Uni5 Community Blog
Uni5 Self Awareness
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1925
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2488
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வீசும் காற்றை மதுரை மக்கள் அனுபவிப்பதைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
குற்றாலத்துப் பொதிகை மலைச் சாரலின் காற்று மதுரையில் புலவர்களால் போற்றம் படும் தன்மை உடைத்து.காற்று விழிப்புணர்வின் குறியீடு.
வேதச் சடங்குகள் மூலம் எழும் புகையின் மணம், மதுரையின் வீடுகளில் அடுக்களையில் தாளிக்கும் சமையலின் மணம், வீதிகளில் விற்கும் சுவை மிகு அப்பம் சுடும் புகை மணம், சோலைகள் தோப்புகள் வயல்களில் உள்ள பசுமையின் மணம், அகில் சாம்பராணியின் மணம், பாண்டிய மன்னைன் அரண்மனையில் உள்ள நறுமணப்பொருட்களின் மணம் எனப் பல்வேறு நல்ல வாசனைகள் கொண்ட காற்று வீசியது.
மதுரையின் நடுவில் மனிதர் தம் ஆணவத்தை அழித்துப் பிறவிகளை அழிக்கும் மழு [கோடரி] ஏந்திய சிவனின் கோயில் அமைகிறது.
பாண்டிய அரசரின் அரண்மனைப்பகுதி அதன் அருகில் அமைகிறது.
மதுரையில் அந்தணர்கள் ஓதும் வேத மந்த்ரங்கள் ஒலிக்கின்றன.
அதிகாலையில் மாலையில் பாண்டிய வீரர்கள் ஓங்கி அரையும் வீர முரசுகள் அதிர்வன.
காட்டில் இருந்து பழக்குவதற்காகப் பிடிக்கப்பட்ட யானைகளின் பிளிரல், போர் யானைகளின் பிளிரல்,குதிரைகளின் கணைப்பு கேட்கும்.
பறையடித்து ஆடுவோரின் ஒலி கேட்கும்.
பலவகை மரங்கள் ஊர் முழுவதும் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ளன.
புலவர்களால் போற்றப்படும் வைகை நதியில் யானை, குதிரை, சிங்கம் ஆகிய விலங்குகளின் முகம் கொண்ட படகுகள் போக்குவரத்து செய்தன.
வைகையின் தென்கரை மருத மரங்கள் சூழப்பட்டு ”திருமருதம் துறை” எனப்பட்டது.
மிக உயர்ந்த இறைவன் வாழும் மதுரை வலம் வர வினை அகலும் என்று மக்கள் நம்பி ஊரையே ப்ரட்சிணம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது.
அகழியுடன் கூடிய நெடிய கோட்டை ஊரைச் சூழ்ந்தது.
அகழி மிக ஆழம் கொண்டு, தாமரை, அல்லி போன்ற நீர்ப்பூக்கள் நிறைந்து, கொடும் முதலைகள் கொண்டும் இருக்கும்.
பாண்டிய அரசன் வெற்றி கொண்ட பிற தேசத்துக் கொடிகள் கோட்டையின் மேற்சுனரில் பறந்தன.
கோட்டை வாயிலை வீரம் மிக்க க்ரேக்க தேசத்து, ரோம் நகரத்து, எகிப்து தேசத்து வீரர்கள் காவல் காத்தனர்.
ஊருள்ளும், வெளியிலும் மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி பண்ணும் குளங்கள், குட்டைகள், ஏரிகள் இருந்தன.
கிழக்குப்பகுதிக் கோட்டையை ஒட்டி வெளியில் துறவிகள் தங்கும் ஆஸ்ரமங்கள் இருந்தன.
மஹாவிஷ்ணு, பலராமன்,முருகன் கோயில்களும் புத்த விஹாரமும், சமணப்பள்ளியும் மதுரையில் இருந்தன.
மாடங்களும் மேல் தளமும் கொண்ட வீடுகள் இருந்தன.
ஆடி மாதத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து தென்மேற்குப் பருவக் காற்று மதுரையில் வீச மக்கள் அதை அனுபவிப்பர்.
கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள தொண்டி என்ற மிகப் பழமையான துறைமுகம் மூலம் கடல் வணிகம் செய்து, கப்பல்கள் மூலம் பெற்ற அகில், பட்டு, கர்ப்பூரம், சந்தனம் போன்ற பொருட்கள் பாண்டியர்க்குக் கப்பப் பொருட்கள் ஆகும்.அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து வீசும் மாமதுரை.
பெண்கள் சூடும் மலர்களின் வாசம் கலந்த காற்று வீசும் மதுரை.
காமன் பண்டிகை கொண்டாடும் பங்குனி உத்திர விழா கொண்டாடும் மதுரை.
ஆடி மாதம் வைகையில் புது வெள்ளம் வர, அதில் நீராடி, படகுகள் ஓட்டி விளையாடும் மதுரை மக்கள்.
பாண்டிய மன்னன் அந்தப்புரத்தில் களிக்கும் உய்யாவனம் கொண்ட மதுரை.
உயர்ந்த கலைஞர்கள் பலர் தம் கலைத்திறனைக் காட்டி விருதுகள், பணம் பெறும் கலைகளை வளர்க்கும் மதுரை.
மருந்துகள், தேர்ச் சக்கரங்கள் பாகங்கள், போர்க் கருவிகள், தந்தப் பொருட்களும், நறுமணப் பொருட்களும்,பூக்களும் மாலைகளும் விற்கும் வியாபாரம் களை கட்டும் அங்காடித் தெரு கொண்ட மதுரை.
மிக உயர்ந்த நவரத்னக் கற்கள் விற்கும் ரத்னக் கடை வீதி கொண்ட மதுரை.
மிக உயர்ந்த தங்கம் விற்கும் பொன் வணிக வீதி.அதில் பொன்னின் விலை, தரம் குறித்த விளம்பரக் கொடிகள் பறக்கும் மதுரை.
பருத்தி, கம்பளி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட பல்வேறு ஆடைகள் விற்கும் புடவைக் கடைத் தெரு கொண்ட மதுரை.
தராசு மூலம் நிருத்துப் பொருளை விற்பாரும், தரகு வேலை செய்வாரும், மிக உயர்ந்த மிளகு மூட்டைகள் கொண்டு வியாபாரம் செய்வோரும், உணவுப் பொருட்களும் தானியங்களும் விற்கும் கூலக்கடைத் தெருவும் கொண்ட மதுரை.
பல்வேறு தொழில் செய்வோர் வீதிகள்.
அந்தணர் தெருக்கள், அரசு அலுவலர் தெருக்கள், வேளாளர் வீதிகள், முச்சந்திகள், நாற்சந்திகள், ஊரின் நடுவில் உள்ள கோயிலைச் சுற்றி உள்ள கடைத்தெருக்கள், வெயில் புகாத வண்ணம் அடர்ந்த சோலைகள் கொண்ட மதுரை மாநகர்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2111
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2217
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1871
கொங்கு தேசத்தின் ஆனைப் மைப்பகுதிக்கு அக்காலத்தில் உம்பர்க்காடு என்று பெயர்.சேரர்கள் இதைத் தம் கீழ் கொண்டு வர முயன்றனர்.அதன் மன்னன் தான் நன்னன்.
இவன் தரமான வியாபாரம் மூல பெரும் செல்வன் சேர்தான்.இவனுக்குப் பத்து மனைவிகள்.ஆனால் இவன் யாருக்கும் கொடையோ உதவியோ செய்ததில்லை.
இவனுடைய காவல் மரம் உயர் ரக மாங்கனி மரம்.அது மிக்க காவலையுடையது.அதன் அருகில் மக்கள் வர இயலாது.
அம்மரத்தில் இருந்து தானாக விழுந்த மாங்கனி ஒன்றை அவ்வூர்க் கொற்றவைக்குப் பூஜை செய்யும் அந்தணரின் மகள் ஆற்றில் மிதக்கக் கண்டு எடுத்து உண்டாள்.
இதைக் கண்ட வீரர்கள் அவளைக் கைது செய்து நன்னன் முன் நிறுத்தினர்.
அந்தணன் தன் மகளீன் எடைக்கு ஈடாகப் பொன் தானம் செய்வதாய் வாக்களித்தும் நன்னன் அவளைக் கொன்றான்.புலவர்கள் எடுத்துக் கூறியும் அவன் கேட்கவில்லை.
அப்பெண்ணை மயானத்தில் மயானக் கொற்றவையுடன் சமாதி செய்து நடுகல் வைத்தனர்.ஸ்மசான - மாசாணம்.ஸ்மசானக் காளி சாக்தத்தில் மிக உயர் தேவதை.ஸ்மசானம் - ஆணவம் முற்றிலும் அகன்ற மனம்.
இன்று பொள்ளாச்சி ஆனைமலைப் பகுதியில் ஆற்றோரம் உள்ள மாசாணி அம்மை - சங்க காலம் முதல் உள்ள மயானக் காளியே.அவளுடன் இப்பெண்ணின் ஆன்மாவும் இணைந்தது.
இந்நிகழ்வு ஏற்பட்டு விரைவில் சேரர் செங்குட்டுவன் நன்னனை வென்று, அவன் மனைவியரின் முடிக்கற்றைகள் கொண்டு கயிறு திரித்து, அம்மரத்தை வெட்டி விறகுகள் ஆக்கி சுமக்க வைத்தான் என்று சங்க நூல் பதிற்றுப்பத்து கூறும்.
மாந்த்ரீகம் மூலம் பகை தேசத்தை ஒடுக்கவே ஆதி காலத்தில் ஏவல் பயன்பட்டது.ஆனால் அது இன்று மனிதனின் சுயநலனுக்காக உள்ளது.செய்த வினையின் பலன் நம்மைச் சேருவது உறுதி.
மாசாணம் கொற்றவையான மயானக் காளி மாசாணி அம்மை நம் மனதில் உள்ள வேண்டாத எண்ணங்களை சுடட்டும்.தவறுகளை மன்னிக்கும் பக்குவத்தைக் கொடுக்கட்டும்.
காசி மயானத்து பைரவரின் சக்தியாக இவள் ஸ்மசான பைரவியாய் விளங்குகிறாள்.
நம் உள் இருக்கும் தீமைகளுக்கு நாம் மிளகாய் அரைப்போம் - ஞானமாகிய மருந்திடுவோம்.
அதனால் தான் கொற்றவைக் கோயில்களில் மேற்குப்பகுதிகளில் சத்ரு சம்ஹாரம் அர்ச்சனை உண்டு- சத்ரு - பகை...யார்? நமக்கு நாமே தான்
சிந்தியுங்கள்.....
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1929
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2003
மண்டைக் காடு பகவதி அம்மை
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1884
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 1789
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 2901
கொடுங்கல்லூர் - இன்றைய கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக ப்ரஸித்தி பெற்ற தேவி ஸ்தலம்.
அன்றைய சேர தேசத்தின் தலைநகராக இருந்தது.அப்போது அதன் பெயர் வஞ்சி மாநகர்.
வஞ்சி - பெண், கொற்றவை, காளி.காலம் காலமாக முன்னோர் வணங்கிய இன்று கேரளத்தின் ப்ரசித்தி பெற்ற கொடுங்கல்லூர் அம்மை பகவதி.
கண்ணகியின் வாழ்க்கை கழிந்த பின் அவளை வீரத்தின், கற்பின், பெண்ணியத்தின் தெய்வமாக, தேவியின் அவதாரமாக சமூஹத்திற்கு உதாரணமாகச் சேரன் செங்குட்டுவன் வணங்க முற்படுகிறான்.அதற்கு மிக மிக வேற்பு கொடுத்தவள் அவனது மஹாராணி வேண்மாள்.
குமுளி மலையில் கண்ணகி சமாதி ஆன இடத்தில் அவளுக்குக் கோயில் அமைத்து, உயர்ந்த பெண்ணான அவளுக்கு உயர் இமயத்தில் இருந்து தூய வெண்பளிங்குக் கல் கொண்டு வந்து அதை, காசி கங்கையில் நீராட்டி, அதில் கண்ணகியை வடிவாக்கி ப்ரதிஷ்ட்டை செய்தான்.அச்சிலையின் கீழ் பாகம் மட்டும் இன்று அங்கு உள்ளது.
கண்ணகிக்குப் பூஜை செய்ய அவளது தோழி தேவந்திகையை நியமித்தான்.ஆனால் தன் தலைநகரில் கண்ணகியைத் தன் ராணியும் மக்களுக்ம் வழிபட அவன் கண்ணகியின் அஸ்திக் கலசத்தையும், புடவை,ஆபரணங்கள், சிலம்பு ஆகியவற்றைக் கொடுங்கல்லூர் கோயிலின் மேற்கு நோக்கி, காளிக்கு அருகில் ரகசிய அறையுள் ப்ரதிஷ்ட்டை செய்தான்.அதையே வரலாற்று ஆய்வாளர்கள் THE SECRET CHAMBERஎன்பர்.கண்ணகியின் ஆத்மாவை காளியுள் சேர்த்து வணங்கும் வழிபாட்டு முறையைக் கொண்டு வர அதையே இலங்கை, கொங்கு தேசம் ஆகிய பகுதிகளிலும் அரசர்களும் மக்களும் கைக்கொண்டனர்.
ரகசிய அறையுள் என்ன உள்ளது என்று பார்ப்பது யார்க்கும் இயலாது.
கொடுங்கல்லூரில் காளியின் முன் அர்த்த மேரு மஹா யந்த்ரமும், ரஹசிய அறை முன் ஒரு அர்த்த மேரும் மஹா யந்த்ரமும் ஸ்தாபித்து அவற்றிற்குப் பூஜைகள் செய்வதைக் காணலாம்.
ஒரே சன்னிதியில் காளியையும் கண்ணகியையும் பூஜிப்பதைக் காண்க.கண்ணகியின் கழுத்தேறு என்ற திருமாங்கல்யக் கொத்து காளியின் கழுத்தில் உள்ளதைக் காண்க.
கண்ணகியின் காசு மாலையும் ஒரு வளையும் யந்த்ரத்தில் சார்த்தப்பட்டுள்ளதைக் காண்க.
சேர அரசி வேண்மாள் தங்க விளக்குகள் இரண்டு சமர்ப்பித்தாள், அவை இன்று பயன்பாட்டில் உள.
ஆடி அமாவாசை அன்று கண்ணகி மதுரையை எரித்தாள் என்று ஆய்வுகள் கூற, அன்று மாலை ரகசிய அறை திறக்கப் பட்டு அவளுக்கு மிக விசேஷ பூஜைகள் செய்வர்.அன்று காளியின் இடது மார்பில் மருந்து மஞ்சள் பூசுவர்.
கண்ணகி சமாதி ஆனது ஆடி அனுஷம்.அன்று பூம்புகாரின் அவள் குடி மக்களும் ஊராரும் அவளது கோயிலில் மிகக் கோலாகல உற்சவம் செய்வதை இன்றும் காண்க.
மாரி அம்மை, கொற்றவை, காளி, பகவதி என்று ஊரெல்லாம் உள்ள தேவியருடன் சேர்த்து அவளது ஆன்மாவை பூஜித்தனர் முன்னோர்.இலங்கையில் கண்ணகை அம்மை, பத்தினி தெய்யு என்று சுமார் 245 கோயில்கள் உள.
ஆடி மாதம் தேவி வழிபாட்டில் மிக முக்கிய இடம் பெறும் போது அதில் கண்ணகியின் வரலாறு சேர்ந்து கொண்டது.
இன்று கொடுங்கல்லூரில் காளி கோயிலுக்கு இடது புறம் உள்ள மேற்கூரை அல்லாத சன்னிதியில் உள்ள தேவி சிலையே சேரன் முதலில் தன் மாநகரில் வைத்த சிலை.காலத்தால் அது பின்னப்பட வெளியே வைக்கப்பட்டது.
மேலும் கொடுங்கலூரின் தென் பகுதியில் ஒற்றை முலைச்சி அம்மை கோயில் உள்ளது.ஒரு மார்பு இன்றி அம்மை அமர்ந்து இருக்கும் கோயில் அது.கண்ணகிக்கு ரகசிய அறை கட்டும் வரை அவ்விடத்தில் வைத்துத் தான் அவளது உடைமகள் பூஜிக்கப் பட்டன.தை மாதம் மகர சங்க்ராந்தி அன்று அவை கோயில் சேர்ந்ததை நினைவு கொள்ளவே ஆண்டு தோறும் பொங்கல் அன்று தாலப்பொலி விழா நிகழும்.அரச குடும்ப ப்ரதிநிதி யானை மீது தேவியை வைத்துக் கோயில் சேரும் விழா அது.
கோயிலின் வலது புறம் உள்ள சேத்ர பாலகர் சன்னிதியின் உள்ளே 18 அடி காவல் பூதம் உள்ளது.பூம்புகாரில் இருந்த காவல் பூதம்.பூம்புகார் கடலால் அழிந்த போது சேரனின் மைத்துனன் நெடுமணற்கிள்ளிச் சோழன் அச்சிலையைக் கொடுங்கலூருக்குக் கொண்டு சேர்த்தான்.
அதே போல் பூம்புகாரில் - விஷம், ஏவல், செய்வினை, பேய் ஆகியவற்றை குணம் ஆக்கும் நீண்ட கருமையான ஒளி மிக்க நெடுங்கல் இருந்தது.அதைச் சேரன் பெயர்த்துக் கொண்டு வந்து சோற்றாணிக்கரையில் பகவதியின் மூல ரூபமாக வைத்துள்ளான்.
சேரன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதைக் கொண்டு கர்நாடகத்தில் குடகு மலைப் பழங்குடி அரசன் குடஜாத்ரியில் வீர நடுகல் எழுப்பினான்.அதுவே மூகாம்பிகை.
கொங்கு தேசத்தில் கோவையில் சேரன் கோ நீ அம்மனையும் பல ஊர்களில் உள்ள காளிகோயிலில் கண்ணகியின் சக்தியைச் சேர்த்தி வழிபட ஏற்பாடு செய்தான்.
சேர மன்னன் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகுதியில் கண்ணகியை பகவதியாய்க் கோயில் ஆக்கினான்.கண்ணகிக் கோட்டத்தில் இருந்தும் கொடுங்கல்லூரில் இருந்தும் பிடி மண் எடுத்து வந்து தமிழகம் முழுதும் கோயில்கள் எழுப்பினர்.
அதே போல் பங்குனி பரணி விழாவின் மிக முக்கியமாக காவு தீண்டல் என்ற சடங்கு மிக முக்கியம் ஆகும்.அப்போது கேரளத்தில் உள்ள பொற்கொல்லர்கள் ஆயிரக்கணக்கில் கோயிலை வலம் வருவர்.இன்றும் பொன் நகைகளை அவர்கள் கோயிலில் வீசி எறிவதைக் காண்க.யாரும் திருடுவதில்லை.
உயர்ந்த இல்லற தர்மமே நம் பாரத தேசத்தின் ஆணி வேர்.அதை விளக்கிட அவளது வாழ்க்கை இன்றும் உதவுகிறது.
என் பேராசிரியர் Dr.S.கோவிந்தராசனின் 16 ஆண்டுகள் அயராத ஆராய்ச்சியின் பயனாய் கண்ணகி கோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.ஒவ்வொரு சித்திராப் பூர்ணிமை அன்றும் நாம் சென்று காணலாம்.அதே போல் பாரதத்தின் உயர் வரலாற்று ஆய்வாளர் Dr.இந்துசூடன் அவர்களின் அயராத உழைப்பால் ரகசிய அறை ஆய்வுகள் வெளியாயின.
உயர்ந்த பண்பும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பெண்ணை சமூஹம் போற்றும் என்ற உண்மையைக் கண்ணகி உணர்த்துகிறாள்.அது ஆணுக்கும் பொருந்தும்.
ஆடியில் பல கோயில்களுக்குச் செல்வோம், காண்போம்,வழிபடுவோம், புதிய தலைமுறைக்குக் காட்டுவோம், பின்பற்றுவோம், உயர்வோம்.