Sankhya thathvam - Manimekalai epic
நான் யார், நான் இத்தன்மை கொண்டவன் என்று அறிவதற்கு மிகவும் அரியது, ஆனால் முழு முயற்சியால் அது கைகூடும்.
நானே முக்குணமுமாய் இருக்கிறேன்!
மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிகம் இடம் கொடாதே!
எவ்வகைப் பொருளும் தோன்றுவதற்கு இடம் ஆவதே மூலப்பொருள்!
மனதில் எழும் எண்ணங்கள் மூலம் இம்மூலம் மறைக்கப்படுகிறது.
சாங்கிய ப்ரவசன பாடியம் உடையார் - கி.பி 1
__________________________________________________
சித்தமே மூலம்
அதன்கண் மான் என்ற புத்தி வெளிப்படும்
அதன்கண் ஆகாயம் வெளிப்படும்
ஆகாயத்தில் இருந்து வாயு வெளிப்படும்
வாயுவில் இருந்து தீ வெளிப்படும்
தீயில் இருந்து நீர் வெளிப்படும்
நீரில் இருந்து நிலம் வெளிப்படும்
இவற்றின் சேர்க்கையால் மனம் வெளிப்படும்
மனதின்கண் அகங்காரம் - விகாரம் தோன்றும்
வானம் - செவி - ஒலி
வாயு - உடல் - ஸ்பர்சம்
தீ - விழிகள் - ஒளி
நீர் - நாக்கு - சுவைகள்
நிலம் - நாசி - வாசம்
இவற்றின் சேர்க்கையால் உலகின் அனைத்துப் பொருட்களும் தோன்றும்
அதன் பின் தான் தோன்றியே வழியே ஒடுங்கியும் விடும்
அதன்பின் எல்லாம் ஒன்றாகி ஒரே மூலமாய் விளங்கும்
சைனாவின் சாங்கிய ஞானி பரமார்த்த என்பவரின் நூலையே மணிமேகலைக் காலத்தில் அதிகம் சாங்கியர்கள் பின்பற்றி உளர்.
________________________________________________________
புருஷ தத்துவம்
எளிதில் அறிய முடியும்
அனைத்துப் பொருள்களில் தோற்றத்தின் மூலம் ஆகும்
அது எக்குணமும் அற்றது
அதுவே அனைத்துத் தோற்றத்தின் காரணமும் ஆகும்
அதுவே எங்கும் வ்யாபித்து நிலைத்து இருப்பது
அதுவே ஏக தத்துவமாய் நிலை பெற்றது
அதுவே நித்தியமானது
அதுவே உள் உணர்வின் வடிவாய் இருப்பது
அதுவே புருஷ தத்துவம்!
____ விஞ்ஞான பிக்ஷுவின் சாங்கிய யோக நூல்
___________________________________________________________
புருஷ தத்துவத்தால் அறியப்படும் பொருள்கள் மொத்தம் 25
பஞ்சபூதங்கள், ஐந்து புலன்கள், அவற்றின் நுகர்ச்சிகள், வாக்கு - கைகள் - கால்கள் - பாயுரு - உபத்தம் ஆகிய ஐந்தும், மனம் - மான் - அகங்காரம் - மூலப்பகுதி ஆகிய நான்கும் - உயிர் ஒன்றும் மொத்தம் 25
சாங்கியத்தைக் கபிலர் அறிந்து இலக்கணம் வகுத்தார் என்பதையே மணிமேகலை கூறும், அதை ஆதி சங்கரர் சீர் செய்தார் என்றும் வரலாறு பதிவு செய்வதைக் காண்கிறோம்.
கபிலர் - சாங்கிய ப்ரவசன சூத்ரம் ,ஈஸ்வர க்ருஷ்ணர் - சாங்கிய காரிகை - பிற்காலத்தில் பலரும் ஏற்றுக் கொண்ட சாங்கிய நூல்.