Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different.

Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.

Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.

To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.

Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.

We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

தமிழகத்து வீரமாத்திகள்....

தமிழகத்து வீரமாத்திகள்....
 
தமிழகத்தில் கணவனுடன் வீர மரணம் எய்திய பெண்களை வணங்கும் பல கோயில்கள் உள்ளன.
 
தீப்பாய்ந்த அம்மன், சதிக் கல் என்று வட தமிழகத்தில் பல்லவ தேசத்தின் பெண்கள் குறிப்பிடப்படுவர்.
 
வீர மாய்த்தி - வீரமாத்தி என்று கொங்குப் பகுதியிலும்
 
மாலைக் காளி என்று தென் பகுதியில் வீர மரணம் கொண்ட பெண்கள் போற்றப்படுவர்.
 
போரால், சதியால், விலங்குகளால் மரணம் அடைந்த ஆண்களின் பத்தினிகள் அதற்கு மேல் வாழ ஈடுபாடில்லாமல், வாழ்ந்தால் பிறரால் ஆபத்துகள் உண்டாகும் என்ற பயத்தால் வீர மரணம் அடைவர்.
 
குறிப்பாக வெற்றி கொண்ட மன்னனின் அடிமையாக வாழக் கூடாது என்ற எண்னத்தில் பெண் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
 
அத்தகைய பெண்கள் தாக்ஷாயிணியையே முன் மாதிரியாகக் கொள்வர்.அதனால் அவர்களும் ஆதிசதி தேவியான தாக்ஷாயிணின் சக்திகளாகவே மதிக்கப்பட்டனர்.
 
சங்ககாலம் முதல் கி.பி 16ஆம் நூற்றாண்டு வரை வீர மரணம் கொண்ட பெண்களுக்கான வீர நடுகற்கள் பல கோயில்களாக இன்றும் உள.
 
அதே வேளை தீப்பாய்ச்சிய அம்மன் என்று மதுரை மீது தீயைப்பாய்ச்சிய கண்ணகியாரையும் வணங்குவதைக் காண்க.
 
சமூஹத்தில் பலவகை முன்மாதிரி மக்களை தெய்வத்தின் ப்ரதிபலிப்பாகவே காணும் பண்டைய த்ராவிடப் பண்பாட்டின் சின்னங்கள் இவை.
 
சென்னை மாநகரில் வடபழனி சிக்னலில் காவல் நிலையத்தின் மிக அருகில் கி.பி 17ஆம் நூற்றாண்டின் தீப்பாய்ஞ்சி அம்மன் சன்னிதி இன்றும் வழிபாட்டில் உள்ளது.
 
கணவன் இறப்பின் மறுமணம் கொள்ளுதல், மணமுறிவுக்குப் பின் மறுமண்ம கொள்ளுதல் என மாற்றங்கள் கொண்ட இன்று இப்பெண்கள் சில சிந்தனைகளைத் தூண்டுவர்.
 
அடிப்படையில் தன் மானம் மரியாதையைக் காக்கும் பொருட்டு இவர்கள் வீரமரணம் கொண்டனர்.
Continue reading
  801 Hits
801 Hits

Purananooru - a review about the theme

புறநானூறு
மதுரை மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்
பல பெயர் தெரிந்தபெயர் தெரியாத புலவர்கள் பலரைப் பற்றிப் பதிவு செய்துள்ள 2000 ஆண்டுக்கால வரலாற்றுப் பொக்கிஷம்.
புலவர்கள் இவர்கள் கற்றவர்கள்தமிழ் இலக்கணப் புலமை கொண்டவர்கள்.
பல ஊர்பல தொழில் புரிந்தோர் தங்கள் வாழ்க்கையில் கண்ட தனிமனித சமூஹ உண்மைகளைப் பதிவாக்கினர்.
அரசர்களும் புலவர்களாகத் தம் கருத்துக்களைக் கூறுவதைக் காண்கிறோம்.
அரசர்கள் தனி மனிதனைப் பாடினர்.
அரசர்கள் புலவர்களிடம் சிலரைப் பற்றி உயர்ந்து கூறியுளர்.
புலவர்கள் வீரம்கொடைதர்ம வாழ்க்கைதனி மனித சமூஹ ஒழுக்கம்தனி மனித ஈகைசமூஹ நிலை ஆகியவற்றைப் பதிவாக்கினர்.
ஆனால் இதில் ஆய்வு செய்து பார்த்தவரை யாரும் வெறும் பொருளுக்காக வீண் பெருமை பேசிப் புகழ்வதைக் காண்பதற்கில்லை.வெட்டிப் புகழ்ச்சியை சங்கம் ஏற்பதில்லை!
வெறும் சோறு மட்டும் தான் வாழ்க்கையா?
இல்லைசோறு என்பது மனித ஜீவிதத்திற்கு மிக ஆதாரம்!
அதைக் கூட உண்மையில் அது இல்லாதவற்கு வழங்கும் நிலை 2016லும் உலக சமூஹத்தில் நிலவுவதைக் காண்கிறோம்!
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” - என்ற மஹாகவி பாரதியின் வாய்மை வாக்குறுதியைப் புறநானூறு மீட்டுவாக்கம் செய்யப் பயன்படுகிறது.
இல்லை புறத்தின் வாக்கை பாரதி மீட்டுருவாக்கம் செய்தார் எனலாம்.
சோறு பரிசு என்பதெல்லாம் ஒரு குறியீடாகக் காண்க.
அக்கால மக்கள் ஏன் கடந்த 20 ஆண்டுக்காலம் முன் வரை சமூஹம் போலி நாகரிகத்தில் விழாமல் உழைப்புசோறுபசியாறுதல்ஆன்மீகம்சிறு சேமிப்புஉற்றார் உறவினர் உதவிதர்ம காரியங்கள் என்று தானே இருந்துள்ளது?
தற்போது மிகவும் சுயநலமாகி நான்” என்ற எண்ணத்துடன் மட்டுமே பொருளீட்டும் தன்மைக்குள் போலி வளர்ச்சிகள் மனிதனை மயக்குகின்றன.
பரிசு பெற்ற தனி மனிதன் தன்னுடன் இருந்தவனையும் காப்பாற்றும் சமூஹப்பொறுப்பைப் புறம் சுட்டுகிறது.இன்று அது இல்லைஅதனால் தெருவோர destitudes, அனாதைகள்முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன.
போதும் என்ற உயர் மனோபாவம் அக்கால மக்கள் அதிகம் தொண்டு இருந்தனர்.
அது போகட்டும்வீண் விருதுகள்புகழ்பரிசு வேண்டி இக்காலப் புலவரோ எழுத்தாளரோ அரசியல்வாதிகளைப் புகழ்ந்து கூறும் தன்மையை சங்கப்புலவர்கள் கொண்டிலர்.காரணம் தமிழ்ச்சங்கம் என்பதே அக்கால journalisam தான்.அது ஒரு மிக உயர்ந்த strict ஆன editorial, sensorial board.பாண்டியர்கள் தமிழகத்தின் உயர் மனித பண்புகளைப் பதிவாக்கம் செய்து மனித சமூஹத்துக்கு வழிகாட்ட சங்கத்தை மீனாக்ஷியின் முன் சொக்கநாதரைத் தலைமையில் இருத்திக் கோயிலில் பொற்றாமரைக் குளக்கரையில் நிகழ்த்தினர்.
149 புலவர்கள்அதில் 49 பெண்கள் என்றால் அக்காலத் தமிழ்ப்பெண்டிரின் உயர் கல்வி என்னே?
ஒளவை என்பவள் கிழவியல்ல.முட்டாள் சினிமாக்காரர்கள் பல காலத்து ஒளவைகளை ஒன்று கூட்டி all in one செய்து விட்டனர்.
ஒளவை இளம் யுவதி,அவள் அதியனுடன் நட்புக் கொண்டு ஒழுகினள் எனில்,அக்காலத்தில் ஆண்-பெண் உயர் நட்பு சமூஹத்தில் காணப்பட்ட பார்வையை உணர்தல் வேண்டும்.
பல ஊர்களுக்கும் சென்று பலரது வாழ்வியல் மேன்மைகளைப் பதிவாக்கியுளர்.
சங்க உறுப்பினர்கள் 49 பேர் இதற்காகவே ஊர் ஊராய்ச் சென்று கள ஆய்வுகளும் செய்துளர்.
தனி மனிதனைப் பாடவில்லை!
அவனுள் இருக்கும் உயர் மனிதத்தையே பாடினர்.
அதனால் தான் பலரது தன்மைகளையும் இன்றும் நம்முள் வைத்துக் காணமுடியும்!
மண் ஆசையினால்புகழ் ஆசையினால் வேந்தர்கள் மக்களில் பலரைக் கொண்டு படைகளைக் கூட்டி சுயநல சுகபோகம் கண்ட காலத்தில் சில தரமான தைரியமான சங்கப் புலவர்கள் மன்னர்களுக்கு நிலையாமையை மிக தைர்யமாக எடுத்துச் சொல்லும் பாங்கைப் புறநானூறு காட்டுகிறது.அன்றும் இன்றும் மக்களுக்கு பூமி மீது போரைப் பற்றிய பயமே உள்ளது.இதை யாரும் மறுபதற்கில்லை.என்ன அன்று நேருக்கு நேர் போராடினர்இன்று குண்டு வீசியும், buttons தட்டியும் அழிக்கின்றனர்.அன்று பகைவரின் ஊர்களைஅரண்மனையைவயல்களைகுறிப்பாக நூலகத்தை அழித்தனர்.இன்றோ அப்பாவி ஜனங்கள் பலியாகின்றனர்.அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா போடும் கவிஞர் கூட்டமே இன்று அதிகம்.அரசனின் நட்பைக் காத்துக் கொள்ள புலவர்கள் வீண் பெருமை பேசவில்லை.பழி பாவத்தைச் சுட்டினால் அரசன் தம்மை இழிவாக தண்டிப்பானோ என்ற பயமோ insecurityயோ அவர்களுக்கு இல்லை.காரணம் கற்றவனுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு [பிழைப்பு]” என்று சத்யத்தை நம்பினார்.சும்மாவா இறையருளால் அவர்களை மதுரையில் கோயில் வைத்தான் பாண்டியன்அன்று மண் வெறி என்றால்இன்று மத வெறிஅன்றும் இன்றும் பெண்களின் நிலை மகா மோசம் தான்!
சதா மண் வெறி கொண்டு பிறர் தேசத்தை அபகரிக்கும் சூழலில் மன்னர்கள் வாழும் காலத்தில்ஒரு தேசத்தின் மக்கள் தம் வாழ்வியலின் அமைதியற்ற நிலையை ப்ரதிபலிக்கும் பாடல்கள் இவை.அல்லது பகைவரை எதிர்க்கத் தேவையான படைபலம் சேர்க்க மக்களை ஊக்குவிக்கும் வீரப் பாடல்களும் இவை எனலாம்.கதியற்ற போக்கில் வாழும் பலரது ப்ரதிநிதியாய்ப் பாணர்களும்புலவர்களும் மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்துப் புகழ்ந்து பரிசில் பெற்றுத் தம் கூட்டத்தைக் காத்திருக்க நியாயம் உண்டு எனத் தெரிகிறது.ஒரு வேளை சிறு சிறு கதியற்றோரைப் பாணர்களும் பெரும் புலவர்களும் சோறிட்டு ஆதரித்துக் காக்கும் சமூஹப் பொறுப்பை ஏற்று இருக்கக் கூடும்.
ஆனால் அன்று பகை மன்னைன் தேசத்தில் பிடிபட்ட பெண்கள் மாற்று அரசனின் மனையில் பணியாளராய்காமக்கிழத்திகளாய் ஆயினர்.இன்று உயர் மட்ட பாலியல் வக்ர கொடுமைகளுக்குப் போரின் முடிவில் ஆங்காங்கே பலியாவதைக் காண்கிறோம்.அவற்றில் இருந்து தப்பவே பல பெண்கள் உடன்கட்டை ஏறினர்வீரமாய் மாய்த்துக் கொண்டு வீர மாத்திகளாய் மாறினர்.
நடுகல்ப்ரமாண்டமான வீரன் சிலைதெய்வம் ஏற்றப் பட்ட உயர் மரியாதை ஆகியன உடல் வீரத்துக்கே தரப்பட்டது என்று காணும் போதுபோரின் உக்ரம்,தேவை ஆகியன புரிகின்றது.தம் தேசத்தின் வாழ்வியலை அந்நியன் கையில் ஒப்படைக்கக் கூடாது என்ற ஸ்வந்த்ர தாகமும் இதில் முக்கியம் உள்ளது.
தேசத்தின் நலனுக்காக அறியாமையால் வீரர்கள் அமர தண்டம்” - தன் தலையைத் தானே வெட்டிக் கொற்றவைக்குப் பலியிடும் வழக்கம் சங்கம்அதன் அடித்த காலகட்டத்தில் இருந்தது.பல அப்பாவிகளும் கைதிகளும் நரபலி கொடுக்கப் பட்டு இருத்தல் வேண்டும்.
அமர தண்டம் சமர்ப்பிக்கும் நடுகற்கள் தமிழகம் முழுவதும் உள.குறிப்பாகப் பல்லவர்கள் பல சிற்பங்களைச் செய்துளர்.சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இத்தகைய அமர தண்ட நரபலியைக் குறிப்பிடுவதைக் காண்க.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பெண்கள் இறைவனிடம், ”என் கணவன் விரைவில் வெற்றியுடன் போர் முடித்து வருக!” என்று வேண்டுவதைக் காணும்போது மிக உயர்ந்த தேசப்பற்று என்று கூறும் சமயத்தில் அவர்தம் இல்லற ஏக்கம், insecurityஆகியன உட்பொதிந்துள்ளதைக் காண்க.யாருக்குத் தான் சண்டை பிடிக்கும்?
ஆயுதங்களையே தெய்வமாக மதித்து வணங்கும் தொன்மையான மரபு இன்றுவரை உள்ளது.ஆயுதம் மனிதனை ஆபத்தில் இருந்து காக்கும் பொருள்.பிற்காலத்தில் சிற்ப சாஸ்த்திரத்தில் ஆயுதம் என்பது ஞானத்தின் குறியீடாகக் கொள்ளப் படுவதை உணர்க.
வெற்றி பெற்ற அரசன் தான் கைக்கொண்ட பகை தேசத்தின் சொத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறான்வீரர்களும் ஏழைகளும் பல பொருள் கொள்வதையும் காண்கிறோம்.
அப்பாவி வீரர்களுக்காகவே புலவர்களோ பாணர்களோ பாடிப் பரிசு பெற்றுப் பகிர்ந்தாரோ?
இல்லை! அந்தணர்களுக்கும் புலவர்களுக்கும் தரப்பெற்ற மிகப் பெரிய நிலங்கள் வீரர்களுக்குத் தரப்பட்டு இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது!
புறநானூற்றில் சில பாடல்களில் முதிய பெண்கள் தம் இளைய வயது மகனைப் போருக்கு அனுப்பும் சூழல்கள் பதிவாகியுள.அப்பாடியானால் அக்காலப் பெண்டிர் சதா குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் மனித எந்திரமாக இருந்துள்ளனரா”ஈன்று புரத்தல் தாயின் கடன்” என்பது இதையே குறிக்குமா? - ஐயம் ஏற்படுகிறது.காரணம் மிக விரைவில் மணம் மேற்கொண்ட காலத்தில் வயது முதிந்த சூழலிலும் குழந்தை பெற்றனரா?
அப்படியே பல மகன்கள் பெற்ற அன்னையரும் போருக்கே மகன்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்துள்ளதோ? - யோசிக்க வேண்டும்.
வெறும் வேல்வாள்கத்தி ஆகியவற்றை வணங்கும் மரபில் இருந்து இன்னும் நாம் மாறவில்லை.
வீர மரணம் அடைந்த எல்லோருக்கும் நடுகல் வைக்க இயலாது.அதற்கு பதில் ஒரு குறியீட்டுக் கல் வைக்கப்பட்டும் இருக்க வாய்ப்பு உண்டு.பல நடுகற்கள் தனி வீரனுக்கும் உண்டு.இன்று வீரனின் சிலை நிறுவப்படுவதைக் காண்கசேரன் செங்குட்டுவனும் கண்ணகியின் சிலையை நடுகல்” என்றே கூறினான்.அது வீரம் சார்ந்த வழக்கில் மன்னனை எதிர்த்தவரின் குறியீடே!
இன்று தமிழகம் எங்கும் காணப்படும் கறுப்புசாமிமாடன்மதுரை
 வீரன்ஐயப்பன்சாத்தன்முனியப்பன் ஆகிய பல வீரத்தெய்வங்கள் வீரர்களின் அடையாள எச்சங்களே.புறநானூற்றில் இவற்றின் வித்துக்களைக் காண்க.
இவர்களையே living legends என்கிறோம்.ஆனால் அன்று போரில் வீர மாம் கொண்ட ஒரு வீரனுக்கு என்ன மரியாதை என்று இன்னமும் தெளிவாகவில்லை.ஆனால் இன்று ப்ரதிபலனைமரியாதைகளைசலுகைகளை எதிர்பார்த்தே ராணுவத்தில் சேர்பவர்களைப் புறநானூறு ஏற்பதற்கில்லைஇது தின்னம்!
நெடுநல்வாடையில் பாண்டியனின் வீரமும் அவனது போரும்அவன் தேவி அவன் இன்றி மேற்கொள்ளும் மனத்துயரங்களும் மிக அழகாகக் காட்டப்படுவதை வரிந்து வரிந்து வர்ணிப்பர்,அது தவறு”அடே மூட மன்னா! போதும் உன் மண் வெறிவீரம்உன் மனையாள் போல் மதுரையிலும் பாண்டிய தேசத்திலும் உன் பகை தேசத்தில் பல வீரர்களில் மனையாட்களும் குழந்தைகளும் பெற்றோரும் இன்னல் கொள்வதை உணர்” என்று பொஇ வைத்து சங்கத் தலைவர் நக்கீரர் பாடுவதை உணர்தல் அவசியம்.அன்றைய இளைஞன் மண்ணுக்குப் பலியானான்இன்றோ EMI, loans, stress because of various factors, diseases etc போராட்டம் மாறவில்லைபோராடும் களன் தான் மாறியுள்ளது.
அன்றைய போர்க்களத்தை வர்ணித்துப் பாடுவது போல் இன்றைய எல்லைப் போர்களின் தீவிரம் எத்தனை அளவுக்கு மக்களுக்குத் தெரியுமோஅதன் அசாதாரணமான நிலையை மக்கள் உணர கல்வியும் ஊடகமும் வழி செய்தால்சற்று சமூஹப் பொறுப்புணர்வு கூடும் என்பதில் ஐயம் இல்லை.
பெற்றோரின் உழைப்பும் த்யாகமும் தான் குழந்தையின் மகிழ்ச்சியின் உண்மை.அதே போல் தான் தேசத்தைக் காக்கும் படை வீரர்களின் உழைப்பும் த்யாகமும் முழுமொத்த தேசத்தின் மகிழ்ச்சி என்பதில் ஐயம் உண்டோ?
”எம் கணவரும்தந்தையும்மகனும்சகோதரரும் விரைவில் போர் முடித்து வர வேண்டும்” என்று மதுரைப் பெண்கள் பரங்குன்றத்தில் நேர்ந்து கொள்வதைக் காணும் போது அதே நிலை தான் இன்றும்! [பரிபாடல்]
போரில் இருந்து வெற்றியுடன் மீண்ட ஒரு வீரனும் அவன் மனையாளும் பரங்குன்றத்தில் முருகனுக்கு மயில் நேர்ந்து விடுவதை” - பரிபாடல் படம் பிடிக்கிறது.
தேசத்தில் ஆண்கள் கையில் காப்புக் கயிறு கட்டும் வழக்கமே ”ரட்சை” - protection என்ற கோட்பாட்டைத் தானே குறிக்கும்.தெய்வ மந்திரத்தைக் கொண்டு கையில் கயிறு கட்டி அனுப்புகிறோம்.அது அவன் உயிரைக் காக்கும் என்று நம்புகிறோம்.
என் சக ஆரிசிரியையின் கணவர் படை வீரர்.அவர் சொன்னார்”இப்போது அலைப்பேசி வசதி உள்ளது.அது வரும் முன் ஒவ்வொரு நாளும் பய உணர்விலேயே கழியும்.தலைமை இடம் தொலைப்பேசி அழைப்பு வந்தால் அதைப் பேசும் முன் இறைவனை வேண்டியே ஃபோனை எடுப்பேன்இப்போதும் சில எல்லைகளில் பணிக்கு அவர் போகும் போது அலைப்பேசி துண்டிக்கப்படும்...” [மாறினோமோ?]
பயணிக்கும் போது ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு தூங்காமல் இரவு முழுவதும் ரயில் பயணத்தில் துணை வரும் இளைய வீரனைக் காணும் போது மனம் ஏதோ பெருமைப் படுகிறதுபின்னால் சோதமும் உண்டாகிறது.
பயணத்தில் ஜாலியாக ஐ பாடுகளில் வீடியோ அல்லது கேம்ஸ் அல்லது பாட்டுக் கேட்டுக் குடும்பத்துடன் பயணிக்கும் நாம் அவனைப் பார்த்து அவனுக்கு ஒரு புன்னகை செய்யலாம்.அவன் நலமுடன் வாழ ப்ரார்த்திக்கலாம்!
வீரம் என்பது அன்று போர்க்களம்இன்று நெறியான வாழ்வியல். Every day we have to stand against various issues of society...that is 2016 Veeram.
தானம்ஈகைகொடை என்பது வெறும் பணம் அல்ல!
நட்புநல்வார்த்தைநற்கருத்துகள்விருந்தோம்பல் ஆகியன மாறவில்லை!
சங்கநூல் பதிவுகள் வெறும் கதையல்லஅவை மனிதனின் தன்மைகளின் ப்ரதிபலிப்புகள்
அவற்றைக் கொண்டு உன்னை வாழ்த்துவதில் எமக்கு அந்தப் புலவர்களும் மீனாக்ஷிசுந்தரேஸ்வரரும் மிக்க தயை செய்துள்ளனர்.
ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் மிக விசேஷமாக சங்கப்புலவர்கள் சன்னிதியில் மரியாதை செய்ததன் பலன் இப்போது கைகூடி நிற்கிறது.
என்னையே நான் ஒவ்வொரு புலவனாக விழிப்புணர்வில் காணும்உன் மனிதத்தைப் பாடும் பேறு கிடைத்துள்ளது.வேறு என்ன வேண்டும்இதன் மூலம் மீண்டும் தமிழ் மீட்டுருவாக்கம்மறுவாசிப்பு பெறுகிறது.இக்கால மாணவனுக்கு ஏற்ற வகையில் வெறும் உண்மையை நான் உடனுக்கு உடன் பதிவு செய்கிறேன்.
சங்கம் [சங்கம் என்றால் மிக உயர்ந்தது என்ற அர்த்தம் உண்டுகண்ட தமிழ் இப்போது  கையில்.....
Continue reading
  803 Hits
803 Hits

தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...

தேவி உபாசனையும் வெள்ளிக்கிழமையும்...
 
பெண் சக்தியே ப்ரபஞ்ச இயக்கத்தை இட்டுச் செல்வதால் அதையே தாய் தெய்வமாய் வணங்குகிறோம்.
 
தாய் தெய்வ வழிபாடு தேவி உபாசனையாக மலர்ந்த போது, அதை வெள்ளி க்ரஹத்துடன் இணைத்தனர் முன்னோர்.
 
க்ரஹம் என்பது நம்முள் உள்ள குணமாகக் காணும் போது, வெள்ளியாகிய சுக்ரன் நம்முள் - அழகு, உறவு, பொருள், இச்சை என விளங்குகிறது.
 
Cosmic energy creates all the material energy.
 
அந்த material energy யைப் பெற மக்கள் பெண் தெய்வத்தை உபாசித்தே ஆக வேண்டிய விஞ்ஞானக் கட்டாயம் உள்ளதால் தான் மிகத் தொன்மை மிக்க பண்பாடுகள் பெண் தெய்வங்களைக் கொண்டு உள.
 
அவற்றுள் பாரத தேசம் மிகத் தொன்மை, அதிலும் த்ராவிட நாகரிகம் மிக மிகத் தொன்மை.
 
அதனால் தான் பெண் தெய்வத்தினை சுக்ர குணத்துடனும் இணைத்தனர்.
 
குறிப்பாக செல்வத்தின் சக்தியாகிய திருமகள் சக்தி சுக்ர பலனை அருள்வதாகக் கொள்கிறோம்.
 
அதே தேவி தான் நம்முள் பூரண ஞானமாய் இருந்து சுக்ர சக்தி தவறான முறையில் கையாளப் படுவதைத் தடுக்கும் விழிப்புணர்வையும் தருகிறாள்.
Continue reading
  848 Hits
848 Hits

இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?

இளங்கோ அடிகள் சமூஹத்துக் கூறுவது என்ன?
 
வளம் மிக்க இப்பெரிய உலகில் வாழும் மக்களே....
 
பிறருக்குக் கவலையும் துன்பமும் கொடுக்கும் பேச்சையும் செயலையும் செய்யாதீர்.
 
கடவுள் உண்டு என உணருங்கள்.
 
கடவுளை உணர்ந்த உண்மையான சான்றோர்களை விரும்புக,  மதியுங்கள்.
 
பொய் கூற பயப்படுக.
 
பிறரைப் பற்றிப் புறம் கூற பயப்படுக.
 
உயிர்க்கொலைத் தவிர்த்திடுக.
 
சம்பாதித்த பணத்தில் சிறுபகுதியேனும் தானம் செய்க.
 
எதையும் விழிப்புணர்வுடன் தவமாய்க் காண்க.
 
ஆன்மீக சாதனைகள் மேற்கொள்க.
 
பிறர் செய்த உதவிகளை மறக்காதீர்.
 
தீய பழக்கம் கொண்ட மக்களின் நட்பை விலக்குக.
 
பொய் சாட்சி கூறாதீர்.
 
சத்ய வாக்குகளை மறக்காதீர்.
 
அறம் வழி வாழும் நல்லவர் தம் நட்பைக் கைவிடாதீர்.
 
வெறும் உடல் பலத்தால் சமூஹத்தில் தீமை செய்வோரை விட்டு விலகுக.
 
பிறருடைய கணவனையோ மனைவியையோ அணு அளவும் விரும்பாதீர்.
 
உயர்ந்த இல்லறத்தைப் போற்றி வாழ்க.
 
துன்பப்படும் உயிர்களை இரக்கத்துடன் பேணுக.
 
பாவம் ஏற்படுத்தும் தீவினையைச் செய்யாதீர்.
 
போதையும் தவறான காமமும் திருட்டுத் தொழிலையும் அணுகாதீர்.
 
பயன் இல்லாத வெட்டிப் போச்சைக் கைவிடுமின்.
 
இளமை - பொருள் - உடல் ஆகிய மூன்று நிலையற்றவை.
 
சேர்த்த பொருள் உடன் வாரா, மறுமைக்குத் துணை செய்யும் அறச்செயல்களை பக்தியுடன் செய்க.
 
உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பெண்களைச் சமூஹத்தில் உள்ள உயர்ந்த மக்கள் மதிப்பர், பின்பற்றுவர்.
 
நாம் செய்த தீவினை நம்மை வாட்டும்.
 
அரசியலில் தவறு செய்தவரை அறம் தண்டிக்கும்.
 
 
 
 
 
Continue reading
  786 Hits
786 Hits

சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வீசும் காற்றை மதுரை மக்கள் அனுபவிப்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குற்றாலத்துப் பொதிகை மலைச் சாரலின் காற்று மதுரையில் புலவர்களால் போற்றம் படும் தன்மை உடைத்து.காற்று விழிப்புணர்வின் குறியீடு.

வேதச் சடங்குகள் மூலம் எழும் புகையின் மணம்மதுரையின் வீடுகளில் அடுக்களையில் தாளிக்கும் சமையலின் மணம்வீதிகளில் விற்கும் சுவை மிகு அப்பம் சுடும் புகை மணம்சோலைகள் தோப்புகள் வயல்களில் உள்ள பசுமையின் மணம்அகில் சாம்பராணியின் மணம்பாண்டிய மன்னைன் அரண்மனையில் உள்ள நறுமணப்பொருட்களின் மணம் எனப் பல்வேறு நல்ல வாசனைகள் கொண்ட காற்று வீசியது.

Continue reading
  839 Hits
839 Hits

Madurai in Silapathykaram part 2

கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள தொண்டி என்ற மிகப் பழமையான துறைமுகம் மூலம் கடல் வணிகம் செய்து, கப்பல்கள் மூலம் பெற்ற அகில், பட்டு, கர்ப்பூரம், சந்தனம் போன்ற பொருட்கள் பாண்டியர்க்குக் கப்பப் பொருட்கள் ஆகும்.அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து வீசும் மாமதுரை.
 
பெண்கள் சூடும் மலர்களின் வாசம் கலந்த காற்று வீசும் மதுரை.
 
காமன் பண்டிகை கொண்டாடும் பங்குனி உத்திர விழா கொண்டாடும் மதுரை.
 
ஆடி மாதம் வைகையில் புது வெள்ளம் வர, அதில் நீராடி, படகுகள் ஓட்டி விளையாடும் மதுரை மக்கள்.
 
பாண்டிய மன்னன் அந்தப்புரத்தில் களிக்கும் உய்யாவனம் கொண்ட மதுரை.
 
உயர்ந்த கலைஞர்கள் பலர் தம் கலைத்திறனைக் காட்டி விருதுகள், பணம் பெறும் கலைகளை வளர்க்கும் மதுரை.
 
மருந்துகள், தேர்ச் சக்கரங்கள் பாகங்கள், போர்க் கருவிகள், தந்தப் பொருட்களும், நறுமணப் பொருட்களும், பூக்களும் மாலைகளும் விற்கும் வியாபாரம் களை கட்டும் அங்காடித் தெரு கொண்ட மதுரை.
 
மிக உயர்ந்த நவரத்னக் கற்கள் விற்கும் ரத்னக் கடை வீதி கொண்ட மதுரை.
 
மிக உயர்ந்த தங்கம் விற்கும் பொன் வணிக வீதி.அதில் பொன்னின் விலை, தரம் குறித்த விளம்பரக் கொடிகள் பறக்கும் மதுரை.
 
பருத்தி, கம்பளி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட பல்வேறு ஆடைகள் விற்கும் புடவைக் கடைத் தெரு கொண்ட மதுரை.
 
தராசு மூலம் நிருத்துப் பொருளை விற்பாரும், தரகு வேலை செய்வாரும், மிக உயர்ந்த மிளகு மூட்டைகள் கொண்டு வியாபாரம் செய்வோரும், உணவுப் பொருட்களும் தானியங்களும் விற்கும் கூலக்கடைத் தெருவும் கொண்ட மதுரை.
 
பல்வேறு தொழில் செய்வோர் வீதிகள்.
 
அந்தணர் தெருக்கள், அரசு அலுவலர் தெருக்கள், வேளாளர் வீதிகள், முச்சந்திகள், நாற்சந்திகள், ஊரின் நடுவில் உள்ள கோயிலைச் சுற்றி உள்ள கடைத்தெருக்கள், வெயில் புகாத வண்ணம் அடர்ந்த சோலைகள் கொண்ட மதுரை மாநகர்.
Continue reading
  847 Hits
847 Hits

சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர் - part 1

சிலப்பதிகாரம் காட்டும் மதுரை மாநகர் 
 
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வீசும் காற்றை மதுரை மக்கள் அனுபவிப்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
குற்றாலத்துப் பொதிகை மலைச் சாரலின் காற்று மதுரையில் புலவர்களால் போற்றம் படும் தன்மை உடைத்து.காற்று விழிப்புணர்வின் குறியீடு.
 
வேதச் சடங்குகள் மூலம் எழும் புகையின் மணம், மதுரையின் வீடுகளில் அடுக்களையில் தாளிக்கும் சமையலின் மணம், வீதிகளில் விற்கும் சுவை மிகு அப்பம் சுடும் புகை மணம், சோலைகள் தோப்புகள் வயல்களில் உள்ள பசுமையின் மணம், அகில் சாம்பராணியின் மணம், பாண்டிய மன்னைன் அரண்மனையில் உள்ள நறுமணப்பொருட்களின் மணம் எனப் பல்வேறு நல்ல வாசனைகள் கொண்ட காற்று வீசியது.
 
மதுரையின் நடுவில் மனிதர் தம் ஆணவத்தை அழித்துப் பிறவிகளை அழிக்கும் மழு [கோடரி] ஏந்திய சிவனின் கோயில் அமைகிறது.
 
பாண்டிய அரசரின் அரண்மனைப்பகுதி அதன் அருகில் அமைகிறது.
 
மதுரையில் அந்தணர்கள் ஓதும் வேத மந்த்ரங்கள் ஒலிக்கின்றன.
 
அதிகாலையில் மாலையில் பாண்டிய வீரர்கள் ஓங்கி அரையும் வீர முரசுகள் அதிர்வன.
 
காட்டில் இருந்து பழக்குவதற்காகப் பிடிக்கப்பட்ட யானைகளின் பிளிரல், போர் யானைகளின் பிளிரல், குதிரைகளின் கணைப்பு கேட்கும்.
 
பறையடித்து ஆடுவோரின் ஒலி கேட்கும்.
 
பலவகை மரங்கள் ஊர் முழுவதும் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ளன.
 
புலவர்களால் போற்றப்படும் வைகை நதியில் யானை, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் முகம் கொண்ட படகுகள் போக்குவரத்து செய்தன.
 
வைகையின் தென்கரை மருத மரங்கள் சூழப்பட்டு ”திருமருதம் துறை” எனப்பட்டது.
 
மிக உயர்ந்த இறைவன் வாழும் மதுரை வலம் வர வினை அகலும் என்று மக்கள் நம்பி ஊரையே ப்ரட்சிணம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.
 
அகழியுடன் கூடிய நெடிய கோட்டை ஊரைச் சூழ்ந்தது.
 
அகழி மிக ஆழம் கொண்டு, தாமரை, அல்லி போன்ற நீர்ப்பூக்கள் நிறைந்து, கொடும் முதலைகள் கொண்டும் இருக்கும்.
 
பாண்டிய அரசன் வெற்றி கொண்ட பிற தேசத்துக் கொடிகள் கோட்டையின் மேற்சுனரில் பறந்தன.
 
கோட்டை வாயிலை வீரம் மிக்க க்ரேக்க தேசத்து, ரோம் நகரத்து, எகிப்து தேசத்து வீரர்கள் காவல் காத்தனர்.
 
ஊருள்ளும், வெளியிலும் மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி பண்ணும் குளங்கள், குட்டைகள், ஏரிகள் இருந்தன.
 
கிழக்குப்பகுதிக் கோட்டையை ஒட்டி வெளியில் துறவிகள் தங்கும் ஆஸ்ரமங்கள் இருந்தன.
 
மஹாவிஷ்ணு, பலராமன்,முருகன் கோயில்களும் புத்த விஹாரமும், சமணப்பள்ளியும் மதுரையில் இருந்தன.
 
மாடங்களும் மேல் தளமும் கொண்ட வீடுகள் இருந்தன.
 
ஆடி மாதத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தென்மேற்குப் பருவக் காற்று மதுரையில் வீச மக்கள் அதை அனுபவிப்பர்.
Continue reading
  790 Hits
790 Hits

ஸ்மசான கொற்றவை எனும் மாசாணி அம்மன்

கொங்கு தேசத்தின் ஆனைப் மைப்பகுதிக்கு அக்காலத்தில் உம்பர்க்காடு என்று பெயர்.சேரர்கள் இதைத் தம் கீழ் கொண்டு வர முயன்றனர்.அதன் மன்னன் தான் நன்னன்.

இவன் தரமான வியாபாரம் மூல பெரும் செல்வன் சேர்தான்.இவனுக்குப் பத்து மனைவிகள்.ஆனால் இவன் யாருக்கும் கொடையோ உதவியோ செய்ததில்லை.

  

இவனுடைய காவல் மரம் உயர் ரக மாங்கனி மரம்.அது மிக்க காவலையுடையது.அதன் அருகில் மக்கள் வர இயலாது.

Continue reading
  734 Hits
734 Hits

Aaadi month and Chennai city

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரரின் தேவி த்ரிபுரசுந்தரி, அபிராமிப்பட்டரால் கடைக் காலத்தில் பூஜிக்கப் பட்டவள். சரும வ்யதைகட்கும், இருதய வ்யாதிகட்கும் அரிய மருந்து இவள்.
 
சென்னை மயிலைக் கற்பாகம்பிகை குடும்பத்தில் சுற்றத்தில் ஒற்றுமையுடன் வாழ சக்தி தருபவள்.
 
சென்னை திருவொற்றியூர் வடிவுதை அம்மை பசிப்பிணி போக்குபவள், குறிக்கோளை அடையும் சக்தியை அருள்பவள்.
 
சென்னை அம்பத்தூர் பச்சை நாயகி அம்மன் பல்லவர் காலம் முதல் நாட்டுப்புற மக்களால் ராஜமாதங்கி சக்தியாக வணங்கப்படுபவள்.
 
சென்னை பேரிஸ் கார்னர் காளிகாம்பிகை மாநகரின் ப்ரதான தேவதை.
 
சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்பிகை நம் காலத்தில் அருட்சித்தர் ராமதாசன் மூலம் ப்ரசன்னமாகி மிகச் சிறப்புடன் கோயில் கொண்டவள்.வ்யாதிகளும் வறுமையும் தீர்ப்பவள், ஞான சக்தியாக விளங்குபவள்.
 
சென்னை அடையாறு பெசன்ட் நகர் கடற்கரையில் உலகின் முதல் அஷ்ட லக்ஷ்மி ஆலயம் காஞ்சி மஹாப்பெரியவரின் ஆசியுடன் கட்டப்பட்டது.எட்டு வாழ்வியல் செல்வ சக்திகளும் மிக ப்ரம்மாண்டமாக அமைந்துள்ளனர்.மஹாலக்ஷ்மி தன் நாதனுடன் உள்ள ப்ரம்மாண்ட கோலம் பார்த்தற்கரியது.
 
சென்னை மயிலையின் காவல் தேவதை கோலவிழி அம்மன் ஆதி காலக் கொற்றவை.அதே போல் மயிலை முண்டகக்கண்ணி அம்மன் மிகத் தொன்மையான ஸ்வம்பு மூர்த்தி.
 
சென்னை மாநகரின் செழிப்புக்குக் காரணம் ஒவ்வொரு ஊரின் சக்தி தெய்வங்களே.ஆடி முதல் வாரம் தொடங்கி ஆவணி கடைசி வாரம் வரை ஒவ்வொரு பகுதி சக்தி தெய்வங்கட்கும் வெள்ளி சனி ஞாயிறு என மூன்று தினக் கூழ் வார்த்தல் விழா வெகு அமர்க்களம் படும்.குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மிகச் சிறிய கோயில் தேவதைகளுக்கும் ஏழை பாழைகள் கடன் வாங்கியேனும் கூழ் வார்த்து விழா எடுப்பதைக் காண வேண்டும்.ஞாயிறு இரவில் அம்மை ப்ரம்மாண்ட அலங்கார உலா வருவாள்.
Continue reading
  776 Hits
776 Hits

Mandaikaadu Bahavathy

மண்டைக் காடு பகவதி அம்மை

கன்யாகுமரி மாவட்டத்தில் அரபிக் கடல் ஓரம் குளச்சல் ஊருக்குக் அருகில் அமைந்துள்ள மிகத் தொன்மையான சக்தி வழிபாட்டு ஸ்தலம் தான் மண்டைக் காடு.
முற்காலப் பாண்டியர் தம் போர்க்களம் அமைந்திருந்த ஊர் இதுவாகும்.
வீரர்களில் தலைகள் காடாய் மண்டி இருந்த வீரக்களம் - மண்டைக்காடு.
பாண்டிய வீரர்கள் தம் தேசம் வெற்றி பெற அமர தண்டம் - வீர த்யாகம் செய்யத் தம்மையே பலி கொடுக்கும் வீரப்பலிக்களம் - மண்டைக்காடு.
அன்னை புற்று வடிவிலும் சிலா வடிவிலும் காட்சி தருகிறாள்.
மிக சக்தி வாய்ந்த போர் தெய்வமாக, வாழ்வியல் போராட்டத்தின் வெற்றியை அருளும் அன்னையாக உள்ளாள்.
அன்னையின் விழாவில் பொங்கல், புட்டு, தீவட்டி ஆகியன மிக ப்ரசித்தம்.
கேரள தமிழக மக்கள் அதிகம் ஆதிசக்தி இவள்.
Continue reading
  840 Hits
840 Hits

Chera desa Meenakshi

கோட்டயம் நகரத்தின் ஒரு பகுதி தான் குமார நல்லூர்
முருகனை வழிபட வேண்டி மக்கள் கோயில் எழுப்ப அதில் அன்னை பராசக்தி குடியேறி ஊர்ப்பெயரையும் குமார நல்லூராக மாற்றினாள்.
புராண காரணப் பெயர்.
 
மதுரையில் பாண்டியரின் ஆட்சிக் காலம்.
சேரர்கள் கேரளத்தை ஆண்ட காலம்.
ஒரு நாள் மீனாக்ஷியின் மூக்குத்தி காணவில்லை.
எவ்வளவு தேடியும் தென்படவில்லை, பாண்டியன் விசாரிக்காமல் சில அர்ச்சகர்கள் மீது குற்றம் சாற்றிட, ஒரு  அர்ச்சக இளைஞர் தன் மனைவியுடன் அவமானம் தாளாமல் மதுரையை விட்டு குமுளி வழியே சேர தேசம் புகுந்தார்.
 
அவரது வரவை ஊர் சபை அறிந்து அவருக்குக் கோயிலில் பணி தர முன்வர, ”மீனாக்ஷியின் மூக்குத்தி கிடைக்கட்டும் பார்க்கலாம்” என்று கூறிவிட்டார்.
 
இக்கதியில் சில காலத்தில் அன்னை ஊர்த்தலைவரின் கனவில் ப்ரசன்னமாகித் தன் மூக்குத்தி கிடைத்தது என்றும் , இளைய அர்ச்சகருக்குக் கோயிலில் பணி அருளிடவும் பணித்தாள்.
 
ஊராருக்கோ மதுரை மீனாக்ஷியை ப்ரதிஷ்ட்டை செய்ய மிக்க ஆவல், அதனால் குமரக் கோயில் மூலஸ்தானத்தில் விஷ்ணு துர்கா வடிவில் அஞ்சனக் கல்லால் ஆன மூர்த்தியை மீனாக்ஷியாக ப்ரதிஷ்ட்டை செய்தனர்.
 
அவளே குமார நல்லூர் பகவதி, மீனாக்ஷி - சேர நாட்டு மீனாக்ஷி.
 
சுமாரி ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்தலம்.
போய் வாருங்கள், ராஜ மாதங்கியாய் சேர தேசத்தில் உள்ள அன்னைக் காண்க.
அன்னையின் மிக முக்கிய இரு விழாக்கள் நவராத்ரி மற்றும் திருக்கார்த்திகை
Continue reading
  709 Hits
709 Hits

Vilakku vazhipaadu - aadi friday spl

விளக்கேற்றி வழிபடும் ஆடி மாதம்
 
ப்ரபஞ்சம் வெளிச்ச சக்தியால் ஆனது.
இதையே மெய்ஞானமும் விஞ்ஞானமும் உணர்ந்து கூறுவன.
ஜோதி மயமாய் மூலப்பொருளை அறிவதே குண்டலினின் பலன்.
அனைத்தும் ஆன ஒளி சக்தியை பூமி வாழ் உயிர்கள் சூரியன் மூலம் மட்டும் பெறுவன.
 
 
அச்சூரியனின் ஒளியால் தான் அனைத்தும் ஆன அறிவியல் உண்மையை உணர்ந்த அதை மனிதன் சூரிய நமஸ்காரம் செய்தான் , அதன் பின் அதன் குறியீடாய் விளக்கை உருவாக்கினான்.
 
சூரிய ஒளி சக்தியே காயத்ரி சக்தி.
அச்சக்தியால் தான் அனைத்தும் ஆகிறது.
எனவே விளக்கில் ஒளியை ஏற்றி ஒலியுடன் சேர்த்து ஆதிமனிதன் வணங்கினான்.அதன் மூலம் எண்ணியதைப் பெறும் பலனை அறிந்தான்....உருவானது விளக்கு வழிபாடு.
 
பாரத தேசம் முழுவதும் வீடுகளில் தொன்மைக் காலம் முதல் நிகழ்வது தீப வழிபாடே.காலை மாலை விளக்குகள் ஏற்றிப் பெண்கள் முல்லையும் நெல்லும் தூவி வழிபட்டதை சங்க இலக்கியங்கள் கூறும்.
 
இரும்பு, மண், வெங்கலம், பொன் ஆகியன கொண்டு விளக்குகளை மனிதன் உண்டாக்கினான்.விளக்கு என்பது highest technology tool to extract the cosmic energy என்று உணர்ந்தே அரசர்கள் தொன்னூறு சதவீதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் கொடுத்தனர்.
 
அதில் தமிழன் ஐந்து பூதங்களின் சக்தியைப் பெற்று வேண்டுவன நிறைவேற ஐம்முகக் குத்து விளக்கை உருவாக்கினான்.
 
குத்து விளக்கின் பீடம் [கீழ் பாகம்] - படைத்தல் சக்தி [ப்ரம்மா], தண்டு [காத்தல் சக்தி - விஷ்ணு], மேல் முகம் [சதாசிவம் - மாற்றுதல் சக்தி], ஐம்முகங்கள் ஐம்பூதங்களையும் சுடர் ஆதிசக்தியையும் குறிக்கும்.
 
[வெளியிடுவதற்கில்லை] குறிப்பிட்ட திசையில் ஐம்முக விளக்கை ஏற்றிக் கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி வழிபட்டு வர உரிய காலத்தில் எண்ணியது நிறைவேறும் என்பது ரிக் வேத technical guidance.ஒலியும்க் ஒளியும் இணைந்தே பாக்ய சக்தியை - self awareness life energy - SAL ENERGY - அதிகரிப்பதை அறிவியல் ஆய்வுகளும் கூறும்.எனவே வீட்டிலும் கோயில்களிலும் தரமான பசும் நெய், நல் எண்ணெய் மட்டும் கொண்டு விளக்கு ஏற்றுக, காரணம் அவை இரண்டு மட்டும் தான் சூரிய சக்தியை முழுமையாகக் கொண்டவை.

 

 
Continue reading
  669 Hits
669 Hits

Masani amman

அக்காலத்தில்செந்நெல்என்பதுமிகஉயர்ந்தபொருள்.

மிகஉயர்செல்வரேசெந்நெல்அரிசிச்சோறுஉண்பர்.

செந்நெல்லுக்குஇணையாகத்தங்கம்பண்டமாற்றுஆனதுஎன்றால்அதன்உயர்வைக்கற்பனைசெய்க.

இனிவரும்காலத்தேநெல்பொன்னைவிடஅதிகவிலைகொள்ளும்.

இந்தநெல்லின்மூளம்பெறும்அரிசியைப்பொங்குவதேபொங்கல்.

Continue reading
  803 Hits
803 Hits

Kodungalore bahavathy shetram - aadi month spl

கொடுங்கல்லூர் - இன்றைய கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக ப்ரஸித்தி பெற்ற தேவி ஸ்தலம்.

அன்றைய சேர தேசத்தின் தலைநகராக இருந்தது.அப்போது அதன் பெயர் வஞ்சி மாநகர்.

வஞ்சி - பெண்கொற்றவைகாளி.காலம் காலமாக முன்னோர் வணங்கிய இன்று கேரளத்தின் ப்ரசித்தி பெற்ற கொடுங்கல்லூர் அம்மை பகவதி.

Continue reading
  1408 Hits
1408 Hits

Attrukaal - Women's sabarimalai

திருவனந்தரபுரம் ஆற்றுக்கால் பெண்களின் சபரிமலை.
 
வருடத்தில் மார்ச் மாதத்தில் லட்சம் பெண்கள் அன்னைக்குப் பொங்கல் வழிபாடு மேற்கொண்டு கின்னஸ் சாதனை செய்யும் மஹா ஸ்தலம்.
 
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற சிலப்பதிகார வாக்கை நிரூபிக்கச் சேரன் செங்குட்டுவன் குமுளி மலையின் மீது கண்ணகிக் கோட்தமும், தன் தலைநகர் கொடுங்கலூரில் கோயிலும் கண்ணகிக்கு ஏற்படுத்திய பின் கேரளம் முழுவதும் கண்ணகியை தேவியின் அவதாரமாக பாவித்த கோயில்கள் பல தோன்றின.அவற்றுள் மிக ப்ரஸித்த பெற்ற ஒன்று திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயில்.
 
மதுரை எரித்த கண்ணகி கோபம் தீராமல் பாண்டிய தேசத்தின் எல்லையான கன்யாகுமரிக்குச் செல்கிறாள். அங்கே தேவியைச் சேரன் தன் தேசத்துள் வரவேற்க அவள் ஆற்றுக்கால் வந்து தங்கிட, அவளை ஷாந்தம் ஆக்கிடப் பெண்கள் பொங்கலிட்டு வழிபட, பொங்கால் உத்சவம் உண்டானது.
 
கோயில் தேவி ஷாந்த ஸ்வரூபிணியாய் துர்கை வடிவில் கலந்த கண்ணகியாக உள்ளாள்.
 
கோயில் முழுவதும் சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு காட்சியும் சிற்பமாக உள்ளது.
 
மார்ச் மாதத்தில் இவ்வாண்டு 8 லட்சம் பெண்கள் கூடி பொங்கலிட்டனர்.அன்று விடுமுறை, ஆண்கள் வெளிவருவதில்லை,ஊர் முழுவதும் ஏட்டு கிலோமீட்டர் தூரம் பொங்கலுக்கு இடம் booking செய்ய வேண்டும்.
 
அன்னைக்குக் காப்புக் கட்டியவுடன் கொடுங்கல்லூரில் இருந்து காலம்காலமாய்க் கண்ணகியின் வரலாற்றைப் பாடும் மரபினர் வ்ரதம் பூண்டு தோற்றம் பாட்டுப் பாடுவர்.அதன்பின் சன்னிதியின் விளக்கில் இருந்து தீ பற்றப்பட, அது ஊர் முழுவதும் உள்ள அடுப்புகளுக்குச் செல்ல பொங்கல் ஆகி, ஹெலிக்காப்டர் மூலம் நிவேதனம் ஆகும்.
 
முருகன் பாவனையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வ்ரதம் பூண்டு மறுநாள் தேவியை வழிபடும் நிகழ்வு முக்கியம்.
 
வெறும் வெற்று த்ராவிடம் பேசி உண்மையான த்ராவிட மரபுகளைச் சீர் குலத்த தமிழகம் கேரள மக்களின் பக்தியைக் கண்டு நாண வேண்டும்.
 
சமூஹத்தின் ப்ரபலங்கள் ஆற்றுக்கால் பொக்காலாவில் பங்கேற்பது மிக ப்ரபலம்.
 
பிறர் பசி தீர்த்தல் மிக உயர்ந்த அறம்.
பொங்கல் - நம் பாக்ய சக்தியை அதிகரிக்க முன்னோர் கண்ட உயர் சடங்கு.
பெண்கள் ஒரு மார்ச் மாதம் சென்று பொங்கலிடுக.....
 
you tube - பல வீடியோக்கள் காண்க.
Continue reading
  944 Hits
944 Hits

பாரத தேசத்தின் மிகத் தொன்மையான சக்தி வழிபாடு - குமரி

ப்ரபஞ்ச சக்தியினைப் பெண்மை என்று குறிப்பது வழக்கம்.
பெண்மை - தோற்றத்தினை முழுமையாக்கும் சக்தி.
இதையே தாய்மை, தாய் தெய்வம் என்றனர் ஆதி மனிதர்கள் ஆன குமரிக்கண்ட முன்னோர்.
தாய்மையை வணங்கும் பெண் தெய்வ வழிபாட்டுக் கலாச்சரம் குமரித் தெய்வம் என மிகத் தொன்மையான குமரிக்கண்டமான லெமூரியாவில் உருபெற்றது.
ஆதி மனிதனும், தமிழும் தோன்றியது குமரிக் கண்டம்.அதுவே பாண்டிய தேசம்.பண்டையர் - மிகத் தொன்மையானவர் பாண்டியர் ஆயினர்.
தாய் தெய்வ வழிபாட்டை மேற்கொண்ட அவர்களே முதன்முதலில் கடலில் மீன்கள் பிடிக்கும் தொழிலை முறையாக மேற்கொண்டு ”நீர் ஏர் உழவர்” எனப்பட்டனர்.
தாய்மையினை மதிக்கும் பொருட்டு, பெண்மையைப் பேணும் பொருட்டு, அவர்கள் தம் குலதெய்வமாகக் கொண்டதே ”குமரி” வழிபாடு.
அத்தெய்வத்தின் இணை விழிகள் மிக அழகிய மீன்கள் என உருவகம் செய்து, தம் மீன் பிடித் தொழிலையும் கருத்தில் கொண்டு..பாண்டியர்கள் இணை கயல்களைச் சின்னமாகக் கொண்டனர்.
குமரிக் கண்டத்தில் தம் தலைநகரங்களான தென்மதுரை, கபாடபுரத்தில் குமரி அம்மையை வழிபட்டனர்.குமரிக்கோடு [இன்றைய விவேகானந்தர் பாறை] மலையில் குமரியின் ஒற்றைப் பாதச்சுவட்டைப் பொறித்து வழிபட்டனர்.
மனிதனின் ஆன்மாவான பெண்மை சர்வமும் ஆன மூலப்பொருளான சதாசிவமான ஆண்மையுடன் ஐக்யம் பெறுதல் மூலம் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும் என்ற உயர் ஞானத்தைக் குமரி அம்மை வழிபாடு உணர்த்தும்.அதுவே சிவசக்தி தத்துவம்.
இன்று பாரத தேசம் பெண் தெய்வ வழிபாட்டில் முன்னோடியாக இருக்க, மிக மிகத் தொன்மை மிக்கப் பெண் தெய்வ வழிபாட்டுச் சான்றாய கன்யா குமரி தெய்வம் அமைகிறது.
கன்னி - ஒவ்வொரு உற்பத்திக்கும் திறவுப்பாதை.
51 சக்தி பீடங்களில் குமரிப்பீடம் தேவியில் வலது பக்க அமரும் ப்ருஷ்ட பாகமாகக் கொள்ளப்படும்.
முற்காலப் பாண்டியர் கடல்கோள்களில் இருந்து மீண்டு இன்றைய மதுரையை உருவாக்கும் முன் இன்றைய குமரி அம்மையைத் தென் எல்லைக் காவலாக, மேலும் நிலம் கடல் கோளால் அழியாமல் இருக்க ப்ரதிஷ்ட்டை செய்தனர்.
அடி அலம்ப நின்ற பாண்டியன் முறையாக வீர வேலாயுதம் செய்து அதில் தேவியின் சக்தியை மந்த்ர பலத்தால் ஆவாஹணம் செய்து மூன்று முறைக் கடலில் தூக்கி வீசினான்.அந்த வேலின் பாரம்பரியமாய் இன்றும் குமரி அம்மை வீர வேல் கொண்டே நவராத்ரியின் இறுதியில் தசமி அன்று குதியை ஏறி பாணாசுர சம்ஹாரம் செய்ய பஞ்சலிங்கபுர கிராமம் செல்கிறாள்.
முற்காலப் பாண்டியரின் குல தெய்வமான குமரி இன்றைய மதுரை மீனாக்ஷி என்ற வரலாற்று ஆய்வும் உண்டு.காரணம் அத்தெய்வத்தின் கோயிலில் கல்வெட்டில் ”குமரித்துறையவள்” என்ற பெயர் உள்ளது.
 
இன்றுள்ள குமரி கன்னிப் பெண்ணாக, சிவத்தை நோக்கிய அத்வக்கோலத்தில் கையில் ஜெபமாலை தாங்கி உள்ளாள்.ஆன்மா மூலப்பொருளுடன் ஐக்யம் ஆவதையே அவள் தவம் உணர்த்தும்.தலையில் ஆன்ம ஞானம் வளர்வதைக் குறிக்க பிறைநிலா அணிகிறாள்.தேவியின் மூக்கில் சேரர் அணிவித்த மிக மிக விலை மதிப்பு கொண்ட அரிய நாகரத்னம் மூக்குத்தி மிளிவதைக் காண்க.அதைக் கலங்கரை விளக்கு என்று தவறாகப் புரிந்து கொண்டு கரை சேர்ந்து ஆபத்துக்குள்ளான கப்பல்கள் உண்டு.
 
முற்காலப் பாண்டியர் தேவியில் ஜபமாலையாகக் கொற்கை முத்துக்கள் கோர்த்த உயர் மாலையை அணிவித்தும் உள்ளனர்.
 
நவதுர்க்கை வடிவாகவும், பால த்ரிபுரசுந்தரியின் வடிவாகவும், காத்யாயனி சக்தியாகவும் சாக்த வழிபாட்டு முறைகளில் குமரி பூஜிக்கப் படுகிறாள்.
 
கி.பி 6ல் ஆதிசங்கரர் முக்கடல் துறையில் தீர்த்தம் ஆடி, சில காலம் மக்களுக்கு ஆன்மீக நெறி காட்டியதால் அவருக்குக் குமரிமுனை நோக்கிய சன்னிதியைக் காஞ்சி காமகோடி பீடம் அமைத்துள்ளது.
 
அம்மையின் கோயிலில் இரு ப்ரதான வாயில்கள் உண்டு.தை - ஆடி - உத்தராயண வாசல், ஆடி - தை - தக்ஷிணாயன வாசல். தேசத்தின் இரு பெரிய பருவ மாற்றத்தைக் குறிக்க இவை. அக்காலத்துக்கு ஏற்ப அவை திறக்கப்படும்.
 
ஆடி, தை, புரட்டாசி, கார்த்திகை அமாவாசைகளில் முக்கடல் தீர்த்தம் கொண்டு வரவும், நவராத்ரி ஒன்பது நாட்களும் கிழக்கு முக வாயில் திறக்கப் படும்.அது மனிதனுள் ஆன்மீகச் சூரியன் உதயம் ஆவதன் குறியீடே ஆகும்.
 
அதனால் தான் சூர்யோதமும் அஸ்தமனமும் சந்த்ரோதய அஸ்தமனமும் இக்கடலில் விசேஷம்.
 
 
விஜய தசமி அன்று பாணாசுர வதம் முடிந்து அன்னை முக்கடல் சங்கமத்தில் நீராடுவதைக் காண ஆயிரக் கணக்கில் கூட்டம் கூடும். 
தச மஹா வித்யை சக்தி வழிபாட்டில் குமரி அம்மை - பரிபூர்ண ஞானத்தின் தாரா தேவியாக வழிபட்ட குறிப்புகள் உண்டு.
பாரத கண்டமும் மக்களும் ஆன்மீக ஞானத்தால் முக்தி பெறும் குறியீட்டைக் குமரி அம்மை உணர்த்துகிறாள்.
இன்றுள்ள கோயிலுக்கு முற்கால, பிற்காலப் பாண்டியர், சேரர், திருவாங்கூர் ராஜ்ய மன்னர்கள் , சோழர் எனப் பலர் பணிகள் செய்துள்ளனர்.
 
வாரணாசி கங்கையும், ராமேஸ்வர சேதுக் கடலும், தென்கோடிக் குமரி முக்கடல் துறையும், காவிரி சங்கமமும் மிக முக்கிய புண்ணிய நீராட்டக் கட்டங்கள் எனப் பல ஆயிரம் ஆண்டுகளாய் மக்கள் பின்பற்றி வருவதைக் காண்க.
 
பாணாசுரன் என்ற அசுரன் கன்னி ஒருத்தியால் தான் சாக வேண்டும் என்ற கதி பெற்றான் - அதாவது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம்.
 
தேவி முக்கடல் சங்கமத்தில் குமரிக்கோட்டில் சிவனை எண்ணி தவம் செய்ய, சுசீந்திரத்தில் இருக்கும் ஈஸ்வரன் அம்மை மணம் கொள்ள வரும் போது இந்திரன் தவறான முகூர்த்த காலத்தைக் கோழியாய் இருந்து உணர்த்த, கல்யாணம் நின்று போக, கோபமும் அவமானமும் தேவியுள் புழுங்க, அச்சூழலில் அவளைக் கல்யாணம் செய்திட பாணாசுரன் வலியுறுத்த தேவியும் அவனைத் தன் கையால் கசக்கிக் கடலில் வீசினாள் என்பது புராணம்.
 
