Vilakku vazhipaadu - aadi friday spl

விளக்கேற்றி வழிபடும் ஆடி மாதம்
 
ப்ரபஞ்சம் வெளிச்ச சக்தியால் ஆனது.
இதையே மெய்ஞானமும் விஞ்ஞானமும் உணர்ந்து கூறுவன.
ஜோதி மயமாய் மூலப்பொருளை அறிவதே குண்டலினின் பலன்.
அனைத்தும் ஆன ஒளி சக்தியை பூமி வாழ் உயிர்கள் சூரியன் மூலம் மட்டும் பெறுவன.
 
 
அச்சூரியனின் ஒளியால் தான் அனைத்தும் ஆன அறிவியல் உண்மையை உணர்ந்த அதை மனிதன் சூரிய நமஸ்காரம் செய்தான் , அதன் பின் அதன் குறியீடாய் விளக்கை உருவாக்கினான்.
 
சூரிய ஒளி சக்தியே காயத்ரி சக்தி.
அச்சக்தியால் தான் அனைத்தும் ஆகிறது.
எனவே விளக்கில் ஒளியை ஏற்றி ஒலியுடன் சேர்த்து ஆதிமனிதன் வணங்கினான்.அதன் மூலம் எண்ணியதைப் பெறும் பலனை அறிந்தான்....உருவானது விளக்கு வழிபாடு.
 
பாரத தேசம் முழுவதும் வீடுகளில் தொன்மைக் காலம் முதல் நிகழ்வது தீப வழிபாடே.காலை மாலை விளக்குகள் ஏற்றிப் பெண்கள் முல்லையும் நெல்லும் தூவி வழிபட்டதை சங்க இலக்கியங்கள் கூறும்.
 
இரும்பு, மண், வெங்கலம், பொன் ஆகியன கொண்டு விளக்குகளை மனிதன் உண்டாக்கினான்.விளக்கு என்பது highest technology tool to extract the cosmic energy என்று உணர்ந்தே அரசர்கள் தொன்னூறு சதவீதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள் கொடுத்தனர்.
 
அதில் தமிழன் ஐந்து பூதங்களின் சக்தியைப் பெற்று வேண்டுவன நிறைவேற ஐம்முகக் குத்து விளக்கை உருவாக்கினான்.
 
குத்து விளக்கின் பீடம் [கீழ் பாகம்] - படைத்தல் சக்தி [ப்ரம்மா], தண்டு [காத்தல் சக்தி - விஷ்ணு], மேல் முகம் [சதாசிவம் - மாற்றுதல் சக்தி], ஐம்முகங்கள் ஐம்பூதங்களையும் சுடர் ஆதிசக்தியையும் குறிக்கும்.
 
[வெளியிடுவதற்கில்லை] குறிப்பிட்ட திசையில் ஐம்முக விளக்கை ஏற்றிக் கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி வழிபட்டு வர உரிய காலத்தில் எண்ணியது நிறைவேறும் என்பது ரிக் வேத technical guidance.ஒலியும்க் ஒளியும் இணைந்தே பாக்ய சக்தியை - self awareness life energy - SAL ENERGY - அதிகரிப்பதை அறிவியல் ஆய்வுகளும் கூறும்.எனவே வீட்டிலும் கோயில்களிலும் தரமான பசும் நெய், நல் எண்ணெய் மட்டும் கொண்டு விளக்கு ஏற்றுக, காரணம் அவை இரண்டு மட்டும் தான் சூரிய சக்தியை முழுமையாகக் கொண்டவை.

 

 
Continue reading
  495 Hits
495 Hits

Masani amman

அக்காலத்தில்செந்நெல்என்பதுமிகஉயர்ந்தபொருள்.

மிகஉயர்செல்வரேசெந்நெல்அரிசிச்சோறுஉண்பர்.

செந்நெல்லுக்குஇணையாகத்தங்கம்பண்டமாற்றுஆனதுஎன்றால்அதன்உயர்வைக்கற்பனைசெய்க.

இனிவரும்காலத்தேநெல்பொன்னைவிடஅதிகவிலைகொள்ளும்.

இந்தநெல்லின்மூளம்பெறும்அரிசியைப்பொங்குவதேபொங்கல்.

Continue reading
  552 Hits
552 Hits

Kodungalore bahavathy shetram - aadi month spl

கொடுங்கல்லூர் - இன்றைய கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக ப்ரஸித்தி பெற்ற தேவி ஸ்தலம்.

அன்றைய சேர தேசத்தின் தலைநகராக இருந்தது.அப்போது அதன் பெயர் வஞ்சி மாநகர்.

வஞ்சி - பெண்கொற்றவைகாளி.காலம் காலமாக முன்னோர் வணங்கிய இன்று கேரளத்தின் ப்ரசித்தி பெற்ற கொடுங்கல்லூர் அம்மை பகவதி.

Continue reading
  1083 Hits
1083 Hits

Attrukaal - Women's sabarimalai

திருவனந்தரபுரம் ஆற்றுக்கால் பெண்களின் சபரிமலை.
 
வருடத்தில் மார்ச் மாதத்தில் லட்சம் பெண்கள் அன்னைக்குப் பொங்கல் வழிபாடு மேற்கொண்டு கின்னஸ் சாதனை செய்யும் மஹா ஸ்தலம்.
 
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல் என்ற சிலப்பதிகார வாக்கை நிரூபிக்கச் சேரன் செங்குட்டுவன் குமுளி மலையின் மீது கண்ணகிக் கோட்தமும், தன் தலைநகர் கொடுங்கலூரில் கோயிலும் கண்ணகிக்கு ஏற்படுத்திய பின் கேரளம் முழுவதும் கண்ணகியை தேவியின் அவதாரமாக பாவித்த கோயில்கள் பல தோன்றின.அவற்றுள் மிக ப்ரஸித்த பெற்ற ஒன்று திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயில்.
 
மதுரை எரித்த கண்ணகி கோபம் தீராமல் பாண்டிய தேசத்தின் எல்லையான கன்யாகுமரிக்குச் செல்கிறாள். அங்கே தேவியைச் சேரன் தன் தேசத்துள் வரவேற்க அவள் ஆற்றுக்கால் வந்து தங்கிட, அவளை ஷாந்தம் ஆக்கிடப் பெண்கள் பொங்கலிட்டு வழிபட, பொங்கால் உத்சவம் உண்டானது.
 
கோயில் தேவி ஷாந்த ஸ்வரூபிணியாய் துர்கை வடிவில் கலந்த கண்ணகியாக உள்ளாள்.
 
கோயில் முழுவதும் சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு காட்சியும் சிற்பமாக உள்ளது.
 
மார்ச் மாதத்தில் இவ்வாண்டு 8 லட்சம் பெண்கள் கூடி பொங்கலிட்டனர்.அன்று விடுமுறை, ஆண்கள் வெளிவருவதில்லை,ஊர் முழுவதும் ஏட்டு கிலோமீட்டர் தூரம் பொங்கலுக்கு இடம் booking செய்ய வேண்டும்.
 
அன்னைக்குக் காப்புக் கட்டியவுடன் கொடுங்கல்லூரில் இருந்து காலம்காலமாய்க் கண்ணகியின் வரலாற்றைப் பாடும் மரபினர் வ்ரதம் பூண்டு தோற்றம் பாட்டுப் பாடுவர்.அதன்பின் சன்னிதியின் விளக்கில் இருந்து தீ பற்றப்பட, அது ஊர் முழுவதும் உள்ள அடுப்புகளுக்குச் செல்ல பொங்கல் ஆகி, ஹெலிக்காப்டர் மூலம் நிவேதனம் ஆகும்.
 
முருகன் பாவனையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வ்ரதம் பூண்டு மறுநாள் தேவியை வழிபடும் நிகழ்வு முக்கியம்.
 
வெறும் வெற்று த்ராவிடம் பேசி உண்மையான த்ராவிட மரபுகளைச் சீர் குலத்த தமிழகம் கேரள மக்களின் பக்தியைக் கண்டு நாண வேண்டும்.
 
சமூஹத்தின் ப்ரபலங்கள் ஆற்றுக்கால் பொக்காலாவில் பங்கேற்பது மிக ப்ரபலம்.
 
பிறர் பசி தீர்த்தல் மிக உயர்ந்த அறம்.
பொங்கல் - நம் பாக்ய சக்தியை அதிகரிக்க முன்னோர் கண்ட உயர் சடங்கு.
பெண்கள் ஒரு மார்ச் மாதம் சென்று பொங்கலிடுக.....
 
you tube - பல வீடியோக்கள் காண்க.
Continue reading
  685 Hits
685 Hits

பாரத தேசத்தின் மிகத் தொன்மையான சக்தி வழிபாடு - குமரி

ப்ரபஞ்ச சக்தியினைப் பெண்மை என்று குறிப்பது வழக்கம்.
பெண்மை - தோற்றத்தினை முழுமையாக்கும் சக்தி.
இதையே தாய்மை, தாய் தெய்வம் என்றனர் ஆதி மனிதர்கள் ஆன குமரிக்கண்ட முன்னோர்.
தாய்மையை வணங்கும் பெண் தெய்வ வழிபாட்டுக் கலாச்சரம் குமரித் தெய்வம் என மிகத் தொன்மையான குமரிக்கண்டமான லெமூரியாவில் உருபெற்றது.
ஆதி மனிதனும், தமிழும் தோன்றியது குமரிக் கண்டம்.அதுவே பாண்டிய தேசம்.பண்டையர் - மிகத் தொன்மையானவர் பாண்டியர் ஆயினர்.
தாய் தெய்வ வழிபாட்டை மேற்கொண்ட அவர்களே முதன்முதலில் கடலில் மீன்கள் பிடிக்கும் தொழிலை முறையாக மேற்கொண்டு ”நீர் ஏர் உழவர்” எனப்பட்டனர்.
தாய்மையினை மதிக்கும் பொருட்டு, பெண்மையைப் பேணும் பொருட்டு, அவர்கள் தம் குலதெய்வமாகக் கொண்டதே ”குமரி” வழிபாடு.
அத்தெய்வத்தின் இணை விழிகள் மிக அழகிய மீன்கள் என உருவகம் செய்து, தம் மீன் பிடித் தொழிலையும் கருத்தில் கொண்டு..பாண்டியர்கள் இணை கயல்களைச் சின்னமாகக் கொண்டனர்.
குமரிக் கண்டத்தில் தம் தலைநகரங்களான தென்மதுரை, கபாடபுரத்தில் குமரி அம்மையை வழிபட்டனர்.குமரிக்கோடு [இன்றைய விவேகானந்தர் பாறை] மலையில் குமரியின் ஒற்றைப் பாதச்சுவட்டைப் பொறித்து வழிபட்டனர்.
மனிதனின் ஆன்மாவான பெண்மை சர்வமும் ஆன மூலப்பொருளான சதாசிவமான ஆண்மையுடன் ஐக்யம் பெறுதல் மூலம் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும் என்ற உயர் ஞானத்தைக் குமரி அம்மை வழிபாடு உணர்த்தும்.அதுவே சிவசக்தி தத்துவம்.
இன்று பாரத தேசம் பெண் தெய்வ வழிபாட்டில் முன்னோடியாக இருக்க, மிக மிகத் தொன்மை மிக்கப் பெண் தெய்வ வழிபாட்டுச் சான்றாய கன்யா குமரி தெய்வம் அமைகிறது.
கன்னி - ஒவ்வொரு உற்பத்திக்கும் திறவுப்பாதை.
51 சக்தி பீடங்களில் குமரிப்பீடம் தேவியில் வலது பக்க அமரும் ப்ருஷ்ட பாகமாகக் கொள்ளப்படும்.
முற்காலப் பாண்டியர் கடல்கோள்களில் இருந்து மீண்டு இன்றைய மதுரையை உருவாக்கும் முன் இன்றைய குமரி அம்மையைத் தென் எல்லைக் காவலாக, மேலும் நிலம் கடல் கோளால் அழியாமல் இருக்க ப்ரதிஷ்ட்டை செய்தனர்.
அடி அலம்ப நின்ற பாண்டியன் முறையாக வீர வேலாயுதம் செய்து அதில் தேவியின் சக்தியை மந்த்ர பலத்தால் ஆவாஹணம் செய்து மூன்று முறைக் கடலில் தூக்கி வீசினான்.அந்த வேலின் பாரம்பரியமாய் இன்றும் குமரி அம்மை வீர வேல் கொண்டே நவராத்ரியின் இறுதியில் தசமி அன்று குதியை ஏறி பாணாசுர சம்ஹாரம் செய்ய பஞ்சலிங்கபுர கிராமம் செல்கிறாள்.
முற்காலப் பாண்டியரின் குல தெய்வமான குமரி இன்றைய மதுரை மீனாக்ஷி என்ற வரலாற்று ஆய்வும் உண்டு.காரணம் அத்தெய்வத்தின் கோயிலில் கல்வெட்டில் ”குமரித்துறையவள்” என்ற பெயர் உள்ளது.
 
இன்றுள்ள குமரி கன்னிப் பெண்ணாக, சிவத்தை நோக்கிய அத்வக்கோலத்தில் கையில் ஜெபமாலை தாங்கி உள்ளாள்.ஆன்மா மூலப்பொருளுடன் ஐக்யம் ஆவதையே அவள் தவம் உணர்த்தும்.தலையில் ஆன்ம ஞானம் வளர்வதைக் குறிக்க பிறைநிலா அணிகிறாள்.தேவியின் மூக்கில் சேரர் அணிவித்த மிக மிக விலை மதிப்பு கொண்ட அரிய நாகரத்னம் மூக்குத்தி மிளிவதைக் காண்க.அதைக் கலங்கரை விளக்கு என்று தவறாகப் புரிந்து கொண்டு கரை சேர்ந்து ஆபத்துக்குள்ளான கப்பல்கள் உண்டு.
 
முற்காலப் பாண்டியர் தேவியில் ஜபமாலையாகக் கொற்கை முத்துக்கள் கோர்த்த உயர் மாலையை அணிவித்தும் உள்ளனர்.
 
நவதுர்க்கை வடிவாகவும், பால த்ரிபுரசுந்தரியின் வடிவாகவும், காத்யாயனி சக்தியாகவும் சாக்த வழிபாட்டு முறைகளில் குமரி பூஜிக்கப் படுகிறாள்.
 
கி.பி 6ல் ஆதிசங்கரர் முக்கடல் துறையில் தீர்த்தம் ஆடி, சில காலம் மக்களுக்கு ஆன்மீக நெறி காட்டியதால் அவருக்குக் குமரிமுனை நோக்கிய சன்னிதியைக் காஞ்சி காமகோடி பீடம் அமைத்துள்ளது.
 
அம்மையின் கோயிலில் இரு ப்ரதான வாயில்கள் உண்டு.தை - ஆடி - உத்தராயண வாசல், ஆடி - தை - தக்ஷிணாயன வாசல். தேசத்தின் இரு பெரிய பருவ மாற்றத்தைக் குறிக்க இவை. அக்காலத்துக்கு ஏற்ப அவை திறக்கப்படும்.
 
ஆடி, தை, புரட்டாசி, கார்த்திகை அமாவாசைகளில் முக்கடல் தீர்த்தம் கொண்டு வரவும், நவராத்ரி ஒன்பது நாட்களும் கிழக்கு முக வாயில் திறக்கப் படும்.அது மனிதனுள் ஆன்மீகச் சூரியன் உதயம் ஆவதன் குறியீடே ஆகும்.
 
அதனால் தான் சூர்யோதமும் அஸ்தமனமும் சந்த்ரோதய அஸ்தமனமும் இக்கடலில் விசேஷம்.
 
 
விஜய தசமி அன்று பாணாசுர வதம் முடிந்து அன்னை முக்கடல் சங்கமத்தில் நீராடுவதைக் காண ஆயிரக் கணக்கில் கூட்டம் கூடும். 
தச மஹா வித்யை சக்தி வழிபாட்டில் குமரி அம்மை - பரிபூர்ண ஞானத்தின் தாரா தேவியாக வழிபட்ட குறிப்புகள் உண்டு.
பாரத கண்டமும் மக்களும் ஆன்மீக ஞானத்தால் முக்தி பெறும் குறியீட்டைக் குமரி அம்மை உணர்த்துகிறாள்.
இன்றுள்ள கோயிலுக்கு முற்கால, பிற்காலப் பாண்டியர், சேரர், திருவாங்கூர் ராஜ்ய மன்னர்கள் , சோழர் எனப் பலர் பணிகள் செய்துள்ளனர்.
 
வாரணாசி கங்கையும், ராமேஸ்வர சேதுக் கடலும், தென்கோடிக் குமரி முக்கடல் துறையும், காவிரி சங்கமமும் மிக முக்கிய புண்ணிய நீராட்டக் கட்டங்கள் எனப் பல ஆயிரம் ஆண்டுகளாய் மக்கள் பின்பற்றி வருவதைக் காண்க.
 
பாணாசுரன் என்ற அசுரன் கன்னி ஒருத்தியால் தான் சாக வேண்டும் என்ற கதி பெற்றான் - அதாவது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம்.
 
தேவி முக்கடல் சங்கமத்தில் குமரிக்கோட்டில் சிவனை எண்ணி தவம் செய்ய, சுசீந்திரத்தில் இருக்கும் ஈஸ்வரன் அம்மை மணம் கொள்ள வரும் போது இந்திரன் தவறான முகூர்த்த காலத்தைக் கோழியாய் இருந்து உணர்த்த, கல்யாணம் நின்று போக, கோபமும் அவமானமும் தேவியுள் புழுங்க, அச்சூழலில் அவளைக் கல்யாணம் செய்திட பாணாசுரன் வலியுறுத்த தேவியும் அவனைத் தன் கையால் கசக்கிக் கடலில் வீசினாள் என்பது புராணம்.
 
மிகச் சிறந்த சக்தி பீடமாய் உள்ள குமரிக்கோயிலுள் அதன் பைரவ [கால சக்தி] சன்னிதியும் உள்ளது.அருகில் உள்ள சுசீந்திரம் கோயிலில் உள்ள முன் உதித்த நங்கை தேவி சன்னிதியும் தமிழகத்தில் உள்ள மூன்று சக்தி பீடங்களில் ஒன்று.அது தேவியில் மேல் பற்கள் விழுந்த இடம்.மற்றொரு இடம் காஞ்சிபுரம் காமாக்ஷியின் பீடம், அது தேவியின் நாபியும் இடுப்பு எலும்பும் விழுந்த இடம்.
 
மதுரையை எரித்த கண்ணகி கையில் ஒற்றைச் சிலம்புடன் குமரிக்கடல் வர, அவளைச் சேர தேசத்து மக்கள் வரவேற்றதாக பக்தி நூல்கள் கூறும்.அப்போது கண்ணகியின் ஆன்ம சக்தியைக் குமரி அம்மையுடன் சேர்த்து வழிபட்டதை மலையாள பக்தி நூல்கள் பகரும்.
 
அமெரிக்கா செல்ல வேண்டுமா, போனால் பாரத தேசத்தின் ஆன்மீக பற்றி என்ன கூறுவது என்ற ஆழ்ந்த உள் ஆலோசனையை ஸ்வாமி விவேகானந்தர் குமரிப்பாறையில் மூன்று தினங்கள் தவம் செய்து உணர்ந்தார், அதன் பின்னே அமெக்கா சென்றார்.அவர் நீந்தியே குமரிப்பாறையை அடைந்தார்.[1892 a.d]
The author of Periplus of the Erythraean Sea (60-80 A.D.) has written about the prevalence of the propitiation of the deity Kanyakumari in the extreme southern part of India; "There is another place called Comori and a harbour, hither come those men who wish to consecrate themselves for the rest of their lives, and bath and dwell in celibacy and women also do the same; for it is told that a goddess once dwelt here and bathed."[3] [4]
 
Ptolemy's geography describes commercial relations between western India and Alexandria, the chief eastern emporium of the Roman Empire. He identified Kanyakumari along with the Gulf of Mannar as a center for pearl fishery. He also identifies Korkai (assumed to be the present day's Tuticorin), a place to the east of Kanyakumari, as an emporium of pearl trade.
 
2004 ஆழிப்பேரலைக்கு முன் குமரிக்கடல் பின்வாங்கிய போது குமரிக்கண்டத்தின் பரந்த நிலப்பரப்பு தென்பட்டதைக் காண்கிறோம்.பல ஆய்வுகள் குமரிக்கண்டத்தைப் பற்றி மேற்கொள்ளப் படவேண்டும்.
Continue reading
  651 Hits
651 Hits

புகார்ப் பதி பெண்டிர் எழுவர் - Aadi 18 festival article

ஆடி 18ஆம் நாளில் காவிரியை வணங்கும் போது ஏழு கற்களையோ, ஏழு பிடி மண் உருண்டைகளையோ வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் மலர்கள் தாலிச்சரடு அணிவித்து வணங்குவது மரபு.
 
இவை ஏழு புண்ணிய நதிகள், ஏழு கன்னிமார் [மண்ணின் தாதுக்கள்], ஏழு சப்த மாதர்கள் [துர்கையின் பரிவாரங்கள்] எனக் கொள்க.
 
மண்ணின் தாதுக்கள் recycle ஆகித் தாவரத்துள் முறையே சென்று பயன் விளைவிக்க இவை கன்னிமார் என்று பூஜிக்கப்படுவன.
 
மற்றொரு ஆராய்ச்சியில் இவை பூம்புகாரில் வாழ்ந்த ஏழு உயர்ந்த ஒழுக்கம் கொண்ட பத்தினிப் பெண்களைக் குறிப்பதாகக் கூறுவர்.
 
பாண்டியன் முன் கண்ணகியார் தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபனம் செய்தார்.பாண்டியன் மாண்டான்.அதன் பின் அவன் அரசி முன் கண்ணகியார் பூம்புகாரில் வாழ்ந்து தனக்கு முன்னோடிகளாய் உள்ள எழுவரைக் குறிப்பிடுகிறார்.
 
1. காவிரி கடலில் சேரும் சங்கமத்துறையில் சில பெண்கள் கூடி மணலில் விளையாடினர்.அதில் ஒருத்தி தன் காதலனின் முகத்தை வடித்தாள், அதில் லயித்தாள்.அப்போது காவிரியின் வெள்ளம் அதிகரிக்க அம்மணல் முகம் அழியும் படி வர, அவள் அதை அணைத்துக் கொண்டு அதைப் பாதுகாத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினாள்.[எல்லாவற்றிலும் தன் தலைவனைக் காணல்]
 
2. தன் கணவன் கடல் கடந்து வணிகம் செய்யக் கப்பலில் செல்லும் போதெல்லாம், ஊரில் உள்ள ஒருவன் தன்னை நோட்டம் விடுவதை உணர்ந்த ஒரு பெண் அவன் வெறுக்கும் வண்ணம் தன் உடல், உடை, பாவனையை மாற்றி அவன் மனதில் இருந்து தன்னைப் பற்றிய எண்னத்தை விலக்கினாள்.
 
3. கடல் கடந்து வணிகம் சென்ற தன் கணவன் மீண்டு வரும் வரைத் தன் மனதைக் கல்லாக்கி, புலன் இச்சைகளை வென்று வாழ்ந்தாள் ஒருத்தி.
 
4. இரு தோழிகள்.இருவரும் பிற்காலத்தில் சம்பந்திகள் ஆக வேண்டும் என்று உறுதி செய்தனர்.ஆனால் பெண் முன் பிறந்து ஆண் மிக மிகப் பின் பிறந்தது.இதனால் வருந்தினர்.பெண் வளரும் போது இதை அறிந்து, அக்குழந்தையைத் தன் குழந்தை போல் ஏற்றாள். [கணவன் மனைவிக்கு அன்பால் முதல் மகன் தான்]
 
5. தன்னொடு பிறந்த பெண்களில் ஒருத்தியைத் தன் மாமனுக்குக் கல்யாணம் செய்து தருவதாக வாக்களித்து, அம்மாமனை வீட்டில் பணியாள் போல் நடத்தினான் ஒரு வணிகன்.ஆனால் பணத்தாசையால் தன் மகள்களைப் பணக்காரர்களுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திட, ஒருத்தி அதைப் பொறாமல் தன் மாமனைக் கல்யாணம் செய்து கொண்டு ஊரார் முன் உண்மை உரைத்தாள்.வன்னிமரத்தையும் கிணற்றையும் சாட்சியாய்க் கூறினாள்.மரம் - நீர் போல் தம் இல்லறம் அனைவருக்கும் அறம் செய்யும் என்பதன் குறியீடு.
 
6. ஒருத்தி தன் சக கிழத்தியின் [கணவனின் இரண்டாம் மனைவி - polygamy]  குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அது தவறிக் கிணற்றில் விழ, தன் கவனக்குறைவுக்கு ஏற்ற வினைப்பயனை அனுபவிக்கத் தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, தெய்வ அருளால் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டாள்.
 
7. மாமன்னர் கரிகால் பெருவளத்தானின் மகள் ஆதிமந்தியார்.இவள் சேர இளவரசன் ஆட்டனத்திக் காதலித்து மணந்தாள்.தம்பதிகள் ஆடி 18 கொண்டாடப் பூம்புகார் வந்தனர்.கழார் துறை எனப்படும் சிறப்பு மிக்கக் காவிரிக் கடைமடைப் பகுதியில் புண்ணிய தீர்த்தம் ஆடினர், காவிரியை வணங்கினர்.அப்போது ஆட்டனத்தி புது வெள்ளத்தில் நீந்தி மகிழ வெள்ளம் அவனை அடித்துச் செல்ல, ஊரே கூடி அழ, வீரர்கள் தேட, ஆதிமந்தி கரையோரம் ஓட, இறுதியில் மருதி என்ற மீனவப் பெண் அவனைக் காவிரி கடலுடன் சேரும் சங்கமத்துறையில் உயிருடன் மீட்டு அவள் உயிர் விட்டாள்.அவளுக்கு மானியமாக மருதியூர் கரிகாலனால் தரப்பட்டது.
 
மேல் கண்ட இப்பெண்களைக் கண்ணகியார் மிகப் போற்றி, அவர்தம் ஊரில் தாம் வாழ்வதையும் அவர்தம் வழியில் உயர் ஒழுக்கம் தன்னைக் கடைப்பிடிப்பதையும் அவர் சமூஹத்துக்கு உணர்த்துகிறார்.
 
செல்வம் புரளும் சமூஹத்தில் தனிமனித ஒழுக்கத்தை மீண்டும் இளங்கோ இதன் மூலம் வலியுறுத்துகிறார்.
 
ஆடி 18 அன்று புகார்ப்பதிப் பத்தினிப் பெண்டிர் எழுவரை வணங்குக.
Continue reading
  570 Hits
570 Hits

சோற்றாணிக்கரை பகவதி

வஞ்சம் உண்டு மயல் பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்கு துயர் உற்றோர்
அழல் வாய் நாகத்தால் எயிற் அழுந்தினர்
கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழுது துயர் நீங்கும்
நிழல் கால் நெடுகல் நின்ற மன்றம்
 
என்று காவிரிப்பூம்பட்டிணத்தில் 2000 ஆண்டுகளுக்கும் முன் இருந்த தெய்வீகக் கல் ஒன்றை இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார்.
 
அதாவது, பிறர் வாழ்வைக் கெடுக்க எண்ணி செய்வினை ஏவல் பில்லி சூனியம் செய்து அதனால் பாதிக்கப்பட்டோரும், விஷம் உண்டோரும், மிகக் கொடிய பாம்புக்கடியால் துயர் உற்றோரும், பேய் பூதம் பிசாசு ப்ரேத ஆத்மாக்களால் பாதிக்கப்பட்டோரும் வலம் வந்து முறையே தொழ, அவர்களை குணம் செய்யும் நிழல் போல் கரிய ஒளி வீசும் நெடுகல்.
 
இக்கல் இன்று எங்கே?
கேரளத்தில் ப்ரஸித்தி பெற்ற சோற்றாணிக்கரை ஸ்தலத்தில் மூலஸ்தானத்தில் பகவதி அம்மையாய் விளங்குகிறது.
 
பூம்புகாரைக் கடல்கோள் அழிக்க, சேரன் செங்குட்டுவன் சோழன் பெருநற்கிள்ளியின் உதவியுடன் சதுக்க பூதத்தையும் இக்கல்லையும் மீட்டுச் சேர தேசத்தில் முறையே கோயில் செய்தான்.
 
சதுக்க பூதம் இன்று கொடுங்கல்லூரில் கோயிலின் வெளியே தனிச் சன்னிதியில் உள்ளது.
 
சோதி எழுந்த கரை - சோற்றாணிக்கரை.
அன்னை இங்கு அலைமகள், கலைமகள்ல் , மலைமகள் என முப்பெரும் தேவியரும் ஒருங்கிணைந்த கோலத்தில் மஹா சக்தியாய் விளங்குகிறாள்.அன்னை இக்கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்டாள்.
 
கல்லின் மீது பொன் கவசம் சார்த்தப்படும்.சங்கு சக்ரம் அபயம் வரதம் கொண்ட விஷ்ணு துர்கை வடிவாக அன்னை விளங்குகிறாள்.கண்ணகியாரின் ஒரு நடுகல்லாகக் கேரள வரலாற்று ஆசிரியர்கள் இதையும் கூறுவர்.காரணம் அன்னையின் உத்சவ மூர்த்தம் சிலம்பும் வீர வாளும் ஏந்தி உள்ளது.
 
கி.பி 7ல் ஆதிசங்கரர் மூகாம்பிகையின் சக்தியை இக்கல்லில் ஆவாஹனம் செய்தார்.இன்றும் இரவு ஏழு மணி முதல் மறுநாள் ஏழு மணி வரை மூகாம்பிகையின் மஹாசரஸ்வதி சக்தி இக்கல்லில் ஒளிர்வதைக் காண்க.
 
அன்னையின் கோயிலின் கீழ் பத்ரகாளி அன்னை விளங்குகிறாள்.அவள் கோயிலில் தினமும் இரவில் இறந்த ஆன்மாக்களுக்கு குருதி பூஜை அன்னை முன் நிகழும்.
 
கேரளத்தின் மிக ப்ரஸித்தி பெற்ற ன்னை இவள். THE GREAT EXAURSIST.
 
அன்னையின் நவராத்ரி விழாவும், மாசி மகமும் மிக ப்ரஸித்தம்.
 
41 தினங்களில் மனிதனை உபாதிக்கும் தீய சக்திகள் விலகுவதை இன்றும் கண்கூடாகக் காண்க.
 
அன்னையின் நெடுகல் அருகில் மஹாவிஷ்ணுவும் ஒரு கல்லில் ஆவாஹனம் ஆகி மஹாலக்ஷ்மி சானித்யம் அதிகம் உண்டாக ஏற்பாடு ஆனது.
 
அதிகாலை 4 மணிமுதல் 7 வரை அன்னையை நெடுகல் வடிவில் கண்ணாரக் கண்டு மன உடல் பிணி நீக்கலாம்.
 
எண்ணற்ற லீலைகள் நிகழ்த்துகிறாள் இவள்.
 
சதா லலிதா சஹஸ்ரநாமமும் தேவி மாஹாத்யமும் பாராயணம் செய்து கொண்டே இருப்பதைக் காண்க.
 
கேரளத்தினரின் கல்வி ஞானத்துக்கு இவளே காரணம் என்பர்.
 
ஏவலும் பில்லி சூன்யமும் பூத பேய் பிசாசுகளும் விஷமும் ப்ரேத ஆன்மாக்களின் தொல்லையும் அஞ்சி ஓடும் சக்தி கொண்ட அன்னையை வணங்குவோம்.
Continue reading
  539 Hits
539 Hits

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

மேலான பரம் பொருளாகிய ப்ரஹ்மம் சக்தியாக - ப்ரபஞ்ச ஆற்றலாக மருவிய - மாறிய ஊர் மேல்மருவத்தூர்.
 
மிகத் தொன்மை மிக்க ஊர்.அதில் உள்ள ஸ்வயம்பு லிங்கமே ப்ரஹ்மம் பராசக்தியின் குறியீடு.
அச்சக்தியின் தோற்ற வெளிப்பாடே ஐம்பூதங்கள். ஐம்பூதங்களின் தொகுதியே இயக்கமே ப்ரபஞ்சம், நாம் எல்லாம்.
 
எனவே சக்தியைக் கைக்கொண்டால் தான் அன்றாட வாழ்வியல் தேவைகள் முதல் உயர் ஞானம் வரைக் கிட்டும் என்பது விஞ்ஞானம்.
 
தற்போது உள்ள கோயிலில் உள்ள ஸ்வயம்புவை ஆதியில் பல சித்தர்கள் உபாசித்தனர்.கால வெள்ளத்தில் அது மண்ணுள் புதைய, கலியுகத்தில் மீண்டும் அடிகளார் மூலம் தத்துவமும் உண்மையும் வெளீயாயிற்று.மக்கள் ஸ்ரத்தையுடன் கனவன்த்துடன் பக்தி செய்ய அவர் சில்ப சாஸ்த்ர ரூபத்தில் அம்மையின் சிலையை உண்டாக்கினார்.
 
உடல் மனம் அறிவு ஆகிய மூன்றும் சதா பரம்பொருளுடன் ஐக்யம் ஆகிச் செயல்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு கொண்டதே வாழ்க்கை என்பதை உணர்த்த அன்னை சின் முத்ரை ஏந்தி உள்ளாள். மேலும் அழகிய தாமரை மொட்டு - உற்பத்தியின், ஞானத்தின் குறியீடு.சக்தி பெண்மையின் வடிவே.
 
மேலும் உடலின் ஆரோக்யத்துக்கு மிக முக்கியமான ஏழு தாதுக்கள் சப்த மாதர் வடிவில் உள்ளன.அணு சக்தி இயக்கத்தின் குறியீடான நாக வடிவமும் வழிபாட்டில் உள்ளது.
 
ஆதிபராசக்தி படைத்தல் காத்தல் மாற்றுதல் ஆகிய முத்தொழில்களை சதா உலகில் வாழ்வில் செயலாற்றுவதை உணர்க.அச்சக்திகளையே கலைமகள் - அலைமகள் - மலைமகள் என உருவகம் செய்கிறோம்.
 
வாழ்வாதாரம் சுகமாக இருக்க பாக்ய சக்தி தேவை.அதை அதிகரிக்க வேதச் சடங்குகள் அறிவியல் பூர்வமாக ஒலி-ஒளி சக்திகளுடன் உண்டாயின.
 
மேல்மருவத்தூரில் நிகழும் சடங்குகள் மிக உயர் நிலையில் மேற்கொள்ளப் படுகின்றன.குறிப்பாக எந்த்ர வடிவங்கள் மூலம் மூல சக்தியை ஆகர்ஷணம் செய்து அதன் மூலம் பலன் பெறும் பற்பல வேத வழிச் சடங்குகள் உள.
 
அதில் மிகக் குறிப்பாக விளக்கு வழிபாடு, கூழ் வார்த்தல், நவராத்ரி மஹோத்சவம், ஆடிப்பூரம், இருமுடி மூலம் முன் ஜென்ம வினை அகற்றல் ஆகிய உண்டாயின.
 
பெண்கள் கருவறைக்குள் நுழைந்து தெய்வத் திருமேனியைத் தொட்டு பூஜிக்கும் வழக்கம் தேசத்தில் அன்று முதல் சக்தி வழிபாட்டில் உண்டு.அதை மிகக் கைதேர்ந்த வகையில் இக்கோயில் நடைமுறை செய்வதைக் காண்க.
 
ஆடிப் பூரம் என்பது - ப்ரஹ்மம் பராசக்தியாக மாறிய கால அளவின் குறியீட்டு தினம்.
 
அனைத்து சாதியினரும் பாகுபாடு இன்றி அம்மையைக் காணவும், தெய்வ பக்தியின் எல்லை சமூஹ சேவை என்ற பாரத தேசத்தின் வாழ்வியல் நெறியை விளக்கவும் மேல்மருவத்தூர் ஓர் எடுத்துக்காட்டு.
 
நம் காலத்தில் இக்கோயில் வெளிவராது போயிருப்பின் மதமாற்றங்கள் மிக மிக அதிகம் ஆகி இருக்கும்.
 
உலகில் ஆதிபராசக்திக்கு என அமைந்துள்ள ஒரே திருத்தலம் மேல்மருவத்தூர் மட்டுமே.அதுவும் சான்றோர் உறையும் பல்லவ தேசத்தில் கோயில் அமைகிறது.
 
ஒரு முறை செல்க்.
Continue reading
  510 Hits
510 Hits

கருமாரியும் கண்ணகியாரும்....

கருமாரியும் கண்ணகியாரும்....
 
கருத்த மழை மேகங்கள் கூடி உரிய காலத்தில் பருவ மழையைப் பெய்விக்க வேண்டும்.
 
மண் செழிக்க வேண்டும்.
 
அதற்குரிய ஆதிசக்தியாக நம் தமிழர் கண்ட உன்னத வழிபாடே மாரி அம்மை வழிபாடு.
 
ஊர் தோறும் மழை தெய்வத்தை வணங்கிய தமிழர், கண்ணகியாரின் வாழ்வுக்குப் பின் அவரது ஆன்மாவையும் மாரியுடன் பிணைத்துக் கொண்டனர்.
 
கருத்த மேகம் பெய்யும் மாரி - கருமாரி.
 
அன்னையின் வடிவம் சிற்ப சாஸ்த்ர வடிவில் பைரவியின் தோற்றத்தில் தான் பெரும்பாலும் அமையும்.
 
அக்னி க்ரீடம், பாசம், உடுக்கையுடன் பின்னப்பட்ட நாகம், ஆணவம் அற்ற தன்மையை உணர்த்தும் கபாலம், வாள் [ஞானம்]
 
அன்னையின் பாதத்தில் உள்ள சிரசு ஆய்வுகளில் அக்காலத்தில் தேசத்துக்காகத் தம்மைத் தாமே தலை அரிந்து பலிகொடுக்கும் வீரர் சிரசாகும் என்று தெரியவருகிறது.பின்னர் அது தேவியின் உருவையே தாங்கிற்று.
 
சில தேவிகள் ஐந்தலை நாகக்குடையுடன் இருப்பர்.அது ஐம்பூதத்தைக் குறிக்கும்.
 
ஆடி மாதம் கருமாரியை மரியாதை செய்யும் காரணம் - பருவ மழை வளம், கண்ணகியார்.
Continue reading
  449 Hits
449 Hits

யாதுமாகி நின்றாய் காளி...மதராஸ் காளிகாம்பாள்

காளிகட் - கொல்கத்தா ஆயிற்று
மும்பா தேவியின் மாநகரம் தான் மும்பை
அது போல் தமிழகத்தின் தலைநகரான மதராஸ் - சென்னை மாநகரின் ப்ரதான அதிதேவதை - கொற்றவை - காளி - நெய்தல் நில காமாக்ஷி, சென்னாபுரி ஈஸ்வரி என்று வர்ணிக்கப்படும் சென்னம்மாள் தேவியான ஸ்ரீகாளிகாம்பாள்.
 
மதராஸின் ப்ரதான இடமான துறைமுகத்தின் எதிரே பேரிஸ் கார்னரில் தம்புச்செட்டி சாலையில் அன்னை காளிகாம்பிகை மதராஸின் ராணியாக அமர்கிறாள்.
 
அன்னை மிக ஷாந்த வடிவானவள்.
 
ஆணவம் அகற்றும் அங்குசம், அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்தும் பாசம், நெய்தல் மலர், வரம் தரும் திருக்கரம், மனமாகிய கரும்பு, ஆணவம் கொய்யும் த்ரிசூலம் என அன்னை விளங்குகிறாள்.
 
அன்னையின் பீடத்தில் அசுரர்களின் தலைகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
 
அன்னையின் முன் ஆதிசங்கரர் ப்ரதிஷ்டித்த மேரு யந்த்ரம் உள்ளது.
 
கி.பி 1614ல் வீரசிவாஜி தஞ்சை செல்லும் முன் அன்னையை வணங்கி வீர வாளைப் பூஜித்து எடுத்துச் சென்றார்.
 
மஹாகவி பாரதியாரின் இஷ்ட மூர்த்தி இவள்.சுதேமித்ரன் அலுவலகம் கோயில் அருகில் இருந்தது.பாரதி அடிக்கடி அன்னைக் கண்டு பாடினார்.
 
உத்சவர் மஹாலக்ஷ்மி மஹாசரஸ்வதியுடன் விளங்குகிறாள்.
 
அன்னையின் வெள்ளிக் கிண்ணத்தேர் மிக ப்ரசித்தம்.
 
அன்னை மதராஸ் மாநகரம் வளர உயிர் நாடியாக உள்ளாள்.
 
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்....
 
நின்னைச் சரண் அடைந்தேன் கண்ணம்மா என்று பாரதி அவள் முன் பாடுவதை உணர்க.
 
அம்பிகைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று மஹாகவி கூறியது காளிகாம்பாள் மீதான சத்ய வாக்கே.
Continue reading
  454 Hits
454 Hits

பவானி பாவனா கம்யா...

பவானி -  வெற்றியைத் தவிர்த்து வேறேதும் அறியாதவள்.
 
பவானி என்றால் பாவம் செய்யும் அறியாமை விலகும் என்பது தேவி உபாசனை.
 
பவானி என்ற ஊர் கொங்கு தேசத்தில் காவிரியும் பவானியும் அமிர்த்தவாஹினியும் கூடும் ஆற்றிடைத் துறையாக அமைகிறது.இவ்வூர் தான் திருநணா என்று சம்பந்தரால் தேவாரத்தில் போற்றப்படும் ஸ்தலம்.
 
2500 ஆண்டுகட்கு முன் சேரமன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை பரணர் பதிற்றுப்பத்தில் போற்றிப் பாடியதற்காக இவ்வூரை தானமாக வரிவிலக்கு செய்து கொடுத்தான்.
 
சேரன் செங்குட்டுவன் கண்ணகியாருக்கு நடுகல் கோட்டம் அமைத்த கையோடு கொங்கு தேசம் முழுவதும் புதிய கோயில்கள் எழும்பின.பவானியில் உள்ள அதிதேவதையான காளி - கொற்றவை கண்ணகியாருடன் பிணைக்கப்பட்டாள்.அவள் தான் செல்லாண்டி அம்மன்.செல்வம் மண்டிய அம்மன்.அதாவது திருமகளின் உட்சக்தியைக் கொண்டவள்.
 
தச மஹா வித்யா தேவி வழிபாட்டில் இவள் கமலாத்மிகா - மஹாலக்ஷ்மி சக்தியாய் விளங்குவதைக் காண்க.
 
இவளையே பவானி பாவனா கம்யா பவாரண்ய குடாரிக - பவானியானவள் பாவம் செய்யும் அறியாமை என்ற கொடிய மரத்தை வெட்டும் ஞானமாகிய கோடரி ஆனவள் என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும்.
 
பவானி பவானி பவானி எனில் பாவம் போகும் என்கிறார் தேவி உபாசகரும் சங்கீத வித்தகரும் ஆன ஸ்யாமா சாஸ்த்ரிகள்.
 
மிகத் தொன்மை மிக்க கொற்றவை இவள்.எட்டு கைகள் கொண்டவள், செந்தூரக் கல்லினால் உருவான அம்மை.
 
அம்மையின் இன்றைய கோயில் கருவறை கி.பி 16ஆம் நூற்றாண்டில் ஊரில் உள்ள ஒவ்வொரு இன மக்களின் பங்களிப்பால் ஆனதைக் கல்வெட்டுகள் கூறும்.
 
கொங்கச் செல்வி - என்று இளங்கோவடிகள் கூறும் தேவியின் அம்சம் இவள்.
 
ஆண்டு உத்சவத்தில் அன்னையின் மூலஸ்தானத்துள் சென்று அன்னையைத் தீண்டி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு.
 
உரிய முறையில் உண்மையான நன்றியுடன் பனீக, வாழ்த்துக, வரம் பெறுக.
Continue reading
  443 Hits
443 Hits

சமயபுரமும் மாகாளிக்குடியும்

 
தமிழகத்தில் ப்ரதான மாரி அம்மனாய் உள்ள சமயபுரம் மகமாயி கி.பி 14ஆம் நூற்றாண்டு வாக்கில் நாயக்க மன்னர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டவள். அவ்வூரின் பெயர் கண்ணனூர்.அவ்வூரின் ஆதி தேவதை மாகாளிக்குடி [மாகாளிக்குடி என்று கேட்டுச் செல்க] மஹாகாளி.விக்ரமாதித்யன் உஜ்ஜனியில் பூஜித்த காளியின் சக்தியை சோழர்கள் த்யானித்து உருவாக்கிய கோயில் அது.அதில் தேவி மிக மிகத் தொன்மையான கற்சிலை வடிவில் உள்ளாள்.அக்கோயிலில் மிகச் சிறிய ஆனால் மிக நுட்பமான 18 கைகள் கொண்ட மஹாகாளியின் செப்புத் திருமேனி உள்ளதைக் காண்க.மனிதனுள் உள்ள த்யாக உணர்வை ”சின்ன மஸ்தா” என்ற சக்தி வடிவாய் தச மஹா வித்யா சக்தி உபாசனை போற்றும்.அத்தேவியின் சக்தியாய் மாகாளி இருக்கிறாள்.
 
சமயபுரம் - சரியான சமயம் பார்த்து அருளும் அம்மை.சரியான சமயத்துக்கு ஆன்மீக அன்பர்கள் பொறுமை காக்க வேண்டும்.அம்மை 448 அரிய மூலிகைக் கலவையால் செய்யப்பட்டவள், எனவே மூலஸ்தானத்தில் தேவிக்கு அபிஷேகம் இல்லை.அவள் காதுகளில் சிவ யந்த்ர தோடுகளைக் காஞ்சி மஹா ஸ்வாமிகள் ப்ரதிஷ்ட்டை செய்தார்.சகல உடல் பிணிகளை  ஒழிக்கும் ஆதி ஒளஷத சக்தியாய் அம்மை வீற்று இருக்கிறாள்.”சர்வ வ்யாதி ப்ரசமனி” என்று லலித சஹஸ்ரநாமம் போற்றுவது இவளையே.
 
எட்டு திருக்கைகளுடன் சும்ப நிசும்பர்களின் தலைகள் மீது பாதம் பதித்த கோலத்தில் அம்மை உள்ளாள்.
 
”சிந்தூராரண விக்ரஹா” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வண்ணம் மாதுளம் பூ நிறத்தாளை இங்கு காண்க.
 
இரண்டு உத்சவர்கள் உண்டு.அம்மைக்கு அருகில் உள்ள அறையில் உள்ள மூர்த்திக்கு வடிவமைப்பிலேயே ஆயிரம் கண்கள் [வார்ப்புப் புள்ளிகள்] உண்டு.இவளையே ”ரஹஸ்ராக்ஷி - ஆயிரம் கண்ணுடையாள்] என்று லலிதா சஹஸ்ரநாமம் போற்றும்.
 
அம்மையின் பரிவார மூர்த்தியாகக் கருப்பண்ண ஸ்வாமி உள்ளார்.தேவிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதும், அங்கப்ரதர்சனம் செய்வதும் மிக ப்ரஸித்தம்.
 
தக்க சமயத்தில் அம்மை அருள வேண்டுமாயின், நாம் உரிய நல் வினைகள் செய்திருத்தல் வேண்டும்.
 
யோசியுங்கள்.....
Continue reading
  483 Hits
483 Hits

Kanya Kumari - for Aadi month

பாரத தேசத்தின் மிகத் தொன்மையான சக்தி வழிபாடு - குமரி
 
ப்ரபஞ்ச சக்தியினைப் பெண்மை என்று குறிப்பது வழக்கம்.
பெண்மை - தோற்றத்தினை முழுமையாக்கும் சக்தி.
இதையே தாய்மை, தாய் தெய்வம் என்றனர் ஆதி மனிதர்கள் ஆன குமரிக்கண்ட முன்னோர்.
தாய்மையை வணங்கும் பெண் தெய்வ வழிபாட்டுக் கலாச்சரம் குமரித் தெய்வம் என மிகத் தொன்மையான குமரிக்கண்டமான லெமூரியாவில் உருபெற்றது.
ஆதி மனிதனும், தமிழும் தோன்றியது குமரிக் கண்டம்.அதுவே பாண்டிய தேசம்.பண்டையர் - மிகத் தொன்மையானவர் பாண்டியர் ஆயினர்.
தாய் தெய்வ வழிபாட்டை மேற்கொண்ட அவர்களே முதன்முதலில் கடலில் மீன்கள் பிடிக்கும் தொழிலை முறையாக மேற்கொண்டு ”நீர் ஏர் உழவர்” எனப்பட்டனர்.
தாய்மையினை மதிக்கும் பொருட்டு, பெண்மையைப் பேணும் பொருட்டு, அவர்கள் தம் குலதெய்வமாகக் கொண்டதே ”குமரி” வழிபாடு.
அத்தெய்வத்தின் இணை விழிகள் மிக அழகிய மீன்கள் என உருவகம் செய்து, தம் மீன் பிடித் தொழிலையும் கருத்தில் கொண்டு..பாண்டியர்கள் இணை கயல்களைச் சின்னமாகக் கொண்டனர்.
குமரிக் கண்டத்தில் தம் தலைநகரங்களான தென்மதுரை, கபாடபுரத்தில் குமரி அம்மையை வழிபட்டனர்.குமரிக்கோடு [இன்றைய விவேகானந்தர் பாறை] மலையில் குமரியின் ஒற்றைப் பாதச்சுவட்டைப் பொறித்து வழிபட்டனர்.
மனிதனின் ஆன்மாவான பெண்மை சர்வமும் ஆன மூலப்பொருளான சதாசிவமான ஆண்மையுடன் ஐக்யம் பெறுதல் மூலம் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும் என்ற உயர் ஞானத்தைக் குமரி அம்மை வழிபாடு உணர்த்தும்.அதுவே சிவசக்தி தத்துவம்.
இன்று பாரத தேசம் பெண் தெய்வ வழிபாட்டில் முன்னோடியாக இருக்க, மிக மிகத் தொன்மை மிக்கப் பெண் தெய்வ வழிபாட்டுச் சான்றாய கன்யா குமரி தெய்வம் அமைகிறது.
கன்னி - ஒவ்வொரு உற்பத்திக்கும் திறவுப்பாதை.
51 சக்தி பீடங்களில் குமரிப்பீடம் தேவியில் வலது பக்க அமரும் ப்ருஷ்ட பாகமாகக் கொள்ளப்படும்.
முற்காலப் பாண்டியர் கடல்கோள்களில் இருந்து மீண்டு இன்றைய மதுரையை உருவாக்கும் முன் இன்றைய குமரி அம்மையைத் தென் எல்லைக் காவலாக, மேலும் நிலம் கடல் கோளால் அழியாமல் இருக்க ப்ரதிஷ்ட்டை செய்தனர்.
அடி அலம்ப நின்ற பாண்டியன் முறையாக வீர வேலாயுதம் செய்து அதில் தேவியின் சக்தியை மந்த்ர பலத்தால் ஆவாஹணம் செய்து மூன்று முறைக் கடலில் தூக்கி வீசினான்.அந்த வேலின் பாரம்பரியமாய் இன்றும் குமரி அம்மை வீர வேல் கொண்டே நவராத்ரியின் இறுதியில் தசமி அன்று குதியை ஏறி பாணாசுர சம்ஹாரம் செய்ய பஞ்சலிங்கபுர கிராமம் செல்கிறாள்.
முற்காலப் பாண்டியரின் குல தெய்வமான குமரி இன்றைய மதுரை மீனாக்ஷி என்ற வரலாற்று ஆய்வும் உண்டு.காரணம் அத்தெய்வத்தின் கோயிலில் கல்வெட்டில் ”குமரித்துறையவள்” என்ற பெயர் உள்ளது.
 
இன்றுள்ள குமரி கன்னிப் பெண்ணாக, சிவத்தை நோக்கிய அத்வக்கோலத்தில் கையில் ஜெபமாலை தாங்கி உள்ளாள்.ஆன்மா மூலப்பொருளுடன் ஐக்யம் ஆவதையே அவள் தவம் உணர்த்தும்.தலையில் ஆன்ம ஞானம் வளர்வதைக் குறிக்க பிறைநிலா அணிகிறாள்.தேவியின் மூக்கில் சேரர் அணிவித்த மிக மிக விலை மதிப்பு கொண்ட அரிய நாகரத்னம் மூக்குத்தி மிளிவதைக் காண்க.அதைக் கலங்கரை விளக்கு என்று தவறாகப் புரிந்து கொண்டு கரை சேர்ந்து ஆபத்துக்குள்ளான கப்பல்கள் உண்டு.
 
முற்காலப் பாண்டியர் தேவியில் ஜபமாலையாகக் கொற்கை முத்துக்கள் கோர்த்த உயர் மாலையை அணிவித்தும் உள்ளனர்.
 
நவதுர்க்கை வடிவாகவும், பால த்ரிபுரசுந்தரியின் வடிவாகவும், காத்யாயனி சக்தியாகவும் சாக்த வழிபாட்டு முறைகளில் குமரி பூஜிக்கப் படுகிறாள்.
 
கி.பி 6ல் ஆதிசங்கரர் முக்கடல் துறையில் தீர்த்தம் ஆடி, சில காலம் மக்களுக்கு ஆன்மீக நெறி காட்டியதால் அவருக்குக் குமரிமுனை நோக்கிய சன்னிதியைக் காஞ்சி காமகோடி பீடம் அமைத்துள்ளது.
 
அம்மையின் கோயிலில் இரு ப்ரதான வாயில்கள் உண்டு.தை - ஆடி - உத்தராயண வாசல், ஆடி - தை - தக்ஷிணாயன வாசல். தேசத்தின் இரு பெரிய பருவ மாற்றத்தைக் குறிக்க இவை. அக்காலத்துக்கு ஏற்ப அவை திறக்கப்படும்.
 
ஆடி, தை, புரட்டாசி, கார்த்திகை அமாவாசைகளில் முக்கடல் தீர்த்தம் கொண்டு வரவும், நவராத்ரி ஒன்பது நாட்களும் கிழக்கு முக வாயில் திறக்கப் படும்.அது மனிதனுள் ஆன்மீகச் சூரியன் உதயம் ஆவதன் குறியீடே ஆகும்.
 
அதனால் தான் சூர்யோதமும் அஸ்தமனமும் சந்த்ரோதய அஸ்தமனமும் இக்கடலில் விசேஷம்.
 
 
விஜய தசமி அன்று பாணாசுர வதம் முடிந்து அன்னை முக்கடல் சங்கமத்தில் நீராடுவதைக் காண ஆயிரக் கணக்கில் கூட்டம் கூடும். 
தச மஹா வித்யை சக்தி வழிபாட்டில் குமரி அம்மை - பரிபூர்ண ஞானத்தின் தாரா தேவியாக வழிபட்ட குறிப்புகள் உண்டு.
பாரத கண்டமும் மக்களும் ஆன்மீக ஞானத்தால் முக்தி பெறும் குறியீட்டைக் குமரி அம்மை உணர்த்துகிறாள்.
இன்றுள்ள கோயிலுக்கு முற்கால, பிற்காலப் பாண்டியர், சேரர், திருவாங்கூர் ராஜ்ய மன்னர்கள் , சோழர் எனப் பலர் பணிகள் செய்துள்ளனர்.
 
வாரணாசி கங்கையும், ராமேஸ்வர சேதுக் கடலும், தென்கோடிக் குமரி முக்கடல் துறையும், காவிரி சங்கமமும் மிக முக்கிய புண்ணிய நீராட்டக் கட்டங்கள் எனப் பல ஆயிரம் ஆண்டுகளாய் மக்கள் பின்பற்றி வருவதைக் காண்க.
 
பாணாசுரன் என்ற அசுரன் கன்னி ஒருத்தியால் தான் சாக வேண்டும் என்ற கதி பெற்றான் - அதாவது ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம்.
 
தேவி முக்கடல் சங்கமத்தில் குமரிக்கோட்டில் சிவனை எண்ணி தவம் செய்ய, சுசீந்திரத்தில் இருக்கும் ஈஸ்வரன் அம்மை மணம் கொள்ள வரும் போது இந்திரன் தவறான முகூர்த்த காலத்தைக் கோழியாய் இருந்து உணர்த்த, கல்யாணம் நின்று போக, கோபமும் அவமானமும் தேவியுள் புழுங்க, அச்சூழலில் அவளைக் கல்யாணம் செய்திட பாணாசுரன் வலியுறுத்த தேவியும் அவனைத் தன் கையால் கசக்கிக் கடலில் வீசினாள் என்பது புராணம்.
 
மிகச் சிறந்த சக்தி பீடமாய் உள்ள குமரிக்கோயிலுள் அதன் பைரவ [கால சக்தி] சன்னிதியும் உள்ளது.அருகில் உள்ள சுசீந்திரம் கோயிலில் உள்ள முன் உதித்த நங்கை தேவி சன்னிதியும் தமிழகத்தில் உள்ள மூன்று சக்தி பீடங்களில் ஒன்று.அது தேவியில் மேல் பற்கள் விழுந்த இடம்.மற்றொரு இடம் காஞ்சிபுரம் காமாக்ஷியின் பீடம், அது தேவியின் நாபியும் இடுப்பு எலும்பும் விழுந்த இடம்.
 
மதுரையை எரித்த கண்ணகி கையில் ஒற்றைச் சிலம்புடன் குமரிக்கடல் வர, அவளைச் சேர தேசத்து மக்கள் வரவேற்றதாக பக்தி நூல்கள் கூறும்.அப்போது கண்ணகியின் ஆன்ம சக்தியைக் குமரி அம்மையுடன் சேர்த்து வழிபட்டதை மலையாள பக்தி நூல்கள் பகரும்.
 
அமெரிக்கா செல்ல வேண்டுமா, போனால் பாரத தேசத்தின் ஆன்மீக பற்றி என்ன கூறுவது என்ற ஆழ்ந்த உள் ஆலோசனையை ஸ்வாமி விவேகானந்தர் குமரிப்பாறையில் மூன்று தினங்கள் தவம் செய்து உணர்ந்தார், அதன் பின்னே அமெக்கா சென்றார்.அவர் நீந்தியே குமரிப்பாறையை அடைந்தார்.[1892 a.d]
The author of Periplus of the Erythraean Sea (60-80 A.D.) has written about the prevalence of the propitiation of the deity Kanyakumari in the extreme southern part of India; "There is another place called Comori and a harbour, hither come those men who wish to consecrate themselves for the rest of their lives, and bath and dwell in celibacy and women also do the same; for it is told that a goddess once dwelt here and bathed."[3] [4]
 
Ptolemy's geography describes commercial relations between western India and Alexandria, the chief eastern emporium of the Roman Empire. He identified Kanyakumari along with the Gulf of Mannar as a center for pearl fishery. He also identifies Korkai (assumed to be the present day's Tuticorin), a place to the east of Kanyakumari, as an emporium of pearl trade.
 
2004 ஆழிப்பேரலைக்கு முன் குமரிக்கடல் பின்வாங்கிய போது குமரிக்கண்டத்தின் பரந்த நிலப்பரப்பு தென்பட்டதைக் காண்கிறோம்.பல ஆய்வுகள் குமரிக்கண்டத்தைப் பற்றி மேற்கொள்ளப் படவேண்டும்.
Continue reading
  531 Hits
531 Hits

மாதவி உணர்த்தும் வாழ்வியல் உண்மை...

கண்ணகி பத்தினி தெய்வம் ஆனாள்.
அவள் கணவன் போயே போய் விட்டான்.
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை?
அந்த மாதவி?
 
சற்று யோசிக்க வைக்கிறது வரலாறு.
மாதவி
பூம்புகாரின் celebrity
ஆனால் கணிகை - உயர்ந்த குல அரசனுக்கு வணிகனுக்கும் மட்டும் விலை போகும் பெண் குலத்தின் பிறப்பு.
 
இவள் தாய் சித்ராபதி
சராசரி விலைமாது குலத் தாய்.
மாதவி இக்குலத்தில் இருந்து வெளிவரத் துடிக்கும் சராசரிப் பெண்.
ஆனால் யார் அவளை ஏற்பது?
இன்றும் பொது மகளின் மகளுக்கு மதிப்பில்லை.
 
மாதவியின் வாழ்வில் கோவலனின் கலை ரசனைக் குறுக்கிட, இருவருக்கும் இடையே பரஸ்பர பழக்கம் முதலிலேயே ஏற்பட்டது.இதை இளங்கோ நுட்பமாகத் தன் அடிகளில் பொதித்துள்ளார்.
 
கரிகாலன் முன் அரங்கேற்றம் ஆன பின், அவள் பெற்ற ஆயிரம் பொன் மதிப்புள்ள மாணிக்க ஹாரத்தை அவள் வீட்டுக் பணிப்பெண் பூம்புகார் தெருக்களில் விலை கூற வரும் போது, கோவலனைக் கண்டவுடன் அதை வெளியில் எடுத்து விலை கூறுவதை இளங்கோ காட்டுகிறார்.
 
கோவலனும் மாதவியும் மணவாழ்வில் இணைந்தனர் என்பதைக் கானல்வரியில் இளங்கோ பதிவாக்குகிறார்.
 
தன் பொது மகள் வாழ்வில் இருந்து கோவலன் மூலம் விடுதலை பெறுகிறாள், மண வாழ்வின் அடையாளமாக மகள் மணிமேகலையைப் பெறுகிறாள்.
 
ஒருபோதும் கண்ணகியை அவமதித்தோ குற்றம் காட்டியோ அவள் வாழவில்லை.கண்ணகியை முதல் தாய் என்று கூறி மகளுக்கு உணர்த்துகிறாள்.
 
அதே போல் திரைப்படங்களும் ஊர்க் கலைகளும் காட்டுவது போல் அவள் அவனது பொருளைக் கவரவில்லை.காரணம், சோழனின் அரசவை நடனக் கலைஞர் அவள்.அவளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பொன் வழங்கியது அரசு.
 
கோவலன் தன் வேலைக்காரர்கள் மூலம் வியாபாரம்  செய்தான்.கடலில் கப்பல் கவிழ்ந்த செய்தியைக் கூறிக் கண்ணகியிடம் சேர்ந்தான்.
 
கற்பு எனப்படுவது ஆணுக்கும் தேவை என்பதை மாதவி கூறி இன்றைய பெண்களுக்கு முன் உதாரணம் ஆகிறாள்.
 
தன் தவறுகள் என ஆணவம் இன்றித் தன் மகளுக்குத் தகப்பன் வேண்டும் என இரு முறைத் தூது அனுப்புகிறாள்.
 
சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலன் பிரிவு மிக்க வேதனை கொடுக்கும் சூழல்.கடற்கரையில் மனம் தடுமாறிய நிலையில் கோவலன் கோபத்துடன் ”சரி நேரம் ஆயிற்று” என்று மட்டும் கடைசி வார்த்தைகளைக் கூறி அவன் போக்கில் தன் வேலையாட்களுடன் சென்றவன் தான்..அதன் பின் அவன் மரணச்செய்தி தான் மாதவிக்கு வந்தது.
 
கோவலனின் மரணத்தால் மிக்க பாதிக்கப்பட்ட மாதவி சாக வழியின்றி, மகளை என்ன செய்வது என்று அறியாமல் தள்ளாடுகிறாள்.அவள் தாய் சித்ராபதியோ பொது மகளாய் வாழ சதா தொந்தரவு செய்ய, மணிமேகலைக்கும் அதே சூழல் வருகிறது.இக்கட்டத்தில் சோழன் கிள்ளிவளவனின் மகன் உதய குமாரன் மணிமேகலையை இம்சிப்பதைக் காண்கிறோம்.
 
இக்கட்டத்தில் தான் மாதவியின் மிக உயர்ந்த வாழ்வியல் மாற்றம் ஏற்படுகிறது.
முன் ஜென்மக் கர்ம வினைகளில் இருந்து விடுபட ஒரே வழி உண்மையான பக்தியும் சேவையும் தான் என்ற பாரத தேசத்தின் ஆன்மீக உண்மைப் பொருளை புத்த மதம் மூலம் ஏற்றுக் கொள்கிறாள்.
 
தன் சொத்துக்கள் அனைத்தையும் தானம் செய்து, பூம்புகார் இந்திர விஹாரத்தில் அறவண அடிகள் மூலம் துறவறம் மேற்கொண்டதோடு, தன் மகளுக்கும் பொது மகள் வாழ்வியல் உண்மையை விளக்கி, 18 வயதே ஆன மணிமேகலைத் துறவி ஆக்கினாள்.17 ஆண்டுகள் மாதவியும் கோவலனும் வாழ்ந்தனர்.
 
அதன் பின் மணிமேகலைக்குக் கோவலனின் அப்பா மூலம் சொத்து வர, அதைக் கொண்டு காஞ்சிபுரத்தில் புத்த விஹாரம் எழுப்பி, அதில் ”அட்சய பாத்ரம்” என்ற அமைப்பின் கீழ் 
முடவர், குருடர், ஊமை, செவிடர், ஏழை, அனாதை எனப்பற்பலருக்கும் உணவிட்டு சேவை செய்து வாழ்ந்தனர்.
 
தவறான குலத்தில் பிறந்த மாதவி மீண்டும் ஒரு தவறைச் செய்யாமல் தன் மகளையும் அதில் இருந்து தப்புவித்து இறுதியில் ஒப்பற்ற சேவை வாழ்க்கை வாழ்ந்தாள்.இதனால் தான் இளங்கோவும் சாத்தனாரும் மாதவியைப் பதிவுசெய்கிறார்கள்.
Continue reading
  726 Hits
726 Hits

Pandiya's port Korkai

முத்துக்கள் விளந்த பாண்டியர் கொற்கை
 
பண்டைய பாண்டியர் தம் மிகத் தொன்மை வாய்ந்த உலகப் புகழ் பெற்ற கடற்கரைப் பட்டிணம், துறைமுகம்.உலகப் புகழ் பெற்ற முத்துக் குளியல் நிகழ்ந்த இடம்.
 
பாண்டியருக்கு முத்து வணிகம் மூலம் மிக உயர்ந்த பொருள் ஈட்டிக் கொடுத்த ஊர்.
 
இதையே நல்லூர் கொற்கை என்று சங்க நூல்கள் கூறும்.பாண்டியனுக்கும் ”கொற்கை வேந்தன்” என்ற உயர் பெயர் உண்டு.
 
ஆனால் இன்று கொற்கை வளம் காணாத வரலாற்றுச் சுவடுகள் நீர்த்துப் போன ஊராய் மாறிவிட்டது.
 
சோழரின் காவிரிப்பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது.ஆனால் கொற்கையை கடல் வேண்டாம் என்று விட்டு ஒன்பது கிலோமீட்டர் தூரம் விலகிச் சென்று விட்டது.
 
அது தான் இயற்கையின் விளையாட்டு.
 
க்ரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோனியா, சீன தேசங்கள் விலை உயர்ந்த முத்துக்களை வாங்கிக் குவித்த ஊர் கொற்கை.
 
”க்ரேக்கத்தின் பொருளாதாரம் பாண்டிய முத்துக்களை வாங்குவதற்கே அதிகம் செலவாகிறது” என்கிறார் மெகஸ்தனீஸ் என்ற பயண நூலார்.
 
உலக அழகியான எகிப்தின் க்ளியோபாட்ரா முத்துக்களைக் காலணிகளிலும் கழுத்திலும் முடியிலும் சூடியதை வரலாறு வர்ணிக்கிறது.
 
இன்று இவ்வூர் தூத்துக்குடி மாவட்டத்தில் [அன்றைய தென்பாண்டி தேசம்] உள்ளது.அங்கு 2000 ஆண்டுகள் பழமைமிக்க வன்னிமரம் உள்ளது.
 
அடுத்து மிகத் தொன்மையான அக்க சாலை - என்ற பெயரில் அக்க சாலை [காசுகள் அச்சடிக்கும் இடம்] ஈஸ்வரமுடையார் வினாயகர் கோயில் உள்ளது.
 
கண்ணகியின்  வரலாறு நிகழ்ந்த காலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் வெற்றிவேல் செழியன் கொற்கையில் இருந்து தென் பாண்டிப் பகுதியை கவனித்துக் கொண்டான்.கண்ணகியாருக்கு நேர்ந்த தீமையை எண்ணி வருந்து, ஆன்மீகச் சான்றோர்கள் கூறிய அறிவுரையின் படி அவன் கொற்கையில் வெற்றிவேல் கொற்றவைக் கோயிலை ஏற்படுத்தினான்.அது இன்றும் வழிபாட்டில் உள்ளது.அதுவே அவன் எடுப்பித்த கண்ணகி கோயில்.[வெற்றிவேல் நங்கை]
 
கொற்கை ஆய்வினை மிக ஆழ்ந்து செய்த திரு.சந்திரவாணன் [1982 - 88] தரும் முக்கிய வரலாற்றுச் செய்திகள்....
 
மழைக்காலங்களின் மண் அரிப்பு ஏற்படும் போது மிகத் தொன்மை மிக்க பாண்டியர் காசுகள் கிடைத்தன.
 
பத்தடி ஆழம் தரையில் வெட்டப்பட்டால் கடல் விளைப் பொருட்களே அதிகம் கிட்டும்.அதுவே இப்பகுதி கடல் விலகியதை உணர்த்தும்.
 
திருவழுதி வள நாட்டு கொற்கையான மதுரோதய நல்லூர் அக்கசாலை என்ற கல்வெட்டு கிட்டியது.
 
தாமிரபரணி ஆற்றின் கடைசி ஆற்றுப்பாசனமான கொற்கைக் குளம் இன்றும் உள்ளது.
 
கண்ணகியாரான வெற்றிவேல் அம்மனை இன்றும் பொற்கொல்ல ஆசாரி மரபினரே குலதெய்வமாகக் கொண்டுள்ளர்.
 
மேலை தேசத்து நூல்கல் இதைக் கொல்சீ என்று குறிப்பிடும்.
 
ஊதும் முழுச்சங்குகள், சங்கு வளைகள் அகழ்வாய்வில் கிட்டின.
 
இரண்டு முதுமக்கள் தாழிகள் கிட்டின.அதை அவ்வூர் மக்கள் கொல்கை என்பர்.
 
பழைய நெல்லை ஊற வைத்தத் தண்ணீரில் உலை வைத்துச் செய்யப்படும் பொங்கல் இவ்வூர் விழாவில் மதுப்பொங்கல் என்ற பெயரில் தேவிக்குப் படைக்கப்படும்.
 
1981 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மூலம் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வெற்றிவேல் அம்மன் கோயில் இடிய, புதுக் கோயில் உண்டாயிற்று.
 
பாண்டியர் காலத்து சிவலிங்கம் சேதப்பட அதன் முன் வினாயகரை மக்கள் வைத்து விட்டனர்.
 
மதுரையை ஆண்ட பொற்கைப் பாண்டியன் வெளியிட்ட காசுகள் கிடைத்தன.
 
யவனர் தம் ஆறு பொற்காசுகள், சோழர் காசுகள் கிட்டின.
 
வண்ணிமரத்தின் கீழ் ஒரு சமண முனிவரின் சிலை கிடைத்தது.பாண்டிய தேசத்தில் சமணம் தென்பகுதி வரைப் பரவி இருந்ததன் சான்று இது.
 
கொற்கைக்கு அருகில் உள்ள மணலூரில் ஒரு நவகண்ட - தானே தன் தலையை அரிந்து பலிகொடுக்கும் வீரன் சிலை கிட்ட, அதை இன்று வன்னி மரத்தடியில் தொல்துறையினர் வைத்துளர்.
 
கணவன் இறந்தவுடன் அவனுடன் உடன் கட்டை ஏறிய வீரப்பெண்கள் ஒன்பது பேரின் வீரநடுகற்கள் கிட்டின.
 
உடைந்த பானை ஓடுகளில் ப்ராமி தமிழ் சொற்கள் கீறப்பட்ட நிலையில் கிட்டின.
 
இலங்கையை ஒடுக்க எண்ணிய ராஜராஜன் பாண்டியரை வென்றபின் கொற்கையில் தன் கப்பல்படை ஒன்றைத் தங்கவைத்தான்.
 
கி.பி பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றினால் கடல் ஊரை விலகியது.
 
ரோம் தேசத்தின் பல பீங்கான் பாத்திரங்களும் கிட்டின.
 
இரும்பை உருக்கும் கொல்லன் கருவிகள், சுடுமண் குழாய்கள் கிட்டின.
 
இங்குள்ள ஐயனார் கோயிலும் மிகத் தொன்மை மிக்க சாத்தனார் கோட்டமே ஆகும்.
 
அகழ்வாய்வு செய்தால் இன்னும் நிறைய தகவல்கள் கிட்டும்.
 
இயற்கை எப்போது என்ன முடிவு வேண்டுமாயினும் எடுக்கும்.
 
ஒரு முறை கொற்கை சென்று வருவோம்.
Continue reading
  791 Hits
791 Hits

சேர தேசத்துப் பாணர் பாடும் தோற்றம் பாட்டு

சேர தேசத்துப் பாணர் பாடும் தோற்றம் பாட்டு
 
சேரன் செங்குட்டுவன் கண்ணகியாருக்குக் கோட்டம் எழுப்பிய காலத்திலேயே, தன் தலைநகராம் வஞ்சியில் [கொடுங்கல்லூர்] கொற்றவைக் கோயிலுள் சன்னிதியும் அமைத்தான்.
 
அக்காலத்தே அவன் பாணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கண்ணகியாரின் வரலாற்றைப் பாட ஏற்பாடு ஆனது.
 
அப்பாணர் குழு போல் அதன் பின் பலர் பாடினர்.பாணர் குழு பாடிய பாடலஏ தோற்றம் பாட்டு..அதாவது உருவாக்கப் பாட்டு.
 
இன்றும் கேரளத்தில் பல கோயில் வாசல்களில் பாணர்கள் [தமிழகத்தில் இவ்வினம் இல்லை] யாழ் மீட்டி அமர்ந்து பாடுவதைக் காணலாம்.
 
கொடுங்கல்லூரில் வாழும் அப்பாட்டுக்கள் பாடும் குடும்பம் ஒன்று சேரன் செங்குட்டுவன் காலம் முதற்கொண்டு வாழ்ந்து வருகிறது.
 
இவர்களே திருவனந்தபுரம் ஆற்றுக்கால் அம்மையின் பொங்கால் விழாவிற்கு முன்பு அங்கு மிக்க மரியாதையுடன் வரவேற்கப்படுவர்.அவர்கள் ஒரு மண்டலம் வ்ரதம் இருந்து செல்வர்.அவர்கள் குறித்த காலத்தில் தோற்றம் பாட்டைப் பாடி அன்னையை ஸ்தாபனம் செய்வர்.
 
இவர்களின் தோற்றம் பாடலில் மிக நுட்பமான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.
 
மிகத் தொன்மையான பாணர் இனம் இன்றும் சேர தேசத்தில் உள்ளது.அவர்கள் இன்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தோற்றம் பாட்டைப் பாடுவதைக் காணலாம்.
 
வாழ்க பாணர் இனம்!
Continue reading
  628 Hits
628 Hits

பொங்கல் - மாவிளக்கு ... இவற்றின் உள் அர்த்தம்

பொங்கல் - மாவிளக்கு ... இவற்றின் உள் அர்த்தம்
 
அக்காலத்தில் செந்நெல் என்பது மிக உயர்ந்த பொருள்.
மிக உயர் செல்வரே செந்நெல் அரிசிச் சோறு உண்பர்.
செந்நெல்லுக்கு இணையாகத் தங்கம் பண்ட மாற்று ஆனது என்றால் அதன் உயர்வைக் கற்பனை செய்க.
இனி வரும் காலத்தே நெல் பொன்னை விட அதிக விலை கொள்ளும்.
இந்த நெல்லின் மூளம் பெறும் அரிசியைப் பொங்குவதே பொங்கல்.
அது வாழ்வின் பாக்ய சக்தியை அதிகரிக்கும் இயற்கை சார்ந்த உயர் சடங்கு.
தான் உழைப்பின் மூலம் பெற்ற மிக உயர்ந்த செந்நெல் சோற்றினை அன்புடன் நன்றியுடன் தன் இஷ்ட தேவதைக்குப் படைக்கும் வழக்கம் ஆதி த்ராவிடப் பண்பு.
 
இதில் மண் கலமான பானை - ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கும் உடல்
அதில் இடும் அரிசி மணிகள் நம் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள்.
இவை நிறைவேற வேண்டும் என்பதே இனிய வெல்லம் குறிக்கிறது.
அதில் உண்மையான பக்தி என்ற நெய் ஊற்ற வேண்டும்.
 
சரி இவை எல்லாம் ஆனால் சரியா?
இவை எல்லாம் பொங்கல் ஆகிட தீ வேண்டும்
அதுவே மாற்று சக்தி
அது தான் நம் மனதுள் நாம் ஏற்படுத்தும் தரமான மாற்றம்
அதுவே தெய்வ சக்தியின் துணையுடன் பொங்கல் ஆகிறது.
அதனால் தான் தமிழத்தில் தெய்வத்துக்குப் பொங்கல் இடுவதை மிக உயர்ந்த வழிபாடாக வைத்துக் கொண்டாடுவதைக் காண்கிறோம்.
 
இதோ ஆடி மாதம் வருகிறது..
இஷ்டங்களும் ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகிடப் பொங்கல் இடுக
அதை உணர்ந்து இடுக.
 
மாவிளக்கு
மிகத் தொன்மை மிக்க த்ராவிட வழிபாட்டுச் சடங்கு மாவிளக்கு ஏற்றுதல்.
தூய பச்சரியில் சூரியனின் பூரண ஒளி சக்தி நிறைந்துள்ளது.
அதே போல் தூய பசும் நெய்யிலும் சூரிய சக்தி நிறைந்துள்ளது.
சூரிய ஒளி சக்தியே ஆரோக்யத்தின் மிக அடிப்படை சக்தி.
அதனால் தூய பச்சரிசியை மாவாக இடித்துப் பிசைந்து, அதில் பசும் நெய் விட்டு விளக்கினை ஏற்றினர்.
அதில் இனிப்பு கலப்பது என்பது பின்னர் வந்ததே.
உடலில் உள்ள இரு பாகங்களிலும் ஆரோக்ய சக்தி உள்ளேற வேண்டும் என்றே இரு விளக்குகள் இடுவர்.
அதிலும் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள வ்யாதி தீர அப்பாகத்தின் மீது விளக்கை வாழை இலை இட்டு ஏற்றுவது மரபு.
வாரம் ஒரு முறை வீட்டில் மாவிளக்கு இட வைத்ய சாஸ்த்ரம் கூறும்.
செய்யலாமே.....
Continue reading
  692 Hits
692 Hits

பாழ் படும் சமூஹம்...

சமீப காலமாக நம் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் வரும் தொடர்கள் ஓர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
அதாவது பெண்மையைத் திரைப்படங்கள் வெறும் போகப் பொருளாகக் காட்டுவதை அதிகரிக்கும் அதே தருணத்தில் தொலைக்காட்சித் தொடர்கள் பெரும்பாலும் பாரதப் பெண்களின் குணாதிசயங்களைத் தரம் தாழ்ந்த ஒன்றாகவே சித்தரித்துக் காட்டி வருவதைக் காண்கிறோம்.
 
குறிப்பாக அகம்பாவம், யாரையும் மதிக்காமை, பெண் சித்ரவதை, பெண் என்றால் குரூரமானவள், மிக மோசமாக வசவுகள் கொண்ட வசனங்கள், பொறாமை, போட்டி, மோசமான ஆடைகள்.
 
இவை எல்லாவற்றையும் விட எதற்கு எடுத்தாலும் பழி வாங்கும் தன்மை.
 
தவறான வழியில் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வதை நியாயப் படுத்துதல்.
 
அதை விட பிறன் மனை விழைதல் - அதாவது பிறரது கணவனை விரும்புதல், குடும்பத்தைச் சீர்கெட வைத்தல்.
 
முத்தமிழ்ச் சங்கம் கொண்டு சமூஹ நலனுக்காக வளர்ந்த தமிழ் மொழியில் இதைப் போன்ற மிக மிகக் கேவலமான படைப்புகள் வருடக் கணக்கில் தொடர்களாய் வருவதன் மூலம், அதைக் காண்போரின் அடி ஆழ மனதில் குணங்கள் மாறு பட்டு வருவதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
 
வீட்டில் உள்ள பெரியவர்கள் இதற்கு [குறிப்பாகப் பெண்கள்] அடிக்ட் ஆகிவருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.இதன் மூலம் பெண்களின் எத்தனையோ தரமான திறமைகள் வீணாய்ப் போய் மூட்டை கட்டி வைக்கப் படுகின்றன.
 
தமிழ் மொழியில் எத்தனை எத்தனை உயர் படைப்புகள் அன்று முதல் இன்று வரை உள்ளன?
 
அழகான வளமான மொழி தொலைக்காட்சியின் மூலம் சிதைக்கப்படுவதைக் காண்கிறோம்.
 
சமஸ்க்ருத ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் வெற்று அரசியல் கட்சிகள் ஏன் ஊடகங்கள் மூலம் ஆங்கிலத்தின் அதீத போக்கு தமிழைச் சிதைப்பதை ஏற்கின்றன?
 
கிராமங்களுக்குள் சென்று பெண்கள் மிகக் கேவலமான ஆடைகள் அணிந்து கொண்டு அங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதையும் காண்கிறோம்.
 
தவறான மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறோம் என்ற பெயரின் பண்பாட்டுக் கூறுகளை ஏளனம் செய்வதைக் காண்கிறோம்.
 
இதில் மாணவர்கள் மனதில் தாக்கம் ஏற்படுவதைக் காண்கிறோம்.
 
எதைச் சொல்ல வேண்டும் என்ற பொருள் அதிகாரம் வகுத்தத் தமிழன் இன்று மிக மோசமான பொருளை ஊடகங்கள் மூலம் சமூஹத்துக்குச் சொல்லி மிக மோசமான சூழலை உருவாக்குகிறான்.
 
தரமான பொருள் என்பது தரமான எண்ணம், தரமான மொழி, தரமான படைப்பு என்று அனைத்திலும் இருக்கட்டும்.
 
ஒரே ஒரு கேள்வி என் பத்தாம் வகுப்பு மாணவி கேட்டாள், ”பெண்களை இழிவாகப் பேசிய ஒரு நபருக்குக் கண்டனம் செய்யும் அமைப்புகள் நீதிமன்றம் ஆகியன, ஏன் பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் திரைத்துறை, தொலைக்காட்சி, ஆடை வடிவமைப்பு நிபுனர்கள் ஆகியோரைக் கண்டனம் செய்யவில்லை?”
 
படித்தோ பட்டம் பெற்றோ வேலைக்குப் போய் காரில் போய் பணம் சம்பாதித்தும் இன்னும் என்ன ப்ரயோஜனம் பெண்களே?
பாழ்பட்ட சமூஹம் இன்னும் உன்னை போகப் பொருளாய், தீய குணங்கள் கொண்ட சமூஹ சக்தியாய் அல்லவா சித்தரித்து பணம் செய்கிறது?
இதை நீ என்று எதிர்க்கப் போகிறாய்?
புகழுக்கும் பணத்துக்கும் அடிமையாவதை என்று விடப் போகிறாய்?
பாரதி கண்ட புதுமைப் பெண் இதுவல்ல!
யோசி.....
Continue reading
  585 Hits
585 Hits

கொங்கச் செல்வி - சிலப்பதிகாரம் Dr.உ.வே.சா

கொங்கச் செல்வி - சிலப்பதிகாரம்
Dr.உ.வே.சா
 
”இவள் [கண்ணகியார்] கொங்கு தேசத்தில் ஊர் தோறும் மிக்க மரியாதையுடன் பலரது குலதெய்வக் கொற்றவையாக விளங்குகிறாள்.கொங்கு வேள் சேரனுடன் கோட்டத்தில் கண்ணகியாரைப் பணிந்த காலத்தில் கோவன்புத்தூரில் கொற்றவையுடன் மாபத்தினியை சேர்த்து ப்ரதிஷ்டித்து மக்களுடன் வணங்கினான்”
 
ஈரோட்டில் கொங்கு ஆள் அம்மனாக இருப்பதை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
 
பவானியில் உள்ள கொற்றவையுடன் இணைத்து சேரன் வணங்க வைத்தான்.பரணர் புலவர் அதை தலைமேற்கொள்கிறார்.
 
தரமான முன் மாதிரிகளைச் சமூஹத்தில் அறிமுகம் செய்த கலாச்சாரம்.இன்று?
Continue reading
  639 Hits
639 Hits

Kudamalai aatti - Mookambikai

குடமலை ஆட்டி...
 
சேரன் செங்குட்டுவன் கண்னகியாருக்குக் குமுளி மலையில் கோட்டம் செய்த போது, கும்பாபிஷேகம் அன்று கொங்கு அரசனும் குடகு மலைப் பழங்குடி அரசனும் இலங்கைக் கயபாகு ஆகியோர் வந்து கலந்து கொண்டனர்.
 
இதில் குடகு மலை [கர்நாடகம், கொடகு மலைத்தொடர்] அரசன் இன்றுள்ள மூகாம்பிகை ஸ்தலத்தில் இருந்து 15கிலோ மீட்டர் தூரம் உள்ள குடஜாத்ரி பகுதியில் ஸ்வர்ண ரேகை கொண்ட வித்யாஸமான கல்லைக் கொண்டு கண்ணகியாருக்கு நடுகல் வழிபாட்டை ஏற்படுத்தினான்.
 
அக்கோயில் காலத்தால் மிகவும் பாழ்பட, கி.பி ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் அக்கல்லை இன்றுள்ள மூகாம்பிகை ஸ்தலத்துக்குக் கொண்டு வந்து மறு ப்ரதிஷ்டை செய்தார்.மக்களின் கற்பனை பாவனை பக்திக்காக சங்கு சக்ரம் அபயம் வரதம் கொண்ட மூகாம்பிகையின் ஐம்பொன் சிலையை நிறுவினார்.அதோடு இருபுறமும் இரு உத்சவ மூர்த்தங்களை ஏற்படுத்தினார்.
 
இவை அனைத்தும் நடுகல் - [ஸ்வம்பு லிங்கம் என்று இன்று மக்கள் அழைப்பர்] பின் உள்ளன.
 
ஸ்வர்ண ரேகை கொண்ட நடுகல்லை அதிகாலை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.அதன் பின் மிக மிகத் தொன்மை மிக்க முகச்சார்த்து என்ற கவசம் இட்டு மூடி வைப்பர்.
 
நடுவில் உள்ள தேவி, மஹாசரஸ்வதி.அவளது வலது புறம் துர்கை, இடது புறம் மஹாலக்ஷ்மி என இரு உத்சவர்.தினமும் ஸ்ரீவேலி புறப்பாட்டில் துர்கை மட்டுமே இருப்பள்.நவராத்ரிகளில் லக்ஷ்மியும் இணைவள்.
 
அலைமகள் - கலைமகள் - மலைமகள் என மூவரும் ஒன்றான 3 in one தான் மூகாம்பிகை.
 
மூன்று - மூ - பழந்தமிழ்
 
மூகாம்பிகை - தச மஹா வித்யையில் நாவை அடக்கி ஆளும் பகளாமுகி சக்தி.
 
பாண்டியனை மூகன் - ஊமை ஆக்கி வழக்காடிய மூகாம்பிகை - கல்வெட்டு.
 
கர்ணகை - என்ற செப்பேடுப் பெயரும் இவளுக்கு உண்டு.
 
மிக மிகத் தொன்மை மிக்க இசைக் கருவிகள் இவளுக்கு வாசிக்கப்படுகின்றன.
 
குடமலை ஆட்டி - கர்நாடகத்தில் சதா மழை வர்ஷிக்கும் குடஜாத்ரி மூகாம்பிகை - Dr.உ.வே.சாவின் ஆய்வு உரை.
 
மிக்க வரப்ரஸாதி ஆன தேவியின் அன்னதானம் உண்ண வேண்டும்.
 
ஆதிசங்கரர் த்யானம் செய்த மண்டபம், மூலஸ்தானம் பின் உள்ளது.
 
மிக உயர்ந்த பாக்ய சக்தி தரும் மஹா சண்டி ஹோமம் தினமும் நிகழும் ஒரே கோயில் இதுவாகும்.
 
சேரமன்னனின் வேண்டுதலுக்கு ஏற்ப தேவியின் சானித்யத்தை ஆவாஹனம் செய்து சங்கரர் சோற்றாணிக்கரையில் ப்ரதிஷ்ட்டை செய்ய, அங்குள்ள நெடுகல்லில் மாலை ஏழரை முதல் அதிகாலை ஏழு வரை மஹாசரஸ்வதியாக சக்தி உள்ளது.
 
பண்ணைப்புரத்து இளையராஜா ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னை முன் த்யானம் இருப்பதன் பலனே அவரது புகழ்.
 
அலைமகள், நாமகள் , மகிஷாசுரன் தலை கொய்த மலைமகள் என மூவரும் ஒன்றான அநீதியை எதிர்க்கும் துர்கை எனக் கண்ணகியாரை இளங்கோ வர்ணிக்கிறார்.அதையே குடகு அரசனும் பழங்குடியினரும் மூகாம்பிகை ஆக்கினர்.
 
சென்று வருக.....
Continue reading
  646 Hits
646 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries