We are all cells in one Cosmic Body

  • Skip to content
  • Jump to main navigation and login

Nav view search

Navigation

  • Home
  • Donate
  • Store
  • Media
  • News
  • Testimonials
  • Contact
  • Disclaimer
  • Discussion
  • Blog

Search

Logo
  1. You are here:  
  2. Home
  3. Awareness

Important Sections

  • Selftual
  • Health & Cure
  • Uni5 Clinic
  • Pregnancy Care
  • Uni5 Pattern Connecting Education
  • Support Yourself

Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different. Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ. Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness. To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water. Five templates that will unify all our thoughts. Check if our view is based on the knowledge we got from our 1. physical senses 2. Our personal strong likes and dislikes' 3. A logical pattern 4. connection to our Self 5. That is universal to all at times. We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

Uni5 Self Awareness

Siddarth transforming into Buddha - Buddha Poornima day event

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3764

Siddartha becoming Buddha

 

538 B.C, Vaikasi month 6th day

The day was Vaikasi Poornima - Buddha - Guru Poornima

After Siddartha taking a bowl of porridge from Sujatha he took abode under the five branched Bodhi tree - peepal tree.

The five braches depicts the 5 Sankhya thathva - Body mind intellect awareness and consciousness

A grass cutter named Swasthika came across him and offered a hand full of dharpai grass which sustain the sun light and used for all rituals.

Siddartha sat upon that grass spread and started entering into deep stage of self-analysis and meditation by which evening came.

The full moon raised at east as the symbol of awareness and Siddartha has his final quiries as strong conflicts or inner quarrels between his self-ego and self-truth.

This self-ego is depicted as ''maara'' - energy of material pleasure.

Buddha later narrates how he faced and struggled very hard to overcome the maara on this day as follows...

The oldest historical documentation of Buddha's life is ''Lalitha visthaarnam''. The 18th chapter by Tham anandha Kousambi describes Buddha's narration about his tough time with maara.

Maara says,

''Dear one, you are so weak, you are dark and death is approaching you''

''I am sure that death will happen to you. Only one percent chance is there for you to escape and survives. So escape from death. That is always good for doing many nice things in life.''

''Through bhramachariyam and Vedic rituals with fire alone you gain many things. But you like moksham and that is why? Moksham is very difficult and beyond the dreams.''

Siddartha answers to Maara as follows,

''Dear Maara! You are the friend to people who deserve materialistic pleasures. I am not distracted by you, please move away. I need not gain any good deeds to attain any pleasures.

I am serious, sincere and well-focused to attain moksham - nirvanam. You need not worry and discuss about my life span.

A wind can make river to get dry soon but no one can distract a person who is very strong in his aim to attain great things. You cannot dry my blood and even though my whole blood drains, body dries and become so weak my abilasha within mind will never change. I attain jeeva samadhi and then again focus in nirvana.

So you cannot distract my attention with desires.

Desires

A mind without contentment

Hunger and thirsty

Strong desires

Laziness

Fear

Suspicion

Ego

Always aim to gain something - rewards - expectation

Illegal way of attaining fame

Self-boasting are the most horrible forces of yours to defeat a man.

I am not worried or scared about them

Do not waste your energy like a bird poking a red stone as a flesh piece.''

Then Siddartha defeated Maara and entered into next state of awareness. By this time he saw his mind id being distracted with beautiful women - symbol of pleasures and desires.

Then his thoughts about his nation and relatives distracted him and he took over came that.

Finally his mind was attacked with the horrible thoughts about wife, son, parents and he overcame them.

In that single night Siddartha went into 4 state of awareness.

yaamam 1 - Maara war - defeating all materialistic pleasures and desires

Yaaman 2 - actions and reasons for birth-death cycle

Yaamam 3 - Gananm

Yaamam 4 - freedom from thoughts and worries

Now siddartha became Buddha by sun rise.

We celebrated Guru poornima because any true tutor makes us to transform like Buddha.

With regards.,

Dr.M.Madeswaran

21.5.2016, Madras - Buddha Poornima day

Sankhya philosophy - through Tamil epic Manimekalai

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 6592

Sankhya thathvam - Manimekalai epic

 

நான் யார், நான் இத்தன்மை கொண்டவன் என்று அறிவதற்கு மிகவும் அரியது, ஆனால் முழு முயற்சியால் அது கைகூடும்.

நானே முக்குணமுமாய் இருக்கிறேன்!

மனதில் எழும் எண்ணங்களுக்கு அதிகம் இடம் கொடாதே!

எவ்வகைப் பொருளும் தோன்றுவதற்கு இடம் ஆவதே மூலப்பொருள்!

மனதில் எழும் எண்ணங்கள் மூலம் இம்மூலம் மறைக்கப்படுகிறது.

சாங்கிய ப்ரவசன பாடியம் உடையார் - கி.பி 1

__________________________________________________

சித்தமே மூலம்

அதன்கண் மான் என்ற புத்தி வெளிப்படும்

அதன்கண் ஆகாயம் வெளிப்படும்

ஆகாயத்தில் இருந்து வாயு வெளிப்படும்

வாயுவில் இருந்து தீ வெளிப்படும்

தீயில் இருந்து நீர் வெளிப்படும்

நீரில் இருந்து நிலம் வெளிப்படும்

இவற்றின் சேர்க்கையால் மனம் வெளிப்படும்

மனதின்கண் அகங்காரம் - விகாரம் தோன்றும்

வானம் - செவி - ஒலி

வாயு - உடல் - ஸ்பர்சம்

தீ - விழிகள் - ஒளி

நீர் - நாக்கு - சுவைகள்

நிலம் - நாசி - வாசம்

இவற்றின் சேர்க்கையால் உலகின் அனைத்துப் பொருட்களும் தோன்றும்

அதன் பின் தான் தோன்றியே வழியே ஒடுங்கியும் விடும்

அதன்பின் எல்லாம் ஒன்றாகி ஒரே மூலமாய் விளங்கும்

சைனாவின் சாங்கிய ஞானி பரமார்த்த என்பவரின் நூலையே மணிமேகலைக் காலத்தில் அதிகம் சாங்கியர்கள் பின்பற்றி உளர்.

________________________________________________________

புருஷ தத்துவம்

எளிதில் அறிய முடியும்

அனைத்துப் பொருள்களில் தோற்றத்தின் மூலம் ஆகும்

அது எக்குணமும் அற்றது

அதுவே அனைத்துத் தோற்றத்தின் காரணமும் ஆகும்

அதுவே எங்கும் வ்யாபித்து நிலைத்து இருப்பது

அதுவே ஏக தத்துவமாய் நிலை பெற்றது

அதுவே நித்தியமானது

அதுவே உள் உணர்வின் வடிவாய் இருப்பது

அதுவே புருஷ தத்துவம்!

____ விஞ்ஞான பிக்ஷுவின் சாங்கிய யோக நூல்

___________________________________________________________

புருஷ தத்துவத்தால் அறியப்படும் பொருள்கள் மொத்தம் 25

பஞ்சபூதங்கள், ஐந்து புலன்கள், அவற்றின் நுகர்ச்சிகள், வாக்கு - கைகள் - கால்கள் - பாயுரு - உபத்தம் ஆகிய ஐந்தும், மனம் - மான் - அகங்காரம் - மூலப்பகுதி ஆகிய நான்கும் - உயிர் ஒன்றும் மொத்தம் 25

சாங்கியத்தைக் கபிலர் அறிந்து இலக்கணம் வகுத்தார் என்பதையே மணிமேகலை கூறும், அதை ஆதி சங்கரர் சீர் செய்தார் என்றும் வரலாறு பதிவு செய்வதைக் காண்கிறோம்.

கபிலர் - சாங்கிய ப்ரவசன சூத்ரம் ,ஈஸ்வர க்ருஷ்ணர் - சாங்கிய காரிகை - பிற்காலத்தில் பலரும் ஏற்றுக் கொண்ட சாங்கிய நூல்.

Siddarth [Buddha] taking sanyasam

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3496

Siddarth [Buddha] taking sanyasam

Gorakpur

Anoma river bank....slowly it was the time to start the day's fresh sawn.

Siddarth from Kabilavasthu came to that place with his chariot rider - best friend Santhagan.[Sanna]

Siddarth Gowtham has started his final voyage towards the search of medication for all human sufferings at the age of 29.

He stopped at the river bank and looked back at the direction of his home town and asked his friend to go back soon.

Sanna, ''Dear friend - prince how can I face your parents, wife and son? This world will abuse my action for taking and dropping you here. It is better to stay along with you for your service.''

Siddarth smiled and says,

''Friend! I am proud to have a friend like you who is selfless. This world will praise you one day for taking this task of making me free from all bonds. We all have to depart one day and that separation is very sad. I agree. But now it is your duty to convey my sanyasam to all our royal people and public. If I am in success with my task we will meet one day in this life. I have few things to be handed over to my father. Please take them.''

Siddarth removed his precious crown, royal sword and waist belt with gems and pearls.

He also gave few gifts - his rings and bracelets to Sanna and cut his long curly hair as the symbol of transformation. Hair is the symbol of ego.

He then saw a hunter wearing saffron dress and he asked for that. He also gave away his precious garments to that hunter and said, ‘‘Please do not harm and animals and birds for fun'' - This is the very first bodhanaa Siddarth gave.

On his way to Kabilavasthu sanna's horse [Kandagan] also died.

Like Ayodhya without SriRama Kabilavasthu suffered without its lovable prince!

Buddha's practical approach to life to transform ourself

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 4218

புத்தரின் புதிய மத்திய மார்க்கம்

 

வெறும் சுவையான உணவை உண்டு களித்து உடலை வளர்ப்பதால் பயன் இல்லை.

அதே வேளை கோரப் பட்டினி, உடலை வருத்திக் கொள்ளும் த்யானம், யோகம், கடினமான உடல் உபாதைப் பயிற்சிகளின் மூலமும் மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வர இயலாது.

மனதை அதன் ஓட்டத்தில் விட்டு அதை மெதுவாக வழி நடத்துக.

தரமான நல்ல தேவையான புலன் சுகத்தில் தவறே இல்லை!

ஆனால் முறைகேடான புலனிச்சை சுகானுபவங்கள் மனிதனை வேருடன் வீழ்த்தும் என்பதில் ஐயமே வேண்டாம்!

வெறும் புலன்களின் இச்சைகளைப் பூர்த்தி செய்யவல்ல ப்ரார்த்தனைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுக.

மனதுள் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்க.

உங்களை அனைத்துப் பொருட்களுடனும் தொடர்பு படுத்தி உள்நோக்கிப் பார்த்து த்யானம் செய்க.

மதச் சின்னங்களை அணிதல், வெற்று பூஜைகள், விழிப்புணர்வு இல்லாத பாராயணம், வெறுமனே சைவ உணவை உண்ணுதல், நிர்வாணமாகத் திரிதல், சுடுகாட்டில் வாழ்தல், கோரமான பூஜைகள், குருட்டுத் தனமான நம்பிக்கைகள் கொண்ட வெற்றுச் சடங்குகள் மூலம் முக்தி ஏற்பட வாய்ப்பே இல்லை!

கோபம்

போதைப் பழக்கம்

பிடிவாதம்

ஏமாற்றுதல்

பொறாமை

தற்புகழ்ச்சி

புறங்கூறுதல்

பிறரை அலட்சியமாகக் கருதி மதியாமை

தீய எண்ணங்கள்  ஆகிய எட்டும் உன்னை மிக மிக அசுத்தம் ஆக்கும் மாசுகள். இடைவிடாது வீட்டை சுத்தம் செய்வது போல் இவ்வெண்ணங்களை மனதை விட்டு அகற்றிக் கொண்டே இருங்கள்!

விளக்கை நீரால் ஏற்ற இயலாது.ஈரமான விறகில் தீ எரியாது. அதுபோல மேற்கூறிய தேவையற்ற விஷயங்களைக் களையாமல் முக்தியைப் பற்றி மனிதன் எண்ணத் தேவையில்லை!

இவையே புதிய மத்திய மார்க்கம்!

Amudha surabi - unconditional, everlasting compassion and service - Manimekalai Tamil epic message on Buddha Poornima 2016

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 8015

Amudha surabi - unconditional, everlasting compassion and service

 

மாரனை வெல்லும் வீர நின் அடி

தீ நெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி

பிறர்க்கு அறம் அருளும் பெரியோய் நின் அடி

துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி

எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி

கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி

தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி

வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி

நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி

உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி

வணங்கல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது

போதி நீழல் பொருந்தித் தோன்றும்

நாதன் பாதம் நவை கெட ஏத்தி

குடிப்பிறப்பு அழிக்கும்

விழுப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்

நாண் அணி களையும்

மாண் எழில் சிதைக்கும்

பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி

அது தீர்த்தோர்

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது!!!

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!!!

These are the lines from the great Tamil epic Manimekalai.

She praises the truth after getting the amudha surabi.

Manimekalai was the only daughter born to Kovalan and his beloved love Madhavi in Poompuhar.

Kovalan was killed by Pandiya in Madurai. His wife Kannagi also took samadhi after his assassination.

When Madavi heard this tragedy she could not bear the sorrow and took spiritual shelter under a Buddist monk Aravana adikal in Poompuhar. He made her to overcome the sorrow with the facts of impermanence of life through Buddha's life and teachings. Research says that Madhavi must have already been spiritually initiated in early years towards Buddism.

She also donated all her property to poor people in presence of Aravana adikal and became a nun to shed her bad karma by service. She also made her damsel daughter 18 year old Manimekalai to become a nun.

Poet Seethalai saathanar says that when people in Poompuhar heard that Madhavi made Manimekalai as a Buddist nun they suffered like losing a precious gem in midst of dark ocean.

Manimekalai started her spiritual journey and she was already been exposed to reality of tragic life through her mother's life pattern with Kovalan.

She went to Manipallavam Island - Rameshwaram and met many Buddist monks. On Vaikasi Poornima - Buddha Poonima day she was given the initiation with service through food. Symbolically she was 

given a bowl called ''Amudha surabhi''. This symbolizes the everlasting compassion to all who suffer. Our mind is the real amudha surabi. It must have the attitude to serve others with selfless nature.

With that bowl Manimekalai came to Poompuhar, started feeding orphans, poor, handicap people and taught human values to prisoners and directed them to the path of ahimsa and darma.

 Manimekalai with her mother was directed to go to Vanji - modern Kodungaloor where she prayed to Kannagi and Kovalan in their tomb at Devi shrine. She also met Kovalan's Kannagi's fathers who were monks in Sankhya vihar.

She took many spiritual lessons and she was given a great property share by the fathers. With that she was directed to scholar rich Kanchipuram for higher studies and social work. She started the ''amudha surabi ara kattalai'' - organization through which she served many.

With the devotion to TRUTH through a tutor when we serve selflessly we can shed the bad karma and free from all unwanted bondages. Madhavi and Manimekalai were the real samples for this concept of cleansing a bad karma through selfless service.

Today is Buddha poornima the day Manimekalai got akshaya pathram - amudha surabi.

This is our mind with real selfless, unconditional compassion.

Feeding in sense has many meaning in Uni5 system. It can be food - body level, emotional support - mind level, intelligence - intellect level and making one aware about life in awareness level. Any one level service is required on this Earth to mankind. Please do it!

With regards.,

DR.M.Madeswaran

21.5.2016, Buddha Poornima day.

Did Buddha protested really against religious rituals? - an event from Buddha's life

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3279

புத்தர் வேத நெறிகளையும் சடங்குகளையும் எதிர்த்தாரா?

மகத நாட்டில் பாண்டவ மலை என்ற அழகிய மலை ப்ரதேசம் உள்ளது.

அதில் பல சான்றோர்கள் ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக வழிகாட்டி வருவதை சித்தார்த்தன் [புத்தர்] உணர்ந்தான்.

அவ்விடம் நோக்கிச் சென்றான், மன்னன் பிம்பிசாரன் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றார்.

ஆனால் மிக இளைய வயதில் உணர்ச்சிவசப்பட்டுத் துறவத்தை சித்தார்த்தன் ஏற்றுள்ளான் என்று தவறாக எண்ணி அவருக்குப் பல அறிவுரைகள் கூறினான்.

ஏன் தன் தேசத்தில் இளவரசனாகக் கூட வாழுமாறு வேண்டினான்.

ஆனால் சித்தார்த்தன் இவற்றை மறுத்தான்.

அக்கட்டத்தில் ஒரு நாள் தேசத்தில் நலனுக்காக மிக உயர்ந்த வேள்வி ஒன்று ஏற்பாடு ஆகி இருந்தது.அதை வழிநடத்த கூடதந்தன் என்ற வேத விற்பன்னர் இருந்தார்.

வேள்வியில் பலியிட ஆயிரக்கணக்கில் ஆடுகள் இழுத்துச் செல்லப் பட்டன.

இதைப் பார்த்த சித்தார்த்தன் ஒரு கால் ஊனமான ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வேள்விச் சாலைக்குள் இடையர்களுடன் சென்றான்.

உயிர்ப்பலி தருவதைக் குறித்த தவறான கருத்தை சாங்கிய முறையில் எடுத்து விளக்கினான்.

ஆனால் கண்மூடித் தனமான மறையோர்கள் மேலோட்டமான வேத வரிகளை மனதில் கொண்டு அதை சித்தார்த்தன் எதிர்ப்பதாகச் சாடினர்.

வேள்வியில் ஒரு தெய்வம் திருப்தி அடைந்து வரம் தர ஒரு விலங்கை பலியிட வேண்டும் என்பது, நம்முள் இருக்கும் விலங்கினத் தன்மைகளையே அன்றி உண்மையான அப்பாவி விலங்கை அல்ல என்று ஆழ்நிலைக் கருத்தை எடுத்து விளக்கியும் மறையவர்கள் கேட்காத போது,

”வேத வேள்வியில் உயர்ந்த விலங்கை பலியிட வேண்டும் எனில், உயிர்களுள் மிக உயர்ந்த பரிணாமம் கொண்ட விலங்கு மனிதனே ஆவான்.அவனையே பலியிடுக, அப்போது தெய்வம் மிக்க பலனைத் தேடி அருளும், அதிலும் மன்னனின் அப்பாவை பலியிடுக, அரச போகம் வரும், என்னையே பலியிடுக, உயர் ஞானம் வரும்” என்று கூறி பலி பீடத்தில் தன் தலையை வைத்துக் கொண்டான் சித்தார்த்தன்.

”அந்தணர்களே! ஆட்டின் பாலைக் குடிக்கிறீர்கள், கம்பளி முடியால் சால்வை நெய்கிறீர்கள், சரி அவ்வாட்டையே பலி தருகிறீர்கள்....நன்று அதுபோல் நம்மைப் பெற்ற தாய், தந்தை, ஆசிரியர் என்று உதவியவர்களையும் உயிர்ப்பலி அல்லவா செய்ய வேண்டும் நீங்கள்?” - சித்தார்த்தன்

சாங்கிய நெறியில் பலியிடுவதன் உட்பொருளை விழிப்புணர்வு நிலையில் உணர்ந்த பிம்பிசாரன் உடனே அதை ஏற்றுக் கொண்டு, அன்று முதல் தன் மகத தேசத்தில் வேள்விகளில் உயிர்ப்பலி இடுவதைத் தவிர்க்க அரச ஆணை இட்டான்.

எனவே அன்பர்களே எந்த ஒரு செயலைச் செய்யினும் சற்று ஞானத்துடன் யோசித்து விழிப்புணர்வால் செய்க! வினைக்கு ஆளாக மாட்டீர்கள்!

Aaputhran – a man who stopped serving society where laziness existed…Tamil epic Manimekalai

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3722

Aaputhran – a man who stopped serving society where laziness existed…

 

Manimekalai reached Manipallavam Island. This is modern Rameshwaram.

There is saw the oldest Buddha peeta at the bank of a pool called Gomuki.

On Vaikasi Poornima day she was blessed with a bowl called ''Amudha surabi''.

This is the symbol of everlasting unconditional compassion with service to all beings and serving food.

The bowl has been brought here from Nagaland by a great selfless monk called Aaputhra [son of Cow]

Let us listen to history of Aaputhra and Amudha surabi.

There was a bhramin couple in Varanasi.

The wife did many illegal sins against her husband because of liking to materialistic benefits.

She then realized her mistakes and tried to correct herself.

She then took her husband's permission and left to pilgrimage with a hermit group.

At that time she was pregnant also.

While reaching Tamil Nadu, she gave birth to a son and left him alone and that baby was given milk by a cow herd.

The boy was named as ''Aa puthran'' as the cow went and stood near him after listening to the baby's cry.

This boy was then handed over to a Bhramin lived in vayangodu town. The boy was well cared and before he was given yagnobaveetham he was once taken to a yagna where he saw a poor old cow being tied for slaying. That night this boy allowed the cow to escape and he too ran along with the cow.

But he was caught hold by the local people and local Bhramins punished him. Aaputhra left that place to Pandiya's Madurai.

From child hood he was a great devotee of Devi and in Madurai he worshiped Meenakshi as goddess Chintha Devi - energy of wisdom.

With Devi's blessings he got the amudha surabi bowl and started feeding handicap people, poor, orphans and served.

But slowly laziness prevailed among the people and he then left to Mani pallavam where he dropped the bowl into the pool and attained samadhi.

Amudha Surabi is the symbol of our mind with real compassion to serve.

Over flowing food is the food of wisdom.

Aaputhra conveys that service cannot be given to a society where selfishness and laziness exists.

A real Vedic ritual - Incident from Buddha's life

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3458

A real Vedic yagna – Buddha

 

Buddha says to his people about this history....

There was a king named Mahavijithan. He ruled Kosala kingdom.

Suddenly the king wanted to perform many Vedic rituals to get fame and praise. He asked his Guru to take over the tasks.

His Guru said,

''King, good! it is very important to perform Vedic rituals to increase the natural wealth of a nation and self-energy. But now there is famine in our nation. I suggest you a different type of yagna as suggested in real Vedas.''

The king also accepted.

Guru, ''The word yagna means good deeds. Please give away the grains and seeds to farmers, gold to good merchants, loan to small scale industries, job to every young man''

The king did and many wells were dug. Meanwhile Guru arranged very important Vedic rituals at temples.

After few years slowly people increased the wealth of the nation and after that everyone offered the necessary things for performing a yagna as per directed in Vedas.

The practical approach of spirituality is very important.

Srirangam and Ayodhya

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 5676

Sakthi Foundation

அணி அரங்கத்து அம்மானும் அயோத்தியர்க் கோனும்

”தன்னலம் இன்றி தர்மத்தையும் வாழ்க்கை நெறிகளையும் பின்பற்றித் தன் தேசத்தையும் மக்களையும் காக்கும் மன்னன் தெய்வமாக வணங்கப்படுகிறான்” - வள்ளுவம், புறநானூறு

 

”ராமா! என்று என்னிடம் யார் வந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிடேன், இதுவே இப்பிறவியில் எனது வ்ரதம்! விபீஷணனை ஏற்காவிடின், லக்ஷ்மணா! எனக்கு நீயோ சீதையோ யாரும் வேண்டியதே இல்லை” - தனுஷ்கோடி கடற்கரையில் அனைவர் முன்னும் ஸ்ரீராமன் கூறினான்.

 

அவனுக்கு அக்குணம் அவனது குல தெய்வத்தின் அருளால், அன்னையின் வளர்ப்பால் வந்தது.அதை உணர்த்தும் கரத்துடன் ”அபயக்கரம்” - அபய ஹஸ்தம் காட்டி அழகிய மணவாளன் சதா ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறான். அவனுக்கு அதனால் ”அபயப்ரதராஜன்” - அன்பர்களுக்கு அபயம் அளிப்பதில் ப்ரதானமானவன் என்று திருப்பெயர் உள்ளது.

 

க்ரேக்க மன்னர்கள், ஈஜிப்ட் ஃபரோக்களை மக்கள் பயத்தால் மதித்தனர், ஆனால் வணங்கவில்லை.நம் பாரத தேசத்தில் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த போதும் சமூஹ நலனுக்காகத் தன் வாழ்க்கையை த்யாகம் செய்த தெய்வீக அன்பும் சுயநலம் இன்மையும் கொண்ட மன்னர்களையும் ராணிகளையும் மக்கள் தெய்வத்தின் சாயலாகக் கொண்டாடுவதில் என்ன தவறு? இன்று ஊரைச் சுரண்டும் அரசியல் வாதிகளை இறைவனாக மதிக்கும் மூட சமூஹத்தில் ஒருகாலத்தில் தன் வாழ்வையே த்யாகம் செய்த மன்னர்களை தெய்வமாக மதிப்பதில் தவறேதும் உண்டோ?

25 ஆண்டுகளாக ஸ்ரீரங்க ஸ்தலத்துடன் உள்ள உறவைப் பேசியதில் என் ஆய்வும், முனைவர்ப் பட்டமும் பயன் பெற்றன.

ஸ்ரீரங்கத்தைப் பற்றிக் கதைக்க எமக்கு ஆயுள் உண்டா தெரியாது, அதனால் தான் எழுதிய கட்டுரைகளைத் தேடிக் கிடைக்காமல் மறுபதிவாக்கம் மேற்கொள்கிறேன்!

மிக முக்கியமாக, வால்மீகி ராமாயணம் பதிவாக்கும் பல வரலாற்றுக் குறிப்புகள், ஸ்ரீராமனின் - சீதையின் human behavior pattern படி ஸ்ரீரங்கம், வழிபாடு, விழா, அன்றாட நிகழ்வுகள், மக்கள் தம் வழக்கங்கங்கள் எமது ஆய்வேட்டின் ஒரு பகுதி.அதையே மீட்டுருவாக்கம் செய்கிறேன், உன் மூலம்.

மிக முக்கியமாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் ஸ்ரீராமன் - சீதை ராஜா ராணியின் வாழ்வைப் பதிவு செய்துள்ளது.அதன் பல கூறுகள் எப்படி ரகசியமாகப் பூஜைகளிலும் விழாக்களிலும் பெரிய கோயிலில் டாவின்ச்சியின் last supper ஓவியத்துள் பொதிந்த ரஹசியங்கள் கொண்டதையே உனக்குக் கூறுகிறேன்.

ரஹசியம் - என்றால் மதிப்பவருக்கு மட்டுமே பகிரக்கூடியவை என்ற அர்த்தம் உண்டு.அதே போல் உன் குழாமில் மதிப்பவருக்கு மட்டுமே இவற்றைப் பகிர்ந்தால் நல்லது.அதனால் தான் உன்னிடம் உன் இஷ்டத்தைக் கேட்டே இதை எழுதி வெளியிடுகிறேன்.

இங்கே பக்தி என்பது என்னைப் பொறுத்தமாட்டில் ”மரியாதை” என்பதே.மதுரை, அயோத்யா, த்வாரகா, வ்ருந்தாவனம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய ஸ்தல மக்களின் பக்தி என் ஆய்வின் பார்வையில் அவ்வூரை ஆளும் ஈசனை மன்னனின், ராணியின் அம்சமாகவே காணும் பாவமும், மரியாதையும் தான்.

SriRangam, Dwaraka, Mathura, Vrindawan, Pandaripur and Madurai are the places of king worship of ancient India and Madurai - Queen Worship by people.

ஸ்ரீரங்கநாயகித் தாயாரின் அருளால் இக்கட்டுரை பூர்த்தியாகி உன் கை சேரும் என நம்புகிறேன்.

Excellent photo gallery இப்பகுதியுடன் தயாராகி வருகிறது, காரணம் உனக்கு நேரமின்மை தான்.அதனால் எல்லாவற்றையும் உனக்கு ready made செய்தே தருகிறேன். மிக விசேஷமான புகைப்படங்கள் சேகரித்துள்ளேன், குறிப்பாக அழகிய மணவாளனின் தோற்றப் பொலிவு, தாயார் எவ்வித அலங்காரம் இன்றி இருக்கும் அதிகாலை சேவை, கம்பனின் படைப்பை அங்கீகாரம் செய்த நரசிம்மர் .....

மணவாளனின் அபய ஹஸ்தம், வக்ஷ ஸ்தல மஹாலக்ஷ்மி ஆகிய உனக்கு ப்ரசாதம் ஆக ஏற்பாடு ஆகிறது. அவை கைக்கு வந்தவுடன் இந்நூலுடன் உன்னைச் சந்திக்கிறேன்!

உன் மூதாதையர் செய்த புண்ணியம் நீ ஸ்ரீரங்க வைபவம் கேட்கிறாய்.நான் செய்த பாவங்கள் போக அதை உனக்குச் சொல்கிறேன். ஸ்ரீராம பாத தூளி பட்டு அகலிகை சுத்தமானது போல் ஸ்ரீராமனின் குல தனமான ஸ்ரீரங்கத்தை வைபவம் ஆக்க நான் தூய்மை ஆகிறேன்.உனக்கு நன்றி!

மிக்க சில ரஹசியங்களையும் கோயில் நடைமுறைகளையும் என் ஆய்வின் போது கண்டவற்றை, பெரியோர் காட்டி, சொல்லிக் கேட்டவற்றை என் ஞாபகம் விடாமல் பதிவாக்க ரங்கன் அருளட்டும்! சுமார் 20 ஆண்டுகளில் பெரிய கோயில் பல commercial நிகழ்வுகள் ஏற்படுவதால் அதிகம் செல்வதில்லை.போனாலும் தாயாரைப் பார்த்து attendance கொடுத்து விட்டு

”அவரிடம் அதான் உங்காத்துக்காரரிடம் சொல்லி விடு” என்று வந்து விடுவதுண்டு.

எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் எமக்குக் கேட்டபோதெல்லாம் பல நுண் விஷயங்களைக் காட்டி, கூறி, விளக்கிய பெரியகோயில் அன்பர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் நன்றி!

 

 

கம்பனைப் பற்றிச் சொல்லாத வரலாறு

தேரழுந்தூர்க் கம்பன் மிக ஸ்ரமப்பட்டு ராமாகாதையை எழுதினான்.உண்மையின் ஒட்டக்கூத்தரால் அதை ஏற்க முடியவில்லை.குலோத்துங்கனின் தோழமையால் அவர் சதா கம்பனை எதிர்த்தார்.

கம்பனின் காலத்தில் தான் ஸ்ரீமத்நாத முனி ஆழ்வார்களின் பாடல்களைச் சேகரித்தார்.இருவரும் நண்பர்கள்.மேலும் சடையப்ப வள்ளலும் பெரிய கோயில் மீது மரியாதையும் கொண்டு சில கொடைகள் தந்துள்ளார்.

ஒட்டக்கூத்தரும் குலோத்துங்கனும் சில ஸ்ரீவைஷ்ணவர்களின் உதவியுடன் பெரிய கோயிலில் ராமகாதை அரங்கேற்றம் ஆவதைத் தடுக்க முற்பட்டனர்.

அதிகமாக சடையப்ப வள்ளலைப் பற்றிய நரஸ்துதி இருப்பதைச் சுட்டிக் காட்டினர்.நூறு பாடல்களுக்கு பதில் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை அவரைப் புகழ வேண்டும் என்றனர்.கம்பன் மாற்றி அமைத்தான்.

தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேரிடமும் அனுமதி வேண்டும் என்று குலோத்துங்கன் கூறக் கம்பர் மறுத்து விட்டார்.

”நாராயணா” என்ற மந்த்ர சப்தம் இல்லை என்று கூறி அரங்கேற்றத்தைத் தடுத்தனர்.ஒரே இரவில் கம்பனும் ஆரண்யத்தில் ஸ்ரீராமனை ப்ரஹலாதன் வந்து தரிசனம் செய்து அவனையே நரசிம்ஹராகப் போற்றும் போது ”ஓம் நமோ நாராயணாய!” என்று வணங்குவதாகக் கம்பன் சேர்த்தான்.ஆனாலும் அதை ஸ்ரீவைஷ்ணவர்கள் மறுக்க, இவர் செய்வதறியாது கண்கலங்க, மேட்டு அழகிய சிங்கப் பெருமாள், ”ஹோ ஹோ எவன் ஏற்காவிடின் என்ன, நம் கம்பா! நாம் ஏற்றோம்!” என்று கத்த, பயந்து போய் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

ஸ்ரீராம நவமி தொடங்கி ஆரம்பித்த அரங்கேற்றம் தாயார் சன்னிதி முன் உள்ள ஆறு தூண் மண்தபத்தில் ஓராண்டு அரங்கேற, அழகிய மணவாளன் தன் உத்சவத்தை நிறுத்திக் கொண்டான்.

யுத்த காண்ட முடிவில் சீதையை த்ரிஜடை அலங்கரிக்கும் செய்யுள் அழகைக் கேட்ட ஸ்ரீரங்க நாச்சியார், அர்ச்சகர் மேல் ஏவி வந்து, தன்னை சகல ஆபரணங்களாலும் அலங்கரித்து, பல்லக்கில் இருத்தி வாசல் வரை இட்டுச் செல்ல ஆணை இட, அவ்வாறே புறப்பாடும் ஆக, ஜனங்கள் காண, அவள்,

”கம்பரே! சீதையாய் இருந்த போது கூட நான் இவ்வளவு அழகாக இல்லை! உன் தமிழ் என்னை ஈர்க்கிறது, மீண்டும் நீ வர்ணிக்கும் அழகில் சீதையாக மாற மனம் விரும்புகிறது....நீ கவிச்சக்ரவர்த்தி ஆகுக!” என்று பட்டம் அளித்தாள்.

உலகின் மற்ற இலக்கிய மேதைகளுக்கு எல்லாம் மன்னர்களும் மக்களும் பட்டம் அளித்தனர், கம்பனுக்கோ சாட்சாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியே பட்டம் அளித்தாள்.

 

குலோத்துங்கனாலும் ஒட்டக்கூத்தராலும் இதை ஏற்கமுடியாமல் அவன் கூத்தருக்கு ”கவிச்சக்ரவர்த்தி” பட்டம் தந்தான், எடுக்குமோ?

ஏன் நம் காலத்தில் கூட ஒரு கவிஞர் தன்னைக் ”கவியரசர்” என்று பட்டமிட்டுக் கொண்டார்.மக்கள் ஏற்கவில்லை.உடனே அவர் அரசியல் செல்வாக்கு மூலம் மக்கள் முன் அப்பட்டத்தை இன்னும் உயர்த்திக்கூறி வலிய சூட்டிக்கொண்டார். கம்பனை விடத் தான் உயர்ந்தவர் என்று கூட அவர் தன் படைப்பின் ஓரிடத்தில் வெளிப்படையாகக் கூறுகிறார்...பாவம்!

கம்பன் அப்படியா?

குலோத்துங்கனால் ராமகாதை பாழ்படும் என்று எண்ணிய ஸ்ரீமத்நாதமுனி ஓலைச்சுவடிகளை ப்ரதி எடுத்த கையோடு, மூல நூலை மூலஸ்தானத்தில் அழகிய மணவாளனின் பின் சாலக்ராமக் கற்கள் பேழையுடன் வைத்தார்.

தன் வரலாற்றை மணவாளன் எப்படியோ தமிழில் பேணிக் கொண்டான்!

ஒரே இரவில் கி.பி 14ல் ஸ்ரீவேதாந்த தேசிகர் அழகிய மணவாளனின் பாதுகை விஷயமாக ”ஸ்ரீபாதுகா சஹஸ்ரம்” என்ற 1000 ஸ்லோகங்கள் கொண்ட நூலை இயற்றினார்.இதையெல்லாம் பார்த்து அடியேன் மிக்க ஏங்கியதுண்டு.

என் ஆர்வத்தை மணவாளன் தீர்த்தான் நண்பன் மூலம்

மூன்று நாட்களில் இந்த குறு நூலைப் பதிவாக்க முடிந்தது!

எல்லாம் மஹாசரஸ்வதியின் அனுக்ரஹம்!

இதைப் படிக்கும் மக்கள் பெரிய கோயிலையும் ஸ்ரீராமனையும் மக்களின் வாழ்வியலையும் தொடர்பு படுத்தி, மதித்து அதன் வழி வாழ வேண்டும்.

with respect and regards,

Dr.Madeswaran.M, 15.4.2016 [SriRama navami – got over after 3 days and nights], Madras

கோயில்

கோ + இல் = கோயில் [அரசனின் வீடு]

அயோத்தியர்க் கோன் ஸ்ரீராமனின் வீடு, அவனது குலதெய்வம் ஸ்ரீரங்கநாதனின் வீடு.

ஸ்ரீ - மஹாலக்ஷ்மி

ரங்கம் - பொதுவிடம், உலகம், பராசக்தியின் சேர்க்கையால் உண்டான உலகம்,

அதன் மீதுள்ள உயிர்களைக் காக்கும் மூலப்பரம் பொருள் ஸ்ரீரங்கநாதன் என்று உருவகம் ஆகி உறையும் இடம்

மூலவர்

மூலவர் பெரிய பெருமாள்.பெரிய பெருமாள் என்ற சொல் ஸ்ரீராமனைக் குறிக்கும்.[மிக உயர்ந்த குணங்கள் கொண்ட அரசன் பெருமாள் ஆவான்.பிற்காலச் சேரர்கள் தங்கள் பெயருடன் ”பெருமாள்” சேர்த்துக் கொண்டனர்.] அயோத்தியாவில் இவர் ரங்க மண்டபத்தில் இஷ்வாகு குலதனமாக இருந்தார். முழுக்க முழுக்க சாலக்ராமக் கற்களால் ஆன பெரிய திருமேனி.ஸ்ரீராமன் விபீஷணனுக்குத் தன் நினைவுப் பரிசாக அளிக்க, சோழனின் வேண்டுகோளுக்கு இணங்கி இலங்கை அரசன் சோழ தேசத்தில் ப்ரதிஷ்டை செய்தான்.இது வரலாறு.

[சாலக்ராமம் - இது நேபாளில் கண்டகி ஆற்றில் உருவாகும் கல்.இது விஷ்ணுவின் சக்தியை அதிகம் தன்னுள் கொண்ட energy object - nuclear reactor ஆக வணங்கப்படுகிறது.திருமலை மூலவர் மிகப் பெரிய சாலக்ராமத்தால் ஆனவர்.]

நாபியில் தாமரையுடன் ப்ரம்மா இல்லை, பாதத்தில் மஹாலக்ஷ்மி இல்லை, வெறுமனே ஆதிசேஷன் மீது அவர் கிடக்கிறார்.”பரம்பொருள் ஒன்றே!” என்ற சத்தியத்தை உணர்த்த ஏதும் உடன் இல்லாத தன்மையில் இவ்வடிவம் இஷ்வாகு குலத்தால் வடிவமைக்கப் பட்டது. ப்ரபஞ்சத் தோற்றத்தின் ஆதி விதையாய் இவர் உருவகம் செய்யப்படுகிறார்.

அண்டம் - மூலம்

இதை உணர்த்த மூலஸ்தானம் வட்ட வடிவில் அமைகிறது.

மிகத் தொன்மையான தமிழகத்து ஆலயங்களின் மூலஸ்தானம் வட்டமாக இருக்கும்.

”வெள்ளத்து அமர்ந்த வித்து” என்று கோதை இவரையே பதிவு செய்தாள்.

1960களில் மிகக் கொடிய மூலஸ்தானத் தீ விபத்து உண்டாகி மூலவர் திருமேனி அதிகம் சேதம் ஆனது.அப்போது அன்றைய நேபால் அரசன் பல ஆயிரம் சாலக்ராமக் கற்களை அனுப்பி மீண்டும் ரங்கனைப் புதுப்பிக்க உதவினார்.

ஸ்ரீரங்கத்தில் மூலவருக்குப் ”பெரிய பெருமாள்” என்று பெயர்.உத்சவருக்கு அழகிய மணவாளன், நம் பெருமாள் என்று பெயர்கள் உளன்.மூலவரை ஸ்ரீக்ருஷ்ணனாகவும் நம்பெருமாளை ஸ்ரீராமனாகவும் பாவிப்பது சமூஹ வழக்கம்.

 

அழகிய மணவாளன் - நம்பெருமாள்

இவரே ரங்கனின் உத்சவர். இவரே ஸ்ரீரங்க வாசிகளுக்கு ப்ரதானம்.இவரையே ஸ்ரீராமனும் சீதையும் கைபடத் தொட்டு அயோத்தியில் பூஜித்தனர்.மிக மிகத் தொன்மையான தேய்ந்த, தங்கக் கவசம் சார்த்திய மூர்த்தி. இவரே பரமபுருஷனாக இருந்து அனைத்து ஜீவன்களையும் ஆட்கொள்வதால் ”அழகிய மணவாளன்” எனப்படுகிறார்.

ஒரே இரவில் ஸ்ரீவேதாந்த தேசிகர் [கி.பி 14] மணவாளனின் அழகிய பாதம் மற்றும் பாதுகை மேல் 1000 ஸ்லோகங்கள் கொண்ட பாதுகா சஹஸ்ரம் இயற்றினார்.

ஸ்ரீரங்கநாயகியும் ஸ்ரீஆண்டாளும் மிக விருப்புடன் இவர் அழகை உட்கொண்டதால் அழகிய மணவாளன் ஆகிறார்.

”என் அரங்கத்து இன் அமுதர்

குழல் அழகர்

வாய் அழகர்

கண் அழகர்

கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்”

என்று கோதை [ஸ்ரீஆண்டாள்] மிக romantic காதல் பாட்டு இவனைக் கண்டே பாடினாள்.

அழகிய மணவாளனை ரஸிக்கும் அவன் மனைவிகள்

மற்ற ஸ்தலங்களைப் போல் அல்லாமல் அழகிய மணவாளனின் இரு தேவியரான ஸ்ரீயும் பூமியும் அமர்ந்த நிலையில் அவனது திருமுகத்தைக் காண்பதாக, ரஸிப்பதாக பாவனையில் பூஜிக்கப் படுகின்றனர்.

மனிதனின் செல்வமும் பூமி மீதான வாழ்வும் இறைவனின் அருள் ஒன்றால் தான் கிடைப்பதையே இக்கோலம் உணர்த்தும்.

எட்டு மனைவியர் மகிழும் அழகிய மணவாளன்

ஹ்ருதய லக்ஷ்மி, ஸ்ரீதேவி, பூமி தேவி, ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீஆண்டாள் [பாண்டிய குல வல்லி], சோழகுலவல்லி உறையூர்க் கமலவல்லி, குலசேகர ஆழ்வாரின் மகன் சேரகுல வல்லி, துலுக்க நாச்சியார் பீபீ சுரதானி பேகம் ஆகிய எட்டு மனைவியர் அழகிய மணவாளனுக்கு உண்டு.இவர்கள் எட்டு லக்ஷ்மிகளின் குறியீடே.

ப்ரயோகச் சக்கரம்

இவரது சக்கரம் - சுழலும் பாவனையில் இருக்கும்.இதற்கு ப்ரயோகச் சக்கரம் என்று பெயர்.ரங்கனுக்கும் அழகருக்கும் மட்டுமே இவ்வடிவம் காணப்படுகிறது.

கஸ்தூரி கமழும் திருநுதல்

வெள்ளிக்கிழமை தோறும் அழகிய மணவாளன் கஸ்தூரித் திலக நாமம் சார்த்திக் கொள்வார்.மூலஸ்தானத்தில் இடது பக்கம் அவருக்கு அதைத் தயாரிக்கத் தனி அறை உண்டு, அவரது திவ்ய ஆபரணங்களுக்கும் ஆடைகளுக்கும் தனி அறை உண்டு.

தைலப் பூச்சால் பாதுகாப்பு

ஆண்டுக்கு ஒரு முறை மிக உயர்ந்த அகில், சந்தனம், சாம்பிராணி ஆகியன அரைத்துக் காய்ச்சிய தைலம் மூலவருக்குப் பூசிமெழுகப்படும்.வாரம் தோறும் வெள்ளி அன்று புனுகுத் தைலம் பூசிமெழுகப்படும்.அன்று முகத்தை மட்டும் தான் காட்டுவர். கடுசர்க்கரை என்ற மூலிகையால் உருவான திருமேனிக்கு இத்தகைய மெழுகல் அவசியம்.[சில்ப சாஸ்த்ரம் - நன்றி தகவல் உபாயம் மாமல்லபுரம் ஸ்தபதி பகவதி ஐயா]

சேர குல வல்லியின் அறை

ஆடைகளை டிஸைன் செய்து, அவற்றுக்கு ஏற்ற நகைகளை ரங்கனுக்கு எடுத்துத் தரும் பணியில் குலசேகர ஆழ்வாரின் பெண் இருந்ததாள் [கி.பி 8], அவளது திருமேனி [விக்ரஹம்] அவ்வறைக்குள் தான் உள்ளது. இன்றும் ஸ்ரீராம நவமி அன்று அழகிய மணவாளன் அவளுடன் சேர்த்தியில் அமர்கிறார்.

அபய ஹஸ்தம்

அழகிய அபயக்கரம், வைர வைடூர்யங்கள் பதித்து அப்போதும் அவரது அருளை உணர்த்தும். பயத்துக்கு எதிர்ச்சொல் அபயம்.அன்பர்களின் பயத்தைப் போக்கும் ஹஸ்தம் - கரம். அதனால் ரங்கனுக்கு ”அபய ப்ரத ராஜன்” என்ற பெயர் உண்டு.ஓர் பக்தர் கி.பி 13ஆம் நூற்றாண்டில் அந்த அபய ஹஸ்தத்தின் மீதே 500 ஸ்லோகங்கள் பாடினார்.மிக விசேஷமாகச் சொல்லி வைத்தால், அபய ஹஸ்தம் சந்தன அச்சு கிடைக்கும், உனக்கு ஏற்பாடு செய்து இருக்கிறேன், அழகிய மணவாளன் நீ விரும்பிய அபயத்தை என்றென்றும் அருள்வார்!

மந்த ஹாஸப் புன்னகை

காலத்தால் தேய்ந்து போன முகம், குழி விழுந்த புன்னகை பூத்த இதழ்கள் அவரது trade mark.

ஸ்ரீபாதம்

”ஸ்ரீபாதங்களே! அந்த ஸ்ரீராமனும் சீதையும் எப்படி இருந்தார்கள்? உங்களை அடிக்கடி அவர்கள் தொடுவராமே? குனிந்து வணங்குவராமே?” என்று ஒரு அன்பர் வர்ணிக்கும் வைடூர்ய மணிகள் பதித்த மலர்த்தாள்கள்!

லக்ஷ்மணன்

எப்போதும் உடன்பிரியாமல் இருக்கும் தமையன் லக்ஷ்மணனாய் அவரது ஆதிசேஷக் குடை.அயோத்யாவில் அவனே அண்ணனுக்கு எப்போதும் வெண்கொற்றக் குடை தாங்கினான்.

பரதன்

ரங்கனின் ஸ்ரீபாதக்குறியீடுகளான சடாரியே பரதன்.அயோத்யாவில் அவன் ராமன் மீண்ட பின்னும் பாதுகையையே தாங்கி சேவை செய்தான். இப்படி ரங்கனை அனுபவிக்கிறோம், அவனூர் அயோத்யா வாசிகள் வீடுகளில் ஸ்ரீராமன் படம் கூட வைப்பதில்லை, பாதுகையைத் தான் வைத்துக் கொள்வர்.”அது தானே எங்களை ஆண்டது?” என்பர்.

சத்ருகனன்

செங்கோல் வடிவில் அவனை வணக்குவர்.

”செங்கோலுடையத் திருவரங்கச் செல்வனார்” என்று ஆண்டாள் பதிவு செய்த பொன் செங்கோல்.

தசரதன்

அழகிய மணவாளன் மூலஸ்தானத்தில் அமரும் இருக்கை ”தசரத மடி பூபாலம்” எனப்படும்.[”தசரதன் தன் மகனை மடி இருத்தி அடிக்கடி உச்சிமுகர்ந்து ஆனந்திப்பான்” - வால்மீகி]

கெளசல்யா தேவி

மணவாளன் உண்ணும் வெள்ளிக் கிண்ணம் கெளசல்யா என்ற பரிபாஷையால் அழைக்கப்படும்.அதில் உண்ணும் போது கண்ணாடி காட்டி நிலாவை ராமனுக்கு அவள் காட்டிச் சோறூட்டுவதாக வால்மீகியும் துளஸிதாஸும் கூறுவர்.

கைகேயி

கைகேயின் சார்பில் ”பொன் அரங்கம்” மூலஸ்தானத்தின் வெளியில் உள்ளது.அதில் அவள் சந்தன மரத்தால் ஆன அலங்காரப் பந்தலையும் தன் குலமூர்த்திக்கு அளித்தாள்.கைகேயியை மன்னிக்கும் வகையில் தானோ அதிகம் மணவாளன் இம்மண்டபத்தில் அபிஷேகம் காண்பன்.

ப்ரதான திவ்ய ஆபரணங்கள்

கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவ-வைஷ்ணவ உட்பூசல்கள் அதிகரித்த வேளையில் சோழர்கள் ஸ்ரீரங்கத்தை அதிகம் கண்டுகொள்ளவில்லை.தில்லைப் பொன் அம்பலமே அவர்களின் கனவுலகாக மாறி இருந்தது.

 

ஸ்ரீரங்க மணவாளன் ஆறு கால பூஜைக்கும் வழியின்றி கஷ்டப்பட்ட காலமும் வரலாற்றில் உண்டு!

அடிக்கடி சுந்தர பாண்டியன் முடியைச் சார்த்திக் கொண்டு அருளும் சிரம்.

திருமலை நாயக்கரின் முத்துவடாம் முடியும் அடிக்கடி சார்த்திக் கொள்வான்.பாண்டியரின் ராஜ முடி என்ற குல்லாய் அணிவான்.

ஹம்பி அரசர்கள், விஜயநகர மன்னர்கள், பிற்கால நாயக்கர்கள், மராட்டியர்கள், கன்னட ஹொய்சலர்கள், கொங்குச் சோழர்கள்,சேரர்கள், மைசூர் உடையார்கள், ஆதி கலிங்கர், இலங்கையின் சில மன்னர்கள் ஆகியோர் பெரிய கோயிலுக்கு அரும்பணிகள் செய்தனர்.

நவரத்ன கவசம்

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் நவரத்ன கவசம் சார்த்தப்படும்.விலை மதிக்கவே இயலாத மணிகள் அனைத்தும் லவ-குசர்களின் இஷ்வாகு குல க்ரீடத்தில் இருந்ததே.

ராமன், சீதையின் மறைவுக்குப் பின் இரு மகன்களுடனும் ஸ்ரீரங்கம் வந்து முடி இறக்கிக் காது குத்தி, தான தர்மங்கள் செய்தான்.

ராவணன் கதவில் இருந்த கற்கள்

மார்பில், ராவணனை வதம் செய்த பின் அவனது அந்தப்புரக் கதவில் இருந்த நீலநாயகக்கற்களை ராமன் கொண்டு வந்து தன் மணிமார்பில் வீரப்பதக்கமாகச் சார்த்தினான்.பின்னர் அதை அழகிய மணவாளனுக்கு அளிக்க, தானே ஸ்ரீராமன் என்ற தோரணையில் நித்தம் நீலநாயகப் பதக்கம் தாங்கும் ஸ்ரீ உறையும் மார்பனாய் விளங்குகிறார்.

ரங்க விமானப் பதக்கம் - blue print for sanctum structure

சில சமயம் ரங்கவிமானப் பதக்கம் சார்த்திக் கொள்வார்.அது ஸ்ரீரங்க விமானத்தின் miniature.தன் குல தெய்வத்தின் உருவம் பொதிந்த பதக்கத்தை மன்னர்கள் அணிவது மரபு. அதன்படி ரங்க விமான பதக்கத்தை இஷ்வாகு மன்னர்கள் பயன்படுத்தினர்.சோழன் தர்மவர்மா காவிரிக் கரையில் கோயிலை அமைக்க இது உதவியது.

வைரமுடி, முத்துக் கொண்டை, சோழன் காசு மாலை என எத்தனை எத்தனை ஆபரணங்கள். கன்னட அரசன் விஷ்ணு வர்த்தனன் அளித்த கொடகு தேசத்துச் சந்த்ர ஹாரம் அடிக்கடி இவன் சார்த்துவன்.

இவற்றுள் பல ஸ்ரீராமன் - சீதை வாழ்நாளில் பயன்படுத்தியவை.

ஸ்ரீரங்க நாயகி உருவ-ஆடை-ஆபரண வைபவம்

ராதை அளித்த முத்து மாலை

ராதைக்குக் கண்ணன் காதல் பரிசாய், மதுராவில் கம்சனின் குவலாயபீட யானையைக் கொன்று அதன் தந்தத்தில் சுற்றி இருந்த உயர்ந்த முத்துக்களைக் கோர்த்து அளித்தான்.அதை அவள் தாயாருக்குப் பின்னர் அனுப்பிச் சார்த்தினாள்.

பட்டத்து ராணி மாங்கல்யம்

இஷ்வாகு பட்டத்து அரசிகள் அணியும் உயர் குல ராஜமகிஷி மாங்கல்யமே இன்றும் தாயாரின் ஸ்தனங்களை, இல்லறத்தின் தர்மத்தைக் குறித்து மின்னுகிறது.

இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலி

ஸ்ரீராமன் அணிந்திருந்த இஷ்வாகு குலப் பதக்கச் சங்கிலியைத் தாயார் அணிகிறாள்.

ஆரண்ய காண்ட மனோச்சிலைப் பொட்டு

காட்டில் வாழ்ந்த காலத்தே, மனோச்சிலை என்ற வாசனை மூலிகையை அரைத்து ஸ்ரீராமன் தன் தேவிக்கு த்ருஷ்டிப் பொட்டு வைப்பானாம்.அதே பாவனையில் இன்றும் தாயார் த்ருஷ்டிப் பொட்டு வைத்துக் கொள்கிறாள்.

நாசிகாபரணங்கள்

சீதையின் வைர மூக்குத்தியும் உயர் ரக முத்து பேசரியும் இன்றும் தாயாரின் நாசியில் மின்னுவதைக் காண்க.

சீதையின் நீண்ட கருங்கூந்தல் ஜடைவளை தான் நவராத்ரியில் தாயாருக்குச் சார்த்தப் படும்.

சீதையின் கைவளைகள் சில இன்றும் நவராத்ரியில் ஏழாம் திருநாள் திருவடி சேவையின் அலங்காரத்தின் போது தாயார் அணிவாள்.[ஆண்டாளின் ஆறு பொன் வளைகளைக் கள் அழகர் தன் தோள்களில் நித்தம் சார்த்தி இருப்பதை அழகர் கோயில் போனால் காண்க]

சுகந்த களாபச் சந்தனம்

இவள் ஸ்தனம் ஸ்பரிசித்த சுகந்த களாபச் சந்தனம் காலையில் அழகிய மணவாளன் சார்த்துவார்.அன்று மாலை அவரது மணிமார்ப்புச் சந்தனம் தாயார் ஸ்தனத்தில் கம்பீரமாய் அமரும்.

செண்பக ப்ரியை

சீதைக்கு செண்பகம் மிகவும் ப்ரீதம்! [ஆரண்யத்தில் ரகுராமன் தன் மனைவிக்கு ஆசை ஆசையாய் செண்பக மலர்கள் கொய்து சரம் தொடுப்பான் - வால்மீகி] அதனால் தான் மாங்கல்யத்துடன் அதைச் சுற்றி இன்றும் செண்பகத்தோடு சார்த்துவார்கள்.

குடும்ப ஒற்றுக்கும் மாங்கல்ய பலத்துக்கும் இன்றும் தம்பதிகள் செண்பகத் தோட்டுச் சரம் வாங்கிச் சார்த்துவர்.

அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம்

மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டு செல்வங்களின் குறியீடான அஷ்ட ஐஸ்வர்யப் பதக்கம் தாயாரின் தாலியுடன் விளங்குவதைக் காண்க.

மிக ம்ருதுவானவள்

பெரிய தாயார்

பெரிய ப்ராட்டி

ஸ்ரீரங்க நாச்சியார் [மிக உயர்ந்த பெண்மனி - noble lady]

ஸ்ரீரங்க நாயகி

திருவரங்கச் செல்வியார்

திருமாமகள்

ஜனகன் ஈன்ற மாமகளார்

பூபுத்ரி [பூமியின் மகள்]

இவை அன்னையின் ப்ரதானப் பெயர்கள்.

தாயார் சுயம்பு.மிக அதிகமான சேதாரம் அவள் திருமேனியில் இருக்கிறது.அதனால் வருடத்தில் ஐந்து முறைதான் அவளுக்கு அபிஷேகம்.அவற்றுள் பங்குனி உத்திரத்தன்று, நள்ளிரவில் அவள் அழகிய மணவாளனுடன் சேர்த்தித் திருமஞ்சனம் காண்பாள்.அன்று தான் அவள் நீராட்டத்தைக் காண முடியும்.

[அபிஷேகம் - திருமஞ்சனம்]

சீதையின் அந்தப்புரத்தில் இருந்த ஊஞ்சல், வஸந்த மண்டபம், சேர்த்தி இருக்கை, கொலு மண்டபம், துளசி மாடம், கொற்றவை என அனைத்தும் replica ஆக ஸ்ரீரங்கநாச்சியாரின் சன்னிதியில் இடம் பெறுவதைக் காண்க.

ஆடையில் உயர் ஒழுக்கம்

புடவை முந்தானி இரண்டு தோள்களையும் சுற்றி வந்து இடையில் சேர்த்து, உயர் ஒழுக்க ஆடை அணியும் முறை தாயாருக்கு உண்டு.அதனால் தான் பாவாடையில் மற்ற ஊர்த் தாயார்களை விட இவளுக்கு முந்தானி இரட்டிப்பு நீளம் தைப்பார்கள்.

சீதை அணியும் வடதேசத்துப் பாணியில் அடுக்குப் பாவாடைச் சார்த்தும் இவளுக்கு உண்டு.சுமார் ஐந்து அல்லது எட்டு பாவாடைகளை ஒன்றாக அடுக்கிச் சார்த்துவர்.

இவள் ”படிதாண்டா பத்னி”.தன் சன்னிதி வாயிலை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வாராள்.கம்பனுக்காக மட்டும் வாசல்படி வரை வந்தாள்.

மாலிகாஃபூரின் படையெடுப்பின் போது கூட இவள் துளஸி மாடத்தின் கீழ் புதைக்கப்பட்டாள்.

மூலஸ்தானத்தின் உள்ளே வேறு எங்கும் காணாத வகையில் பூமியும் ஸ்ரீயும் தனித்தனியாக உள்ளதைக் காண்க.

திருவடி சேவை

நவராத்ரி ஏழாம் நாள் மாலை இவளது பாதங்கள் தெரிவது போல் அலங்காரம் ஆகும்.ஸ்ரீராமன் போன வழியில் இவள் சென்றாள் என்பதை அது உணர்த்தும்.

சந்த்ர புஷ்கரணியும் பழங்கால மருத்துவக்கூடமும்

அயோத்யாவின் அரண்மனையின் ரீ மேக்கிங் தான் ஸ்ரீரங்கம்.வால்மீகி பதிவு செய்த அதே தோற்றத்துடன் கோயில் அமைகிறது.சீதை - ராமனின் அந்தப்புரங்களுக்கு இடையே குளமும், மகிழமரமும் ஊஞ்சலும் இருந்ததை வால்மீகி சுட்டுவதைக் கருத்தில் கொண்டே இன்றும் பெருமாள்-தாயார் சன்னிதிகளுக்கு இடையே சந்த்ர புஷ்கரணி அமைகிறது.இதன் கரை எதிரில் உள்ள தந்வந்த்ரி சன்னிதியில் தான் காலை சுக்குக் கஷாயம் தயார் ஆகும்.மேலும் கி.பி 10ஆம் நூற்றாண்டில் இச்சன்னிதியில் மருத்துவமனையும், அறுவை சிகிச்சைத் துறையும் விளங்கியதைக் கல்வெட்டு பகர்கிறது.

பங்குனி உத்திரம்

இந்நாளே சீதா கல்யாணம் ஆன திருநாள். அன்று தான் இருவரும் மதியம் சுமார் இரண்டு மணி முதல் விடிய விடிய சேர்ந்து உத்திர மண்டபத்தில் எழுந்தருள்வர்.

[”இன்று பங்குனி உத்திரம்! இன்று தான் எனக்கும் வைதேஹிக்கும் கல்யாணம் ஆனது, எனவே அவளை மீட்க இன்றே சேது அணை கட்ட ஏற்பாடு செய்க” - யுத்த காண்டம் - வால்மீகி] - சேது பந்தனம் கட்ட ஆரம்பித்த நாள்.

 

வட தேசத்து பாஷை

கோயிலின் பரிபாஷையில் அக்காலம் தொட்டு அயோத்தியா பாஷா கலந்து உள்ளது.சில பூஜைகளில் சடங்குகளில் அவ்வார்த்தைகள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.

டபர் - குல்லாய்

வாரியே - சற்று விலகுக

கபாய் - குளிர்கால ஷால்

நாரிசாவல் - தேங்காய்த் துருவல் கலந்த சாதம்

போக் - பத்து வகைக் காய்கறிகள் கொண்ட சாதம்

ம்ருதுசந்த் - களாப சுகந்த சந்தனம்

சமையல் அறையில் கமழும் தூய தமிழ்

அமுது - சாதம்

கறி அமுது - பொறியல்

கண் அமுது - தயிர் சாதம்

சாற்று அமுது - ரசம் சாதம்

அக்கார அடிசில் - சர்க்கரைப் பொங்கல்

கறித் திருத்தம் - காய்களை அரிதல்

மதுவூறல் - தேன்

ரங்கவிமான ரகஸியம்

திருமங்கை மன்னன் நாகப்பட்டிணம் தங்க புத்த விக்ரஹத்தை உருக்கி வேய்ந்த பொன் விமானமே இன்றும் காணப்படும் பொன் ரங்க விமானம்.

நான்கு வேதங்கள் நான்கு கலசங்கள் - தெற்கு - வடக்கில்

ஐந்து கலசங்கள் - ஐம்பூதங்கள் - கிழக்கு - மேற்காக

ஆய கலைகள் 64கும் தாமரை இதழ்களாகக் காட்டப்படுகின்றன.

மூலஸ்தானத்தின் வெளியே காயத்ரி மந்த்ரத்தை உணர்த்தும் வகையில் அதன் 24 சப்தங்களைக் கொண்ட 24 கற்றூண்கள் உள.

அர்ஜுன மண்டபத்தின் மீது ஏறிக் காண்க.

அல்லது மூலஸ்தானத்தின் பின்புறம் உள்ள மண்டபத்தின் மீது ஏறிக் காண்க.

விபீஷணன்-சுக்ரீவன்

அழகிய மணவாளன் உத்சவத்துக்குக் கிளம்பும் போது அருகில் உள்ள விபீஷணனுக்குச் சொல்லியபின் அவன் சன்னிதி வாசலில் தன் மூலஸ்தான சாவியை வைத்து விட்டே வெளியேறுவார்.அருகில் சுக்ரீவன் இருக்கிறார்.

மூலஸ்தானத்தைச் சுற்றி மொத்தம் 27 ராமர் சன்னிதிகள் உள்ளன.

தேவகி வசுதேவருடன் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வூரை தரிசித்தான்.அவர்தம் சன்னிதி அர்ஜுன மண்டபத்தில் உள்ளது.

நெற்களஞ்சியம்

சீதையின் அரண்மனைக்கு அருகில் தான் உணவுக்கூடம் அமைந்திருந்ததைக் கருத்தில் கொண்டு தாயார் சன்னிக்குப் போகும் வழியில் மேற்குப் புறத்தில் தான்யலக்ஷ்மி சன்னிதியுடன் கூடிய நெல் கொட்டாரம் இன்றும் செயல்படுகிறது.

அனைத்து ஜாதிகளுக்கும் இட ஒதுக்கீடு செய்த கோயில்.[வழிவழியாக இச்சாதியினரின் குடும்பங்கள் இன்றும் பணியில் உள] - ஸ்ரீமத் ராமானுஜரின் சமூஹப் பணி.

 

1. குயவன் - தினமும் புதிய மண் கலங்கள் தர வேண்டும்.

2. தச்சன் - மணவாளனின் எவ்வித மரச்சாமான வேலையையும் செய்வான்.

3. தையல் காரன் - திருச்சிக்குப் போய் அவன் தான் ஆடைத்துணிகள் வாங்குவான்

4. பூந்தோட்டம் பராமறிப்பு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அமைத்த வயலில் தோட்டம் இட்டு இன்றும் பராமறிக்கிறான். தயவு செய்து மாலைகள், பூச்சரங்கள் மணவாளனுக்கு வாங்க வேண்டாம், அவன் ஏற்பதில்லை, ஆண்டாளின் மாலைக் குறியீடாகத் தொண்டர் அதிப்பொடி ஆழ்வாரின் தோட்டத்தில் வளரும் பூக்களின் மாலையை மட்டுமே ஏற்பன். கோடை விழாவின் போது மட்டும் மல்லிகை, செண்பகம், மகிழம் சரங்கள் ஏற்பன்.

5. பூமாலை கட்டுவோன் - மாலைகள், கண்ணிகள் முடிப்பான்

6. பொற்கொல்லன் - ஆனிக் கேட்டை நாளில் ஆபரணங்களையும் தங்கக் கவசங்களையும் கழற்றிச் சீரமைப்பான்

7. இரும்புக் கொல்லன் - பிற உலோக வேலைகள் செய்வான்

8. ஓவியன் - மணவாளன், தாயார் சாயும் திண்டின் மீது அலங்காரம் செய்வான்

9. இசைக் கலைஞர் - அரையர்கள், ஆழ்வார்களின் பாடல்களை, உரையுடன் விளக்கி அபிநயம் செய்வர். [ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆழ்வார்த்திருநகரி ஆகிய மூன்றே ஸ்தலங்களில் இவர்கள் உண்டு - பெரிய கோயிலில் அரங்கனின் அருகிலேயே இவர்கள் சதா கைத்தாளத்துடன் இருப்பர்]

10. உழவர் - தானிய அளவு சோதிப்பான், விறகு வெட்டிகள் இன்றும் பணியில் உண்டு.

11. ஓலை வேய்வான் - மணவாளன் உத்சவம் காணும் போது ஓலைப் பந்தல் அமைப்பான், அதில் பூச்சர அலங்காரம் செய்வான்

12. கோலமிடுவோர் - தற்போது ஸ்ரீரங்கத்துப் பெண்களே இப்பணியை மேற்கொள்கின்றனர்.

13. பந்தம் தாங்குவான்

14. எண்ணெய்ச் சட்டி தாங்குவான்

15. தாம்பூலக்காரன் - வெற்றிலை பாக்கு [ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, சீவல், பச்சைக்கற்பூரம்] கலந்து அளவாகச் சுண்ணாம்பு வைத்து மடித்து அளிப்பான்.

16. கட்டியம் சொல்வான் - மணவாளன் எழுந்தருளும் போது, மிக சத்தமாக அவன் அயோத்தியாவில் பவனி வரும் போது சொல்லும் கட்டியத்தைக் கூறுவான்.

17. பட்டி அடிப்பான் - மணவாளன் எழுந்தருள்வதற்கு முன் அயோத்யாவில் தெருக்களில் மக்களைச் சீராக நிற்க வைக்கும் படி எச்சரிக்கை செய்பவரின் குறியீடு, மான் தோலால் ஓங்கித் தரையைத் தட்டிச் சுத்தம் செய்து [ஜாவோ ஜாவோ - வட பாஷை] என்று கூறிச் செல்வான்.

18. களாபம் அரைப்பான் - அரபு தேசத்து, காஷ்மீரக் குங்குமப்பூ சேர்த்த சந்தனம் அரைப்பான்.[கோடையில் ராமனின் உடை சந்தனக் குழம்பால் ஈரமாகும்-வால்மீகி.] மணவாளனைக் கோடையில் தேஹம் முழுக்க சந்தனக் குழம்பால் பூசி மெழுகுவர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்குக் கோடையில் உடல் முழுவதும் களாப பரிமள அகில் சந்தனக் குழம்பை அப்பி மூடி அதன் மீது ஆடை சார்த்தி, அதன் மீது பன்னீர் தெளித்து, அதன் மீது கவரி வீசுவது இன்றும் வழக்கம்.

19. செந்தூரக்குழம்பு சார்த்துவான் - [ஸ்ரீராமனின் தோளின் சீதை செந்தூரக் குழம்பு பூசி மகிழ்வாள் - வால்மீகி]. இன்றும் ஹோலி அன்று தாயார் சன்னிதியில் தயார் ஆன செந்தூரக் குழம்பு - [குலால் பொடி] இருதோள்களிலும் பூசப்படும்.

20. அலங்காரப் பட்டர் - மணவாளனைத் தொட்டு அலங்காரம் செய்பவர்கள், பூஜிக்க அனுமதி இல்லை.

21. வஸிஷ்ட குலமுனி - அயோத்யாவின் ராஜ குரு. அவரே தினமும் காலை மணவாளனுக்குப் பஞ்சாங்கம், அன்றாட நிகழ்ச்சிகள் என்னென்ன என்று உரக்கக் கூறுவார்.

22. கோ சாலையன் - பரி காரன் - யானைப்பாகன் - [ஸ்ரீராமன் தினமும் காலை பசு, குதிரை மற்றும் யானைகளை மங்கலமாகப் பார்த்து தரிப்பான் - வால்மீகி]என்ற படி இன்றும் காலையில் இம்மூன்றும் மணவாளன் முன் நிற்கச் செய்து பூஜிக்கப் படும்.

கோ சாலை - பசுமாடுகள் காப்பகம்.

23. வீணைக் காரன் - [தினமும் இரவில் ஸ்ரீராமன் வீணை இசைக் கேட்டே கண்துயில்வான் - வால்மீகி] தினமும் இரவில் எத்தனை நேரம் ஆகி உத்சவம் கழியினும் மணவாளன் வீணை இசை கேட்டே உறங்குவார்.

ஒரு முறை அவரது வீணை ஏகாந்தம் கேட்கும் வாய்ப்பை அரங்கன் அளித்தான்.ஆஹா ஆஹா!

மிக மென்மையாக அனைவரும் அமைதியாக இருக்கும் அவ்விரவில் அவர்

”கெளசலையின் குல மதலாய் தாலேலோ! தயரதன் பெற்ற மரகத மணி மகனே தாலேலோ! சானகி தன் மணவாளா தாலேலோ! ஈன்று எடுத்த தாய் அழ, ஈன்று எடுத்த தந்தை கதற கூனி சொல் கொண்ட கைகேயி வரம் வேண்ட, தம்பியுடனும் காதலியுடனும் தொல் கானம் அடைந்தவனே தாலேலோ...யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயில்பவனே தாலேலோ...” என்று அவர் ம்ருதுவாகப் பாடிக் கொண்டே நீலாம்பரி ராகத்தில் வாசித்து மணவாளன் உறக்கம் கண்டதை எண்ணி இன்று ஆனந்தம் கொண்டு அழுகிறேன். இன்று அவன் உனக்காக மீண்டும் எழுத வைக்கும் அவன் அன்பை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விடுகிறேன். என் ஆய்வை அனைவரும் வாசிக்க முடியாது.அதனுள் இருக்கும் முக்கிய பகுதிகளை எழுதி அவைக் காணாமல் போன போது, ரங்கன் மீட்டுருவாக்கம் செய்கிற செயலை எண்ணி வியக்கிறேன்!

விபீஷணன் ஏற்பாடு?

”வீணைக் கொடி உடைய ராவணனின் வீணை என்னைப் பாடும்” என்று ஸ்ரீராமன் சபதம் செய்வதை அத்யாத்ம ராமாயணம் கூறும்.அதன்படி ராவணன் தானே வீணை இசைத்து அடிமை ஏவல் செய்வதாக விபீஷணன் ஏற்பாடு செய்ததாகவும் கருத இடமுண்டு.

24. குலப்பாவத்தைக் கொன்ற ஈரம் கொல்லி - எத்தனை அழகான தமிழ்ப்பெயர் பார்?!

ஈரத்தைக் கொல்பவன் - வண்ணான்.

அழகிய மணவாளன் துலுக்கனின் படையெடுப்பின் போது அறுபது ஆண்டுகள் திருமலையில் ஏழுமலையானுடன் சேர்ந்து ஒரே மூலஸ்தானத்தில் பூஜையில் இருந்தார்.அதன் பின் அவர் சோழ தேசம் சேரும் போது, அவரை அடையாளம் காணும் மக்கள் இல்லை. சிலருக்கும் அடையாளம் தெரியவில்லை.

மணவாளன் அபிஷேகம் ஆகி வடியும் தீர்த்தம் அவனது மேனியில் இருக்கும் சில அரியவகை ரசாயணக்கலவை, மூலிகைக் கலவையுடன் சுவைக்கும்.அதைப் பருகினால் தனக்கு அடையாளம் சுவையைக் கொண்டு அறிய முடியும் என்று கூறினான் வண்ணான்.

அபிஷேகம் ஆகித் தீர்த்தம் கைக்கொண்டு சுவைத்த வண்ணான், ”இவரே நம்பெருமாள்” என்று உரக்கக் கூறியதால் அன்று முதல் அவர் நம்பெருமாள் ஆனார்.

குழந்தைக்குக் குளிப்பாட்டுவதை விட மென்மையாக மணவாளனை அபிஷேகத்தின் போது தொடுவர், மிகத் தொன்மையான மேனி அல்லவா, பல கலசத் தீர்த்தங்கள் பாதாரவிந்தங்களிலேயே ஊற்றப்படும்.

களாபச் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த வெது வெதுப்பான நீரில் தான் மணவாளன் குளிப்பான்.ஒரு முறை அதைக் காண அவன் அருளட்டும்.[அனைத்தும் You tubeயில் உள]

ஒரு வண்ணானின் சந்தேஹத்தால் தன் மனைவியைப் பிரிந்து அரச தர்மத்தைக் காத்து, தன் சுய வாழ்க்கையை த்யாகம் செய்தனர் அயோத்யா தம்பதியினர்.அப்பாவம் இவ்வண்ணார் குலத்துக்கு இவன் மூலம் தீர்ந்தது.

திருமஞ்சனக் கைலி

[ஸ்ரீராமன் சிவப்புக் கட்டம் போட்ட பருத்தித் துணியைக் கட்டித் தான் நீராடுவான் - வால்மீகி] - இன்றும் மணவாளன் அதே மாதிரித் துணியைத் தான் உடுத்துவது வழக்கம், அபிஷேகம் ஆனபின் ஈரம் கொல்லி துணிகளை எடுத்துச் சென்று விடுவான், அவனுக்கு இன்றும் தீர்த்தம் தரப்படுகிறது.

சில வகை ஆடைகள்

a. இரவுகளில் மணவாளன் தட்டாடை - அதாவது நாம் கட்டுவது போல் லுங்கிச்சேலை உடுத்துவான்.

b. பருவகாலத்துக்கு ஏற்ப ஆடைகள் மாறும்.கோடையில் அதிகம் பட்டு கிடையாது.மெல்லிய பருத்தி ஆடைகளே தரப்படும்.

c. குளிர் காலத்தில் வெல்வெட், கம்பளி ஆகியன ஷால், குல்லாய், கையுறை என அணிவிக்கப்படும்.

d. குதிரை வாஹனம் அன்று மத்திய ப்ரதேஷ் பாணியில் குர்த்தா அணிவான்.

e. சில நாட்களில் ராஜஸ்தான் பாணியில் குர்த்தாச்சேலை அணிவதும் உண்டு.

f. பொதுவாக ஆறு முழ வேட்டியில் பஞ்ச கச்சம், இடுப்பில் அதன் மீது சுற்றிய இரண்டு முழ உத்தரீயத் துண்டு, யோக வேட்டி எனப்படும் மேல் துண்டையே மணவாளன் அணிவான்.

g. ஜிகு ஜிகு சரிகை போட்ட அடர்த்தியான நிறங்கள் கொண்ட வடதேசம் துணி வகைகள் அதிகம் அணிவான்.என்ன இருந்தாலும் அவன் அயோத்யாவில் வாழ்ந்தவன் அல்லவா?

h. வசந்த காலத்தில் புஷ்ப அங்கியும் அதன் மீது களாபச் சந்தனமும் பூசிக் குளிரக் குளிர நடு வீதிகளில் நின்று பானகம் லெமன் குடிப்பான். ஹோலி அன்று வெள்ளை வஸ்த்ரம் அணிவான், அதன் மீது செந்தூரப்பொடிகளைத் தூவிக் கரை ஏற்படுத்தி விடுவர்.

i. சித்திரை அக்னி நக்ஷத்ர வேளையில் தினமும் இருவேளை அபிஷேகம் உண்டு, மாலையில் அயோத்யாவில் தன் மாளிகையில் உள்ளதைப் போல் நீர் நிரம்பிய சிறு மண்டபத்தின் நடுவில், வெட்டிவேர்ப் பந்தலில், பன்னீர் தெளிக்க அது A.C போல் குளிரும், அதனுள் மிக மிக மெல்லிய பருத்தி ஆடை அணிந்து இளநீர் குடிக்க அமர்வான்.[வசந்த மண்டபம்]

j. மிக்க உஷ்ணம் இருப்பின், மிகக் குளிர்ந்த நீரால் பாதத்துக்கு மட்டும் இரவிலும் அபிஷேகம் உண்டு.

[ஏகாதசி, அமாவாசை, ரேவதி [ஸ்ரீரங்கனை அயோத்யாவில் இஷ்வாகு குலம் ப்ரதிஷ்டித்த நக்ஷத்ரம், சில உத்சவ வேளைகளில் மட்டும் அபிஷேகம் உண்டு.]

k. உத்சவம் முடிந்து மூலஸ்தானம் சேர்ந்ததும் [அயோத்யாவில் ஸ்ரீராமன் நகர்வலம் கண்டு வந்தால், சீதை பாதம் பிடித்து ஒத்தடம் செய்வாள் - வால்மீகி] இளஞ்சூட்டு நீரால் பருத்தித்துண்டு கொண்டு மென்மையாக மணவாளன் ஒத்தடம் கொள்வது இன்றும் வழக்கம்.

தீபாவளியில் மணவாளன்

ஸ்ரீராமனும் சீதையும் பதினான்கு ஆண்டுகள் கழித்து ஐப்பசி அமாவாசை மாலை அயோத்யாவுக்குள் நுழைந்தனர்.அதையே தீபாவளி என இன்றும் மத்திய - உத்திர ப்ரதேஷ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

ஸ்ரீராமன் காலத்தில் ரங்கன் தென்னாடு வந்தபின் ஆண்டு தோறும் தன் குலத்துடன் ஸ்ரீரங்கம் வந்தான்.தீபாவளி அன்று அதிகாலை மணவாளன் பசும் நெய் தேய்த்து, சீகக்காய் அரைத்துச் சேர்த்து அபிஷேகம் செய்து கொள்வதும், புத்தாடை அணிந்து மத்தாப்புக் கொளுத்தியபின் ஸ்ரீரங்கவாசிகள் எண்ணெய்க் குளியல் செய்வதும் இன்றும் வழக்கம்.

மணவாளன் தீபாவளி ஸ்நானம் செய்தான் என்பதை உணர்த்த பெரிய வேட்டு வெடிப்பர்.

அன்று மாலை அயோத்யாவில் செய்ததைப் போல் அவன் பாதங்களில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களையும் காசுகளையும் பட்டுத்துணியில் முடித்துக் கொண்டு வந்து கொட்டுவர்.அதை அவன் மீது வாரி இறைப்பர், பின் கோயில் பணியாளர் அனைவருக்கும் தருவர்.இதையே ”சாலி அலங்காரம்” என்பர், சாலி - வளம்.

[இஷ்வாகு மன்னர்கள் தீபாவளி அன்று அயோத்யாவாசிகள் அனைவருக்கும் நாணயம் வழங்கினர்-வால்மீகி]

தீபாவளி அன்று தங்கள் ஊர் இறைவனுடன் அரசனுடன் கொண்டாட இன்றும் வடதேசத்து அன்பர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவது கண்கூடு!

”ஹமாரா ராம்ஜி தேவ், அயோத்யா தேவதா ஹே!” என்று இன்றும் வடதேசத்து அன்பர்கள் மணவாளனுக்கு அருகில் வரும் போது உருகிக் கூறுவதும், ”ஜெய் ஸ்ரீராம் கி ஜே, ஸ்ரீராம் கி ஜே” என்பதையும் காண்கிறோம்.

நமக்குத் தெரிந்த பட்டர்கள் சிலர் வடதேசத்து அன்பர்கள் மணவாளன் அருகில் வருங்கால், ”தும் அயோத்யா நகரீ மஹராஜ் ரங்நாத்ஜி” என்று மணவாளனை அறிமுகம் செய்வதைப் பலமுறை கண்டுள்ளேன்.

சிலர், ”வா வா உங்க ஊரு பெருமாள் தான் இங்க வந்து இருக்கார்” என்று தமிழிலேயே உறவு சொல்வதையும் கேட்டு இருக்கிறேன்.

வடதேசத்து அன்பர்கள் வரும்போது சில நொடிகள் அவர்களுக்கு நிற்க அனுமதி அளிக்கும் அர்ச்சகர்கள் இன்றும் உளர்.

தாயாரைக் காணுங்கால், ”சீதா மாதா மஹராணி கி ஜே!” என்று மிக்க மரியாதையுடன் கிழவன் கிழவிகள் கூட தலையில் முக்காடு இட்டுத் தம் பவ்யத்தைத் தம் அரசிக்குச் செலுத்துவதைக் கண்டு இருக்கிறேன்.

இன்று அயோத்யாவில் தமிழர்கள் ரங்கநாதர் ஆலயம் அமைத்துள்ளனர்.

திருக்கைத்தல சேவை

365 நாட்களில் மணவாளன் 225 நாட்கள் விழாக் காண்கிறார்.மீனாக்ஷி ஒரு படி மேல், 275 நாட்கள் அவளுக்கு விழா![விழா ஒலி மூதூர் மதுரை அல்லவா?]

பத்து நாள் விழாவில் ஒரு நாள் ”திருக்கைத்தல சேவை” என்ற விழா வரும்.அன்று இஷ்வாகு மன்னன் தன் கைகளில் மணவாளனைத் தாங்கிக் கொண்டு மூலஸ்தானத்துக்குள் வைக்க வேண்டும் என்கிறது வால்மீகியின் பதிவு.அதையே இன்றும் செய்வர்.

”அயோத்தியர்க் கோமான், தசரதன் பிள்ளை அழகிய மணவாளனைக் கைத்தலம் ஏந்தித் தாங்குவார்......” என்று அறிக்கை விட, ராமனின் ப்ரதிநிதியாய் ஓர் அர்ச்சகர் மணவாளனைத் தூக்குவார்.

கற்பூரப் படியேற்றம்

தீபாவளியை ஒட்டி வரும் உத்சவத்தில் மணவாளன் மீண்டும் மூலஸ்தானம் ஏறிச் செல்லும் போது பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவப்படும்.[ஸ்ரீராமன் அரண்மனை திரும்பும் போது, பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் தூவி வரவேற்பர்-வால்மீகி]

அழகிய மணவாளனின் புறப்பாடு

ஸ்ரீரங்கம் போனால் ஒரு புறப்பாடாவது காண்க.

அயோத்யாவில் தன் அரண்மனையை விட்டு ஸ்ரீராமன் எப்படி வெளியே வருவான் என்று வால்மீகி பதிவு செய்துள்ளாரோ அதை ஒத்தே, இன்றும் நம்பெருமாள் புறப்பாடு ஆகிறது.

மூலஸ்தானத்தில் அலங்காரம் ஆனவுடன், லக்ஷ்மணனின் ப்ரதிநிதி அதை உரக்கச் சொல்ல, ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற ஊழியர்க் கூட்டம் ”ரகுநாத் மஹராஜ், நாயேன் வந்தேன்” என்று கூறிச் செல்வர்.

மணவாளன் படிகளில் இறங்கும் முன் தன்னை ஒரு முறை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்வார்.

சிம்ம நடை, ரிஷப நடை, சர்ப நடை என்று மூன்று வித நடைகளில் அவன் தெருக்களில் செல்வான், இன்றும் காணலாம்.

வெயில் அடிக்காத வண்ணம் திரையிட்ட ஓலைத் தட்டி தாங்குவோர் நிழலாய் முன் செல்வர்.லக்ஷ்மணன் [குடை வடிவம்] பின்னால் இல்லாமல் ரங்கன் ஒரு அடி கூட முன்வைப்பதில்லை!

உலா முடிந்து மீளுங்கால் த்ருஷ்டி எடுப்பது வழக்கம். [ஸ்ரீராமனுக்குக் கெளசல்யா கண்ணேறு கழித்தே அரண்மனைக்குள் அழைப்பாள் - வால்மீகி]

ராமானுஜரின் உடல்

அயோத்யாவின் நலனுக்காக லக்ஷ்மணனை உயிர் த்யாகம் செய்ய வைத்த ராமன், லக்ஷ்மணனின் மறுபிறவி என்று மதிக்கத் தகும் ஸ்ரீமத் ராமானுஜரின் உடலைப் பாதுக்காக்க வைத்துள்ளான்.அவர் பூஜித்த காஞ்சி வரதனும் அவருடன் உள்ளார்.மணவாளன் அவர் சன்னிதி சென்று வந்தால் அபிஷேகம் ஆகியே மூலஸ்தானம் சேர்வான். [ராம அனுஜன் - ராமனின் தம்பி]

காவேரிக்கு உயர் மரியாதை

தனக்கு இடம் தந்த காவேரிக்கு ஆடி 18அன்று மணவாளன் மரியாதை செய்வது வழக்கம்.ராணி மங்கம்மாளின் அம்மா மண்டபத் துறைக்குச் சென்று புடவை, மாலை, சந்தனம், தாலி, வளை ஆகியன காவேரிக்கு அளிப்பான்.

வெள்ளம் இழுத்துச் சென்ற அரங்கன்

எழுநூறு ஆண்டுகட்கு முன் ஆடி உத்சவத்தில் மணவாளன் தேவியருடன் படகில் காவேரியில் செல்வதுண்டு.ஒரு விழாவில் வெள்ளம் அபாயமாகப் படகைச் சாய்க்க, அது முதல் சுந்தர பாண்டியன் வெட்டிய தெப்பக் குளத்தில் அவ்விழா நிகழ்கிறது.

தில்லையில் கூரைக்குப் பொன், ஸ்ரீரங்கத்தில் திருமேனிக்குப் பொன்

இன்றைய முதல்வர் புகழ் பெற்ற ஒரு ஜுவல்லரி மூலம் மணவாளனை 7 கிலோ பொன்னால் பூசிமெழுகிட உதவினார் [2013].அவரே அதே கட்டத்தில் கள் அழகருக்கும் 20 கிலோ பொன் தந்து பூசிமெழுகினார்.

சோழர்கள் அதிகம் ஸ்ரீரங்கத்தில் ஈடுபடவில்லை.அவர்கள் தில்லைப் பொன் அம்பலத்தை முழுக்க முழுக்க கவனித்தனர்.

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

கி.பி 12ஆம் நூற்றாண்டில் சோழர் வசம் இருந்து மதுரையை மீட்டான் சுந்தர பாண்டியன்.அவன் மணவாளனுக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தான்.அதுவே ஹிரண்ய கர்ப்பம்.

அவன் தன் பொன் முடியை உருக்கி அதே போல் மணவாளனுக்கு முடி சூட்டினான்.அதற்கு ”சுந்தர பாண்டியன்” என்றே பெயர்.அடிக்கடி மணவாளன் அதையே சிரத்தில் சூடுவது வழக்கம்.

எச்சில் தாங்கிய பாண்டியன்

மணவாளன் எச்சில் உமிழும் பாவனையில் ஒரு பொன் பாத்திரம் உண்டு.அதற்கும் அவன் தன் பெயரையே வைத்துத் தானே மணவாளனின் வாயூறலை ஏற்பதாகக் காட்டினான்.இன்றும் புறப்பாட்டின் போது, ”சுந்தரபாண்டியனை எடுத்தாச்சா?” என்றே கேட்பர்.

ஆண்டாளும் பெரிய கோயிலும்

ஆண்டாள் தன் தந்தை விஷ்ணுச்சித்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கிய இடம் தோப்பு  ராமன் சன்னிதி. அவளது பாதச் சுவடு ஆதிசேஷன் மீது பதிந்துள்ளதாகக் கூறுவர்.

ஆண்டாள் வைத்திருந்த கண்ணன்

ஆண்டாள் அரங்கனுடன் கலந்தபடியால் சேர்த்தி இல்லை.மாலை மாற்றும் இல்லை. ஆனால் ஆடிப்பூரம் அன்று மட்டும் அரங்கனின் மாலையை அவள் ஏற்பது வழக்கம்.அவள் வைத்து விளையாடிய வ்ருந்தாவனத்தில் அவள் அப்பா வாங்கித் தந்த தவழும் கண்ணன் விக்ரஹம் அவளுக்கு அருகில் உட்கார்ந்து உள்ளது. [வடமதுரை மைந்தன் என்று அவனுக்குப் பெயர்]

மதுரையில் கள் அழகர் அடிக்கும் punch dialogue

அழகர் ஆற்றில் இறங்கும் முன் ”கோதை மாலை இல்லையேல், மதுரை போவது இல்லை!” என்று punch dialogue பேசுவதாக நடித்துக் காட்டுவது வழக்கம்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை அழகருக்குக் கொண்டு வரப்பட்டு அதைச் சார்த்தியே ஆற்றில் இறங்கப் போவார்.

திருமலைக்குப் பூமாலை

புரட்டாசி ப்ரஹ்மோத்சவத்தில் ஏழுமலையப்பனுக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாலை விமானம் மூலம் தற்போது போகிறது.மூலவர் திருவேங்கடம் உடையான் அதைச் சேர்த்திக் கொள்கிறார், பின் கருட வாஹனத்தின் போது அம்மாலை மலையப்ப ஸ்வாமிக்கு சூட்டப்படும் [திருமலை உத்சவர்]

பெரிய கோயிலின் டைரி

பெரிய கோயிலின் டைரி என்று ”கோயில் ஒழுகு” நூலைக் குறிப்பிடலாம்.அது சுமார் 1200 ஆண்டுகளாகக் கோயிலின் வரலாற்றைக் கூறும்.அதில் கற்பனைகளும் உண்டு.அதே போல் திருமலைக்கும் ஒழுகு நூல் உண்டு.அவற்றில் உள்ள முக்கிய செய்திகள் உனக்கு இப்பகுதியில் உள.

படையெடுப்புகளின் போது மணவாளன் சில காலம் அழகர் மலையிலும் மதுரை ஒத்தக்கடை ஆனை மலையிலும் கேரளம் - கோழிக்கோட்டிலும் பாதுகாப்பில் இருந்ததைக் கோயில் ஒழுகு பதிவாக்கியுள்ளது.

நைவேத்யங்கள்

தந்த சுத்தி - பல் விளக்கும் சடங்கு

சுக்குக் கஷாயம்

வெற்றிலைத் தாம்பூலம்

வாய் கொப்பளித்தல் சடங்கு

கோதுமை ரொட்டி, பருப்பு, பசும் வெண்ணெய்

கோடையில் இளநீர், பானகம், நீர்மோர்

முளை கட்டிய பயறுகள் - உத்சவம் புறப்படும் போது

மதியம் - சாதம், தயிர், கோதுமை ஹல்வா, முறுக்கு, மிளகு அடை

க்ருஷ்ண ஜெயந்தி அன்று - 12,000 இனிப்புப் பனியாரங்கள்

தீபாவளி - பல விதமான இனிப்புகள்

பொங்கல் - சர்க்கரை, வெண் மிளகு சாதம்

மழைக்கால மாலை வேளை - குங்குமப்பூ போட்டுக் காய்ச்சிய பனங்கல்கண்டு பசும்பால்

இரவில் ஆதிசேஷனுக்கு - பாலில் வேக வைத்த சாதம் - அரவணை [சொல்லி வைத்துப் பெறுதல் வேண்டும்]

தாயாருக்கு தினமும் இரவில் - மிளகு சேர்த்த புளிக்குழம்பு

இரவில் - மிளகு தோசை, அப்பம், அதிரசம்

சித்திரைக் கனி அன்று - முக்கனிகள் கலந்த பால் அன்னம்

மாப்பிள்ளை - பெண் வீட்டார் சண்டை [திருச்சி கோர்ட்டில் 1945ல் வழக்கு]

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஏழாம் பொருத்தம் இன்றும்.காரணம் இந்த மாலை.

”ஆண்டாள் ரங்கனின் மனைவி, அவள் மாலை தர வேண்டாம், மணவாளனின் மாலை இவள் தான் ஏற்க வேண்டும், ரங்கன் ஏற்றால் தானே ஆண்டாள்?” - பெரிய கோயில்

”அந்த ரங்கனையே உலகிற்கு அடையாளம் காட்டியவள் ஆண்டாள்.இவள் மாலையை அழகரும் திருமலையப்பனும் ஏற்கும் போது ரங்கனுக்கு என்ன பழி ஏற்படும்?” - ஸ்ரீவில்லிப்புத்தூர் வழக்கு

கடைசியில் தெய்வச் சண்டை ஊர்ச் சண்டையாகி இன்று வரை தொடர்பே இல்லை! ஆனால் அவளையும் அவனையும் பிரிக்க முடியுமா என்ன?

இலங்கை வீணாகும்

”கலியுக மத்தியில் இலங்கைத் தீவு பாழ்படும்” என்று கல்வெட்டு ராஜகோபுர வாசலின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

அரங்கன் இலங்கையை நோக்கி ப்ரதிஷ்டை ஆகி உள்ளார்.

ஆண்டாளின் உத்தரவு - பாண்டிய நாடு பெண்மைக்கு ஏற்றம் பெற்றது அல்லவா?

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் கோபுரமே தற்போது தமிழகத்தில் உள்ள பழமையான கோபுரம் [கி.பி 11].அது பன்னிரண்டு நிலைகள் கொண்டது.அவளின் உத்தரவை கேரள ப்ரசன்னம் மூலம் பெற்ற பின் தான் ஸ்ரீரங்கம் கோபுரம் பதிமூன்று நிலைக்கு உயர்ந்தது. ஏழாம் நிலைக் கட்டியவர் இசைஞானி இளையராஜா.

மிகப்பெரிய கருடனைக் கட்டியவர் விஜய ரங்க சொக்க நாத நாயக்கர்.

அர்ஜுனன் த்ரெளபதியுடன் சேர்ந்து, பாரதப் போருக்குப் பின் பொன் கொடுத்து எழுப்பிக் கொடுத்த மண்டபமே மூலஸ்தானத்தின் வலது புறம் உள்ள அர்ஜுன மண்டபம்.

மருத நில ஒழுக்கமும் ஸ்ரீரங்கமும்

மருதத் திணை ஒழுக்கம் - தலைவன் பரத்தையின் பால் சென்று மீளுங்கால் தலைவி ஊடல் கொண்டு அவனை ஏற்க மறுத்தல், அதை ஒட்டிப் பாணன் சமாதானத் தூது செய்தல்.

இதையே மணவாளனும் காட்டுகிறான் [மன்னிக்கவும் ஸ்ரீராமன் இப்போது தமிழ் இலக்கியத் தலைவனாகி விடுகிறான்]

பங்குனி உத்திர ப்ரஹ்மோத்சவத்தில் ஏழாம் நாள் ஆயில்யம் அன்று மணவாளன் காவேரி தாண்டி உறையூர் கமலவல்லியிடம் செல்கிறார்.அன்று திருச்சியே அங்கு சேரும் சேர்த்தி காண.ஸ்ரீரங்கநாயகியின் திவ்ய ஆபரணங்கள் உறையூர்க் கமலவல்லிக்குச் சார்த்தப்படும்.மறுநாள் அவர் ஸ்ரீரங்கம் மீள்வார்.

பங்குனி உத்திரம் அன்று அவர் தாயார் சன்னிதி வரும் போது மிக நுட்பமான சங்க இலக்கிய வசங்கள் கொண்டு அர்ச்சகர்கள் நடிப்பர்.மணவாளனைத் தயிர், தேங்காய் மட்டை ஆகியன வீசி எறிந்து அவமதித்து வெளியே தள்ளி, தாயார் சன்னிதி கதவை அடைத்து விடுவர்.

வெயிலில் வேண்டும் என்றே மணவாளனை நிற்க வைப்பர்.

உணர்ச்சி மேலீட்டால் பல அன்பர்கள் மணவாளன் அவமானம் கொள்வதைக் கண்டு அழுவதை இன்றும் காண முடியும்.

இதைப் பற்றி உடனே ராமானுஜர் சன்னிதியிலும் நம்மாழ்வார் சன்னிதியிலும் சில அர்ச்சகர் சென்று சொல்வர், அவர்கள் விக்ரஹங்கள் உடனே தாயார் சன்னிதி வரும்.

இருவரும் முடிந்தவரை சமாதானம் செய்ய முற்படும் அழகிய மருதத் திணை நாடகத்தை மைக் வைத்தே பேசுவதை அழகாக இன்றும் கேட்டு, பார்த்து ரசிக்கலாம்.

மணவாளன்: தேவி நம்மைப் பங்குனி மாத வெயிலில் வதைப்பது ஏனோ? ஸ்ரீரங்கத்தார் ஏளனம் செய்வது கேவலம் அன்றோ? அயோத்யாவில் இப்படி இருந்தாயோ?

ஸ்ரீரங்கநாயகித் தாயார்: அவ்வூர்ப் பெயரைக் கூற யோகிதை இல்லை ஐயா! காவேரி மணல் வெளியில் கிடைத்த உன் கல்யாண மோதிரம் அதைச் சொல்லும்.

ம: கல்யாண மோதிரமா அது என்னிடம் பத்திரமாக உள்ளதே!

தா: அது பத்திரமாக உறையூரில் ஒருத்தி கையில் இருக்குதய்யா!

ம: ஓ அவளா? அவள் என் பக்தை, முக்தி தரச் சென்றேன்

தா: பக்தைக்கு முக்தி படுக்கையிலோ?

ம: வீண் பழி பாவம் சுமத்தாயே தேவி!

தா: என் ஆபரணங்கள் எங்கே? உன் மாலையில் நீண்ட முடி உள்ளதே? உன் மேனியில் நகக்கீரல்களும் பட்டாடையில் மஞ்சள் பூச்சும் உன் அழகைக் காட்டுதே! நாம் ஸ்ரீரங்க ஸ்தலம் விட்டு நம் பாற்கடலுக்கே செல்கிறோம்! நீரும் உறையூர் ஆசைக் காதலியை நம் சன்னிதிக்குள் குடி வைத்துக் கொண்டு சுகமாய் வாழும்!

ம: உண்மை! தன்யனேன்! என் தவற்றை ஏற்கிறேன், நீ இன்றி எம்மால் அணுக்கணமும் இயங்க முடியுமோ? என்னை மன்னிக்கும்!

தா: ”ராமா என்று வந்தவருக்கு அபயம் உண்டு” என்ற உமக்கு என்னிடம் அபயம் இல்லை ஐயா!

ம: கலியுகத்தில் நம் பிள்ளைகள் நீ இன்றி கஷ்டப்படுவார்களே!

தா: அயோத்தியில் நாம் பூமியின் மடி சேரும் போது இந்த அக்கறை எங்கே போனது ஐயா!

ம: என்னை மன்னியும்! ஹே ரங்கநாயகீ.....அந்த ஸ்ரீயும் பூமியும் சீதையும் ராதையும் கோபியரும் ருக்மிணியும் கோதையும் அனைத்தும் நீ தானே!

தா: சரி! மன்னிப்பது தாயின் குணம் என்று கூறுவதால், உன்னை ஏற்கிறேன், தோழிகளே நம் அழகிய மணவாளனை உள்ளே வரச்சொல்லுக!

[பாரத தேசத்து ஸ்த்ரீகள் இப்படித் தானே பலர் இல்லற நன்மை காக்க விட்டுக்கொடுக்கிறார்கள் பல வித ப்ரச்சனைகளில்? அதற்கு மஹாலக்ஷ்மியும் விலக்கு அல்ல.

 

”சமூஹத்தில் கடை நிலை மனிதன் முதல் ஈசன் குடும்பம் வரை, பெண்ணாகப் பிறப்பதே பாவம்” என்று தாக்ஷாயணி புலம்புவதும் நம் தேசத்தில் தானே? பெண்கள் ஏதோ படித்து ஹைஃபையாக வேலைக்குச் செல்வதைக் கண்டு அவர்தம் கொடுமைகள் தீர்ந்தன என்று அவர்கள் ஏமாறக் கூடாது!]

இந்த அழகிய ஊடல் நாடகம் ஆன பின், திவ்யத் தம்பதிகள் ஓர் ஆண்டு கழித்துப் பார்த்துக் கொள்வதால், திரையிடப்பட்ட கொலு மண்டபத்துள் சுமார் இரண்டு மணி நேரம் இருப்பர்.

சுமார் மாலை மூன்றானதும் இருவரும் பங்குனி உத்திர மண்டபம் சேர்வர், கூட்டம் அலை மோதும்.

மணவாளனின் மாலையைத் தாயார் சார்த்தி இருப்பள்.

இரவில் பன்னிரண்டு மணிக்கு ஊர் காண அபிஷேகம் ஆகும்.அப்போது உண்மையிலேயே ”பத்ம முகீம்” [தாமரையை ஒத்த முகத்தினள்] என்று மஹாலக்ஷ்மி வர்ணிக்கப்படுவதை நான் தாயாரின் முக நிறத்தில் கண்டிருக்கிறேன்.

அதிகாலை மணவாளன் சேர்த்தி ஆகி விடை பெறும் போது, அவள் முகம் கருத்து இருப்பதைக் கண்கூடாக நாம் காணலாம், வண்ணம் மாறிவிடும்.அன்று மாலை வரை அவள் தன் கதவை சாத்திக் கொள்வாள்.

அக்காலத்தில் ஸ்ரீரங்க வாசிகள் உத்திரத்தில் தான் புத்தாடை எடுப்பராம், அதை பத்திரமாக மடித்து வைப்பராம்.

[மணிப்ரவாளம் எனப்படும் தமிழ் கலந்த சம்ஸ்க்ருதத்தில் உள்ளதை உனக்கு எளிமை செய்துள்ளேன்]

அஸ்வமேத யாகம் செய்ய ஸ்ரீராமன் அயோத்யாவில் பொன்னால் சீதையை உருவாக்கினான்.அச்சிலை இன்றும் திருவள்ளூர் விஜயராகவனின் தேவியாக அருள் பாலிக்கிறது.

பெரிய கோயிலின் பாகங்கள்

மன்னிக்கவும் இன்று காணும் மதுரையும் அரங்கமும் சுமார் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் தான் நாயக்க மன்னர்களின் பேர் ஆதராவால் உருவாகி இன்று காணும் தன்மையைப் பெற்றன.

மிக முக்கிய பாகங்கள் பற்றிய சில குறிப்புகளை நான் பகிர்கிறேன்.

ரங்க விமானம்

மூலஸ்தானம், ரங்க விமானம் எல்லாம் தர்மவர்மா என்ற கிளிச்சோழன் கட்டியதே! அவனைக் குறித்த இலக்கிய வரலாற்றுத் தகவல்கள் இல்லை.

அகநானூறு, கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரம் தெளிவாக ஸ்ரீரங்கம் பற்றிப் பதிவு செய்கின்றன.

சப்த ப்ரகாரங்களும் அயோத்யாவும்

ஏழு ப்ரகாரங்கள் போல் அயோத்யாவில் இன்றும் கனக பவனைச் சுற்றி ஏழு பெரிய வீதிகள் உள. கனக பவன் - தசரதன் ஆசைக் கைகேயிக்குக் கட்டியது.ஸ்ரீராமன் கல்யாணம் ஆனபின் சீதைக்கு அவள் அதைக் கொடுத்தாள். இன்றும் அயோத்யாவில் கனக பவன் ராமனே மிகவும் ப்ரஸித்தியானவன்.மாலை வேளையில் இங்கு நிகழும் ஆரத்தி மிக ப்ரஸிதம்.

ராஜமகேந்திரன் வீதி

அரங்கத்தில் மூன்றாம் சுற்று மதிலைத் திருமங்கை மன்னன் கி.பி 9ல் எழுப்பினான், அதை ராஜமகேந்திர சோழன் கி.பி 1060-1063ல் மீண்டும் புதுப்பித்துத் தன் பெயரால் ”ராஜமகேந்திரன் வீதி” என்று கல்வெட்டில் பதித்தான்.

உருப்படியாகவும் சீரழிந்தும் அரங்கத்தில் 644 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டு உள.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆழ்வார்களின் பாசுரங்களை ஸ்ரீமத்நாதமுனிகள் தொகுத்து அரங்கத்தில் இருந்து தான் தமிழகத்துக்குப் பரப்பினார்.

மத வெறிச் சோழன்

கி.பி 1070 - 1120 காலத்தில் தான் முதலாம் குலோத்துங்கனின் வெறுப்புக்கு ராமானுஜரும் பெரிய கோயிலும் ஆளான வரலாறு உண்மை.மணவாளனின் அறு காலப்பூஜைக்கு மிகவும் குறைந்த மான்யமே தரப்பட்டதாம்.பல சொத்துக்கள் தில்லை சேர்ந்துள்ளன....மத வெறி!

இவன் ஒட்டக்கூத்தரைக் கொண்டு ஆடிய ஆட்டமும் கம்பனை mental torture செய்த வரலாறும் என்னைப் பாடம் எடுக்கவே செய்யாமல் செய்துவிடும்!!!

கடல் சேர்ந்த பெருமாள்

அவன் தூக்கிக் கடலில் வீசிய தில்லை திருச்சித்ரக்கூடத்து கோவிந்தராஜனை ராமானுஜர் மீட்டு இன்று கீழ்த்திருப்பதியில் ப்ரதிஷ்டை செய்தார்.இன்றும் அவர் மேனியில் கடல் அரிப்பின் தடயங்களைக் காண்க.

கி.பி 1228 வரை மூன்றாம் குலோத்துங்கன் அரங்கத்தைக் கைக்கொண்டு அடக்கியே வைத்தான்.மன்னிக்கவும் ஸ்ரீவைஷ்ணவர்களும் செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல.கி.பி 10 வரை வேற்றுமையில்லா சமயங்கள் சுயநலம் கொண்டு அரசின் பலத்தைப் பெற போட்டி போட்டன.

கி.பி 1311 - மாலிகாஃபூர்

கி.பி 1323 - டில்லி முகமதிபின் துக்ளக்

கி.பி 1781 - மைசூர் ஹைதர் அலி

கி.பி - 1790 - மைசூர் திப்பு சுல்தான் - இவர்கள் செய்த அட்டூழியங்கள் அதிகம்!

கி.பி 1810ல் வேல்ஸ் மூலம் தான் கிழக்கு இந்தியக் கும்பினி மூலம் நல்ல காலம் மீண்டும் பிறந்தது.கும்பினி மிக விரைவில் வரலாற்றை, சொத்தைப் பதிவாக்கி 1845ல் தர்மகர்த்தாவைத் தன் ஆளுமையின் கீழ் நியமித்து ஒழுங்கு செய்தார்.

இன்று தில்லை தீக்ஷிதர்கள் ஒரேடியாக ஆடியதைப் போல் தான் ஸ்ரீரங்க வைஷ்ணவர்களும் மிகவும் திமிருடன் இருந்தனர்.தமிழக அற நிலையத்துறை தட்டி வைத்துள்ளது.தில்லைக் கூத்தனும் அறநிலையத்துறை சேர்ந்தான்.

மனுநீதிச் சோழன் அமைத்த முதல் திருச்சுற்று

என் ஆய்வில் கூற விரும்பும் ஒரு விஷயம் உண்மையில் யார் யார் ஆதிகாலத்தில் கோயிலை விரிவு செய்தனர் என்று கூற வரலாற்றுப் புறச்சான்றுகள் இல்லை.ஆனால் முதல் சுற்றை மூலஸ்தானத்தை ஒட்டி, மனுநீதிச் சோழன் அமைத்துள்ளான், அவனுக்கே ”தர்ம வர்மா” என்ற பெயருண்டு.

ள் விழுந்த கிள்ளி மண்டபம்

உறையூர் நலங்கிள்ளி எழுப்பிய மண்டபமே கிள்ளி மண்டபம்.மூட மக்கள் பிற்காலத்தில் கிளி மண்டபம் ஆக்கிவிட்டனர்.

மூன்றாம் நான்காம் சுற்றைக் குலசேகராழ்வாரும் திருமங்கை மன்னனும் எழும்பினர் என்பதை விட முன்னம் இருந்த மதில்களை அவர்கள் சீரமைத்தனர் என்பதே பொருந்தும்.

திருமேனிப் பாதுகாப்பு

மணவாளனின் திவ்யத் திருமேனி மீது பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, சில வெளி சொலாத மூலிகைகள் அரைத்துப் பூசி, பருத்திப்பட்டால் சுற்றப்பட்டு layer layer ஆக மூடப்பட்டுப் பொன் கவசம் சார்த்தப்படும்.இதுவே அவன் மேனியைப் பாதுகாக்கும் தன்மை.தாயாருக்கும் அவ்வாறே!

மிகப் பெரிய கருடனை நாயக்க மன்னர்கள் உருவாக்கினர்.ஆனால் ஹனுமான் மிகச் சிறிய வடிவில் கோயிலின் வெளியில் உள்ளார்.

த்யாகராஜர் பாடிய அரங்கன்

ஒரு சித்திரை விழாவில் த்யாகராஜர் ஸ்ரீரங்கம் சேர்ந்து தன் குழாமுடன் தரிசனம் செய்து தங்கி இருந்தார்.குதிரை வாஹனம் கண்டு மணவாளன் வருங்கால், த்யாகராஜர் மிக பவ்யமாக முனுமுனுத்துக்கொண்டு பாடினார்.மணவாளன் அர்ச்சகர் மீது இறங்கி, ”த்யாகராஜரே! நாம் தந்த ராமனைத் தான் பாடுவீரோ? உரக்கப் பாடும்!” என்று கூற,

”ஓ ரங்க சாயீ” என்று த்யாகராஜர் உருகிப் பாடிய பின்னரே மணவாளன் நகர்ந்தான்.[Listen to M.S.Subbulaxmi]

முத்துசாமி தீக்ஷிதர் பாடிய மணவாளன்

தீக்ஷிதர் ஸ்ரீரங்கம் சேர்ந்த போது, இரவில் அவரை வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்டனர் கோயில் அன்பரும் அரங்கனும்.”ஸ்ரீரங்கபுரவிஹாரா” என்று மிக அத்புதமாக ஸ்ரீராமாவதாரம் செய்த மணவாளனாகப் புனைந்து பாடுகிறார்.

ஸ்வாதித் திருநாள் ஏங்கிய அரங்கன்

ஸ்ரீராமாயணத்தை முழுக்க ஒரு கீர்த்தனை மூலம் புனைந்தார் ஸ்வாதித்திருநாள் மஹராஜ்.அதுவே ”பாவயாமி ரகுராமம்”.,மிக மிக ப்ரஸித்தி பெற்ற கீர்த்தனை.அதை ரங்கன் சன்னிதியில் பாட மிகவும் ஏங்கினாராம், ஆனால் ஆயுள் கொடுத்து வைக்கவில்லை.

ஸ்ரீமத் ராமானுஜரையே கோயில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் பலர் வெறுப்புடன் எதிர்த்தனர், கொல்லத் திட்டம் போட்டனர்.ஆனாலும் தாக்குப் பிடித்தே அவரும் சமூஹப்பணி செய்தார்.

ஞாபகம் கொண்டவற்றை அழகிய மணவாளனின் அவன் தேவியின் அருளால் பதிவாக்கி விட்டேன். இன்னும் யோசிக்கிறேன்! என்ன கிடைக்கிறது பார்க்கலாம்!

Abhaya hastham – let us forgive others and accept and maintain harmony which we take from this legend.

Srivilliputhur Andal

Details
Parent Category: Blog
Category: Uni5 Self Awareness
Hits: 3701

Sakthi foundation

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் – a social, feminism, historical presentation.

 

தோற்றப் பொலிவு - ஆண்டாள் கோபிகைகளின் ரஸிகை.அதனல தான் தான் வாழ்ந்த காலத்திலும் இடையர்கள் போல் ஆடையில் உலா வந்தால், அது அவளது சாதியியத்தைத் தாண்ட வைத்தது.

இன்றும் ஆண்டாள் மதுரைப் பகுதி இடையர் பெண்கள் பாவனையில் தான் நடை உடை பாவனையுடன் ஒரு கோபிகையாக அலங்காரம் செய்யப்படுவதைக் காண்க.

கண்டாங்கிச் சேலை, மதுரைப்புறத்துச் சாயக்கொண்டை, கோபிச் சந்தனம், உடலில் உள் ஆடைக்குள் வெண்ணெயுடன் கலந்த பச்சைகற்பூரப் பூச்சு, கையில் வெற்றிலைக் கிளி என ஆள்கிறாள்.

கம்பன் கொடுத்த சூடகம்

கம்பனுக்குப் பெரிய கோயில் பொற்காசுகள் கொடுத்துச் சிறப்பித்துள்ளது.ஆனால் அதை அவர் சூடக ஆபரணமாக [சீதையின் அடையாளச் சின்னம்] ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்குக் கொடுத்துள்ளார்.

மார்கழி உத்சவத்தில் இன்றும் ”கூடாரை வெல்லி” விழாவன்று ஆண்டாள் ராஜகோபுரம் ஏகி, ”நம் சூடகம் எங்கே?” என்பதும், ”அம்மா! அதோ தமிழ்க் கம்பன் கொண்டு வருகிறார்!”என்று கூறி, கம்பனின் சூடகத்தை அவள் சிரத்தில் உயர்ந்த ஞானத்தின் அடையாளமாகச் சார்த்துவதைக் காணலாம்.

ஓர் அங்க அடையாளம்

மிக அடர்த்தியான சுருண்ட கூந்தல் தனக்கு உண்டு என்பதை அங்க அடையாளமாக ஆண்டாள் குறித்துள்ளாள். ”சுரும்பார் குழல் கோதை”.

அவளது ஆறு பொன் வளைகளும் அழகர் தோளில் விளங்குகின்றன.அவளது வைரத் தோடு இன்றும் அவளது செவிகளில் மின்னும்.சங்கிடம் இறைவனின் வாயூறல் எப்படி இருக்கும் என்று அவள் அகத்துறையில் வினவியதைக் கொண்டு பகவத் ராமானுஜர் சங்குப்பதக்கம் சார்த்தியுள்ளார்.

பெரியாழ்வாரின் மாணவன் ஸ்ரீவல்லப பாண்டியனின் அமைச்சன்.அவன் ஆண்டாளுக்குப் பல ஆபரணங்கள் செய்து சார்த்தினன்.அவற்றுள் அவள் அடிக்கடி சார்த்திக் கொள்வது பொற்பாண்டிக் காசு மாலை.

திருமலை நாயக்கர் வைர மூக்குத்தியும் சிவப்பு நவரத்னக் கைகளும், பாதங்களும், கிளியும் செய்து கொடுத்துள்ளார்.

தங்கக் கண்ணாடி, பொன் எண்ணெய்க் கிண்ணி, பொன் சீகக்காய் அரப்புக் கிண்ணி, தங்கக் கொண்டை ஊசி, சிக்கெடுக்கும் சீப்பு ஆகியன ராணி மங்கம்மாளின் கொடை.

ஸ்ரீரங்கமன்னாரும் ஆண்டாளும் உடைகளை மாற்றி அணிவது வழக்கம்.ராதையும் கண்ணனும் அவ்வாறு அணிவர் - பாகவதம்,இன்றும் வடதேசத்தில் கண்ணனை ராதையாய், ராதையைக் கண்ணனாய் அலங்கரிப்பதைக் காணலாம்.

”ஆண்-பெண் சமூஹ உறவு, ஒற்றுமை, சமச்சீர், சக்தி-புருஷ பாவம் ஆகியனைவற்றை உட்கொண்ட அலங்காரம் இது” - இருவரும் ஒன்றே என்ற காதல் மகத்துவத்தின் குறியீடே.

மார்கழி முப்பது நாளும் ஆண்டாள் தான் நீராடிய குளத்தில் தான் இன்றும் எண்ணெய்க் காப்பு விழா காண்கிறாள்.அப்போது கோயிலுக்குப் பின் உள்ள அவளது தோழியின் வீட்டில் தான் அரிசி உப்புமா அவளுக்கு நிவேதனம் ஆகும்.ஆண்டாள் அரிசி உப்புமாவை மிகவும் உகந்து உட்கொண்டதாக வரலாறு.

ஸ்ரீமத் ராமானுஜர் குளத்தைத் தூர் வாரி ஆண்டாளின் பொருள் ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்துள்ளார்.

ஸ்ரீஆண்டாளின் வீடே பெரியாழ்வாரின் மறைவுக்குப் பின் கோயிலாக அவரது தம்பி குடும்பத்தால் மாற்றப்பட்டு, இன்றும் அவர்களே ப்ரதான பூஜைகள் செய்கிறார்கள்.

பெரியாழ்வார் மன அமைதியின்றி அழகர் மலையில் சென்று வாழ்ந்து அங்கே அழகர் அடி சேர்ந்தார்.

வெள்ளிக்கிழமை ஊஞ்சல்

ஸ்ரீவல்லப பாண்டியனும் அமைச்சனும் கோயிலை எழுப்பியும், வெள்ளிக்கிழமைப் பொன் ஊஞ்சலையும் சமர்ப்பித்தனர்.இன்றும் ஆண்டாளை நன்கு அருகில் காண வேண்டும் எனில், வெள்ளிக்கிழமை மாலை அவள் மன்னாருடன் பொன் ஊஞ்சலில் இருக்கும் போதே காணலாம்.

நானே கண்ணன்!

மார்கழி உத்சவத்தில் மாலையில் குளத்தில் இருந்து வரும் போது கண்ணனாக அலங்காரம் செய்து கொண்டே வருவள்.இதுவும் வ்ருந்தானவத்தை ஒத்த வழிபாட்டு முறை, தானும் இறைவனும் ஒன்றே என்ற ஏக சத்ய தத்வத்தை அவள் உணர்ந்த பாவத்தையே இது குறிக்கும்.

சில்ப சாஸ்த்ரமும் கிளியும்

அவள் கையில் உள்ள வெற்றிலைக் கிளி செய்ய ஐந்து மணி நேரம் ஆகும்.வெள்ளிலை, மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளை மொட்டு, காக்கைப்பொன், அரளி ஆகிய கொண்டு அவளுக்குக் கிளி சார்த்தப்படும்.

”இருப்பது ஒரே சத்தியம்” என்பதையே கிளி உணர்த்தும்.கிளிக்கு நாம் சொல்லிக் கொடுத்ததைத் தான் பேசத் தெரியும், அதற்குத் தானாக எதையுமே பேச வராது.இருப்பது ஒரே பரம்பொருள், அதுவே அனைத்துமாக ஆகி உள்ளது என்ற உண்மையையே கிளி உணர்த்தும் பாவனையில் மீனாக்ஷியும் ஆண்டாளும் கிளியைக் கொண்டு உள்ளனர்.

அழகருக்கு ஆயிரம் அண்டாக்கள் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பணம் செய்வதாக ஆண்டாள் குறிப்பிடுவதைக் கண்ட ராமானுஜர் அழகருக்கு அதைச் செய்தார்.

ஹனுமானுக்கு அனுகரம் செய்த ஆண்டாள்

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் ஆண்டாள் தன்னை ஹனுமான் வாஹத்தில் ஏற்றி உலா வர வேண்டும் என்று கோயில் அர்ச்சகர்கள் கனவில் கூறினாள்.ஹனுமான் அழைத்துத் தான் வாராமல் இருந்ததை நிவர்த்தி செய்து கொண்டாள்.உலகில் வேறு எங்கும் இறைவி அனுமான் வாஹனத்தில் ஏறுவது இல்லை!

மிக்க கட்டுப்பாடுகள் உள்ள ப்ராஹ்மணக் குலத்தில் ஆயிரம் ஆண்டுகட்கு முன் ஒரு பெண் மிக பகிரங்கமாகத் தன் காதலையும் காமசுகானுபவ ஏக்கத்தையும் public காக வெளியிட்ட தைரியம் ஆண்டாளுக்கே உண்டு! Freedom of expression எல்லாம் பாரத தேசத்தில் என்றோ வந்து விட்டது!

சரித்திரத்திலும் சில உண்மைகள் மறைக்கப்படும்.இலக்கியம் என்பது நாம் கொஞ்சுவது அல்ல என்று ஜெயகாந்தன் கூறுவதைக் கருத்தில் கொள்க.

யாரோ பெற்ற பென் குழந்தை, ஊர்த்தலைவர் விஷ்ணுச் சித்தர்தம் துளசி வனத்தில் கிடத்தப்பட்டு ஆண்டாளாக வளர்ந்தது.அதை எந்த அளவு ப்ராஹ்மண சமூஹம் அன்று ஏற்றது என்பதில் பெரிய கேள்வி behind the screen உள்ளது.

தேவர் அடியார் வாழ்க்கையில் அவள் தன்னைப் பிணைத்துக் கொள்கிறாள் என்று ஆய்வுகள் கூறுவதையும் கவனத்தில் கொள்க.

ஆண்டாள் வாழ்ந்தது வெறும் பதினெட்டு ஆண்டுகளே!

அவள் பாடியது பொது மக்களின் மேன்மைக்காக!

”religion is not for empty belly'' என்று விவேகானந்தர் கூறும் முன் ஆயிரம் ஆண்டுகட்கு முன் அதைக் கூறியவள்.

தேசம், உழவு, உழைப்பு வளர மழையே ப்ரதானம் என்று இயற்கைக்குக் குரல் கொடுத்தவள். அதனால் தான் அவளை பூமியின் அம்சம் என்று கூறுகிறோம்!

இன்று சமூஹம் கொண்டாடும் ஆண்டாள் அவள் காலத்தில் தூற்றப்பட்டாள் என்பதே உண்மை!

இதையெல்லாம் மீறுபவர்கள் தான் சமூஹ முன் மாதிரிகள் ஆவர்.

அவளது மாலை என்பது, மனதின் உயர்க் குறியீடே.மனதை முழுமையாகப் பரிமாறிக் கொள்ளும் குறியீடே கல்யாணத்தில் மாலையின் தத்துவம்.அதையே அவளது மாலை மாற்று வைபவம் காட்டுகிறது.

கல்யாணம் செய்து கொள்ளாமல் பெண்கள் தம் எண்ணப்படி நல்ல வழியில் வாழ முடியும் என்பதற்கு ஆண்டாளும் முன் உதாரணம் ஆகிறாள்.

ஆடி உத்சவத்தில் வரும் திருமடி சேவை கூட தம்பதிகளின் அன்பையும் அதில் பெண்மையின் முக்யத்துவத்தையும் உணர்த்துவதாகக் காட்டுகிறது கோயில்.

ஆண்டாளின் initial

தன்னைக் கண்டு எடுத்து வளர்த்த தன் தந்தையை மிகவும் மதித்த அவள் initial status ஆக அவரையே ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் வைத்துப் பதிவாக்கியுள்ளாள்.

வருவாய்க்கு வழி காட்டும் லக்ஷ்மி

திருப்பாவையில் ஒரு தேசத்தின் நிரந்தரமான வருவாய் என்பது அதன் உழவுத் தொழிலை வைத்தே உள்ளது என்பதைக் காட்டி இருக்கிறாள்.

அவள் பூமியின் அம்சமா?

சாதிகள் கடந்த நிலையில் எவருக்கு இறையாண்மையில் உரிமை உண்டு என்று அவள் பூமியின் பொதுவுடைமையைப் பாடியதால் தான் பூமியின் அம்சம் எனப்படுகிறாள்.

வாழும் போது ஓட ஓட விரட்டி அவமதிப்பது, செத்த பின் கோயில் கட்டி விழா எடுப்பதும் தான் நமக்குத் தெரியும்! இதற்கு ஆண்டாளும் விதிவிலக்கு அல்ல!

ஆண்டாள் என்பது ஏன்?

இறையாண்மையைத் தன் பொதுவுடைமைச் சேவையாலும் சமூஹ அக்கறையாலும் பக்தியாலும் ஆட்கொண்டதால் ”ஆண்டாள்” ஆகிறாள்.

அவளுக்கு விஷ்ணுச்சித்தர் வைத்த பெயர் கோதை - மலர்ச்செண்டு என்று அர்த்தம்.

மார்கழி நீராட்டத்தில் பாண்டிய மஹராணியர் நீராடும் பாவனையில் ஆண்டாள் மிக விசேஷமாக நீராடுவள், you tube காண்க.

வரதக்ஷிணையை ஏற்காத ஆண்டாள்

பங்குனி உத்திரத்தில் கல்யாணம் ஆன அன்று மாலை ஆண்டாளும் மன்னாருடன் தன் சித்தப்பா வீட்டுக்குள் செல்வாள், அங்கு பால்பழம், சீர் எல்லாம் தரப்பட்டு, வரதக்ஷிணை தராத பொய்ச்சண்டை நடிக்கப்படும்.அப்போது அவள் அணிந்திருந்த வைர மூக்குத்தி அன்று அவளுக்கு அணிவிக்கப் படும்.பின் வரதக்ஷிணையாக வைரமூக்குத்தி தரப்பட்டதை ஏற்காத ஆண்டாள் அதை அணிவதே இல்லை என்று சங்கல்பம் கொண்டு கழற்றி வைத்து விடுவாள். நவயுகப் பெண்களே! Feminism ஏதோ மேகத்திய தத்துவம் இல்லை!

மாப்பிள்ளையை choose செய்யும் உரிமை

ஸ்ரீரங்க மன்னார், அழகர் [காட்டு அழகர் கோயில்], அண்ணாமலை ஸ்ரீவேங்கடவர், சிவகாசி திருத்தங்கல் பெருமாள் ஆகியோர் நான்கு கருட சேவை செய்து ஆண்டாள் முன் நிற்க, ஆண்டாள் தான் ஸ்ரீரங்க மன்னாரையே மணக்க விரும்புவதாகத் தன் தந்தையிடம் கூறும் விழா பங்குனியில் உண்டு.

பெண்மைக்குச் சம உரிமை

ஆண்டாளும் ஸ்ரீரங்க மன்னாரும் எப்போதும் ஒரே வேளையில் தான் உலாக்காண்பர். இருவரும் ஒரே வேளையில் வாஹனங்களில் வருவர்.இது சம உரிமையின் சின்னம்.

உலகம் நம்மைக்காக நோன்பு

மார்கழி ஆரம்பிக்கும் முன் பெரியாழ்வார் ஸ்ரீரங்க மன்னாரின் அனுமதியுடன் உலக நலனுக்காக மார்கழி வ்ரதம் இருக்க முறைப்படி ஆண்டாளை வீட்டுக்கு அழைக்கும் வைபவம் இன்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உண்டு. ஒரு நாளும் பெரியாழ்வார் ஆண்டாளின் வீட்டில் தங்குவது இல்லை! வடபத்ர சாயி கோயிலுக்கு அருகில் உள்ள தன் கோயிலுக்கே இரவு எத்தனை காலம் ஆயினும் வந்து விடுவார்.

பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் ஆரம்பம் ஆன அக்கால கட்டத்தில் அவள் தன் தந்தையுடன் சுற்றுப் பயணம் செய்தாள், மக்களைச் சந்தித்தாள், ஆன்மீகக் கல்வியை எடுத்துக் கூறினாள்.அவளது பாடல்கள் சமூஹத்தில் மக்களால் ஏற்கப்பட்டன என்பதில் ஐயம் இல்லை!

I thank DR.Prdaheep Kumar who accompanied me, took me to this place and also reviewed, late Mr.Ramasamy anna [Virudhu nagar] who took me to this place in early 1970s.

DR.M.Madeswaran.M

17.4.2016, Madras

Page 10 of 28

  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
Support Joomla!
Contribute!
Joomla! Books
Books!
Joomla! Shop
Shop!

Powered by Joomla!®