History
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 2132
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 2238
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 2127
Mamallapuram is variously called Neerper Mallai, Kadal Mallai, Mamallai, Mamallapuram, Mallapattinam, Mamalla Nagaram, Mavelipuram and Jananathapuram. Nowhere are there inscriptions referring to it as Mahabalipuram.
But today people mostly refer to it as Mahabalipuram.
My students asked me the reason for this.
Mahabali conducted a yagna to fulfil his greed to be the emperor of the entire world. Lord Vishnu as Vamana showed him his place and humbled him.
Vamana assumes the Trivikrama form, which is depicted beautifully in the Varaha cave.
Mahabali means – a Big Sacrifice (bali).
Only because of that he won the Lord’s grace and became the King of the Netherworld.
At a time when kings often indulged in wars seeking to expand lands, their wealth and women, Pallava kings rose above such material desires, became spiritual and gave their people peace and progress.
Instead of indulging in pleasures, they encouraged spirituality through divine arts such as music, dance, sculpture, temple building, painting etc.
Especially Narasimha Pallava I was guided by Appar, Gnana Sambandar, Adi Sankara and Alwars, involved himself keenly in the building of the Mallai temple.
Not only he, but his descendants too encouraged the art of sculpting and treated it like a spiritual offering.
These are a high sacrifice.
Sacrifice of pleasure.
That is why it is called ‘Mahabalipuram’.
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 1867
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 1825
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 2476
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 2099
7th century A.D
Thiru chengaatang kudi is a very fertile village near Mayavaram.
Paranjothy who was just 12 years old left the village with his mother's blessings towards Kanchipuram - the city of great wisdom.
He was fatherless and his mother wanted him to be a great scholar in Tamil and Shivism.
He was supposed to join under the great saint singer Appar's mut.
His father and ancestors were great brave elephant warriors under Chola Empire.
They made many to die and they self-died.
Paranjothy's mother wanted a transformation of peace and selftualism in the family.
But Paranjothy's previous birth actions [karmas] made him to save the Pallava prince from a wild elephant and became his close friend.
He learned war lessons and martial arts and appointed as army general under Pallava dynasty.
Pallavas faced a horrible war with Pulikesi 2 in Vathabi city of Gujarath. The war took place for 1 year.
Paranjothy saw a different looking God at the fort gate of Vathabi city and came to know that the God will remove all obstacles.
He also prayed to him that he will take him and install in a fresh temple in Tamil Nadu if he wins the war.
Pallavas defeated the northern empire and by that time tragedy and lessons gave by mother transformed Paranjothy's mind into peace, spiritual and he want to have a change.
He resigned his army general post and just took the idol of Vadhapi gate and left to his village where he erected a big shrine for Shiva along with this new looking God. He named it as ''Ganapateeshwaram''
This idol of Ganesa is the very first Ganesa in Tamil Nadu brought by Paranjothy in 7th century A.D.
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 1983
பாண்டிய நாட்டு மாமல்லபுரம் - கழுகுமலை
கி.பி 6 - 10 ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் மலைப்பாறைகளைக் குடைந்து கற்கோயில்கள் உருவாக்கினர்.
அவற்றையே குடை வரைக் கோயில் என்போம்.
வரை - மலை - மலைக் குடைந்து செய்த கோயில்.
அதே கால கட்டத்தில் பாண்டியர்களும் இக்கலையைக் கையாண்டனர்.பாண்டிய தேசம் முழுவதும் பல ஊர்களில் உள்ள சமணப் பள்ளிகள் இதற்குச் சான்று.
மதுரைத் திருப்பரம்குன்றம் குடை வரைக் கோயிலாகும்.
தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டிக்கு அருகில் உள்ளது கழுகுமலை.
இன்று இம்மலை புகழ் பெற்ற முருகன் கோயில்.அக்கோயில் கி.பி 14ஆம் நூற்றாண்டில் உருவானது.
இவ்வூரில் தான் மிகப் பெரிய அளவிலான ஆதிகால சுடுகாடு, முன்னோர் புதைகுழிகள், முதுமக்கள் தாழிகள் அகழ்வாய்வில் கண்டு எடுக்கப்பட்டன.
இவ்வூர் முருகனுக்குக் கழுகாச்சல மூர்த்தி என்று பெயர்.ஆறு கைகளுடன் மயில் மீது அமர்ந்து இவர் காட்சி தருகிறார்.
கோயிலின் ஒரு பகுதியாய் மிக ப்ரம்மாண்ட குன்று உள்ளது.அதில் தான் பாண்டியர் தம் கைவண்ணத்தைக் கல் ஓவியமாக்கி உள்ளனர்.
மாமல்லபுரம் சிற்பங்கள் உருவான அதே காலத்தில் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் நின்ற சீர் நெடுமாறன் [சம்பந்தரால் சைவ மதத்துக்கு மாறியவன்] இதை உருவாக்கி இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இம்மலை மிக மிக அருமையான சமணக் கோயில் தான்.பின்னர் தான் அதில் சிவனுக்குக் கோயில் செய்யப்படுவதைக் காண்கிறோம்.
நூற்றுக்கும் மேற்பட்ட சமண முனிவர்களின் சிலைகள், சமண தெய்வங்களின் சிலைகள் ஆகியன உள்ளன.அவ்விடம் மதுரைக்கு அடுத்து பாண்டிய நாட்டின் மிக முக்கியமான சமண மதத்தின் செயலகமாக இருந்துள்ளது.
பாண்டியன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறிய வேளை பல சமண குகைக்கோயில்கள் கைவிடப்பட்டன, மாற்றப்பட்டன.பல குடை வரைக் கோயில்கள் எடுக்கப்பட்டன.
வெட்டுவான் கோயில் - [அதாவது மலையை வெட்டிக் கோயில் செய்வான் உருவாக்கிய கோயில்] என்றே இன்றும் மக்கள் அழைப்பர்.
வெட்டுவான் கோயில் முழுமையடையவில்லை.ஆனால் மாமல்லபுரத்தை விட சிற்பங்கள் மிக நுணுக்கம் கொண்டவை.மாமல்லபுரத்தில் சிலைகள் கடற்காற்றினால் அரிக்கப்படுவதைக் காண்கிறோம்.
இக்கோயில் 7.5 அடி உயரம் உள்ள பாறையால் உருவானது.மூலஸ்தானம்,விமானம், தி
அலங்காரக் கொடுங்கைகள் பல உள்ளன.
கோயிலைச் சுற்றிப் பல வட்டெழுத்துத் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன.
இவ்வூரில் வாழ்ந்த வேளாளர், குயவர், தச்சர், நெசவா
ஏனாதி, எட்டி, காவிதி ஆகிய பாண்டிய கால விருதுகளின் பெயர்கள் அவற்றில் உள்ளன.
சிந்தாந்தர் மற்றும் குணசாகர பட்டர் ஆகிய இரு சமண குருமார்கள் இவ்விடத்தில் இருந்துள்ளனர்.
நூறு ஆண்டுகள் பழமைமிக்க பெரிய கத்தோலிக்க தேவாலயமும் இவ்வூரில் உள்ளது.
இவ்வூர் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் கொண்டது.
பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நல்ல உறவு இருந்த நிலையில் பல்லவ சிற்பிகள் இங்கு வந்து இப்பணியைச் செய்திருக்க வேண்டும்.ஆனால் நரசிம்ம வர்மன் காலத்தில் மிகப் பெரிய போர் வந்த போது சில காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாமல் இருந்து விட்டன.எஞ்சிய இக்கலைக்கோயிலை,சமணப்பள்ளியைக் காப்பது நம் கடமை.
இது நம் சொத்தல்லவா?
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 1974
மாமண்டூர் குடைவரைக் கோயில்கள் [பல்லவர்]
கி.பி 6ஆம் நூற்றாண்டு....
பல்லவ மன்னர்கள் மலைகள், பெரும் கற்பாறைகள் ஆகியவற்றைக் குடைந்து குடைவரை குகைக் கோயில்களை உருவாக்க மிக்க ஆர்வம் காட்டிய காலம்.
பக்தி இயக்கம் மூலம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் கோயில் கட்டிடக் கலைக்கு மேலும் உற்சாகம் கொடுத்த காலம்.
சமணர்கள் குகைகளில் பள்ளிகள் அமைத்து வாழ்ந்த அதே காலத்தில் சைவ வைணவக் கோயில்கள் குகைக் கோயில்களாக மாறிய காலம்.
பல்லவ தேசம் முழுவதும் உள்ள ப்ரம்மாண்டமான மலைகள், குகைகள்,பாறைகள் மகேந்திர பல்லவன் [1] தன் கருத்தைக் கவர்ந்தன.
”விசித்ர சித்தன்” என்றும் ”சித்ரகாரப் புலி” என்றும் தன் கலை ஆர்வத்திற்கும் கலைப் பணிக்கும் மக்கள் மூலம் பாராட்டப் பெற்றவன் அல்லவா?
அவன் படைப்புகள் பல தோன்றின.
அவற்றுள் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் குடைவரைக் கோயில்கள்.
போவோமா?
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி போக்ம் சாலையில் தூசி என்ற ஊருக்கு அருகில் மாமண்டூர் உள்ளது.காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைகிறது.
இந்திய தேசத்தில் தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்படும் பெருமை உடையது மாமண்டூர் குகைக் கோயில்.
மாமல்லபுரம், பல்லாவரம், சீயமங்
மாமண்டூரில் அம்மன்னன் காலத்துக் கல்வெட்டு ப்ராமி எழுத்து வடிவில் பொறிந்துள்ளது.
பாலாற்றங்கரையில் தான் மாமண்டூர் குகைக் கோயில்கள் உள்ளன.
முதல் குகைக் கோயிலில் நரசிம்ம பெருமாள் உள்ளார்.
இரண்டாம் குகைக் கோயில் சிவனுக்கு உரியது.
இதை ”சைவ ருத்ரவலீச்சரம்” என்று மகேந்திரன் குறிக்கிறான்.
அழகிய த்வார பாலகர்கள் காவல் கொள்ள மகேந்திரன் காலத்து சிவலிங்கம் இன்றும் உள்ளது.
பிரம்மாவுக்கும் தனி சன்னிதியை ஏற்படுத்தினான்.
சைவத்தையும் வைணவத்தையும் இரு முக்கிய சமயங்களாகப் பல்லவர்கள் பின்பற்றினர்.
இதே காலத்தில் தான் பாண்டியர்களும் ஒத்தக்கடை, திருப்பரம்குன்றம்,க
கோயிலின் ஊரின் நீர்த் தேவைக்கு ”சித்ரமேக தடாகம்” என்ற குளத்தை மகேந்திர பல்லவன் ஏற்படுத்தியுள்ளான்.அது குகைகளுக்குப் பின் உள்ளது.
குகைகளில் அவன் காலத்துத் தமிழ் கல்வெட்டுகளும் ஓவியங்களும் உள.அவற்றைக் காப்பது நம் கடமை.
”இசைக் கலையில் ஓவியக் கலையில் கோயில் கட்டிடக் கலையில் இதுவரை யாருமே கண்டு அறியாத புதுமைகளைக் காண நான் முயல்கிறேன்” - என்று மகேந்திர வர்ம பல்லவன் எழுதியுள்ளான்.இக்கால இளைஞர்கள் இதைக் கருத்தில் கொள்க.அரசர்கள் தேசத்தில் பல நன்மைகளைச் செய்தனர்.
பிற்காலத்தில் பராந்தக சோழன் 1 இக்கோயிலைப் பராமரித்துள்ளான்.அவன் காலத்தில் குகைகள் முழுதும் வண்ணம் பூசப்பட்டது.
ஐந்து குகைக் குடைவரைக் கோயில்கள் மொத்தம் உள.
ஒரு கோயில் பாறையின் மீது அமைகிறது.
கல் க்வாரிகள் மூலம் மண் வளத்தை சீர் கெடுக்கும் இக்கால மக்கள் உணர்க - அரசன் நினைத்து இருந்தால் அனைத்து பாறைகளையும் உடைத்து விற்று இருக்கலாம், மாளிகைகள் கட்டி வைத்து இருக்கலாம்.
குடைவரைக் கோயில் என்பது புதிய கலை வடிவம் மட்டும் அல்ல அது கற்களை சுரண்டுவதைத் தடுக்கும் பணி!
இருக்கும் வளத்தையாவது காப்போம்.
மாமண்டூர் சென்று வருக!
- Details
- Parent Category: Uni5 Holistic Intelligence
- Category: History
- Hits: 1952
திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் 1
[கி.பி 947 - கி.பி 1014]
பிறப்பு: ஐப்பசி மாதம் சதயம் நாள்
பெரிய கோயில் எழுப்பப்பட்ட காலம் - கி.பி 1003 - கி.பி 1010 [ஏழு ஆண்டுகள்]
தந்தை - பராந்தக சுந்தர சோழன்
தாய் - வானவன் மாதேவி
இயற்பெயர் - அருள்மொழி வர்மன்
அண்ணன் - ஆதித்ய கரிகாலன்
அக்காள் - குந்தவை
ஆட்சிக்கு வந்த ஆண்டு - கி.பி 985
தன் முப்பத்தி எட்டாம் வயதில் ஆட்சிக்கு வந்தான்.
ஐம்பத்தியேழு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
தன் அண்ணன் ஆதித்ய கரிகாலன் ஆளும் போது போரில் கொல்லப்பட,அதைத் தொடர்ந்து உத்தம சோழன் வர, அவன் இறந்தபின் ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறான்.
தன்னை, ”ராஜராஜ சிவபாத சேகரன்” என்று அழைத்துக் கொள்வதில் ஈடற்ற மகிழ்ச்சி உண்டு.சிவனின் பாதத்தையே தான் அடிமையாகத் தலையில் சதா அணிவதாகக் கல்வெட்டுகளில் பதிவாக்கியுள்ளான்.
தன் அக்காள் குந்தவையைத் தன் அரச ஆலோசகியாக்கிப் பெண்மையின் மேன்மையைக் காட்டினான்.
லோகமாதேவி, புவனமாதேவி என இரு அரசிகளும் மற்றும் இரு மனைவியரும் அவனுக்கு இருந்தனர்.
மகன் - ராஜேந்திரன் 1
மகள்கள் - குந்தவை [அக்காள் மீதுள்ள அன்பால் தன் மகளுக்கு அவர் பெயர் சூட்டினான்], மாதேவ அடிகள், கங்கமாதேவி.
உலகம் போற்றும் தஞ்சைப் பெரிய கோயில் எடுத்தான் இந்த ராஜராஜன்.
அது சரி, அவன் தமிழுக்குச் செய்த மா....பெரும் பணி தெரியுமா?
அது தான் காலத்தால் மறைந்த மறைக்கப்பட்ட தமிழ் தெய்வீகத் திருப்பதிகங்களை ”தேவாரம்” என உலகிற்கு அளித்த ஒப்பற்ற பணி.
ராஜராஜன் இல்லையேல் இன்று தமிழுக்கு தேவாரம் இல்லை...”பக்தியின் வெளிப்பாட்டு மொழி” என்ற மேன்மையும் இல்லை.
ஆனால் தேவாரமாக அளித்த மன்னனுக்கு உரிய மரியாதை இல்லை....சைவ மக்களும் அவனை மறந்தனரோ?
கி.பி 6 - 9 ஆம் நூற்றாண்டுகளில் சம்பந்தர், அப்பர்,, சுந்தரரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் சிதம்பரத்தில் கோயிலில் ஓர் அறைக்குள் வைக்கப்பட்டு, பின் கேட்பார் இன்றி ஓலைகள் கறையானால் வீணான சமயத்தில் நம்பி ஆண்டார் நம்பி என்ற அன்பரின் மூலம் ராஜராஜ சோழன் வெளிக்கொண்டு வந்தான்.
அவற்றுள் பல ஓலைகள் வீணாகிப் பொடிந்து போயின.எஞ்சியவற்றை அவன் முறைப்படுத்தினான்.சம்பந்தருக்
அவற்றைப் பாடவும், அதற்கு ஏற்ப நாட்டியத்தையும் அமைத்தான்.
தஞ்சைப் பெரியகோயிலின் குடமுழுக்கு அன்று தேவார இசையை மீட்டுருவாக்கம் செய்தான்,மக்கள் வியந்தனர், விழிப்புணர்வு கொண்டனர்,பதிகங்கள் பல ப்ரதிகள் எடுக்கப்பட்டு பல ஊர்களுக்கு, குறிப்பாய், பாடல் பெற்ற ஊர்களுக்கு அனுப்பப் பட்டுக் கோயிலில் பயன்பாட்டுக்கு வர, அதைப் பாடும் இசைக் கலைஞர்களுக்கு ”ஓதுவார்” பட்டமும் பணியும், அதற்கு ஆடும் ஆண் பெண் தேவர் அடியார்களுக்கு உயர் பணியும் கோயில்களில் ராஜராஜன் ஏற்படுத்தினான்.
அதனால் அவனுக்குத் ”திருமுறை கண்ட சோழன்” என்ற ஒப்பற்ற பட்டத்தைச் சமூஹம் அக்காலத்தே வழங்கியது.
இன்று பார் புகழும் தமிழ்ப் பதிகங்கள் அவன் இல்லையேல் இல்லை.அவனது தமிழ்த் தொண்டை அடுத்த தலைமுறை அறியட்டும்.
ஆழ்வார்கள் பாடிய தமிழ் பக்திப் பாடல்கள் ஸ்ரீநாதமுனிகளால் தொகுக்கப்பட்டு பரப்பப்பட்ட நன்றிக்காக வைஷ்ணவக் கோயில்களில் அவருக்குத் தனி சன்னிதி உண்டு, அவரது பிறந்த நாளையும் வைஷ்ணவக் கோயில்கள் கொண்டாடுவதைக் காண்க.அது போல் சைவக் கோயில்கள் ராஜராஜனுக்கு சன்னிதியோ உற்சவ மூர்த்தியோ அமைத்து அவனது ஐப்பசி சதயம் நாளைக் கொண்டாடலாமே?
யோசியுங்கள்!