மிகச் சிறந்த சக்தி பீடமாய் உள்ள குமரிக்கோயிலுள் அதன் பைரவ [கால சக்தி] சன்னிதியும் உள்ளது.அருகில் உள்ள சுசீந்திரம் கோயிலில் உள்ள முன் உதித்த நங்கை தேவி சன்னிதியும் தமிழகத்தில் உள்ள மூன்று சக்தி பீடங்களில் ஒன்று.அது தேவியில் மேல் பற்கள் விழுந்த இடம்.மற்றொரு இடம் காஞ்சிபுரம் காமாக்ஷியின் பீடம், அது தேவியின் நாபியும் இடுப்பு எலும்பும் விழுந்த இடம்.
 
மதுரையை எரித்த கண்ணகி கையில் ஒற்றைச் சிலம்புடன் குமரிக்கடல் வர, அவளைச் சேர தேசத்து மக்கள் வரவேற்றதாக பக்தி நூல்கள் கூறும்.அப்போது கண்ணகியின் ஆன்ம சக்தியைக் குமரி அம்மையுடன் சேர்த்து வழிபட்டதை மலையாள பக்தி நூல்கள் பகரும்.
 
அமெரிக்கா செல்ல வேண்டுமா, போனால் பாரத தேசத்தின் ஆன்மீக பற்றி என்ன கூறுவது என்ற ஆழ்ந்த உள் ஆலோசனையை ஸ்வாமி விவேகானந்தர் குமரிப்பாறையில் மூன்று தினங்கள் தவம் செய்து உணர்ந்தார், அதன் பின்னே அமெக்கா சென்றார்.அவர் நீந்தியே குமரிப்பாறையை அடைந்தார்.[1892 a.d]
The author of Periplus of the Erythraean Sea (60-80 A.D.) has written about the prevalence of the propitiation of the deity Kanyakumari in the extreme southern part of India; "There is another place called Comori and a harbour, hither come those men who wish to consecrate themselves for the rest of their lives, and bath and dwell in celibacy and women also do the same; for it is told that a goddess once dwelt here and bathed."[3] [4]
 
Ptolemy's geography describes commercial relations between western India and Alexandria, the chief eastern emporium of the Roman Empire. He identified Kanyakumari along with the Gulf of Mannar as a center for pearl fishery. He also identifies Korkai (assumed to be the present day's Tuticorin), a place to the east of Kanyakumari, as an emporium of pearl trade.
 
2004 ஆழிப்பேரலைக்கு முன் குமரிக்கடல் பின்வாங்கிய போது குமரிக்கண்டத்தின் பரந்த நிலப்பரப்பு தென்பட்டதைக் காண்கிறோம்.பல ஆய்வுகள் குமரிக்கண்டத்தைப் பற்றி மேற்கொள்ளப் படவேண்டும்.
Continue reading
  934 Hits
934 Hits

புகார்ப் பதி பெண்டிர் எழுவர் - Aadi 18 festival article

ஆடி 18ஆம் நாளில் காவிரியை வணங்கும் போது ஏழு கற்களையோ, ஏழு பிடி மண் உருண்டைகளையோ வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் மலர்கள் தாலிச்சரடு அணிவித்து வணங்குவது மரபு.
 
இவை ஏழு புண்ணிய நதிகள், ஏழு கன்னிமார் [மண்ணின் தாதுக்கள்], ஏழு சப்த மாதர்கள் [துர்கையின் பரிவாரங்கள்] எனக் கொள்க.
 
மண்ணின் தாதுக்கள் recycle ஆகித் தாவரத்துள் முறையே சென்று பயன் விளைவிக்க இவை கன்னிமார் என்று பூஜிக்கப்படுவன.
 
மற்றொரு ஆராய்ச்சியில் இவை பூம்புகாரில் வாழ்ந்த ஏழு உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பத்தினிப் பெண்களைக் குறிப்பதாகக் கூறுவர்.
 
பாண்டியன் முன் கண்ணகியார் தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபனம் செய்தார்.பாண்டியன் மாண்டான்.அதன் பின் அவன் அரசி முன் கண்ணகியார் பூம்புகாரில் வாழ்ந்து தனக்கு முன்னோடிகளாய் உள்ள எழுவரைக் குறிப்பிடுகிறார்.
 
1. காவிரி கடலில் சேரும் சங்கமத்துறையில் சில பெண்கள் கூடி மணலில் விளையாடினர்.அதில் ஒருத்தி தன் காதலனின் முகத்தை வடித்தாள், அதில் லயித்தாள்.அப்போது காவிரியின் வெள்ளம் அதிகரிக்க அம்மணல் முகம் அழியும் படி வர, அவள் அதை அணைத்துக் கொண்டு அதைப் பாதுகாத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினாள்.[எல்லாவற்றிலும் தன் தலைவனைக் காணல்]
 
2. தன் கணவன் கடல் கடந்து வணிகம் செய்யக் கப்பலில் செல்லும் போதெல்லாம், ஊரில் உள்ள ஒருவன் தன்னை நோட்டம் விடுவதை உணர்ந்த ஒரு பெண் அவன் வெறுக்கும் வண்ணம் தன் உடல், உடை, பாவனையை மாற்றி அவன் மனதில் இருந்து தன்னைப் பற்றிய எண்னத்தை விலக்கினாள்.
 
3. கடல் கடந்து வணிகம் சென்ற தன் கணவன் மீண்டு வரும் வரைத் தன் மனதைக் கல்லாக்கி, புலன் இச்சைகளை வென்று வாழ்ந்தாள் ஒருத்தி.
 
4. இரு தோழிகள்.இருவரும் பிற்காலத்தில் சம்பந்திகள் ஆக வேண்டும் என்று உறுதி செய்தனர்.ஆனால் பெண் முன் பிறந்து ஆண் மிக மிகப் பின் பிறந்தது.இதனால் வருந்தினர்.பெண் வளரும் போது இதை அறிந்து, அக்குழந்தையைத் தன் குழந்தை போல் ஏற்றாள். [கணவன் மனைவிக்கு அன்பால் முதல் மகன் தான்]
 
5. தன்னொடு பிறந்த பெண்களில் ஒருத்தியைத் தன் மாமனுக்குக் கல்யாணம் செய்து தருவதாக வாக்களித்து, அம்மாமனை வீட்டில் பணியாள் போல் நடத்தினான் ஒரு வணிகன்.ஆனால் பணத்தாசையால் தன் மகள்களைப் பணக்காரர்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திட, ஒருத்தி அதைப் பொறாமல் தன் மாமனைக் கல்யாணம் செய்து கொண்டு ஊரார் முன் உண்மை உரைத்தாள்.வன்னிமரத்தையும் கிணற்றையும் சாட்சியாய்க் கூறினாள்.மரம் - நீர் போல் தம் இல்லறம் அனைவருக்கும் அறம் செய்யும் என்பதன் குறியீடு.
 
6. ஒருத்தி தன் சக கிழத்தியின் [கணவனின் இரண்டாம் மனைவி - polygamy]  குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அது தவறிக் கிணற்றில் விழ, தன் கவனக்குறைவுக்கு ஏற்ற வினைப்பயனை அனுபவிக்கத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, தெய்வ அருளால் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டாள்.
 
7. மாமன்னர் கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியார்.இவள் சேர இளவரசன் ஆட்டனத்திக் காதலித்து மணந்தாள்.தம்பதிகள் ஆடி 18 கொண்டாடப் பூம்புகார் வந்தனர்.கழார் துறை எனப்படும் சிறப்பு மிக்கக் காவிரிக் கடைமடைப் பகுதியில் புண்ணிய தீர்த்தம் ஆடினர், காவிரியை வணங்கினர்.அப்போது ஆட்டனத்தி புது வெள்ளத்தில் நீந்தி மகிழ வெள்ளம் அவனை அடித்துச் செல்ல, ஊரே கூடி அழ, வீரர்கள் தேட, ஆதிமந்தி கரையோரம் ஓட, இறுதியில் மருதி என்ற மீனவப் பெண் அவனைக் காவிரி கடலுடன் சேரும் சங்கமத்துறையில் உயிருடன் மீட்டு அவள் உயிர் விட்டாள்.அவளுக்கு மானியமாக மருதியூர் கரிகாலனால் தரப்பட்டது.
 
மேல் கண்ட இப்பெண்களைக் கண்ணகியார் மிகப் போற்றி, அவர்தம் ஊரில் தாம் வாழ்வதையும் அவர்தம் வழியில் உயர் ஒழுக்கம் தன்னைக் கடைப்பிடிப்பதையும் அவர் சமூஹத்துக்கு உணர்த்துகிறார்.
 
செல்வம் புரளும் சமூஹத்தில் தனிமனித ஒழுக்கத்தை மீண்டும் இளங்கோ இதன் மூலம் வலியுறுத்துகிறார்.
 
ஆடி 18 அன்று புகார்ப்பதிப் பத்தினிப் பெண்டிர் எழுவரை வணங்குக.
Continue reading
  801 Hits
801 Hits

சோற்றாணிக்கரை பகவதி

வஞ்சம் உண்டு மயல் பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்
அழல் வாய் நாகத்தால் எயிற் அழுந்தினர்
கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழுது துயர் நீங்கும்
நிழல் கால் நெடுகல் நின்ற மன்றம்
 
என்று காவிரிப்பூம்பட்டிணத்தில் 2000 ஆண்டுகளுக்கும் முன் இருந்த தெய்வீகக் கல் ஒன்றை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.
 
அதாவது, பிறர் வாழ்வைக் கெடுக்க எண்ணி செய்வினை ஏவல் பில்லி சூனியம் செய்து அதனால் பாதிக்கப்பட்டோரும், விஷம் உண்டோரும், மிகக் கொடிய பாம்புக்கடியால் துயர் உற்றோரும், பேய் பூதம் பிசாசு ப்ரேத ஆத்மாக்களால் பாதிக்கப்பட்டோரும் வலம் வந்து முறையே தொழ, அவர்களை குணம் செய்யும் நிழல் போல் கரிய ஒளி வீசும் நெடுகல்.
 
இக்கல் இன்று எங்கே?
கேரளத்தில் ப்ரஸித்தி பெற்ற சோற்றாணிக்கரை ஸ்தலத்தில் மூலஸ்தானத்தில் பகவதி அம்மையாய் விளங்குகிறது.
 
பூம்புகாரைக் கடல்கோள் அழிக்க, சேரன் செங்குட்டுவன் சோழன் பெருநற்கிள்ளியின் உதவியுடன் சதுக்க பூதத்தையும் இக்கல்லையும் மீட்டுச் சேர தேசத்தில் முறையே கோயில் செய்தான்.
 
சதுக்க பூதம் இன்று கொடுங்கல்லூரில் கோயிலின் வெளியே தனிச் சன்னிதியில் உள்ளது.
 
சோதி எழுந்த கரை - சோற்றாணிக்கரை.
அன்னை இங்கு அலைமகள், கலைமகள்ல் , மலைமகள் என முப்பெரும் தேவியரும் ஒருங்கிணைந்த கோலத்தில் மஹா சக்தியாய் விளங்குகிறாள்.அன்னை இக்கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்டாள்.
 
கல்லின் மீது பொன் கவசம் சார்த்தப்படும்.சங்கு சக்ரம் அபயம் வரதம் கொண்ட விஷ்ணு துர்கை வடிவாக அன்னை விளங்குகிறாள்.கண்ணகியாரின் ஒரு நடுகல்லாகக் கேரள வரலாற்று ஆசிரியர்கள் இதையும் கூறுவர்.காரணம் அன்னையின் உத்சவ மூர்த்தம் சிலம்பும் வீர வாளும் ஏந்தி உள்ளது.
 
கி.பி 7ல் ஆதிசங்கரர் மூகாம்பிகையின் சக்தியை இக்கல்லில் ஆவாஹனம் செய்தார்.இன்றும் இரவு ஏழு மணி முதல் மறுநாள் ஏழு மணி வரை மூகாம்பிகையின் மஹாசரஸ்வதி சக்தி இக்கல்லில் ஒளிர்வதைக் காண்க.
 
அன்னையின் கோயிலின் கீழ் பத்ரகாளி அன்னை விளங்குகிறாள்.அவள் கோயிலில் தினமும் இரவில் இறந்த ஆன்மாக்களுக்கு குருதி பூஜை அன்னை முன் நிகழும்.
 
கேரளத்தின் மிக ப்ரஸித்தி பெற்ற ன்னை இவள். THE GREAT EXAURSIST.
 
அன்னையின் நவராத்ரி விழாவும், மாசி மகமும் மிக ப்ரஸித்தம்.
 
41 தினங்களில் மனிதனை உபாதிக்கும் தீய சக்திகள் விலகுவதை இன்றும் கண்கூடாகக் காண்க.
 
அன்னையின் நெடுகல் அருகில் மஹாவிஷ்ணுவும் ஒரு கல்லில் ஆவாஹனம் ஆகி மஹாலக்ஷ்மி சானித்யம் அதிகம் உண்டாக ஏற்பாடு ஆனது.
 
அதிகாலை 4 மணிமுதல் 7 வரை அன்னையை நெடுகல் வடிவில் கண்ணாரக் கண்டு மன உடல் பிணி நீக்கலாம்.
 
எண்ணற்ற லீலைகள் நிகழ்த்துகிறாள் இவள்.
 
சதா லலிதா சஹஸ்ரநாமமும் தேவி மாஹாத்யமும் பாராயணம் செய்து கொண்டே இருப்பதைக் காண்க.
 
கேரளத்தினரின் கல்வி ஞானத்துக்கு இவளே காரணம் என்பர்.
 
ஏவலும் பில்லி சூன்யமும் பூத பேய் பிசாசுகளும் விஷமும் ப்ரேத ஆன்மாக்களின் தொல்லையும் அஞ்சி ஓடும் சக்தி கொண்ட அன்னையை வணங்குவோம்.
Continue reading
  775 Hits
775 Hits

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

மேலான பரம் பொருளாகிய ப்ரஹ்மம் சக்தியாக - ப்ரபஞ்ச ஆற்றலாக மருவிய - மாறிய ஊர் மேல்மருவத்தூர்.
 
மிகத் தொன்மை மிக்க ஊர்.அதில் உள்ள ஸ்வயம்பு லிங்கமே ப்ரஹ்மம் பராசக்தியின் குறியீடு.
அச்சக்தியின் தோற்ற வெளிப்பாடே ஐம்பூதங்கள். ஐம்பூதங்களின் தொகுதியே இயக்கமே ப்ரபஞ்சம், நாம் எல்லாம்.
 
எனவே சக்தியைக் கைக்கொண்டால் தான் அன்றாட வாழ்வியல் தேவைகள் முதல் உயர் ஞானம் வரைக் கிட்டும் என்பது விஞ்ஞானம்.
 
தற்போது உள்ள கோயிலில் உள்ள ஸ்வயம்புவை ஆதியில் பல சித்தர்கள் உபாசித்தனர்.கால வெள்ளத்தில் அது மண்ணுள் புதைய, கலியுகத்தில் மீண்டும் அடிகளார் மூலம் தத்துவமும் உண்மையும் வெளீயாயிற்று.மக்கள் ஸ்ரத்தையுடன் கனவன்த்துடன் பக்தி செய்ய அவர் சில்ப சாஸ்த்ர ரூபத்தில் அம்மையின் சிலையை உண்டாக்கினார்.
 
உடல் மனம் அறிவு ஆகிய மூன்றும் சதா பரம்பொருளுடன் ஐக்யம் ஆகிச் செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டதே வாழ்க்கை என்பதை உணர்த்த அன்னை சின் முத்ரை ஏந்தி உள்ளாள். மேலும் அழகிய தாமரை மொட்டு - உற்பத்தியின், ஞானத்தின் குறியீடு.சக்தி பெண்மையின் வடிவே.
 
மேலும் உடலின் ஆரோக்யத்துக்கு மிக முக்கியமான ஏழு தாதுக்கள் சப்த மாதர் வடிவில் உள்ளன.அணு சக்தி இயக்கத்தின் குறியீடான நாக வடிவமும் வழிபாட்டில் உள்ளது.
 
ஆதிபராசக்தி படைத்தல் காத்தல் மாற்றுதல் ஆகிய முத்தொழில்களை சதா உலகில் வாழ்வில் செயலாற்றுவதை உணர்க.அச்சக்திகளையே கலைமகள் - அலைமகள் - மலைமகள் என உருவகம் செய்கிறோம்.
 
வாழ்வாதாரம் சுகமாக இருக்க பாக்ய சக்தி தேவை.அதை அதிகரிக்க வேதச் சடங்குகள் அறிவியல் பூர்வமாக ஒலி-ஒளி சக்திகளுடன் உண்டாயின.
 
மேல்மருவத்தூரில் நிகழும் சடங்குகள் மிக உயர் நிலையில் மேற்கொள்ளப் படுகின்றன.குறிப்பாக எந்த்ர வடிவங்கள் மூலம் மூல சக்தியை ஆகர்ஷணம் செய்து அதன் மூலம் பலன் பெறும் பற்பல வேத வழிச் சடங்குகள் உள.
 
அதில் மிகக் குறிப்பாக விளக்கு வழிபாடு, கூழ் வார்த்தல், நவராத்ரி மஹோத்சவம், ஆடிப்பூரம், இருமுடி மூலம் முன் ஜென்ம வினை அகற்றல் ஆகிய உண்டாயின.
 
பெண்கள் கருவறைக்குள் நுழைந்து தெய்வத் திருமேனியைத் தொட்டு பூஜிக்கும் வழக்கம் தேசத்தில் அன்று முதல் சக்தி வழிபாட்டில் உண்டு.அதை மிகக் கைதேர்ந்த வகையில் இக்கோயில் நடைமுறை செய்வதைக் காண்க.
 
ஆடிப் பூரம் என்பது - ப்ரஹ்மம் பராசக்தியாக மாறிய கால அளவின் குறியீட்டு தினம்.
 
அனைத்து சாதியினரும் பாகுபாடு இன்றி அம்மையைக் காணவும், தெய்வ பக்தியின் எல்லை சமூஹ சேவை என்ற பாரத தேசத்தின் வாழ்வியல் நெறியை விளக்கவும் மேல்மருவத்தூர் ஓர் எடுத்துக்காட்டு.
 
நம் காலத்தில் இக்கோயில் வெளிவராது போயிருப்பின் மதமாற்றங்கள் மிக மிக அதிகம் ஆகி இருக்கும்.
 
உலகில் ஆதிபராசக்திக்கு என அமைந்துள்ள ஒரே திருத்தலம் மேல்மருவத்தூர் மட்டுமே.அதுவும் சான்றோர் உறையும் பல்லவ தேசத்தில் கோயில் அமைகிறது.
 
ஒரு முறை செல்க்.
Continue reading
  717 Hits
717 Hits

கருமாரியும் கண்ணகியாரும்....

கருமாரியும் கண்ணகியாரும்....
 
கருத்த மழை மேகங்கள் கூடி உரிய காலத்தில் பருவ மழையைப் பெய்விக்க வேண்டும்.
 
மண் செழிக்க வேண்டும்.
 
அதற்குரிய ஆதிசக்தியாக நம் தமிழர் கண்ட உன்னத வழிபாடே மாரி அம்மை வழிபாடு.
 
ஊர் தோறும் மழை தெய்வத்தை வணங்கிய தமிழர், கண்ணகியாரின் வாழ்வுக்குப் பின் அவரது ஆன்மாவையும் மாரியுடன் பிணைத்துக் கொண்டனர்.
 
கருத்த மேகம் பெய்யும் மாரி - கருமாரி.
 
அன்னையின் வடிவம் சிற்ப சாஸ்த்ர வடிவில் பைரவியின் தோற்றத்தில் தான் பெரும்பாலும் அமையும்.
 
அக்னி க்ரீடம், பாசம், உடுக்கையுடன் பின்னப்பட்ட நாகம், ஆணவம் அற்ற தன்மையை உணர்த்தும் கபாலம், வாள் [ஞானம்]
 
அன்னையின் பாதத்தில் உள்ள சிரசு ஆய்வுகளில் அக்காலத்தில் தேசத்துக்காகத் தம்மைத் தாமே தலை அரிந்து பலிகொடுக்கும் வீரர் சிரசாகும் என்று தெரியவருகிறது.பின்னர் அது தேவியின் உருவையே தாங்கிற்று.
 
சில தேவிகள் ஐந்தலை நாகக்குடையுடன் இருப்பர்.அது ஐம்பூதத்தைக் குறிக்கும்.
 
ஆடி மாதம் கருமாரியை மரியாதை செய்யும் காரணம் - பருவ மழை வளம், கண்ணகியார்.
Continue reading
  666 Hits
666 Hits

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries