St.Thomas could not have been killed

Sakthi Foundation
புனித தாமஸை மதவாதிகள் எதிர்த்தனரா?
புனித தாமஸ் பாரத தேசத்திற்கு வந்து தன் ஆசான் ஏசு கூறிய சத்யப்பொருளின் மூல சாரத்தை உணர்ந்துள்ளார்.தம் தேசத்து மக்களுக்கு ஏசு அதை விளக்கியுள்ளதை எடுத்துக் காட்டியும் இருக்கிறார்.இதை ஏற்றுக் கொண்டவர்கள் நம் மக்கள்.

ஆனால் ப்ரச்சனை எங்கு வந்திருக்கும் தெரியுமோ?
இன்றும் நம் தேசத்தில் பற்பல ஆச்சாரியர்களைப் பின்பற்றுபவர்கள் கண்மூடித் தனமான போக்கில் தம் ஆச்சாரியனை விட மேலோங்கியவரோ இணையானவரோ வேறில்லர் என்று கூறிவிடும் போது சமூஹத்தில் பிற ஜனங்கள் மன சங்கடத்துக்கு ஆளாகி, வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

இதையே தான் தாமஸின் பாரதச் சீடர்கள் செய்திருக்க வேண்டும்.இதன் மூலம் பிற கொள்கைகளையும் ஆசான்களையும் பின்பற்றுவோருக்குத் தாமஸின் ஆன்மீக நெறி மீது வெறுப்பும் பழி வாங்கும் எண்ணமும் மேலோங்கி இருத்தல் வேண்டும்.

அரசியல் சூழலும் இதற்குத் துணை போய் இருத்தல் வேண்டும்.

ஆனால் தாமஸின் கல்லறை என்பது இன்றைய புனித ஜீவசமாதிகளுக்கு நிகரானதே! ஏனெனில் பல மதத்து மக்களும் அதை வணங்கினர், வணங்குகிறார்கள் என்பதே உண்மை.

வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, ஏர்வாடி, சமயபுரம் ஆகிய ஸ்தலங்கள் சமய வேற்றுமை பாராது மக்களால் இன்றும் வழிபடப் படுவதைக் கருத்தில் கொள்க.

மக்கள் கலியுகத்தில் பொருள், போகம், வ்யாதிகள், இஷ்ட காமர்த்தங்கள் ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்ளவே பெரும்பாலும் தெய்வத்தை மஹான்களை அண்டுகிறார்கள்.

அதே கதிதான் தாமஸுக்கும்.பல லீலைகள், அற்புதங்கள் மூலம் அன்பர்களை ஆன்மீகப் பாதைக்கு ஆட்கொள்ள மஹான்கள் இருக்க, மக்களோ வெறும் அல்ப ஆசைகளிலேயே மூழ்கி அதை நிறைவேற்ற ஆன்மீகப் பெரியோர்களை அண்டுவது என்று மாறும்?

ஆயிரக்கணக்கில் தாமஸ் மத மாற்றம் செய்து இருந்தார் என்றால் அதைக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும், குறிப்பாக திராவிட பக்தி இலக்கியங்களும் பதிவு செய்யாமல் போய் இருக்காது! ஏனெனின் உண்மைகளை வரலாற்றில் அதிகம் பூசிமெழுக முடியாது.

உதாரணம்: வள்ளலார், பாம்பன் ஸ்வாமிகள், சாயி பாபா போன்ற பல மஹான்களை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்களை ஆன்மீக வாழ்வின் ஸ்திடமாகப் பின்பற்றும் குழுக்கள் குறிப்பிட்ட அளவே உண்டு.அதே போல் தாமஸ் போன்ற வெளிதேசத்து ஞானிகளை மக்கள் பார்ப்பது நம் ஊருக்குப் புதியதே அல்ல.காரணம் சமணம், பொளத்தம் ஆகியன வேறு பகுதிகளில் இருந்து வரும் போது அப்பகுதி மக்களை நம்மூர் மக்கள் பார்த்துள்ளனர்.

St.Thomas tomb in Madras - a true report
Pungeri UNI5 Center - Kanchipuram District - Paren...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries