Uni5 Community Blog
Uni5 Holistic Intelligence
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2497
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2631
தென்னிந்தியாவின் முதல் இந்தியரின் கல்லூரி...
துபாஷி
இரண்டு மொழிகள் கற்றவன் - இதன் பொருள்.
ஆங்கிலேயருக்கும் நாயக்க மன்னர்களுக்கும் இடையில் தெலுங்கும் - ஆங்கிலமும் அறிந்தவர்கள் இடைத்தரகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.
நம் தேசத்தில் பல வேற்று தேசத்தின் வேர் ஊன்றல்களுக்கு இவர்கள் மிக மிக முக்கியமானவர்கள்.
ஆனால் எந்த அளவுக்கு இவர்களுள் பலர் நியாம் நேர்மையுடன் நடந்தனர் என்பதில் ஐயம் உண்டு.
***
கி.பி 1754
தஞ்சாவூர் மாவட்டம் பெரியபாளையம் என்ற ஊரில் மிக ஏழ்மையான சூழலில் பிறந்தார் பச்சையப்பன்.
அவரது இருபது வயதில் மதராஸ் துபாஷி பெளணி நாராயண பிள்ளை என்பவரின் கீழ் வேலைக்குச் சேர்ந்தார், அவரிடம் மிகவும் நாணயமாக வேலை செய்து அவரும் நாளடைவில் துபாஷி ஆனார்.
ஹாரிஸ் சாலையில் கி.பி 1790ல் மிகப்பெரிய வீட்டைக் கட்டினார்.
தினமும் கூவத்தில் நீராடி சைவத்திருமுறைகள் ஓதி கோமளேஸ்வரம் பேட்டை ஈசனை வணங்குவார்.
அடிக்கடி சிதம்பர தரிசனம் செய்வார்.ஆனால் தன் 40 வயதில் அவர் காலமானார்.
அதற்கு முன் தான் ஈட்டிய அனைத்து செல்வத்தையும் தெய்வீக - சமூஹ நலப்பணிகளுக்குச் செலவிட உயிர் எழுதினார்.[இவரது உயில் கல்வெட்டு வடிவில் திருவண்ணாமலை, திருவல்லிக்கேணியில் உள்ளன]
***
கன்யாகுமரி - வாரணாசி வரைப் பல அறச்செயல்களுக்கும் இவர் சொத்துக்கள் பயன்படுத்தப் பட்டன.இவற்றை கவனத்துடன் பாதுகாத்து அவர் கேட்டுக் கொண்டபடி பாதுகாத்த பெருமை ஆங்கிலேயருக்கே சாரும்.சுமார் 47 ஆண்டுகள் ஆங்கிலேயர் இவரது சொத்துக்களைப் பராமரித்துள்ளனர்.
அதன்படி ஏழு லட்சத்தைக் கல்விக்குச் செலவிட உத்தரவு இட்டார்.அதன்படி கி.பி 1842ல் ப்ராட் வேயில் ஆரம்பப் பள்ளி ஒன்று உருவாகி அது வளர்ந்து பின்னர் கி.பி 1880ல் இன்றைய பச்சையப்பன் கல்லூரியாக பரிணமித்துள்ளது.குறிப்பாக இந்து மாணாக்கரே இதில் படித்தனர்.ஆங்கிலேயரின் உதவியின்றி தென் பாரதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரி இதுவே!
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2512
தென் இந்தியாவின் முதல் மேற்கத்திய கல்லூரி - மெட்ராஸ் கிறிஸ்டியன் காலெஜ் - MCC
கி.பி 1835.
ஸ்காட்லேண்ட் கிறிஸ்துவப் பாதிரிகள் இருவர் மதத்தைப் பரப்பும் நோக்குடன் மதராஸ் வந்தனர்.
அவர்கள் தான் ஜார்ஜ் லாரி மற்றும் மேத்யூ போவி.
வந்த கையுடன் ஆங்கிலக் கல்வியை மதத்துடன் இணைந்து கற்பிக்க எழும்பூரில் புனித ஆண்ட்ரூ பள்ளியை ஆரம்பித்தனர்.
மத மாற்றம் ஒன்றே ப்ரதான குறிக்கோளாய்க் கொண்ட அவர்களின் விண்ணப்பத்தை ஏற்று அதனை நிர்வாஹம் செய்ய ஜான் ஆண்டர்சன் பாதிரியார் மதராஸ் வந்தார்.
கிறிஸ்துவத்தின் உயர் நெறிகளை மாணாக்கருக்கு எடுத்துக் கற்பிப்பதே ப்ரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இப்பள்ளி வளர்ந்தது. Dr. வில்லியம் மில்லர் என்பவர் அதையே பின்னாளில், கி.பி 1837ல் கல்லூரியாக உயர்த்தினார்.அதுவே மெட்ராஸ் கிறிஸ்டியன் காலெஜ். [MCC]. இதுவே தென் தேசத்தின் முதல் மேற்கத்திய கல்லூரி ஆகும்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2495
தேசத்தின் முதல் ஆங்கிலப் பள்ளிக்கூடம்...
கி.பி 1677ஆம் ஆண்டு வேளையில் ஜார்ஜ் கோட்டையின் மக்கள் தொகை பெருகியது.ஆம் வியாபாரம் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் இங்கிலாந்தில் இருந்து பல குடும்பங்கள் மதராஸ் வந்தன [கம்பெனி சார்பாக]
அக்குடும்பங்களில் உள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியரின் கல்வியைப் பற்றிய பெரிய வினா எழுப்பப் பட்ட போது, கிறிஸ்துவ மதக் கல்வியை ஆங்கிலம் மூலம் போதிக்க முன்வந்தார் அப்போதைய பாதிரியார் ரால்ஃப் ஒர்டே. இவர் புனித மேரி சர்ச்சின் ப்ரதான பாதிரியார்.
அவரது மேற்பார்வையில் அவரின் கீழ் ஆங்கிலேயக் குழந்தைகள், சிறார் - சிறுமியர் சர்ச்சிலேயே பாடம் கற்றனர்.40 ஆண்டுகள் கல்வி என்பது இப்படித் தான் இருந்துள்ளது.அடிப்படைக் கணிதம், அறிவியலுடன் ப்ரதானமாக கிறிஸ்துவம் கற்பிக்கப் பட்டது.
1677ல் பாதிரியார் வில்லியம்ஸ் ஸ்டீவன்ஸன் கல்வியில் சில மாற்றங்கள் கொண்டு வந்தார்.பல பொதுப்பாடங்கள் ஆங்கிலம் மூலம் அறிமுகம் ஆயின.
மேலும் கோட்டைக்குள் இருக்கும் குழந்தைகள், சாந்தோமின் போர்த்துகீஸியக் குழந்தைகள், கருப்பர் நகரத்து பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும் இக்கல்வி இலவசமாக அளிக்கப் பட்டது.கோட்டைக்குள் சென்று படித்து வர இந்தியர்களுக்கு உயர் வணிகர்தம் பரிந்துரை தேசையாக இருந்தது.கல்வி வியாபாரம் ஆன கதை, பணம் படைத்தவனுக்கு மட்டும் கல்வி என தேசத்தின் போக்கு மாறியது இப்படித் தான்.
ஆனால் எப்படியோ கி.பி 1715ல் வில்லியம்ஸ் ஸ்டீவன்ஸன் ஆரம்பித்த புனித மேரி சர்ச் தர்ம பள்ளிக்கூடம் தான் தேசத்தின் முதல் ஆங்கிலப் பள்ளி.
_______________________________________________________________________
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2617
தேசத்தின் முதல் போர்டிங் ஸ்கூல்...
கி.பி 1790
மதராஸின் கருப்பர் நகர மக்கள் அந்த மே மாதத்தின் காலையில் சாலைகளில் வந்த போது பல இடங்களில் அந்த அதிசய விளம்பரத்தைப் பார்த்தனர்.
இரவோடு இரவாக விளம்பரம் செய்து காலையில் மக்களை ஈர்ப்பது ஒன்றும் புதியது அல்ல!
அது தான் ஆங்கிலக் கல்வியைக் கற்றுத் தரும் ஒரு பள்ளியின் விளம்பரம்.
அதில் என்ன ஆச்சர்யம் தெரியுமா? பள்ளிக்கூடத்திலேயே விடுதி வசதியும் செய்து தரப்படும் என்று விளம்பரம் கூறியது.
குருகுலக் கல்வி முறை அடியோடு மாறிய இறுதிக் காலத்தில் ஒரு M.A பட்டதாரி மீண்டும் விடுதியுடன் கூடிய பள்ளியை ஆரம்பிக்க முயற்சித்ததை மக்கள் வரவேற்றுள்ளனர்.
விரைவில் ஆங்கிலத்தில் பேச-எழுத கற்றுத் தரப்படும் என்பதே விளம்பரத்தின் ஹைலைட் மெஸேஜ். முப்பது தினங்களில் வேற்று மொழிகள் கற்றுத்தரப்படும் மையங்களுக்கு இதுவே முன்னோடி.
கணிதம், பூகோளம், ஐரோப்பிய வரலாறு, அறிவியல், தத்துவம் ஆகிய பாடங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் தரப்படும் என்றும் பட்டதாரி கூறினாராம்.
க்ரீக் அல்லது லத்தீன் மொழியை இணை மொழியாக எடுத்துக் கற்றவும் வாய்ப்பு தரப்பட்டதாம்.
அக்காலத்திலேயே மதராஸின் வசதி மிக்க மக்களும் வெளியூர் மக்களும் இப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தனர்.
யார் இந்த பட்டதாரி? அவர் தான் ஜான் ஹோம்ஸ்.
இவரது இப்பள்ளியே பாரதத்தின் நவீன போர்டிங் பள்ளிகளுக்கு முன்மாதிரி என்பதில் வரலாற்றில் சந்தேஹம் இல்லை!
___________________________________________________
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2625
ஏழு கிணறு - 7 Wells
கி.பி 1772ஆம் ஆண்டில் ஜார்ஜ் கோட்டை மற்றும் சென்னைப் பட்டிண வாசிகள் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதியுற்றனர்.அதற்குத் தக்க தீர்வைக் காண முற்பட்டவர் கேப்டன் பேகர்.இவர் ஒரு பொறியாளர்.
அவரது தலைமையின் கீழ் இன்றைய மின்ட் பகுதியில் பத்து ஆழ் கிணறுகள் தோண்டப் பட்டன. ஏழில் மட்டுமே நல்ல குடிநீர் கிடைத்ததாம்.
அவற்றில் இருந்து மர ஏற்றம் மூலம் தண்ணீர் இரைக்கப் பட்டது.அதை நிலத்தடி சுடுமண் குழாய்கள் மூலம் ஊருக்குள்ளும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளும் கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் வீராசாமித் தெருவில் தான் அருட்பெருஞ்சோதி வள்ளலார் வாழ்ந்த வீடு இன்றும் உள்ளது.இன்று இப்பகுதி ”வள்ளலார் நகர்” எனப்படும்.
மிகப் பழங்கால வீடுகளைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் இங்கே அவற்றைக் காணலாம்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2603
விக்டோரியா ஹால் எனப்படும் மதராஸின் டவுன் ஹால்
இங்கிலாந்து மஹாராணி விக்டோரியா பாரத தேசத்தின் ஆளும் அதிகாரியாகி ஐம்பது ஆண்டுகள் முடிந்த பொன்விழாவை ஒட்டி எழுப்பப் பட்டதே இன்று ரிப்பன் மற்றும் சென்ட்ரல் நடுவில் அழகாக கம்பீரமாக நிற்கும் விக்டோரியா தவுன் ஹால் கட்டிடம்.
ஜார்ஜ் டவுன் பச்சையப்பன் கட்டிடத்தில் நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் மதராஸின் முக்கிய அரசியல், வணிக, உயர் சமூஹ ப்ரமுகர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் சுமார் முப்பது பேர் சேர்ந்து பார்க் டவுன் நிலத்தில் பணம் முதலீடு செய்து எழுப்பிய மாளிகை தான் இது.
17.12.1883 அன்று ஒரு தென்னாட்டின் சிற்றரசக் குடும்பம் மூலம் அடிக்கல் நடப்பட்டது.
மைசூர் உடையார், திருவிதாங்கூர் அரச குடும்பம், பி.ஓ ஆர் என் சன்ஸ் கடிகார நிறுவனம், அன்றைய உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீமான்.முத்துஸ்வாமி ஐயர் போன்றோர் ரூ.1000 நன்கொடை அளித்து உதவினராம்.
ராபர்ட் ஃபெலோயஸ் சிஷோலெம் என்ற கட்டிடக் கலைஞர் வடிவமைத்த இம்மாளிகை நம்பெருமாள் செட்டி என்பவரால் அழகுறக் கட்டப்பட்டது.
பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆகியோரின் நாடகங்கள், பல இசை நிகழ்ச்சிகள் இங்கே அரங்கேறின.குறிப்பாக வீணை மாமேதை தனம்மாள் அடிக்கடி இங்கே கச்சேரி செய்துள்ளார்.
விவேகானந்தர், காந்தி, கோகலே, பாரதியார் போன்ற பலர் சொற்பொழிவு தந்துளர்.
மாலை வேளை நாடகங்களுக்குப் பெயர் போன அரங்கமாக விக்டோரியா ஹால் திகழ்ந்ததாம்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2471
Central railway station - சென்ட்ரல் ரயில்வே நிலையம்
சென்னை என்றவுடன் பலரது கண் முன் வருவது அழகிய சிவப்பான தேவாலம் போன்ற அமைப்புள்ள சென்ட்ரல் ரயில் நிலையம்.1873ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நான்கு ப்ளாட்ஃபார்முடன் கூடிய இவ்விடத்தை உருவாக்கினர். ஆனால் சில குறிப்புகள் 1900ஆம் ஆண்டில் இக்கட்டிடம் முடிவடைந்ததாகக் கூறும்.மெட்ராஸ் - தென் மாராட்டா ரயில்வே என்பதே ஆரம்ப காலப் பெயராம்.
1931 ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தில் மின் வசதி செய்யப் பட்டது.
ஜார்ஜ் ஹார்டிங் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதை வடிவமைத்தார்.
இன்று ஒரு நாளுக்கு 3,50,000 பயணிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகிறார்களாம்.
போர்த்துகீஸிய வணிகரின் தோட்ட வீடே சென்ட்ரல்...
1660ல் நாகப்பட்டிணத்தில் இருந்து மதராஸில் செட்டில் ஆனவர் வணிகர் ஜாவோ பெரீரா.இவர் போர்த்துகீஸ் தேசத்தவர்.இவரது தோட்ட வீடு இருந்த இடம் தான் இன்றைய சென்ட்ரலில் முன் பகுதி.அவர் காலத்துக்குப் பின் கேத்பார் அற்றுப் போன இவ்விடம் கோழிச்சண்டையின் ஆடுகளமாக இருந்துள்ளது. மதராஸ் துறைமுகத்தில் வரும் வணிகர்களும் உள்ளூர் வியாபாரிகளும் களியாட்டம் போடும் இடமாக இருந்த இவ்விடத்தை ஆங்கிலேயர் எடுத்துக் கொண்டு சென்ட்ரலின் முன் பகுதியை அழகுறக் கட்டினர்.அதற்கு முன் டிரினிட்டி தேவாலயம் இப்பகுதியில் 1831ல் எழுப்பப் பட்டது.
இன்று சென்ட்ரலில் பாரத தேசத்தின் முழுமையான ஜன சமூஹத்தையும் பார்க்க முடியும்.தேசத்தின் பல்வேறு இடங்களையும் இணைக்கும் நரம்பு மண்டலம் ஆகும். எத்தனை கோடி ஜனங்கள், தலைவர்கள் இதில் இறங்கி ஏறினர்? அப்பப்பா....அதிசயமான அற்புதமான சென்ட்ரலை இரவில் பார்ப்பதே அழகு.எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் தெவிட்டாத சில இடங்களில் இதுவும் ஒன்று.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2549
Southern Railway Office - தென்னக ரயில் வே அலுவலகக் கட்டிடம்
சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் வால் டாக்ஸ் சாலை ஒட்டி அமைகிறது மிக அழகியக் கட்டிடம். அதில் பழங்காலத்துப் புகைவண்டி என்ஜின்கள் 2 காட்சிக்கு இக்கால மக்களுக்கு உள்ளன.
சென்னை மற்றும் தென் பாரதத்தின் பல இடங்களுமான ரயில் போக்குவரத்தைப் இரண்டு தனியார் ரயில் நிறுவனங்கள் மேற்கொண்டன.அவை அனைத்தும் ராயபுரத்தில் இருந்து தான் செயல் பட்டன.ஆனால் பல சிக்கல்களுக்கு முடிவு காணும் வகையில் ஒரே நிறுவனம் ஆனது 1908ஆம் ஆண்டில் தான். அதுவே இன்றைய தென்னக ரயில்வே.
The great Indian railway - 1853 [England] மற்றும் Carnatic railway ஆகிய இரு நிறுவனங்களும் சுமார் 3000 மைல் தொலைவுக்கு ரயில் போக்குவரத்தைத் தென் தேசத்தில் அறிமுகம் செய்தன.
இரண்டும் ஒருங்கிணைந்து South Indian Railway ஆனது.1922ஆம் ஆண்டில் ராயபுரத்தில் இருந்து இன்று நாம் காணும் சதர்ன் ரயில்வே கட்டிடத்துக்குப் புதுமனை புகுவிழா செய்து நுழைந்தது, ராயபுரம் களை இழந்தது.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Holistic Intelligence
- Hits: 2530
தென் பாரதத்தின் முதல் ரயில் நிலையம் - ராயபுரம்
மதராஸில் மிக முக்கியமான பழைய பகுதிகளில் ஒன்று வடசென்னையில் உள்ள ராயபுரம்.
அதில் தான் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதை அமைக்கப் பட்டது.
தேசத்தின் முதல் ரயில் போக்குவரத்து மும்பையில் ஆரம்பம் ஆனது.
1845ல் மெட்ராஸ் ரயிவே கம்பெனி ஆரம்பம் ஆனது.ஆனால் 1853ல் தான் அது தன் பணியைத் தொடங்கியது.அதாவது ராயபுரம் - ஆற்காடு நவாபின் ஆற்காடு வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது.மேலும் திருவள்ளூர் வரை மற்றொரு பாதையும் உருவானது.
1856 ஜூலை முதல் நாள் தென்னகத்தின் முதல் ரயில் பயணம் ஆரம்பித்து இப்போது வரை ஓயாமல் நடைபெறுகிறது.
சுமார் 300 ஆங்கிலேயர்கள் மேளதாளம் பேண்ட் வாத்தியம் முழங்க ராணுவ மரியாதையுடன் ஆற்காடு சென்றனர்.
பல கிராமத்து வாசிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் முதல் ரயிலைப் பார்த்தனர்.
ரயிலை சிம்சன் கம்பெனி என்ற நிறுவனம் உருவாக்கியதாம்.
எனவே தென்னகத்தின் முதல் ரயில் நிலையம் சென்னை-ராயபுரம் தான்!
மிகப் பழமையான அழகான கட்டிடத்தில் இயங்கி வந்த ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு வரை ராயபுரத்தில் தான் இயங்கியது.