Energy Concept based events from Jesus Christ's life

Sakthi Foundation

Children’s' stories from Jesus Christ life.

* மனிதன் சுயநலம் இல்லாமல் நல்ல காரியங்கள் செய்தால் தான் இறைவனிடமோ பிறரிடமோ தனக்குத் தேவையான போது வேண்டும் தகுதியைப் பெறுகிறான். சேவை என்பதே மிக உயர்ந்த சக்தி - Energy. கொடுத்தால் தான் பெற முடியும் என்ற கோட்பாட்டை ஏசுவின் வாழ்க்கையில் இருந்து குழந்தையின் மனப்பக்குவதிற்கு ஏற்ப இந்நிகழ்வுகள் அமைகின்றன. ஏசு மட்டுமல்ல எந்த மஹானின் அருளும் இந்த கொடுக்கல்-வாங்கல் அடிப்படையில் தான் அமைகின்றது. முடிந்தவரை நடித்துக் காட்டுக.

 

1. மண் குருவிகள் பறக்குமா?

ஏசு சிறுவனாக இருந்த போது அடிக்கடி களிமண்ணால் பல பொம்மைகள் செய்து தன் தோழர்களுடன் விளையாடுவது வழக்கம்.

ஒரு முறை அவர் அவ்வாறு விளையாடும் போது, சிலர் மண் குருவிகள் செய்ய, ஏசுவும் மண் குருவிகள் செய்தார்.

சிறுவர்கள் குருவிகள் போல் ஒலி எழுப்பியும், கையால் தூக்கிப் பறக்க வைத்தும் விளையாட, ஏசுவோ பூரண பக்தியால் இறைவனை வணங்கிக் கைகளைத் தட்ட மண் குருவிகள் பறந்து போயின.

இதைப் பார்த்த சிறுவர்களுக்கு ஏதும் புரியவில்லை.

”ஏசு! மண் குருவிகள் பறக்குமா” என்றனர்.

ஏசு, ”இறைவன் நினைத்தால் என்ன ஆனாலும் நிகழும்” என்றார்.

___________________________________________________________________________

2. மனதார வேண்டுக வீண் பேச்சை விடுக...

 

ஏசுவை அவரது பெற்றோர்கள் ஜெருஸலேமில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மக்கள் எங்கு பார்த்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, வீண் வெட்டிப் பேச்சுக்கள் [இன்று போள் தான்] பேசிக் கொண்டும் இறை வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பதைச் சிறுவன் ஏசு பார்த்தார்.

பின் ஒரு மண்டபத்தில் கூடி இருந்த சிலர் முன் அவர் கூறினார்.,

”எதற்காக நாம் இவ்வளவு சத்தம் போட வேண்டும்.சாலமன் அரசன் மாபெரும் இக்கோயிலை நமக்காக மிகவும் செலவு செய்தும் சிரமப்பட்டும் 46 ஆண்டுகள் உழைத்துக் கட்டினார்.

நாமோ வீண் பேச்சு பேசினால் அது இறைவனின் காதுகளில் விழுமோ? மனதை அமையாக்கி வாய்விட்டு மந்திரங்கள் கூறி இறைவனிடம் பேசத் தானே கோயிலுக்கு வருகிறோம்? நமக்குள் பேச வேண்டும் என்றால் தெருவிலும் வீட்டிலும் பேசலாமே? இவ்வளவு செலவு செய்து எதற்காகக் கோயிலுக்கு வர வேண்டும்?” என்றார்.

அப்போது அவரைக் காணாமல் தேடிய அவரது பெற்றோர் அங்கு வந்து, ”மகனே! எங்கே அப்பா போய் விட்டாய்?” என்று கேட்டனர்.

ஏசு, ”அம்மா! அப்பா! நான் எல்லோருக்கும் அப்பாவான கடவுளின் வீட்டில் பத்திரமாகத் தானே இருக்கிறேன்? ஏன் பயம்?” என்று கூறினார்.

_________________________________________________________________________

3. ஏதாவது நல்லது செய்தால் தான் கடவுள் அருள்வார்...

ஒரு முறை ஏசு உரு ஊருக்கு வந்தார்.

அப்போது தெருவில் ஒரு குளத்தின் அருகில் கண்கள் தெரியாத ஒரு பிச்சைக்காரனைக் கண்டார்.

அவன் பிச்சை எடுத்தாலும் அக்காசில் இருந்து நாய்களுக்கு இறைவன் பெயரைச் சொல்லி ரொட்டி வாங்கித் தருவான்.

இதனால் ஏசு அவனுக்கு உதவ எண்ணினார்.

***

ஏசு அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவன் கண்களைத் தொட்டார், அவன் முதலில் விடவில்லை, பயந்தான்.

பின் ஏசு மண்ணை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார், உண்மையான அன்புடனும் பக்தியுடன் கடவுளின் மந்த்ரங்களைச் சொல்லி அம்மண்ணை அவன் இரு கண்களிலும் பூசினார்.

பின் அவனை அருகில் உள்ள குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார்.

அவனும் கண்களைக் கழுவிட, இறைவனின் அருளால் அவனுக்குக் கண்கள் பார்வை பெற்றன.

அவன் ஏசுவுக்கு நன்றி கூறினான்.

***

ஏசு கூறினார், ”அய்யா! இறைவன் அருள் இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.ஆனால் நமக்கு அவர் அருள வேண்டுமானால் நாம் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்.நீ பசித்த நாய்களுக்கு ரொட்டி கொடுத்தாய், அதனால் இறைவன் உனக்குக் கண்களில் பார்வை தந்தார்.” என்றார்.

4. ஜுரத்தைப் போக்கிய ஏசு...

ஒரு ஊரில் ஏசு வந்து கொண்டு இருந்தார்.

அவ்வூரில் ஒரு வீட்டில் இருந்து பலர் அழுகும் குரல் கேட்டது.

காரணம் - அவ்வீட்டில் உள்ள ஒரு சிறுமி சாகும் நிலையில் இருக்கிறாள்.

பலரும் அவளை வந்து பார்த்தனர்.

அவளுக்கு பயங்கரமான காய்ச்சல் கண்டிருந்தது.

***

ஏசு அவ்வீட்டுக்குள் சென்று, கடவுளின் பெயர்களைக் கூறி ப்ரார்த்தனை செய்து சிறுமியின் உடலை நீவிக் கொடுத்து, ”சின்னக் குழந்தையே! எழுந்திரு!” என்று கூறியவுடன், அச்சிறுமியும் மிக உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் எழுந்து விட்டாள்.

எல்லோரும் ஏசுவுக்கு நன்றி கூறினர்.

அப்போது அவள் தோழிகள் கூறினர், ”ஐயா! இவள் மிக மிக நல்லவள், ஏழைகளுக்கு உணவு தருவாள், ஆடைகள் தருவாள், அப்பா அம்மாவுக்கு உதவி செய்வாள்”

ஏசு சொன்னார், ”சுயநலமின்றி இவள் உதவியதால் தான் கடவுள் இவளுக்கு ஜுரத்தை நீக்க வைத்தார்

 

6. Last Supper

ஏசு இறுதியாகத் தன் சீடர்களுடன் உண்ட விருந்து.அதன் மூலம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்ல முடியும்?

* அனைவருடனும் உணவைப் பகிர்ந்து உண்க.

* உண்ணும் முன் இறைவனுக்கு நன்றி கூறிய பின் உண்க.

* கண்ட இடத்தில் நின்று கொண்டு உண்ணக் கூடாது.

* பேசிக் கொண்டு உண்ணக் கூடாது.

* உண்ணும் இடம், பாத்திரங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.

* கீழே சிந்தி உணவை வீணாக்காமல் உண்க.

* நண்பர்கள் ஒன்று கூடி மகிழ்ந்து உண்க.

_______________________________________________________________

7. திருடியை மன்னித்த ஏசு

ஏசு தன் நண்பர்களுடன் ஒரு முறை கோயிலுக்குச் சென்றார்.

அங்கு ஓரிடத்தில் ஒரே சத்தமாக இருந்தது.

அக்கூடத்தின் நடுவில் ஒரு பெண் உட்கார்ந்து அழுகிறாள்.

எல்லோரும் அவளைக் கண்டபடி திட்டுகிறார்கள்.

ஏசு அங்கே சென்றார்.

***

அவள் ஒரு திருடி.

எப்போதும் வேலை செய்து உழைக்காமல் அவள் திருடுவது வழக்கம்.

திருட்டுப் பணத்தில் அவள் அழகிய உடைகள், உணவு வாங்கிக் கொள்வதும் வழக்கம்.

இன்று மக்கள் அவள் கோயிலில் திருட வந்த போது பிடித்து விட்டனர்.

***

ஏசு அவளைப் பார்த்தார்.

அவளும் ஏசுவைப் பார்த்து அவர் முன் மண்டியிட்டு அழுதாள், தன் தவற்றை உணர்ந்து அழுதாள்.

***

அப்போது மக்கள் அவளைக் கல்லால் அடிக்க முன் வந்தனர்.

அப்போது ஏசு, ”உங்களில் யார் எவ்விதத் தவறும் செய்யவில்லையோ அவரே முதல் கல்லை இவள் மீது எறியலாம்” என்று கூறினார்.

***

நாம் எல்லோரும் ஏதோ ஒரு தப்பு செய்து தானே இருக்கிறோம்?

இதைக் கேட்டு மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

அவளும் அவரிடத்தில் மன்னிப்பு கேட்டு, தான் இனிமேல் திருடப்போவதில்லை, வீட்டு வேலைகள் செய்து உழைப்பதாகக் கூறினாள்.

ஏசு அவளை மன்னித்தார்.

***

”என்னை ஏன் மன்னித்தீர்கள்?” என்று அவள் கேட்டாள்.

”மன்னித்தால் மீண்டும் தவறைச் செய்ய மாட்டாய்.” - என்றார் ஏசு.

 

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­

8. ”நீ செடிக்குத் தண்ணீர் ஊற்றினாய், உனக்குத் தண்ணீர் நான் ஊற்றுகிறேன்”

 

ஒரு முறை ஒரு மனிதனைக் காவலர்கள் பிடித்துக் கொண்டு சென்றனர்.

அவன் எவ்விதத் தப்பும் செய்யவில்லை, ஆனாலும் அவனைத் திருடன் என்று எண்ணிப் பிடித்தனர்.

அவனைச் சாட்டையால் அடித்து வெயிலில் ராஜா முன் கூட்டிச் சென்றனர்.

அவனுக்கோ வெயிலில் மிக மிகத் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டு மயக்கமே வந்து விட்டது.

”ஐயோ யாராவது தண்ணீர் தாருங்களேன்” என்று அவன் கத்தித் கதற ஆரம்பித்தான்.

***

பலர் அவனுக்குத் தண்ணீர் தர வரக் காவலர்கள், ”ஏய், இவன் கெட்டவன், திருடன் தண்ணீர் தந்தால் உங்களை அடிப்போம்!” என்று மிரட்டினர்.

ஆனால் அப்போது ஏசு மிகவும் தைரியமாக ஒரு சிறிய மண் குவளையில் தண்ணீர் கொண்டு வந்தார்.

ஏய் போயா, அவன் அருகில் வராதே, தண்ணீர் தராதே!” - என்று காவலர் கத்தினர்.

ஏசு அதைக் கணு கொள்ளவே இல்லை, மிகவும் அமைதியாக தைரியத்துடன், ”தண்ணீரைக் குடிக்க பூமி மீது அனைத்து உயிர்களுக்கும் உரிமை உண்டு, தண்ணீர் எல்லோருக்கும் பொது, தடுக்காதே, தடுத்தால் நீ தண்ணீர் இல்லாமல் ஒரு நாள் செத்து விடுவாய்!” என்று கூறி அவனுக்கு வாயில் தண்ணீரை ஊற்றினார்.அவனும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

இம்மனிதன் பலருக்குத் தன் ஊரில் தண்ணீர் தந்துள்ளார், வாடிய செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியுள்ளார்.

9.கிணறு நிறையத் தண்ணீர்

ஒரு முறை ஏசு பாலைவனம் வழியாகச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு மிகவும் தண்ணீர்த் தாகம் உண்டானது.

அப்போது அங்கு சின்ன ஒயாஸிஸ் இருப்பதைக் கண்டார்.

அதில் ஒரு சிறிய கிணறும் இருக்கிறது.

அதில் சில பெண்கள் தண்ணீர் இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏசு அவர்களிடம் தண்ணீர் வேண்டினார்.

***

”ஐயா! நீங்கள் வேறு ஊர்க்காரர், நாங்கள் வேறு ஊர், தண்ணீர் தர மாட்டோம்” என்கிறார்கள்.

”அம்மா! நாம் எல்லோரும் ஒன்று தான், தண்ணீர் தாருங்கள்!” என்றார்

”ஐயா! நாங்கள் மிகத் தொலைவில் இருந்து வந்து ஒரு குடம் தண்ணீர் தூக்கிச் செல்கிறோம், தர மாட்டோம்!” - பெண்கள்

அப்போது அவர்களுள் ஒரு பெண், ”ஐயா! தண்ணீர் எல்லோருக்கும் வேண்டும், இதோ நான் தருகிறேன், வாருங்கள்!” என்று ஏசுவுக்குத் தண்ணீர் இரைத்துக் கொடுத்தாள்.

ஏசு அவளுக்கு நன்றி கூறிச் சென்று விட்டார்.

அடுத்த நாள் அவள் வீட்டில் உள்ள கிணற்றில் நிறைய தண்ணீர் ஊறி இருந்தது.அவள் மிகவும் மகிழ்ந்தாள், பலருக்கும் தண்ணீர் கொடுத்தாள்.

10. இடையன் பேச்சைக் கேட்காத ஆடுகள்

ஏசு ஒரு பெரிய மலைப் பகுதிக்குத் தன் நண்பர்களுடனும் ஊர் மக்களுடனும் குழந்தைகளுடனும் சென்று காற்று வாங்கிக் இயற்கையை ரசித்தார்.அப்போது ஒரு இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வந்தான்.அவற்றுள் சில ஆடுகள் அவனுக்குப் பின்னால் வராமல் தன் இஷ்டப்படி மலை மீது எங்கெங்கோ சென்றன.அவனும் அவற்றை எவ்வளவோ அடக்கியும் அவை அவன் பேச்சைக் கேளாமல் வெகுதூரம் செல்ல, திடீரென நிறைய நரிகள் ஆடுகளைத் துரத்தின, ஆடுகளும் பயந்து போய் கத்திக் கொண்டே தப்பி ஓடின.

அதைப் பார்த்த ஏசு இறைவனை வேண்டிக் கொண்டு நரிகளிடம் இருந்து ஆடுகளைக் காப்பாற்றினார்.இடையனும் நன்றி கூறினார்.

அப்போது ஏசு குழந்தைகளிடம் கூறினார், ”குழந்தைகளே! பார்த்தீர்களா? இடையன் பேச்சைக் கேட்காமல் தன் இஷ்டப் படி ஓடின ஆடுகள் நரிகளிடம் மாட்டிக் கொண்டன.அது போல் அப்பா அம்மா தாத்தா பாட்டி ஆசிரியர்கள் ஆகியோர் சொல்வதைக் கேட்காமல் போனால் உங்களுக்கும் கஷ்டம் வரும்!” என்று கூறினார்.

____________________________________________________________________________

11. திராட்சை ஜூஸாக மாறிய தண்ணீர்....

ஒரு முறை ஏசுவின் உறவினர் வீட்டுக் கல்யாணம் நடந்தது.

மிகவும் அதிக அளவில் உறவினர்கள் வந்தனர்.

அனைவருக்கும் திராட்சை ரசம் [grape juice] வழங்கப்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் ஜூஸ் தீர்ந்து விட்டது.

விருந்தினர்களோ பலர் ஊரில் வாழும் ஏழைகள்.

அவர்கள் மிகவும் பசியுடனும் சாப்பிடும் ஆசையுடனும் வெயிலுக்கு ஜூஸ் கேட்கிறார்கள்.

என்ன செய்வது?

***

ஏசுவின் அம்மா மேரி அவரிடம் வந்து இதைக் கூறினார்.

ஏசு தன் நண்பர்கள் இருவரை அழைத்தார், ஜூஸ் தயாரிக்கும் பானையில் தண்ணீர் ஊற்றச் சொன்னார்.

இறைவனை வணங்கினார், தண்ணீர் ஜூஸாக மாறியது, ஜூஸ் கேட்ட அனைவருக்கும் அது தரப்பட்டது.

***

மேரி இதைப் பற்றிக் கேட்ட போது,

”அம்மா! கல்யாணத்தில் முதலில் பசித்த ஏழைகளுக்குத் தான் விருந்து வைக்க வேண்டும்.அதையே கல்யாண வீட்டில் செய்தோம்.ஆனால் ஜூஸ் தீர்ந்தது, ஏழைகள் விருந்தும் ஜூஸும் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தனர்.அவர்களை விரட்டாமல் என்னிடம் நீங்கள் கேட்ட போது, இறைவன் அருளினார்.ஏழைகளுக்கு உதவ எப்போதும் இறைவன் முன்வருவார்” என்றார் ஏசு.

___________________________________________________________________

12. காலார நடந்த முடவன்

ஜெருஸலெம் மாநகரில் ஏசுவும் அவரது நண்பர்களும் ஒரு நாள் கடைத்தெருவில் நடந்து கொண்டு இருந்தனர்.

அப்போது தெருவில் குப்பைகளுக்கு அருகில் மிக மோசமான நிலையில் ஒரு முடவக் கிழவன் கிடந்தான்.

அவனைத் தொட யாரும் விரும்பவில்லை.அவன் மீது ஒரே நாற்றம்!

அப்போது ஏசு அவன் அருகில் சென்றார், அவன் கைகளையும் கால்களையும் மிகவும் அன்புடன் பிடித்துத் தடவினார்.மனதில் உண்மையான பக்தியுடன் கடவுளை வேண்டினார்.அப்போது அவன் எழுந்து நடக்க ஆரம்பித்தான்.அவனும் ஏசுவுக்கு நன்றி கூறினான்.

ஏசு சொன்னார், ”இக்கிழவன் அவன் அம்மாவையும் அப்பாவையும் மிகவும் நல்ல படியாகப் பார்த்து கவனித்தான்.ஒரு முறை அவன் ஊரில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்ட போது தன் அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்றி விட்டுத் தன் மாடி வீட்டில் இருந்து தப்பிக்கக் கீழே குதித்த போது முடவன் ஆனான்.அவனது பெற்றோரும் இப்போது இல்லை, இவனுக்கும் யாரும் இல்லை.பெற்ற அம்மா அப்பாவை மிகவும் அன்புடன் கவனித்த இவனுக்கே இறை அருளால் உதவினேன்!” என்றார்.

________________________________________________________________________

13. அதிகாரியின் மகனைக் காத்த இறை அருள்

ஒரு நாள் ஏசு தன் நண்பர்களுடன் மலைச்சராலில் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது தூரத்தில் சில குதிரைகள் வரும் சத்தம் கேட்டது.அவை இவர்களின் அருகில் வந்தன.

அவற்றுள் ஒரு அதிகாரி இருந்தார்.அவருடன் அவரது உதவியாளர்களும் காவலர்களும் இருந்தனர்.

அதிகாரி  ஏசுவின் முன் வந்து மரியாதையுடன் வணக்கம் செய்தார்.ஏசுவும் அவரை வணங்கினார்.

”ஐயா! என் மகனுக்கு மிகவும் சிறிய வயது.அவன் மிகவும் நோய் வாய்ப்பட்டு இருக்கிறான்.அவன் சாகக் கிடக்கிறான்.அவனுக்கு ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டுமாம்.தயவு செய்து என் ஊருக்கு வருக!” - என்றார்.

ஏசு - ”வீட்டுக்குப் போங்கள், உங்கள் மகன் குணமாகி எழுந்து நடப்பான், பல காலம் வாழ்வான்! ஒரு நாள் அவனை நான் பார்ப்பேன்!”

 

அதிகாரி - ”மிக்க நன்றி ஐயா வருகிறேன்”

அதிகாரி அவ்விடத்தை விட்டுத் தன் கூட்டத்துடன் செல்கிறார்.ஊருக்கு அருகில் வரும் போதே பலர் அவரை எதிர் கொண்டு அவர் மகன் குணமாகித் தன் தோழர்களுடன் விளையாடுவதாகக் கூறினர்.அவரும் ஏசுவிற்கு மனமார நன்றி கூறினார்.

அப்போது ஏசு கூறுகிறார், ”இந்த அதிகாரி பல ஏழை நோயாளிகளைக் குதிரைகளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார், மேலும் பலருக்கு மருந்துகள் வாங்கியும் வந்துள்ளார்.அதனால் தான் இறையருளால் அவன் மகனைக் காப்பாற்றினேன்!”

___________________________________________________________________________

14. மலை மீது கொடுத்த மஹா விருந்து

 

ஒரு முறை ஏசு தன் நண்பர்களுடன் மலைச்சாரலைச் சார்ந்த ஊரில் இருந்தார்.அங்குள்ள மக்கள் தினமும் அவரைக் கண்டு அவர் மூலம் ஆன்மீக அறவுரைகளை அறிந்தனர்.

ஒரு நாள் நன்பகலில் அனைவரும் பசியுடன் அவரது உரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.அப்போது அவர்களின் பசியை உணர்ந்த அவர் உண்ண என்ன உள்ளன என்று தன் தோழர்களைப் பார்க்கச் சென்னார்.

சில ரொட்டிகளும் மீன்களும் தான் அளவுடன் இருந்தன.அவற்றை ஏசு கொண்டு வரச் செய்தார்.கடவுளை த்யானம் செய்தார், அனைவருக்கும் தரும் அளவுக்கு அதிகம் ஆனது.

அனைவரும் வியந்தனர்.

ஏசு சொன்னார், ”முன்பு உங்கள் பகுதியில் மிகக் கொடுமையான பஞ்சம் வந்த போது, நீங்கள் சுயநலம் பாராமல் ஒருவருக்கு ஒருவர் உணவைச் சேகரித்துப் பகிர்ந்து கொண்டதுடன், பக்கத்து ஊர் மக்களுக்கு உணவிட்டுக் காத்தீர்கள். அப்புண்ணியத்தின் பேரில் தான் இறைவன் இப்போது அருளினார்.”

Jesus Christ in India
Madurai Kanchi - How Madurai looked and functioned...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries