர்த்தியான ப்ரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது.அதைக்கொண்டே பராசக்தி ஐம்பூதங்களைத் தோற்றுவிக்கிறது.இந்த இருண்ட அடர்த்தியான சக்தியான ஆற்றலையே குமரிக்கண்ட முன்னோர் ”காளி” என்று உருவகம் செய்தனர்.[அகமான மனதில் உருவம் தருதல் உருவகம்.]
THE DARK SPACE ENERGY IS KAALI.
இந்தக் காளியை மஹாராத்ரி என்று வணங்குவது தீபாவளி அமாவாஸ்யை இரவு.கிழக்கு இந்திய மாநிலங்களில் தீபாவளிக்குக் காளி பூஜை என்றே பெயர்.இப்போது புரியும் ஏன் நம் தேசத்தில் ஊர் தோறும் காளியை அதிகம் மக்கள் வணங்குகிறார்கள் என்று.
அர்த்தநாரி விளக்கம்...
அதே அமாவாஸ்யை தினத்தில் ஆந்திரம் கர்நாடகம் வடதமிழகப் பகுதிகளில் தம்பதிகள் கேதார கெளரி பூஜையை இல்லற மேம்மைக்கு என மேற்கொள்வது மிக ப்ரஸித்தம்.
கேதார்நாத்தின் அன்னை பார்வதி தவம் இயற்றி சிவனின் உடலில் இடபாகத்தைப் பெற்ற நாள் இதுவாகும்.இவ்விடத்தில் ப்ரம்மமும் சக்தியும் ஒன்றே என்ற கோட்பாட்டையும் ஆண் - பெண் சமத்துவம் குறித்த அர்த்தநாரி உருவகத்தையும் விளக்குக.இதில் ப்ரம்மம் சக்தி ஆகிய இரண்டையும் ஆண் பெண் தத்துவங்கள் என்று உருவகம் செய்வதை மீண்டும் revise செய்க.குறியீட்டு முக்கோணங்களைக் காட்டுக.[ஆண் - மேல் நோக்கிய மஞ்சள் முக்கோணம், பெண் கீழ் நோக்கிய சிவப்பு முக்கோணம்]
தீபம் வழிபாடு ஏன்
இவ்விடத்தில் குத்துவிளக்கு ஏற்றும் UNI5 concept revise செய்யப்படுதல் அவசியம்
ப்ரபஞ்சம் முழுவதும் அணு சக்தி அலைகள் சதா வெளிச்சமாக இயங்குகின்றன.அனைத்தும் இந்த ஒளியால் ஆனவையே என்பது விஞ்ஞானம்.இதை உணர்த்தவே தீபங்களை வரிசையாக ஏற்றி வணங்கும் தீப ஆவளி - தீபாவளி உயர்விழாவை முன்னோர் உருவாக்கினர்.மனிதன் ஒளி சக்தியின் உண்மையை மேன்மையை உணர்ந்து அவ்வொளி புறத்தே விளக்காயும் அகத்தே ஆன்மீக ஒளியாயும் வணங்குவதே தீபாவளி.
எல்லா விளக்கும் விளக்கல்ல - குறளை இவ்விடத்தே விளக்குதல் வேண்டும்.
அண்ட வெளியின் ஒளி சக்தியால் தான் அனைத்தும் ஆனது என்ற உண்மையை அறியவும், மனதில் உள்ள அறியாமை இருளை நீக்கும் ஞான வெளிச்சத்தை உள்ளே ஏற்றவும் விளக்கு வழிபாடு உருவானது.
தமிழகத்தில் தீபாவளி...
தென் தேசத்தில் ஐப்பசியில் அடைமழைக்காலத்தில் ஐந்நூறு ஆண்டுகள் முன்பு வரை இவ்விழா இல்லை.நாயக்க மன்னர்கள் காலத்தில் வந்த பழக்கமே தீபாவளி.இன்று கேரளத்தில் தீபாவளி இல்லை.தமிழர்களுக்கும் கேரளத்தவர்க்கும் தீபாவளி என்பது திருக்கார்த்திகையே.
தமிழகத்தில் தீபாவளி அமாவாஸைக்கு முன் தினமான சதுர்தசியில் வரும்.இதை நரக சதுர்த்தசி என்றே கூறுவர்.
கண்ணனின் மகன் நரகன்.அவன் இன்றைய பீஹார் ஒரிஸா மாநிலங்களை ஆண்டவன்.அவனுக்கு அழகிய பெண்களைச் சிறைப்பிடித்துச் சித்ரவதை செய்வது பொழுதுபோக்கு.இதை அவன் தாயான சத்யபாமா எவ்வளவு தடுத்தும் அவன் மாறவில்லை.கண்ணன் வேறுவழியின்றி உலக சமூஹ நன்மைக்கு எனத் தன் மகனை எதிர்த்துப் போரிட அதில் பாமா அவனைக் கொல்கிறாள்.விடுவிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கண்ணனுடன் த்வாரகைக்குச் சென்று அவன் கீழ் வாழ்ந்தனர்.இந்த நிகழ்வையே தமிழர் தீபாவளியெனக் கொண்டாடுகிறோம்.
மனமாகிய சிறையினுள் நமது எண்ணங்கள் முக்காலத்திலும் ஏதோ ஒன்றை எண்ணிக் கவலைப் படுவதில் இருந்து விடுதலை பெறுதலை இது குறிக்கும்.
பாமா தன் மகனையே கொல்வது என்பது, நம்மால் உருவான வேண்டாத எண்ணங்களை நாமே தான் அகற்ற வேண்டும் என்று உணர்க.
உத்திர மத்திய ப்ரதேச தீபாவளி...
ஸ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கழிந்து அயோத்யா மீண்டு திரும்பிய நாள் அமாவாஸ்யை.ஸ்ரீராமன் இல்லாத 14ஆண்டுகள் கோசலை தேச மக்கள் விழா கொண்டாடவில்லை.அமாவாசை அன்று மாலை ஸ்ரீராமன் அயோத்யாவுள் நுழையும் போது ஊரே கூடி விழா எடுத்து வரவேற்றதை இம்மாநிலத்தோர் கொண்டாடுவர்.
தீபாவளி கொண்டாடும் முறை
த்ரையோதசி - புதுப் பாத்திரம் வாங்கி அதில் பால் காய்ச்சி வழிபடுக.சுத்தமான பாத்திரத்தில் இட்ட தூய பாலே கெடாமல் இருக்குமாப்போல் மனமாகிய பாத்திரம் எப்போது உயர் எண்ணங்கள் கொண்டு விளங்க வேண்டும்.இதையே தன த்ரயோதசி என்பர்.தனம் - செல்வம், உயர் எண்ணங்கள் வரின் அனைத்து செல்வங்களும் வரும்.
அன்று மாலை உளுந்து வடை வெங்காயம் இன்றிச் செய்து எட்டு திசைகளிலும் ஒரு வடையை வீசி, எட்டு திசைகளையும் ஐம்பூதங்களையும் வணங்குக.அன்று மாலை ஆறு மணிக்கு வீட்டில் தென் திசை நோக்கி எம தீபம் இடுக. முன்னோர்களின் அருள் வேண்டி அத்தீபத்தை ஏற்றுக [அகல்]
இரவில் உறங்கப் போகும் முன் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெயும் சொம்பில் துளசி தீர்த்தமும் சாமி அறையில் வைத்துச் செல்க.நல்லெண்ணெயில் உடல் ஆரோக்யத்தின் சக்தியும், துளசி தீர்த்தத்தில் மனத் தூய்மையின் சக்தியும் உள்ளது.
கங்கை ஸ்நானம்
அதிகால எழுந்து நல்லெண்ணெய்யைத் தலையில் பூசி, துளசித் தீர்த்தத்தைச் சிறிது குளிக்கும் தண்ணீரில் கலந்து, காசியில் கங்கையில் குளிக்கும் பாவனையில் உடல் மனம் தூய்மை வேண்டி நீராடுக.இதையே கங்கா ஸ்நானம் என்கிறோம்.
புறத்தூய்மை நீரான்...குறளை விளக்குக.
அன்னபூரணி
பூமி மூலம் உழவர் தரும் உணவை அன்னபூரணி என்கிறோம்.அந்த சக்தியை வீணாக்காமல் உண்க.அதே வேளை இயற்கை வேளாண்மை மூலம் கிட்டும் உணவை உண்க.தரமான உணவை உண்க.உணவை ஆரோக்யம் குறித்து விழிப்புணர்வுடன் உண்க.அதை இல்லாதவர்க்கும் விருந்தினர்க்கும் தருக. அந்த அன்னபூரணியின் பொன் விக்ரஹத்தைக் காசியில் மூன்று நாட்கள் தீபாவளியில் பூஜித்து உலகில் உள்ள மக்கள் யாவர்க்கும் உணவு கிட்ட வேண்டுவர்.
அன்று மாலை அல்லது காலை மஹாவிஷ்ணுவுக்கு உரிய ஸ்லோகங்கள், திவ்யப்ரபந்தத்தில் சில பகுதிகள் சொல்லி ஸ்ரீமந்நாராயணனை வணங்குக.
அன்று மாலை விளக்கேற்றி வழிபடுக, வீடு முழுதும் விளக்கு ஏற்றுக, ஐந்து விளக்காவது ஏற்றுக.
புத்தாடை - புதிய தரமான எண்ணங்கள்
மறுநாள் அமாவாஸ்யை.முன்னோர் வழிபாடு கழித்து, அர்த்தநாரீஸ்வரரைக் குடும்ப நலன் வேண்டு வழிபடுக.
மாலையில் புதுத்துணி, காசு, அரிசி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை வைத்து மஹாலக்ஷ்மியை பூஜித்து வீட்டில் எப்போதும் எட்டு வகைச் செல்வங்கள் கிட்ட வேண்டுக.புதிய வியாபாரக் கணக்கைத் தொடங்குக.வடதேசத்து மக்களுக்கு இந்த அமாவாஸையே தீபாவளி, புதுவருடம்.
மறுநாள் கோவர்த்தன பூஜை
களிமண்ணில் மலை செய்து, அதில் முளைப்பாரி இட்டு, கண்ணனின் உருவத்தை அதில் வைத்து, மலைகளும், காடுகளும் செழிக்க, பருவமழை பொய்க்காமல் பெய்ய இறைவனை வேண்டுக.மலைக்காடுகள் அழியாமல் காக்கும் விழிப்புணர்வை இவ்விடத்தில் நினைவில் கொள்க.
கண்ணன் வாழ்ந்த வ்ருந்தாவனம் அருகில் உள்ளது கோவர்த்தனம் குன்று.அதனடியில் ஆண்டு தோறும் மக்கள் மழைக் கடவுளான இந்திரனுக்கு விழா எடுப்பர்.ஆனால் கண்ணன் காலத்தில் அதைக் கண்ணன் மாற்றினான்.
கண்ணன் கூறுவான், ”மழை மேகங்கள் எப்போதும் பருவ காலத்தே வரும்.அது பூமி மீது பெய்ய மலைகளும், காடுகளும் அவசியம், அவற்றைப் பேணி நன்றிக் கடன் செய்க”
ஆழி மழைக் கண்ணா திருப்பாவையை ஓதுக.
தீபாவளி இனிக்கட்டும்!
1913 Hits
1913 Hits