Selftual Christ birth

Sakthi Foundation

என்னுள் மலரட்டும் ஏசு பிறப்பு

 

தனது வாழ்க்கையை முன்னுதாரணமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் மக்களின் முன்னேற்றத்துக்கும் முழு மொத்த சமூஹத்தின் நலமான மாற்றத்துக்கும் காரணமான மனிதன் ”அவதார புருஷன்” ஆகிறான்.

தன்னலம், ஆணவம் இன்றி தூய அன்பாலும் மரியாதையாலும் யாவையும் அனைத்து உயிர்களையும் மதித்து சேவை செய்து அதை பரமசத்தியத்திற்கே செய்யும் சேவையாக வாழ்பவன் அவதார புருஷன்!

அவதார புருஷர்கள் தாம் வாழும் காலம், இடம், மக்கள், இயற்கை, அரசியல், சமயம் ஆகியவற்றின் பிணைப்புகளுக்கு ஏற்ப தன் சேவையைச் செய்வர்.

ஆனால் மனித குலத்தின் முழுமொத்த பரிணாமத்திற்கு இவர்கள் காரணம் ஆவர்.உலகம் எங்கும் இவர்கள் தோன்றலாம்.

பரம சத்தியத்தைத் தன்னுள் உணர்ந்தும், அனைவருள்ளும், அனைத்துள்ளும், அனைத்து ஜீவனுள்ளும் இவர்கள் உணர்ந்து வாழ்வர்.

ஸ்ரீராமன், கண்ணன், ஆதிசங்கரர், ராமானுஜர், புத்தர், மஹாவீரர், வள்ளலார், நபி, குருநானக், ஏசு ஆகிய பலர் அவதார புருஷர்கள் ஆவர்.

ஏசு பிரான் அரசியல் மற்றும் சமயச் சூழலில் சிக்கல்களும் ஏகாதிபத்யமும் நிலவிய காலத்தில் மத்திய மேற்கு உலகில் தோன்றினார்.

மிக எளிய தச்சர் குடும்பத்தில் அவர் அவதரிக்கிறார்.

அன்னை மேரி தன் 33 வயது மகனை மனித குலத்தின் முன்னேற்றத்துக்காகத் த்யாகம் செய்தவர்.அவர் ஒவ்வொரு த்யாக உள்ளத்தின் சின்னம்.

அவர் எண்ணியிருப்பின் தன் மகனை அரசின் தண்டனையில் இருந்து காப்பாற்றி வேறு தேசம் சென்று இருக்க முடியும்.

சத்தியத்தின் தலைநிமிர்வுக்காக அவர் அங்ஙனம் செய்யவில்லை.

ஏசுவின் பிறப்பைக் குறிக்கும் வால் நக்ஷத்ரம் உயர்ந்த ஞானப்பேரொளியின் சின்னமே.மிக உயர்ந்த தன்னலமற்ற தலைமைப் பண்பின் அடையாளமும் மூட.

அவரது மாட்டுத் தொழுவப் பிறப்பு தலைப்பண்பின் எளிமையைக் குறிக்கும்.

அவரது சிலுவை மன்னிக்கும் தயையையும் ஏற்றுக் கொள்ளும் மஹா மனோபாவத்தையும் சுட்டுகிறது.

கிறிஸ்துவின் வருகையைக் கொண்டாடி வரவேற்கும் மரமோ முழுமையான த்யாகத்தின் சின்னமே.அதன் பரிசு? மிக உயர்ந்த ஆன்மீகப் பேரின்பம் ஆகும்.

அன்பு, அஹிம்சை, மரியாதை, ஏற்றல், புரிதல், மன்னித்தல், சகிப்புத் தன்மை ஆகியன மீண்டும் 2015 காலகட்டத்தில் சற்று ஆட்டம் காணும் இவ்வேளையில் ஏசுவின் பிறப்பு இக்குணங்கள் மூலம் நம்முள் மலரட்டும்!

ஆமென்!

சக்தி பெளண்டேஷன்

சென்னை.

From temple to world stage – [Article about Rukmi...
Brave women after Dakshayini - Sathi women in Tami...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries