Danger to society through medias

சமீப காலமாக தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் கதைகள் பாரத தேசத்தின் பாரம்பரியத்தை குடும்ப வாழ்வின் ஒழுக்கங்களை தனிமனித ஒழுக்கங்களைச் சிதைப்பது போலவே வருகின்றன.
 
உடை, உணவு, ஆரோக்யம், சிந்தனை ஆகியவற்றில் விஷத்தை ஊட்டும் தன்மை கொண்ட ஊடக சக்திகளில் செய்யும் தீமையை அறியவில்லை.இதன் பலன் தற்போது வீட்டில் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகி உள்ள பெரியவ்ரகள் மூலம், பள்ளிகளில் குழந்தைகள் மூலம் ப்ரதிபலிப்பதை ஆய்வுகள் காட்டும்.
 
மொழிச் சிதைவு, உடை நாகரிகம், சிந்தனையில் தேவையில்லாத கட்டுப்பாடு இன்மை, இவற்றை எல்லாம் வெளிதேசங்கள் பரப்பும் சக்திகளாகவே ஊடகங்கள் உள்ளன.
 
மரியாதையற்ற பேச்சு, தரம் தாழ்ந்த மொழி, பெண்களின் பாத்திரப்படைப்புகள் ஆகிய மிகக் கேவலமான சமூஹச் சிதைவை ஏற்படுத்துகின்றன.
 
பெண்மையின் அழகு, ஒழுக்கம், உண்மையான சுதந்திரம் , உணர்வு ஆகியன கொச்சைப் படுத்தப் படுவன.
 
குறிப்பாகப் பிறர் மனை விழைதல் கோட்பாட்டை முக்கால்வாசிக் கதைகள் வலியுறுத்துவதாகவே உள்ளன.
 
தமிழ் பண்பாடு மொழி வளர்ச்சி என்று தவறாக அரசியல் செய்யும் கட்சிகளோ ஊடகங்களை என்னவென்றே கேட்பதில்லை.
 
வடமொழிகளில் தாக்கத்தை மேடை போட்டு எதிர்க்கும் அரசியல்வாதிகள் ஊடகங்களில் ஆங்கிலம் மூலம் ஏற்பட்டுள்ள தீமையை ஏன் கண்டும் காணாதும் உள்ளன? இது தன மொழிப் பற்றா?
 
ஆடை நாகரிகம், மொழி நாகரிகம் என்பதே பெண்களுக்கு இல்லை என்பதாக ஊடகங்கள் காட்டுகின்றன.
 
குடும்பத்தைச் சிதைவாக்கும் பெண்கள், பிற ஆண்களை விரும்பும் பெண்கள் , பிறர் கணவனையே காதலிக்கும் பெண்கள், என பாரதப் பெண்மை இழிவாகச் சித்தரிப்பதை ஏன் பெண்கள் சங்கம் எதிர்க்கவில்லை?
 
ஊடகங்கள் மிக சக்தி கொண்ட சமூஹப் பணிக் கருவிகள்.ஆனால் அவற்றின் மூலம் சமூஹம் சீர் கெடுவதை ஏன் யாரும் கேட்பதில்லை.
 
குழந்தைக் கடத்தல், பாலியல் வன்முறை, சிதர்வதைகள் இவற்றை அதிகரிக்க வைத்ததில் ஊடகங்களுக்கும் பொறுப்பு உண்டு.
 
தமிழகத்தில் இளைஞர்களின் புகைப்பிடித்தல், மது அடிமை, பாலியல் வக்ரம் ஆகியவற்றில் திரைப்படங்களுக்கும் தலைசிறந்த இயக்குனர்களுக்கும் ஹீரோக்களுக்கும் அதீத பங்குண்டு.இதைக் கூற அஞ்சவில்லை.
 
ஊடக சக்தியை அறிந்த பாண்தியர்கள் அதைக் கொண்டு உயர் இலக்கியங்கள் செய்து சமூஹத்தில் பல தரமான செயல்களை விளைவித்தனர்.
 
கடந்த இருபது ஆண்டுகளில் கல்வித் துறையில் தரமான மனித எண்ணத்துக்கு இடம் கொடுக்கும் பாடங்கள் அகற்றப்பட்ட விளைவே இன்று நிகழும் கொடுமைகளுக்கு விதை.
 
வீட்டில் உள்ள பெரியவர்கள் ஊடக சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்.ஊடக சக்தி இருமுனை கொண்ட கத்தி போல்.
 
ஊடகத்தின் படைப்பு சமூஹத்தை ப்ரதிபலிக்கும்.
ஊடக சக்தியை சாதாரண மனிதன் உட்கொண்டு அதன் தன்மையில் வாழ்கிறான்.
முன்பெல்லாம் தரமற்ற ஆடைகளுடன் கவர்ச்சி நடிகைகள் படம் வந்தால் மாதர் சங்கங்கள் எதிர்த்தன.இன்று.....
 
மிகக் கேவலமான பாத்திரப் படைப்புகள் மூலம் பாரத பெண்மையின் சக்தியைச் சீரழிப்பதை ஏன் பெண்கள் தட்டிக் கேட்பதில்லை.
 
தன் மகள் தேர்வு செய்துள்ள ஆடை மிகச் சிறியதாக இருக்கிறது என்று அப்பா சொல்ல, பார்வை தான் சிறிது என் ஒரு அம்மா கூறும் அளவு கலாச்சாரச் சீர்கேடு வளர்ந்து இருக்கிறது.
 
ஒழுக்கம் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் கற்பு இருபாலருக்கும் பொது.
 
தவறாக வழியில் ஊடக சக்திகள் சமூஹத்தை இட்டுச் செல்வதைக் காண்கையில் வேதனை ஏற்படுகிறது.
 
இவற்றைப் பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிடின் நான் தமிழனல்ல, ஆசிரியரும் அல்ல.....
 
விழித்துக்கொள்க....உயர் சமூஹ ஒழுக்கம் பேணுக....
Continue reading
  615 Hits
615 Hits

Why to celebrate Varalaxmi festival?

மனிதனின் அன்றாட வாழ்வியல் தேவைக்கு எட்டு சக்திகள் மிக அத்யாவசியம்.
அவற்றையே எட்டு செல்வங்கள் - அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்கிறோம்
அவற்றை அருளும் ப்ரபஞ்ச சக்தியே மஹாலக்ஷ்மி சக்தியின் உருவகம்.
வரும் வெள்ளி அன்று மிக ப்ரஸித்தமான வரலக்ஷ்மி வ்ரதம் வருகிறது.
அன்று மஹாலக்ஷ்மியை பூஜித்து பலன் பெறுக.
அளவற்ற ஆசை, கோபம், பொறாமை, வயிற்று எரிச்சல், புறங்கூறுதல், சோம்பல், கருமித்தனம், ஆணவம் ஆகிய சக்திகள் அஷ்ட ஐஸ்வர்யங்கள் வரும் பாக்ய சக்திக்கு எதிரானவை.
இந்த தோய சக்திகள் சதா மனதில் ஏற்பட, அவற்றை சதா நாம் சுத்தீர்கரிக்க வேண்டும்.
ஆன்மீக ஞானம் மூலம் தான் அதைச் செய்ய முடியும்.
அந்த ஞான சக்தியையே மஹாலக்ஷ்மியான வரலக்ஷ்மியிடம் வேண்டுக.
மனம் தூய்மையாயின் செயல் தூய்மையாகும் அப்போது எட்டு செல்வங்களும் இருமடங்கில் பதினாறு பேறுகளாக வரும்.
 
இந்த வெள்ளி அன்று பூஜை செய்ய முடியாவிட்டால் அடுத்த இரு வெள்ளிகளில் தூய்மையாய் பூஜித்துப் பலன் பெறுக.
 
பெற்ற எட்டு சக்திகளை நாமும் குடும்பமும் சுற்றமும் சமூஹமும் இயற்கையும் பெற அறம் செய்க.
 
பூஜிக்கும் முறை தனியே தரப்படும்.
Continue reading
  630 Hits
630 Hits

Evidences for kumarikandam

குமரிக் கண்டம் குறித்த ஆராய்ச்சிகள்

1846 ஆண்டில் புகழ் பெற்ற விலங்கியல் துறை வல்லுனர் ஃபிலிப் ஸ்லாட்டர் மடகாஸ்கர் பகுதியில் வாழும் பாலூட்டி விலங்குகள் பற்றி ஆராயும் போதுஒரு காலத்தில் இந்தியாவும் மடகாஸ்கரும் நிலப்பகுதியாய் இணைந்து இருந்தன என்ற ஆய்வுக் கருத்தை வெளியிட்டார்.

”மிகத் தொன்மையான நிலம் தீவுகளாய்ச் சிதறின.அவற்றிற்கு நான் ”லெமூரியா” என்று பெயர் வைக்கிறேன்” - ஃபிலிப்

Continue reading
  591 Hits
591 Hits

என் முன்னோர் பூமி

என் முன்னோர் பூமி
 
குமரிக் கண்டத்தில் கால் வைத்துப் பார்க்க வழி இல்லை.
சுனாமி அடிப்பதற்கு முன் கடல்கள் உள் வாங்கிய போது குமரி நிலம் தெரிய பலர் அதில் நடக்க முற்பட, பாதுகாப்பு கருதி தடுக்கப் பட்டனர்.
என் முன்னோர் விட்டுச் சென்ற தமிழும் தொல்காப்பியமும் நானும் இருக்க வேறு ஏதாவது எனக்கு அம்மண்ணில் இருந்து எனக்கு வேண்டும்....
கடலின் ஆழத்தில் இருந்து மண்
மண்..அது தாய்
யார் எடுத்துத் தருவார்?
அதோ அந்த முத்துக்குளியாளி
அவன் மண்வெட்டியால் கடல் அலை வீசியதும், மண்லாஇக் கிளறி அதனுள் உள்ள முத்து, சில வண்ணக் கற்களை எடுத்து விற்றுப் பிழைக்கிறான்.
ஓ மடகாஸ்கர் தீவு ஆய்வில் பார்த்த முன்னூறு கோடி ஆண்டுகட்கு முற்பட்ட வண்ணப் பாறைகள் குமரிக் கண்டத்திலும் இருந்தன, என்று ஆய்வாளர் கூறுவது உண்மை.
கடலில் ஆழத்தில் இருந்து நீலம், சிவப்பு, வெளி மஞ்சள், சாம்பல் ஆகிய நிறக் கற்கள் கிடைக்கின்றன.அவற்றை என் முன்னோரின் சொத்தென வாங்கிக் கொண்டேன்.
ஆனாலும் குமரிக் கண்டத்தின் மண் தேவை.
அவனிடம் வேண்டினேன்...”இதோ சார்...ஆனால் எதற்கு?”
 
”தேவியை, என் முன்னோர் பூமியை சதா பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றேன்.
 
ஒரே நொடியில் உள்ளே குதித்தான், மூழ்கினான் மூன்று கற்களுடன் வெளிவந்து கையில் கொடுத்தான்...ஆஹா குமரிக்கண்டத்தின் சிறு மண் ...
 
அவனை மிக்க நன்றியுடன் வணங்கினேன்....
Continue reading
  682 Hits
682 Hits

குமரித்துறையின் அனுபவங்கள்...

இரண்டரை தினங்கள் கன்யாகுமரியில் வாழ்ந்தேன்
என் முன்னோருடன் - தென்புலம் சேர்ந்த குமரிக்கண்ட மூத்தோருடன்
தமிழரின் முன்னோர் தென்புலத்தில் தானே சேர்ந்து உள்ளனர்?
முக்கடல் சங்கமத்தில் தேசத்தின் எல்லை அவர்களுக்கு தீர்த்த மரியாதை நீர்க்கடன் நீத்தார் கடன் செய்தேன்...
***
முக்கடல் மூன்று வர்ணங்களில் கண்கூடாகவே தெரிந்தன.
உடல் மனம் அறிவு என மூன்று தத்துவங்களும் ஒருங்கிணைந்ததே ஆன்மீக சாதனை
குமரித்துறை தந்த அனுபவங்கள்...
 
அதற்கு உயர்ந்த தூய குரு தேவை
விவேகானந்தரும் வள்ளுவரும் தூய குருமார்களாக உள்ளனர்.
பாரத தேசத்து ஆன்மாக்கள் அனைத்தும் பரம்பொருளுடன் ஒருங்கிணையும் ஆன்மீக உயர் உண்மையை தேவி பகவதி கன்யா பீடத்தில் உணர்த்துகிறாள்.
***
ஆசிரியர் கற்றுப் பட்டம் பெற்றவர்
ஆனால் அவர் தம் மாணாக்கருடன் இணைந்து பயிற்சிகள் செய்வது போல், ஆன்மாக்களுடன் இணைந்து கன்னி வேடத்தில் அன்னை சிவசக்தி ஐக்யத்துக்கு பயிற்சிகள் மேற்கொள்ள வைக்கிறாள்.
***
பரம்பொருளை ஐக்யம் ஆகும் வரை ஒவ்வொரு ஜீவனும் கன்னியே
அதுவே கன்னிக்குமரி அடையாளம்
கோயில் வெளியில் தூணில் கன்னிகா எந்திரம் உள்ளது
***
ஆதி மீனவர்கள் பாண்டியர்
அவர்தம் கடற்கரைக் காவல் தெய்வமே கன்னி
இன்றும் தமிழகத்தில் பல மீனவ கிராமங்களில் கன்னி அம்மனே தெய்வம்
எவ்வளவு தொன்மம்?
***
ஆதியில் இங்கு இருந்த ன்னை தான் இன்று மதுரையில் மீனாக்ஷியாக இருக்கிறாள் என்று ஓர் உள்ளூர் பக்தை கூறினார்.[ஓ மீனாக்ஷிக்குக் குமரித்துறையவள் என்ற பெயர் உண்டே]
***
பகவதி நேர் கிழக்காக நின்று கொண்டு அருள்கிறாள்.
தேசத்தின் இறுதி எல்லை நேர் தெற்காக அமைகிறது.
அதில் முக்கடல் சங்கமத் துறை குறிக்கப்பட்டு குளியல் துறை அமைகிறது
அதைக் காண தேசப்பற்று விம்மி எழுகிறது
***
கடலில் உள்ள பாறைகள் குமரிக்கண்டத்தின் வட பகுதியே 
அதைக் காணும் போது மனம் கணக்கிறது
விவேகானந்தர் பாறையின் மீது நிற்கையில் பின்புறம் பரந்துள்ள கடல்கள் தன்னுள் நம் குமரி பூமியை உட்கொண்டு அல்லவா ஆடுகின்றன?
மனம் வேதனை கொள்கிறது....
 
பாறைகளே!
ஏன் கல் மாதிரி உள்ளீர்
தென் மதுரையும் குமரி ஆறும்
பல்மலை அடுக்கத்து நிலமும்
பஃறுளி ஆறுடன் கபாடபுரமும்
முதல் இரு சங்கங்களும்
அகஸ்தியமும் பல நூல்களும்
மக்களும் உயர் புலவோரும் பாண்டியரும் 
எங்கே?
வகுப்பில் பதில் தெரிந்து வாய் திறவாத மாணக்கர் போல் அல்லவா இப்பாறைகள்?
திட்டித் தீர்த்தேன் மனதுள்.
***
குமரிக் கோடான விவேகானந்தர் பாறையில் அம்மையின் ஒற்றைச் சுவட்டைக் காணும் போல் மிகத் தொன்மை மிக்க ஆன்மீகக் காலம் கண்முன் வருகின்றது.
எத்தனை கோடி மக்கள் இத்தனை காலம் வணங்கி இருக்க, அடியேனுக்கும் அவ்வாய்ப்பு அன்னை அருளினாளே!
***
அன்னையின் மூக்கில் இரு நாக ரத்தின கற்கள்
ஒன்று மூக்குத்தி
ஒன்று புல்லக்கு
மூக்குத்தி பெண் நாகத்தின் மணி
புல்லக்கு ஆண் நாகத்தின் மணி
மூக்குத்தி ஜென்ம வாசனை விலகுவதைக் காட்டும்
புல்லக்கு ஸ்வாசத்தின் மூலம் அறிவு விழிப்புணர்வு தன்மையை எய்தும் நிலையைக் குறிக்கும்.
***
நாலரை மணிக்கு பகவதியின் கோவில் திறக்க
முதல் நாள் அலங்காரக் கோலத்தில் அன்னை
அடுத்த கால் மணி நேரத்தில் அன்னைக்கு அபிஷேகம் ஆவதைக் காண்கிறோம்
மிக மிக மிக மிகத் தொன்மையான திருமேனி
அபிஷேகம் ஆகி அழகிய புடவையைப் பாவாடை தாவணியாக உடுத்தி, முகத்தில் சந்தனக் காப்பு ஆகி, இரு நாக ரத்ன மணிகளையும் சார்த்துவதைக் காணலாம்.
கார்த்திகை தீபச் சுடர் போல் அல்லவா அவை ஜ்வலித்து அசைகின்றன?
கொடி மரத்தின் அருகில் இருந்து கண்ட போது உண்மையில் அவை தீ போல் உள்ளன.
அரேபியக் கப்பல் அச்சுடரைக் கலங்கரை விளக்கம் என்று தவறாக அவசியம் கருதியிருக்க வாய்ப்புகள் உண்டு.
***
அன்னையில் மார்பில் பூக்கள் கொண்டே மேலாடை
சங்க காலத்தில் பெண்கள் பூக்களால் ஆன மேலாடை அணிந்த குறிப்புகளை இது உணர்த்தும்
அன்பு கொண்டு அன்னையிடம் செல்க, அவள் கண்ணார மனமாரக் காட்சி தருவாள் பேசுவாள்.
***
அன்னையுடன் கருவறையுள் வெள்ளியில் ஆன சிறிய உற்சவ மூர்த்தி.அவள் பெயர் கன்னிகா தேவி.அவள் தான் கோயில் உட்சுற்றை மூன்று முறை வலம் வருகிறாள்.
 
அடுத்து கருவறைக்கு வெளியே இருக்கும் உற்சவர் தான் தற்காலத்தில் நவராத்தி விழா கண்டு அசுரனை அழிக்க, பஞ்சலிங்க புர கிராமம் செல்கிறாள், வெளிச்சுற்றில் உள்ள மிகத் தொன்மைமிக்க பால செளந்தரி மூர்த்தம் பாதுகாப்பும் பழமையும் கருதி வெளியே வருவதற்கு இல்லை.
 
கருவறை ராஜராஜனால் உருவாக்கப் பட்ட கற்றளி.
மேலும் முற்காலப் பிற்காலப் பாண்டியர், சேரர், கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பணிகள் கலந்த கோயில்.
கொடிமரத்தின் உச்சியில் விழிப்புணர்வின் சின்னமான சிங்கம்
அன்னை தினமும் கோயிலுள் ஸ்ரீவேலி வலம் காணுகையில் மேளம் மத்தளம் இல்லை, கல்யாணம் தடைப்பட்ட காரணத்தால் அன்னைக்கு அச்சத்தம் பிடிக்காதாம் - உள்ளூர் பக்தர் கூறியது.
***
அன்னையின் கையில் இரு சுற்று கொண்ட ருத்ராட்ச மாலை சார்த்தப் படுகிறது.
அரளி, பிச்சி மலர், சந்தன முல்லை, ஜாதி, மல்லிகை, தாமரை மலர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
 
***
சுனாமி அடிக்கும் சற்று காலம் முன் அர்ச்சரால் கருவறையுள் நிற்க முடியவில்லையாம்.
ஏதோ நிகழ உள்ளது என்று கூறி வெளியே வர , சிறிது காலத்தில் சுனாமி வீசியதாம்.
***
அருங்காட்சியகம் நன்றாக உள்ளது
பல சிலைகள், ஆயுதங்கள், காசுகள், பாத்திரங்கள், குமரிக் கண்டம் வரை படம், முச்சங்கங்களின் விளக்கப்படம் உள்ளன.
***
சுசீந்திரத்தில் முன் உதித்த நங்கை - சக்தி பீடம்
ஆறு அடிக் கொற்றவை
மிகத் தொன்மையான கருவறை
நாம் கண்டு கேட்டு அறியாத பல திராவிடக் கடவுளர்
தாட்சாயிணியின் மேல் பற்கள் விழுந்த பீடம்
மஹாமேருவுக்கே அர்ச்சனை செய்கிறார்கள்
காஞ்சி, சுசீந்திரம்,குமரி முனை - தமிழகத்தின் மூன்று சக்தி பீடங்கள்
***
மிகப் பசுமையான பூமியாய் நாஞ்சில் தேசம்
பாண்டியரின் தென்பாண்டி தேசம்
வட்டப்பாறைக் கோட்டை
முற்காலப் பாண்டியரின் கோட்டைக் காலம் காலமாக அடுத்த வந்த அரசர்கள் முதல் ஆங்கிலேயர் வரைப் பயன்படுத்திய கடற்கரைக் கோட்டை
அவசியம் பார்க்க வேண்டும்.
***
மாதா அமிர்தானந்தமயி அம்மை உருவாக்கிய ராமாயண மஹால், விவேகானந்த புகைப்படக் கண்காட்சி, பாரத மாதா மஹால் ஆகியன அவசியம் பார்க்க வேண்டும்.
 
பாரதத்தின் முதல் மெழுகுச் சிலைக் காட்சியகம் காண வேண்டிய ஒன்று.
 
பாரதத்தின் இறுதிச் சாலையில் நடங்கள், அது உங்களை இந்துமாகடல் கரையில் கொண்டு நிறுத்தும்.
 
வள்ளுவர் சிலையை மீண்டும் மீண்டும் கரையில் இருந்து பார்த்துக் கொண்டே.....
 
தேசத்தின் எல்லையில் நாமும் ஒரு மனிதனாய் சமூஹத்தின் ப்ரதிநிதியாய் பொறுப்புடன் சேவைகள் செய்து உயர் ஆன்மீக நெறியில் நல வாழ்வு வாழ வேண்டிக் கொண்டு மீண்டும் குமரியைக் காண சங்கல்பம் செய்து விடைபெற்றோம்.
Continue reading
  674 Hits
674 Hits

நீலத் திரை கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி...

நீலத் திரை கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி...
 
தண்ணீர் உறைந்து பனியாகிறது.
பனி மீண்டும் உருகித் தண்ணீர் ஆகிறது.
இதையே பரம்பொருள் சக்தியாகி அச்சக்தியால் படைப்புக்கள் தோன்றி, ஜீவன் இயங்குகிறது.
அந்த ஜீவன் மீண்டும் தன்னுள் பரம்பொருளை உணர்ந்து உருவாக்கம் மறைதல் சுழற்சியில் இருந்து விலகி ஐக்யம் ஆவதே பாரத தேசத்தின் அனைத்து சமயங்கள் கூறும் சத்யம்.
அதையே சிவசக்தி ஐக்யம் என்கிறோம்.
பாரத தேசத்தில் பிறக்கும் பலகோடி மக்களின் ஜீவன் அந்த வீடு பேறு க்ளைமாக்ஸ் நிகழும் கட்டத்தில் பிறக்கின்றார்கள்.
முழு பாரத தேசமும் அந்த சத்யப் பயணத்தில் செல்வதைக் காட்டவே முற்காலப் பாண்டியர் குமரி முனையில் தவக்கோலத்தில் நிற்கும் பார்வதியை கன்னி அம்மனாக, கன்னியாக, குமரியாக, கன்யாகுமரியாக உருவகித்து ப்ரதிஷ்ட்டை செய்தனர்.
ஆன்மீக ஞானம் வளரும் குறியீடாகத் தலையில் மிளிரும் பிறை
ஜடாமுடி, கையில் ருத்ராட்ச மணிமாலை கொண்டு பஞ்சாட்சரம் ஜெபம் செய்யும் கோலம்.
குமரியின் பீடத்தில் இணைகயல்கள் [பாண்டியரின் சின்னம்] உள்ளது.ஆனால் சிம்ம முகம் தகட்டால் அது மறைந்துள்ளது.
பல ஆயிரம் வயதான இலுப்பை மரத்தால் ஆன திருமேனியில் அன்னை குமரி கடல்களின் சங்கமத்தில் நிற்கிறாள்.
முக்கடல்கள் என்பன உடல், மனம், அறிவு ஆகியவற்றின் குறியீடு.
மூன்றும் ஒருங்கிணைந்தே ஆன்மீகப் பயிற்சியில் லயிக்க வேண்டும்.
தாட்சாயிணியின் அமரும் வலது பின்பாகம் விழுந்த சக்தி பீடம் குமரி முனை.
நமது குறியீடுதான் குமரி அம்மை.
ஓம் சக்தி!
 
நீலக்கடல் வேகத்திலே நிலம் கொண்டு செல்லாமல்,காலம் எல்லாம் காத்து நிற்கும் கன்னித் தெய்வம் குமரி அம்மா - கண்ணதாசன்.
Continue reading
  683 Hits
683 Hits

First freedom day

சுதந்திரம் கிடைத்த அன்று...[மதராஸில்..]
அன்று விடுதலையை நள்ளிரவில் டில்லி வானொலி அறித்த நொடி முதல் மதராஸின் மூலை முடுக்குகள் பட்டிதொட்டிகளில் வெடியும் பட்டாசும் தீபாவளி போல் முழங்கின.
 
கோயில்களில் விஷேச பூஜைகள், திருவல்லிக்கேணி மசூதியில் தொழுகை, சாந்தோமிலும் ஜார்ஜ் கோட்டை புனித மேரி சர்ச்சிலும் ப்ரார்த்தனைகள் உச்சக் கட்டத்தில் இருந்தன.
 
மக்கள் கண்ணீருடன் தழுவிக் கொண்டு, கத்திக் கொண்டு சைக்கிள் ரிக்ஷாக்கள், சைக்கிள், மாட்டு வண்டிகளில் மெரினாவில் ஊர்வலம் போயினர்.
 
விடிய விடிய மெரினாவின் மக்கள் வந்தே மாதரம் என்று கூவி நீராடினர்.
 
ஐஸ் ஹவுஸ் முன் பாரதியாரின் பாடல்கள் ஒலிபரப்பு ஆயின.
 
மயிலையில் கபாலி கோயிலில் மக்கள் அன்னதானம் செய்தனர்.
 
வீடுகளில் கோலமிட்டு, காவி கட்டி, தோரணம் கட்டி தேசியக் கொடியை முச்சந்திகளிலும் ஏற்றினர்.
 
வீடுகளில் வாசல்களில் குத்து விளக்கு ஏற்றினர்.
 
ஆங்காங்கே இளைஞர்கள் கூடிக் கூடி மத்தளம் கொட்டி ஆடினர், ஆர்பரித்தனர், ஊர்வலம் அணிவகுப்புகள் செய்தனர்.
 
மாலையில் காணும் பொங்கல் போல் மெரினாவில் மதராஸ் பட்டிணமே கூடியது.
 
என்று முதல் விடுதலை நாளை ஆனந்த விகடன் பதிவு செய்வதைக் காண்க.....
Continue reading
  726 Hits
726 Hits

Few facts about Kanya kumari

ஆதங்கோட்டு ஆசான் வீற்று இருக்க இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் அகஸ்தியரின் மாணாகர் ரிவைஸ்ட் எடிட்டர் வர்ஷனாகத் தன் தொல்காப்பியத்தை வெளியிட்டான் இலக்கண ஆசான் தொல்காப்பியன் [புனைப்பெயர்]
 
அகஸ்தியத்தின் எடிட்டட் வெர்ஷன் தான் தொல்காப்பியம்.
 
ஆதங்கோட்டு ஆசான் இன்று கன்யாகுமரிக்கு அருகில் உள்ள திருவிதாங்கோடு ஊரில் வாழ்ந்தவர்.
***
அடி அலம்ப நின்ற பாண்டியன் மீண்டும் கடல் கோளால் பாண்டிய தேசம் அழியக் கூடாது என்ற எண்ணத்தில் குமரி அம்மையின் கையில் உள்ள சக்திவேலை மந்திரித்து முக்கடல் சங்கமத்தில் வீசினான்.அதன் பின் மணலூர் சேர்ந்து மதுரையை அவன் பின்னோர் உருவாக்கினர்.
 
குமரியின் கையில் அவ்வேல் இன்றும் நவராத்ரியில் தரப்படும்.
***
டச் வணிகர்கள் என்ற கடல் கொள்ளையர்கள் திருச்செந்தூரின் சண்முகரைத் திருடிய கையுடன் குமரியின் உயர் உயர் நாகரத்ன மூக்குத்தியை அபகரிக்க எண்ணி இறை சக்தியால் தோற்று ஓடினர்.
***
பல்வேறு வண்ணங்களில் உள்ள கடல் மணல் ஆழிப்பேரலைகள் கடல்கோள்கள் மூலம் அக்காலத்தில் நிலம் புரண்டு உண்டானதே.
***
உயர் பாரத ஞானி ஆதிசங்கரர் அத்வைத்த [அனைத்தும் ஒன்றே, என்னுள் உள்ள ஒரே சத்யம்] கொள்கையை உணர்த்திட, காஞ்சி மஹான் அவரது சன்னிதியை முக்கடல் சங்கமத்துறையில் ஏற்படுத்தினார்.
***
முக்கடல் தீர்த்தம் எடுத்தே உயர் நவராத்ரிகளில் குமரிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.அன்னையின் உருவம் இலுப்பை மரத்தால் ஆன விக்ரஹம்.
சிவத்துடன் ஐக்யம் ஆகாத தன்மையில் அன்னை கன்னி தத்துவத்தில் உள்ளதால் ராஜகோபுரம் இல்லை.
***
 அன்னையின் நராத்ரிக் கொடியேற்றம் முன்னூறு ஆண்டுகளாகக் கிறிஸ்துவ மீனவர்க் குடும்பங்கள் தயாரித்துக் கொடுக்கும் கயிற்றால் தான் இன்றும் நிகழ்கிறது.
***
 
 
 
 
Continue reading
  752 Hits
752 Hits

Explanation for national flag

ஒவ்வொரு உயிரும் பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்ட சுதந்திரத்தை நோக்கியே முன்னேறுவதைக் காண்க.
 
மனிதன் பூரண சுதந்திரம் கொண்ட உயிரினம்.அதைக் கொண்டு நல்ல செயல்களை அவன் செய்ய வேண்டும்.ஆனால் அவன் இன்று தன் சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறானா?
 
சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்து மனித மனதையே அசுர சக்தியென நம் கிழக்கத்திய புராணங்கள் குறிக்கின்றன.
 
சுயநலத்தின் காரணமாக அன்னியரின் பிடியில் பாரதம் அடிமைப் பட்டது.பலர் வீர த்யாகம் செய்து தாய் பூமியை சுதந்திரம் ஆக்கினர்.
 
விடுதலைப் போர் நிகழ்ந்த காலத்தில் வள்ளலார் பாம்பன் ஸ்வாமிகள் பாபா ஆகியோர் மனிதனின் உண்மையான விடுதலைப் போராடினர்.அது தான் ஆன்ம விடுதலை.பிறவி சுழற்சியில் இருந்து மனித ஆன்மா விடுதலை பெறுவதே அது.
 
சுதந்திர தேசத்தின் உயர் சின்னம் கொடி.
அது உயர்ந்த விடுதலை மூலம் தேசம் கொள்ளும் உயர் வளர்ச்சியின் குறியீடு.
எல்லா தேசத்துக்கும் கொடி உண்டு.
மூவேந்தர்கள் கொடி கொண்டு இருந்தனர்.
 
பாரதத்தின் இன்றைய கொடி தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளி அம்மையின் புடவைத் தலைப்பால் பிறந்ததே.
 
முதலில் கை ராட்டைக் கொடி இருந்தது.அதன் பின் ஒன்பது தாமரைகளுடன் வந்தே மாதரம் என்று எழுதப்பட்ட கொடியை பாரதி சுட்டுகிறார்.அதன் பின் சாரநாத்தில் புத்தர் விளக்கிய வாழ்வின் தர்ம சுழற்சியின் குறியீடான தர்மசக்ரத்தைக் கொண்ட மூவர்ண்ணக் கொடி வந்தது.அச்சக்கரத்தை வடிவமைத்தவன் அசோக மாமன்னன்.
 
பசுமை - தேசத்தின் வளம்
வெண்மை - அவ்வளம் என்பது மனதின் செயலில் தூய்மையின் அடிப்படையில் தான் அமையும்.
காவி - வாழ்க்கை என்பது உயர் சேவையும் த்யாகமும் ஆகும்.
இவை அனைத்தும் தூய அன்பின் அடையாளமாய் விளங்கும் தர்மத்தையே விளக்கும்.
ஒவ்வொரு இந்தியனும் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும்.
இதுவே நம் தாயின் மணிக்கொடியின் குறியீட்டு விளக்கம்.
தூய தர்மம் தூய அன்பினால் மட்டும் வரும்.அதன் நிறம் தான் நீலம்.
 
விடுதலை நாளில் தரமான எண்ணங்களைப் பரப்புக, வீடுகளில் சுதந்திரக் கொடி ஏற்றுக.
ஒரு காலத்தில் காஞ்சிபுரத்திலும் மதுரையிலும் விடுதலை நாளில் அன்னைக்குக் கொடி வர்ண ஆடை அணிவித்தனர்.பாரதத் தாயின் உருவகம்.
 
மிகத் தொன்மை மிக்க மண்ணின் மைந்தர் நாம்.
ஆன்ம விடுதலை கொள்ள முயல்வோம்.
 
வந்தே மாதரம்!

 

 
Continue reading
  721 Hits
721 Hits

Kanyakumari Thiruvalluvar idol

திருவள்ளுவருக்கு பாரத தேசத்தின் பாதமான கன்யாகுமரிக் கடலில், நம் குமரிக்கண்டப் பகுதியில் நினைவுச் சிலையினை மிக ப்ரம்மாண்டமாக வைக்க முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் [1975] திட்டம் இட்டார்.
 
அதன் பின் கலைஞர் அதைச் செய்ய முற்பட்டார்.விவேகாந்தர் கேந்திரத்தின் அன்றைய தலைவர் ஏக்நாத் ராணடே, பாரத ப்ரதமர் மொராஜி தேசாய் ஆகியோர் ஒருங்கிணைய, ப்ரதமரால் அடிக்கல் போடப்பட்டது.[15.4.1979]
 
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வர, அவர் காலத்திலும் எடுத்த பணியை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.
 
மாமல்லபுரம் சிற்பவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.கணபதி ஸ்தபதி இப்பணிக்குப் பொறுப்பேற்றார்.முன்னூறு சிற்பிகள் தேர்வு செய்யப் பட்டு உடன் பணி ஆற்றினர். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலை முழுவதும் செம்பினால் செய்யப்பட்டது.ஆனால் கடல் காற்றினால் செம்பு சேதம் ஆகும் என்று கருங்கல்லினால் சிலை செய்ய முடிவாயிற்று.
 
சிலையினுள் தலை முதல் கால் வரை வெற்றிடம் கொண்டதாக வைத்தால் தான் பலகாலம் நிற்கும் என்பதால் வேலை மிகவும் கடினம் ஆயிற்று.
 
முழுவதும் மரத்தால் ஆன அதே மாதிரி வடிவம் செய்யப்பட்டது, அதன் பின் கருங்கல் பணி ஆரம்பம் ஆயிற்று.
 
கன்யாகுமரி, அம்பா சமுத்ரம் [ஐயாயிரம் டன் கற்கள்], சென்னை சோளிங்க நல்லூர் [இரண்டாயிரம் டன் கற்கள்] ஆகிய மூன்று இடங்களில் பணிகள் நிகழ்ந்தன.
 
கருங்கற்கள் கொண்டு அடி சிலை எழுப்பப் பட்டது.
 
காயமத்ய சூத்ர நூலில் கூறப்பட்ட வாஸ்துவின் இலக்கணப்படி சிலை பாறை மீது எழும்பியது.
 
சிலையில் இடைப்பகுதி பாரத தேசத்தில் உள்ள நடன வகையில் இடையை நெளிக்கும் பெண்மை தத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கும் போது தான் மிக மிக கஷ்டம் ஏற்பட்டதாம்.அந்த வளைவை உருவாக்கி அதை அடுத்த நிலைகளுடன் பொருத்துவது என்பது மிகப் பெரிய சவாலானதாம்.
 
தினமும் பதினாறு மணி நேரம் பணி செய்தனர்.ஒரு சிற்பி ஒரு நாளுக்கு ஐம்பது உளிகள் பயன்படுத்தானாராம்.சுமார் முன்னூறு சிற்பிகள் பணி செய்தனர்.கை விரல்கள், காதுகள், மூக்கு ஆகியன தனியே செய்யப்பட்டன.
 
பதினெட்டு ஆயிரம் சவுக்கு மரக்கட்டைகள் கொண்ட சாரம் அமைக்கப்பட்டது.
 
பாறையின் மீது பீடம் உண்டாக்கி சிலையைக் கட்டுமானம் செய்ய ஆரம்பித்த நாள் - 19.10.1999
 
சிலையை உலகிற்கு அர்ப்பணித்த நாள் - 1.1.2000
 
உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் ஒரு புலவனுக்கு இல்லாத மிக உயர்ந்த ப்ரம்மாண்ட சிலை திருவள்ளுவருக்கே உண்டு.அது தமிழரின் மொழிப்பற்றினைக் காட்டும்.
 
முப்பாலை உணர்த்த மூன்று விரல்கள், மூன்று பாகங்கள் கொண்ட சிலை, அதிகாரங்களின் கணக்கில் உயரம், திருக்குறள் கல்வெட்டு என அரிய பணி செய்யப்பட்டது.
 
மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில் போல் இக்காலத் தமிழனின் சிற்பக் கலைப் பணிக்கு ஓர் சின்னம்.
 
2004, December 6,ஆழிப்பேரலைகள் வீசிய போது, வள்ளுவரின் தலை வரை அலை எழுப்பியது, ஆனால் ஒன்றும் ஆகவில்லை.வாழ்வியல் நெறிகள் தனிமனிதன் ஒருவன் பின்பற்றும் வரையில் சேதம் ஆகாது என்ற தத்துவத்தை இயற்கை உணர்த்தியது.
 
”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதி.வான் அளவு நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவர் பாரத தேசத்தின் உயர் வாழ்வில் நெறியை உலகிற்கே உணர்த்துகிறது.
 
சிலையை உருவாக்கிய சிற்பிகளின் பெயர்கள், படங்கள் பதிவு செய்யப்படுவது மிக முக்கியம்.
Continue reading
  770 Hits
770 Hits

Satellite research reports about Kumari kandam

குமரிக் கண்டம் குறித்த ஆராய்ச்சிகள் 
 
1846 ஆண்டில் புகழ் பெற்ற விலங்கியல் துறை வல்லுனர் ஃபிலிப் ஸ்லாட்டர் மடகாஸ்கர் பகுதியில் வாழும் பாலூட்டி விலங்குகள் பற்றி ஆராயும் போது, ஒரு காலத்தில் இந்தியாவும் மடகாஸ்கரும் நிலப்பகுதியாய் இணைந்து இருந்தன என்ற ஆய்வுக் கருத்தை வெளியிட்டார்.
 
”மிகத் தொன்மையான நிலம் தீவுகளாய்ச் சிதறின.அவற்றிற்கு நான் ”லெமூரியா” என்று பெயர் வைக்கிறேன்” - ஃபிலிப்
 
பயிர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றில் இந்தியா - மடகாஸ்கர் நிலப்பகுதிகளுக்கு உள்ள ஒற்றுமைகள் ஆராயப்பட்டன.
 
இந்த நிலப்பகுதியில் தான் மனிதன் பரிணமித்தான் என்ற ஆய்வுகள் கூறின. இதை எர்னிஸ்ட் ஹேக்கல் உறுதி செய்து எழுதினார்.
 
இதே கருத்தை மேலை தேசத்து விஞ்ஞானிகள் பலரும் கூறினர்.
 
இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிமனிதர்களே த்ராவிடர்கள்.அவர்கள் பூமி முழுவதும் புலம் பெயர ஆரம்பித்தனர்.
 
மிக முக்கியமான கடல்கோள்கள் மூலம் ஒவ்வொரு காலத்திலும் லெமூரியாக் கண்டம் அழிவுற்றது.
 
மேற்கூறிய மேலை தேசத்து ஆய்வுகள் வரும் முன் பல நூற்றாண்டுகட்கு முன்பே பாரத தேசத்தின் சமஸ்க்ருத தமிழ் இலக்கியங்கள், ஆன்மீக நூல்கள் அழிந்து போன நிலப்பரப்பைப் பற்றிய சில முக்கிய தகவல்களைக் கூறுகின்றன.
 
இந்த லெமூரியாக் கண்டம் தான் தமிழரின் குமரிக்கண்டம்.
 
இது பாண்டியர்தம் பூமி.
 
குமரி நிலம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது.
 
குப்சா - இதன் தெற்கில் குமரி ஆறு, வடக்கில் பஃறுளி ஆறு ஓடின.
 
தென் கிழக்கில் குமரிக் கடல்.அதன் அலைகள் அடிக்கும் வண்ணம் குமரி மலை இருக்க.அங்கே கபாடபுரம் அமைகிறது.
 
கபாடபுரத்தில் பாதுகாப்புக்கான போர்க் கருவிகள் உள்ளன, வனீகம் செய்ய ஏற்ற துறைமுகம் அமைகிறது.
 
அகழியால் சூழப் பட்ட கோட்டையினுள் பாண்டியர் தம் தலைநகரம் அமைகிறது.
 
பாண்டியர்கள் பகவதி தேவியைக் குல தெய்வமாகக் கொள்வர்.அதனால் தம் தேசத்தையும் குமரி என்றே கூறினர்.
 
குமரி மலைக்கு த்ராவிட மலை என்றும் பெயர் உண்டு.
 
த்ராவிடம் என்றால் மிகப் பழந்தமிழில் எட்டு.எட்டு அஷ்ட ஐஸ்வர்களை அதன் சக்தியான திருமகளைக் குறிக்கும்.
 
மலையின் மீதும் அடிவாரத்திலும் கோட்டைகள் மூன்று இருந்தன.
 
கேதா - இப்பகுதியின் ஸ்கந்தன் கோயில் அமைந்துள்ளது.
 
குப்சாப் பகுதியின் மேற்கில் கார்வதப் பகுதி உள்ளது.
 
அதன் மேற்கில் கடலும் அகஸ்திய முனியின் மலேயா மலையும் உள்ளது.
 
கார்வதப் பகுதியில் திருமால் கோயில் அமைகிறது.
 
வடபாகம் பட்டிணம் ஆகும்.
 
இதையே நம் தமிழ் நூல்கள் கூறுவதைக் காணலாம்....
 
பாண்டியன் நெடியோன் ஆளும் குமரி நாட்டில் பஃறுளி ஆறு பாய்கிறது  - புறநானூறு ஒன்பதாம் பாடல்.
 
கலித்தொகை நூல் குமரி நாடு கடல்கோளால் அழிந்ததைக் கூறும்.
 
புறநானூற்றில் பெண்பால் புலவர் வடக்கில் வேங்கட மாமலையும் தெற்கில் குமரியும் தமிழகத்தின் எல்லைகள் என்பார்.
 
கி.பி இரண்டாம் நூற்றாண்டின் சிலப்பதிகாரம் குமரி தேசம் கடல்கோளால் அழிந்ததைக் கூறுகிறது.
 
செயற்கைக் கோள் காட்டும் புகைப்படம் மூலம் அறிவது...
 
கன்யாகுமரிக்குக் கீழ் மிக உயர்ந்த மலைகள் தொடர் சங்கிலியாய் உள்ளன.அவை மடிப்புத் தொடர்களாய் அண்டார்டிகா வரை உள்ளன.
 
இடோபோ என்ற செயற்கைக் கோள் மூலம் இவ்வாய்வுகள் வெளியாயின.
 
இம்மலைகள் கடல் பரப்பில் இருந்து நாலாயிரம் - ஐயாயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ளன.
 
இம்மலைகளில் மனிதன் வாழ இயலாது.ஆனால் இதை ஒட்டி கன்யாகுமரி, லட்சத்தீவுகள், மால்டிவீஸ், இலங்கை ஆகிய பகுதிகளை இணைத்தாற் போல் சமவெளியும் கடலுள் உள்ளது.
 
அப்பகுதியில் ஆறுகள் ஓடுவதால் ஏற்படும் வண்டல் மண் படலம் படிந்துள்ளது.
 
பதினேழு ஆயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுள்ள நம் கடல் 130 அடி கீழே இருந்துள்ளது.
 
கன்யாகுமரிக்குக் கீழ் 25000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலம் உள்ளதை செயற்கைக் கோள் காட்டுகிறது.
 
லட்சத்தீவுகளையும் இலங்கையையும் அது இணைப்பதாக உள்ளது.
 
பாக் சலசந்தி அப்போது இல்லை.
 
இதுவே தொன்மை மிக்கக் குமரிக்கண்டம்.
 
சுமார் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் ஏற்பட்ட கடல்கோள் முலம் பாக் சலசந்தி ஏற்பட்டு இலங்கை வேதாரண்யத்தில் இருந்து பிரிகிறது என்று ஆய்வுகள் காட்டின.
Continue reading
  634 Hits
634 Hits

Budda to Bimbisara King

என் மனைவி, என் குழந்தை ஆஹா மகிழ்ச்சி தரும் விஷயங்களே!
ஆனால் இவர்களுக்கும் வயோதிகம், வ்யதை, சாவு நேரும்!
உலகில் பிறக்கும் எவர்க்கும் இது ஏற்படும் மஹா சத்யம் எனில் இவற்றின் பிடியில் இருந்து விலக என்ன வழி?
சதா நான் இதையே யோசித்தேன்..... புத்தர்.
 
அன்பு மனைவியையும் அருமை மகனையும் அந்த நள்ளிரவில் விட்டுப் பிரிய மனம் இல்லை.
ஆனால் உலக மக்கள் பொருட்டு முப்பெரும் கொடுமைகளில் இருந்து மீள, தப்பிக்க, விலக வழி தேடவே நான் அரண்மனையை விட்டு உலகிற்குப் புலம் பெயர்ந்தேன்.அது சமூஹத்துக்கு நான் பிறந்த பயனைச் செய்யும் மஹா தர்மமும் கடமையும் ஆகும்.

 

 
Continue reading
  734 Hits
734 Hits

Buddha to his father

எத்தனையோ மக்கள் பல்வேறு துன்பங்களில் உழன்று தவிக்கும் போது என்னால் ஒரு போகசுகமான உலகில் வாழ இயலவில்லை.வயோதிகமும் வ்யாதியும் மரணமும் அனைவருக்கும் உண்டு என்ற சத்யத்தை உணர்ந்தேன்.
இதை எல்லாம் மூடி மறைத்த என் அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்கச் சென்ற போது தான் அவர் நரைத்த தன் தலைமுடிக்குக் கருஞ்சாயம் தீட்டிக் கொண்டு இருந்தார்...ஹோ அவர் வயதாகி என் முன் வருவதை அவர் விரும்பவில்லை.
” அப்பா மூன்று உண்மைகளை மறைத்தீர்?”
”மகனே சித்தார்த் உன்னை நான் மிக மிக நேசிக்றேன், கஷ்டம் என்பதே உனக்குத் தெரியக்கூடாது.உன் வீடு, மனைவி, மகன் மட்டுமே உன் பொறுப்பு” [இதைத் தானே இன்று பல பெற்றோரும் செய்கிறார்கள்? எவ்வளவு அறியாமை?]
புத்தர் தன் தந்தையின் இறுதிக் கலாத்தில்.,
”ஒரு நாள் வயோதிகம் வ்யாதி மரணம் உங்களுக்கும் வரும், அதை நான் பார்ப்பதை எப்படித் தவிர்த்திரு இருப்பீர்? அவ்வளவு அறியாமை உங்கள் அன்பை மறைத்து விட்டதே! நல்லது அந்த அறியாமையால் தான் எனக்கு வாழ்க்கை பற்றிய பூரண ஞானம் கிடைத்தது.அதற்கு நன்றி கூறவும், மகன் என்ற கடமை மாறாமல் உங்களின் இறுதிக் கட்டத்தில் துணிஅ செய்யவும் வந்தேன்”
இன்று சமீபகாலத்தில் ”என் சுகம் மட்டுமே முக்கியம்” என்று குடும்பத்துள் பிரிவினை சுக மனப்பான்மையை கமர்ஷியல் போட்டி உலகம் விதைத்து வரும் பேராபத்தை உணர்க.
்பெற்றொர்களே...உங்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு நீங்கள் உறுதுணை செய்யலாம், ஆனால் அவ்வாழ்வை நீங்கள் வாழ முடியாது.அவர்தம் வாழ்க்கை இறுதி வரை நீங்கள் போக முடியாது.
Continue reading
  595 Hits
595 Hits

Budda's talk about anti Bhraminism and discriminamtion in society

புத்தரும் அஸலணனும்
 
சாவதி மாநகரில் புத்தர் தங்கியிருந்து வர்ணாஸ்ரமத்தின் வேறுபாடுகள் மூலம் ம்னைதன் மனிதனைத் தரம் தாழ்த்தி நடத்துதலைப் பற்றி மக்கள் முன் பேசிய காலம்.
 
அப்போது பல ப்ராமணர்கள் தங்களுள் ஒரு கற்ற ப்ராமணனை அவரிடம் அனுப்பி அவர் என்ன தான் சொல்கிறார் என்று அறிந்து வர அனுப்பினர்.
 
அவன் பெயர் அஸலயணா.
 
அவனுக்கும் புத்தருக்கும் இடையில் நிகழும் பேச்சைப் பதிவு செய்தனர் துறவிகள் பாலி மொழியில்.இதோ 3000 ஆண்டுகள் கழித்து...
 
அஸலயணா, ”ஐயா வணக்கம்! அந்தணர்கள் தான் உயர்ந்தோர், மற்றவர் தாழ்ந்தோர்.அந்தணர்கள் கவர்ச்சியாக வெள்ளையாக உள்ளனர், பிறர் கரிய நிறத்தில் உள்ளனர்.அந்தணர்கள் நேரடியாக ப்ரம்ம தேவனின் வாயில் இருந்து வந்தவர்கள், மிகத் தூய்மையானவர் அல்லவா?”
 
புத்தர், ”அப்படியானால் அந்தணர் பெண்களுக்கு ஏன் பிற பெண்கள் போல் மாத விடாய் வருகிறது? அவர்கள் ஏன் கர்ப்பம் கொண்டு உங்கள் குலக் குழந்தைகளைப் பிறப்பு உறுப்பின் வழியாக ப்ரவசம் செய்கிறார்கள்?
 
உடல் சேர்க்கை இன்றியா அந்தணர்கள் பிறந்தனர்? 
 
எந்த வர்ணாஸ்ரமத்தில் பிறந்தாலும் செய்த வினையின் பலனை அனுபவிக்காமல் இருக்க முடியுமா? உங்கள் ப்ராம்மணனுக்கு வினைப்பயன் இல்லையோ?
 
அதனால் எக்குலத்தில் பிறப்பினும் உயர்ந்த ஞானம் கொண்டோரை ஏற்றுக் கொண்டு மதித்தல் சமூஹ அவசியம்.
 
எக்குலத்தில் பிறப்பினும் உலகில் நிகழும் அன்றாட வாழ்வியலில் இவர்கள் பொருட்களைப் பயன்படுத்தும் தன்மை விதம் மாறுமோ?
 
ஆற்றில் குளிக்கப் போக, அந்தணர்கள் தோலை மட்டும் கழற்றிக் கழுவுவாரா?
 
தீயை ஏற்படுத்த அரணிக் கட்டைகளைத் தானே பயன்படுத்துகிறீர்?
 
யார் உண்டாகினும் தீயின் தன்மை புகை ஒன்று தானே?
 
உலகில் இயற்கை மட்டுமே மிக உயர்ந்தது.
 
ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதர்களுக்குள் ஏன் அனைத்திலும் வேறுபாடு? வினைப்பயன் தானே?
 
அந்தணர்கள் என்போர் ஆதியும் அந்தத்தையும் உணர்ந்த எவர் ஆயினும் ஆவர்.அது ஒரு குலம் அன்று.”
 
இவற்றை உணர்ந்த அஸலணா தன் குல கர்வத்தை விடுத்து, தூய அறநெறி காட்டும் அந்தணன் ஆகி, புத்தரின் கொள்கைகளைப் பரப்பி அஸலண சூக்தம் இயற்றினான்.
Continue reading
  592 Hits
592 Hits

What Budda says about his wife to his beloved son.....

வைசாலி மாநகரில் புத்தர் தன் மகன் நகுலனிடம்......
 
என் அந்தப்புரத்தில் ஒன்பது ஆயிரம் அழகிகள் பல்வேறு தேசத்தில் இருந்து எனக்கு சேவை செய்தனர்.சதா காதலும் காமமும் கொண்டு என்னையே ஈர்க்கத் துடிப்பர்.கை கால் முதுகு தலை தோள் என ஒவ்வொறு பகுதியையும் பிடித்துவிட ஒவ்வொருத்தி போட்டி போடுவாள்.
 
யாரையும் என் மனம் நாடவில்லை.உன் அன்னை யதோதரா மீது என் அன்பு தன்னலம் அற்றுத் தூய்மை கொண்டதாய் இருந்துள்ளது.
 
ஒருநாள் கபடி விளையாடி என் உடல் வலிக்க, அழகிகள் ஒத்தடம் கொடுக்க, உன் அன்னை பழம் அரிந்து கொடுக்க, அந்தப்புரக் கோயிலில் ஒரு வித இசைக்கருவியுடன் கலந்த நல்ல பெண் குரல் பாடக் கேட்டு மனம் லயித்து, எழுந்து போனேன்.கோயில் வாசலில் அழகி ஒருத்தி கையில் ஒரு விதமான அழகிய வேலைப்பாடு கொண்ட கருவியை மீட்டியபடி தன்னை மறந்து பாடுகிறாள்.அவள் மொழி புரியவில்லை...அப்போது உன் அன்னையிடம் அதைப் பற்றிக் கேட்டேன்...
 
உன் அன்னை, ”அவள் த்ராவிட தேசத்துப் பெண்.இசையில் வல்லவள். அவள் கையில் உள்ளது வீணை.உலகின் இயற்கை அழகான மலைகள், ஆறுகள், வனங்கள், மனித வாழ்வு பற்றி அவள் பாடுகிறாள்”
 
இவ்வார்த்தைகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.இயற்கை என்பது என்ன என்றே தெரியாது.காரணம் உன் தாத்தா எதையும் காட்டவில்லை.எனக்குத் தெரிந்தது அந்தப்புரம் மட்டுமே.
 
உன் அன்னை யசோதரா தான் என்னுள் இயற்கையை அறிய வேண்டும் என்ற தாகத்தைத் தூண்டிய குரு.
Continue reading
  701 Hits
701 Hits

What is under the sea in Poompuhar - a study about excavation

பூம்புகார் கடலுக்குள் என்ன ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது?
 
1991, 1993 கோவாவில் உள்ள தேசியக் கடல் ஆய்வுக் கழகம் பூம்புகாரின் கடல் ஆய்வினை மேற்கொண்டது.
 
இன்றைய பூம்புகார்க் கடற்கரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருபத்திமூன்று அடி ஆழத்தில் அவ்வாய்வு மேற்கொள்ளப் பட்டது.
 
லாடம் போல் ஆங்கில எழுத்து யு போன்ற கட்டிட அமைப்பினை அகழ்வாய்வுக் கருவி படம் பிடித்துக் காட்டியது.
 
அதன் பின் அகழ்வாய்வு செய்யும் ஆய்வாளர் உள்ளே குதித்து மூழ்கி ஆராய்ந்தனர்.
 
அக்கட்டிடம் குதிரையின் குளம்படி போல் உள்ளது.
 
அது இரண்டு மீட்டர் உயரம் உள்ளது.
 
அது ஒரு மீட்டர் அகலம் கொண்டது.
 
என்பத்தி ஐந்து மீட்டர் நீளம் கொண்டது.
 
சுடுமண் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டது.
 
இரு புறம் சுவர்களுக்கு இடையே இருபது மீட்டர் இடைவெளி அகலம் உண்டு.
 
இது கோயிலா? - இதுவே புரியாத புதிர்.
 
இங்கிலாந்து கடல் ஆய்வாளர் க்ரஹாம் ஆன்ஹாக் மீண்டும் இதை ஆராய்ந்தார்.
 
மிகத் தெளிந்த கட்டிடக் கலை வல்லுனர்கள் கொண்டே இது கட்டப்பட்டது என்கிறார்.
 
பதினோராயிரம் ஆண்டுகட்கு முன் ஏற்பட்ட பனி உருகல் மூலம் கொண்ட கடல் கோளால் நானூறு மூட்டர் தண்ணீர் உயர, பூம்புகாரின் நிலப்பகுதி மூழ்கியது என்கின்றார்.அப்போது இக்கட்டிடம் மூழ்கியது.
 
க்லீன் என்ற ஆய்வாளர் பூம்புகார் 
 
5 Kms from beach, 23 ft depth, 11000 years old construction, Mr.Graham is researching in 1993
Continue reading
  628 Hits
628 Hits

Paripadal kaatum bakthy - 2

மதுரைக் கீரந்தையார் - lyrics
மதுரை நன் நாகனார் - Music
யாழ் - பண்ணு யாழ்
 
மதுரையில் உறையும் திருமாலே...
ஊழிக் காலம் போயின பின், மீண்டும் அண்ட சராசரத்தில் ஐம்பூதங்கள் தோன்றின.அவற்றுள் பூமியை நீ வராஹ அவதாரம் கொண்டு காத்து, அதன் மீது எண்ணற்ற உயிர்களைப் படைத்தாயே!அதனால் இந்த யுகம் வராஹ கல்பம் என்றல்லவா போற்றப்படுகிறது?
 
இவ்வாறு எத்தனையோ கப கோடிக் காலங்கள் உள்ளன.அவை யாவும் உன் லீலை அன்றோ?
 
ஞானியர் உன்னை அனைத்துள்ளும் பொதிந்து நிறைந்த அந்தர்யாமி என்றே கூறுவர்.
 
பனைக் கொடி கொண்ட பலதேவனும் நீயே.
 
உன் அழகிய பரந்த மார்பில் அசையும் பலவகை அணிகலன்கள் வானில் தோன்றும் வானவில்லைப் போல் மிளிருமே.
 
அவற்றுள் மின்னும் வெண்முத்துக்கள் எண்ணற்ற நிலாக்களை ஒத்தனவே.
 
பூமி தேவியைக் காத்த போது உன் மார்பில் வடுகள் உண்டாயின.அவற்றால் மகிழ்வாயே.அசுரர்கள் உன்னால் பாழ் படுவரே.அவரை அழிக்க வல்ல உன் வெண்மையான சங்கு இடி போல் ஒலிக்குமே.
 
உன் பொன் சக்கரம் தீ போல் ஜ்வலிக்கும்.அது எமனை ஒத்தது.அதன் மூலம் அசுரர் தம் தலைகள் பனங்காய்கள் போல் அல்லவா உருளும்?
 
யாவரையும் காக்கும் தன்மை கொண்ட உன் நீல மேனி, சிவந்த கண்கள், பொறுமையுடன் அன்பர்க்கு பூமிபோல் அருளும் தன்மை, கார் கால மேகம்  போல் அருளை வழங்கும் கருணை ஆகியவற்றை வேதங்கள் போற்றுமே!
 
உண்மையான அந்தணர்கள் உரிய முறையில் யாகம் செய்ய நீ அதில் வெளிப்பட்டு அருள்கிறாய்.
 
தேவர்களுக்கு அமுதைக் கடைந்து கொடுத்து அருளினாயே.அதனால் தானே அவர்களுக்கு இறப்பு இல்லை.அது உன் தயை அல்லோ?
 
கருடக் கொடி கொண்ட எம்மானே!
என் அறிவு மழுங்கி உன்னை மறவாமல் மெய் ஞானம் கொள்ள அருள்க.என் குடும்பமும் சுற்றமும் சதா உன் பாதங்களில் உண்மையான பக்தியுடன் பணிகிறோம்.
Continue reading
  584 Hits
584 Hits

பரிபாடலில் பக்தி...1

மதுரையின் பெருமை கூறும் சங்க நூல்களுள் ஒன்று பரிபாடல்.இசையுடன் கூடிய அழகிய பாடல்கள் வைகை, திருமால், முருகன் ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன.இவற்றுள் திருமால், முருகன் ஆகிய தெய்வங்களை வாழ்த்தும் மிகத் தொன்மை மிக்கத் தமிழ்ப் பாடல்கள் இவையே நமக்குக் கிடைத்தன.
 
பழமுதிர்ச்சோலை, திருப்பரம் குன்றம், அழகர் மலை, இருந்தையூர் [கூடல் அழகர்] மீதான பாடல்கள் கிடைத்துள.
 
இதோ கூடல் அழகரை சங்கப்புலவர் நல் எழுனியார் புகழ்வதைக் காண்க.,
 
”திருமாலே! ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் உன் தலை மீது நிழல் குடையாக உள்ளான்.
உன் வலது மார்பில் செல்வத் திருமாமகள் வீற்று அருள்கிறாள். 
 
வெண்சங்கு ஒத்த நிறம் கொண்டு, கலப்பையை ஏந்தி, உழவர்களின் தெய்வமாய், யானைக் கொடியுடன் பலதேவனாக மக்கள் உன்னை வணங்குவர்.
 
தாமரை போன்ற சிவந்த கண்களும், காயாம்பூ ஒத்த கரு நிறமும், திருமாமகள் உறையும் அழகிய மணிமார்பும், கெளஸ்துப மருவும், ஒப்பற்ற அணிகலன்களும், பட்டுப்பீதாம்பரமும் கொண்ட உனக்கு கருடனே கொடியான உள்ளது.
 
அறியாமையின் வடிவான அசுர குணம் ஞானமாகிய உன்னுடன் போரிட்டால் வலிமை குறையுமல்லோ?
 
காமனுக்கும் பிரம்மனுக்கும் தலைமையானவனே!
 
நான்கு வேதங்களும் நின்னைப் புகழும் அல்லோ?
 
உன்னை முற்றிலும் உணர்ந்தவர் யார்?
 
உன் தூய சரித்திரத்தை முற்றிலும் உணர்ந்தோர் யார்?
 
உன் மீது மிக்க அன்புடன் கூடிய பக்தி கொண்டேன்.அதனால் உன்னை என் அறிவுக்குப் புலப்பட்ட வகையில் புகழ்கிறேன்.அவற்றை ஏற்றல் வேண்டும்!
 
உயர்ந்த ஞானமும் ஒழுக்கம் கொண்ட அந்தணர் போற்றும் வேதத்தின் உட்பொருள் நீ.அரசனின் வீரம் நீ. ஒழுக்கம் இல்லாதாரை வருத்தும் அறம் நீ. வானத்தில் உள்ள சூரிய சந்திரர் நீ. சதாசிவனும் அவனால் ஏற்படும் அழிப்புத் தொழிலும் நீ. மேகமும் வானமும் மலையும் நிலமும் நீயே!
 
உனக்கு உவமை கூறிட உலகில் எவரும் இல்லை!
 
உனக்கு நீயே நிகர்.பொன்னால் ஆன சக்கரத்தையும், வெண் சங்கையும் ஏந்திய தெய்வமே!
 
நீ எல்லா உயிர்களையும் காக்கும் சக்தியாக உள்ளாய்.
 
நானும் என் குடும்பமும் சுற்றமும் உன் பாதங்களில் என்றென்றும் பக்தியுடன் பணிந்து வாழ அருள்வாயே! உன் பாதங்களை வணங்குகிறோம், அருள்க!
Continue reading
  704 Hits
704 Hits

சோழகுலவல்லி என்ற நாகப்பட்டிணம்

சோழகுலவல்லி என்ற நாகப்பட்டிணம் உற்றவர்க்கு உறுப்பறுத் தெரியின் கண் உய்த்தலை அன்ன தீமை செய்வோர்க்கும் ஒத்த மனத்தாய் நற்றவர்க்கு இடமாகின்றது நாகையே... ---- ஒரு பழைய தமிழ் புத்த செய்யுள். [தீமை செய்வோர்க்கும் என்றும் நன்மையே எண்ணும் நல்ல தவ ஒழுக்கம் கொண்டோர்க்கு இடம் நாகப்பட்டிணமே - பொருள்.] சோழ நாட்டின் மிகத் தொன்மையானத் துறைமுகப் பட்டிணம் நாகப்பட்டிணம்.இதற்குச் சோழகுலவல்லி என்று ராஜராஜன் பெயரிட்டான். நாக தேசம் என்றி சிலம்பும் மணிமேகலையும் சுட்டும் பகுதி இலங்கையின் தென் பகுதியே என்று வரலாற்று ஆய்வுகள் கூறும். அப்பகுதிக்குச் செல்ல இத்துறைமுகம் அதிகம் பயன்பட்டது.அடுத்து நாக என்றால் அழகு என்று அர்த்தம்.மிக அழகிய துறைமுக நகரம் என்று அர்த்தம். இன்று இவ்வூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக, தேவார ஸ்தலங்களில் ஒன்றாக, சப்த விடங்க சிவ ஸ்தலங்களில் ஒன்றாக, ப்ரஸித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மையின் இருப்பிடமாக அமைகிறது. பெரிய புராணத்தில் மீனவர் குலத்தில் பிறந்து உயர் ஆன்மீக ஞானம் கொண்ட அதிபத்த நாயனாரின் ஊராக உள்ளது. வரலாற்று ஆய்வில் நாகை எனப்படும் நாகபுரி, நாகப்பட்டிணம் மிகத் தொன்மைமிக்க புத்த மத நகராக உள்ளது. அசோகர் சோழனின் அனுமதியுடன் சைனாவுக்கு புத்த மதத்தைப் பரப்ப இவ்வூரில் பதர திட்ட விஹாரம் ஏற்படுத்தினார். இங்கு சைனா, இலங்கை ஆகிய தேசங்களுக்கும், தேசங்களில் இருந்தும் புத்த மத குருமார்கள் மாணவர்கள் பாரத தேசத்துள் வந்து போயினர். கி.பி 5ல் தர்ம பாலர் என்ற புத்த குரு அசோகரின் விஹாரத்தில் தலைமையேற்று வழிகாட்டினாராம்.அவர் நெட்டிப கரணட்ட கதா என்ற பாலி மொழி புத்த மத நூலுக்கு மிக எளிய உரை எழுதினார். அடுத்து கி.பி 720ல் பல்லவன் நரசிம்ம போத்த வர்மன் என்பவன் [பல்லவர் கீழ் இருந்த சோழ தேசத்துக் குறுநில மன்னன்] சைனா வணிகரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஒரு புத்தர் கோயிலை உண்டாக்கினான். அது கி.பி 12 வரை சீனா கோயில் என்ற பெயரில் இருந்துள்ளது.இக்கோயிலை மார்கோபோலோ தன் பயணக்குறிப்பேட்டில் பதிவாக்குகிறார். இக்கோயில் இருந்த தூய பொன் புத்தர் சிலையையே திருமங்கை ஆழ்வார் எடுத்துச் சென்று ஸ்ரீரங்கத்தில் மதில் ஒன்றை எழுப்பினார். ராஜ ராஜ சோழன் ஸ்ரீசைலேந்திர சூடாமணி விஹாரம் ஏற்படுத்தி அது கி.பி 17வரை இருந்துள்ளது.இதற்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர். ஆங்கிலேயன் இடித்தான். சுமத்ரா ஜாவா தீவுகளின் அரசன் ஸ்ரீமால் விஜயகோத்துங்க வர்மா ராஜராஜனின் தோழன்.அவனது வேண்டுகோளின் பெயரின் சூடாமணி விஹாரம் கட்டப்பட்டது.சூடாமணி வர்ம அரசனின் தந்தை ஆவார். ராஜேந்திரன் கடாரத்தைக் கைக்கொண்ட போது அவ்வூர் மன்னன் ஒரு விஹாரம் கட்டினான்.அதற்கு ராஜேந்திர சோழப் பெரும்பள்ளி என்று பெயர்.சோழன் சில கிராமங்களை நிவந்தமாக அளித்த செப்பேடு இன்று லீடன் நகரில் உள்ளது. இவையெல்லாம் இன்று நாகையில் இல்லை. கி.பி 14ல் சைனாவின் மிக முக்கிய புத்த நூல்களில் ஒன்றான தாவோ இ சிலியோவின் ஒரு ப்ரதி இவ்விஹாரத்தில் இருந்துள்ளது. கி.பி 1477 பர்மாவின் ஹம்சவதி ஊரில் இருந்த 14 புத்தத் துறவிகளும் சித்ரன் என்ற தூதனும் இலங்கை சென்று பணியாற்றித் திரும்பும் வழியில் புயல் ஏற்பட்ட மரக்கலம் உடைந்து ஒருவழியாக நாகப்பட்டிணத்தில் இவர்கள் கரை சேர்ந்தனர்.அப்போது சைனாக் கோயிலில் தங்கி, அதன் பின் அரசனின் உதவியுடன் புதுக்கப்பல் ஏறி தேசம் மீண்டதைக் கலியாணி என்ற பர்மா ஊர்க் கல்வெட்டு சுட்டும். இந்த சைனா புத்த கோயிலைத் தான் கண்டதாக வாலெண்டின் என்ற போர்சுகல் பயணி கி.பி 1725ல் குறிக்கிறார். நாகப்பட்டிணத்தில் வடக்கில் சைனா கோயில், கறுப்புக் கோயில், புது வெளிக்கோபுரம் என்றெல்லாம் அவ்வூர் மக்களின் வழக்கில் இருந்த மிக உயர்ந்த கோபுரம் ஒன்று இருந்துள்ளது.அது கடலில் இருந்து பார்த்தால் தெரியும் அளவு உயரமாக இருந்துள்ளது.கி.பி 1849ல் எலியட் என்ற ஆங்கிலேயர் இதைத் தன் பயணக்குறிப்பேட்டில் பதிவாக்கினார்.இன்று அது இல்லை. இக்கோபுரத்தின் கீழ் கிறிஸ்துவர் ஆலயம் எழுப்பினர்.ஆனால் மக்கள் எதிர்க்க அதை அரசு இடித்துள்ளது. அப்போது ஐந்து ஐம்பொன் புத்தர் சிலைகள் ஐந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதில் ஒன்று சைனா பீங்கானால் ஆனது. நின்ற கோலத்தில் உபதேச புத்தர். போதி மரத்தடி த்யான புத்தர் அபயக் கரம் காட்டி ஆசீர்வதிக்கும் புத்தர் சீன தேசத்து புத்தர் ஆகிய சிலைகள் கிட்டின. நின்ற கோல புத்தரின் பீடத்தில் ”ஸ்வஸ்தி ஸ்ரீஆகம பண்டிதர் உய்யக் கொண்ட நாயகர்” என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மதராஸ் எக்மோர் அருங்காட்சியகத்தில் உள்ளன. இன்றும் நாகப்பட்டிணத்தில் புத்தன் கோட்டம் என்ற பகுதி உள்ளது.அதில் அதிகம் இந்து ப்ராமணர்கள் வாழ்கிறார்கள். மிக உயர்ந்த வாழ்வியல் அறநெறிகளை உணர்த்திய புத்தரின் ஆன்மீக நெறிகள் இன்று கிழக்கத்திய ஆசிய நாடுகளில் பரவ மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டிணம் ஆகியன மிக முக்கிய வாயில்கள் ஆயின. வாயில்கள் மறைந்தன, ஆனால் ஆன்மீகம் மறையவில்லை. இன்று பொறையாறு கல்விப்பணி மூலம் இம்மாவட்டத்தில் எமக்குக் கிட்டிய உறவை எண்ணி வியக்கிறேன்.மகிழ்கிறேன்....

Continue reading
  724 Hits
724 Hits

காவிரிப்பூம்பட்டிணமும் புத்த மதமும்

காவிரிப்பூம்பட்டிணமும் புத்த மதமும்

சோழர்களின் தலைநகராய் விளங்கிய பூம்புகார் பெளத்த சமயத்தைக் கிழக்கு ஆசிய தேசங்களுக்குப் பரவ நுழைவாயிலாக அமைந்தது.

இன்று அவ்வூரில் உள்ள கி.மு 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்த விஹாரம் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குறிக்கப்படுகிறது.

இந்திர விஹாரம் என்று அதன் பெயர்.அதில் துறவிகளின் அறைகள்வெங்கல புத்தர் சிலைமடத்தின் பசுவின் எலும்புகள் கொண்ட புதை குழிமணிமேகலையில் குறிக்கப்பெறும் பளிங்கினால் ஆன புத்தரின் திருவடித் தாமரைக் கல்பீடம் ஆகியன அகழ்வாய்வில் கிட்டியதை நா.த்யாகராசன் பதிவாக்கினார்.

பாலி மொழி புத்த நூல்கள் பூம்புகாரைக் காவீரப்பட்டிணம் என்றே கூறும்.

புத்த ஜாதகக் கதை ஒன்றில் வருவதாவது...

Continue reading
  611 Hits
611 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries