மதராஸ் உருவாகக் காரணமானவர் - துபாஷி.பேரி திம்மப்பா
மொழி அறிவே மனிதனை உயர்த்திக் காட்டுகிறது.
மொழி மூலம் இன்று வரை உலகில் ப்ரச்சனைகளும் உண்டு, மகிழ்ச்சிகளும் உண்டு.
***
பல மொழி வல்லமை இன்று மிகவும் அவசியம் என்கிறார்கள்.
அன்றும் அது வணிகர்களுக்கு மிக மிக அவசியமாக இருந்துள்ளது.
சங்ககாலத்திலேயே மதுரையிலும் புகாரிலும் பல்மொழி பேசும் மக்கள் கலந்து வாழ்ந்தனர் என்பது இலக்கியங்கள் காட்டும் எதார்த்த உண்மை.
***
சுற்றுலாத் தலங்களில் ஒருவரது முகத்தைப் பார்த்தவுடன் வியாபாரிகள் அவர்தம் மொழியைப் பேசுவதைக் காண்கிறோம்.
இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழருக்கே வெகுவிரைவில் பல மொழிகள் கற்கும் ஆற்றல் அதிகம், காரணம் நம் மொழிகளில் உள்ள கட்டமைப்பே!
***
அரசியல்வாதிகள் அரசியல் பண்ணாமல் விட்டு இருந்தால் தேசத்தின் பல மொழிகளையும் தமிழன் கற்றிருப்பான்.
***
ஆனால் பலமொழிகள் கற்கும் தமிழனுக்கு அதுவே தன் மொழியை அவ்வப்போது மறக்கும் குணத்தையும் ஏற்படுத்துகிறது.
***
தெலுங்கு நாட்டுக்கு வெகு அருகில் உள்ளது சென்னை. அதனால் தெலுங்கு மக்கள் அதிகம். தமிழகத்தைல் தான் கன்னடர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர், மொகலாயர்கள், போர்த்துகீஸியர், ஆங்கிலேயர் என எவரும் வந்து போய் உள்ளனர்.அவர்தம் மொழிகளைத் தமிழ் அணைத்துக் கொண்டுள்ளது.
***
கி.பி 16ஆம் நூற்றாண்டில் வியாபாரம் நிமித்தம் நம் ஊர்களுக்கு வருகை தரும் வெளிதேசத்தவர்க்கு மிக முக்கியமான உறவு ”துபாஷி” ஆவார்.
இரண்டு மொழிகள் அறிந்தவர் என்று இதற்குப் பொருள்.
குறிப்பாக ஐரோப்பியர்களை நம் தேசத்து அரசர்களும் வணிகர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகம் செய்யும் அரும்பெரும் பணியை துபாஷிகள் செய்துள்ளனர். [Translators]
இவர்களின் நாணயத்தின் பேரில் தான் வணிகர் - அரசர் - மக்கள் ஒன்றுபட்டு உயர்ந்துள்ளனர்.ஏமாற்றிய கள்ள துபாஷிகள் பலரும் இருந்தனர்.
துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளையின் personal diray குறிப்பே ஃப்ரெஞ்சின் பாண்டிச்சேரி வரலாற்றின் கண்ணாடி ஆகும்.
அதுபோல் மதராஸ் தோன்றவும் தேசம் ஒரு காலத்தில் அடிமைப் படவும் காரணம் துபாஷி பேரி திம்மப்பா.
எனது குடும்பத்தில் பல பெரியவர்கள் பல மாநிலங்களுக்கும் துணி வியாபாரம் செய்து வரும் போது அம்மாநிலத்தில் உள்ள மொழியைப் பேசுவதைக் காண்கிறேன்.
அதே வேளை ஆண்டுக்கணக்கில் சென்னையில் வாழும் உயர்குடி வேற்று மாநில மக்கள் தமிழ் தெரியாமல் இருப்பதையும் காண்கிறேன்.காரணம் சமூஹத்துடனான தொடர்பைப் பொருத்தே மொழி அறிவு அமையும்.
என் தாயார் குஜராத்தில் வாழ்ந்த போது வெகுவிரைவில் அம்மொழியை அறிந்தார், என் தந்தையால் அம்மொழியை அறிய இயலவில்லை.
அதே போல் கி.பி 15ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியரின் வருகை இத்தேசத்தில் இருக்கும் சூழலில் இங்குள்ள மொழியைப் பற்றிய ஓரளவு ஞானம் அவர்களுக்கும், அவர்தம் மொழியைக் குறித்த பொது ஞானம் நம்மவர்களுக்கும் இருந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள், பூக்காரிகள் எனப் பலர் பல மொழிகளை convey செய்யும் பக்குவம் பெற்றுள்ளனர்.
அதுபோலத்தான் அக்காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் சமூஹத்தில் மக்களுக்கும், மன்னருக்கும், வணிகருக்கும் இடையில் பல மொழி அறிந்தோராக, இணைப்பாளராக அமைந்தனர்.
ஆங்கிலேயரோ ஃப்ரெஞ்ச்சோ டச்சோ போர்த்துகீஸோ அம்மண்ணில் வந்த காலம் முதல் ஓரளவுக்கு அவர்தம் தேவைகள் குறித்து நம்மூர் வாசிகளுக்கும் idea இருந்துள்ளது.
துபாஷிகளை வெறும் மொழிபெயர்ப்பாளராகக் காண்பதற்கில்லை.
அவர்கள் மன்னரையும் மக்களையும் வேறு தேசத்தையும் இணைப்பவர்கள்.
அவர்தம் நேர்மையும் நாணயமும் மிக முக்கியமானவை.
ஆங்கிலேயக் கும்பினிக்காரர் [நம்மூர் மக்கள் அழைத்த முறை] கடற்கரை ஓரம் நிலத்தைக் கேட்டுப் பெற்று கோட்டை எழுப்பும் நாளுக்கு முன்பே அவர்தம் வருகையைக் குறித்தும், அவரை அழைத்து வரும் திட்டம் குறித்தும் துபாஷி பேரி திம்மப்பாவுக்கு ஆழமான ஞானம் உண்டு.
பேரி திம்மப்பா.....ஆங்கிலேய அரசு இம்மண்ணில் சாம்ராஜ்யமாக வேர் ஊன்றக் காரணம் ஆன துபாஷி!
தெலுங்கர், நியாயஸ்தர், பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகி விட்டது அவர் ஆங்கிலேயருக்குப் பெற்றுத் தந்த வாணிகத் தொடர்பும், நிலமும், கோட்டை கட்டும் அனுமதியும்.....
பதினாறாம் நூற்றாண்டில் கிழக்குக் கடற்கரையில் ஆந்திரா எல்லை முடியும் வரை பல துணி வகையறா வியாபாரிகளின் மத்தியில் நல்ல பெயரும் ப்ரபலமும் கொண்டு விளங்கியவர் பேரி திம்மப்பா.
தெலுங்கு, ஹிந்தி, சம்ஸ்க்ருதம், கன்னடம், தமிழ், டச், ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் அறிந்தவர்.
குறிப்பாக வேற்று மொழி கற்பிக்கும் போது பெயர்-வினைச் சொற்கள் தெளிவாக அறிவதே மிக மிக மிக இன்றியமையாதவை.அவற்றின் உதவியால் அம்மொழி பேசும் சமூஹத்தில் சமாளித்து விடமுடியும்.
மேலை தேசத்து மாணவருக்கும், வேற்று மொழிக் குழந்தைகளுக்கும் நான் தமிழ் கற்றுத் தந்த போது அதையே செய்தேன், மாணவர்கள் தனித்து இயங்கியதைக் கண்டேன்.எழுதுவதும் வாசிப்பதும் அடுத்து தான்....
துபாஷிகள் ஷேக்ஸ்பியர் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத் தேவையில்லை, ஆனால் அவர்கள் வியாபார ரீதில், சில குழூக்குறி வார்த்தைகளுடன், வாணிபத் தொடர்பான கருத்துக்களை அரசியல் மொழியுடன் அறிய, வெளியிட ஞானம் பெற்றனர்.
துபாஷி பேரி திம்மப்பா அப்படித்தான் ஆந்திராவின் மசூலிப்பட்டிணத்திலும் ஆர்மகானிலும் கிழக்கு இந்தியக் கும்பினி வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டார், பழகினார், வியாபாரத்துக்கு உதவினார்.இவர் மேலும் பிற தேசத்து வணிகருக்கும் உதவியிருக்க வேண்டும், உரிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.
நாயக்க அரசின் ப்ரதிநிதியாக பூந்தமல்லி நகரில் இருந்து ஆட்சி செய்தவர். இவர் பழவேற்காடு - சாந்தோம் வரை நிர்வாஹம் செய்தார்.என்ன செய்து கிழித்தாரோ, மன்னிக்கவும் சாந்தோமில் போர்த்துகீஸியர் போட்டுக்கொண்டிருந்த ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
இவரது அண்ணன் தமரலா வெங்கடாத்ரி நாயக்கர்.இவர் நாயக்க மன்னரின் கீழ் சந்திரகிரியில் இருந்தார்.இவரது மற்றொரு பெயர் தான் சென்னப்ப நாயக்கர்.
வணிகம் மூலம் தேசத்தின் வருவாயைப் பெருக்கும் எண்ணத்தில் தான் விஜயநகர நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், பிற்காலத்தில் மராட்டியர்கள் ஐரோப்பியர்களுக்கு ஒண்ட இடம் கொடுக்க, அவர்கள் உண்ட வீட்டுக்குக் கண்டகம் செய்தனர்.
நம்மூர் ராஜாக்கள் பலரின் நிலையைப் பற்றி எழுத எனக்குக் கை கூசுகிறது! மன்னிக்கவும்....
எப்படியோ ஆர்மகானில் இருந்து ஆங்கிலேயக் கும்பெனியின் உயர் அலுவலர் ஃப்ரான்ஸிஸ் டேவைப் பூந்தமல்லிக்கு அழைத்து வந்தவர் பேரி திம்மப்பா!
ஒரே நாளில் பலர் சொல்வௌ போல் டே வந்து, ராஜாவைப் பார்த்து உரிமைப் பத்திரம் பெறவில்லை.அதற்குமுன் திம்மப்பா மூலம் சில செவிவழி அறிமுகம் ஆகி, அதன் பின் உரிய தருணத்தில் டே கோரமண்டல் கடற்கரையில் பேரி திம்மப்பாவுடன் கப்பல் விட்டுக் கால் பதித்தார்.
தமரலா வெங்கடாத்ரி ராஜாவின் அனுமதியில் அவரைச் சந்தித்து 22.8.1639 அன்று [அஷ்டமச்சனி தேசத்துக்கு நிகழும் காலமோ?] ஃப்ர்மன் எனப்படும் ஆவணம் ஒன்றைப் பெற்றார் டே.அதுவே மதராஸின் பர்த்டே - பிறந்த நாள், மெல்ல மெல்ல சுதந்திரம் பறந்த நாள்.
இதைப் பெற்றுத் தர முக்கிய காரணம் பேரி திம்மப்பா தான்.
அவர் முழுக்க முழுக்க வணிக வருவாய் வேண்டியே இதைச் செய்திருக்கிறார். இந்த ஆவணத்துக்கு மேலும் ஒரு உயர்நிலை அனுமதி சந்திரகிரி அரசனிடம் இருந்து திம்மப்பாவின் பரிந்துரையின் பேரில் தான் பெற முடிந்தது. அனுமதிக் கையெழுத்து போட்ட அரண்மனை இன்றும் சந்திரகிரியில் [காட்பாடி - கூடூர் வழித்தடத்தில்] உள்ளது.
பேரி திம்மப்பாவை குருவாகவே கொண்டு மதித்த ஆங்கிலக் கும்பினி அவருக்கு மிக அகன்ற நிலம் ஒன்றைத் தமக்கு அரசன் ஒதுக்கிய பகுதியில் இருந்து தட்சிணையாகக் கொடுத்தது.அதில் அவர் புதிய சென்னை நகரின் மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு உதவ சென்ன கேசவ பெருமாள் கோயிலைக் கட்டினார். அதன் பெயர் சென்னைக் கேசவ பெருமாள் கோயில்.
அவரை வணங்குகிறோம்!!!