கொடுங்கல்லூர் பரணி - மனோதத்வ ரீதியில் ஓர் பாலியல் ஆய்வு பரணி

பரணி
27 நக்ஷத்ரங்களில் ஒன்று.கொற்றவையான காளியின் சக்தியை ஆகர்ஷித்துத் தரும் நக்ஷத்ரம்.
பரணி தினத்தில் அக்கால த்ராவிட மன்னர்கள் போர்க்கள வேள்வி செய்து ஆயத்தம் ஆவர்.
போரில் ஆயிரம் ஆண் யானைகளைக் கொன்ற வீரனைப் புகழ்வதையே பரணி இலக்கியமாக இடைக்காலத் தமிழ் மொழி பரிணமிப்பதைக் காண்கிறோம்.அதில் குறிப்பாக காளி பேய்களுடன் கூடி போர்க்களத்தில் வீர விருந்துண்டு களிப்பதை வர்ணிக்கும் கொடூரமான காட்சி வர்ணனைகள் இடம் பெறும்.
இன்று தமிழகத்தில் பல அம்மன் கோயில்களில் உள்ள விழாக்கள் வெவ்வேறு விதவிதமாக, விதவிதமான கால தினங்களில் நடைபெறும்.ஆனால் அன்றைய சேர தேசமான இன்றைய கேரளத்தில் உள்ள காளி - கொற்றவைக் கோயில்களில் பெரும்பாலும் பரணி நாளிலேயே உற்சவம் நடைபெறுவதைக் காண்க.
குறிப்பாகக் கேரளத்தின் தலைசார்ந்த காளி கோயிலான கொடுங்கல்லூர் [அன்றைய சேரர்தம் தலைநகர் வஞ்சி] ஸ்தலத்தில் பங்குனி மாதம் அஸ்வதி மற்றும் பரணி தினங்கள் வெகு வெகு விமர்சிகை ஆனவை.
கொடுங்கல்லூர் பரணியை நம்மூர் ஸ்ரீரங்க ஏகாதசி அல்லது மதுரைச் சித்திரைத் திருவிழாவுக்கு ஒப்பிடுக.[Regarding the rush]
அஸ்வதி நாளில் அக்காலம் முதல் மிகத் தாழ்ந்த சாதியினரும் கோயிலை வலம் வந்து கொற்றவையை வணங்கும் வழக்கம் சேர தேசத்தில் உள்ளது.அஸ்வதி நாள் அன்று அதிகாலை முதல் கூட்டம் கூட்டமாககுடும்பம் குடும்பமாக மக்கள் செவ்வாடை அணிந்துவாளும் சிலம்பும் ஏந்தி [கண்ணகியின் பாவனை] கோயில் முன் வந்து தெய்வம் ஏறப்பெற்று ஓயாமல் ஆடுவர்.You tube available.
அதில் மிக நுட்பம் வாய்ந்தது தறிப்பாட்டு ஆட்டம்.
அது என்ன?
மிகக் கேவலமான, மிக வக்ரமான பாலியல் வர்ணனைகள் கொண்ட மலையாளபழந்தமிழ் பாடல்களை மக்கள் பாடி ஆடுவர்.கைகளில் மூங்கில் கட்டைகளைக் கொண்டு தாளமிட்டுஒரு குறிப்பிட்ட ராகத்தில் அனைவரும் அவரவர் கூட்டம், குடும்பத்துடன் பாடி ஆடுவர்.
அஸ்வதி தினத்தில் மாலை வரை அன்னையின் சன்னிதி திறப்பதில்லை.கோயிலின் ப்ரதான நடை முன் நின்று உரக்கக் கத்தித் தறிப்பாட்டுக்களைப் பாடி ஏசுவர்,வணங்குவர்துள்ளி குதித்தாடுவர்.
அடுத்து கண்ணகியாரின் சமாதிக் கோயிலான secret chamber இருக்கும் புறத்தே சென்று அதே போல் ஏசுவர்.தன் மனதில் உள்ள அனைத்து எண்ணங்களையும் பேசியும் தீர்ப்பர்.ஆனால் யாரும் யாரையும் குறை கூறார்கேலி பேசார்சிரிக்கார்.
தமிழ் இலக்கியத்தில் சொல்வது போல் கள்ளுண்டு களிக்கும் கூட்டம் காணலாம்.கேட்பதற்குக் காதுகள் கூசும் பாலியல் வர்ணனைகளை தேவியை நோக்கிக் கத்துவர்.மக்கள் தம் மனதில் ஏற்படும் அனைத்து வக்ரங்களை அந்த குறிப்பிட்ட ராகத்தில் பாடி வெளிப்படுத்துவர் - தேவி முன்.
கேரளத்தின் மிக மோசமான கலாச்சாரம், the brutal, vulgar animal like culture of dravidians – 1954 comment in THE HINDU,என்றெல்லாம் அரசியல் கட்சிகளும் நாஸ்திக வாதங்களும் விமர்சிக்கும் இந்த விழா பல ஆயிரம் ஆண்டுகளாய் நிகழ்வதே சிறப்பு.
கோயில்களில் பாலியல் கல்வி புகட்டும் சிற்பங்கள் இருப்பது சாதாரணம்.ஆனால் பாரத தேசத்தில் வேறு எங்கும் இல்லாத பண்பாடாய் மிக வக்ரமான பாலியல் வர்ணனைகள் கொண்டு ஆண்களும் பெண்களும் பாடுவது இங்கே தான்.அது ஏன்?
ஆனால் அடியேன் மூன்றாண்டுகள் ஆய்வின் அடிப்படையில் கொடுங்கல்லூர் பரணியை அருகிருந்து கள ஆய்வு செய்த போது ஒரு உண்மையைக் கண்டேன்.அது என்ன?
திரைப்படத்திலோவேறு கலை வடிவத்திலோ இதே போல பாலியல் பாடல்கள் உளஆனால் அதற்கேற்ற body gestures காட்டப்பெறும்.ஆனால் கொடுங்கல்லூர் பரணியின் தறிப்பாட்டில் அவ்வித உடல் பாஷைகள் இல்லை.கள்ளுண்டுகளித்து கையில் மூங்கில் கோல் கொண்டு ஆண்களும் பெண்களும் [அனைத்து உறவுகளும் வட்டமாக நின்றே] பாடிப்பாடி தேவியை நோக்கிச் செல்வதைக் காணலாம்.
தறிப்பாட்டுகள் பாடி ஆடும் பக்தர்கள் ”கோமரங்கள்” எனப்படுவர்.கோவின் மறவர்கள்கோமறவர்கள் என்று ஆய்வில் தொல் கொடுந்தமிழ்ச் சொல் கிடைக்கிறது.சேரர் கோ[மன்னன்] தம் மறவர்கள் வீரர்கள் என்று அர்த்தம் கொள்க.இம்மறக்குடியினரே வ்ரதம் இருந்து ரக்த வர்ண ஆடை தரித்துகாலில் சிலம்பு பூட்டிகையில் நெடிய வாள் தாங்கி தேவியை தெய்வமேறப்பட்டு வாழ்த்தி வணங்குகிறார்கள்.
கொடுங்கல்லூரில் மேவும் கூடலர் குல நாசினி! [கூடலர் - மதுரைப் பதி மக்கள்,பாண்டிய குலம் அதை நாசம் செய்தவள்] என்று மிகத் தொன்மையான கொடுந்தமிழ் வரியைப் பதிவு செய்தோம்.
இது மிக ஆழ்ந்த மனவியல் உண்மையைச் சார்ந்ததே.கி.பி 18ல் மிகப் பெரிய மஹான்கள் உத்தண்ட சாஸ்த்ரிகள்சட்டம்பி ஸ்வாமிகள் ஆகியோர் இவ்விழாவைத் தடை செய்ய ஆங்கிலேயரின் உத்தரவுடன் முயன்றனர்.ஆனால் அன்னை இவர்தம் கனவில் சென்று அதைத் தடுத்தாள் என்று வரலாறு கூறுகிறது.
மனவியல் உணர்வுகளை ஒன்று கூடி வெளியிடும் மிகத் தொன்மை மிக்க மனோதத்வ கலாச்சாரம் இது.
கண்ணகியின் வாழ்வியல் ஆற்றாமையைத் தாகம் தீர்க்கும் மிகத் தொன்மையான தொல் த்ராவிட வழிபாடு இது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.
ஆனால் மன அழுத்தங்களைபாலியல் சம்பந்தமான விராக உணர்வுகளைத் தீர்க்கும் விழா இது.வாய் விட்டுச் சொல்லுதல் என்ற மனோ தத்வத்தின் அடிப்படையில் அமைந்தது இது எனலாம். மனதுள் வைத்துப் புழுங்கும் ஏக்க தாகங்களை வாய்விட்டுப் பாடி அரற்ற தேசத்தின் ஓர் ஊரில் வாய்ப்பு தரப்படுவதாகக் காண்கிறேன்.
அஸ்வதி தினத்தின் அன்று மாலை பொற்கொல்லன் வந்து கோயிலை மூன்று முறை வலம் வந்து மணியை அடிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை ஓடி வலம் வந்து கணக்கற்ற மஞ்சள்மிளகுபணம்தங்கம் ஆகியவற்றைக் கோயிலின் மீது வீசி எறிவர்.தேவியை மூன்று நாட்கள் காண முடியாது.இதையே ”காவு தீண்டல்” என்பர்.அன்று இரவு தேவியின் இடது ஸ்தனத்தின் மீது மஞ்சள் மருந்து பூசப்பட்டு அதிகாலையில் மஹா ப்ரசாதமாக வழங்கப்படும்.
கோயிலைத் தூய்மை செய்யவே ஒரு வாரம் ஆகும்.
கொடுங்கல்லூர் பரணியில் பக்தர்கள் மிகத்தொன்மைக்கால ஆடை ஆபரணங்கள் அணிவதையும் காண்க. அக்காலத்தில் போர்க்களம் செல்லும் வீர தீர பாவனைகளையும் காணலாம்.ஐநூறு ஆண்டுகட்கு முன் கொடுங்கல்லூரில் போர் வீரர்கள் அமர தண்டம் [தன் தலையைத் தானே அரிந்து கொள்வது] சமர்ப்பித்தும் உள்ள வரலாறு காணப்படுகிறது.
அமர தண்டம் சமர்ப்பிக்கும் முன் மூடப் பழக்கமாய்பொற்கொல்லனையும் கடத்தி வந்து கோயில் முன் வெட்டிப் பலி கொடுத்த செய்திகள் கி.பி 1213ஆம் நூற்றாண்டுகளில் கிடைக்கின்றன. இன்று கோயிலின் முன் மிகப்பெரிய மண் களம் மீது ரக்த வர்ண செவ்வாடையை விரித்துஅதையே ஆணவத்தின் குறியீடாக பலி இடும் வழக்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
மிக ஆழமான மனோவியல் நுட்பத்தைப் புரிந்து கொண்டால் இத்தேசத்தின் சில அபூர்வமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு பாணர் பாடிய தோற்றம் பாட்டு...
......அம்மை மதுரையை எரித்து,
பாண்டி நாடெங்ஙினும் போய்
ஆழிகர கன்யாகுமரி எத்தி
அவிடே தேவி கன்யாகுமரியாயி
கையில் சிலம்பும் கொண்டு
அனந்தபுரியில் ஆற்றுக்காலில் ஏகி
சேரமானும் சேரத்தி ராணியும் கைதொழ
அம்மை கொடுங்ஙல்லூர் வந்நு...
புறத்தே சோற்றாணிக்கர எத்தி..
அம்மையும் கொடகு மஹாராஜன் பின்போயி
குடஜாத்ரியிலே மூகாம்பிகையாகுன்ன சரிதம் ஞான் சொல்லியல்லோ
பாணன் என்டே பாட்டில் தேவி அருளியல்லோ
தேவியும் கையில் பொன் சிலம்பும் கொடுவாளும் தாங்ஙி
சேரமானும் சேரத்தி ராணியும் தொழ ஒற்றை முலச்சியாயி
கொடுங்ஙல்லூரில் அம்பலத்திலே சாந்த்வனமாயி....
Continue reading
  522 Hits
522 Hits

Women's Sabarimalai - Aatrukaal Devi [Kannagi] shetram - aadi month spl

பெண்களின் சபரிமலை - ஆற்றுக்கால்
 
திருவனந்தரபுரம் ஆற்றுக்கால் பெண்களின் சபரிமலை.
 
வருடத்தில் மார்ச் மாதத்தில் லட்சம் பெண்கள் அன்னைக்குப் பொங்கல் வழிபாடு மேற்கொண்டு கின்னஸ் சாதனை செய்யும் மஹா ஸ்தலம்.
 
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற சிலப்பதிகார வாக்கை நிரூபிக்கச் சேரன் செங்குட்டுவன் குமுளி மலையின் மீது கண்ணகிக் கோட்தமும், தன் தலைநகர் கொடுங்கலூரில் கோயிலும் கண்ணகிக்கு ஏற்படுத்திய பின் கேரளம் முழுவதும் கண்ணகியை தேவியின் அவதாரமாக பாவித்த கோயில்கள் பல தோன்றின.அவற்றுள் மிக ப்ரஸித்த பெற்ற ஒன்று திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயில்.
 
மதுரை எரித்த கண்ணகி கோபம் தீராமல் பாண்டிய தேசத்தின் எல்லையான கன்யாகுமரிக்குச் செல்கிறாள். அங்கே தேவியைச் சேரன் தன் தேசத்துள் வரவேற்க அவள் ஆற்றுக்கால் வந்து தங்கிட, அவளை ஷாந்தம் ஆக்கிடப் பெண்கள் பொங்கலிட்டு வழிபட, பொங்கால் உத்சவம் உண்டானது.
 
கோயில் தேவி ஷாந்த ஸ்வரூபிணியாய் துர்கை வடிவில் கலந்த கண்ணகியாக உள்ளாள்.
 
கோயில் முழுவதும் சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு காட்சியும் சிற்பமாக உள்ளது.
 
மார்ச் மாதத்தில் இவ்வாண்டு 8 லட்சம் பெண்கள் கூடி பொங்கலிட்டனர்.அன்று விடுமுறை, ஆண்கள் வெளிவருவதில்லை,ஊர் முழுவதும் ஏட்டு கிலோமீட்டர் தூரம் பொங்கலுக்கு இடம் booking செய்ய வேண்டும்.
 
அன்னைக்குக் காப்புக் கட்டியவுடன் கொடுங்கல்லூரில் இருந்து காலம்காலமாய்க் கண்ணகியின் வரலாற்றைப் பாடும் மரபினர் வ்ரதம் பூண்டு தோற்றம் பாட்டுப் பாடுவர்.அதன்பின் சன்னிதியின் விளக்கில் இருந்து தீ பற்றப்பட, அது ஊர் முழுவதும் உள்ள அடுப்புகளுக்குச் செல்ல பொங்கல் ஆகி, ஹெலிக்காப்டர் மூலம் நிவேதனம் ஆகும்.
 
முருகன் பாவனையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வ்ரதம் பூண்டு மறுநாள் தேவியை வழிபடும் நிகழ்வு முக்கியம்.
 
வெறும் வெற்று த்ராவிடம் பேசி உண்மையான த்ராவிட மரபுகளைச் சீர் குலத்த தமிழகம் கேரள மக்களின் பக்தியைக் கண்டு நாண வேண்டும்.
 
சமூஹத்தின் ப்ரபலங்கள் ஆற்றுக்கால் பொக்காலாவில் பங்கேற்பது மிக ப்ரபலம்.
 
பிறர் பசி தீர்த்தல் மிக உயர்ந்த அறம்.
பொங்கல் - நம் பாக்ய சக்தியை அதிகரிக்க முன்னோர் கண்ட உயர் சடங்கு.
பெண்கள் ஒரு மார்ச் மாதம் சென்று பொங்கலிடுக.....
 
you tube - பல வீடியோக்கள் காண்க.
Continue reading
  438 Hits
438 Hits

இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் கட்டுரை

இழந்தத்தைக் கொடுக்கும் கண்ணகிக் கோட்டம் - ஆய்வுக் கட்டுரை மதுரையில் பாண்டியன் முன் வழக்குத் தொடுத்து அவனுக்கு உண்மை உணர்த்தி, தன் கணவனின் பழியை விலக்கிய கண்ணகி, மன அமைதி தேடி வைகைக் கரை வழியில் பயணம் செய்தாள். தேனி வீரபாண்டி கெளமாரி அம்மை கோயிலில் அவள் பூரண ஞானத்துடன் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளை எண்ணி, வினைப்பயனின் உண்மையை உணர்ந்து சமாதானம் ஆகி, அதன் பின் மேற்கில் சேர தேசத்து எல்லையில் குமுளிப் பள்ளத்தாக்கில் உள்ள பளியங்குடி வழியாகப் பயணித்து, நெடுவேல் குன்றம் என்ற முருகன் கோயில் உள்ள 4300 அடி உயரம் உள்ள மலையில் ஏறி, அங்கு ஆடி மாதம் அனுஷம் அன்று சமாதி ஆனாள், தன் கணவனின் ஆன்மாவுடன் ஐக்யம் ஆனாள். இதைப் பழங்குடி மக்கள் சேரன் செங்குட்டுவனிடம் கூற, அதை உணர்ந்த ராணி வேண்மாள் உயர்ந்த பெண்ணுக்கு வீர நடுகல் வைத்து வழிபட்டு சமூஹத்துக்கு முன் உதாரணம் தர வேண்டும் என்று கூற, சேரனும் இமய மலையில் கல் எடுத்து, கங்கையில் நீராட்டி, கண்ணகிக்குச் சிலை வைத்து, இன்றுள்ள கண்ணகிக் கோட்டத்தை எழுப்பினான். அதில் அவளது தோழி தேவந்திகை பூஜாரி ஆனாள். இழந்த நிம்மதியைப் பெறும் மஹா ஸ்தலமாக இதை மக்கள் மதிக்கிறார்கள். பின்னர் சேரன் கண்ணகியின் உடல் எச்சங்களைத் தன் தலைநகரான வஞ்சி மாநகருக்கு எடுத்துச் செல்கிறான் [கேரளம் - திருச்சூர் மாவட்டம் - கொடுங்கல்லூர் பகவதி கோயில்] கண்ணகியின் அப்பா கொடுத்த அவளது சில நகைகள், சிலம்பு ஒன்று, ஒரு புடவை ஆகியன காளியின் இடது புறம் ரகசிய அறையுள் வைக்கப்பட்டு, காளியுடன் சேர்த்த வழிபாடு இன்றும் செய்யப்படுகிறது. மதுரையின் மேற்குப் பகுதியில் வாழும் பல ஆயிர மக்களுக்கும் இவள் குலதெய்வம். இன்றுள்ள கண்ணகி கோட்டம் ராஜராஜ சோழனால் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.ராஜராஜ தன் சோழ சேதத்துப் பெண் தெய்வத்துக்கு நிலங்களும் பொன் ஆபரணங்களும் அளித்த செய்தி அங்கே கல்வெட்டில் உள்ளன. ராஜராஜன் கண்ணகியை ”ஸ்ரீபூரணி” என்று குறிப்பிடுகிறான்.வாழ்வில் பூரணத்வம் பெற்றவள் என்று அர்த்தம். சிலப்பதிகாரம் ”மங்கல மடந்தை” - எப்போதும் நல்லதை எண்ணும் பெண் என்று குறிக்கிறது.அதனால் தான் இப்பகுதி மங்கல தேவி கோயில் எனப்படும். ராஜராஜன் எழுப்பிய சிவன், கணபதி சன்னிதிகள், முருகன் சன்னிதி [சிலை இல்லை], வடக்குப் பார்த்த கண்ணகி சன்னிதி ஆகியன உள்ளன.கிழக்குத் தோரண வாயில் ராஜராஜனின் பணி.சிலப்பதிகாரம் கூறும் சுனையும் அதன் அருகில் உள்ளது. இன்று கேரள தமிழகம் எல்லை ப்ரச்சனையால் வீணாய்ப் போய்க் கொண்டு இருக்கும் கண்ணகிக் கோட்டம் அரசாங்கத்தின் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது, ஆனால் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. சித்திரைப் பூர்ணிமை நாளில் மட்டும் காலை முதல் மாலை வரை இங்கு வர முடியும். 1963 ல் எம் பேராசிரியர் Dr.S.கோவிந்தராசன் அவர்கள் தம் 16 ஆண்டுகள் ஆய்வுக்குப் பின் கண்ணகிக் கோட்டத்தைக் கண்டு பிடித்தார். உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பெண்களே வீட்டுக்கும் சமூஹத்துக்கும் வழிகாட்டிகள்.சீதை, த்ரெளபதி போன்றவர்களின் வரிசையில் கண்ணகியும் இடம்பெறுகிறாள்.

Continue reading
  454 Hits
454 Hits

Kannagi's intellectual power

ஞானஸ்வரூபிணியான பெண்
 
வீண் பழியால் கோவலன் வெட்டுண்டு மாண்டான்.இதை அறிந்த கண்ணகி முதலில் ஒரு சாதாரண பெண்ணின் நிலையில் உணர்ச்சியால் கதறி அழுகிறாள், அரற்றுகிறாள்...ஆனால் ஒரு கட்டத்தில் அவள் தன் உணர்ச்சியைப் பின் நிறுத்தி, பூரண அறிவை முன் நிறுத்தித் தான் மேற்கொண்டுள்ள சிக்கலை எண்ணிப் பார்க்கிறாள்.
 
அப்போது அவளுக்குள் சில உண்மைகள் விழிப்புணர்வில் தெளிகின்றன.
அவை என்ன?
கோவலன் குற்றவாளி ஆகவே முடியாது!
தன் கணவன் என்ற கண்மூடித் தனமான பந்தபாசத்தால் கண்ணகி அதைக் கையாளவில்லை!
சமூஹத்தில் அநீதியால் அவதிக்கு உள்ளாகும் அப்பாவி நிரபராதிகளின் ப்ரதிநிதியாய் அவள் பூரண அறிவின் ஸ்வரூபமாய்ப் பாண்டியனைக் காணச் செல்கிறாள்.....
 
மதுரையில் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் சபை....
 
கண்ணகி வாயில் காவலனிடம்,
”வாயில் காவலனே!
அறிவை இழந்த, அறம் இல்லாத நெஞ்சம் கொண்ட நீதி தவறிய பாண்டியனின் அரசவைக் காவலனே!
ஈடு இணையற்ற பரல்களைக் கொண்ட அழகிய செம்பொன் சிலம்பினைக் கையில் ஏந்தியவளாகிய நான், என் கணவனை இழந்தேன்!
இப்போது நான் உன் அரசனைக் காண வேண்டும்!
என்னைப் பற்றிக் கூறுவாயாக!”
 
வாயில் காவலன் பாண்டியனின் சபையில் சென்று,
”கொற்கைத் துறைமுகத்தினைக் காவல் கொண்ட வேந்தனே! வாழி!
அழகிய தென் பொதிகை மலையின் தலைவனே! வாழி!
பழிகள் ஏற்படாமல் தேசத்தைக் காக்கும் பஞ்சவனே! வாழி!
 
மகிஷாசுரனின் வெட்டிய தலையில் இருந்து ரத்தம் வழிய,
அந்த எருமைத் தலையையே பீடமாகக் கொண்ட 
வெற்றி தரும் துர்கை அல்ல;
 
சப்த மாதர்களில் கடைசி மாதரும் அல்ல,
 
ஈசனை நடனமாடச் செய்த பத்ரகாளியும் அல்ல,
 
அச்சம் தரும் கொடிய வனத்தில் வாழும் கொடுங்காளியும் அல்ல,
 
தாருகனின் அகன்ற மார்பினைப் பிளந்த துர்கையும் அல்ல,
 
ஆனால் மிக்க கோபமும் சிந்தனையும் கொண்டு, அழகிய பொன் சிலம்பை ஏந்தி ”கணவனை இழந்தேன்” என்று கூறிக் கொண்டு வாயிலில் ஒரு பெண் வந்திருக்கிறாள் ஐய!”
 
பாண்டியன் கண்ணகியை அழைக்க, அவளும் மன்னன் முன் அருகில் தைரியமாக வர,
 
”கண்களில் கண்ணீர் வழிய என் முன் நிற்கும் அழகிய இளம் பூங்கொடி போன்ற பெண்ணே! யார் நீ?” என்று பாண்டியன் வினவ,
 
கண்ணகி,
”ஆராய்ச்சி செய்து பார்க்காத அறிவில்லாத மன்னன் நீ!
தேவர்களும் போற்றும் படி, புறாவுக்குத் தன் சதையையே அரிந்து கொடுத்த சிபிச் சோழனும்,
ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயர் போக்க,
பசுங்கன்றினைக் கொன்ற தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று மனுநீதி தர்மத்தை நிலை நாட்டிய சோழனும் வாழ்ந்த பூம்புகார் என் ஊர்
 
மிக உயர்ந்த குலத்தில் தோன்றிய மாசாத்துவான் என்ற செல்வ வணிகனின் ஒரே மகன் கோவலனின் மனைவி கண்ணகி நான்!
 
தீவினையால் பொருள் எல்லாம் இழந்தோம்
இழந்த பொருளை மீண்டும் வணிகம் மூலம் சம்பாதிக்க உன் மதுரைக்கு வந்தோம்
என் கால் சிலம்பில் ஒன்றை விற்று வர வந்த என் கணவன் உன்னால் வெட்டப்பட்டான்! இது நியாயமோ?”
 
அதற்குப் பாண்டியன்,
”பெண்ணே!
கள்வனைக் கொன்றது தவறு இல்லையே!
அது நீதி தவறாத மன்னனின் கடமை அல்லவா?” என்று கூறினான்.
 
அதைக் கேட்ட கண்ணனி,
”அற வழியில் செல்லாத கொற்கை நகரத்தின் மன்னனே!
என் கால் சிலம்பினுள் நவரத்னங்கள் பரல்களாக உள்ளன.” என்றிட
 
பாண்டியன்,
”நன்கு நன்கு!
நீ கூறுபவை சரியே!
என் அரசியின் சிலம்புகளில் முத்துக்கள் பரல்களாக உள்ளன.”
 
இதைக் கேட்ட கண்ணகி, கோவலனிடம் இருந்து பெறப்பட்ட சிலம்பினைக் கேட்டு வாங்கி அதைக் கீழே போட்டு உடைக்கிறாள், நவரத்னங்கள் சிதறி ஓடின.
 
இதைக் கண்ட பாண்டியன், 
”நானா அரசன்?
நானே கள்வன்!
பூமியில் தென் திசையின் காவல் என் அநீதியால் கெட்டதே!
கெடுக என் ஆயுள்!” - தான் அநீதி செய்ததை உணர்ந்து உயிர் விடுகிறான்
 
உணர்ச்சியைப் பின் தள்ளி அறிவை முன் கொண்டு வந்து கண்ணகி தன் கணவன் நிரபராதி என்று நிரூபனம் செய்தாள்.அதன் பின் அவள் மதுரை எரித்தாள் என்பது குறியீடு.அக்னி என்பது ஞானம், அதுவே மனிதனின் மனதை மாற்றம் செய்யும் உட்சக்தி.அவள் அக்னியால் மதுரையை எரித்தாள் என்பது, ஞானத்தால் மதுரை மக்களை யோசிக்க வைத்தாள் என்பதே ஆகும்.அதன்பின் அவள் தவநிலையில் பூரண சமாதி கொண்டாள்.அவ்விடத்தில் தான் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக் கோட்டம் எழுப்பினான்.
Continue reading
  416 Hits
416 Hits

Aadi month - auspicious for spiritual journey

ஆடி மாதம்
 
தமிழருக்கு மிக முக்கியமான புண்ணியக் காலம்.
தட்சியாணம் - அதாவது சூரிய ஒளி தேசத்தின் தென் பகுதியில் அதிகம் விழும் காலம்.
அதன் மூலம் பருவ நிலையில் மாற்றங்கள் வரும்.
குறிப்பாக வடகிழக்குப் பருவ மழையின் ஆரம்பக் காலம்.
ஆடிக் காற்றில் வயல்களை உழுது பக்குவம் செய்வர்.
ஆடியில் காவிரியில் வரும் புது வெள்ளத்தை வரவேற்று, நன்றி கூறி அந்நீரைக் கொண்டு வயலில் உழவைத் தொடங்குவர்.
ஆடிப் பதினெட்டாம் நாளில் காவிரிக்கு உரிய மரியாதை செய்வதும், நிலத்தில் உள்ள தாதுச் சத்துக்களின் உருவகக் குறியீடான ஏழு கன்னிமார்களை வணங்குதலும், முன்னோர் வழிப்பாட்டை அமாவாசை அன்று மேற்கொள்ளுதலும், பருவ மழையின் சக்தியாகிய மாரி அம்மையை வணங்குதலும் ஆடி மாதச் சிறப்புகள்.
 
காவிரியில் பூஜித்துக் கயிறு கட்டிக் கொள்ளும் போது நீர் சேமிப்பு, சுற்றுச்சூழல், மாது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்க,அதனால் தான் அதைக் காப்பு என்கிறோம்.
 
வாழ்க்கையை வளமூட்டும் ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் அவசியம் அனைவரும் செய்ய வேண்டிய பாக்ய சக்தியை அதிகரிக்கும் வ்ரத பூஜையாகும்.சாதி வேறுபாடின்றி யாரும் செய்யலாம்.பணமும் வளமும் சாதி பார்த்தா பயன்படுத்தப் படுகின்றது?
 
புதுமணத் தம்பதிகள் விருந்து, வட தமிகத்தில் மிக விசேஷமான கூழ் வார்த்தல் விழாக்கள் என இம்மாதம் களை கட்டும்.வருடத்தில் நான்கு நவராத்ரிகளில் இது ஆஷாட மாத நவராத்ரிக் காலம்.
அதனால் தான் தேவி வழிபாடு இம்மாதத்தில் மிக அதிகம்.ஆடி வெள்ளி, செவ்வாய், பெளணர்ணமி, அமாவாசை, க்ருத்திகை ஆகியன மிக உன்னத வேளைகள்.
 
வைகாசி மத்தியில் பூம்புகாரை விட்டுக் கிளம்பிய கோவலனும் கண்ணகியும் ஆடி அமாவாசை முன்தினம் மதுரையை அடைய, அமாவாசை அன்று கோவலன் கொலை ஆக, அமாவாசை மாலை கண்ணகி வழக்காடி, மதுரையை எரித்தாள் என்பது சிலப்பதிகார ஆய்வு.
 
அதனால் தான் கண்ணகியின் ப்ரதிபலிப்பான மாரி அம்மைக்கு விழவு காண்கிறோம்.
கண்ணகியின் ப்ரதான கோயிலான கேரளத்துக் கொடுங்கலூர் பகவதி கோயிலில் அன்று மாலை secret chamber திறக்கப்பட்டு, அவளது சிலம்பு அஸ்திக் கலசம் ஆகியன பூஜிக்கப்படும், அதன் பின் காளியின் திருமேனியில் விசேஷமான எண்ணெய்க்க்காப்பு சாற்றப்படும்.இதையே சாந்தாட்டம் என்பர்.
 
ஒரு பெண்ணின் வாழ்க்கை சமூஹத்திற்கு உதாரணம்.
இதையே கண்ணகி உணர்த்துகிறாள்.
சமூஹத்தில் ஏற்படும் தீமையை எதிர்க்கும் திறனும் சத்யத்தின் மீதான பற்றும் அவள் நமக்குக் கூறும் வாழ்வியல் பாடம்.
சமூஹத்தில் இன்று மன்னிக்கும் குணம் குறைந்து வருகிறது, அதை மீட்டுருவாக்கம் செய்பவள் கண்ணகி.
தவறாக வாழ்ந்த ஒரு மனிதன் என்று பாராது அவனைப் பழி தீர்க்காது, அவன் குற்றம் அல்லாதவன் என்று அவள் சத்யத்தின் சக்தியாய் இருந்து அவன் பழி நீக்கினாள்.
இக்கண்ணகி நம்முள் அதே சத்யமாய், இல்லற மான்பாய் ஏற்கும் தன்மையாய் மன்னிக்கும் அருங்குண்மாய் இருப்பதை selftual connect செய்து காண்க.அத்தகைய உயர் குணங்களை ப் பெறவே தேவியாய் அவளை வணங்குகிறோம்.
 
ஆடி வரும் ஆடி மாதத்தை வரவேற்போம்.
Continue reading
  407 Hits
407 Hits

Sila [pathy] karam

அவனுக்கோ புத்தி வந்தது
பதிவிரதையுடன் சேர்ந்து வாழ ஆசை திரும்பியது
அப்பா அம்மா மாமனார் மாமியாரிடம் சொல்லாமல் கொள்ளாமல் விடியும் முன்னே கட்டியவளுடன் வேறு ஊர் சென்றான் பிழைக்க
ம்ம்ம்ம் ஊரே சொந்தமாயிருந்தும் என்ன பயன்?
எந்தத் தேவை வேண்டியும் வேறு ஊருக்குப் போகாதவர்கள் புகார் நகர் மக்கள்
இவனோ பிழைப்பைத் தேடி மதுரை போனான்....
அங்கே..
திருடன் என்ற வீண் பழி சுமந்து, 
அனாதையாய் கொலை செய்யப் பட்டான்
 
*****
கட்டியவன் ஒரு நாள் வருவான்
அவனொடு சேர்ந்து வாழலாம் என்ற கனவு
தண்ணீர் எழுத்தாகிப் போனதை என்னவென்று சொல்ல?
வீணாய்ப் போன கோவலன்!
*****
கட்டியவன் பாதை தவறினாலும்
அவன் திருடன் இல்லை என்ற சத்தியத்தை நிலை நாட்டி
மனைவி மானம் காப்பாள் - என்ற முன்னோர் வார்த்தைக்கு இலக்கணம் ஆகி
அவளும் மாண்டாள்
இன்று ஊர் தோறும் தெய்வமானாள்
கண்ணகி 
*****
காதல் கணவன் செத்தான் என்ற செய்தி கேட்டு
அவனொடு சேர்ந்து பெற்ற பதினாறு வயதுப் பெண் பிள்ளையை விட்டு
தற்கொலை செய்து கொள்ளவும் முடியாமல்
தன் குலத்தொழில் வாழ்க்கை மகளுக்கு வரவேண்டாம் என்று
பதினெட்டு வயது அழகிய மகளுடன்
துறவி ஆனாள் அந்த மாதவி பே....ரழகி......
பூம்புகாரின் அழகி....மாபெரும் celebrity of Poompuhar
*****
மகனுக்கு நேர்ந்த கதியும்
மறுமகளுக்கு நேர்ந்த கொடுமையும் கேட்டு
இருவரின் பெற்ற வயிறுகள் துடியாய்த் துடித்துத் தாய்மார் இருவரும் தீக்குளித்துச் செத்தனர்
 
பிள்ளைக்களுக்கும் மனைவிகளுக்கும் உண்டான கதி கண்டு
கடல் கடந்து ஓடி ஓடி சம்பாதித்துத் தேடிய செல்வத்தால் என்ன பயன் என்று உண்மை உணர்ந்து.....அப்பாக்கள் இருவரும் துறவியானார்கள்.
*****
இரண்டாயிரம் வருஷங்களாய் நம்மூரில் கேட்ட கதை தான், பார்த்த கதை தான்....
மீண்டும் இந்த ஆடி மாதத்தில் ஒரு முறை ரீமேக் செய்தால் என்ன?
 
சென்ற வாரம் காவிரிப்பூம்பட்டிணத்தில் ஆய்வு செய்த போது,
கடற்கரையில் பல நேரம் நின்றிருந்தேன்
காவிரி மகள் தன் தலைவன் கடலொடு கலப்பதைக் கண்டு வெகு நேரம்
சற்றுத் திரும்பினால், அதோ அந்த மாதவி, கோவலனைப் பிரிந்த அந்நாள் காட்சி
 
”மறுமடியும் ஒரு முறை சந்திப்போம் என்ற உறுதியில் எத்தனை காலம் வேண்டுமானாலும் பிரிந்து வாழலாம்” என்ற ஜெயகாந்தனின் வரி என்னுள் உலாவியது
 
”ம்ம்ம்ம் இன்று இரவு போனால் நாளை காலை மீண்டும் கோவலன் வருவான்” என்று தானே மாதவி கிடந்தாள்?
 
அதே கதியில் தானே பல ஆண்டுகளுக்கு முன் மாதவி வீடு போனவன் மீண்டும் தன் வீடு திரும்புவான் என்று கண்ணகி நம்பினாள்.
 
அவளது பொறுமைக்கு வெற்றி உண்டானது.
ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே?
வீணாய் மதுரையில் வீண் பழி சுமத்திக் கொலை ஆனானே?
 
இது வினைப் பயன் என்றார் இளங்கோ அடிகள்.
பாரத தேசம்
புண்ணிய தேசம்
பற்பல சமயம் தோன்றிய தேசம்
மனதைச் சமைத்துக் கொடுக்கும் சமயம்
அதாவது பக்குவப்படுத்தும் சமயம்
அது கூறுவது ஒன்று தான்....
 
”தீதும் நன்றும் பிறர் தர வாரா”
 
எனக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கு நானே என் செய்கைகளே காரணம்...இதுவே சத்தியம்
*****
வினை - செயல்
இதன் விளைவைச் சந்திக்கத் தயாராகு மனமே
யோசித்து உன் செயலைச் செய்
மனம் எண்ணியதெல்லாம் செய்யாதே
வீணாய் மாட்டிக் கொள்ளாதே
 
இன்றுச் சற்று இதையெல்லாம் யோசிக்க வேண்டிய வாழ்க்கைச் சூழல் உருவாகி உள்ளது
வாழ்க்கையின் வேகம்
எதையும் விலை பேசும் போக்கு
பணத்தால் பதவியால் பலத்தால் எதையும் சாதிக்கும் மனப்பான்மை
 
மேற்கத்தியக் கல்வியும் கலாச்சாரமும் வினைப் பயனைக் கூறவில்லை
பாவம், அவர்களுக்கு வினையின் பயன் தெரியாது
காரணம் சரியான வழிகாட்டிகள் இல்லை
 
இத்தொடு வாழ்க்கை முடிந்தது
எதையும் செய், மகிழ்ச்சியாக இரு, இன்பத்தில் திளை, அதற்காக எதையும் செய்
பின் வரும் ப்ரச்சனைகளைக் கண்டு கொள்ளதே...இதுவே தேசத்தில் அரசியலும் கல்வியும் ஊடகமும் உணர்த்தும் வாழ்க்கை நெறி.
 
எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்டன
ஆனால் அவற்றுள் முக்கிய ஒரு மாற்றம்;
மனித மனதுள் உள்ள கல்மிஷம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது
அதற்குத் தூபம் போடுவது வாழ்க்கை மாற்றங்கள்
 
அது தான் மனை அறம் பிறழ்தல் - குடும்ப வாழ்க்கையில் தவறு செய்தல்
ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாண வாழ்க்கை முறை சற்று இன்று ஆட்டம் காண்கிறது
அறம் செய்யவே மணம் என்ற நெறி, பணம் செய்யவே இருவர் மணம் என்றாகிறது
பிள்ளைப்பேறே இல்லறத்தின் முதற்பயன் என்ற நெறி, பிள்ளைப்பேறு இருவரின் வளர்ச்சிக்கும் இடையூறு என்ற புதிய சித்தாந்தம் ஆகி வருகிறது
பெண் கல்வி, பெண் வேலை, பெண் சம்பாத்தியம்....என ஒரு பக்கம் மேற்கத்திய பெண்ணியத் தாக்கம்...
*****
பாரதத்துப் பெண் ஆணுக்கு இணையாக எப்போதும் எல்லாவிடத்தும் ஈடு கொடுத்து நிற்கிறாள்.
 
இந்தப் பெண் சுதந்திரத்தின் எல்லை இப்போது சற்று கவலைக்கு இடமாகி இருக்கிறது.
படிப்பு - வேலை - சம்பளம் இருப்பின் பெண் தன்னை சுதந்திரம் என்று எண்ணி விடுகிறாள்.
தான் எதையும் செய்யலாம் என்று எண்ணுகிறாள்
தனக்குப் பின்னால் குடும்பம் சுற்றம் என்ற ஒன்று இருப்பதை மறக்க முயல்கிறார்கள் இன்றைய பெரும்பாலான புதியவர்கள்....
தேசத்தின் ஆணி வேரான இல்லற தர்மம் கண் முன் இப்போதெல்லாம் சற்று தெரிவதில்லை
தன் சுகம் தன் முடிவு தன் வாழ்வு என்ற மேற்கத்திய தன்னியத் தாக்கம் அவளுள் வேர் ஊன்றுவதைக் காண்கிறோம்.
 
இதை வீட்டாரும் அனுமதிப்பதைக் காண்கிறோம்.
தன் மண வாழ்வில் குழந்தைப் பேற்றுக்குப் பின் தான் தனது என்ற இச்சைகளை ஒதுக்கி, பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சியே முக்கியம் என்று எதையும் சகித்து, ஏற்றுக் கொண்டு வாழ்வது பாரதப் பெண்ணியம்...அது சற்று நவீன யுகத்தில் மாறியது
முடிவு?
 
பாதிக்கப்படும் அப்பாவிகள் - குழந்தைகள்
******
பிறர் மனை விழைதல்
கல்யாணமான ஆணையோ பெண்ணையோ விரும்புதல்
வள்ளுவர் முதல் கே.பாலச்சந்தர் வரை கண்டித்து வைத்த ஒரு வினை தான்
இன்று அதைத் தூபம் போடுவது போல வாழ்க்கை மாற்றங்கள் சமூஹத்தில் முளை விடுவதைக் காண்கிறோம்.
*****
கற்புக்குப் புது இலக்கணம் இன்று காட்டப்படுகிறது
அதை ஆணும் பெண்ணும் வாதிட்டுப் பார்க்கிறார்கள்
கல்யாண வாழ்வில் சிறு ப்ரச்சனைகளும் இன்றைய தலைமுறையை வேறு மாற்றுக்கு இட்டுச் செல்லத் தயாராக உள்ளதைக் காண்கிறோம்
இதில் சட்டமும் சேர்ந்து கொள்கிறது
 
முன் ஜென்ம பாக்ய சக்தியால் இப்பிறவில் எனக்கு இந்தக் குடும்பம் குழந்தை வாழ்க்கை வாய்த்துள்ளது என்று ஏற்றுக் கொள்ள ஆன்மீகம் வழிகாட்டவில்லை.
 
பிறர் மனைவிழைதல் - பிறரை விரும்புதல் அணுவிலும் கூடாது என்ற நெறியை ஆயிரம் மனைவிகள் கொண்ட தசரதனின் மகன் ஸ்ரீராமன் விளக்கினான்.
 
சீதை வனம் சென்றதும் அவன் அரச குல மரபு படி வேறொரு கல்யாணம் செய்யலாம்.
ஆனால் ப்ரம்மச்சரியம் காத்தான்
தன் மனையாள் பூமியுள் புதையுண்ட பின் இல்லறத்தில் துறவி ஆனான்
அதனால் நாராயணனின் அவதாரம் ஆகி உத்தம புருஷன் ஆனான்
*****
அணு அளவும் பிறர் மனை விரும்பி அதைச் செயல் படுத்தும் போது உடலில் ஒவ்வொரு செல் த்வாரத்தின் அளவு நரகம் ஏற்படுமாம் - மனு தர்மம் கூறும்.
 
நரகம்!
அது வேறெங்கும் இல்லை
இப்போது வாழும் வாழ்விலேயே பிறர் மனை விழைதல் நரகத்தைத் தருவதைக் காண்கிறோம்
கோவலன் வாழ்வில் அதை உணர்கிறான்
ஆனால் என்ன பயன்?
கட்டியவளும் காதல் சேர்க்கையாளும் மகளும் தாயும் தந்தையும் நிம்மதி இழந்தனரே!
 
இருப்பதை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் வரும் போது எண்ணியது கிடைக்காத ஏக்கம் கட்டுப்படுகிறது.
 
கலைகள் காட்டும் மனைவியாய்க் கண்ணகி இல்லை
ஊடலும் கூடலும் கோவலர்க்கு உணர்த்தும் பெண் அவனது தேவை....
காதல் மாதவி அதைக் காட்ட, இவன் அவளைத் தேர்ந்தான்..சேர்ந்தான்..வீணாய்ப் போனான்
 
இன்று மனதின் பய உணர்வால் -insecurity, அதீத எதிர்பார்ப்பால், சதா ஒப்பிடுவதால் பிறர் மனை விழைதல் உண்டாவதைக் காண்க.
எத்தகைய கொடுமையான ஆணைப் பெண்ணும், கொடிய பெண்ணை ஆணும் ஏற்று வாழ்ந்த சூழல் போய் பிறர் மனை விழைதலில் முடிவதைக் காண்கிறோம்.
 
ஊடகங்கள் அதை ஊக்குவிக்கின்றன.
திரைப்படங்கள் அதை ஆதரிக்கின்றன.
அதற்குப் புது புது அர்த்தங்கள் கற்பிக்கின்றன.
தவறு
”எனக்குப் பிடிக்கவில்லை” என்றால் அதற்காக உண்மை பொய்யாகாது
 
காலம், வாழ்க்கை, நம்பிக்கைகள் மாறலாம்
சத்யம் மாறாது
 
காதல் வேறு
அது கைகூடலாம் இல்லை முடியலாம்
ஆனால் திருமணம்?
ஆணும் பெண்ணும் கல்யாணம் இன்றி வாழலாம் - வெறும் உடல் சுகம் பெற
அது மேற்கத்திய வாழ்வு
இன்று நவநாகரீக மாநகரங்களுள் புகுந்து விட்டது.
ஆனால் இருவரும் இணைவது இல்லத்தில் அறம் செய்ய
தான் தன் குடும்பம் உறவு ஊர் என அனைத்துக்கும் தன்னால் ஆன தர்மங்களைச் செய்ய ஆணும் பெண்ணும் அங்கீகாரம் பெறும் பாஸ்போர்ட் தான் கல்யாணம்
இதில் யார் தடம் மாறினும் இந்த சமூகச் சங்கிலி அறுந்து போகும்.
 
மிக உயர்ந்த பணம் புகழ் கொண்டோர் அதிகம் தடுமாறுவதன் காரணம், அதீத எதிர்பார்ப்பு, யாரையும் நம்பாமை, பயம். 
 
பிறர் சமூஹத்தில் அதிகம் இல்லறத்தில் தடுமாறுவது ஏற்பு இல்லாமல் போவதால்.அதீத கற்பனையால், கனவால். 
 
எதார்த்த வாழ்க்கை என்பதை ஏற்காத மனம் அதைக் கள்ளத்தனத்தால் நிறைவேற்றத் துடிப்பதைக் காண்கிறோம்.
 
சதா கலை இன்பத்திலும் மனம் போன படி சுகம் கொள்வதிலும் வாழும் கோவலனை இல்லறம் கட்டுப்படுத்தவில்லை.
 
சமூஹத்தில் மிக உயர்ந்த ஓர் அந்தஸ்தில் உள்ள மாதவியை அடையத் துடிக்கும் அவன் மனதின் எண்ண அலைகள், தனக்கு ஒரு நிரந்தர வாழ்க்கை வேண்டும் என்று ஏங்கும் மாதவியின் மன எண்ண அலைகளுடன் சேர இருவரும் சேர்ந்தனர்....
 
கையில் காசும், பதவியும் இருந்து விட்டால் தன்னை யாரும் ஒன்றும் கேட்கக் கூடாது என எண்ணும் சில புதியதலைமுறைக்குக் கோவலன் விதிவிலக்கல்ல.
ஒரே ஊரில் மனைவியைப் பிரிந்து வேறு ஒருத்தியுடன் குழந்தையும் பெற்றுக் கொண்டு வாழ்பவனை அவனது பெற்றோரால் மாமன் மாமியாரால் என்ன செய்ய முடிந்தது?
பதினாறு ஆண்டுகள் வாழ்கிறான்
அந்த ஆண் திமிர் தான் இன்றும் பரவுகிறது
 
மிகக் கேவலமானவருடன் சேர்ந்து இன்பக்களியாட்டம் போட்டுத் திரியும் கோவலனைப் போல் தென்றல் காற்று பூம்புகாரில் உலா வருவதாய் இளங்கோ கட்டுப்பாடு அற்ற விட்டேத்தி குணத்தைக் காட்டுகிறார்.இன்றைய கல்வி அதன் மூலம் பெறும் வேலை, பணம், தனிமை, விடுதலை, கேட்பார் இல்லாத சூழல் ஆகியன அதிகமான புதுப்புது தவறுகளுக்கு மனிதனைத் தூண்டுகிறது.
 
அதே வேளை இன்றைய பெண்ணியம் பெண்ணுக்கு நெறிகளைப் போட்டா போட்டி வாழ்க்கைக்குத் தள்ளுகிறது.பாவம் - குழந்தைகள்
 
பூம்புகார் கடற்கரையில் நிற்கும் போது மிகவும் என்னுள் ஏற்படும் தாக்கம் மாதவி - கோவலன் பிரிவே
ஏன்?
பதினாறு ஆண்டுக்கால வாழ்வின் தோல்வி அங்கு ஏற்பட்டது
கோவலனுக்குத் தான், மாதவிக்கு இல்லை
 
சதா புதுமை தேடும் இன்றைய தலைமுறையின் வேகம் தான் காரணம்
காதல் மாதவியின் ஒழுக்கம் மீது சந்தேகம் கொண்ட கோவலன் அதைப் பாட்டாய் வெளிப்படுத்த, அதன் உள் அர்த்தம் அறியும் மாதவி அவனது வாழ்க்கைப் போக்கில் மாற்றம் உள்ளதை அடுத்த பாட்டில் வெளிப்படையாய்க் கூற, அதை ஏற்காத ஆணாதிக்க ஆண் மனம் உடனே பிரிந்து...மீண்டும் ஒரு பாதுகாப்பைத் தேடி மனைவியை நாடு...மதுரை போய்...மரணத்தில் விழுகிறது.இதுவே அவனது உணர்ச்சிக்கு அடிமையான மனதின் வினைப் பயன்...இளங்கோ அடிகள் தெளிவாகக் கூறுகிறார்.
 
மாதவியால் அவள் ஒழுக்கத்தை அவன் குறை கூறுவதை ஏற்க இயலவில்லை.
அப்போது, ”ஆணுக்கும் ஒழுக்கம் உரிமை, உடைமை, சமம், தேவை” என்று கூற, ஆணாதிக்க மனம் ஏற்கவில்லை.
 
இதை மிக்க கற்றவர்கள் மட்டுமே சிலப்பதிகார வரிகள் மூலம் உணர இயலும்.
 
ஊழ் வினை - செய்த தீவினை உரிய காலத்தில் பலன் தரும் என்று பாரத தேசத்தின் சத்தியம் கூறுவது, இவனது தன்னிச்சைப் போக்கான மனதின் வினைப் பயன் மாதவியின் பிரிவுக்குக் காரணம் ஆயிற்று.
 
கட்டியவளுடன் வாழ்வில்லை
காதலியுடன் வாழவில்லை
வீண் பழி ஏற்றுக் கொலை ஆனான்
அது அப்பிறவியில் அவனது உணர்ச்சி மிக்க மனம் செய்த வினை
 
பிறர் மனை விழைந்த மாதவிக்கு வினைப் பயன்?
வாழவும் முடியாமல், பதினெட்டு மகளுடன் துறவி ஆகி ஊரை விட்டுப் போனதே
 
இவ்விருவரின் வினையால் எத்தனை பேர் பாதிக்கப்பட்தனர்
 
”தான் நான் என் சுகம்” அதுவே ப்ரதானம் என்று வாழும் புதிய தலைமுறை இன்று பல விஷயங்களில் சிந்திக்காமல் செயல்படுவதைக் காண்கிறோம்......
 
ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு ஒன்றே என்ற மஹாகவி பாரதியின் வாக்கு சிலம்பின் மூலம் உணர்த்தப் பட்டதாகும்.
 
பல தார மணத்தை அன்றைய பாரத ஏற்றது.
ஆனால் பிறர் மனை விழைதலைக் கண்டித்தது.
காரணம் அடுத்த சந்ததியினர் அதனால் படும் அவஸ்தை
 
இரண்டாயிரம் ஆண்டுகளாய் மனிதன் ஒன்றும் பெரிதாய் மாறவில்லை
நடை உடை பாவனையில் மாற்றம் உண்டே தவிற எண்ணமும் செயலும் மாறவில்லை.
 
அதனால் தான் ராமாயணமும் பாரதமும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இன்றும் உள்ளன.
 
சில பதி [கணவன்] களின் அதிகாரம் [கதை] என்று உட்பொருள் உண்டு.
 
ஆணும் பெண்ணும் சமம்
இருவரின் எதிர்பார்ப்பிலும் உரிமை உண்டு
ஆனால் அவை இல்லை எனில் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவை
 
கலையும் ஊடலும் கூடலும் தராத கண்ணகி ஒதுக்கப் பட்டாள்.
மண வாழ்க்கை வியாபாரம் அல்ல.
அது இணைதலில் குறியீடு.
புதிதலின் புத்தகம்
அறத்தின் காவல்
 
ஆடி மாதத்தில் கற்பு தெய்வமாம் கண்ணகியைப் பலவாறு வணங்குகிறோம்.
அவள் மூலம் பிறர் மனை விழையாமை உணர்த்தப் படுவதை அறிக
 
பூம்புகார் கடற்கரையில் ஏன் கண்ணகி சிலையை கடல் பார்த்து வைக்கச் சொன்னார் காமராசர்?
”கடல் தாண்டிய தேசங்களில் அக ஒழுக்கம் உயர வேண்டும்” என்றே.
 
 
இளங்கோவடிகளின் காவியமும் மணிமேகலையும் உலகின் பழமை மிக்க மிக உயர்ந்த தமிழ் நூல்கள்.உண்மை...ஆனால் அவற்றின் பொருள்...சோகம் தானே?
 
சோகத்தை ரசிப்பது தான் வாழ்வா?
இன்று அறியாமையினால் சோக இலக்கியங்கள் நம் வாழ்வில் ஆங்காங்கே நம்மாலே எழுதப்படுவதைக் காண்க.
யோசியுங்கள்....சரியான வழிநடத்தல் காட்டுங்கள்.
Continue reading
  467 Hits
467 Hits

கண்ணகியின் மனோ தைரியம்

கண்ணகியின் மனோ தைரியம்
 
சமீபத்தில் ஒரு பெண் கண்ணகி மனோநிலை பாதிக்கப்பட்டவள் என்று பொதுக் கூட்டத்தில் பேசினார்....
 
கண்ணகி எடுத்தோம் கவுத்தோம் என்ற பெண் அல்ல.
அவள் பேசுவது மூன்றே இடங்களில் தான்
அதைத் தான் இக்காலப் பெண்கள் ஆண்கள் கவனிக்க வேண்டும்
 
கோவலனின் செய்கைகளால் சில சிக்கல்கள் ஏற்பட உள்ளதைத் தன் விழிப்புணர்வால் கண்ணகி உணர்கிறாள்.
 
கணவன் வந்து அழைத்ததும் அவன் மனம் மனமாற்றம் நிரந்தரம் ஆக வழிவகுக்கவே மதுரை போக சம்மதிக்கிறாள்.
 
தோழி தேவந்தி, ”பூஜை புனஸ்காரம் வ்ரதங்கள் மூலம் கோவலனைப் பெற முடியும்” என்று கூறும் போது, ”பீடு அன்று” என்று கண்ணகி கூறினாள்.
 
”மாய மந்த்ர தந்த்ர பூஜை பரிகாரம் மூலம் ஒரு மனிதனைத் திருத்த முடியாது, அம்மாற்றம் அவனுள் இயற்கையாக வரவேண்டும்.மாற்றம் என்பது தன்னுள் தானாகக் கொண்டு வருவதே” என்ற ஆழ்ந்த மனோதத்வ உண்மையை உணர்த்துகிறாள்.
 
அதன்பின் மதுரையில் அவனுக்கு சாப்பாடு [நீண்ட காலம் கழித்து] போட்டபின் அவன்,
”உனக்கு இத்தனை கெடுதல் செய்தும் நான் அழைத்ததும் என்னுடன் ஏன் வந்தாய்?”
 
இதற்கு அவள் பதில், அதுவே அவளை பாரதப் பெண்மையின் மஹாராணியாக்குகிறது.கல்யாண வாழ்வின் சாரத்தை அவள் உணர்த்துகிறாள், குறிப்பாக இன்றைய தலைமுறைகளுக்கு...
 
”உங்கள் செயலால் உங்கள், என் பெற்றோர் மிகவும் மனம் இற்றுப் போயினர்.
எனக்கு வந்த துன்பத்தைக் கண்டு அதற்கு சமாதானம் கூற வழியின்றி, வெளிப்புறம் சிரித்தும் உள்ளே அழுதும் வாழ்ந்தனர்.
 
அறச் செயல்கள் மூலம் உண்மையான பக்தர்கள், உறவுகள், ஏழைகள், எளியோர் ஆகியோர்க்கு உங்களுடன் சேர்ந்து கல்யாண பந்தத்தை அர்த்தம் உள்ளதாக வாழக் காத்திருந்தேன்.”
 
”அறவோர்க்கு அளித்தலும்
அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்
தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர் கோடலும்
இழந்த என்னை...” - சிலம்பதிகாரம்
 
”போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” - யாரும் ஏற்றுக் கொண்டு பாராட்டாத ஒழுக்கத்தைச் செய்தீர் என்று மிகத் தெளிவாக, கவனமாகக் கூறுகிறாள்.
 
எந்த நேரத்தில் எதை யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று உணர்ந்தவள்.
 
கடைசியாய் அவள் கோவலனுக்காக வாதாடினாள், அவனைப் பழி அல்லவா வாங்கி இருக்க வேண்டும் என்று காலம் காலமாய் நவீனப் பெண்யுகம் கேட்கிற கேள்வி...
 
அவள் தன் கணவன் என்பதற்காகப் போராடினாள் என்பதைவிட ஒரு தனிமனிதனின் நியாயத்துக்காகப் போராடினாள்.சமூஹ நியாயத்துக்காகப் போராடினாள்.நீதியின் ப்ரதிநிதியாய் முன் நின்று போராடினாள்.
 
உள்ளதை உள்ளபடி ஏற்று, அதை செம்மை செய்யும் மனோபக்குவத்தை நிதானத்தைக் கண்ணகி கற்றுக் கொடுக்கிறாள்.
 
இதனால் தான் ஊர் தோறும் தெய்வமாகிறாள்.
Continue reading
  426 Hits
426 Hits

Kannagi's mental stability

கண்ணகியின் மனோ தைரியம்
 
சமீபத்தில் ஒரு பெண் கண்ணகி மனோநிலை பாதிக்கப்பட்டவள் என்று பொதுக் கூட்டத்தில் பேசினார்....
 
கண்ணகி எடுத்தோம் கவுத்தோம் என்ற பெண் அல்ல.
அவள் பேசுவது மூன்றே இடங்களில் தான்
அதைத் தான் இக்காலப் பெண்கள் ஆண்கள் கவனிக்க வேண்டும்
 
கோவலனின் செய்கைகளால் சில சிக்கல்கள் ஏற்பட உள்ளதைத் தன் விழிப்புணர்வால் கண்ணகி உணர்கிறாள்.
 
கணவன் வந்து அழைத்ததும் அவன் மனம் மனமாற்றம் நிரந்தரம் ஆக வழிவகுக்கவே மதுரை போக சம்மதிக்கிறாள்.
 
தோழி தேவந்தி, ”பூஜை புனஸ்காரம் வ்ரதங்கள் மூலம் கோவலனைப் பெற முடியும்” என்று கூறும் போது, ”பீடு அன்று” என்று கண்ணகி கூறினாள்.
 
”மாய மந்த்ர தந்த்ர பூஜை பரிகாரம் மூலம் ஒரு மனிதனைத் திருத்த முடியாது, அம்மாற்றம் அவனுள் இயற்கையாக வரவேண்டும்.மாற்றம் என்பது தன்னுள் தானாகக் கொண்டு வருவதே” என்ற ஆழ்ந்த மனோதத்வ உண்மையை உணர்த்துகிறாள்.
 
அதன்பின் மதுரையில் அவனுக்கு சாப்பாடு [நீண்ட காலம் கழித்து] போட்டபின் அவன்,
”உனக்கு இத்தனை கெடுதல் செய்தும் நான் அழைத்ததும் என்னுடன் ஏன் வந்தாய்?”
 
இதற்கு அவள் பதில், அதுவே அவளை பாரதப் பெண்மையின் மஹாராணியாக்குகிறது.கல்யாண வாழ்வின் சாரத்தை அவள் உணர்த்துகிறாள், குறிப்பாக இன்றைய தலைமுறைகளுக்கு...
 
”உங்கள் செயலால் உங்கள், என் பெற்றோர் மிகவும் மனம் இற்றுப் போயினர்.
எனக்கு வந்த துன்பத்தைக் கண்டு அதற்கு சமாதானம் கூற வழியின்றி, வெளிப்புறம் சிரித்தும் உள்ளே அழுதும் வாழ்ந்தனர்.
 
அறச் செயல்கள் மூலம் உண்மையான பக்தர்கள், உறவுகள், ஏழைகள், எளியோர் ஆகியோர்க்கு உங்களுடன் சேர்ந்து கல்யாண பந்தத்தை அர்த்தம் உள்ளதாக வாழக் காத்திருந்தேன்.”
 
”அறவோர்க்கு அளித்தலும்
அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்
தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர் கோடலும்
இழந்த என்னை...” - சிலம்பதிகாரம்
 
”போற்றா ஒழுக்கம் புரிந்தீர்” - யாரும் ஏற்றுக் கொண்டு பாராட்டாத ஒழுக்கத்தைச் செய்தீர் என்று மிகத் தெளிவாக, கவனமாகக் கூறுகிறாள்.
 
எந்த நேரத்தில் எதை யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று உணர்ந்தவள்.
 
கடைசியாய் அவள் கோவலனுக்காக வாதாடினாள், அவனைப் பழி அல்லவா வாங்கி இருக்க வேண்டும் என்று காலம் காலமாய் நவீனப் பெண்யுகம் கேட்கிற கேள்வி...
 
அவள் தன் கணவன் என்பதற்காகப் போராடினாள் என்பதைவிட ஒரு தனிமனிதனின் நியாயத்துக்காகப் போராடினாள்.சமூஹ நியாயத்துக்காகப் போராடினாள்.நீதியின் ப்ரதிநிதியாய் முன் நின்று போராடினாள்.
 
உள்ளதை உள்ளபடி ஏற்று, அதை செம்மை செய்யும் மனோபக்குவத்தை நிதானத்தைக் கண்ணகி கற்றுக் கொடுக்கிறாள்.
 
இதனால் தான் ஊர் தோறும் தெய்வமாகிறாள்.
Continue reading
  507 Hits
507 Hits

Kal Azhagar and Chithirai festival- a historical, spiritual view

மருத அழகரோ....
 
மதுரை மக்கள் அழகர் மலையைத் திருமாலின் கிடந்த கோலமாக வணங்குவர்  பரிபாடல்
 
அழகர் மலை  திருமால் இரும் சோலை - மிகத் தொன்மை மிக்க முல்லை நில விஷ்ணு ஸ்தலம்.
 
பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகியன இத்தலத்தைக் குறித்த தகவல்களைத் தரும்.
 
காட்டில் உள்ள ஆகாச நூபுர கங்கை சிறுவாணி நீரை விட இனியது.
 
இதன் அருகில் தான் முருகனின் மிகத் தொன்மை மிக்க பழமுதிர்சோலை ஆலயம் உள்ளது.
 
மலை  மலைக் காடு இவற்றில் உள்ள முருகன் , விஷ்ணு வழிபாட்டின் மிகத் தொன்மை மிக்க ஸ்தலங்கள் இவை.
 
ஆழ்வார்களில் எழுவர் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.
 
ஆதிகாலத்தில் க்ருஷ்ணனும் பலராமனும் மூலஸ்தானத்தில் இருந்துள்ளதை சங்கநூல்கள் பகரும்.
 
இன்று உள்ள மூலவர் பாண்டியர்களால் உருவானவர்.பரம ஸ்வாமி என்று பெயர்...மிக ப்ரம்மாண்ட மூலவர்.
 
தாயார்  சுந்தரவல்லி - அழகுநாச்சியார்.
ஆண்டாள் மிக மிக மிக ஆசைப்பட்ட கோலத்தில் அழகர் உள்ளார்.
ஆண்டாள் அமர்ந்திருக்கும் கோலத்தில் இக்கோயிலில் உள்ளது வெகு சிறப்பு.
ஆண்டாளின் கைவளைகள் அழகரின் தோள்களை இன்றும் அலங்கரிக்கின்றன.
பெரியாழ்வார் என்பது வயது வரை வாழ்ந்து அழகர் மலையில் ஜீவ சமாதி எய்தினார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் துலுகனிடம் இருந்து பாதுக்காப்பாக மூலஸ்தானத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தார்.
 
உத்சவரே அழகர் - கள் அழகர்.
கள் உண்டால் வரும் போதை போல், இவரைக் கண்டால் அழகில் மனம் போதை கொள்ளும்.
 
கள்வனாய் வந்து மனதைக் கொள்ளை கொள்வதால் கள் அழகர்.
 
ஆணிப்பொன் - சொக்கத் தங்கம் - அபராஜிதம் என்ற தூய பொன்னால் ஆன திவ்யத் திருமேனி தான் அழகர்.
 
சேர மன்னர்கள் சிலர் இவரைக் கொள்ளை கொள்ள பல முறை முயன்று தோற்றனர்.
 
திருமலை மன்னன் காலத்தில், அதாவது ஐயப்பன் வாழ்ந்த காலத்தில், இவரை மலையாள மாந்த்ரீகர்கள் கொள்ளை கொள்ள வரும் போது தேனி பெரிய கருப்பு அவர்களைக் கொன்று அழகரைக் காத்தார்.
 
சில காலம் அவரே கோபுர வாசலில் காவல் இருந்தார்.அவரது ஆன்ம சக்தியை கோபுர வாசல் கதவுகளில் இட்டு இன்றும் பூஜிப்பர்.இரவில் அழகரின் கோயில் சாவி கருப்பரின் படிகளில் வைக்கப்படும்.இவரே பதினெட்டாம் படிக் கருப்பர்.ஆடி அமாவாசை அன்று வாசல் திறக்கப்படும்.
 
கருப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கித் திருமலை நாயக்கர் அழகர் குதிரை மீது வீர வேல் தாங்கி வருவதைப் போல் கோலம் கொண்டு வைகையில் இறங்குவதைச் செய்தார்.அதே போல் மலையில் இருந்து கிளம்பும் அழகர் கள்ளர் கோலத்தில் தடி, கத்தி, வேல்கம்பு, பூமராங் ஏந்தி மதுரையுள் வரும் வேடத்தையும் கோயில் ஏற்படுத்தியது.
 
தொடரும்....

 

அழகர் வைகையில் இறங்கும் விழா மிகத் தொன்மை மிக்கது.
மண்டூக மஹரிஷிக்கு சாப விமோசனம் தர அவர் மதுரை வைகைக் கரைக்கு வருகிறார்.
கிணற்றுத் தவளை போல் உள்ள மனம் தான் மண்டூகம் [தவளை]
ப்ரபஞ்சத்தில் முழுமையான ஞானத்தை மனிதன் ஆன்மீகம், கல்வி மூலம் பெற வேண்டும், அனைத்திற்கும் மூலமான பரம் பொருளைத் தன்னுள் உணர்தல் வேண்டும், அதுவே மோட்சம்.
இத்தன்மை பெற மனிதனின் தீய எண்ணங்கள் கொள்ளை போக வேண்டும்.
அதற்கு பக்தி என்ற திருடன் வர வேண்டும்.
அதுவே அழகரின் குறியீடு.
நம் மனதில் உள்ள அறியாமையால் தீய எண்ணங்கள் தோன்றுவன.
அவற்றை அழகர் கொள்ளை கொள்கிறார்.
மண்டூக முனி சாப விமோசனம் பெறும் லீலை மதுரையில் தேனூர் வைகைப் பகுதியில் ஏற்படும்.அது சித்ரா பூர்ணிமைக்கு மறுநாள் நிகழும்.
அப்போது ஆன்மா கர்மாவில் இருந்து விடுபட்டதன் குறியீடாக ஒரு கொக்கு வானின் பறக்க விடப்படும்.
அப்போது கருட சேவையில் அழகர் வருவார்.
 
வைகையில் கால் வைக்கும் நிகழ்வு என்பது மனமாகிய எண்ண ஓட்டத்தில் இறை சிந்தனை கலப்பதன் குறியீடே.
 
மலையில் இருந்து வரும் அழகரை மதுரையின் எல்லையான மூன்று மாவடியில் இரவில் லட்சக்கணக்கில் அன்பர்கள் வரவேற்பதே ”எதிர் சேவை”.
 
அன்று இரவில் அவர் ப்ரசன்ன வேங்கடேஸ பெருமாள் கோயிலில் விடிய விடிய திவ்ய ஏகாந்த அபிஷேகம் காண்கிறார்.பூர்ணிமைத் திதி வரும் வேளை, தங்கக் குதிரையில் ஏறி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோதையில் மாலையை ஏற்கிறார் [revise Maargazhi syllabus]
 
அதன் பின் அவர் ஆற்றில் இறங்கி இரவு வரை கோடிக்கணக்கான அன்பர்களின் தீர்த்தவாரியை ஏற்கிறார்.தீர்த்தம் பீய்ச்சுவது கர்ம வினைகளைக் கழுவும் குறியீடு.
 
அதன்பின் இரவில் சேஷராய மண்டபத்தில்  அல்லோலக் களைப்பு தீர திவ்ய ஏகாந்த அபிஷேகம் காண்கிறார்.அதன் பின் சந்தனக் காப்பில் கோடை வெயில் தணிய இருப்பார்.மறுநாள் காலை ஆதிசேஷ வாஹனம் காண்பார்.
 
இரண்டாம் தினம் மாலை வண்டியூரில் மாரியம்மைக்கு அண்ணன் சீர் கொடுத்து விடிய விடிய உலகில் எங்கும் இல்லாத தசாவதாரக் கோலம் தருவார்.
 
மறுநாள் தேனூர் எழுந்தருளி கருட சேவையில் மண்டூக முனிக்கு அருளி மாலை மைசூர் உடையாரின் சந்தனப் பூப்பல்லத்தில் மதுரை உலா வந்து மறுநாள் மீண்டும் கள்ளர் கோலத்தில் மலைக்குத் திரும்புவார்.
 
மலையில் அவருக்கு மிக்க உற்சாக வரவேற்பு கொடுத்து, கண் த்ருஷ்டி கழித்து, ஆடி மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர்.ஆடி அமாவாசை வரை அவர் அங்கே தான் இருப்பர்.
 
விழா ஒலி மூதூர் மதுரை என்பது இதை வைத்தே.
தமிழகத்தின் மிகப் பெரிய விழா!
கோடிக் கணக்கில் தொன்மை மிக்க த்ராவிடத் திருமால் வழிபாட்டைச் செய்யும் விழா
 
அழகர் தீர்த்தவாரியில் கருப்பாகிடுவார்.
நூபுர கங்கையில் இருந்து லாரிகளில் தீர்த்தம் வந்து அபிஷேகம் ஆகும்.
கருப்பு சாமியின் உத்தரவு வந்தால் தான் மலையை விட்டு அழகர் வருவார்.
மீண்டும் மலைக்குத் திரும்பும் வரை AK47 பாதுகாப்பில் உலா வருவார்.
மதுரைக் கலெட்டர் மூன்று மாவடியில் வரவேற்று துப்பாக்கி சுட்டு மரியாதை தருவார்.
சிங்கம்பேட்டை ஜமீன் பரம்பரையினர் தான் அழகரை இன்றும் ஐந்து நாள் விழாவில் பாதுகாக்க வேண்டும்.
மிகத் தொன்மை மிக்க தொல் த்ராவிடப் பண்பாட்டு கலாச்சார விஷ்ணு வழிபாடு மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று உண்டு.
அழகர் வேடம் இட்டே வ்ரதம் பூண்டு அவருக்கு அன்பர் தீர்த்தம் பீய்ச்சுவர்.
Continue reading
  513 Hits
513 Hits

Chithrai Poornima - a special view

சித்திரைத் பூர்ணிமா
 
சித்திரை மாதம் பூர்ணிமை மிக உயர் நாள் என ஆதி காலம் முதல் தமிழ் மக்கள் கொண்டாடி வருவகிறார்கள்.
 
திதி - நிலாவின் ஒளி வளர்ச்சி
வளர்பிறை - மனிதனின் மனதில் நல்ல எண்ணங்கள் வளர்தல்
’தேய் பிறை - மனிதனின் மனதில் தீய எண்ணங்கள் தேய்தல்
 
அமாவாசை - புதிய நல்ல எண்ணத்தின் தோற்றம்
 
பூர்ணிமை - முழுமையான அறிவு, ஞானம், இன்பம்
 
சித்திரைப் பூர்ணிமையை ஆதிச் சோழகர்கள் பூம்புகாரின் இந்திர விழாவாகக் கொண்டாடினர்.அது 28 தினங்கள் நிகழ்ந்தன.
 
பூர்ணிமை நாள் அன்று மக்கள் கடலாடி மகிழ்வர்.
 
திருவாரூர்த் த்யாகராஜ ஸ்வாமி ஆதியில் பூம்புகாரில் தான் இருந்தார்.
அவரை இந்திரனும் தேவாதி தேவர்களும் வணங்கும் தினங்கள் இந்திர விழா.
அப்போது இந்ராதி தேவர்களுக்கு சோழகர்கள் போக சுகம், மழை வேண்டிப் பூஜை செய்வர்.
பூர்ணிமை தினத்தில் பூம்புகார்க் கடலில் இந்திரனின் வஜ்ர ஆயுதமும் சிவனின் த்ரிசூல ஆயுதமும் நீராட்டப் படும்.
 
இதே நாளில் மதுரையில் சொக்கரை இந்திரனும் ஐராவதமும் பூஜித்தன. [revise Thiruvilaiyaadal]
 
பாவ புண்ணியச் செயல்களைக் கணக்கிடும் கால சக்தியே எமனின் கணக்குப்பிள்ளை சித்ர குப்தன்.இவன் கோயில் காஞ்சியில் உள்ளது.சித்திரைப் பூர்ணிமை தினத்தில் நம் செயல்களை எண்ணிப் பார்த்திடுக.
 
பூர்ணிமை நிலா பராசக்தியின் முழு சக்தி கொண்டது.
அன்று மாலை சந்த்ரோதயம் ஆனவுடன் தீபம் வைத்து தேவியை வழிபடுவது உயர்ந்தது.
நிலவுக்கு நிவேதம் செய்து நன்றி கூறுவது மரபு.
Continue reading
  501 Hits
501 Hits

Pallipadai koils - sacred graves of Chola kings

பள்ளிப்படைக் கோயில்கள்
 
அரசர்களின் கல்லறை - சமாதிகள் பள்ளிப்படை ஆகும்.
அரசன் அல்லது அரசியில் உடலை எரித்தோ புதைத்தோ அதன் மீது எழுப்பப் படும் நினைவுச் சின்னம் இதுவாகும்.
எகிப்து தேசத்தில் அரசன் அரசியில் உடலைப் பாடம் செய்து பிரமிடுகளில் பாதுகாத்து வணங்கும் வழக்கம் விளங்கிற்று.
ஆனால் பாரத தேசத்தின் பண்பாட்டில் அது இல்லை.
இறையருளால் பெற்ற உடல் இறந்த பின் அது இயற்கையுடன் பஞ்சபூதங்களுடன் கலக்கிறது.
அவ்வுடலின் தேவை முடிகிறது.
அது மண்ணுக்குச் சொந்தம்.
ஆனால் அவ்வுடலைக் கொண்டு வாழ்ந்த அரசன் அல்லது அரசியின் ஆன்மா சமூகத்தின் நலனுக்கு எனப் பாடுபட்டதாயின் அது மரியாதையுடன் வணங்கப்படும்.
ஆனால் அவ்வுடல் புதையுண்ட இடத்திலோ அஸ்தி [உடல் சாம்பல்] வைக்கப்பட்ட இடத்திலோ அவ்வரசன் அரசியின் பெயரால் சிறு கோயில் எழுப்பப்பட்டு அதன் மூலம் பூஜைகளும் ஊர் பொது நலக் காரியங்களும் நிகழும்.
கி.மு 4ல் புத்தர் இறந்து அவரது உடல் எரியூட்டப் பட்ட போது அதன் சாம்பலை உலகின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று அதன் மீது புத்த விஹாரம் எழுப்பினர்.
இன்றும் இலங்கைக் கண்டியில் உள்ள புத்த விராஹத்தில் அவரது ஒரு பல் உள்ளது.
அரசன் அரசி மட்டும் அல்ல, உயர்ந்த ஆன்மீகப் பெரியோரின் மஹானின் சித்தரின் கல்லறைகளும் இவ்வாறு மதிக்கப் படுகின்றன.
தேசத்தில் உள்ள பல்வேறு மஹான்களின் ஜீவ சமாதிகள் இத்தகைய மரியாதையைப் பெறும்.
தனி மனிதர் வாழ்விலும் இப்பண்பாடு உண்டு.
 
உதாரணம்: மந்த்ராலயம் - ஆந்திரா - ஸ்ரீராகவேந்திரரின் சமாதி
 
சென்னை - திருவான்மியூர் - ஸ்ரீமத் பாம்பன் சித்தரின் சமாதி
 
சென்னை - திருவொற்றியூர் - பட்டிணத்து அடிகள் சித்தர் சமாதி
 
காஞ்சிபுரம் - சங்கர மடம் - மஹாபெரியவர் சமாதி
 
நாகூர் - தர்கா
 
சென்னை - பரங்கி மலை - புனித தாமஸ் கல்லறை
 
இஸ்லாமில் தர்காக்கள் மஹான்களின் சமாதிகளே.
கிறிஸ்துவத்திலும் ஏசுவின் கல்லறை மிக்க மரியாதை பெறுகிறது.
 
சோழமன்னர்கள் அரசிகளின் அத்தகைய சமாதிகள் கொண்ட கோயில்கள் பல உள்ளன.
அவற்றுள் மிகச் சிறந்த ராஜராஜ சோழன் 1 சமாதி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள பழையாறைப் பக்தி உடையாளூரில் உள்ளது.
 
உயர்ந்த பயனுள்ள வாழ்வை வாழ்வோரை என்றென்றும் மக்கள் மதிப்பர் என்பதே பள்ளிப்படைக் கோயில்கள் உணர்த்தும்.
Continue reading
  459 Hits
459 Hits

Mahabalipuram ratham temples for Pidari

மாமல்லபுரம் பிடாரி ரதங்கள்
 
மாமல்லபுரத்தில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே பாலத்தின் மீது ஏறி, புதுச்சேரி போகும் போது இடது பக்கம் பார்த்தால் கீழே பொன் நிறத்தில் ஒரு கோயிலும் அதை அடுத்த் இரு பல்லவ ரதங்களும் தெரியும்.
 
இவ்விடம் வலையான் - வலை வீசிவோர் தம் குட்டை அல்ல்லது வலியான் குட்டை - வலிமையான மாமல்லன் காளிக்காகக் கோயில் அருகில் ஏற்படுத்திய குட்டை என்ற பகுதி.
இவ்விடம் மழைக்காலத்தில் மிக்க அழகுடன் நீர் நிறைந்து அல்லை மலர்கள் பூத்துக் குலுங்கும்.
பல உயரமான கற்பாறைகள் பல்லவக் கலைஞர்களால் தொடப்படாத நிலை ஏங்கி ‘னிற்பதைக் கண்க.
அதிகம் யாரும் போகாத இடம்.
விஷயம் தெரிந்தவரே போகும் இடம்.
அமைதியுடன் பல்லவர்தம் காலத்தை முன்வைக்கும் இடம்.
 
இக்கோயில் தான் மாமல்லபுரத்தின் அதிதேவதை - காவல் தெய்வமான கருப்புகாள் என்ற காளி - கொற்றவை. இன்று இக்காளில் கரு காத்த அம்மன் எனப்படுகிறாள். மகிஷாசுரனை அழைத்த துர்கை என்று ஸ்தல புராணம் கூறும்.
 
மூலஸ்தானத்துச் சிலை ஆதிபல்லவர் காலம் தொட்டு உள்ள சிலை.
கோயில் காலம் காலமாகப் புதுப்பிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் இவளுக்கு மிகவும் உயர் விழாவை மக்கள் எடுப்பர்.
 
இவளைக் கோயிலில் இருத்தவே மாமல்லன் பிடாரி ரதம் [ஊரின் பீட தாரி - பிடாரி - ஊரின் ஆதார அதி தேவதை] எனப்படும் அழகிய ரதக்கோயிலை உருவாக்க முனைகிறான்.
 
ஆனால் இரு ரதக்கோயில்கள் அருகருகே இயற்கையாகவே ஏற்பட்ட ப்ரம்மாண்ட பாறைகளில் வெட்டப்பட்டதைக் காண்க.
 
ஒரு பெரிய பாறை மேலிருந்து கீழ் நோக்கிச் செதுக்கப்படும் காட்சியை இவை கண்முன் கொண்டு வருவன.
 
கட்டுமான அடித்தலம் இன்றி இயற்கையிலேயே பாறைகள் பூமியுள் ஊன்றி உள்ளதைக் காண்க.
 
ஆனால் இரு ரதக்கோயில்களும் முடிக்கப் பெறவில்லை.
 
ரதம் - தேர் போல் அமைவதால் இவை ரதக்கோயில்கள்.
 
முதல் நரசிம்மன் மாமல்லனின் பணிகள் இவை.
 
ஒரு கோயில் கருப்புகாளுக்கும் மற்றொரு கோயில் காளிக்கும் அமைக்கப் பெற்று இருக்க வேண்டும்.
 
இரண்டாம் கோயில் குடைந்து கருவறை அமையப்பெற்று உள்ளது.
 
அதன் விமானத்தில் கோபுரம் தாங்கி வீரர்கள் அமைகின்றனர்.
 
இவற்றுக்குச் செல்லும் முன் பெரிய பாறையில் வினாயகர் குடையப்பட்டு வடிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு முன் ஊரினுள் உள்ள ஒரு குடைவரைக் கோயிலின் லிங்கத்தின் கீழ்ப்பாகம் பெயர்த்து இங்கு போடப்பட்டதைக் காண்க.
 
இவரை மாமல்லன் சாளுக்கியப் போருக்குப் பின் உருவாக்கினான்.
 
இவரை மக்கள் வணங்குகின்றனர்.
 
பிடாரி ரதங்களைச் சுற்றி உள்ள பெரிய பாறைகள் செதுக்கப்பட்டு இருந்தால்?
 
ஆஹா ....கற்பனை செய்க.....
Continue reading
  571 Hits
571 Hits

Hospitals in Chola kingdom

சோழர் ஆட்சியில் மருத்துவமனைகள்...கி.பி 10 - 11ஆம் நூற்றாண்டுகளில்....
 
ராஜராஜ சோழன் காலத்தில் தஞ்சை போன்ற நகரங்களில் மருத்துவமனைகள் செயல்பட்டன.
 
இவை ஆதுல சாலை எனப்படும்.
 
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இங்கே தரப்பட்டன.
 
அவை அரசர்களின் நினைவில் இலவசமாகவே செயல்பட்டன.
 
அவற்றின் செயல்பாட்டுக்கு அரசர்களும் உயர் அதிகாரிகளும் நிதி உதவி செய்தனர்.மருத்துவச்சாலைகள் பராமரிப்புக்கு நிதிக்காக தரப்பட்ட வயல்கள் ”மருத்துவக்காணி” எனப்பட்டன.
 
தஞ்சையில் குந்தவை [ராஜராஜனின் அக்காள்] ஏற்படுத்திய சுந்தர சோழ விண்ணகர் [அப்பாவின் பெயரால்]ஆதுல சாலை சிறப்புடன் விளங்கிற்று.
 
ஆண்டுக்கு ஒரு முறை அதில் உள்ள மருந்துகளின் பட்டியல், அளவு அரசனிடம் காட்டப்பட்டன.
 
ஸ்ரீரங்கம், மதுராந்தகம் அருகில் திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவடுதுறை, பெருவல்லூர்,காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் சோழர்தம் மருத்துவச்சாலைகள் இருந்தன.
 
விக்ரம சோழன் திருவாவடுதுறையிலும், இரண்டாம் குலோத்துங்கன் விழுப்புரம் பெருவல்லூரிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தனர்.அதில் தங்கிப் பயிலும் மாணாக்கருக்கு இலவசக் கல்வி, உறைவிடம், சோறு இட்டனர்.
 
சரக சம்ஹிதா
அஷ்டாங்க க்ருதம் ஆகிய ஆயுர்வேத நூல்கள் கற்பிக்கப்பட்டன.
 
பொது மருத்துவமும் அறுவை சிகிச்சையும் கையாளப்பட்டன.”சல்லிய க்ரியை’ என்று அறுவை சிகிச்சை அழைக்கப்பட்டது.அதற்கு உதவும் ஆண் செவிலியர் ”நாவிதர்” எனப்படுவர்.
 
குழந்தைப் பேற்றுக்கு உதவ பெண்களே பயிற்சிகள் மேற்கொண்டு ”மருத்துவிச்சிகள்” என்று அழைக்கப்பட்தனர்.
 
பெண் செவிலியர் ”மருந்து அடும் பெண்டிர்” எனப்பட்டனர்.
 
மருத்துவர் கூறும் மருந்துக்களை ஓலையில் எழுதிடத் தனி ஆட்கள் இருந்தனர்.
 
கை நாடி மருத்துவம் கையாளப்பட்டது. 
 
மாத ஊதியம்:
பொது மருத்துவர் - 90 கலம் நெல், 80 காசுகள்
 
அறுவை சிகிச்சை நிபுனர் - 30 கலம் நெல், 2 காசுகள்
 
அறுவை சிகிச்சைக்கு உதவும் நாவிதர் - 15 கலம்
 
பெண் செவிலி - 30 கலம் நெல், 1 காசு
 
அனாதைகளுக்கு மருத்துவம்....
விக்ரம சோழனின் ஆட்சில் அவனது உயர் அதிகாரி தேவர் உடையான் மதுக்கினியான் ஆன விராட ராசன் என்பவன் திருப்புகழூரில் அனாதைகளுக்கு தர்மாக மருத்துவமனை ஏற்படுத்தினான்.அதற்கு அவனே தன் வயல்களை வழங்கினான்.
Continue reading
  563 Hits
563 Hits

Cholan Kochenganan teach about karma

சோழன் கோச்செங்கணான்.
 
இவன் உறையூரில் இருந்து ஆட்சி செய்தவன்.
அறுபத்துமூன்று சைவ நாயன்மார்களில் ஒருவன்.
சோழ மன்னர்களுக்கு ஆன்மீக வழியில் செல்ல வழிகாட்டியவன்.
உயர்ந்த சிவ பக்தன்.
ஆனால் அனைத்து மதங்களையும் மதித்தவன்.
 
78 மாடக்கோயில்கள் அமைத்தவன்.
அவை இன்றும் உள்ளன.
அவற்றுள் எட்டு விஷ்ணுவுக்கு உரியன, மீதி சிவாலயங்கள்.
அவற்றுள் மிக ப்ரசித்தம் - திருவானைக்கா மூலஸ்தானம்.
பூம்புகார் - பல்லவனீச்சரம்
கும்பகோணம் - திருநல்லூர்
 
மிக உயர்ந்த கர்ப்ப கால மகப்பேற்றுக்கு இவனும் உதாரணம்.
இவன் தாய் கமலவதி, தந்தை சுபதேவச் சோழன்.
சிதம்பரம் கோயிலில் 41 நாட்கள் மாவிரதம் இருந்து இவனை ஈன்றனர் தம்பதிகள்.
அவன் கர்ப்பத்தில் இருக்கும் போது சதா அவன் தாய், ”என் பிள்ளை தில்லையில் கூத்தாடும் ஈசனுக்குப் பொன் கூரை வேய்வான், தேச நலனுக்காக வாழும் தில்லை வாழ் தீக்ஷிதர்களுக்கு இல்லம் கட்டுவான்” என்று கூறுவது வழக்கம்.
 
அவன் பிறக்கும் நேரம் சரியில்லை என்று சோதிடர் கூற, 24 நிமிடங்கள் அவனை வலியுடன் சுமந்து ஈன்றாள் கமலவதி.
 
அதனால் ரத்தம் ஏறிக் கண்கள் சிவக்கக் குழந்தை இருக்கக் கண்டு, ”செங்கணான்” என்று அழைத்து அவள் இறந்தாள்.
 
அவனும் வளர்ந்து மிக உயர்ந்த வீரனாய், சேறன் கணைக்கால் இரும்பொறையை வெற்றி கண்டு சிறையில் இட்டான்.அதன் பின் சங்கப்புலவர் பொய்கையாரின் அறிவுரை கேட்டு அவனை விடுவித்தான்.
 
வெண்ணி, அழுந்தூர் ஆகிய ஊர்களில் பாண்டியனை வென்றான்.
 
இவற்றின் மூலம் பெற்ற பொருளைக் கொண்டு முதன் முதலில் தில்லையில் சிற்றம்பலத்தின் கூரையைப் பொன்னால் வேய்ந்தான்.அதன்பின் தீக்ஷிதர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தான்.
 
புறநானூறு, தேவாரம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் இவனைப் பதிவு செய்கின்றன.
 
பூர்வ ஜென்மத்தில் இவன் சிலந்தியாய், திருவானைக்கா கோயிலில் சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாவண்ணம் சிலந்தி வலை பின்னிக் காத்தான்.ஒரு மனித ஜென்மம் கொண்டு ஈசனுக்குக் கோயில்கள் எழுப்ப வேண்டும் என்று சதா அவன் ஆன்மா தன்னலம் அற்று வேண்டிய பலனாய் அவன் மன்னன் ஆனான்.இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ்க்கை முன் ஜென்மத்தின் சங்கல்பமே, அப்போது அடுத்த பிறவி? யோசியுங்கள்.....
Continue reading
  450 Hits
450 Hits

Is Mahabalipuram the Correct Name?

Mamallapuram is variously called Neerper Mallai, Kadal Mallai, Mamallai, Mamallapuram, Mallapattinam, Mamalla Nagaram, Mavelipuram and Jananathapuram. Nowhere are there inscriptions referring to it as Mahabalipuram.

But today people mostly refer to it as Mahabalipuram.

My students asked me the reason for this.

Mahabali conducted a yagna to fulfil his greed to be the emperor of the entire world. Lord Vishnu as Vamana showed him his place and humbled him.

Vamana assumes the Trivikrama form, which is depicted beautifully in the Varaha cave.

Continue reading
  453 Hits
453 Hits

Who erected Mahabalipuram shore temple

கடற்கரைக் கோயிலை எழுப்பிய பல்லவன் யார்?
 
மாமல்லபுரத்தில் மிக அழகான ஒரு கோயில் கலைப் பொக்கிஷம் கடற்கரைக் கோயில்கள்.
இக்கோயில்கள் பல்லவ மன்னர்களின் உயர் கலை ஞானத்தின் குறியீடு.
சைவ வைணவ பேதம் இல்லாத உண்மையான ஆன்மீக பக்தி சமூஹத்தின் அடையாளம்
இக்கோயில் ராஜ சிம்ம பல்லவன் என்ற இரண்டாம் நரசிம்ம வர்மனால் எழுப்பப் பட்டது என்று தொல்லியல் குறிப்புகள் கூறுவது தவறு.
 
இதை ஆரம்பித்து வைத்தவன் முதலாம் நரசிம்ம வர்மனான மாமல்லனே
இக்கோயில் மூன்று கருவறைகளைக் கொண்டது.
மேற்கு பார்த்தக் கருவறையுள் சிவபெருமான் சோமாஸ்கந்த வடிவில் உள்ளார்.
கிழக்குப் பார்த்தக் கருவையுள் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார்.
நட்டுவில் உள்ள கிழக்குப் பார்த்தக் கருவறையுள் தலசயனப் பெருமாள் பள்ளி கொண்டு உள்ளார்.
 
இப்படி ஒரு அமைப்பை வேறு எங்குமே காண முடியாது.
 
சரி! மாமல்லன் இக்கோயிலை ஏற்படுத்தியதன் முக்கிய சான்று இதன் ரத அமைப்பு.
கருவறையின் மீதுள்ள விமான அமைப்பை மாமல்லன் புகுத்தினான்.
மேலும் மேற்குக் கருவறையின் நுழைவாயில் முகப்பில் கணபதி உள்ளார்.உற்று கவனித்திடுக.
கணபதி வழிபாட்டைத் தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் மாமல்லனின் தளபதி பரஞ்சோதி.
வாதாபிப் போர் முடிந்ததும் அவ்வூர்க் கோட்டையில் இருந்த வாதாபி வினாயகரைத் தன் ஊருக்கு எடுத்து வந்தார். [திருச்செங்காட்டங்குடி]
 
அப்போது மாமல்லனும் கணபதியை வடித்துள்ளான்.
 
மேலும் மாமல்லன் காலத்தில் தான் பூதத்தாழ்வார் வாழ்ந்தார்.
பூதத்தாழ்வார் மாமல்லபுரம் பெருமாளைப் பாடுகிறார்.
அதன் பின் மூன்றாம் நந்தி வர்மன் காலத்தில் திருமங்கை ஆழ்வார் அதே பெருமாளைப் பாடுகிறார்.
 
மாமல்லபுர திவ்ய தேசப் பெருமாள் இன்றுள்ள ஊரின் நடுவில் உள்ள தலசயனப் பெருமாள் அல்ல.அவர் நாயக்க மன்னர்கள் காலத்தில் 500 ஆண்டுகட்கு முன் அமைக்கப்பட்டவர்.
 
மாமல்லன் காலத்தில் தலசயனப் பெருமாள் கடற்கரைக் கோயிலில் உள்ள பெருமாளே!
அவரையே பூதத்தாழ்வார் பாடினார்.
திருமங்கை மன்னனும் பாடினார்.
”சுடுகாட்டில் ஆடும் சிவனொடு விஷ்ணுவும் சேர்ந்து ஒன்றாக விளங்கும் கடல் மல்லை” என்று கடற்கரைக் கோயிலை அவர் பதிவு செய்கிறார்.
 
பூதத்தாழ்வார் மாமல்லன் எழுப்பிய கடற்கரைக் கோயிலையே பதிவாக்கினார்.
எனவே இக்கோயில் மாமல்லனால் உருவாக்கப்பட்டது.
இதைக் கலவைக் காரை, சுதை மூலம் விரிவு செய்தவன் ராஜசிம்மன் தான்.
வெளிச்சுற்று, கோயில் நுழை வாயில், நந்திகள் என அலங்காரம் செய்தவன் ராஜசிம்மனே.
 
இக்கோயில் துறைமுகத்துக்கு மிக அருகில் அமைகிறது.
 
எனவே மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மாமல்லனின் கலை வடிவம்.அதை விரிவாக்கியவன் ராஜசிம்மன்.
Continue reading
  379 Hits
379 Hits

Temple architecture - great contribution to Tamils by Pallavas

பல்லவர்கள் அறிமுகம் செய்த கோயில் கட்டிடக் கலை
 
பல்லவர்களுக்கு முன் தமிழகத்துக் கோயில்கள் எப்படி இருந்தன?
 
மண் சுவர்
சுடு மண் செங்கற்கள்
மரங்கள்
 
கொண்டு எழுப்பப்பட்ட கோயில்கள் இருந்தன.
 
அவற்றிலும் சிலைகள் [சுதை - காரைக் கலவை] இருந்தன.
 
ஆனால் அவை மனிதனாலும் இயற்கையாலும் அடிக்கடி சீர் கெட்டன.
 
இக்கட்டத்தில் சமணர்கள் அதிகம் மலைகளைக் குடைந்து அதில் தம் பள்ளிகளை நிறுவினர்.
 
மஹாராஷ்டாவில் அஜந்தா எலிபந்தா குகைக்கோயில்கள் ப்ரபலம் ஆயின.
 
மகேந்திர வர்மன் 1 காலத்தில் அவன் சமணர்தம் குகைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் போல் வரைகளை [மலைகளை] செதுக்கியும் குடைந்தும் குகைக் கோயில்கள் ஏற்படுத்தினான்.
 
மலையின் அகலம் நீளம் அடர்த்திக்கு ஏற்ப மண்டபமும் அதில் தூண்களும் கருவறையும் உருவாக்கினான்.கருவறைக்கு வாசலில் இரு புறமும் த்வார பாலகர்கள் [வாயில் காவலர்கள்] சிற்பங்கள், எளிமையான அலங்காரங்கள் மகேந்திர வர்ம பல்லவனால் கொண்டுவரப்பட்ட புதுமை!
 
சிவபெருமானுக்கு லிங்க வடிவம், சிவன் பார்வதி முருகன் கூடிய சோமாஸ்கந்த வடிவம், நடராஜ வடிவம் ஆகியன மகேந்திர வர்மனால் கொண்டு வரப்பட்டன.
 
அவற்றில் அழகிய இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டப் பட்ட ஓவியங்களை அவன் ஏற்படுத்தினான்.
 
அவன் மகன் நரசிம்ம வர்ம பல்லவன் 1 என்ன செய்தான்?
குகைக் கோயில்களை முழுமையான கோயிலாக மாற்றினான்.
கருவறைக்கு மேல் விமானம் அமைத்தான்.
கோயில் பார்க்க, அழகிய தேர் போல் - ரதக் கோயில் காட்சி அளிக்கும் படிச் செய்தான்.
இறைவனின் பல புராண இதிகாச வரலாற்றுத் தகவல்களை அப்படியே சிற்பங்களாகக் கோயில் சுவர்களில் ஏற்படுத்தினான்.
மாமல்லபுர ரதக் கோயில்கள், கடற்கரைக் கோயில்கள்.
 
அதன்பின் இரண்டாம் நரசிம்ம வர்மனான ராஜசிம்ம பல்லவன், தனி கருங்கற்கள் கொண்டு முழுமையாய் ப்ரம்மாண்டக் கோயிலைக் கட்டினான்.இன்று காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாச நாதர் கோயில் இவனால் ஏற்பட்டதே.
 
இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, சோழரும் பாண்டியரும் மேற்கொண்டு பல்வேறு புதுமைகளைக் கோயில் கட்டிடக் கலையில் புகுத்தினர்.
Continue reading
  371 Hits
371 Hits

Narasimha Pallavan 1

நரசிம்ம வர்ம பல்லவன் 1 - கி.பி 630 - 668
 
உலகம் புகழும் மாமல்லபுரத்தில் சிற்பங்களை உருவாக்கிய அரசன்.
பல்லவ மன்னர்களில் தலைசிறந்தவன்.
இவன் தந்தை மகேந்திர வர்ம பல்லவன்.
பெரிய கற்கள், பாறைகள், மலைகள் ஆகியவற்றைக் குடைந்து கோயில்களை உருவாக்கும் புதிய கோயில் கட்டிடக் கலையை உருவாக்கியவன் மகேந்திரன்.அதைத் தொடர்ந்து அக்கலையை வளர்த்து மாமல்லபுர சிற்பக் களஞ்சியத்தை உருவாக்கியவன் நரசிம்மன்.
 
பல்லவ தேசத்தின் தலைநகரம் காஞ்சிபுரம்.
துறைமுக நகரம் - மாமல்லபுரம்.
நீர்பெயற்று என்ற அவ்வூரை ”மல்லை” - மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்தான் இம்மன்னன்.
 
மல்லன் - யானைப் படைத் தலைவன்
மல்யுத்தத்தில் சிறந்தவன்
 
மாமல்லபுரம் ”மல்லை’ - ”கடல்மல்லை” என்று ஆழ்வார்களால் போற்றப்படுகிறது.
கடல் வாணிபம் மூலம் பொருட்கள் மலிந்த துறைமுக நகரம் மல்லை.
 
பூதத்தாழ்வார் இவன் எழுப்பிய கடற்கரைக் கோயிலில் உள்ள தலசயனப் பெருமாளை ஒரே பாடலால் புகழ்கிறார்.திருமழிசை ஆழ்வார், பொய்கை ஆழ்வார் மற்றும் பேயாழ்வார் இம்மன்னன் காலத்தவரே.
 
அக்கோயில் பெருமாளைப் பின்னர் திருமங்கை ஆழ்வார் பல பாடல்களால் புகழ்கிறார்.
 
அப்பரும் திருஞானசம்பந்தரும் இவன் காலத்தில் தான் ஊர் ஊராகச் சென்று சைவத்தை வளர்த்தனர்.அதன் மூலம் கோயில் கலைகள் ஆன்மீகத்துடன் வளர்ந்தன.
 
நரசிம்மன் காலத்தில் தான் சைனா யாத்ரீகர் யுவான் ஸ்வாங் பல்லவ தேசம் வந்தார்.
கி.பி 642. [தனிப் பாடம்]
 
இவன் காலத்தில் தான் ஆதிசங்கரர் காஞ்சியில் தன் அத்வைத காமகோடி மடத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு ஆன்மீகத்தையும் சமூஹ நலத்தையும் போதித்தார்.
 
சிவகாமியின் சபதம் உருவாகக் காரணம்...
சாளுக்கிய மன்னன் [கர்நாடகா, மஹாராஷ்ட்ரா பகுதிகள்] இரண்டாம் புலிகேசியை இவன் மணிமங்கலம் என்ற ஊரில் கொன்றான்.அத்துடன் அவன் தேசம் சென்றான்.தன் தளபதி - நண்பன் பரஞ்சோதியின் துணையுடன் அத்தேசத்தை வென்றான்.வாதாபி என்ற தலை நகரத்தில் வெற்றிக் கல்தூணை நிறுவினான். இதனால் மக்கள் இவனை ”வாதாபி கொண்ட நரசிம்மன்” என்றனர்.கி.பி 642ல் வாதாபி போர் நிகழ்ந்தது.இப்போரை அடிப்படையாகக் கொண்டே எழுத்தாளர் கல்கி மிக ப்ரசித்திபெற்ற ”சிவகாமியின் சபதம்” வரலாற்று நாவலை எழுதினார்.தமிழர் ஒவ்வொருவரும் இதைப் படிக்க வேண்டும்.13 ஆண்டுகள் வாதாபி அரசன் இல்லாமல் சீரழிந்தது.
இதை மையப்படுத்துவது சிவகாமியின் சபதம் நாவலில் முக்கியப் பகுதி ஆகும்.
 
 
மனம் மாறிய பரஞ்சோதி...
போரில் கொடுமைகளைக் கண்டு மனம் கலங்கிய பரஞ்சோதி அதற்கு மேல் பல்லவ ராணுவத் தளபதியாக இருக்க இஷ்டம் இல்லாமல் பதவி விலகினான்.அப்பர் பெருமான் திருஞானசம்பந்த பெருமான் ஆகியோரின் வழிகாட்டலில் தன் ஊரில் உழவு செய்து, அதன் மூலம் வரும் பொருள் கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் தினமும் செய்தான்.மேலும் பல்லவன் தந்த பொருள் கொண்டு தன் ஊரின் கணபதீச்சரம் என்ற அழகிய சிவன் கோயில் கட்டி அதன் மூலம் பல சமூஹ நலன்களை மேற்கொண்டான்.வாதாபிக் கோட்டை வாசலில் இருந்த வினாயகரின் சிலையை எடுத்துக் கொண்டு வந்து அக்கோயிலில் ”வாதாபி கணபதி” என சன்னிதி எழுப்பினான்.
அவ்வூர் தான் திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி.
 
இவர் தன் மனைவி வெண்காட்டு நங்கை.
மகன் சீராளன்.
வடதேசத்தில் இருந்து, தன் ஊர் வந்த அகோர முனிவருக்குத் தன் மகனையே தர முன் வந்தான்.
இவரது உயர் குணங்கள் ஆகியவற்றை சம்பந்தர் தேவாரத்தில் போற்றுகிறார்.
 
இலங்கையை வென்ற நரசிம்மன்...
இவன் காலத்தில் தான் இலங்கை அரசன் மானவம்மா என்பவன் தன் பகைவரிடம் இருந்து தப்பிக் காஞ்சிபுரத்துக்கு மாமல்லபுரம் வழிவந்தான்.நரசிம்மனை அண்டி நட்புக் கொண்டான்.வாதாபிப் போரில் உதவினான்.அதன் பின் பல்லவ ராணுவத்தின் துணையுடன் இலங்கையில் தன் பகைவரை வென்று அரசன் ஆனான்.
 
நரசிம்மனின் நண்பர்...
வாதாபிப் போரில் கொடும்பாளூர் அரசன் பரம துர்க மர்த்தனன் [பரம எதிரிகளை அழித்தவன்], இவன் மகன் சமராபி ராமன் ஆகியோரும் நரசிம்மனுக்கு நண்பர்களாகி உதவினன்.அப்புகழைப் பகிர்ந்தனர்.
 
நரசிம்மன் காலத்தில் தான் பாண்டிய நாட்டை நின்ற சீர் நெடுமாறன் ஆண்டான்.அவன் திருஞான சம்பந்தரால் சைவ மதத்திற்கு மாறினான்.பல்லவரின் கீழ் அடங்கி இருந்த சோழ ராஜாவின் மகள் மங்கையர்க்கரசி என்ற பெண்ணை அவன் மணந்தான்.
 
அதன் பின்னும் நரசிம்மனுக்கு அத்தேசத்தின் பகை இருந்து கொண்டே இருந்தது.பல முறை போர்கள் ஏற்பட்டன.குறிப்பாக இன்றைய ஆந்திரா பகுதியில் பரவி இருந்த தன் பல்லவ தேசத்தின் பகுதிகளைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
ஆனால் இவற்றின் இடையில் மாமல்லபுர சிற்ப வேலைகளை மிக கவனமாகக் கையாண்டான்.
 
சமணமும் புத்தமும் இவன் காலத்தில் மெதுவாக வலிமை குன்றின.மக்கள் சைவத்திலும் வைணவத்திலும் ஈடுபட்டனர்.
 
சமஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகள் நரசிம்மன் காலத்தில் சமூஹத்தில் நிலவின.
 
அவற்றில் உள்ள கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
 
நரசிம்ம வர்மனைப் புகழும் குறிப்புகள்:
கூரம் [காஞ்சிக்கு அருகில் உள்ள கிராமம்] செப்பேடு...
”நரசிம்மன் சிம்மவிஷ்ணுவின் பேரன்
கிழக்கு மலைகளில் சூரிய சந்திரன் தோன்றியது போல் பல்லவ குலத்தில் தோன்றினான்.
யாருக்கும் அடிபணியாத மன்னர்களின் க்ரீடங்களில் மின்னும் நவமணிகல் போல் புகழால் மின்னுபவன்..,
பகைவர்கள் என்ற யானைக் கூடத்துக்கு வீரம் மிக்க சிங்கம் போன்றவன்
களப்பிறர், சோழர், சேரர் ஆகியோரை வென்றவன்
ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீர்ய அர்சுனன் போன்றவன்
பரியளம், சூரமாரம், மணிமங்கலப் போர்களில் தோற்ற இரண்டாம் புலிகேசியில் முதுகில் ”வெற்றி” என்ற சொல்லை எழுதினான்.
அகஸ்தியர் வினாயகரின் அருள் கொண்டு வாதாபி அசுரனை வென்றது போல், வாதாபி நகரில் பகைவரை இவன் வென்றான்.”
 
உதயேந்திரம் ஊர் செப்பேடு...,
”மகேந்திரனின் மகன் நரசிம்மன் அகஸ்தியர் வாதாபி அரக்கனை வென்றது போல் புலிக்கேசியின் வாதாபி நகரை வென்றான்”
 
வேலூர்ப்பாளையம் செப்பேடு..,
”விஷ்ணுவைப் போல் பெருமை மிக்க நரசிம்ம பல்லவன் வாதாபியை வென்று, வெற்றிக் கல் தூணை நட்டினான்”
 
காசாக்குடி செப்பேடு..,
”மகேந்திரனின் மகன் நரசிம்மன் ஸ்ரீராமன் போல் இலங்கையை வெற்றி கொண்டான், தன் பகைவர்களுக்கு தூமகேதுவைப் போல் விளங்கினான்.[தூமகேது - வால்நட்சத்திரம்]
 
வாதாபி வெற்றித் தூண்
இன்று அத்தூண் உடைந்து ஒரு பகுதி தான் உள்ளது.
அதில் ”மாமல்லன்” - ”க்ஷிதி புஜாங்கரேஸர பல்லவ” - ”நரசிம்மவிஷ்ணு” ஆகிய பெயர்கள் எஞ்சியுள்ளன.
 
மாமல்லபுரம் த்ரிமூர்த்தி குகைக் கோயில் - வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரசர் என்ற அடை மொழி உள்ளது.
 
மாமல்லபுரம் ஐந்து ரதங்களில் தர்மராஜர் ரதத்தில் - அத்யந்த காம பல்லவேச்சரம் என்ற அக்கோயில் பற்றி மாமல்லபுரம் பகுதியில் அறிக. அக்கோயிலில் அவன் சிற்பமும் உள்ளது, பின்வரும் அவனது பட்டப்பெயர்கள் உள்ளன.
 
”ஸ்ரீநரசிம்ம” 
ப்ருவீசார - உலகத்தின் புகழின் சாரமானவன்
ஸ்ரீபர - மிகப் பெரும் செல்வன்
புவன பாஜன - உலகை ஆளும் உரிமை உடையவன்
த்ரைலோக்ய மர்த்தன - மூவுலகையும் வென்றவன்
விதி - பகைவர்களின் கெட்ட விதி
அனேகோபாய - பல வழிகளில் பயனுள்ள உதவிகள் செய்பவன்
மதன அபிமான - மன்மதனும் மதிக்கும் அழகன்
அப்ரதி ஹத சாஸன - மிக உயர்ந்த சமூஹப் பலன் உள்ள அரச ஆணைகள் இடுபவன்
நயன மனோஹரன் - கண்களுக்கு அழகன்
வாம - உயர்ந்த அழகன்
அனுபம - ஈடு இணை இல்லாதவன்
நயாங்குர - அறிவாளி
லலித - அழகுடன் பண்பானவன்
சர்வதோ பத்ர - மிக ஒழுக்கமானவன்
ஸ்ரீநிதி - சகல செல்வன்
நிருத்ர - ஒப்பற்றவன்
விப்ராந்த - மனதில் உற்சாகம் கொண்டவன்
சத்ய பராக்ரமன் - தூய வீரன்
ரண ஜெய - போரில் வெற்றியை மட்டுமே ஏற்படுத்துபவன்
 
சிவகாமியின் சபதம் என்ற வரலாற்று நாவல் குறிப்பிடும் சிவகாமி உண்மையில் வாழ்ந்தவர் என்ற குறிப்புகள் உள்ளன.
 
இன்று மாமல்லபுரத்து கற்கோயில்களும் சிற்பங்களும் அரசன் நரசிம்ம பல்லவனின் உயர் படைப்புகள்.
 
அவற்றை நாம் பாதுக்காப்பது நம் கடமை
 
அவை நம் மூதாதையர் நமக்கு அளித்துள்ள உண்மையான அழியாத கலைப்பொக்கிஷம் அல்லவா?
Continue reading
  488 Hits
488 Hits

How Ganapathy came to Tamil country - historical view

7th century A.D

Thiru chengaatang kudi is a very fertile village near Mayavaram.

Paranjothy who was just 12 years old left the village with his mother's blessings towards Kanchipuram - the city of great wisdom.

He was fatherless and his mother wanted him to be a great scholar in Tamil and Shivism.

He was supposed to join under the great saint singer Appar's mut.

Continue reading
  391 Hits
391 Hits

Mahabalipuram of Pandiya kingdom - Kazhugu malai

பாண்டிய நாட்டு மாமல்லபுரம் - கழுகுமலை

கி.பி 6 - 10 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் மலைப்பாறைகளைக் குடைந்து கற்கோயில்கள் உருவாக்கினர்.

அவற்றையே குடை வரைக் கோயில் என்போம்.

வரை - மலை - மலைக் குடைந்து செய்த கோயில்.

Continue reading
  404 Hits
404 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries