தென்னிந்தியாவின் முதல் இந்தியரின் கல்லூரி...
துபாஷி
இரண்டு மொழிகள் கற்றவன் - இதன் பொருள்.
ஆங்கிலேயருக்கும் நாயக்க மன்னர்களுக்கும் இடையில் தெலுங்கும் - ஆங்கிலமும் அறிந்தவர்கள் இடைத்தரகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.
நம் தேசத்தில் பல வேற்று தேசத்தின் வேர் ஊன்றல்களுக்கு இவர்கள் மிக மிக முக்கியமானவர்கள்.
ஆனால் எந்த அளவுக்கு இவர்களுள் பலர் நியாம் நேர்மையுடன் நடந்தனர் என்பதில் ஐயம் உண்டு.
***
கி.பி 1754
தஞ்சாவூர் மாவட்டம் பெரியபாளையம் என்ற ஊரில் மிக ஏழ்மையான சூழலில் பிறந்தார் பச்சையப்பன்.
அவரது இருபது வயதில் மதராஸ் துபாஷி பெளணி நாராயண பிள்ளை என்பவரின் கீழ் வேலைக்குச் சேர்ந்தார், அவரிடம் மிகவும் நாணயமாக வேலை செய்து அவரும் நாளடைவில் துபாஷி ஆனார்.
ஹாரிஸ் சாலையில் கி.பி 1790ல் மிகப்பெரிய வீட்டைக் கட்டினார்.
தினமும் கூவத்தில் நீராடி சைவத்திருமுறைகள் ஓதி கோமளேஸ்வரம் பேட்டை ஈசனை வணங்குவார்.
அடிக்கடி சிதம்பர தரிசனம் செய்வார்.ஆனால் தன் 40 வயதில் அவர் காலமானார்.
அதற்கு முன் தான் ஈட்டிய அனைத்து செல்வத்தையும் தெய்வீக - சமூஹ நலப்பணிகளுக்குச் செலவிட உயிர் எழுதினார்.[இவரது உயில் கல்வெட்டு வடிவில் திருவண்ணாமலை, திருவல்லிக்கேணியில் உள்ளன]
***
கன்யாகுமரி - வாரணாசி வரைப் பல அறச்செயல்களுக்கும் இவர் சொத்துக்கள் பயன்படுத்தப் பட்டன.இவற்றை கவனத்துடன் பாதுகாத்து அவர் கேட்டுக் கொண்டபடி பாதுகாத்த பெருமை ஆங்கிலேயருக்கே சாரும்.சுமார் 47 ஆண்டுகள் ஆங்கிலேயர் இவரது சொத்துக்களைப் பராமரித்துள்ளனர்.
அதன்படி ஏழு லட்சத்தைக் கல்விக்குச் செலவிட உத்தரவு இட்டார்.அதன்படி கி.பி 1842ல் ப்ராட் வேயில் ஆரம்பப் பள்ளி ஒன்று உருவாகி அது வளர்ந்து பின்னர் கி.பி 1880ல் இன்றைய பச்சையப்பன் கல்லூரியாக பரிணமித்துள்ளது.குறிப்பாக இந்து மாணாக்கரே இதில் படித்தனர்.ஆங்கிலேயரின் உதவியின்றி தென் பாரதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி இதுவே!