ரிப்பன் மாளிகை - கவர்னர் மாளிகை - மதராஸ் மாநகராட்சி
துபாஷி பேரி திம்மப்பாவின் தம்பி தான் பேரி வெங்கடாத்ரி.இவர் கிண்டியில் மிகப்பெரிய ஆடம்பர விடுதியைக் கட்டினார்.அதுவே இன்றைய கவர்னர் மாளிகை - ராஜ் பவன்.இவர் மூலம் தான் தேசத்தின் மிகப் பழமை மிக்க மதராஸ் கார்ப்பரேஷன் உருவானது.Corporation of Madras - 16.9.1688 A.D, oldest among all other corporations.
மதராஸ் பட்டிணம் வளரும் சூழலில், அதற்கு ஈடாக அதன் வெளியே கருப்பர் நகரமும் வளர்ந்தது.இவற்றின் பராமரிப்புச் செலவுகளை மனதில் எண்ணியும், சில நீதிநெறிகள், சட்டதிட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொருட்டும் அன்றைய கவர்னர் ஸ்ட்ரெயிஷம் மாஸ்டரின் ஆலோசனையின் பெயரில் மாநகராட்சி உருவானது.
30.12.1687ஆம் நாள் இங்கிலாந்து மன்னன் ஜேம்ஸ் மதராஸை மாநகராக உருவாக்கும் அனுமதியை ஏலிஹூ யேலிடம் [யேல் பல்கலைக் கழகம் தோன்ற நிதி உதவி செய்தவர்] அளிக்க,அவர் அதைக் கொண்டு வந்து கோட்டையின் சேர்மேன் சர் ஜோஸியா சைல்ட்டிடம் தர, அடுத்த ஆண்டே மதராஸ் மாநகராட்சி உருவானது.
மதராஸின் முதல் மேயர் ”The worshipful Mayor'' என்று போற்றப்பட்டுள்ளார்.
இவர்களின் கீழ் ஊர் அதிகாரி, கணக்குப்பிள்ளை, பேட நாயக் ஆகியோர் பணியாற்றினர்.
பன்னிரண்டு வீரர்கள் ரக்த வர்ண ஆடையில் மின்ன, கம்பீர நடை போட, 29 வீரர்கள் சீன தேசத்துப் பட்டு உடையில் உடன் வர மற்றவர்கள் [பர்கஸீஸ் - மேயரின் கீழ் உள்ல அலுவலர்கள்] கம்பீரமாய் இன்று கோட்டையில் உள்ள புனித மேரி சர்ச்சின் தென்புறம் உள்ள அன்றைய டெளன் ஹால் கட்டிடத்தில் நன்பகலில் மேயர் பதவி ஏற்றார்.
பேரி திம்மப்பாவின் தம்பி பேரி வெங்கடாத்ரி முக்கியமான பர்கஸீஸாகப் பணியாற்றினார்.அவரது உணவகம் தான் இன்று கிண்டியில் உள்ள கவனர் மாளிகை. அல்டர்மென் வருடம் ஒரு முறை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப் பட்டார்.
இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள அழகிய வெள்ளை நிற ரிப்பன் மாளிகை கி.பி 1913ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு உருவானதே. G.S.T. ஹாரிஸ் என்ற கட்டிடக்கலைஞர் வரைப்படம் தயாரிக்க லோகநாத முதலியாரின் தலைமையின் கீழ் சுமார் ரூ.5,50,000 செலவில் ரிப்பன் மாளிகை தோன்றியது. அன்றைய கவர்னர் ஜென்ரல் லார்ட் ரிப்பனின் பேரிலேயே இம்மாளிகை அழைக்கப் பட்டது. கட்டிடம் திறக்கப்பட்ட விழாவை மூவாயிரம் மதராஸிகள் கண்டு ரசித்தனராம்.
மதராஸின் முக்கிய மேயர்கள் சிலர்:
நாத்தனெயில் ஹிகிஸ்டன் - முதல் மேயர்.
P. த்யாகராய செட்டியார் - முதல் இந்திய மெயர் - கி.பி 1919
குமாரைய்யா M.A.முத்தய்யாச் செட்டியார் - கி.பி 1933
தாரா செரியன் - முதல் இந்தியப் பெண் மேயர்