Maamandoor Pallava cave cut temple

மாமண்டூர் குடைவரைக் கோயில்கள் [பல்லவர்]

கி.பி 6ஆம் நூற்றாண்டு....

பல்லவ மன்னர்கள் மலைகள்பெரும் கற்பாறைகள் ஆகியவற்றைக் குடைந்து குடைவரை குகைக் கோயில்களை உருவாக்க மிக்க ஆர்வம் காட்டிய காலம்.

Continue reading
  458 Hits
458 Hits

Rajaraja chola's service to Tamil

திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் 1

[கி.பி 947 - கி.பி 1014]

பிறப்பு: ஐப்பசி மாதம் சதயம் நாள்

பெரிய கோயில் எழுப்பப்பட்ட காலம் - கி.பி 1003 - கி.பி 1010 [ஏழு ஆண்டுகள்]

Continue reading
  498 Hits
498 Hits

Meenakshi Thirukalyanam - UNI5 view

மீனாக்ஷி கல்யாணம் [சிறப்புக் கட்டுரை]
தந்தை இல்லாத சூழல்.
தம் மகளை யாருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து, மிகப் பெரிய பாண்டிய தேசத்தை அடுத்து பராமரிக்கப் போகிறோம் என்று காஞ்சன மாலை கலங்கிய சூழல்.
அக்கட்டத்தில் தான் பாண்டிய அரசி தடாதகை வடதேசத்தில் சுத்த சிவமான மஹானைக் கண்டு மனம் பறிகொடுத்தாள்.
வெறும் மோஹத்தால் அவள் காதல் கொண்டாள் என்பது இல்லை.
தன் நிலை, தேசம், தாய், மக்கள் என அனைத்தையும் கவனத்தில் கொண்டவள் அவள்.
அதனால் தான் அவள் திருமணத்தை அன்னை ஏற்றாள் என்கிறது வரலாறு.
யாரோ மலையில் சாதுவாய் உட்கார்ந்து இருப்பவனை அவள் கூட்டிவரவில்லை.
ஆனாலும் ஊரார் அரசார் புறம் கூறி இருப்பர்.
ஸ்திடமாய் அவனைக் கைப்பிடித்து அவனது உறுதுணையுடன் மதுரையை தேசத்தை அவள் பராமரித்த கதியைக் கண்டே மக்கள் முழுமையான மனதுடன் சிறிது காலத்துக்குப் பின் ஏற்றனர் என்பதே எதார்த்தம்.
தான் எண்ணியபடி கல்யாணம் இன்னாருடன் தான் ஆக வேண்டும் , அதன் மூலம் ஏற்பதும் மண பந்தம் அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்கு மிக்க சக்தியாக ஸ்தலம் அதனால் மதுரை ஆயிற்று.
அதனால் கல்யாண ஸ்தலம் ஆனது.
நிச்சயதார்த்தம் ஆகி நின்று போன பல கல்யாணங்கள் மீனாக்ஷியின் அருளால் கைகூடியதை இன்றும் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
அதனால் தான் தினமும் உத்சவம் இல்லாத காலங்களில் சொக்கருக்கும் மீனாக்ஷிக்கும் கல்யாணம் ஆகிறது.
மேலும் அவள் காலத்துக்குப் பின் பாண்டிய தேச மக்கள் சொக்கர் மீனாக்ஷி தாலியை உருவாக்கினர்.
இன்று வரை மதுரையில் அவர்தம் தாம்பத்ய இல்லற சக்தி நிலை பெற்றுள்ளதைப் போல் என்று என்றும் தம்பதிகள் வாழ வேண்டும் என்றே இத்தாலி புழகத்துக்குள் வந்தது.
 
மிகத் தொன்மை மிக்க தமிழ்ச் சமூஹத்தில் தாலி இல்லை.
ஊர் பொது ஸ்தல வ்ருக்ஷத்தின் கீழ் பெண்ணை மணமகன் கையில் நல்வினை இல்லறம் ஏகக் கைப்பிடித்துக் கொடுப்பர்.
இதையே ”பொண்ண ஒருத்தன் கிட்ட கையப் பிடிச்சு கொடுக்கணும்” என்று கூறுகிறோம்.
மரத்தின் எச்சமாய் பாலக்கால் போடும் சடங்கு உள்ளது.
திருக்கல்யாண சிற்பத்தில், மீனாக்ஷியின் தலைக்கு மேல் கடம்ப மரம் உள்ளது.
 
ஒவ்வொருவரும் தம் கல்யாண நாளை மிக மிக விரும்புவர்.
காரணம் ஏதோ ஒன்று இருக்கும்.
அதையே தினமும் தம்பதிகள் எண்ணி எண்ணி எத்தனை காலம் ஆயினும் ரசித்தால் சச்சரவே வராதாம்.
தினமும் மீனாக்ஷிக்குக் கல்யாணம் என்பதே தம்பதிகள் தினமும் தம் கல்யாண நாளைப் போல் எண்ணி வாழ வேண்டும் என்பதே.
அந்நாளில் சச்சரவே இல்லை அல்லவா?
ஆழ்ந்த மனோதத்வ நிலையை இது உணர்த்தும்
மீனாக்ஷிக்கு அதனால் தான் ”நித்ய கல்யாணி” என்ற பெயர் ஏற்பட்டது.
 
நம் ஆத்மா சக்தி.
அது பரம்பொருளான சிவத்துடன் கலக்க வேண்டும்.
அதன் குறியீடே கல்யாணம்.
குரு என்ற ஞானம் மூலம் ஆத்மா பரம்பொருளை இணைவதையே விஷ்ணு தடாதகையை ஈசனின் கையில் ஒப்படைப்பது போல் குறியீடு உள்ளது.
அதையே பாண்டியர் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதி ஆக்கினர்.
கம்பத்தடி மண்டபத்தில் திருக்கல்யாண சிற்பம் உருவாகி அதுவே இன்று பல தமிழ்க் குடும்பங்களின் கல்யாணப் பத்திரிக்கையின் லோகோ ஆனது.
 
கல்யாணமான ஆன பெண்கள் மீனாக்ஷிக்குத் தாலி கழுத்தில் ஏறியவுடன் தம் தாலிக்குப் புதுக்கயிறு கையோடு மாற்றிக் கொள்வதைக் காணலாம். பல ஊர்களில் உள்ள தமிழ் மங்கையர் அன்று தாலிச் சரட்டை மாற்றுவது வழக்கம்.கல்யாண வாழ்வில் மீட்டுருவாக்கம், மறுமலர்சி, குறை தீர்த்தல் ஆகியவற்றின் குறியீடு இது.
மீனாக்ஷியின் தாலியை நாயக்க மன்னர் வைடூர்யக் கற்கள் பதித்து அமைத்தார்.அது மதுரை வங்கியில் இருந்து முந்தைய நாள் எடுக்கப்படும்.
தங்க வட்டில், பொன் சந்தனக்கும்பா, பொன் பன்னீர்சொம்பு, பொன் குங்குமச்சிமிழ் ஆகியன எடுத்து அன்று பயன்படுத்தப்படும்.
 
திருக்கல்யாணம் அன்று திருப்பரம் குன்றம் முருகன் தேவயானையுடன், அவ்வூர்ப் பவளக்கனிவாய்ப் பெருமாளுடன் எழுந்தருள்கிறார்கள்.
 
மாலையில் திருமலை மன்னன் உண்டாக்கிய பெரிய கல்யாண மஹாலில் வரவேற்பு நிகழும்.ஊரே கோலாகல அல்லோலப்படும்.
 
கல்யாணம் ஆனவர்
ஆகாதவர்
ஆக முடியாதவர்
ஆகக் கூடாதவர்
என அனைவருக்கு தேவி மீனாக்ஷியின் திருக்கல்யாணம் ஆசீர்வதிக்கும் என்று என் ஆசான் முனைவர்.திருமலை ஐயா [தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்] 1995 திருக்கல்யாண வானொலி நேர் காட்சி செய்தது இன்றும் மனதில் உள்ளது.
 
அன்னையின் கல்யாணம் தம்பதிகளின் கல்யாண வாழ்விற்கு உறுதுணை செய்யும், பாரத தேசத்தின் ஆணிவேரான இல்லற வாழ்வின் மேன்மைக்கு வேராகும், ஆன்மா உய்ய வழிவகுக்கும்.ஒரு முறையேனும் சித்திரையில் மீனாக்ஷி கல்யாணம் காண்க.
 
மீனாக்ஷி கல்யாண வைபோகமே
கெளரி கல்யாண வைபோகமே
சித்திரையில் மாலையிட்டாள்
சிங்காரச் சொக்கருக்கே
செந்தமிழ்ச் செல்வியவள்
தேன்மதுரை நகரினிலே
 
பொன் ஊஞ்சல் ஆடுகின்றாள்
மீனாக்ஷி அன்னை
கண்கவரும் எழில் கொண்ட
தன் கணவன் சொக்கனுடன்....
 
[பழம் பாடல்....இன்றும் பாடப்படுகிறது]
 
கல்லுக்கு நாதம் உண்டு.
நாதம் உள்ள கல்லில் தான் மூலஸ்தானத்தின் சிற்பம் செய்வர்.
1990ல் காஞ்சி மாஅப்பெரியவர் ஓர் உரையில் மீனாக்ஷி தேவகாந்தார ராக இலக்கணம் கொண்ட திருமேனியள் என்று கூறியதை 2015 வரை ஆய்வு செய்தும் பதில் கிடைக்கவில்லை.
மீனாக்ஷிக்குப் பூஜிக்கும் அர்ச்சகருக்கும் பதில் தெரியாத நிலையில்,
காஞ்சி மடம் 2015ல் மயிலாப்பூரில் முகாம் கொண்ட நிலையில் அடியேனின் பெரியபுராண நூலை அவர் பார்வையிட வேண்டிய சூழலில் மஹாப்பெரியவாளின் சம்ஸ்க்ருத ஆசானின் மகன் சம்ஸ்க்ருத அறிஞரைக் காணும் வாய்ப்பில் இக்கேள்வியைக் கேட்ட போது, அவர் வியந்து ஸ்ரீமத் ராமாயணம் மாமா [பெரியவரின் சீடர்] மூலம் பதில் கொடுத்தார்.
 
தேவகாந்தாரம்
கர்நாடக இந்துஸ்தானி இசையில் முக்கிய ராகம்
மிக ஜனரஞ்சகமான ராகம்
நம் இளையராஜா அதிகம் பயன்படுத்தும் ராகம்
அதற்கும் மீனாக்ஷியின் விக்ரஹ வடிவிற்கும் என்ன தொடர்பு?
 
கயிலாயத்தில் சிவபார்வதி கல்யாணக் களிப்பின் தேவர்களும் கந்தர்வர்களும் உருவாக்கியது தேவகாந்தாரம்.
மதுரையில் தடாதகையில் கல்யாணத்தில் மக்கள் அதையே இசைத்து ஆடினராம்.
அதுவே கல்யாண ராகம்!
அதனால் அவள் சிலையும் பின்னர் தேவகாந்தார அதிர்வுகள் கொண்டதாக ஆயிற்று.
 
ஆணும் பெண்ணும் கல்யாண பந்தம் மூலம் இணைந்து 36 வகை அறங்கள் சமூஹத்துக்கும், சுற்றத்துக்கும், உற்றார் உறவுக்கு  தமக்கும் செய்து ஆன்மீக உயர்ச்சி பெறவே கல்யாணம் என்பது காஞ்சிபுர ஸ்தல ஐதீஹம்.அவ்வூர் ”குடும்ப ஸ்தலம்” ஆகிறது. பக்தியுடன் அன்புடன் சேவைகள் செய்ய வினைகள் தீரும், பிறவி சுழற்றி ஒழியும்...அதற்கே ஆணும் பெண்ணும் உறுதுணை ஆகின்றனர்.
 
தன் கணவனைக் கைப்பிடித்த மீனாக்ஷி இன்று வரை உண்மையான பக்திக்கு பதில் சொல்லும் லீலைகள் நிகழ்வதை உணர்க....
 
வாழ்க தூய இல்லற தர்மம்!
Continue reading
  572 Hits
572 Hits

Trichy - a historical view

திருச்சியில் தஞ்சை...

மலைக்கோட்டை மாநகர் - திருச்சிராப்பள்ளி - திருச்சி.

இது தமிழகத்தின் மைய நகரம்மூன்றாம் பெரிய மாநகரம்.

ஊரின் ப்ரதான வரலாற்றுச் சின்னம் மலைக்கோட்டை.

Continue reading
  445 Hits
445 Hits

Chola's gift to his beloved love

சோழனின் காதல் காணிக்கை...
 
பல்லவன் நரசிம்ம வர்மனின் ஆசை மனம் என்றது ஆயனார் சிற்பியின் அருமை மகள் சிவகாமியின் பால்.இதை வர்ணித்து வர்ணித்து ரசிப்பௌ கல்கியின் சிவகாமியின் சபதம் வரலாற்று நாவல்.
 
சிவகாமி தேச நலனுக்கு எனத் தன் காதலை த்யாகம் செய்து காஞ்சி ஏகாம்பரநாதருக்கே தேவர் அடியாள் ஆகி அப்பரின் ஆன்மீக வழிகாட்டுதலின் கீழ் திருவாரூர் சென்றாள் என ஆய்வுகள் காட்டும்.அதன் பின் அவள் மஹாபலிபுரத்தில் சிற்பக்கலைக்கூடத்தை உருவாக்கத் தன் நாட்டியக் கலையை அர்ப்பணித்துள்ளாள்.இதைப் பற்றி மிக விளக்கமாக நாம் முன்பு ”நாதம் என் ஜீவனே கட்டுரையில்” எழுதினோம்.
 
திருவாரூர்த் தியாகராஜ பெருமானின் கோயில் குறித்த பல ஆய்வுகளைப் படிக்கும் போது சிவகாமியின் அடிச்சுவட்டில் மற்றொரு வரலாற்றுக் காதல் தியாகம் தெரியவருகிறது.
 
சிவகாமியின் வரலாறே பல்லவ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர்.
 
அவளது வரலாற்றை உணர்ந்தே சோழ தேசத்து ஒரு தமிழச்சியும் தன் காதலைத் தியாகம் செய்துள்ளாள்.ஆனால் இக்காதல் வரலாறு சற்று வெளிப்படையானது.நரசிம்ம பல்லவனுக்கு இல்லாத வீரம் மன தைரியம் இச்சோழ அரசனுக்கு இருப்பதைக் காண்க.
 
யாரிவர்கள்? இரு பூங்குயில்கள்? இளம் காதல் மான்கள்?
 
கி.பி 11
ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திரன் ஆட்சி.
தந்தையைப் போல் எண்ணற்ற தேசங்களைக் கைக்கொண்டு சோழ தேசத்தின் எல்லையையும் பெருமையையும் பரப்பியவன்.
 
இசையையும் நாட்டியத்தையும் ஓவியத்தையும் சிற்பத்தையும் தந்தையும் மகனும் போட்டி போட்டு வளர்த்துள்ளனர்.
 
தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜராஜன் தேவாரப் பதிகங்களை ஓதுவார்களைக் கொண்டு மக்களிடம் பரப்பும் கவனத்தில் உயர்ந்த நாட்டியக் கலையில் உள்ள உயர்ந்த தேவரடியார்களை [402] பேரைத் தஞ்சைக்கு மாற்றி, மாத ஊதியம், வருஷம் நெல், சன்மானம், வீடுகள் கொடுத்து இசை நாட்டிய நாடகக் கலைகளை தினமும் வளர்த்தான்.
 
அவர்களில் அதிகம் பேர் திருவாரூர்த் தியாகராஜ ஸ்மாமி கோயிலில் இருந்த தேவரடியார்கள் ஆவர்.காரணம் அவ்வூர்க் கோயில் சங்கீத இசை நாட்டியக் கலையில் தொட்டில் ஆகும்.
 
அக்கூட்டதின்கண் இருந்தவள் தான் அணுக்கியர் பரவை நாச்சி.அணுக்கியர் - நாட்டியக்காரி.இவள் ஆரூர் பெருமானின் தேவர் அடியாள்.
 
இவளது அழகு, அறிவு, உயர் கலை ஞானம் ஆகியவை ராஜேந்திரனின் மனதைக் கவர்ந்தது.அதே வேளை அரச பரம்பரையின் உயர் ஒழுக்கம் அவன் மனதை எச்சரித்தது.ஆனால் இக்கட்டித்தில் தேவர் அடியார் மிக்க மதிப்புடனும் கோயிலும் பூஜாரிகளுக்கு அடுத்த நிலையில் மதிக்கப்படும் நிலையில் இருந்தனர்.
 
தெய்வத்துக்கு அடியாள் ஆன ஒருத்தியை மணக்கலாமா என்ற போராட்டம் ராஜேந்திரனின் மனதை வேர் அறுத்தது.உலகில் பல பூமிகளை வென்றவன் காதலுக்குத் தோற்றுப் போனான்.என்ன செய்வது? மாறனின் கணைகள் சக்தி கொண்டவையே!
 
தன் காதலைப் பரவைக்கு வெளிப்படுத்த அவளோ பயத்தினால் தான் ஏற்றுள்ளாள்.அரசனின் மகனின் காதலை மறுத்த மாதவிமகள் மணிமேகலையின் வரலாற்றை அறிந்தவள் அவள்.
 
ராஜேந்திரன் மிகுந்த காதலை அவளிடம் வெளியிட்டுள்ளான்.அவளோ மனதில் போராட்டமும் வெளிப்புறத்தில் சிரிப்பாட்டமுமாக வாழ்கிறாள், அவளால் அவன் காதலை ஏற்ற முடியவில்லை! ஆனால் என்ன செய்வது?
 
ஒரு பங்குனிப் பெருவிழாவில் திருவாரூர்த் தேர் விழாவில் ராஜேந்திரன் கலந்து கொள்ள வரும் போது அவள்,
”அரசே! உங்கள் அன்புக்கு நான் அடிமை.ஆனால் உங்கள் அன்பு, உங்களுள் உள்ள ஆத்ம ரூபணான சர்வேஸ்வரனின் அன்பே! காரணம் அரசனும் தெய்வமும் ஒன்றல்லவா?
 
ஆனால் அடியேன் ஆரூர் ஈசனுக்கே அடியாள்.
எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறீரோ அதை ஆரூர் ஈசனுக்கே செய்க.அதுவே உம் காதல் பரிசு”
 
ராஜேந்திரன், ”ஆம் பெண்ணே! என்ன வேண்டும்? காதல் பரிசுகள், கொண்டு அடி சேர்க்கிறேன்”
 
பரவை, ”த்யாகராஜன் செங்கல் கருவறையில் வாழலாமோ? அவரது மூலஸ்தானத்தை உங்கள் அப்பா செய்த தஞ்சைக் கோயிலை ஒத்த கற்றளி ஆக்குக.உங்கள் முப்பாட்டன் கோச்செங்கணான் தில்லைக் கூத்தனுக்குப் பொன் வேய்ந்தான். என் காதலின் வெளிப்பாடாய் த்யாகராஜனின் கற்றளி வெளிச்சுவரைப் பொன்னாலும் உட்சுவரை செம்பினாலும் மெழுகிடுக.எனக்கு என்னென்ன ஆபரணங்கள் தர உம் மனதில் ஆசையோ அதைத் தியாகராஜப் பெருமானுக்கே சூட்டுகைதை எல்லாம் விட உங்கள் அப்பாவின் சிவப்பணிக்கு ஈடான ஒரு அரிய கற்கோயிலை எழுப்புக, அதில் அடியேன் ஈசன் முன் உன் வீட்டில் வாழ்வதாக சதா ஆடுவேன் பாடுவேன்....”
 
பரவையின் உண்மையான காதல் ஆன்மீக உயர் பக்தியாய் இருப்பதையும் அவளது சமூஹப் பொறுப்பையும் உணர்ந்தான்.
 
தான் கண்ட வெற்றி மூலம் பெற்ற அனைத்து பொன் வெள்ளி கொண்டு கற்றளி, மெழுகல் பணிகள் செய்தான்.
 
அடுத்து இன்று பார் புகழ விளங்கும் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியிருக்கிறான் எனலாம்.
 
அனைத்துக்கும் மேலாக, அவன் ஆரூரில் கற்றளி செய்து கும்பாபிஷேகம் செய்த நாளில் ஊரார் காண பரவை நாச்சியைத் தன் அரச தேரில் உட்கார வைத்து பவனி வந்து அவள் மூலம் தான் இப்பணி ஏற்பட்ட வரலாற்று உண்மையைக் கூறிக் கல்வெட்டும் உண்டாக்கினான்.அன்று 1008 மலர்கள் கொண்டு செய்யப்படும் முசுகுந்த சோழ சஹஸ்ரநாமம் செய்யப்பட்ட போது அவன் அவள் அருகில் நின்று தியாகரை தரித்தான்.அவ்விடத்தில் அவள் ப்ரம்மாண்டமான தன் உருவத்தை ஒத்த பாவை விளக்கை உலக நலனுக்கு என ஏற்றி வைத்தாள்.அதை இன்றும் காண்க.
 
இத்தகைய உயர் பெண்கள் வாழ்ந்த பூமியாய் நம் தேசம் உள்ளது.
 
இன்று கங்கை கொண்ட சோழபுரம் பரவை நாச்சியின் காதல் காணிக்கை என்றால் மிகை அல்ல.
 
அவனுக்கு உணர்த்திய உண்மையைக் கொண்டு தான் திருவருட்செல்வர் படத்தில் தேவரடியாள் மன்னனுக்கு இனிப்புகள் கொண்டு பேருண்மையை வெளிப்படுத்தும் காட்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
Continue reading
  421 Hits
421 Hits

Thiruvaroor Thyagarajar - UNI5 study

திருவாரூர் தியாகராஜர் - பங்குனி உத்திரக் கட்டுரை
 
வேத காலத்தில் இந்திரனை மிக முக்கியமாக வழிபடும் மரபு நம் தேசத்தில் இருந்தது.
 
மேகங்களின் மழை பொழியும் ஆற்றலுக்கு இந்த்ர சக்தி என்று பெயர்.
 
மனிதனின் ஐந்து புலன்களின் சுகம் அனுபவிக்கும் சக்திக்கும் இந்த்ர சக்தி என்று அர்த்தம்.அதனால் தான் அவற்றை இந்த்ரியங்கள் என்கிறோம்.
 
ஆனால் சதா மனிதன் வாழ்க்கையை வெறும் சுகானுபவத்தில் கழித்த கட்டத்தில் இந்திர வழிபாடு நிறுத்தப் பட்டது.
 
ஆனால் இன்று பல கோயில்களில் இந்திரன் இறைவனைப் பூஜிப்பதாக ஐதீஹ நம்பிக்கை உள்ளது.
 
முற்கால சோழர்கள் தம் துறைமுகத் தலைநகராம் பூம்புகாரின் மிக ப்ரம்மாண்டமான முறையில் இந்திரா விழா எடுத்ததை சங்க நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை வர்ணிப்பதைக் காண்க.
 
28 நாட்கள் நிகழும் அவ்விழா சித்திரைப் பெளர்ணமி அன்று முடிவடைந்தது.இன்றும் தமிழர்களுக்குச் சித்திரைத் பூர்ணிமை மிக முக்கியம் அன்றோ?
 
மதுரையின் புராண வரலாற்றைக் காணின், சித்திரைப் பூர்ணிமை நாளில் தான் இந்திரன் சொக்கநாதரை வழிபட்டு சாபம் தீர்த்துக் கொண்டான் என்று தெரிகிறது.
 
இன்றும் கன்யாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இரவில் அர்த்த ஜாம பூஜையை இந்திரன் செய்வதாக நம்பிக்கை.
 
இன்றும் மதுரையில் சித்திரைத் திருவிழாவும் பூர்ணிமை அன்று கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவும் உலக ப்ரசித்தம்!
 
ஆனால் நம் ஆய்வு சற்று மாறுகிறது....
அது தான் திருவாரூர் தரும் குறிப்பு.
முசுகுந்த சோழன் தேவர்களின் எதிரியான வாலாசுரனைக் கொன்று தேவலோகத்தில் விருந்தாளியாக இருக்கிறான்.அவன் இந்திரனையும் அவன் கூட்டத்தையும் பூம்புகாருக்கு வரவேற்று விழா எடுத்தான் என்பது சிலம்பின் குறிப்பு.ஆனால் சிலம்பில் சில விஷயங்கள் தரப்படவில்லை.அதுவே நம் ஆய்வு....
 
தேவலோகத்தில் சில காலம் விருந்தாளியாக இருக்கும் சோழன் தினமும் இந்திரன் பூஜிக்கும் வேளை அவன் பூஜை அறையுள் இருந்தான்.
 
அங்கு மிக உயர்ந்த அழகிய சோமாஸ்கந்த விக்ரஹத்தைக் காண்கிறான். சிவனும் பார்வதியும் குழந்தை முருகனுடன் உள்ள மூர்த்தியே சோமாஸ்கந்த வடிவம்.
 
சிவசக்தி ஆனந்த நிலையே இதுவாகும்.தமிழக சைவ ஸ்தலங்களில் ப்ரதான உற்சவர் சோமாஸ்கந்தரே.
 
இம்மூர்த்தியை அதிகம் வடிவமைத்த பெருமை மகேந்திர வர்மனுக்கும் அவன் மகன் நரசிம்ம வர்ம பல்லவனுக்குமே உரித்தாகும்.
 
பாரத தேசத்தின் ஆணிவேரான குடும்ப தத்துவத்தை உணர்த்தும் சிலா ரூபம் இதுவாகும்.
 
இந்திரன் வழிபட்ட சிலை மஹாவிஷ்ணுவால் அவனுக்கு அளிக்கப்பட்டது.
 
இந்த சிலையின் அழகில் சொக்கிப் போகிறான் சோழன்.
 
ஊர் திரும்பும் முன் இந்திரன் தந்த வரங்களையும் கூட வேண்டாம் என்று கூறி, இச்சிலையை எடுத்துச் செல்ல அனுமதி கேட்டான் மன்னன்.இந்திரனுக்கு தர்ம சங்கடம்! 
 
”சரி நாளை காலை வா, புறப்படும் முன் தருகிறேன்” - என்கிறான் இந்திரன்.
 
மறுநாள் காலை பூஜை அறையில் பார்த்தால் ஏழு சிலைகள் ஒரே போல்...குழப்பம்!
 
”சோழ மன்னா! இவற்றுள் எது நீ முதலில் பார்த்த சிலை என்று கண்டுபிடித்து எடுத்துக் கொள்!” - என்று சவால் வைக்க,மன்னன் ஈசனை மனமார வேண்ட, ”என் காதுகளில் செங்கழுநீர் மலர்கள் கொண்டு செய்த தோடுகள் சார்த்தப்பட்டுள்ளன” என்று சிவன் அடையாளம் கூற, மன்னனும் அதைக் கண்டுபிடித்திட, வேறு வழியே இல்லாமல் இந்திரன் அச்சிலையை மற்ற ஆறு சிலைகளுடன் சேர்த்துப் பரிசாக்கினான்.
 
”இந்திரா....நன்றியுடன் உங்களை, உம் மனைவியை, தேவர்களை ஆண்டுக்கு ஒரு முறை பூம்புகார் வந்து தங்கி நீங்களே விழாவெடுத்துப் பூஜிக்க வேண்டுகிறேன்!” என்று சோழன் கூற, இந்திரன் ஏற்க, அதுமுதல் இந்திர விழா உண்டானது.
 
இந்திராதி தேவர்கள் தாம் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை வழிபடப் பூம்புகாருக்குப் பங்குனி தொடங்கி சித்திரைப் பூர்ணிமை வரை பூஜிப்பர் என்பது வழக்கு.
 
இந்த சோமாஸ்கந்த மூர்த்தி தான் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர்த் தியாகராஜர்.மனிதனின் தியாக உணர்வின் சக்தியாக அவர் உள்ளதால் தியாகராஜர் ஆகிறார்.
 
பூம்புகாரில் சிவனுக்கு மிக ப்ரதானமான கோட்டம் இருந்தது என்று சிலம்பு கூறுவது இவரது கோயிலே எனலாம்.
 
கி.பி 2ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய கடல்கோள் ஏற்பட்டுப் பூம்புகார் அழியும் போது சோழர்கள் இவரை இடமாற்றம் செய்தனர்.அதன் பின் வந்த மனுநீதிச் சோழன் திருவாரூரை நியமித்து, தலைநகர் ஆக்கி, அவ்வூரில் தியாகராஜப் பெருமானை ப்ரதிஷ்டை செய்தான்.
 
சிதம்பரத்துக்கு முன் உருவான ஸ்தலம் திருவாரூர்.
இது பஞ்சபூதங்களில் பூமி தத்துவத்தைக் குறிக்கும் ஸ்தலம்.தேவாரத்தில் மிக அதிகமான பாடல்கள் பெற்ற ஸ்தலம்.மிக அதிகமான உட்சன்னிதிகள் கொண்ட ஸ்தலம்.உலகின் மிகப் பெரிய தேர், மிகப் பெரிய குளம் கொண்ட ஸ்தலம்.
 
தியாகராஜப் பெருமானின் உடலை நாம் பார்க்கவே முடியாது.முகத்தை மட்டுமே பார்க்க முடியும்.பங்குனித் தேர் கழிந்து வலது பாதத்தை மட்டும் பார்க்க முடியும்.அவரது உடல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.அவருக்கு அருகில் உள்ள பார்வதிக்குக் ”கொண்டி நாயகி” என்று பெயர்.கொண்டி - வேறு தேசத்தில் இருந்து வந்த பெண்.
 
பட்டாடைகளும் அணிகலன்களும் பின்னிப்பிணைந்து பூக்களுடன் கலந்து சிம்மாசனத்தில் தியாகராஜப்பெருமான் அமர்ந்துள்ளார்.
 
இன்றும் முசுகுந்த சோழ சஹஸ்ரநாமம் பல ஆயிரம் பூக்கள் கொண்டு நிகழ்வதைக் காண்க.
 
மிகப் பழைய தமிழ் இசைக்கருவிகள் பல தியாகராஜர் முன் இன்றும் வாசிக்கப்படும்.குடமுழா, கல் நாதஸ்வரம் ஆகியன இன்றும் வாசிக்கப்படும்.
 
மீதி ஆறு சிவன் சிலைகளும் தியாகராஜர் என்றே போற்றப்பட்டு ஆறு ஸ்தலங்களில் வைக்கப்பட்டுள்ளன.
 
அவை - நாகப்பட்டிணம், திருநள்ளாறு, வேதாரண்யம், திருவாய்மூர், திருக்காறாயில், திருக்குவளை
 
ஒவ்வொரு தியாகராஜருக்கும் ஒவ்வொரு வகை நடனம் உண்டு.அவை மனிதனின் மன உணர்ச்சியைக் காட்டுவதாகும்.
 
மனிதன் தியாகத்தால் வினை அறுக்க முடியும்.
வினை அகலின் முக்தி வரும்.
தியாகத்தின் விதை தூய அன்பு.
அதையே அன்பே சிவம் என்கிறோம்.
 
காசிக்கு இணையான சைவத்தின் தலைமை இடம் திருவாரூராக விளங்கிற்று.
 
அறுபத்தி மூன்று அடியார்களின் வரலாற்றை சுந்தரர் தொகுத்தது இவ்வூரில்தான்.மேலும் அவருள் பல அடியார்கள் அரும்பணி ஆற்றியதும் இவ்வூரில் தான்.
 
தியாகராஜப் பெருமானின் சாயரட்சை [மாலை பூஜை] அவசியம் காண வேண்டும்.அப்போது கல்நாயனமும் குடமுழாவும் வாசிப்பர்.
 
கி.பி 16ஆம் நூற்றாண்டில் இசைக் கலைக்கு மறுமலர்ச்சி உண்டாக்கிய சங்கீத மும்மூர்த்திகளும் அவதாரம் செய்தது இவ்வூரில்தான். மூவரின் வீடுகளும் இன்றும் உள.
 
அவர்களுள் ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் பல காலம் இவ்வூரிலேயே வாழ்ந்து மராட்டிய அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப கோயில் வழிபாட்டில் இசை நாட்டியக் கலைக்கு ஏற்ற வழிகாட்டுதல்கள் செய்தார்.
 
இசையை நாட்டியத்தை இருகண்களாக ஆன்மீகம் கொண்டது.அதைத் திருவாரூர் வளர்த்தது.எண்ணற்ற தேவர் அடியார்கள் நாட்டியக் கலை மூலம் இறைப்பணி செய்ய ஊர் இது.அதனால் தான் ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் தேவரடியார்களைக் கொண்டு ஆடல் கலையை புகுத்திய போது அதில் அதிகமானோர் திருவாரூர்க் கோயிலில் பணியாற்றியவர்களாக அவன் தேர்வு செய்தான்.
 
சைவ சமயத்தின் பல்வேறு பிரிவினர் இன்று வடதேசத்தில் அதிகம் உள்ளனர்.ஆனால் அவர்கள் எல்லோரும் திருவாரூரில் கூடி ஈசனை வழிபடுவதை அப்பர் தம் தேவாரத்தில் பதிவு செய்கிறார்.
 
திருவாதிரை விழாவும் பங்குனி உத்திர விழாவும் ஆரூரில் மிக மிக ப்ரபலம் என்பதை தேவாரப் பாடல்கள் காட்டும்.
 
உலகின் மிகப் பெரிய தேர் ஆழித் தேர்.இதுவே திருவாரூர்த் தேர்.1920ல் இது தீயில் சாம்பலாகி வேறு தேர் ஆகி அதுவும் பழுதாகி இன்றுள்ள தேர் உருவானது.முதல் தேரை இழுக்க பத்து யானைகள், இருபதாயிரம் மக்கள் தேவை.இன்றுள்ள தேரை ஓட்ட நவீன சக்கரங்கள் உள்ளன.
 
தியாகரைத் தூக்க இருபது பேர் தேவை.ஆனால் தேரில் தீயில் தியாக மாட்டியபோது தனி ஒருவர் விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு கீழே குதித்து நசுங்கினார்.அவர் குடும்பத்துக்கு இன்று தேரின் முதல் வடம் பிடிக்கும் மரியாதை உண்டு.
 
திருவாரூரில் உள்ள ஸ்ரீகமலாம்பிகை மிக சக்தி கொண்ட தேவி.தேவி உபாசனையின் அனைத்து மூல மந்த்ரங்களும் இவள் பாதத்தில் உள்ள பீடத்தில் உள்ளன.குசாசனம் என்ற ஒரு வகை அமர்வு கோலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத கோலத்தில் அன்னை உள்ளாள்.இவள் சன்னிதியில் 51 சப்தங்களின் அட்சர பீடம் உள்ளது.ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் கமலாம்பிகை மீது மிக மிக ப்ரசித்தி பெற்ற சக்தி பெற்ற நவாவரணக் கீர்த்தனைகள் செய்துள்ளார்.இவற்றைப் பாடிப் பாராயணம் செய்யும் போது ஸ்ரீசக்ரம் அல்லது அர்த்த அல்லது மஹாமேருவுக்கு நவாவரண பூஜை ஒன்பது மணி நேரம் செய்த பலன் உண்டு.அடியேன் அனுபவித்துள்ளேன்.
 
தீட்சிதர் தினமும் தேவி முன் உள்ள மண்டபத்தில் வீணை வாசிப்பது வழக்கம்.
 
மற்றொரு தேவி அல்லியங்கோதை.நீலோத்பலாம்பிகை என்று பெயர்.
 
சுந்தர மூர்த்தி நாயனார் தம் முதல் மனையாள் பரவை நாச்சியாருடன் வாழ்ந்து, அவர் பொருட்டு தியாகர் நடு இரவில் தூது போனது இன்றும் பங்குனி விழாவில் நிகழ்கிறது.தியாகருக்கும் சுந்தரருக்கும் ஒரே மரியாதை இவ்வூரில் உண்டு.
 
இவ்வூர் ஈசன் அருளால் பிறந்த காரணத்தாலே சங்கீத மும்மூர்த்திகளில் ஸ்ரீராம பக்தரான அன்பர் தியாகராஜர் என்று பெயர் பெற்றார்.
Continue reading
  424 Hits
424 Hits

Sankya Muni - Gowthama Buddha - a crisp history

சாக்கிய மாமுனி என்னும் புத்தர்
 
மிக முக்கியமாக மாணவர்க்குச் சொல்ல வேண்டிய பகுதி...
அராளராம ரிஷி என்ற உயர்ந்த முனிவரின் அறிவுரைகளின்படி சித்தார்த் ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டான்.ருத்ரகரன் என்ற  முனிவரின் அறிவுரைகளுக்கும் மதிப்புக் கொடுத்தான்.சித்தார்த் தன் காலத்தில் வாழ்ந்த பல ஆச்சாரிய புருஷர்களையும், முனிகளையும் சந்தித்தான்.அவர்களின் அறிவுரைகளைக் கேட்டான்.அவர்கள் கூறும் ஆன்மீகப் பேருரைகளைக் கேட்டுத் தன்னுள் பலவாறு சுய விவாதம் செய்தான்.தன் கேள்விகட்கு உரிய தெளிவான பதிலை அறிய அவன் முற்பட்டான்.சதா ஆத்ம விசாரணையிலேயே இருந்தான்.அவன் அனைவரையும் மதித்தான்.அதே வேளை அக்கால சமூஹத்தில் இருந்த சமயம் சார்ந்த கண்மூடி வழக்கங்கள், பலிகள், காரணம் புரியாமல் பின்பற்றுதல் மக்களின் பல மூட நம்பிக்கைகள், மதங்கள் பெயரில் சுரண்டல் அரசர்கள் மூலம் மதங்கள் பணம் அதிகாரச் செல்வாக்கை அடைய முற்படுதல், உயிர்ப்பலி,சமூஹ ப்ரச்சனைகள், ஏற்ற தாழ்வுகள், வடதேசத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகள் ஆகியவற்றைக் கண்டான்.மதம் என்பது மனம் பக்குவப் பட்டு உயர்ந்த ஞானத்தைப் பெற என்பதை மறந்து சதா சுகபோக வாழ்வுக்கான பொருள் தேடுதலுக்கு மதச் சடங்குகள் பயன்படும் கதியைக் கண்டான்.
 
அறம் பொருள் இன்பம் வீடு பேறு என்ற பாரத தேசத்தின் வாழ்வியல் நெறியில் அறம் அகன்றது.பொருள் இன்பம் மட்டும் இன்று உள்ளது போல் புத்தர் காலத்தில் சமூஹம் இருந்தது.வடதேசத்தில் சாதிப் பாகுபாடுகள் மிக அதிகம் பரவின.
 
கூட்டம் கூட்டமாக சன்யாசி ஆயினர் மக்கள் என்பது மிகையே.
அப்படி இருப்பின் இன்று உலகில் இத்தனை மக்கள் தொகை நம் தேசத்தில் இருக்காது.
இதையே தான் கிறிஸ்துவர் கூறுவர் ”புனித தாமஸ் பல்லவ தேசத்தில் லட்சக் கணக்கில் மக்களைக் கிறிஸ்துவர் ஆக்கினர்”
 
மக்கள் பலர் புத்தரின் அறவுரைகள் கேட்டு மாறினர்.
 
இன்று மீண்டும் புத்தர் தேவை.
வினையின் உண்மையை அறியாமல் மக்கள் போடும் ஆட்டம் சொல்லி மாளாது.
கோயில்களும் மதங்களும் அரசியலாகிப் பொருள் ஈட்டும் நோக்கில் தான் உள.
அஹிம்சை கேள்விக்குறி ஆயிற்று.
அறியாமை வேர் விட்டு வளர்வதைக் காண்க.
 
புத்தரின் பேச்சால் பலர் மனம் மாறினர்.
காரணம் உண்மையான வாழ்வியலில் குறிக்கோளை ஏற்றுக் கொண்டு அறவழியில் சென்றனர்.
கூட்டம் கூட்டமாய் அவர் சன்யாசிகளை உருவாக்கினார் என்பது வீண் கதை.
அது ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட கவர்ச்சிக் கதை.
இன்று எப்படிப் பல ஆன்மீக குருமார்களின் உபதேசங்களை ஏற்றுக் கொண்டு மக்கள் அவர்தம் பின் செல்கிறாரோ அதே போல் தான்.
எவர் வேண்டுமானாலும் சன்யாசி ஆகிவிட புத்தரும் அனுமதிக்கவில்லை.
சன்யாசி ஆகி சமூஹ சேவை செய்ய அவர் பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தார்.
பலரும் அவரது அறவுரை ஏற்று அதன்வழி வாழ்ந்தனர்.
[வள்ளலார், ரமணர், காஞ்சி மஹாமுனிவர், சாயிபாபா, இன்றுள்ள அம்ருதானந்தமயீ அம்மை, ஜக்கி, மேல்மருவத்தூர் அடிகளார், வேதாத்ரிமஹரிஷி, ரவிசங்கர் மற்றும் பலர் தம் உரைகள் கேட்டு மக்கள் வாழ்வது போல், அவருடன் சன்யாசியாகப் பயணிக்கக் கட்டுப்பாடுகள் உண்டு, இச்சூழலை புத்தருடன் தொடர்பு கொள்க]
 
கி.மு 4
அக்கால பாரததேசம் இன்றைய நேபால் தேசத்தையும் கொண்டு விளங்கியது.
அதன் தலைநகரம் கபில வஸ்து.
அதன் அருகில் ஓடும் ஆறு ரோகிணி.
கபிலாச்சார்யார் உருவாக்கிய நகரம் கபிலவஸ்து.
”கண்டார் விரும்பும் கபிலபுரம்” என்று பழைய நூல்கள் கூறும்.
இக்கபிலரே சாங்கிய தத்துவமான நம் UNI5 கல்விக் கொள்கையின் தந்தை.
இவரது சாங்கியக் கொள்கையைப் பின்பற்றுவோர் சாங்கியர் - சாக்கியர்.
அதனால் இத்தேசமும் சாக்கிய தேசம் ஆனது.
அதன் அரசர்கள் ஸ்ரீராமனின் இஷ்வாகு குல வழியில் வந்தவர்கள்.
அவர்கள் தம்மை ”சாக்கியகுலம்” என்று கூறுவதும் மரபு.
 
கபிலவஸ்துவின் அரசன் சுத்தோதனன்.
அவனுக்கு இரு மனைவியர்.
கெளதமி மற்றும் மாயாதேவி.
கோலிய தேசம் என்ற பகுதியின் மன்னன் அஞ்சன் என்பவனின் மகள்கள் இவர்கள்
நீண்ட காலம் இருவருக்கும் மகப்பேறு இல்லை.
 
பல காலம் கழித்து மாயாதேவி இறையருளால் ஒரு மகனை ஈன்றாள்.
மகப்பேறு நெருங்கும் வேளையில் மாயா தேவி லும்பினி என்ற ஊரில் உள்ள அழகிய மலர்வனத்தில் ஓய்வுக்குச் சென்று இருந்த போது அம்மகன் பிறந்தான்.அவ்வூர் இன்று நேபாலில் மிக ப்ரஸித்தி பெற்ற புத்த ஸ்தலம் ஆகும்.
அவரே புத்தர்.
பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் - சித்தார்த்.
பிறந்த சில காலத்தே தாய் இறந்து போக, கெளதமியே மிக அன்புடன் இவரை வளர்த்தாள்.
அதனால் இவருக்கு கெளதம் என்ற பெயரும் உண்டு.
கெளதம் என்பது அவர்களின் குடிப்பெயரும் ஆகும்.
காலம் - 
 
பிறந்தவுடன் ஜாதகம் பார்த்த போது, சித்தார்த் மிக உயர்ந்த சன்யாசி ஆகி உலகிற்கே வழி காட்டுவான் என்று தெரிய வந்தது.ஆனால் அதில் விரும்பம் இல்லாத சுத்தோதனன் கவலை என்றால் என்ற என்றே அறியாமல் தன் மகன் வாழ வேண்டும் என்று தன் மாளிகையை அதற்கு ஏற்ப உருவாக்கி அனைத்து வசதிகளையும் செய்தான்.
 
வியாதி, வறுமை, சாவு, மனக்கவலை வயோதிகம் அருவருப்பு ஆகியவை  என்றால் என்ன என்றே சித்தார்த் அறியாமல் வாழ்ந்தான்.
 
மித்ராயி என்ற ஆசிரியர் மூலம் பல மொழி கணிதம் கலைகள் கற்றான்.
 
உதாயி என்ற ஆசிரியர் மூலம் பல்வேறு அறிவு நூல்களைக் கற்றான்.
 
இவன் காலத்தில் இவன் தேசத்து மக்கள் பேசிய மொழி பாலி.
 
பன்னிரண்டு வயதில் மாளிகையில் விளையாடும் போது அம்பு தைத்த அன்னப்பறவைக் காப்பாற்றி மருந்திட்டுப் பாதுகாத்தான்.இதனால் அம்பு எய்திய அவன் உறவுக்கார நண்பன் தேவதத் கோபம் கொண்டான்.
 
பதினைந்தாம் வயதில் சித்தார்த் கபிலவஸ்துவின் இளவரசன் ஆனான்.
 
ஆனால் அஸித் என்ற மஹரிஷி ”மனிதர் குலம் என்ற மரத்தில் பூத்த அரிய மலர் இவன் இவன் துறவு கொண்டு உலகிற்கே தர்மம் போதிப்பான்” என்று கூறி வாழ்த்திட அப்பா சுத்தோதனன் மனம் கவலை கொண்டார்.
 
பத்தொன்பதாம் வயதில் சுத்தோதனன் தன் அருமை நண்பன் சுப்பிரபுத்தாவின் ஒரே மகள் யசோதராவைக் கல்யாணம் செய்து தனியே குடிவைத்தான்.சுவர்க்கத்தையே மாளிகைக்குள் கொண்டு வந்தாற்போல் சகல வசதிகளுடன் சித்தார்த் வாழ்ந்தான்.
 
இவன் மனம் ஒரு போதும் சன்யாசி ஆவதில் நாட்டம் கொள்ளக் கூடாது என்று இவன் அப்பா மிக மிக கவனமாக இருந்தான்.சதா இவன் முன் சுவர்க்கம் போல் அரண்மனை மாளிகை இருந்தது.
 
ஒரு முறை இவன் அப்பா லும்பினி வனத்தில் இருக்கும் போது இவன் அவரைப் பார்க்கப் பல்லக்கில் சென்றான்.அப்போது வழியில் ஒரு வயோதிகரைக் கண்டான்.முதன்முதலில் மிக்க வயோதிக பாதிப்புக்கு உள்ளான மனிதரைக் கண்டான்.அதைப் பற்றி பல்லக்குத் தூக்கியிடம் வினவ அவர்கள், ”நாம் ஒரு நாள் இப்படி ஆவோம்” என்றது முதல் சித்தார்த் மனம் கலங்கினான்.
 
மற்றொரு தினம் ஒரு வ்யாதியஸ்தரையும் காண அதைப் பற்றி வினவ மனிதன் வ்யாதிகளில் சிக்கிச் சீரழிவான் என்று அவர் அறிய மீண்டும் கலங்கினார்.
 
மற்றொரு முறை சிலர் பிணம் ஒன்றைத் தூக்கிச் செல்வதைக் காணும் போது மனிதனுக்குச் சாவு உறுதி என்று உணர்கிறான்.
 
வயோதிகம் - வ்யாதி - சாவு ஆகிய மூன்று உண்மைகளுக்கு சித்தார்த்தை மிக மிக வருத்தின.அவன் மனதில் அவற்றிற்கான காரணங்கள் சதா கேள்வி கேட்கப் பட்டன.அதிலிருந்து தப்ப வழியில்லையா என்று யோசித்தே வாழ்ந்தான்.
 
அக்கட்டத்தில் யசோதரை ஒரு ஆண் குழந்தைக்கு அன்னை ஆனாள்.
 
அக்குழந்தைக்கு ராகுல் என்று பெயர்.
___________________________________________________
தன் மனதில் தெளிவு ஏற்பட சித்தார்த் யாருக்கும் தெரியாமல் இறுதியில் தன் வீட்டை விட்டு வெளியேறினான்.
 
போகும் முன் தன் மனைவியையும் குழந்தையையும் ஒரு முறை பார்த்தான்.
 
குழந்தையைத் தூக்கிக் கொஞ்சலாம் என்றால் அது அழுதால் மனைவி எழுந்து விடுவாள் என்று எண்ணி விலகினான்.
 
ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் தன் நண்பன் சந்தகனுடன் வெளியேறினான்.
 
சித்தார்த்தின் வயது 21.
 
கோலிய தேசத்தில் உள்ள அனோமா என்ற ஆற்றங்கரைக்கு வந்தான்.
 
அங்கே பார்க்கவர் என்ற மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் அவன் இருந்தான்.
 
தன் கழுத்தில் இருந்த உயர் ரக மணிமாலையை சந்தகனுக்குக் கொடுத்தான்.
தன் க்ரீடத்தைத் தன் அப்பாவிடம் தரச் சொன்னான்.
தன் குதிரையை அன்புடன் வருடிக் கொடுத்து வழியனுப்பினான்.
 
அதன் பின் ஆற்றில் குளித்து தன் வாளால் தன் அழகிய தலைமுடியை அறுத்து வீசினான்.
 
அப்பகுதியில் வந்த ஒரு வேடனிடம் தன் ராஜ அலங்கார உடையைக் கொடுத்து அவனது எளிய தூய வெண்மையான உடையை வாங்கி உடுத்தினான்.
____________________________________________
சந்தகன் மூலம் சித்தார்த் தேசத்தை வீட்டை இல்லற வாழ்வைத் துறந்த செய்தி கேட்டு அவன் பெற்றோர் மனைவி உறவுகள் அன்பர்கள் மக்கள் மனம் மிகவும் கலங்கினர்.தேசத்தின் எதிர்காலம் குறித்து வருந்தினர்.அரச குரு சித்தார்த் இருக்கும் இடம் வந்து பல அறிவுரைகள் கூறியும் அவன் மனம் மாறவில்லை.
_____________________________________________
_____________________________________________
ராஜ க்ருஹத்தில்...
தன் ஆன்மீகத் தேடல் பயணத்தை ஆரம்பித்த சித்தார்த் ராஜ க்ருஹம் என்ற மாநகரத்துள் வரும் போது அவ்வூர் அரசன் ப்ரஸித்தி பெற்ற பிம்பிசாரா மிகப் பெரிய யாகம் செய்தான்.அதில் 1000 பசுக்களை பலியிட முற்பட்ட போது சித்தார்த், அப்பாவிப் பசுக்களை நம் நலனுக்காக பலி தரும் போது அதனால் வரும் தீவினையில் கொடுமையான விளைவுகளை விளக்கி அப்பசுக்களைக் காத்தான்.அதன் மூலம் அரசனின் அன்பைப் பெற்றான்.
___________________________________________
உருவேலா பகுதியில்....
அதன்பின் சித்தார்த் உருவேலா என்ற பகுதியில் வனத்தில் வாழ்ந்த ஐந்து முனிவர்களின் அன்பைப் பெறுகிறான்,அவர்களே இவனுக்குப் பின் மாணவர்கள் ஆயினர்.
 
[கெளடில்ய குலபுத்ரா, தசபல காஷ்யப பாஷ்பர், புத்திர, அஸ்வஜித்]
__________________________________________
போதி மரத்தடியில்.....
உடலை மிகவும் வருத்திக் கொண்டு தவம் செய்த போது சித்தார்த் பலவீனமாகி நினைவு இழந்தான்.
 
அப்போது உயிரைக் காப்பாற்ற வேண்டி அவர் உண்டார்.
அதைப் பார்த்து ஐவரும் ”இவன் நாக்கிற்கு அடிமை” என்று தவறாக எண்ணி விலகினர்.
அதன் பின் சித்தார்த் நைரஞ்சரா என்ற ஆற்றின் ஓரம் உள்ள அரச மரம் [இதுவே இன்று உலகம் போற்றும் போதி மரம் - பீஹார் மாநிலம், புத்த கயாவில் உள்ளது] நிழலில் 28 தினங்கள் தவத்தில் இருந்தார்.
 
அப்போது 29நாள் காலை அப்பகுதியில் வாழும் ஆயர் ஒருவரின் மகள் சுஜாதா கொடுத்த பால் சாதம் உண்டு வ்ரதம் போக்கினார்.சுஜாதைக்கு வாழ்வின் உண்மைகளை விளக்கினார்.மனித வாழ்வின் ப்ரச்சனைகள், பிறப்பு இறப்புக்குக் காரணம் - அனைத்துக்கும் பதில் - ஆசை.இதை இவர் SELFTUAL ஆக உணர இத்தனை காலம் ஆயிற்று.பிறர் கூறுவதை ஏற்றுக் கொண்டு கண்மூடித் தனமாக வாழ விரும்பாமல் தான் அனுபவித்துப் பார்க்கவே சித்தார்த் துடித்துள்ளான்.அதுவே போதி மரத்தடி ஞானம் - அதுவே புத்த பூர்ணிமா நாள். [அதுவும் வைகாசி விசாகப் பூர்ணிமை]
 
மரம் போல் தன்னலம் இன்றித் தன்னையே இறை உணர்வுடன் உலக சேவைக்கு ஆட்படுத்த வினை போகும்.அதுவே போதி ஞானம்.
_________________________________________
சித்தார்த் புத்தர் ஆனான்....
பிறப்பு இறப்பு வாழ்க்கை ப்ரச்சனைகளில் இருந்து விடுதலை பெற வெறியுடன் கூடிய ஆசையை மனம் அடக்க வேண்டும் இயல்பாக இருக்க வேண்டும் என்று உண்மை உணர்ந்த சித்தார்த் புத்தன் ஆனான்.உண்மையான புத்தி கொண்டவன் புத்தன்.[அறிவுடையோன்]
 
புத்தர் தன் பயணத்தைத் தொடர்கிறார்....
 
புத்த சமயம் பிறந்தது....
உருவேலா வனப்பகுதியில் உபகன் என்ற அந்தணனிடம் தான் உணர்ந்த உண்மைகளை விளக்கிட அவனும் அதில் உள்ள ஆழ்ந்த சத்யத்தை அங்கீகரிக்க, புத்தருக்குத் தன்னம்பிக்கை உண்டாக, அவர் முக்தி ஸ்தலமாம் வாரணாசி - காசி மாநகர் செல்கிறார்.அதனருகில் உள்ள ப்ரஸித்தி பெற்ற சாரணாத் வனம் சென்று தன் ஐந்து பழைய நண்பர்களையும் கண்டு அவரிடம் தன் அனுபவத்தைக் கூற அவர்களும் அதை எளிமையாய்ப் புரிந்து கொண்டனர்.அந்த சாரணாத்தே புத்த மதம் பிறந்த இடம் ஆகும்.
 
அவ்விடத்தில் [புத்தர் அமர்ந்து பாடம் சொன்ன இடம்] பின்னர் அசோகர் மிக உயர்ந்த நினைவுத் தூண் கட்டினார்.அது இன்றும் உள்ளது.உலகில் உள்ள புத்த மத மக்கள் அனைவரும் இவ்வூருக்கு வருவர்.
 
செல்வத் திருமகன் யசன் 
வாரணாசி மாநகரின் ஒரு செல்வக் குடும்பத்து மகன் யசன்.
அவன் சாரணாத்தில் புத்தர் இருப்பதைப் பற்றி அறிந்தான்.
இளைஞன் ஆன அவனும் இளைஞனான புத்தரைக் கண்டான்.
அவரிடம் தன் ஆன்மீக வினாக்களுக்கு உரிய பதிலைப் பெற்றான்.
அவனது பற்பல ஐயங்கள் தீர்ந்தன.
அவன் தன் பெற்றோர் மனைவியுடன் அன்பர்களுடன் புத்தர் கூறிய நல்வழியை மேற்கொண்டு அவரது கருத்துக்கள் பரவப் பெரிதும் உதவினான்.
 
சாரணாத்தில் இருந்து கொண்டு புத்தர் தம்மை அண்டி வந்த அனைத்து மக்களுக்கும் எவ்வித பாரபட்சம் இன்றி ஆன்மீக வழிகாட்டினார்.அதனால் அவரது புகழ் பரவியது.அவரது ஆன்மீக அறிவுரை எளிமையாக இருந்தது.பின்பற்றுவதில் எளிமை இருந்தது.சாதி இன மதம் பால் வேறுபாடு இன்றி இருந்தது.அவர்கள் பல ஊர்கள் சென்று புத்தரின் அறவுரைகளைப் பரப்பினர்.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அனைவரும் கூடிய வரை ஒரே இடத்தில் வந்து கூட ஏற்பாடு ஆயிற்று.
 
கண்மூடித் தனமான வழிபாடு....
அக்னி காஷ்யபர் என்ற ஒருவர் கண்மூடித் தனமாக வேதச் சடங்குகள் செய்வார்.
இவர் பிம்பிசார ராஜாவின் மதிப்புக்கு உரியவர்.
அவரிடம் சடங்குகள் எதற்காகச் செய்யப்பட வேண்டும் என்று விளக்கினார்.
கண்மூடித் தனமான சடங்குகளை ஒதுக்கினார், எதையும் புரிந்து கொள்ள வழிகோலினார்.
 
ராஜக்ருஹத்தில் புத்தர்...
அக்னி காஷ்யபரும் புத்தரும் பிம்பிசார ராஜாவை சென்று பார்த்தனர்.
புத்தருடன் தன் மரியாதைக்குரிய முனிவர் வருவதைக் கண்டு ராஜா மிக மகிழ்ந்தான்.
அவ்வூரில் இருந்து புத்தர் தன் அறவுரைகளைக் கூறிட குறிப்பாகச் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்குக் கூறினார்.பல குற்றவாளிகள் மனம் மாறி விடுதலை ஆயினர்.
 
புத்தரின் அறக்கருத்துக்கள் பாரத தேசத்தின் வேதங்களுக்கு எதிரானவை அல்ல.
அவற்றின் உண்மையான உட்பொருளை அவர் எளிமையாக விளக்கினார்.
தெய்வத்தை வைத்துக் கொண்டு வெறும் சுகபோக வாழ்க்கைக்கு ஆதாயம் தேடுவதை அவர் கண்டிக்கிறார்.
உயிர்க்கொலை, பலி, கண்மூடித் தனமாக மேற்கொள்ளப்படும் சடங்குகள் இவற்றை எதிர்த்து யோசிக்க வைத்தார்.
எதையும் பகுத்துப் பார்த்து சிந்திக்கும் அறிவை வளர்க்கக் கூறினார்.
ஆனால் புத்தருக்குப் பின் வந்த அவர்வழித் துறவிகள் அவற்றை மறைத்து அவர் தெய்வ மறுப்புக் கொள்கை - நாஸ்திகம் பேசியதாக மதம் வளர்த்து விட்டனர்.
இது அனைத்து மதங்களிலும் உண்டாவது தான்.
ஆனால் இன்றுள்ள புத்த மதம் பல தெய்வ வழிபாடுகள், சடங்குகள், பூஜைகள் தந்த்ர விதிகளைக் கொண்டவை.
ஆன்மீகம் என்பது மனிதனின் மனம் தரமான வழியில் மாறிடவே, அதன் மூலம் அவன் இன்பம் துன்பம் கடந்த விடுதலை உணர்வைப் பெறுதல் வேண்டும்,, அதற்கே ஆன்மீகப் பயிற்சி என்று அவர் கூறியதே உண்மை.
 
 
ப்ரதானமாய் புத்தருடன் 11 சீடர்களே இருந்தனர்.
ஆனால் அவரைப் பின்பற்றினோர் தேசம் எங்கும் சென்று அவரது கொள்கைகளைப் பரப்பினர்.
 
புத்தரின் தந்தை சுத்தோதனரும் சித்தி கெளதமியும் அவரைக் காண மிக மிக ஆசை கொண்டு கபிலவஸ்துவுக்கு அழைக்க அவரும் சென்றார்.
 
புத்தர் தன் சொந்த ஊரில்...
கபிலவஸ்துவில் பெரும்பாலும் அவரையும் அவர் சீடர்களையும் மக்களும் அரச குடும்பமும் அமோஹமாய் வரவேற்கவில்லை.காரணம் அவர் தேசத்தை விட்டு விலகிய ஆற்றாமையே.ஆனால் தந்தையும் சித்தியும் சிலரும் வரவேற்று உபசரித்தனர்.
ஆனால் அவர் பிட்சை எடுத்து உண்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை, கெளரவக் குறையாகக் கருதினர்.
புத்தரிடம் தந்தை அவர் தம்மை அவமானம் செய்வதாகக் கூறினார்.அப்போது புத்தர், ”அப்பா, நீர் அரசன், நான் சன்யாசி.தேசம் எனதல்ல, வீடு எனதல்ல, என் சன்யாசி வாழ்வில் பிட்சை ஏற்றே உண்ண வேண்டும்”
 
சில காலம் அவ்வூரில் புத்தர் வாழ்ந்து தன் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அறவுரைகள் கூறிட, அவர் சித்தியும் தந்தையும் சன்யாசிகள் ஆயினர்.சித்தியின் வேண்டுகோளுக்கு ஏற்பப் பெண்களுக்கும் சன்யாசிகள் ஆகும் அனுமதி அவரால் தரப்பட்டது.
 
மனைவியும் மகனும்....
இக்கட்டத்தில் ஒரு நாள் புத்தர் தம் சீடர்களுடன் மதியம் உண்ணும் போது, தூரத்தில் இருந்து மனைவி யசோதரா தன் மகன் ராகுலை அழைத்து, ”அதோ மிக கம்பீரமாக ஒளியுடன் இருக்கும் புத்தர் தான் உன் அப்பா.அவரிடம் உனக்குச் சேர வேண்டிய சொத்துக்களைக் கேட்டு வாங்கி வா” என்று அனுப்பினாள்.
 
அவனும் புத்தரை அடைந்து தன் தாய் கூறியதைக் கேட்க, அவரும் ”உன் தந்தை வைத்துள்ள சொத்து ப்ரபஞ்சத்தின் மிக உயர்ந்த சொத்து” என்று கூறி அவனுக்கு அறவுரைகள் கூறி, அவனைத் தன் மாணவன் ஆக்கினார்.
 
தன் சித்தி கெளதமியின் மகன் நந்தனும் அவருக்கு மாணவன் ஆனான்.
 
அதன்பின் தன் மனைவியிடம் சென்று அவளைப் பிரிந்ததன் நோக்கம் விளக்கி, மன்னிப்புக் கூறி, அவள் செய்த த்யாகத்தின் மேன்மை கூற அவளோ ”என்னையும் உம் மாணவி ஆக்கிக் கொள்க” என்று சரணம் புக, அவரும் அதை ஏற்றார்.
 
சாதி, இனம், மதம், மொழி, தேசம் பாராமல் பலரும் அவரது மாணவர்கள் ஆயினர்.
 
கபிலவஸ்துவில் அவர் தங்கிய காலத்தில் தன் தாயாரின் சமாதிக்கு அடிக்கடி சென்று அஞ்சலி செய்தார்.தன் கர்ப்ப காலத்தை மிக உயர்ந்ததாக மாற்றியதற்கு மரியாதை செய்தார்.
 
அவரது ஒரு சீடன் உபாலி.
அவன் மிக மிகத் தாழ்ந்த சாதி.
ஆனால் அவன் புத்தர் கூறிய ஒவ்வொரு அறத்தையும் பின்பற்றி மிக உயர் அறிஞன் ஆனான்.
அதே வேளை அவரது வளர்ச்சியையும் புகழையும் ஏற்காமல் அவரது மாணவர்களே அவருக்கு எதிராகவும் இருந்தனர்.
 
கோசல தேசம் - ரப்தி நதிக்கரை சிராவஸ்தி நகரில் அவர் பல காலம் வாழ்ந்தார்.
 
அதன் பின் 97வயதில் அவர் அப்பா இறக்கும் போது உடன் இருந்து அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்தார்.அதன்பின் தன் சித்தி மனைவி பிற பெண்களைக் கொண்டு பெண்கள் சங்கம் நிறுவினார்.
 
தன் நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் நதி நீர் பங்கீட்டில் போர் மூளும் அபாயம் வருவதைக் கேள்விப்பட்டு இரு தேச அரசுகளுக்கும் மக்களுக்கும் இயற்கையின் உண்மைகள் கூறி சமாதானமாகப் பங்கீடு செய்தார்.
 
அதன்பின் அவர் மிக நீண்ட காலம் வாழ்ந்த வைசாலி மாநகரம் சென்றார்.
 
அங்கு இருந்து அவர் கெளசாம்பி மாநகர் சென்று வாழ்கிறார் அதன் பின் ப்ரயாகை மாநகர் சென்றார்.
 
மகததேசத்தில் மன்னன் பிம்பிசாராவின் மனைவியும் இவன் மாணவியானாள்.
 
இதற்கிடையில் அவரது சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போயிற்று.அவர் அதைச் சரிசெய்தார்.
 
உழவனுடன் உரையாடல்...
ராஜக்ருஹம் ஊரில் அவர் ஒரு உழவன் வீட்டில் பிட்சை கேட்ட போது அவன் அவரைச் சாடி ஏளனம் ச்செய்தான்.அவர் உழைக்காத சோம்பேறி என்று தூற்றினான்.
புத்தர் ”உலகம் என் வயல், நானே உழவன் என் ஞானம் கலப்பை தர்மம் விதை அறவழி அறுவடை சமூஹ மேம்பாடு செல்வம்” என்று கூறினார்.
 
ராகுலசூத்ரம்
தன் மகனுக்கு 18 வயதானவுடன் தன் தர்மக்கொள்கைகள் அனைத்தையும் அவனுக்கு உபதேசம் செய்ய அவன் அதை எழுதினான்.அதுவே ராகுலசூத்ரம் என்ற ப்ரபல புத்த மத நூல்.அக்கட்டத்தில் புத்தரின் மாமனார் நீண்ட காலம் கழித்து அவரைக் கண்டு தூற்றி ஏளனம் செய்தார்.புத்தர் அமைதி காத்தார்.
 
ஆலவியில் காபாலிகனைத் திருத்துதல்
ஆலவி என்ற ஊரில் குழந்தைகளை நரபலி கொடுத்து வாழும் பயங்கர மந்த்ரவாதி ஒருவனைக் கண்டு அவனுக்கு வினைப்பயனை மிக விளக்கித் திருத்தினார் புத்தர்.
 
வேடனுக்கு அறிவுரை
மகத தேசத்தில் வனத்தில் இருக்கும் போது ஒரு வேடன் சதா விளையாட்டாய் மான்களைக் கொல்வதைக் கண்டு அவனுக்கு வினைப்பயனை விளக்கி அவர் திருத்தினார்.
 
பிம்பிசாரனின் கற்படிகள்
மகததேசத்தில் க்ருத்ரகூட மலையில் அவர் பல காலம் அறவழி உரைக்க மக்கள் பலர் தினமும் அவர்பால் செல்ல அவர்கள் எளிதில் ஏற பிம்பிசாரன் கற்படிகள் அமைத்தான்.
 
அங்குலிமாலியைத் திருத்துதல்
இவன் ஒரு குருவின் கீழ் கல்வி கற்றான்.குருவின் உயர் மதிப்பைப் பெற்றான்.அவரோ மனிதர்களின் வினைகளைத் தீர்ப்பதே நீ எமக்குத் தரும் தட்சிணை என்கிறார்.அதற்கு அவன் வழி தேட ”மனிதனின் கைகள் வெட்டப்படுங்கால் வினை போகும்” என்று கூற இதை அவன் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு பலரது கைகளை வெட்டி விரல்களைச் சேகரித்தான்.இதை அறிந்த அவன் தாய் மனம் கலங்க புத்தர் இவனுக்கு உண்மையான அர்த்த விளக்கம் தர அவன் அவரது முக்கிய சீடர்களில் ஒருவன் ஆனான்.அங்குலிமாலி போல் தான் இன்று மக்கள் மேலோட்டமாக எதையும் புரிந்து கொண்டு செய்வதைக் காண்க.
 
விசாகாவின் வினை தீர்தல்
விசாகா என்ற  வினையின் பலனை புத்தர் மூலம் உணர்ந்து அவள் தேடிய பொருளைக் கொண்டு மடம் [விஹாரம்] கட்டி அதன் மூலம் பல அறச்செயல்கள் செய்தாள்.
 
ஆம்ரபாலியின் சேவை
ஆம்ரபாலி என்ற தீய வழியில் பணம் தேடும் பெண் புத்தரின் அறவுரைகளில் ஈடுபட்டு மனம் மாறி தன் பொருளைக் கொண்டு வாங்கிய மாந்தோப்பை விற்று, வைசாலி மாநகர் அருகில் ஆம்ரவனப்பகுதியில் விஹாரம் அமைத்து அதில் எண்ணற்ற ஏழைகளுக்கு அன்னதானம் செய்வாள்.புத்தரும் அவளது அன்பிற்கு மரியாதை கொடுத்து அவள் விஹாரத்தில் உண்டார்.
 
கொள்ளைக்காரர்களைத் திருத்தியது
சூன்யப்ராந்தம் என்ற பகுதியில் கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்ட மக்களை அவ்வூர் வியாபாரியின் வேண்டுகோளுக்கு ஏற்ப புத்தர் நல்வழிப்படுத்தினார்.
 
ஒரு பிடி கடுகு...
க்ருஷா கெளதமி என்ற ஏழைப் பெண்ணின் குழந்தை இறந்தது.புத்தரைக் கண்டு அவரை அதை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள்.அவரோ ”ஒரு பிடி கடுகு கொண்டு வா” என்றார் அவள் ஓடுகையில் ”பெண்ணே! யாரும் சாகாத வீட்டில் அக்கடுகு தரப்பட வேண்டும்” என்று கூற அவளும் அதே போல் வீடு வீடாகச் சென்று கடுகு கேட்க அனைவரும் அவள் தேவை கேட்டு ஏளனம் செய்ய மரணம் பற்றிய உண்மை உணர்ந்தாள்.புத்தர் வழியில் அறவாழ்வை மேற்கொண்டாள்.
 
பிம்பிசாரனின் மகததேசத்தில் மக்கள் புத்தரை மிக மதித்தனர்.
ஒவ்வொரு ஊரிலும் க்ராமத்திலும் அவரது கொள்கைகளை விளக்கும் விஹாரங்கள் இருந்தன.
 
படகோட்டிகளுக்கு அறவுரை..
புத்தர் பாடலிபுத்ர நகரம் வழியே போகும் போது கங்கையைக் கடக்க வேண்டி இருந்தது.ஒவ்வொரு படகோட்டியும் அவரை வரவேற்க அவரோ ”ஏழைகள் கங்கையைக் கடக்க உதவுக அனைவருள்ளும் ஒரே பரம்பொருள் தான் உள்ளது” என்று அன்புடன் கூறினாராம்.
 
முட்டாள் இளவரசன்...
ஒரு சிற்றரசன் புத்தரிடம் உண்மையான சாகாவரம் என்ன என்பதை உணர்ந்து அறிகிறான்.இதைப் புரியாத புத்தரின் சீடன் ஒருவன் அரசனின் மகனிடம் ”உன் அப்பன் சாகான் அவனே நித்ய அரசன் உனக்கு அரச பதவி இல்லை” என்று கூற அறிவிலியான மகனோ மதம் கொண்ட ஆனையைக் கொண்டு மிதிக்க விட புத்தர் தப்பினார் அறிவிலிக்கு உண்மைப் பொருள் உணர்த்தினார்.
 
குசீ மாநகரில்...
புத்தர் என்பதவாது வயதில் பாவா நகர் சென்றார்.
அவ்வூரில் சந்தன் என்ற கொல்லனின் வீட்டில் தன் சீடருடன் உண்டார்.
ஆனால் அவ்வுணவு மூலம் அவருக்கு உடல் நலம் பாதித்துள்ளது.
இதை அடுது அவர் தன் சீடர்களுடன் குசீ மாநகரம் சென்றார்.
ஹிரண்யவதி என்ற நதிக்கரையில் இருந்த சாலமரங்கள் இரண்டின் நடுவில் நிழலில் அவர் உடல் அயர்ந்து ஓய்வு கொண்டு தன் இறுதிக் கட்ட போதனைகளை விளக்கிக் கூறி இரவில் உடலை நீத்தார்.
 
புத்தர் முக்தி அடைந்ததை அறிந்து பலரும் வந்து அஞ்சலி செய்தனர்.
அவரது உடல் எரிக்கப்பட்டு சாம்பலை எட்டு வெவ்வேறு ஊர்களில் மண்ணில் இட்டு அதன் மீது விஹாரங்கள் எழுப்பினர்.
 
புத்தருக்குப் பின் அவரது சீடர்கள் அவரது கோட்பாடுகளைப் பின்பற்றினோர் தேஅம் முழுவதும் அதைப் பரப்பினர்.அதன்பின் அசோக சக்ரவர்த்தி மூலம் புத்தரின் வழிகாட்டும் அறக்கருத்துக்கள் சமயமாகி தேசம் முழுவதும் பரவியது.உலகில் குறிப்பாகக் கிழக்கு நாடுகளில் பரவிற்று.
 
ஆனால் புத்தருக்குப் பின் அவரது கருத்துக்கள் மாற்றப்பட்டன.
சமூஹம் அரசியல் ஆதாயம் ஆகியவற்றிற்கு ஏற்ப மாறின.
இன்றுள்ள புத்த மதம் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.
ஆனால் அறம் மாறாது.
அதுவே பாரத தேசத்தின் சத்யம்.
Continue reading
  546 Hits
546 Hits

Chidhambaram of the west Tamils - Perur

Kanchivaai Perur is the oldest Shiva shetra in Kongu desam.
It is on the bank of river Noiyal.
It is on the way to Chera kingdom via Veera Keralam.
Kovan Veerakeralm Puthur was the name given after Rajarajan's expedition on this area, now CBE.
This place is considered to be the head office for Shivasim in Kongu desam.
The historical events in life of Sundarar and King Cheramaan Perumal Nayanar are having specific relations with this Perur.
 
Pateehwaram
Legend says Patti the calf of Kamadenu worshipped this Linga and it is called Pateeshwaram.
Historically it is related to aayars - cow herds of western ghats of Veera Keralam.
Patti - groups of cows.
 
Patti people - aayar's kuladevatha is Patteeshwarar.
 
Devi is Pachai Nayaki - Mathangi.
 
The present temple is done by Achudha Appa Nayak [Madurai nayaks] in 16th century A.D.
 
Though separate Devaram hymns are not given Sundarar and Sekizhaar mentions in their hymns.
 
Two times Sundarar visited Perur.
 
From Avinashi he came here and saw Lord.
 
He was received by Cheramaan Perumal Nayanar here and then through Kovaipudhur route they reached Chera kingdom and then Kondungalore.
 
In second visit both Sundarar and Chera king from Thiruvaaroor came here gave discourses and left to Kondungalore and Sundarar shed his life.
 
The most speciality of this shetra is ''Chidhambaram of western Tamil nation'' - why?
 
In Chidhambaram the last hymn by Sundarar mentions that inside Kanaka Sabai the sacred most sanctum of Chidhambaram he saw Kaanchivaai Perur Lord.
 
The present Natarajar hall is being constructed by Achudha Appa nayak and one of our ancestor - dancer of this temple from Thiruvaaroor.
 
The uniqueness of the architecture is the red granite and moolasthanam katrali was Rajaraja's time.
 
The oldest charm can be still felt in prakarams and moolasthanam.
 
The carvings in Natarajar sabai pillars in 16 A.D adds to the greatness of temple.
 
Many Saiva sects have their muts here.
 
The place is still vibrating with Sundarar and his beloved friend Chera King's sacred talks and hymns and vibrations.
 
Devi is very unique and in standing posture like Meenakshi [Raja Mathangi] the energy for all wisdom, hence CBE is very famous for education.
 
Try to visit Kaanchivaai Perur.
 
Om Shivo hum
Continue reading
  498 Hits
498 Hits

Oldest tunes on Earth - Devaram pan isai

The oldest tunes on earth still well preserved by Oodhuwars of temples since 6 A.D has to be exposed to children. Tamils the oldest people on earth in culture and heritage has great art forms. Rajaraja Chola compiled all the Devarams and set tunes through Thiruneelakanda yaazh paanar's wife Mathanga soolaamani ammaiyar's descendants.
 
He arranged special Oodhuvars in big temple and other Shiva temples across the nation and promoted Devaram hymns. When we go to Shiva temples let us listen if an Odhuvar sings. In Madurai, when we studied, we visit temple by evening so that we can listen to Odhuvar. Similarly I listen to Thiruvanmeyoor Odhuvar. Please make our-self and children to listen in audio and you tubes telling oldest tunes on Earth.
 
We salute Rajaraja Chola - thirumurai kanda Cholan for this great work.
Continue reading
  516 Hits
516 Hits

Poompuhar - the ancient city of Tamils - fresh news

பூம்புகார் - புதுச்செய்திகள்
 
புகார் - மிக வளமும் தெய்வீகம் பொலிந்த நகரம்
 
புகு ஆறு - புகாறு - புகார்
 
அவ்வூரில் உள்ளோர் எதற்காகவும் வேற்றூர் செல்லார்.ஏனெனில் அனைத்தும் அவ்வூரின்கண் கிடைக்கும் படி சோழர் தம் வளமான ஆட்சி நிலவிற்று.
 
தன் இரு கரைகளிலும் அடர்ந்த வனங்களை செழிக்கும் ஆறாதலால் கா விரி...காடுகளை விரிவடையச் செய்யும் நதி.
 
மக்களை உணவு கொடுத்துக் காக்கும் கா ஆறு - காவிரி.
 
சம்பாபதி என்று பழம்பெயர் - சம்பாபதியாகிய கொற்றவை அமர்ந்த ஊர்.
 
கடலில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் எழுபது அடி ஆழத்தில் கோயில் மூழ்கியதைச் சுட்டு மீனவர் கூறுவர்.
 
ஐரோப்பியக் கப்பல் மூழ்கியதை இன்னும் மீட்கவில்லை.
 
காவிரிப்பட்டிணம் - சதாசிவப் பண்டாரத்தார் - அவரைக் கொண்டு உருவாக்கியவர் தமிழறிஞர் நா.தியாகராஜன் ஐயா
 
கடற்கரையில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை அன்றைய பூம்புகார் பரவி இருந்தது.இதில் எவ்வித ஐயமும் இல்லை.கடலடி ஆய்வுகள் காட்டும்.
 
இன்று பூம்புகாரைச் சுற்றிப் பல பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பல கட்டிடச் சுவருகளின் எச்சங்கள் புதையுண்டு உள.
 
காசுகள், சுடுமண் பொருட்கள், மணிகற்கள் கிடைத்துள.
 
நீண்ட படகுத்துறை [மங்கை மடம் அருகில்] அகழ்வாய்வில் வெளிப்பட்டது.அதில் உள்ள மரத்துண்டு கி.மு முன்னூறு என்று கார்பன் டேடிங் மூலம் தெரிய வந்தது. அப்பகுதியில் சதுர, வட்ட வடிவில் பல்வேறு உலோகக் காசுகள் கிட்டின.
 
வெள்ளையன் இருப்பு - யவனர்களின் குடியிருப்புப் பகுதி.
இப்பகுதியில் வெள்ளைத் தேவன் என்று பண்டையத் தமிழர் வணங்கிய பலதேவரின் கோயில் இருந்திருக்க வேண்டும்.பலதேவருக்கு என தனிக்கோயில் புகாரில் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறும்.
 
இப்பகுதியில் கி.பி இரண்டாம் நூற்ராண்டின் அகஸ்டஸ் க்ரேக்க மன்னனின் காலத்து செப்புக் காசு ஒன்று கிடைத்தது.
 
பூம்புகார் பல்லவனீச்சரம் கோயிலின் இடது பக்கம் கி.பி முதல் நூற்றாண்டுக்கும் முந்தைய புத்த விஹாரம் அகழ்வாய்வில் வெளிப்பட்டது.அதில் புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. இவ்விடத்தில் தான் அசோகரின் மகனும் மகளும் [மஹிந்தன், சங்கமித்ரா] தங்கியிருந்து இலங்கைக்கு புத்த மதத்தைப் பரப்பச் சென்றனர்.இவ்விஹாரம் குறித்து பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த மத நூல் பதிவுசெய்கிறது. இவ்விடத்தில் தான் மணிமேகலை தொழுத பளிங்கு அறையுடன் கூடிய புத்த பாதம் [நாகார்ஜுன கொண்டாவில் இருந்து கொண்டு வரப்பட்டது] இருந்தது.இவ்விடத்தில் தான் மாதவியும் மணிமேகலையும் அறவண அடிகளின் கீழ் துறவி ஆயினர்.கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை இவ்விஹாரம் இயங்கி இருக்க வாய்ப்பு உண்டு.
 
கணதாசன் என்ற புத்த கவி இவ்விஹாரத்தில் இருந்து புத்த மதம் குறித்த பாலி மொழி இலக்கியம் [அபிதான அவதாரம்]ஒன்றை எழுதினான்.அதன் முன்னுரையில் காவிரிப்பூம்பட்டிணத்தைக் குறித்து, தன் மாணவன் சுமதி என்றவனின் வேண்டுகோளுக்கு ஏற்ப இவ்விலக்கியத்தை எழுவதாகக் கூறுகிறான்.
 
இப்பகுதியில் சில புத்த குருமார்களின் புனித எலும்புகள் கிடைத்தன.
 
கடலால் அழிந்த பூம்புகாரை அடுத்த அதன் உட்பகுதிகள் கி.பி பன்னிரண்டு வரை அழியவில்லை.மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழனை வென்றுக் காவிரிப்பூம்பட்டிணத்தை அழிக்கையில் கரிகாலன் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு அளித்த பதினாறுகால் தமிழ் மண்டபத்தை மட்டும் தமிழ் மீதுள்ள பக்தியால் விட்டுச் சென்றான்.
 
மேலும் கி.பி ஆறு, ஏழு --- பத்து வரை தேவாரம், பட்டிணத்தார் பாடல்கள் இவ்வூரைக் குறிக்கின்றன.
 
திரிவேணிப்பள்ளம் பகுதியில் கரிகாலன் காலத்து [கி.பி இரண்டு] நீர்ப்பாசனக் குழாய்கள் அகழ்வாய்வில் கிட்டின.
 
கடாரன் துறை [கழுதைகாரன் துறை] சங்க காலத்துக்கும் முற்பட்ட மீனவர் தலைவன் மத்தி என்போன் வாழ்ந்த இடம்.இவனிடம் இருந்தே இவ்வூரினைக் கைக்கொண்டனர் சோழர்.
 
இது கடாரம் தேசம் [கம்போடியாவுக்குச் செல்லும் கப்பல்கள் மட்டும் நின்ற இடமாக இருக்கலாம்]
 
சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சாய்க்காடு அதே பெயரில் இன்றும் தேவார சிவ ஸ்தலமாக உள்ளது.
 
தலைச்சங்காடு - சிலப்பதிகாரத்தில் மாடல மறையோண் வாழ்ந்த ஊராகும்.அவனே கோவலன் மாதவிக்கு இடையில் தூதன் ஆக இருந்தான்.
 
திருக்கடவூர் - மாதவி வாழ்ந்த இடம்.
 
திருவெண்காடு - முக்குளம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றன.இன்றுள்ள புதனே அன்று மன்மதன்.
 
நெய்தல் வாசல் - கி.மு ஆறாம் நூற்றாண்டின் ஊர், பூம்புகாரின் நுழைவாயில்.
 
கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் பூம்புகார் விளங்கியது.
 
கடல் இன்று எழுபது அடி உயர்ந்துள்ளது.
 
பனி உருகு காலத்தே கடல்கோள் உண்டாகி இவ்வூர் அழிந்தது.
Continue reading
  592 Hits
592 Hits

Kanchipuram before 2500 years

காஞ்சி மாநகரம் - 2500 ஆண்டுகட்கு முன்
சங்கநூல் பெரும்பாணாற்றுப்படையின் பதிவு
 
நகரேஷு காஞ்சி - அதாவது நகரம் எனில் அது காஞ்சியே என்று மஹாக்கவி காளிதாஸன் பாடிய பல்லவ - தொண்டை தேசத்தின் மிகத் தொன்மையான ஊர் காஞ்சி - கச்சி மூதூர்
 
முக்தி தரும் நகர் ஏழில் ஒன்றாம் காஞ்சி....
 
அவ்வூரைப் பற்றி...
 
காஞ்சியின் வெளியில் அடர்ந்த சோலைகளில் யானைப் படை வீரர்கள் யானைகளைப் பழக்குவர்.யானைக்கு நெய் ஊற்றிப் பிசைந்த சோற்று உருண்டைகள் தருவர்.யானையைப் பழக்குபவனை - கோல்காரன் என்றும் பரிக்கோல்காரன் என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.
 
அவன் சற்று அயரும் போது குரங்குகள் சோற்று உருண்டையில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு மரங்களில் தாவும்.
 
மரத் தேர்கள் அதிகம் ஓடுவதால் ஊரில் சாலைகள் குழிகள் கண்டன.
 
பல போர்கள் கண்ட வீரர்கள் வாழும் வீடுகளும், பண்டங்கள் விற்கும் வியாபாரிகளின் கடைகளும் அதிகம் உள.
 
ஏழைகளுக்கு உதவும் சத்திரங்கள் பல உள்ளன.
 
பறவைகளுக்குத் தன்னையே உணவாகத் தரும் இனிய தேன் பலா ஒத்த நகரம் போல் மக்களின் உயர் வாழ்வுக்கு உதவும் மாநகரம் காஞ்சி.
 
விஷ்ணுவின் கொப்பூழில் நான்முக பிரம்மனைப் படைத்த தாமரையின் பொகுட்டு போல் ஊர் உள்ளது.பல்வேறு கலைகள் கல்விகள் உருவாகும் ஊர் இதுவாகும்.
 
கடல் சூழ் உலகில் உள்ள பல உயர்ந்த சமயங்களின் சான்றோர்கள் வாழும் ஆன்மீக பூமியாய், முக்தி தரும் நகர் ஏழில் ஒன்றாய் உள்ளது.பல இன மக்களும் இவ்வூரில் ஒற்றுமையாய் உள்ளனர்.
 
காஞ்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் மிகத் தொன்மை மிக்கவை.
 
எப்போதும் வெற்றியை உடைய மாநகரம் இதுவாகும்.
Continue reading
  506 Hits
506 Hits

Symbolism behind Kannagi removing her left breast

கண்ணகி இடது மார்பை அகற்றுதலின் பின்னணி...
 
கண்ணகி தன் இடது கொங்கையைப் பிடுங்கி எறிந்தாள்.
மதுரை எரிந்தது.
இதன் உட்பொருள் என்ன?
மிக்க கோபத்தின் ஆற்றாமையால் தன் உடலைக் காயப் படுத்துதல் எனலாம்.
தன் உடல் சுகத்தைக் கணவனுடன் அகற்றினாள் என்பது குறியீடு.
இவற்றிற்கு எல்லாம் மேலாய், மனித உடலில் சக்தியாகிய பெண்மையின் பாகம் இடது பாகம்.
அவள் தன் இடது பாக மார்பை அகற்றினாள் எனில், தன் பெண்மை தன்மை மாறி பூரண சிவ தத்துவமான ஆண்மையினுள் மெய்யுணர்வில் கலந்தாள்.
இதனால் தான் மீனாட்சிக்கும் நவராத்ரியில் சிவனின் கோலம் கொண்டு அலங்காரம் செய்வர்.
இதையெல்லாம் உட்படுத்தித் தான் மிக உயர்ந்த காவியத்தை இளங்கோ அடிகள் இயற்றினார்.
Continue reading
  520 Hits
520 Hits

What is the service to a language?

தமிழ்த் தொண்டு செய்ய வாரீர்...
 
தமிழ் மொழி
இன்று உலகில் உள்ள மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று
குமரிக்கண்டத்தில் ஆதிமனிதன் மூலம் உருவான மொழி
அதில் இருந்து பல்வேறு கிளிஅ மொழிகளைத் தோற்றுவித்த மொழி
குமரிக்கண்டம் பிரிந்த போது மக்கள் பிரிந்தனர், அவர்தம் மொழிகள் பிரிந்தன.மிகத் தொன்மை மிக்கத் தமிழின் வார்த்தைகள் ஆப்பிரிக்க, மொரீஷியஸ் பழங்குடி மக்களின் மொழிகளில் உள்ளன.
 
மொழி இல்லையேல் மனிதன் எண்ணத்தை வெளியிடவே முடியாது என்ற மாபெரும் உண்மையை உணர்ந்த தமிழன் அதை தெய்வமாகவே போற்றினான்.உலகில் வேறு எந்த மொழியையும் மக்கள் வணங்குவதில்லை.
 
தமிழன்னை, தமிழ்ச்செல்வி, தமிழ்வாணி, தமிழரசன், தமிழ்ச்செல்வன் என்று பற்பல பெயர்களை இட்டும் நாம் வழங்குகிறோம்.
 
குமரிக்கண்டத்தை ஆண்ட பாண்டியர் மொழியை ஆதிசக்தியின் சப்த வடிவாகவே மதித்தனர்.மொழி மூலம் சமூஹ நலனுக்கு ஏற்ற கருத்துக்களை வெளியிட்டனர்.அதுவே தமிழ்ச் சங்கம்.புலவர்கள் சமூஹத்துக்கு ஏற்ற கருத்துக்களை இலக்கிய வடிவில் அளித்தனர்.
 
தமிழின் இலக்கணம் அகத்திய முனிவரால் முதன்முதலில் எழுதப்பட்டது.அதையே அகத்தியம் என்கிறோம்.அதைக் கொண்டு பல இலக்கியங்கள் தோன்றின.ஆனால் இவை முதல் சங்கம் கடல்கோளால் அழிந்த போது அழிந்தன.
 
அகத்தியரின் நேரடி மாணவன் தொல்காப்பியன்.
அவர் அகத்தியத்தின் மறுபத்திப்பைத் தன் தொல்காப்பியம் வடிவில் வெளியிட்டார்.இது இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்டது.
 
அன்று முதல் இன்று வரை பல இலக்கண நூல்கள் தமிழில் உள.
 
தமிழின் வளர்ச்சி என்பது இன்றுள்ள நவீன தகவல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அம்மொழி பயன் படுத்தப் படுகிறது என்பதே ஆகும்.
 
பிற்காலத்தில் வடமொழி, பாலி, ப்ராக்ருதம், தெலுங்கு, மராட்டி, ஐரோப்பிய மொழிகள், அரபு, உருது போன்ற பல மொழிகள் தமிழுடன் கலப்பினும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கவில்லை.
 
ஆனால் இன்றுள்ள திரைப்படங்கள், பத்திரிக்கைகளில் சில, தொலைக்காட்சிகள் மொழியைக் கொலை செய்வதைக் காண்கிறோம்.
 
தமிழைத் தமிழ் போல பேசுக, பாடுக.
 
பன்மொழிப் புலமை மிக மிக அவசியம்.ஆனால் தமிழை நாம் நீர்த்துப் போகச் செய்தல் நலம் இல்லை.
 
இன்றும் ”எதை மக்களுக்குச் சொல்ல வேண்டும்?” என்ற பாடுபொருளைக் கூற இலக்கணம் வகுத்த உலகின் ஒரே மொழி தமிழ்.ஆனால் இன்று ஊடகங்கள் அதை மறந்தன.
 
இன்று தமிழ் மொழியின் தொன்மைமிக்க வரலாற்றை அறிய வேண்டும், பல ஊர்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் காண வேண்டும், அவற்றின் பெருமையைப் பரவச் செய்க, வரலாற்றின் மூலம் இன்று நாம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய வேண்டும்.
 
தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது மக்களின் தரமான எண்ணமும் செயலுமே.அதற்கு வழிசெய்வது மொழியின் படைப்புக்கள்.இதைச் செய்த பற்பல அறிஞர்களை அறிக, போற்றுக, பின்பற்றுக.
 
இயல் - இசை - நாடகம் என்று முத்தமிழையும் நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வளர்த்திடுக.
 
பிற மொழிகளில் உள்ள தரமான நல்ல கருத்துக்களை, படைப்புக்களை வரவேற்கலாம், ஆனால் அம்மொழிகள் நம்மை ஆட்கொள்வதைத் தடுப்போம்.
 
எந்த ஒரு மொழியையும் மதம், சாதியுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.மொழி ஒரு பேனா...அதன் மூலம் எத்துறையையும் எழுதலாம்.சாதிக்கும் மதத்துக்கும் மொழிக்கும் சம்மந்தமே இல்லை.
 
நம் தமிழகத்தின் எந்த ஒரு நல்ல கலை வடிவத்தையும் வரவேற்போம், ஏளனம் செய்ய வேண்டாம்.கலைகளை பேதம் பிரிக்காமல் அதனதன் வடிவில் ரசிப்போம்.
 
தமிழ் மட்டுமே சிறந்தது என்ற கர்வத்தை விடுவோம்.அனைத்து மொழிகளையும் மதிப்போம்.
 
தரமான படைப்புக்களை உருவாக்கி அதை நவீனத் தகவல் தொழில் நுட்பத்துக்கு உட்பட்டு மக்களிடையே பரப்பி, தரமான எண்ணங்களையும் செயல்களையும் மக்களிடம் உண்டாக்குவதே தமிழ்த் தொண்டு.
 
தமிழை  தன்னலத்துக்குப் பயன்படுத்த வேண்டாம்.
ஆம் அது தெய்வத்தமிழ்.
Continue reading
  558 Hits
558 Hits

Overseas trade by TAMILS

தமிழரின் கடல் வணிகம்
 
தண்ணீரில் நீந்தும் மீனைப் பார்த்த மனிதன் படகைச் செய்தான்.
மரக்கட்டைகளும் பெரிய மரங்களும் மிதக்கும் அறிவியல் கோட்பாட்டின் பின்னணியை உணர்ந்து நீந்தினான், மிதந்தான் மற்றும் மிகப் பெரிய கப்பல்களைச் செய்தான்.
காற்றின் போக்கையும் நீரின் போக்கையும் உணர்ந்து திசை நோக்கிய நீர் வழிப் பயணத்தை உருவாக்கினான்.
 
தரையில் ஒரு பொருளை எளிதாக இடம் பெயர்க்க சக்கரத்தின் கண்டு பிடிப்பே மிக முக்கியமானதாக இருந்த போது, நீர் மூலம் மிக அதிக அளவில் பெரிய பொருட்களை இடம் பெயர்க்கக் கற்றபோது கடல், ஆற்றுப் பயணங்கள் வேர் ஊன்றின.
 
அதிலும் பாரதத்தில் தென் பகுதியில் தமிழ் நாடு மூன்று திசைகளிலும் கடல்களால் சூழப் பட்ட இயற்கைத் தன்மை கொண்டது.அதிலும் குமரிக் கண்டப் பாண்டியர் மிக ஆதி காலத்தே கடல் வழியில் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.
 
மீண் பிடிக்கத் தண்ணீரில் பயணித்ததே முதல் நீர்ப் பயணம் என்று கூறுகிறோம்.
அதன்பின் வேறு தேசங்களுக்குப் பயணிக்கும் திறனை மனிதன் வளர்த்துக் கொண்டான்.
 
வானம், விண்மீன்கள், காற்று, திசைகள், தண்ணீரின் போக்கு ஆகியவற்றின் உறுதுணையுடன் இன்று வரை மனிதன் பூமி மீதுள்ள கடல்கள் மீது பயணித்து வருவதைக் காண்கிறோம்.
 
கடல் பயணம் என்ற போக்குவரத்து வளர வளர பூமியில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இணைந்தனர், பண்ட மாற்று ஏற்பட்டு வாணிபம், பொருளாதாரம், சமயம், கலாச்சராப் பண்பாடு பரிணாமம் கொண்டன.
 
இவற்றை அடிப்படையாகக் கொண்டே தமிழர்களின் முற்காலக் கடல் பயணம், வணிகம் ஆகியவற்றைக் குறித்து இப்பகுதியில் காண்கிறோம்.
 
சேர சோழ பாண்டிய பல்லவ தேசங்களில் கடல் வணிகம் செழித்து வளர்ந்தது.
 
கிழக்கு - மேற்கு தேசங்களுடனும், பாரத தேசத்தில் அக்காலத்தில் இருந்த பிற தேசங்களுடனும் தமிழர் கடல் வணிகம் மேற்கொண்டு பொருளாதரத்தை வளர்த்தனர்.
 
கிழக்கு தேசம் முழுவதையும் சீன தேசம் என்று பொதுவாகக் குறிப்பிட்டனர்.
மேலை தேசத்தில் எகிப்து,க்ரீஸ் மற்றும் ரோம் தேசங்களை யவனர் என்றனர்.
அரபு தேசம் அரேபியர் என்றே குறிப்பிடப்பட்டது.
மேற்குக் கடலை அரபிக் கடல் என்றே கூறினர்.
 
இலங்கை, பர்மா, ஜாவா, சுமத்ரா, மலேயா, சிங்கை, சீனா ஆகிய தேசங்களுடன் வணிகம் தொடர்ந்தது.
 
இலக்கியங்கள், அகழ்வாய்வு, கல்வெட்டுகள், செப்பேடுகள், கட்டிடங்கள், வரலாற்றுக் குறிப்புகள், பயண நூல்கள் மூலம் அக்காலக் கடல் பயணம் மற்றும் வணிகம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.
 
அரேபியர்கள் சேர தேசத்துடன் மிக அதிக அளவில் வணிகம் செய்தனர்.
 
யவனர் தமிழகம் முழுவதும் வணிகத் தொடர்பு கொண்டனர்.
 
தென்மேற்கு - வடகிழக்குப் பருவக் காற்றை சுத்தேசித்துக் கடல் பயணங்கள் மேற்கொள்ளப் பட்டன.
 
மிகப் பெரிய மரக்கப்பல்கள் கட்டும் தொழில் நுட்பம் தமிழகத்தில் இருந்தது.
 
கலம், நாவாய் என்ற சொற்களால் கப்பல்கள் குறிக்கப் பட்டன.
 
கப்பல் படை மூலம் மூவேந்தர்களும் தம் கடல் எல்லைகளைக் காத்தனர்.
 
கடற்கொள்ளையர்களை ஒடுக்கும் கப்பல் படையினர் இருந்தனர்.
 
இலங்கை மீது அதிக அளவில் கப்பல் படைத் தாக்குதல் மூலம் பல போர்கள் நிகழ்ந்தன.
 
பல்லவ தேசம் - துறைமுகங்கள் - திருமயிலை[கூவம்], மாமல்லபுரம் [நீர்பெயற்று]
 
சோழ தேசம் - கடலூர் [கெடில ஆறு], பூம்புகார் [காவிரி], நாகப்பட்டிணம் [உப்பங்கழிகள்]
 
பாண்டிய தேசம் - தொண்டி, கொற்கை [தாமிரபரணி], குமரி
 
சேர தேசம் - தொண்டி, முசிறி [உப்பங்கழிகள்]
 
பழவேற்காடு, சதுரங்கப்பட்டிணம், மதராஸ் என்ற சென்னை, தரங்கம்பாடி ஆகியன கடந்த அறுநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட துறைமுகங்கள்.
 
ஆறுகளின் முகத்வாரங்களில் துறைமுகங்கள் அமைந்தன.பெருந்துறை என்ற பெயர் துறைமுகங்களின் பழைய பெயர். [பெரிய கடற்துறை]
 
காரணம் கப்பல்களில் இருந்து வரும் பொருட்களை எளில் நிலப்பரப்புக்குக் கொண்டு வர உப்பங்கழிகள், ஆறுகள் பயண்பட்டன.
 
கப்பல்களுக்கு வழிகாட்ட உயரமான கலங்கரை விளக்குகள் இருந்தன.
 
விடிய விடிய விறகுகளில் வேப்ப எண்ணெய் ஊற்றி அவை எரிக்கப் பட்டன.
 
அதன் மூலம் இரவில் கொசுத் தொல்லை நீங்கும்.
 
கோடியக்கரையில் ராஜராஜன் காலத்துக் கலங்கரை விளக்கமும், மாமல்லபுரத்தில் பல்லவர் காலக் கலங்கரை விளக்கமும் இருக்கின்றன.
 
துறைமுகங்களில் கப்பல்கள் கட்ட தனி இடம் இருந்தன.
 
இன்றும் மாமல்லபுரத்தில் அத்தகைய படகுத்துறையைக் கடற்கரைக் கோயில் அருகில் காணலாம்.
 
கடலில் பயணம் மேற்கொள்ளும் முன் வருண பகவானை வணங்கினர்.
 
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அரச சின்னம் முத்திரை குத்தப்படும்.
 
சுங்கவரி விதிக்கப் பட்டு இறக்குமதி நிகழ்ந்தது.
 
சுங்கச் சாவடிகள் ஆங்காங்கே இருந்தன.
 
பூம்புகார் முதல் கேரளம் மாநிலம் கொடுங்கலூர் வரை வணிகச் சாத்து சாலை மிக அருமையாக இருந்தது.அதுவே இன்றைய தேசிய நெடும் சாலையாக உள்ளது.
 
சேர தேசத்தின் தலைநகரம் வஞ்சி.இன்றூ அதன் பெயர் கொடுங்கலூர்.அவ்வூரின் கடற்கரையுடன் கூடிய துறைமுகமே அக்காலத்தில் மிக ப்ரபலமான முசிறித் துறைமுகம்.இன்று அதன் பெயர் அழிக்கோடு [ஆழிக்கோடு].அரபியக் கப்பல்கள் 40 நாட்கள் பயணித்து இவ்விடம் சேர்ந்தன.
 
மதுரை மாநகருள் பிற தேசத்தில் இருந்து வணிகத்துக்காக வந்த வேற்று தேசத்து மக்களின் வியாபாரப் பேச்சு மொழி கலந்து ஒலித்தது என்று மதுரைக் காஞ்சி கூறும்.
 
மதுரை, பூம்புகார், வஞ்சி, காஞ்சி ஆகிய ஊர்களில் வேற்று நாட்டு வணிகர்களின் வீடுகள் இருந்தன.
 
புத்தமதம் கடல் வழிப் பயணத்தைக் கொண்டே கிழக்கத்திய தேசங்கள் அனைத்திலும் பரவியது.மயிலை, மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டிணம் ஆகிய துறைமுகங்கள் புத்த மதப் பிட்சுகள் பயணிக்கும் இடங்கள்.
 
எகிப்தியர்கள் அரசன் அரசியின் உடலை மம்மிஃபை - பதப்படுத்துதல் செய்ய சேர தேசத்தின் மசாலப் பொருட்களையும், சோழ தேசத்தின் உப்பையும் வாங்கினர்.
 
பாண்டிய தேசத்தின் கொற்கை முத்துகள் மிக மிக விலை உயர்ந்த ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்று.உலக அழகி எகிப்திய க்ளியோபாட்ரா தன் க்ரீடத்தில் கொற்கை முத்துக்கள் பதித்தாள்.தன் காலணிகளில் கொற்கை முத்துக்கள் பதித்தாள்.நீல நிறக் கொற்கை முத்துக்கள் மிகவும் விலை போயின.பாண்டிய அரசர்கள் முத்துக்களை நினைவுப் பரிசாக வேற்று தேசத்து அரசர்களுக்கு வணிகர் மூலம் அனுப்பினர்.
 
மிளகைத் தங்கத்துக்கு இணையான பொருளாக மதித்ததால் அதற்கு ”கருப்புத் தங்கம்” என்றே பெயர்.
 
சைனா பட்டுக்கும், சர்க்கரைக்கும், உப்புக்கும் பெயர் போனது.அஜினமோட்டோ என்ற சீன உப்பு அதுவே.சர்க்கரையை நாம் சீனி [சீனப்பொருள்] என்கிறோம்.சீனர்கள் நம் பாண்டிய தேசத்தின் சந்தனத்தை மருந்துப் பொருளாக வாங்கினர்.
 
இன்று தேசம் முழுவதும் பயன்படுத்தப்படும் மிளகாய் சைனாவில் இருந்து வந்ததே ஆகும்.அதைச் சேர தேசத்து மக்கள் ”கப்பல் மிளகாய்” என்றே கூறினர்.
 
ஏற்றுமதியான பொருட்கள்
சேர தேசத்தின் உயர் ரக மிளகு
பாண்டிய தேசத்தின் கொற்கை முத்துக்கள்
ஆடை வகைகள்
நகைகளில் பதிக்கும் கற்கள்
சந்தனம்
யானைத் தந்தம்
யானைகள்
மயில்கள்
உயர் ரகப் பசுக்கள், காளைகள், எருமைகள்
குரங்கு - ஆயுத வகை
லவங்கம்
ஏலம்
கிராம்பு
பட்டுத்துணி
கண்ணாடி
கருங்காலிக் கட்டைகள்
பவளம்
மீன்
உப்பு
மிக மிக மென்மையான ஆடைகள்
 
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்
தங்கம்
ஈயம்
தகரம்
செம்பு
பீங்கான் கண்ணாடிப் பாத்திரங்கள்
உயர் வகை மது
சைனாப் பட்டு
சைனா உப்பு
சைனா சீனி [சர்க்கரை]
இலங்கையில் தயாராகும் சில விசேஷ உணவுகள்
பாவை விளக்குகள்
அன்னப்பட்சி கொண்ட விளக்குகள்
வாசனைப் பொருட்கள்
அரபிக் குதிரைகள்
க்ரீஸ் ரோம் தேசத்துப் பெண் வேலையாட்கள்
ஆப்பிரிக்க அடிமைகள்
எகிப்து தேசத்து வாசனைத் திரவியங்கள்
 
பண்டமாற்று முறையிலும் நாணயங்கள் முறையிலுமே பொருட்கள் வணிகம் மூலம் கைமாறின.அதனால் தான் நம் ஊர்களில் வேற்று தேசத்தின் காசுகள் பல கிடைக்கின்றன.
 
ஒரு ஊரில் கிடைக்காத பொருளை அடுத்த ஊரில் பெற்றுக் கொண்டனர்.அதிலும் இயற்கையால் விளையும் பொருட்களே வணிகம் செய்யப்பட்டன.
 
ஒரே நாட்டினுள்ளும் அதே கதியில் தான் பண்டமாற்று முறையில் வணிகம் அதிகம் நிகழ்ந்தது.ஏன் கடந்த நாற்பது ஆண்டுகல் முன்பு வரை இம்முறை வழக்கத்தில் கிராமங்களில் இருந்தது.
 
பொருட்கள் அதன் உற்பத்தியின் அடிப்படையில் தான் மதிக்கப் பட்டன.உதாரணம்: நெல்லுக்கும் பருப்புக்கும் இணையானவை மீனும் உப்பும்.
 
மனிதன் தன் உடல், அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி ஆகும் இவை தரம் பார்த்து, மதிக்கப்பட்டு, பண்டமாற்றம் செய்யப்பட்டன.
 
அதனால் அனைவருக்கும் அவரவர் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைத்தது எனலாம்.
 
சில விலை அதிகம் கொண்ட பண்டங்கள் காசு கொடுத்தே வாங்கப்பட்டன.
 
இறால் மீனுக்கு நிகர் நெல், தானியங்கள்
 
நெல்லுக்கு பதில் உப்பு
 
பால், தயிர், வெண்ணெய்க்கு ஈடு நெல், மீன்
 
மாமிசத்துக்கு இணை தானியங்கள், நெல்
 
மலைத் தேனுக்கு ஈடாக நெல், தயிர், மாமிசம், மீன்
 
கிழங்குக்கு இணையாக தானியங்கள்
 
மத்தி மீனுக்கு இணையாகப் பாசிப்பயறு
 
மிளகுக்கு இணையாக பொன்
 
மாட்டு வண்டி, குதிரைகள், கழுதைகள், யானைகள் மூலம் பொருட்கள் ஊர் ஊராகச் சென்று விற்கப்பட்டன.
 
ஏணி வைத்து ஏறினாலும் கால் வலிக்கும் வண்ணம் உயரமான மாடங்கள் எழுப்பப்பட்டு அதன் மீது விடிய விடிய கப்பல்களுக்கு வழிகாட்டியாய் நெருப்பு ஏற்றப்பட்டது.
 
தூய வெள்ளைத் துணியாய் செய்த பாய்மரக் கப்பல்கள் மிதக்கும் கொற்கைக் கரையில் வெளிதேசத்து வணிகர்கள் பாண்டிய தேசத்தின் அழகிய விதவிதமான முத்து அணிகள் வாங்கிடக் கடைகளில் உலவினர்.
 
பெண்கள் மீன், கருவாடு, உப்பு, தயிர், பால், வெண்ணெய், தானியங்கள் விற்றுக் குடும்பத்தின் வருவாயைக் கூட்டினர்.
 
கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் ரோம் தேசத்தை அகஸ்டஸ் சீசர் ஆளும் போது சேரரும் பாண்டியரும் வணிகம் செய்தனர்.அவனது முகம் பொறித்த காசுகள் முசிறி, கொற்கையில் கிடைத்துள்ளன.
 
மிளகு மிக உயர்ந்த பொருள்.அதைக் கரும்பொன் என்றும் யவனப்ரியா என்று கூறினர்.உணவுப் பதப்படுத்துதலிலும் மருந்துகளிலும் அது அதிகம் பயன்பட்டது.
 
மேலை தேசங்களில் இருந்து உயர் ரக மது வகைகள் இறக்குமதி செய்தனர்.[இதை மாணவர்கத்குக் கூற வேண்டாம்]
 
பெரிய படகுகளான நாவாய், சிறிய பாய்மரத்தோணிகள், மிகப்பெரிய பாய்மரக் கப்பல்களும், கட்டுமரங்களும், மூங்கில் தெப்பங்களும் பயன்பட்டன.
 
மிகப்பெரிய பாய்மரக் கப்பல்களே வங்கம் எனப்படும்.அவை மிக அதிகம் பயணித்த கீழைக் கடல் வங்கக் கடல் ஆயிற்று.
 
க்ரேக்க நூல்கள் நம் பூம்புகாரைக் ”காமரா” என்று குறிப்பிடும்.
 
பாண்டியர் தம் சிறைக் கைதிகளையும் அடிமைகளையும் கொற்கையில் முத்துக்குளிக்க அதிகம் பயன்படுத்தினர்.
 
உப்பு விற்பவர் உமணர் ஆவர்.அவர்கள் மாட்டு வண்டிகளில் பல தூரம் சென்று உள்நாட்டில் உப்பு விற்பர்.
 
ஒரு வியாபாரிகளின் கூட்டம் ”வணிகச் சாத்து” என்று அழைக்கப்பட்டது.
 
கொங்கு தேசத்தின் பல ஊர்களில் இருந்து அரிய வகைக் கற்கள் ஏற்றுமதி ஆயின.பொன் கல் ஊர் - பொன்னில் பதிக்கும் கற்கள் விளையும் ஊர் - பொங்கலூர் ஆகும்.இன்றும் அவ்வூரைச் சுற்றி மிகவும் வெண்மையான கற்கள் கிடைப்பதைக் காண்க.
 
பிற்காலத்தில் பல சிறு துறைமுகங்களும் இருந்துள்ளன.
உவரி, வீராம்பட்டிணம் போன்ற ஊர்களில் சிறிய அளவில் கடல் வியாபாரம் ஆயிற்று.
 
இப்பகுதியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்,
தரமான பொருட்கள் உற்பத்தியைப் பொருத்தே பிறர் நம்மை நாடுவர்.
வணிகத்தில் நேர்மை இருப்பின் பிறர் நம்மை அண்டுவர்.
பிற தேசத்துடன் வணிகம் செய்ய வேண்டும்.
தனி மனிதன், சமூஹ, தேசப் பொருளாதாரம் உயர வேண்டும்.
ஆனால் அதன் மூலம் தரமான நல்ல கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் மட்டும் பரிமாற்றம் கொள்ளப் பெற வேண்டும்.
 
அதே போல் வெளிதேசத்து வணீகம் மூலம் உள் தேசத்துப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி வருவதை அறிந்தால் மன்னர்கள் அதைத் தடுத்துள்ளனர்.சேர மன்னன் ஒருவன் வெளி தேசத்துக் கப்பல்கள் முசிறி சேராவண்ணம் படை அமைத்தான்.காரணம் வணிகம் மூலம் பின்னர் நாம் அடிமைப் பட்டு இன்று வரை வெளிதேசத்து மோகத்தில் வாழ்வது தெரிகிறது.
 
தமிழர் தம் கடல் வணிகம் என்பது நம் முன்னோரின் அறிவுக்குச் சான்று!
Continue reading
  587 Hits
587 Hits

Chera Queen's social responsibility - Kannagi worship

கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்திய சேர அரசி
சமூஹப் பொறுப்புடன் ஓர் அரசி....
 
கண்ணகி நீதியை நிலை நாட்டினாள்.
நெடுவேள் குன்றம் ஏறி வடக்கு இருந்து உயிர் விட்டாள்.
சரி...
இதைக் கண்டு குறவர் [இன்றும் குமுளி மலை வாழ் பழங்குடியினராகிய பளியர் இனத்தோர்] அவளை சமாதியாக்கினர்.
அதைத் தம் அரசனாம் சேரனிடம் கூறினர்.
அவனும் அதை உணர்ந்து வியந்தான்
இளங்கோ காப்பியம் ஆக்கினார்
சரி...
கண்ணகியை தெய்வம் ஆக்கியது யார்?
அரசி வேண்மாள்...செங்குட்டுவனின் மனைவி
சமூஹத்துக்குத் தாயாய் முன் உதாரணமாய் இருக்க வேண்டிய அரசனும் அரசியும் அதைச் செய்தனர்.
சமூஹத்தில் மக்களுக்கு நெறியான நேர்மையான வாழ்வை உணர்த்த கண்ணகி உதாரணம் என்று உணர்ந்த அரசி ”நம் மலை நாடு புகுந்த இப்பெண்ணை வணங்க வேண்டும்” என்று கூறி அவளுக்குக் கோட்டமும் வழிபாடும் கொண்டு வருகிறாள்.
ஓர் அரசியின் சமூஹப் பொறுப்புணர்வினை அவள் செய்கிறாள்.
அந்த அரசியை மதிப்போம்.
வீட்டின் பெண் மூலம் தான் அவ்வீடும் குடும்பமும் சமூஹமும் உயரும் என்பதே பாரத தேசத்தின் சத்யம்.
அதுவே உண்மையான பெண்ணியம்.
Continue reading
  576 Hits
576 Hits

Dance forms mentioned in Silapathykaram

சிலப்பதிகாரம் பதிவு செய்யும் முக்கிய கூத்துகள் - நடனங்கள்
மாதவி மூலம் இவற்றை அறிமுகம் செய்கிறார்.
இதன் மூலம் தமிழர் கூத்துக் கலைக்குத் தந்துள்ள முக்யத்துவம் புரியும்.
இன்றைய பரதத்தில் இவை எப்படி உள்ளன என்பதைக் காண்க.
 
சும்ப நிசும்பர்களை மயக்கி அழிதற் பொருட்டு பாரதியாகிய மஹாசரஸ்வதி ஆடிய பாரதி அரங்கக் கூத்து.
 
திரிபுரங்கங்களையும் அதன் அசுரர்களையும் அழித்த பின், சிவன் உமையொரு பாகனாக ஆடிய கொடு கொட்டிக் கூத்து.
 
திரிபுரத்தை எரிக்கச் சிவன் செல்லும் முன் தேர் முன் நின்ற பிரம்ம தேவன் முன் ஆடிய பாண்டரங்கக் கூத்து.
 
மதுராவில் கம்சன் ஏவிய குவலாயபீடம் என்ற மதம் கொண்ட யானையைக் கொன்ற கண்ணன் வெற்றியுடன் ஆடிய அல்லியந்தொகுதிக் கூத்து.
 
கம்சனின் இரு மல்யுத்த வீரர்களைக் கண்ணன் கொன்ற வெற்றியில் ஆடிய மற்கூத்து.
 
அசுரர்களை அழிக்க முருகன் போர்க்களத்தில் வீராவேசத்துடன் தன் பெரிய குடையின் கீழ் ஆடிய குடைக்கூத்து.
 
கடலில் நடுவில் நின்ற பதுமாசுரனைத் தன் வேலால் கொன்ற முருகன் வெற்றியில் ஆடிய துடிக்கூத்து.
 
சோ என்ற ஊரில் வாணாசுரன் என்ற அசுரனை அழித்த கண்ணன் வெற்றியில் ஆடிய குடக்கூத்து.[கரக ஆட்ட வகைகளுடன் ஒப்பிடலாம்]
 
பெண் வேடம் அணிந்து மன்மதன் ப்ரம்மம் சக்தியாக மாறியதை உணர்த்த ஆடிய ஆண்பேடுக் கூத்து.
 
மிகக் கொடிய அசுரரை அழிக்கக் கோபத்துடன் கொற்றவையாம் துர்கை ஆடிய மரக்கால் கூத்து. [பொய்க்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம்]
 
அமுதம் வேண்டி தேவர்களை எதிர்த்து அசுரர் போரிட வந்த போது திருமகள் அவர்களை மோகித்து அழிக்க ஆடிய பாவைக் கூத்து.[இன்றைய மோகினி ஆட்டம்]
 
மழை தரும் இந்திரனின் மனைவி இந்திராணி உழத்தியர் [பெண் வேளாளர்] வடிவம் கொண்டு பசுமை வயல்களில் ஆடிய கடையக் கூத்து.
Continue reading
  683 Hits
683 Hits

ஆடி மாதம்

தமிழருக்கு மிக முக்கியமான புண்ணியக் காலம்.
தட்சியாணம் - அதாவது சூரிய ஒளி தேசத்தின் தென் பகுதியில் அதிகம் விழும் காலம்.
அதன் மூலம் பருவ நிலையில் மாற்றங்கள் வரும்.
குறிப்பாக வடகிழக்குப் பருவ மழையின் ஆரம்பக் காலம்.
ஆடிக் காற்றில் வயல்களை உழுது பக்குவம் செய்வர்.
ஆடியில் காவிரியில் வரும் புது வெள்ளத்தை வரவேற்று, நன்றி கூறி அந்நீரைக் கொண்டு வயலில் உழவைத் தொடங்குவர்.
ஆடிப் பதினெட்டாம் நாளில் காவிரிக்கு உரிய மரியாதை செய்வதும், நிலத்தில் உள்ள தாதுச் சத்துக்களின் உருவகக் குறியீடான ஏழு கன்னிமார்களை வணங்குதலும், முன்னோர் வழிப்பாட்டை அமாவாசை அன்று மேற்கொள்ளுதலும், பருவ மழையின் சக்தியாகிய மாரி அம்மையை வணங்குதலும் ஆடி மாதச் சிறப்புகள்.
 
காவிரியில் பூஜித்துக் கயிறு கட்டிக் கொள்ளும் போது நீர் சேமிப்பு, சுற்றுச்சூழல், மாது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்க,அதனால் தான் அதைக் காப்பு என்கிறோம்.
 
வாழ்க்கையை வளமூட்டும் ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதம் அவசியம் அனைவரும் செய்ய வேண்டிய பாக்ய சக்தியை அதிகரிக்கும் வ்ரத பூஜையாகும்.சாதி வேறுபாடின்றி யாரும் செய்யலாம்.பணமும் வளமும் சாதி பார்த்தா பயன்படுத்தப் படுகின்றது?
 
புதுமணத் தம்பதிகள் விருந்து, வட தமிகத்தில் மிக விசேஷமான கூழ் வார்த்தல் விழாக்கள் என இம்மாதம் களை கட்டும்.வருடத்தில் நான்கு நவராத்ரிகளில் இது ஆஷாட மாத நவராத்ரிக் காலம்.
அதனால் தான் தேவி வழிபாடு இம்மாதத்தில் மிக அதிகம்.ஆடி வெள்ளி, செவ்வாய், பெளணர்ணமி, அமாவாசை, க்ருத்திகை ஆகியன மிக உன்னத வேளைகள்.
 
வைகாசி மத்தியில் பூம்புகாரை விட்டுக் கிளம்பிய கோவலனும் கண்ணகியும் ஆடி அமாவாசை முன்தினம் மதுரையை அடைய, அமாவாசை அன்று கோவலன் கொலை ஆக, அமாவாசை மாலை கண்ணகி வழக்காடி, மதுரையை எரித்தாள் என்பது சிலப்பதிகார ஆய்வு.
 
அதனால் தான் கண்ணகியின் ப்ரதிபலிப்பான மாரி அம்மைக்கு விழவு காண்கிறோம்.
கண்ணகியின் ப்ரதான கோயிலான கேரளத்துக் கொடுங்கலூர் பகவதி கோயிலில் அன்று மாலை secret chamber திறக்கப்பட்டு, அவளது சிலம்பு அஸ்திக் கலசம் ஆகியன பூஜிக்கப்படும், அதன் பின் காளியின் திருமேனியில் விசேஷமான எண்ணெய்க்க்காப்பு சாற்றப்படும்.இதையே சாந்தாட்டம் என்பர்.
 
ஒரு பெண்ணின் வாழ்க்கை சமூஹத்திற்கு உதாரணம்.
இதையே கண்ணகி உணர்த்துகிறாள்.
சமூஹத்தில் ஏற்படும் தீமையை எதிர்க்கும் திறனும் சத்யத்தின் மீதான பற்றும் அவள் நமக்குக் கூறும் வாழ்வியல் பாடம்.
சமூஹத்தில் இன்று மன்னிக்கும் குணம் குறைந்து வருகிறது, அதை மீட்டுருவாக்கம் செய்பவள் கண்ணகி.
தவறாக வாழ்ந்த ஒரு மனிதன் என்று பாராது அவனைப் பழி தீர்க்காது, அவன் குற்றம் அல்லாதவன் என்று அவள் சத்யத்தின் சக்தியாய் இருந்து அவன் பழி நீக்கினாள்.
இக்கண்ணகி நம்முள் அதே சத்யமாய், இல்லற மான்பாய் ஏற்கும் தன்மையாய் மன்னிக்கும் அருங்குண்மாய் இருப்பதை selftual connect செய்து காண்க.அத்தகைய உயர் குணங்களை ப் பெறவே தேவியாய் அவளை வணங்குகிறோம்.
 
ஆடி வரும் ஆடி மாதத்தை வரவேற்போம்.
Continue reading
  688 Hits
688 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries