எக்மோர் ம்யூஸியம்
மதராஸின் பெருமைகளில் ஒன்று எக்மோர் ம்யூஸியம் - எழும்பூர் அருங்காட்சியகம்.
பாரத தேசத்தில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இரண்டாம் அருங்காட்சியகம் இதுவாகும்.முதல் ம்யூஸியம் கொல்கத்தா மாநகரில் அமைந்துள்ளது.
கி.பி 1778ல் அன்றைய கோட்டையின் கவர்னர் 43 ஏக்கர் நிலப்பரப்பை எழும்பூரில் அரசு அலுவலங்களுக்கு என ஒதுக்கியது.
அதில் அமைக்கப்பட்ட ப்ரதான கட்டிடமும் தோட்டமும் கி.பி 1821ல் E.S.மூரத் என்ற ஆர்மேனிய வியாபாரிக்கு விற்கப்பட்டதாம்.
அவரோ அதே பகுதியை மீண்டும் அதிக லாபத்துக்கு ஆங்கில அரசிடம் கி.பி 1830ல் விற்று விட்டார்.இப்பகுதியில் தான் அன்றைய மதராஸ் கலெக்டரின் அலுவலம் இயங்கியுள்ளது.அதன் பின் தன் கி.பி 1851ல் மதராஸ் எக்மோர் ம்யூஸியம் அமைக்கப் பட்டது. அதனுடன் கலோஸல் ம்யூஸியம் அரங்கும், ஓவிய அரங்கும் இணைந்துள்ளன.
ம்யூஸியம் அமைந்துள்ள சாலை பேந்த்தியன் சாலை, அமைந்துள்ள வளாகம் ”பேந்த்தியன் வளாகம்”.
இன்றுள்ள முழுமையான அமைப்பைக் கொண்டு வந்தவர் விலி ப்ரூக். கி.பி 1905ல் முழு பணியையும் அவர் செய்து முடித்து மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.
ஆங்கிலேய கட்டிடக் கலைஞர் ஜென்ரி இர்வின் வடிவமைக்க நம்பெருமாள் செட்டி இதைக் கட்டிக் கொடுத்தார்.
மிக வலிமைமிக்க தேக்கு மரங்களும் இரும்பும் வண்ணக்கண்ணாடிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன.
மிகத் தொன்மை மிக்க மதராஸ் லிட்ரரி சொஸைட்டி, ஓலைச்சுவடிகள் பாதுகாப்பகம் [19,007 சுவடிகள்] ஆகியன இவ்வளாகத்துள் உள.
ம்யூஸியம் த்யேட்டரில் அக்காலத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் லண்டனில் அரங்கேறிய கையுடன் இங்கும் ஆங்கில மக்களுக்காக நிகழ்ந்தனவாம்.அக்காலத்து ஆங்கிலேயர் தம் week end பொழுதுபோக்கு மையங்களில் மிக முக்கியமான ஒன்று எழும்பூர் ம்யூஸியம் த்யேட்டர்.
கி.பி 1855ல் இவ்வாளகத்தின் கீழ்த்தளத்தில் மிருகக் காட்சி சாலையை ஆங்கிலேய அதிகாரி பேல்ஃபர் அமைத்துள்ளார்.அதுவே மதராஸின் முதல் ZOO.அதன் பின் கி.பி 1863ல் பார்க் டவுனுக்கு மாற்றினர்.ஆனால் மக்கள் ஈர்ப்பு கிடைக்காததால், 1985ல் இன்றுள்ள வண்டலூர் உயிரில் பூங்காவாக மாற்றியமைக்கப்பட்டது.